Wednesday, June 30, 2010

ஆசிரம பிஸினஸ்! ரஞ்சிதா-நித்யானந்தா பேட்டி பின்னணி!shockan.blogspot.com

""நித்யானந்தாவோடு வீடியோவில் அகப்பட்ட நடிகை ரஞ்சிதா, தன்னோட அனுபவங் களை புத்தகமா எழுதுவேன்னு சென்னையில் பேட்டி கொடுத் திருக்காரே?''

""அதேநாளில், பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவும் பேட்டி கொடுத்திருக்கிறார். பாப் தலை முடியோடு ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் வித்தி யாசமான கெட்டப்பில் பேட்டி கொடுத்த ரஞ்சிதா, நித்யானந்தா சாமி தொடர்பா கடந்த 6 மாதத்தில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அதனால ஏற்பட்ட அவலங்கள், மன உளைச்சல்கள் இதையெல்லாம் நான் எதிர்கொண்ட விதம் இதையெல்லாம் விவரித்து ஒரு புத்தகம் எழுதப்போறேன். இந்தப் புத்தகம் தனிப்பட்ட பிரச் சினைகளில் சிக்கித் தவிக்கிறவங்களுக்கு உதவுற வகையில் என்னோட புத்தகம் இருக் கும். இது சம்பந்தமா சில பதிப்பகங்களோடு நான் பேசிக்கிட்டிருக்கேன்'னு சொன்னார்.''

""பிடதியில் நித்யானந்தர் என்ன சொன்னார்?''

""நடிகையோடு இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் என்னோட ஆன்மீக பயணத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தலை. மார்ச் மாதம் முதல் என்னோட ஆசிரமத்தில் உள்ள பெண்கள்கிட்டே சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினாங்க. ஆனா ஒரு பெண்கூட எனக்கெதிரா இதுவரை புகார் செய்யலைன்னு நித்யானந்தர் பேட்டி கொடுத்தார்.''

""இன்னமும் இவங்க இரண்டுபேரும் வீடியோ காட்சிகளில் இருப்பது தாங்கள்தான்னு ஒத்துக்கலையே... அந்த உண்மையை ஒப்புக் கொள்ளாமல் அனுபவங்களை புத்தகமா எழுதினா எப்படி பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறவங்களுக்கு உதவுமாம்?''

""தலைவரே... நித்யானந்தர் விசா ரிக்கப்பட்டபோது, ரஞ்சிதாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகலை. ஆனா, இரண்டுபேரும் இன்னமும் தொடர்பில் தான் இருக்காங்க. ஆசிரமத்தோட பேரு ரிப்பேராயிடிச்சி. தன்னோட நிகழ்ச்சி களில் 23 லட்சம் பெண்கள் பங்கேற்றதா நித்யானந்தா பேட்டியிலே சொல்லியிருக் கிறார். ஆனா, இப்ப அவர் ஆசிரமத் துக்கு 23 பெண்கள் கூட வர்றதில்லை. அவரால பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களோட நிலைமையை ஏற்கனவே நம்ம நக்கீரன்கிட்டே சொல்லியிருக் காங்க. வெளிப்படையா புகார் கொடுத்தால் தங்களோட எதிர் காலம் பாதிக்கப்படும்ங்கிற பயம் அந்தப் பெண்களிடம் இருக்குது. அதேபோல, பாதிக்கப்பட்ட பெண் களோட பெற்றோரும் நித்யா னந்தர் மேலே சரியான கோபத் தில் இருக்காங்க. ஆனா, புகார் சொன்னா குடும்பத்துக்கு அவமானம் வருமேன்னு யோசிக்கிறாங்க.''

""பாதிக்கப்பட்டவங்க அவமானத்திற்குப் பயப்படுவதுதான் நித்யானந்தருக்கு இன்னைக்கு வரைக்கும் சாதகமா இருக்குது.''

""ரஞ்சிதாவும் தனக்கு வேண்டியவங்ககிட்டே நித்யானந்தர் மூலமா ஏற்பட்ட பாதிப்புகளை சொல்லி புலம்புறாராம். ஒரு பிரபல டைரக்டரும் பிரபல நடிகரும் ரஞ்சிதாகிட்டே அடிக்கடிப் பேசிக்கிட்டிருக்காங்க. அவங்ககிட்டே ரஞ்சிதா, கல்யாணமாகியும் எனக்கு குழந்தை இல்லை. மெடிடேஷன், ஹீலிங் தெரபி மூலமா நித்யானந்தரிடம் சிகிச்சை கிடைக்கும்னு போனேன். அவரோ நானே கடவுள்னும், என்னோடு நீ இருந்தால் கடவுளின் குழந்தை உனக்குள்ளே உருவாகும்னும் சொல்லி சாய்ச்சிட்டாருன்னு புலம்பியிருக்கிறார்.
இப்ப வீடியோ விவகாரம், விசாரணை, ஜெயில்னு பிரச்சினை அடுத்தடுத்த கட்டத்துக்குப் போனதால நித்யானந்தர் ஆசிரமத்திலும் கூட்டமில்லை. நடிகை ரஞ்சிதாவுக்கும் நடிக்க சான்ஸ் இல்லை. இரண்டு தரப்புமே ரீ-என்ட்ரிக்கு முயற்சி பண்ணுது. பிசினஸை மீண்டும் பிக்-அப் பண்ணணும்னா இமேஜை டெவலப் பண்ணணும். அதற்கான வேலைகள்தான் இரண்டு தரப்பிலும் இப்ப நடந்துக்கிட்டிருக்குது.''

Tuesday, June 29, 2010

நடிகர் ஜெயம் ரவி ஆண் குழந்தைக்குத் தந்தையானார்


shockan.blogspot.com
நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்திக்கு இன்று மாலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருந்தார். அவருக்கு இந்த மாத கடைசியில் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்படவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று மாலை 4.15 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தாயும், சேயும் நலம் என ஜெயம் ரவி குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

சிவாஜி பிலிம்ஸ் படத்தில் ரஜினி-கமல்?


shockan.blogspot.com

சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கலாம் என்ற ஒரு பேச்சு கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது.

நினைத்தாலே இனிக்கும் படத்தோடு இணைந்து நடிப்பதை விட்டனர் கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும். அதன்பின்னர் இருவரும் தத்தமது ஸ்டைலில் சூப்பர் ஸ்டார்களாகி விட்டனர். இன்று வரை இவர்களது இடத்திற்கு பொருத்தமான யாரும் வரவில்லை.

இருவரும் தத்தமது ஸ்டைலில் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் திரை விருந்துகள் இன்னும் ரசிகர்களுக்கும் அலுப்புத் தட்டவில்லை. அவர்களுக்கும் சலிப்பு வரவில்லை.

