Monday, September 13, 2010

திரைக்கூத்து!




கேமராமேன் டார்ச்சர்!


"இந்தியா' படத்தின் படப்பிடிப்பு செய்யாறு பகுதியில் நடந்தது. அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் யூனிட் தங்கியிருந்தது. படத்தின் நாயகியான மும்பையைச் சேர்ந்த புதுமுகம் ஷிவானியின் அறைக்கெதிரே படத்தின் கேமராமேன் செல்வாவுக்கும் அறை ஒதுக்கப்பட்டி ருந்தது. அடிக்கடி ஷிவானியின் அறைக்குள் நுழைந்தும், இண்டர்காமில் பேசியும் தொல்லை பண்ணினாராம் கேமராமேன். இதனால் எரிச்சலானார்களாம் ஷிவானியும், அவரின் அம்மாவும். இது பிரச்சினையாகி இப்போது படத்திலிருந்தே நீக்கப் பட்டிருக்கிறார் கேமராமேன்.


ஆடியன்ஸ் அட்டாக்!


மாமனார்- மருமகள் கள்ளக்காதலை வைத்து "சிந்து சமவெளி' படம் எடுத்த டைரக்டர் சாமி ஆடியன்ஸ் ரியாக்ஷன் பார்ப்பதற்காக சென்னை ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டருக்கு போனபோது ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த ரசிகர்கள் சாமி மீது செருப்பு வீச்சு நடத்தியிருக்கிறார்கள். அவரை தாக்குவதற் காக தியேட்டருக்கு வெளியே ரசிகர்கள் காத்திருக்க அவர்களின் கண்ணில் படாமல் எஸ்கேப் ஆனாராம். இதேபோல உதயம் தியேட்டருக்கு போன "மருமகள்' அனகா மீது கடுப்பான வர்கள் கண்டபடி திட்டியிருக்கிறார்கள். ""விஜயகாந்த் கட்சிப் பிரமுகரான மைக்கேல் ராயப்பன் இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறார் மைக்கேல் ராயப்பன். அப்படி அவர் போட்டியிட்டால் "மாமனார்- மருமகள் உறவை கேவலப்படுத்தி படம் எடுத்தவருக்கு ஓட்டுப் போடாதீங்க'ன்னு பிரச்சாரம் பண்ணுவோம்'' என்கிறது இந்து மக்கள் கட்சி.


தம்பதிகள் கதை!


கெட்ட படங்கள் ஒருபக்கம் வந்தாலும் நல்ல படங்களும் ஒருபக்கம் தயாராகிக்கிட்டுத்தான் இருக்கு. பிரபல கேமராமேன் பவன் சேகர் "யுகம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இளம் தம்பதிகள் விவாகரத்தை ஒரு ஃபேஷனாக நினைக்கும் இன்றைய சூழலில் தம்பதிகளின் பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்குதாம் இந்தப் படத்தோட கதை.


இல்லாத ஜோடி!




சேரனுடன் ‘"ராமன் தேடிய சீதை'யில் ஜோடி போட்டவர் விமலாராமன். இப்போது சேரன் தயாரித்து நடிக்கும் "முரண்' படம் தொடங்கப்பட்டுள்ளதால் இந்தப் படத்தில் வாய்ப்புக் கேட்டாராம் விமலா. ஆனால் இந்தப் படத்தில் சேரனுக்கு ஜோடி கிடையாது என்பதால் விமலா விருப்பம் நிறைவேறவில்லை.


மாமியார் வெய்ட்டிங்!


"மாப்பிள்ளை' படப்பிடிப்பிற்கு தனுஷ் அடிக்கடி டேக்கா கொடுத்ததால் கவுன்சிலில் புகார் செய்தது தயாரிப்பு தரப்பு. அதன் பிறகு கால்ஷீட் கொடுத் தார் தனுஷ். இதையடுத்து பிரமாண்ட செட் போட்டு மாமியாராக நடிக்கும் மனீஷா கொய்ராலாவையும் சென் னைக்கு வரவழைத்தனர். ஆனால் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார். சாப்பாடு கோளாறு தான் உடல்நிலை சரியில்லாமல் போனதுக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது.

அப்படியா!



இலி நடிகை தெலுங்கில் மார்க்கெட் அவுட்டாகி கோலிவுட்டுக்கு தாவினார். அதன்படி விளையாட்டுப் பிள்ளையான ஹீரோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அதை ஒல்லி நடிகை அள்ளிக் கொண்டு போய்விட்டாராம். இதனால் ஒல்லி மீது செம சூடாக இருக்காராம் அந்த நடிகை.

No comments:

Post a Comment