இந்த நிலையில் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க கடும் முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. சில காலமாகவே இந்த முயற்சிகள் தீவிரமாகவே உள்ளன. கே.பாலச்சந்தர் படத்தில் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

பாரதிராஜா இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிப்பார்கள். அதற்கு இளையராஜா இசையமைப்பார் என்றும் கூட பேச்சு வந்தது. வைரமுத்துதான் இப்படத்துக்கு பாடல்கள் எழுதப் போகிறார் என்று கூட கூறப்பட்டது. அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில் மீண்டும் ரஜினி, கமலை வைத்து ஒரு புதிய பேச்சு கிளம்பியுள்ளது. சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கமலும், ரஜினியும் இணையப் போவதாக அந்தத்தகவல் கூறுகிறது.

சிவாஜி குடும்பத்தின் செல்லப் பிள்ளைகளாக உள்ளவர்கள் ரஜினியும், கமலும். எனவே சிவாஜி பிலிம்ஸுக்காக அவர்கள் நடிப்பார்கள் என்ற செய்தி நம்பும்படியாகவே உள்ளது.

இருப்பினும் இதுகுறித்து சிவாஜி பிலிம்ஸ் தரப்பிலிருந்து எந்தவிதமான ஆமோதிப்பும், மறுப்பும் வெளியிடப்படவில்லை.

எனவே இது உண்மையா அல்லது மேலும் ஒரு வதந்தியா என்பது நாளடைவில் தெரிய வரும்

தோழியை மணந்த ஐஸ்லாந்து பெண் பிரதமர் !


shockan.blogspot.com
ஓரினச் சேர்க்கையாளரான ஐஸ்லாந்து பெண் பிரதமர் தன் நீண்ட கால பார்ட்னரை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2009ம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டின் பெண் பிரதமரானவர் ஜோகன்னா சிகுர்டார்டோடிர் (68). இவரது பெண் நண்பர் ஜோனினா லியோஸ்டோடிர். இருவரும் தொடக்கத்தில் நண்பர்களாக இருந்து பின்னர் ஓரின சேர்க்கையாளராக மாறினர்.

இவர்கள் திருமணம் செய்து கொள்ள அந்நாட்டு அரசியல் சட்டம் இடம் தராத நிலையில் இருவரும் அதிகாரபூர்வமின்றி ஒன்றாக வாழ்ந்தனர்.

இந் நிலையில், கடந்த 12ம் தேதி ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஐஸ்லாந்து நாடாளுமன்றம் அனுமதி தந்து சட்டம் இயற்றியது.

இதையடுத்து நேற்று பிரதமரும் அந்தப் பெண்ணும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர்.

தனது 50வது வயதில் கணவரைப் பிரிந்த ஜோகன்னா அதன் பின்னர் தோழி ஜோனினாவுடன் வாழ ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதைய திருமணம் மூலம் உலகிலேயே முதல் ஓரின சேர்க்கை பிரதமர் என்ற பெயரை ஜோகன்னா பெற்றுள்ளார்.

Monday, June 28, 2010

தமிழக முதல்வர் கலைஞருக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி!


shockan.blogspot.com

உலகத்தமிழர்களின் முதல்வர் கலைஞருக்கு வணக்கம்!

ஈழத்தமிழ் மக்களின் வேரடி மண் எங்கள் தமிழ் நாடு!.. வேர் பிடுங்கி நாங்கள்
விடை பெற்று வந்தாலும் எங்கள் உறவுகளை இணைத்து நிற்கும் தொப்புழ் கொடி உணர்வுகளை யாராலும் அறுத்துவிட முடியாது!...

நீராடும் கடலலை தாண்டி இலங்கை தீவில் நாங்கள் விழுதுகளாக வந்து விழுந்தாலும் எங்கள் வேரோடிய தமிழகத்தை மறந்துதான் போவோமா?...

தமிழகத்தின் தலைமகன் நீங்கள்!... உலகத்தமிழர்களின் முதல்வர் நீங்கள்!!...

உலகப்பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை
செம்மொழியாக்கி அதற்கு உயரத்தின் சிகரத்தில் சிம்மாசனம் அமைத்து கொடுத்த உங்களை ஈழத்தமிழர்கள் சார்பாக முதலில் வாழ்த்துகின்றேன்!...

மொழி என்பது மனிதர்கள் வெறுமனே பேசிக்கொள்ளும் ஓசை மட்டுமல்ல!
அது ஒரு இன சமூகத்தின் அடையாளம்!!

ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இலங்கையர்களாக மட்டுமன்றி தமிழர்களாகவும் எங்கள் தேசத்தில் சுதந்திரமாக வாழ விரும்புபவர்கள். அதற்கு நாம் பேசும் தமிழ் மொழியே எங்கள் அடையாளம்!

எங்கள் அடையாளங்கள் அழிந்து போகாமல் தமிழ் என்ற எங்கள் மொழியின் முகங்கொண்டு ஏனைய இன சமூகத்தவர்களோடு உறவுக்கு கரம் நீட்டி உரிமைக்கு குரல் காட்டி நாங்கள் இன்னமும் உழைத்து வருகின்றோம். இழந்தவைகளை பெறவும், இருப்பவைகளை பாதுகாக்கவும் எங்கள் பயணம் இன்னமும் பழுது படாமல் தொடர்கிறது.

ஆனாலும் இழந்து போனவைகளில் எங்கள் மொழியும் ஓன்றாகி விடும் என்ற ஏக்கம் இன்று உலகத்தமிழர்களின் மனங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் தருணத்தில் நீங்கள் நடத்தும் செம்மொழி மாநாடு நம்பிக்கைகளை விதைத்துள்ளது...

எங்கள் மொழியின் வேர்கள் இலங்கை தீவில் இன்னமும் விருட்சங்களாகவே எழுந்து நிற்கின்றன. கடும்புயல் வந்த போதும் வரும் தடை யாவையும் எதிர் கொண்டு இன்னமும் பட்டுப்போகாமல் மக்கள் மனங்களை தமிழ் பற்றி நிற்கிறது!

நீங்கள் நடத்தும் செம்மொழி மாநாடு எங்கள் மொழியின் வேர்களுக்கு நீர் வார்க்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். தமிழ் மொழியை தாங்கி நிற்கும் தேசங்களில் ஒன்றான ஈழத்தமிழர்களின் வரலாற்று வாழ்விடங்கள் செம்மொழி மாநாட்டு செய்தியறிந்து பூரித்து புளகாங்கிதம் அடைந்துள்ளது.

இந்த சிறப்பான செம்மொழி மாநாட்டிற்கு ஈழத்தமிழ்; அறிஞர்களையும் ஆராட்சியாளர்களையும் அவர்களின் கருத்துக்களையும் முன்வைக்க வாய்ப்புத் தந்தமைக்கும் புகழ்பெற்ற உலக அறிவாழிகளின் மத்தியில் மேடையில் கௌரவிப்பு வழங்கியமைக்கும் ஐயா உங்களுக்கு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக நன்றிகூறுவதில் நான் பெருமையடைகிறேன்.

ஈழத்தமிழ்களுக்கு இன்னல்கள் வரும்போதெல்லாம் தீயாக பற்றி எரியும் கலைஞர் இருட்டில் தொலைந்து விடுமோ தமிழ் மொழி என்று ஏங்கித்தவிப்போருக்கு தீபச்சுடராக எழுந்து வெளிச்சம் பாய்ச்சுவது பாராட்டுக்குரியது!

மாநிலத்தில் அதிகாரங்களை ஏற்று மத்திய அரசின் அனுசரணைகளை பெற்று நீங்கள் நடத்தும் இணக்க அரசியலுக்கு வெற்றியின் விருது பெற்ற வாலாறுகள் ஏராளம்! இதில் நீங்கள் நடத்தும் செம்மொழி மாநாடு ஒரு சரித்திர சாதனை!

தொல்காப்பியத்தின் தொன்மை... அகத்தியத்தில் ஆரம்பம்... என்று ஆய்வுகளுக்குள் மட்டும் முடங்கியிருக்காமல் தமிழ் மொழியின் தேவைகளுக்கான புதிய தேடல்களை நோக்கி தமிழ் சமூகம் புறப்பட வேண்டும்!

தமிழுக்கு நீங்கள் சிறுவயதிலே தொண்டாற்ற ஆரம்பித்தீர்கள். அந்தப் பெரும் பணியை இன்றைக்கும் உலகம் போற்றும் அளவில் நடாத்திக்கொண்டிருக்கின்றீர்கள்.

இன்னும் பல்லாண்டு பல்லாண்டு உங்களின் இந்த சிறப்புமிக்க தொண்டு தமிழ்த்தாய்க்குச் சிறப்புச் சேர்க்கட்டும்.

அதற்கு நீங்களே வழி காட்டி! மொழியின் மீது கொண்ட பற்றுதலால் எங்கள் நேசக்கரம் நீட்டி தமிழ் மொழியின் சம கால தலைமகனான உங்களை ஈழத்தமிழர்கள் சார்பாக வாழ்த்தி வணங்குகின்றோம்!

மனித குலத்தின் பொது மொழியாக என்றும் மனித நேயம் இருக்கட்டும். எம்மொழியும் எமக்கு சம மொழியாகட்டும்!

ஆனாலும்... எங்கள் செம்மொழி மாநாடு செழிப்புற வாழ்த்துகின்றேன்!...


டக்ளஸ் தேவானந்தா பா. உ.
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும்
சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்

Sunday, June 27, 2010

சென்னை திரும்பினார் ரஞ்சிதா


shockan.blogspot.com

சென்னை: நித்தியானந்தா விவகாரத்தில் சிக்கி தலைமறைவான நடிகை ரஞ்சிதா தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தெரிகிறது. ரகசியமான இடத்தில் தங்கியிருக்கும் அவர் தலைமுடியை குட்டையாக்கி, மாடர்ன் உடையில் இருக்கிறாராம். தனது அனுபவங்களை புத்தகமாக எழுதி வருவதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நித்தியானந்தாவைக் கைது செய்த கர்நாடக போலீஸார், ரஞ்சிதாவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக அவரைத் தேடி வந்தனர். இதுதொடர்பாக விசாரணைக்கு வருமாறும் கூறி உத்தரவிட்டனர். ஆனால் ரஞ்சிதா இதுவரை ஆஜராகவில்லை. அமெரிக்காவுக்கு அவர் ஓடி விட்டதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால் தற்போது ரஞ்சிதா சென்னை திரும்பி ரகசியமான இடத்தில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தலைமுடியை வெட்டி பாப் கட் செய்து, ஜீன்ஸ் டீசர்ட் சகிதம் அவர் காணப்படுகிறாராம். தனது அனுபவங்களை அவர் புத்தகமாக எழுதி வருகிறாராம்.

இதுகுறித்து அவர் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

சாமியார் நித்யானந்தா சம்பந்தமாக கடந்த 6 மாதத்தில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அதனால் ஏற்பட்ட அவலங்கள், எனது மனதில் ஏற்படுத்திய காயங்கள் ஆகியவற்றை விவரித்து நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன்.

இந்த புத்தகம் தனிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும். இந்த புத்தகங்களை வெளியிட சில பதிப்பகங்களுடன் நான் பேசி வருகிறேன்.

இதுதவிர நான் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு நாவலும் எழுதுகிறேன். இதில் எனது அனுபவம் பற்றி எழுதும் புத்தகம்தான் முதலில் வெளிவரும்.

எனது அறையில் ஒரு யோகியின் சுயசரிதை புத்தகம், மததலைவர் ஒருவருடைய ஆன்மீக புத்தகம் ஆகியவற்றை எப்போதும் வைத்துள்ளேன்.

நான் எப்போதுமே ஒரு புத்தக புழு. எந்த நாவல்களையும் விரும்பி படிப்பேன். இப்போது தத்துவ புத்தகங்களுக்கு மாறிவிட்டேன். குறிப்பாக இந்திய ஆன்மீக புத்தகங்களை விரும்பி படிப்பேன்.

நான் தலைமறைவான விஷயங்கள் குறித்தோ அல்லது கடந்த கால சம்பவங்கள் குறித்தோ பேச விரும்பவில்லை. கடந்த காலத்தை நினைத்து கொண்டிருக்க முடியாது. அதை விட்டு வெளியே வர விரும்புகிறேன்.

மன அழுத்தம், கஷ்டங்கள் என நான் மிகவும் காயப்பட்டு விட்டேன். அதை விட்டு புதிய வாழ்க்கையை நோக்கி செல்ல விரும்புகிறேன். எனக்கு எதிராக பல செய்திகள் பரப்பப்பட்டு விட்டன. நான் கொடுத்த பேட்டியையும் திரித்து வெளியிட்டு விட்டார்கள். இவை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன்.

நடிகை என்றால் இது போன்ற கஷ்டங்களை தாங்கி கொள்வார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். என் கணவர், சகோதரிகள், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் எனக்கு பக்க பலமாக இருந்து என் கஷ்டங்களை தாங்க வைத்து விட்டனர்.

நான் நடித்த ராவணன் படத்தை இன்னும் பார்க்கவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றியும் சிந்திக்கவில்லை. சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுக்க விரும்புகிறேன். நடிக்காத நேரங்களில் நான் மற்ற ராணுவ வீரர்கள் மனைவிகள் போல சமூக சேவையில் ஈடுபடுவேன்.

நான் சமீப காலங்களில் முக்கிய நபர்கள் யாரையும் சந்திக்கவில்லை. நான் சகஜ நிலைக்கு திரும்ப சிறிது காலம் ஆகும் என நினைக்கிறேன். என் காலடியை முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்து வைக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ரஞ்சிதா.

ரஞ்சிதா சென்னை திரும்பி விட்டதாக கூறப்பட்டாலும் கூட அது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை. அதேசமயம் அவரைப் பிடித்து விசாரிக்க கர்நாடக போலீஸாரும் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கிறார்களாம்.

Saturday, June 26, 2010

கோயிலை விட்டு வந்த அங்காள பரமேஸ்வரி!shockan.blogspot.com

செஞ்சி டூ ஆரணி செல்லும் சாலையில்... டூவீலரிலேயே நாம் பயணித்தபோது வளத்தியில் இருந்து வடவெட்டி கிராமம் வரை... 5 கி.மீ.தூரத்திற்கு பக்தர்களின் கூட்டத்தை கவலை, பக்தி, பீதி என பல்வேறு கலவை முகங்களில் பார்க்க முடிந்தது.

அங்கங்கே சாலையில் வெள்ளை நிறத்தில் காலடித்தடம் போன்ற அச்சு தெரிய... அதுதான் அம்மன் காலடித் தடம் என்றபடி... அவற்றைச் சுற்றி மஞ்சள் வட்டம் போட்டு... வழிபட ஆரம்பித்திருந்தனர். வளத்தியில்... "அம்மா தாயே.... உன் கோபத் தைக் குறைச்சிக்கிட்டு கோயிலுக்கே திரும்பி வாம்மா'’என்றபடி ஒரு நடுவயதுப் பெண்மணி கண்ணீர் பெருக... அங்கப்பிரதட்சணம் பண்ணிக்கொண்டிருந்தார். பல இடங்களில் பெண்கள் சாமி வந்து ஆட... அங்கங்கே தடத்தை பக்தர்கள் கையால் தொட்டுக் கும்பிட்டபடி இருந்தனர். .

இதென்ன கலாட்டா என திகைத்து நிற்க... காலடித் தடத்தை தரிசிக்க வந்திருந்த... திண்டிவனம் இளைஞர் ஆறுமுகம் ""சந்தேகமே இல்லை. இது அம்மனோட காலடித் தடமேதான். அம்மனுக்கு ஏதோ மனவேதனை. அதான் மேல்மலையனூர் கோயில்ல இருந்து கிளம்பி... இவ்வளவு தூரம் நடந்தே வந்து... வடவெட்டியில் இருக்கும் ஆலமரத்தில் குடிபுகுந்திருக்கா. அம்மனுக்கே சங்கடம்ன்னா நாம் எம்மாத்திரம்?'' என்றார் கவலையாய்.

அம்மனின் மன வேதனைக்கு காரணம் என்ன? செஞ்சியில் இருந்து வந்திருந்த அண்ணாமலை பதில் தர ஆரம்பித்தார். ""அம்மாவாசைதோறும் லட்சக்கணக்கானவங்க கூடு வாங்க. கூட்டம் கூடுவதை சாதகமாக்கிக்கிட்டு சமூகவிரோதிகள் பல குற்றங்களை இங்க நடத்து றாங்க. போனமாசம் ஆரணி வக்கீல் சஞ்சீவியின் மனைவி கழுத்தில் கிடந்த 18 பவுன் தாலிச்சரடை அறுத்துக்கிட்டுப் போய்ட்டானுங்க. அதுக்குப் பிறகு போனவாரம் ஒரு புதுமணப் பெண்ணின் தாலியை அறுத்துட்டானுங்க. பல கற்பழிப்புச் சம்பவங்களும் நடந்திருக்கு. கோயில் அருகே இருக்கும் கரும்புக் கொல்லையிலும் ஏரிக்கரையி லும் அடிக்கடி பெண்கள் பிணம் கிடக்குது. கோயிலுக்கு வெளியில் இப்படின்னா கோயிலுக் குள் பூசாரிகள் செய்யும் அட்டூழியம் தாங்க முடியாததா இருக்கு. கோயில் உண்டியல் வருமானம் எல்லாம் பூசாரிகளுக்கே போகுது. முடி எடுக்குற டெண்டர் முதல், கடைகளுக்கான டெண்டர் வரை பேரம்பேசி... பணம் சுருட்டறாங்க. இப்படி எல்லாப் பக்கமும் கோயிலை வச்சி அநியாயம் நடப்பதால்தான்.. அம்மன் கோயிலை விட்டுக் கிளம்பிட்டா''’என்றார் ஆதங்கமாய்.

பூசாரிகள் அட்டகாசம் செய்வது உண்மையா? என்ற கேள்வியுடன் அங்காளபரமேஸ்வரி கோயிலின் அறங்காவலர் துரையை சந்தித்தோம். நிதானமாகப் பேச ஆரம்பித்த அவர் ""அம்மன் கோயிலைவிட்டுப் போனதாச் சொல்றதெல்லாம் அப்பட்டமான வதந்தி. காலடித்தடம் என்பதே ஒரு சதி. ஜே.சி.பி.எந்திரத்தின் மூலம் நடு இரவில் ஒரு குரூப்... சாலையை அழுத்தி இப்படி ஒரு தடத்தை உருவாக்கியிருக்கு. கோயில்ல எந்த முறைகேடும் நடக்கலை. காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்தான் வதந்தி பரப்பி இப்படி பக்தர்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள்''’’ என்று அழுத்தமாய் மறுத்தார்.

அம்மன் இடம் பெயர்ந்ததாகச் சொல்லப்படும் வடவெட்டி ஆலமரத்தைப் பார்க்கப்போனோம். அங்கே ஒரு அம்மன் சிலையை ஆலமரத்தடியில் வைத்து அலங்கரித்து... பூசாரி அவதாரமெடுத்த சிலர் அபிஷேக ஆராதனை நடத்திக்கொண்டிருந்தனர். ஆயிரக் கணக்கானோர் திரள ஆரம்பித்ததால் திடீர் கடைகளுக்கும் பஞ்சமில்லை.

அப்போது மகேஸ்வரி என்ற பெண்மணி திடீரென சாமிவந்து ஆட ஆரம்பிக்க... அவரிடம் ஒரு பக்தர்... “"அம்மா... நீ மலையனூர்ல இருந்து கோவிச்சிக்கிட்டு வந்தது உண்மையா? இனி நாங்க உன்னை மலையனூர்ல வழிபடலாமா வேணாமா?'’என்று கேட்க... அந்த மகேஸ்வரி அம்மனோ ரொம்பவும் மரியாதையாய் “"டேய்.. நான் கோவிச்சிக்கிட்டு இங்க வந்துட்டேன். அங்க நடக்கும் அநியாயம் தாங்கலை. நான் எல்லா இடத்திலும் இருப்பவள்டா... அதனால் அங்கயும் போ... இங்கேயும் வா'’ என நடுநிலையாக அந்த பக்தருக்குத் தீர்ப்பு சொன்னது.

திடீர் பூசாரிகளான பாலுவும், ஞானவேலும் ""யாரும் வதந்தி பரப்பலை. அம்மன் காலடித்தடம் இருந்ததைப் பார்த்து... தானா பக்தர்கள் திரள ஆரம்பிச்சிட்டாங்க''’என்றார்கள் உற்சாகமாய்.
"இங்க அம்மனும் இல்லை அத்தனும் இல்லை. புறம்போக்கு இடமான இதை வளைக்க மாவட்ட கவுன்சிலர் புண்ணியமூர்த்தி தரப்பு பண்ற வேலைங்க இது'’என்று ஒருவர் நம் காதில் கிசுகிசுக்க.. அந்த புண்ணிய மூர்த்தியையும் சந்தித்தோம். அவரோ “""எனக்கு இரண்டு மனைவி. முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் கடவுளை வேண்டிக்கிட்டு இரண்டாவதா திருமணம் பண்ணிக்கிட்டேன். அவளுக்கு 3 குழந்தைகள் இருக்கு. அதனால் நான் தெய்வபக்தி உள்ளவன். செல்வமும் செல் வாக்கும் எனக்கு இருப்பதால்... என்னை இந்த இடத்தில் கோயில் கட்டிக்கொடுக்கச் சொன்னாங்க. இங்க அஸ்திவாரம் தோண்டிய நேரத்தில்தான்.. அம்மன் இங்க வந்ததா ஜனங்க கூட ஆரம்பிச்சிருக்காங்க. நான் மக்கள் மன உணர்வுக்கு மதிப் பளிப்பவன், அதனால் இங்க கோயிலைக் கட்டி திருவிழாவையும் நடத்திட்டுதான் உட்காருவேன்''’’என்றார் தன்போக்கில்.

செட்டிக்குப்பம் பெரியவர் அர்ச்சுனனோ “""கோயில்ல இருந்து அம்மன் கோபித்துக்கொண்டு வந்திருந்தா கோயில் முகப்பில் இருந்தல்லவா தடம் இருக்கணும். ஏன் பாதி தூரத்தில் இருந்து தடம் பதியுது.? அதிலும் ஒரே பக்க காலடித்தடம் மட்டும் இருக்குன்னா.. அம்மனுக்கு ஒரு கால் இல்லையா? என்னங்க இது கூத்தா இருக்கு''’என்றார் சலிப்பாய்.

கப்பலோட்டிய தமிழன் என்ற இளை ஞரோ ""கோயிலும் டாஸ்மாக் கடையும் இல்லாத ஊர்ல பிரச்சினையே வராது. 500 குடும்பங்கள் இருக்கும் எங்க ஊர்ல கோயி லும் இல்லை. பிரச்சினைகளும் இல்லை. நாங்க கோர்ட், வழக்குன்னு கூட போலீஸ் ஸ்டேஷன் படியை மிதிச்சதில்லை'' என்கிறார்.

அப்போ அம்மன் காலடித்தடம்?

""எல்லாம் ஜோடிப்புங்க'' என்கிறார் அவரே.

சம்மந்தி ஃபைட்!


shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் பூரித்துப் பெருமைகொள்ளும் வகையில் கோவையில் உலகச் செம்மொழி மாநாடு, கோலமாகத் தொடங்கியிருக்கு. உலகில் எந்த மொழிக்காரர்களும் இப்படி ஒரு மாநாட்டை நடத்தியதில்லைன்னு பல திசைகளில் இருந்தும் வந்திருக்கும் தமிழறிஞர்கள் பரவசப்படுறாங்க.''’’

""இருக்காதே பின்னே. உயிருக்கு நிகரா தாய்மொழியை மதிக்கும் இனம் தமிழினம். தமிழுக் காக இதுவரை எத்தனை யோ மாநாடுகள் நடந் திருக்கு. கடைசியா தஞ்சை யில் நடந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு உட்பட இதற்கு முன் நடந்த அத்த னை தமிழ் மாநாடுகளையும் தூக்கிச் சாப்பிடும் வகையில்... இந்த மாநாட்டைக் கலைஞர் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கு அடித்தளம் போடும் வகையிலும் நடத்துகிறார்னு பல நாட்டுத் தமிழறிஞர்களும் நெகிழ்ந்துபோய்ச் சொல்றாங்க. அதே சமயம் அவங்களுக்கு ஏதுவாகத் தங்கும் வசதியும் உணவு வசதியும் சரியா இல்லைங்கிற ஆதங்கம் இருக்கு. இருந்தாலும் தமிழுக்காக இப்படிப்பட்ட சின்னச் சின்ன அசௌகரியங்களை ஏற்றுக்கொள்வதில் தவறில்லைன்னு அவங்க நினைக்கி றாங்க. அது சரி கலைஞரின் மாநாட்டுப் பூரிப்பு எப்படி இருக்கு?''’

""மாநாடு, தான் எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பா நடப்பதில் அவர் ரொம்ப உற்சாகமா இருக்கார். தன் வாழ்நாளில் தான் செய்த சாதனைகளிலேயே மிகப்பெரிய சாதனையா இந்த செம்மொழி மாநாட்டைத்தான் நினைக்கிறார். எதிர்பார்க்காத அளவுக்கு திரண்ட கூட்ட மும்... உலகத்தின் எல்லாத் திசையிலும் இருந்து குவிந் திருக்கும் அறிஞர்கள் சேனையும் அவரை அளவுகடந்த பூரிப்பில் ஆழ்த்தியிருக்கு. மேலும் இருபது முப்பது வருடங் கள் வாழ்வதற்கான ’சார்ஜ்’ அவர் உடம்பில் ஏறியிருக் குன்னா பார்த்துக்கங்க.''’

""ஜெ’கூட்டணியில் இருக்கும் சி.பி.எம். இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கு போலிருக்கே? மத்த கட்சிகள் எப்படி?''’’

""ஆமாங்க தலைவரே... சி.பி.எம். சார்பில் என்.வரதராஜனும் பாலபாரதியும் கோவை மாநாட்டில் கலைஞரை சந்தித்து சால்வை போர்த்தி வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க. கடைசிநாள் மாநாட்டில் கலைஞ ருடன் சி.பி.ஐ.கட்சித் தலைவர்களும் மேடை ஏறுறாங்க. இப்படி தன் கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க. தவிர்த்த இந்த இரண்டு கட்சிகளும் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வது ஜெ’வுக்கு சங்கடத்தை உண்டாக்கி யிருக்கு. இந்தக் கூட்டணிக்கு வெளியில் இருக்கும் தே.மு.தி.க. விஜயகாந்த் மாநாட்டில் கலந்துக் கலை. வெளியில் இருக்கும் இன்னொரு கட்சியான பா.ம.க. என்ன செய்யப் போகுதுங்கிற கேள்வி பரவலா இருக்கு.''’’

""டாக்டர் ராமதாஸிடம் பா.ம.க.வின் மற்ற தலைவர்கள் இது பற்றிக் கேட்டப்ப... கூட்டணி இன்னும் உறுதிசெய்யப்படாத சூழ்நிலையில் நான் கலந்து கொள்வது சரியா இருக்காது. அதனால் கோ.க.மணி கலந்துக்கட்டும்னு சொல்லியிருக்கார். மாநாட்டுக்கு பலத்த பாதுகாப்பு போலிருக்கே?''

""விழுப்புரத்தில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததால ரொம்பவே எச்சரிக்கையோடு இருந்தது காவல்துறை. ஆனா, இன்னமும் குண்டுவெடிப்புக்கு யார் காரணம்னு உறுதியா கண்டுபிடிக்க முடியலை. தமிழ்நாடு விடுதலைப்படை மீது சந்தேகம் திரும்பியது. அந்த அமைப்பினர், 1980-களில் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரசுக்கு அரியலூர் பாலத்தில் குண்டு வைத்த போது, பொன்பரப்பி தமிழரசன் தலையில் ஒரு துண்டு கட்டிக்கொண்டு பக்கத்தில் இருந்த ஸ்டேஷனுக்குப்போய் அந்த ஸ்டேஷன் மாஸ்டர்கிட்டே, பாலத்தில் யாரோ குண்டு வைக்கி றாங்கன்னு சொல்லிட்டுப்போனார். ஸ்டேஷன் மாஸ்டரோ ஏதோ ஒரு வழி போக்கன் சொல்றாருன்னு நினைச்சிட்டு விட்டுட்டார்.''

""குண்டு வச்சதே அந்த அமைப் பினர்தான். அப்புறம் ஏன் அந்த அமைப் பைச் சேர்ந்த தமிழரசனே அது பற்றி ஸ்டேஷன் மாஸ்டர்கிட்டே சொல்லணும்?''

""தமிழ்நாடு விடுதலைப்படையின் நோக்கம், ரயிலைக் கவிழ்ப்பதோ உயிர்களைக் கொல்வதோ அல்ல. மக்கள் பிரச்சினைகளை நோக்கி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கணும்ங்கிறதுதான். குண்டையும் வச்சிட்டு, அங்கேதான் வச்சிருக்காங்கன்னு சொல்றது மூலமா , தங்களோட செயல்பாட் டையும் காட்டிவிடமுடியும். ரயில்வே அதிகாரிகளை அலர்ட்டாக்கி விபத்தையும் தடுத்திட முடியும். இப்ப விழுப்புரம் சம்பவத்திலும் அதே மாதிரி யாராவது வந்து தகவலைச் சொல்லியிருப் பாங்கன்னும் ரயில்வே தரப்பு தான் அலட்சியப்படுத்தியிருக் கும்னு சொல்லப்படுது. இப்ப இந்தக் கோணத்திலும் விசார ணை போய்க்கிட்டிருக்குது.''

""அரசியல் செய்திகள் எந்தெந்தக் கோணத்தில் அலசப்படுது?''

""கோவையில் செம் மொழி மாநாடு நடந்துக்கிட்டி ருக்கிற நேரத்தில் அங்கிருந்து 100 கி.மீ தூரத்தில் இருக்கிற கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெ, ஜூலை முதல் வாரம் சென்னைக்கு ரிட்டன் ஆகிறார். அவரோட முதல் அஜண்டாவே கோவில்விசிட், பூஜை, புனஸ்காரம் இதுதானாம். அதை யடுத்து, சட்டமன்றத் தேர்தலுக்கு ரெடி யாவது. அதற்காக பெரிய தொழிலதி பர்களிடம் நிதி வசூ லும் ஆரம்பிச் சிடிச்சி. முதல் கட்ட மா, விஜய் மல் லைய்யாகிட்டே யிருந்து ஒரு பெருந் தொகை வாங்க ணும்ங்கிறதுதான் திட்டமாம்.''

''அ.தி.மு.கவின் முன்னாள் எம்.எல்.ஏக்கள் வரிசையா தி.மு.கவில் சேர்ந்துக்கிட்டிருக்கிற நேரத்தில் கட்சியையும் கட்சிக்காரர்களையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் எடுத்தாகணுமே?''

""தலைவரே... அ.தி.மு.கவில் எம்.பி. சீட் தரலைங்கிற வருத்தத்தில் இருக்கிறார் வடசென்னை அ.தி.மு.க பிரமுகர் வ.நீலகண்டன். அதனால் அவர் கூடிய சீக்கிரம் அறிவாலய ஜோதியில் சங்கமமாயிடுவாருன்னு தகவல் கசிவதால அவரை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கும் சசிகலா ஆட்கள், நீலகண்டன் விஷயத்தில் கேம் ஆடும் வடசென்னை மா.செ. சேகர்பாபு மேல நடவடிக்கை எடுக்கணும்னும் வலியுறுத்திக்கிட்டிருக்காங்களாம்.''

""வன்னியர் சமுதாயத்தின் பெருமைகளை வலியுறுத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் சம்பந்திகள் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டாங்களாமே?''

""ஆமாங்க தலைவரே... அ.தி.மு.க வளர்மதி யோட கொழுந்தனாரான நடனகாசிநாதன் எழுதிய புத்தகம் அது. விழாவுக்கு தலைமையேற்ற காடுவெட்டி குரு பேசுறப்ப, 2011ல் அன்புமணியை முதல்வராக்கிக் காட்டுவோம்னு அவரை வச்சிக்கிட்டு சொன்னார். அப்ப அரங்கத்தில் இருந்த பா.ம.ககாரங்க, தி.முகவோட கூட்டணி உருவாகிக்கிட்டிருக்கிற நேரத்திலே இவர் ஏன் குட்டையை குழப்புறாருன்னு பேசிக்கிட்டாங்க. அவருக்கப்புறம் பேசிய காங்கிரஸ் எம்.பியும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவருமான கிருஷ்ணசாமி... 1952ல் மெஜாரிட்டி இல்லாமல் காங்கிரஸ் திணறியபோது வன்னியர் தலைவர்களான ராமசாமி படையாச்சியாரும் மாணிக்கவேல் நாயக் கரும்தான் ஆதரவளித்து காங்கிரஸ் ஆட்சியமைய துணை நின்றாங்கன்னு சொன்னார்.''

""அதுதானே வர லாறு!''

""அதோடு, வன்னியர் சமுதாயத்திற்கு நிறைய நன்மைகள் செய்த கலைஞர், உள்இடஒதுக்கீட்டை யும் செய்து தருவாருன்னு சொன்னார். அந்த இரண்டு பேரோட பெயர்களையும் சொல்வதை ராமதாஸ் விரும்பமாட்டாரு. அது போல கலைஞருக்குப் பெருமை சேர்க்கிறதையும் அவர் விரும்பலை. அத னால அவர் பேசுறப்ப, வன்னியர் சமூகத்தை காங்கிரசிடம் ராமசாமி படை யாச்சியும் மாணிக்கவேல ரும் அடமானம் வச்சிட்டதா போட்டுத்தாக்கிட்டார். சம்பந்திகளின் வார்த்தை யுத்தத்தைப்பற்றித்தான் விழாவுக்கு வந்தி ருந்தவர்கள் பேசிக் கிட்டிருந்தாங்க.''

""செவ்வாய்க் கிழமையன்னைக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழில் வக்கீல்கள் வாதாடி னாங்க. அதோடு, தலைமை நீதிபதி அனுப் பிய 5 பேர் குழு மதுரைக்குச் சென்று, போராடிய வக்கீல்களைப் பார்த்து பேசினாங்க. தமிழுக்குத் தடையில் லைங்கிறதால போராட்டம் முடிவுக்கு வந்தது.''

ஜனாதிபதி விருது புறக்கணிப்பு!


shockan.blogspot.com
இனிமேல், எந்த ஊராட்சி மன்றத் தலைவரும், நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ""எனக்கு நிர்மல் புரஷ்கார் விருது கிடைத்திருக்கிறது. டில்லிக்குச் சென்று, பாராளுமன்ற மைய மண்டபத்தில், ஜனாதிபதி யிடம் பெறப் போகிறேன்!'' என்று சொல்லி பெருமைப்பட முடியாது.

அத்தனை சாலைகளும் சிமெண்டுச் சாலைகள். கழிவுநீர்க் கால்வாய்கள், மரங்கள், தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகள், அத்தனை வீடுகளிலும் கழிவறைகள் -இப்படி முழுச் சுகாதாரத்தைப் பேணும் ஊராட்சிமன்றத் தலைவ ருக்கு நிர்மல் புரஷ்கார் விருதினை வழங்குவார் குடியரசுத் தலைவர்.

இந்த விருதினைப் பெறுகின்ற ஊராட்சிமன்றத் தலைவர்கள், இதை மிகப்பெரிய கௌரவமாக, பொக்கிஷமாக கருதினார்கள்.

அப்படிப்பட்ட புரஷ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 19 ஊராட்சிமன்றத் தலைவர்களை, நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில், சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து கொண்ட இலவச டி.வி. வழங்கும் விழாவுக்கு அழைத்திருந்தார்கள். 8 பேர் வந்து சபாநாயகரிடம் "புரஷ்கார் விருதினை' பெற்றுக் கொண்டார்கள். 11 பேர் புரஷ்கார் விருதினைப் புறக்கணித்து விட்டார்கள்.

சபாநாயகர் தரும் புரஷ்கார் விருதினை புறக்கணித்துவிட்ட கடை யம் ஒன்றியம் முதலியார்பட்டி ஊராட்சிமன்றத் தலைவரான பஸ்லூர் ரஹ்மான் ஆதங்கத்தோடு நம்மிடம்..

""இந்தக் கௌரவமான விருதை குடியரசுத் தலைவர் கரங்களால் வாங்க ணும்கிறதுக்கு எவ்வளவு மெனக்கெட் டோம்... அரசு கொடுக்கிற மானியம் போதாமல், என் சொந்தப் பணம் 2 லட்சத் தைப் போட்டு முழுச் சுகாதாரக் கிராமமாக மாற்றினேன். என்னமோ தெரியலை... இனிமே ஜனாதிபதி தரமாட்டாங்க. அந்தந்த மாநிலத்தின் கவர்னரே தருவார்னு சொன்னாங்க. கொஞ்சம் மனத்தாங்கல் ஏற்பட்டாலும் கவர்னர் கொடுக் கிற விருதாச்சே என்ற சந்தோஷம் ஏற்பட்டது. கடைசியா பார்த்தா இலவச டி.வி. விழாவுக்கு வந்து சபாநாயகர்ட்ட வாங்கிக் கோனு சொல்லிட்டாங்க. இலவச டி.வி. பெட்டி வாங்கும் வரிசையில் நின்று "நிர்மல் புரஷ்கார்' விருதி னைப் பெற மனம் வரவில் லை. அதான் புறக்கணித்து விட்டோம்!'' விரக்தியோடு சொன்னார் பஸ் லூர் ரஹ்மான்.

இதைப் பற்றி நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜெயராமனிடம் கேட்டோம்.

""கடந்த ஆண்டு வரை நிர்மல் புரஷ்கார் விருதை குடி யரசுத் தலைவர்தான் வழங்கினார். தற்போது கவர்னர் அல்ல மத்திய- மாநில மக்கள் பிரதிநிதிகளை வைத்து வழங்கலாம் என்று முடிவெடுத்ததால் சபாநாயகரைக் கொண்டு கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டது!'' என்றார் அவர்.

முழு சுகாதாரச் செழுமை பெற்ற ஊராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு கிடைத்த மகத்தான விருது, தற்போது மரியாதையை இழந்துவிட்டதாகவே கிராம மக்களும் கருதுகின்றனர்.

வணிகர் சங்க கலாட்டா! -கிளம்பிய பகீர் புகார்!shockan.blogspot.com

காலாவதியான உணவு தொடர்பான விவகாரமா? பெப்ஸி, கோக் போன்ற பன்னாட்டு பகாசூர குளிர்பான கம்பெனிகளுக்கு எதிராக சுதேசி பொருட்களை வாங்கச் சொல்லும் போராட்டமா? தமிழ் ஈழத்திற்காக உயிர் தியாகம் செய்த முத்துக் குமாரின் அஸ்தியை தமிழ்நாடெங்கும் எடுத்துச் சென்று பொதுமக்களை வழிபடச் செய்ய வைக்கும் யாத்திரையா? இப்படி பொதுமக்களின் நலனுக்காக வித்தியாசமான வடிவங்களில் செயல்பட்டு வந்த வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் பேரவை, இந்த வித்தியாசமான செயல்பாடுகளி னாலேயே உடையும் அபாயத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. இந்தச் சிக்க லின் எதிரொலியாக அதன் நிர்வாகி ஒருவரையே அடி யாட்களை வைத்து கொலை முயற்சி செய்யும் அளவிற்கு இரு பிரிவுகளாகப் பிரிந்து மோதிக்கொண்டிருக்கிறார் கள்.

காஞ்சிபுரம் மாவட்ட வணிகர் பேரவை நிர்வாகியான அமல்ராஜ்தான் கொலை முயற் சிக்குள்ளான அந்த நிர்வாகி. ஜூன் 20-ந் தேதி நடந்த அந்த சம்பவத்தைப் பற்றிக் கேட் டால் இப் பொழுதும் பதட்டத் துடனேயே பேசுகிறார்.

""அன்றைய தினம் எனது கடைக்கு வந்த ஒரு இளைஞன் சடாரென என் காலில் விழுந்தான். ராவணன் மளிகைப் பொருள் மொத்த விற்பனைக் கம்பெனியின் ஆட்கள் வந்து தனது கடை முன் தகராறு செய்கிறார்கள், என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினான். அவனுடன் பைக்கில் சென்ற என்னை தாம்பரம் பக்கத்திலுள்ள ஒரு மாந்தோப்பு வழியாக ஒரு குளக் கரைக்குக் கொண்டு சென்றான். அங்கு நின்ற நான்குபேர் எனது சட்டையின் காலரை பிடித்து இழுத்து கத்தியால் வெட்ட வந்தார்கள். அவர்களிடமிருந்து தப்பித்த நான் ஓடிப்போய் அருகேயிருந்த பிளாஸ்டிக் கம்பெனிக்குள் புகுந்து அதன் ஷட்டரை மூடி தப்பினேன். இதுவரை எனக்கு இதுபோன்ற சங்கடம் வந்ததில்லை. இப்பொழுது வணிகர் சங்கத்தில் நிர்வாகி கள் மத்தியில் ஒரு பெரும் குழப்பம் நிலவு கிறது. தலைவராக உள்ள வெள்ளையன் என்னை காஞ்சி மாவட்ட நிர்வாகப் பொறுப்பிலிருந்து நீக்குவதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். பொதுச்செயலாளரான மோகன், "வெள்ளையன் போட்ட உத்தரவு செல்லாது' என அறிவித்துவிட்டார். இந்த சூழ்நிலையில்தான் என்மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறார்கள். இதற்கும் வணிகர் சங்கத்தில் நிலவும் குழப்பத்திற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு'' என்றார்.

வணிகர் பேரவையில் என்ன குழப்பம் என அதன் பொதுச்செயலாளரான மோகனிடமும் விக்கிரமராஜாவிடமும் கேட்டோம். "" 1986-ல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அப்பாதுரை என்பவர்தான் இந்தப் பேரவையை உருவாக்கினார். கடந்த ஜெ. ஆட்சியில் 1992-ம் ஆண்டு தொழில்வரிக்கு எதிராக மாநிலம் முழுவதும் பேரவை போராட்டம் நடத்தியபோது வெள்ளையன் பெரம்பூர் வணிகர் சங்கத் தலைவராக இருந்தார். கேரளா போன்ற மாநிலங்களில் வணிகர்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதுபோல வணிகர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என வெள்ளையன் சொன்னபோது ஆகா என்று அவரை தலைவராக்கினோம். அவர் புகழ் கூட ஆரம்பித்தது. பேரவையும் வளர்ந்தது. எனக்காகத்தான் சங்கம், என் போட்டோவைப் போட்டால்தான் மரியாதை என பேரவை நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட ஆரம்பித்தார். திடீரென்று கடந்த சட்டமன்றத் தேர்தலில் பேரவை நிர்வாகிகளை போட்டியிட உத்தரவிட்டார். பெப்ஸி, கோக் விற்கக்கூடாது என தீர்மானம் போட்டார். பெப்ஸி, கோக் இல்லாமல் இன்று தமிழகத்தில் யாராவது குளிர்பானக்கடை நடத்திவிட முடியுமா? திடீரென்று ஈழப் பிரச்சினைக்காக உயிர்நீத்த முத்துக்குமாரின் அஸ்தியை எடுத்து தமிழகம் முழுவதும் ஊர்வலம் போனார். இதற்கும் வியாபாரிகளுக்கும் என்ன தொடர்பு.

இறுதியாக தமிழக அரசு அதிகாரிகள் தமிழகம் முழுவதும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்கிறார்கள் என வணிகர்கள் மீது நடவடிக்கை எடுத்தபோது... வெள்ளையன் அதை எதிர்த்து ஒரு போராட்டம் மட்டும் நடத்திவிட்டு போய்விட்டார். அரசு அதிகாரிகளின் நடவடிக்கை வியாபாரிகள் மீது தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. இறுதியாக எங்களைப் போன்றவர்கள் தமிழக அரசுடன் பேச்சு நடத்தி வியாபாரிகளைப் பாதுகாத் தோம். வியாபாரிகள் எங்கள் பேரவையிலிருந்து விலகிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருக் கிறோம். எங்களை வெள்ளையன் கடுமையாக எதிர்க்கிறார். அதனால் பேரவையின் பொதுக் குழுவைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதுதான் குழப்பம்'' என்கிறார்கள் மோகனும் விக்கிரமராஜாவும்.
இது என்ன கலாட்டா என வெள்ளை யனை கேட்டோம்.

""நான் தலைவராக இருப்பதால் -நான் பிரபலமடைந்து வருகிறேன் என்பதால் என்னுடன் இருப்பவர்கள் தாங்கள் தலைவராக ஆக விரும்புகிறார்கள். அதற்காக பவர் பாலிடிக்ஸ் செய்கிறார்கள். இதனால் எங்கள் சங்கம் உடையாது. சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடுவது, பெப்ஸி, கோக்குக்கு எதிராக போராட் டம் உட்பட அனைத்து முடிவுகளையும் என்மீது குற்றம் சுமத்தும் இந்த நிர்வாகிகள் அடங்கிய மாநில நிர்வாகக் குழுவில் ஆலோசனை நடத்திய பிறகே எடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகி அமல்ராஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

யுத்தம் 65 -நக்கீரன் கோபால்


shockan.blogspot.com
""விசாரணை முடிந்ததும் உங்க ஆபீசுக்கு சேர்ந்து போகப்போறோம்''-என்றார் 9-ம் நாள் விசா ரணையைத் தொடங்கிய டி.எஸ்.பி. நாகராஜன்.

""ஏன்?''

""நிறைய எடுக்க வேண்டியிருக்குது.''

""அதுதான் பலதடவை ஆபீஸையும் வீட்டையும் ரெய்டு செய்து எதுவும் எடுக்காமலேயே நீங்களா, ஃபைல் ஃபைலா போட்டுவச்சிக்கிட்டு விசாரணைங் கிற பேரிலே ஏதேதோ கேட்குறீங்களே?''

""நாங்க வர்றோம்னதும் ஏன் இவ்வளவு பயப்படுறீங்க?''

""விரோதிங்களைக் கூட வீட்டுக்குள்ளே விட்டுடலாம். உங்களைப் போன்ற போலீஸ்காரங்களை ஊருக்குள்ளே விட்டா என்னாகும்ங்கிறதை மலை கிராம மக் கள்கிட்டே கேட்டா கண்ணீர் கதையா சொல்லுவாங்க. எங்க நக்கீரன் தம்பி சிவா வீட்டுல ரெய்டுங்கிற பேருல உங்க டீம் செஞ்ச அக்கிரமத்தை எப்படி மறக்க முடியும்? வீட்டுல இருந்த பொம்பளைங்களையெல்லாம் ஈவிரக்கமேயில்லாம அவமானப்படுத்தினீங்களே.. உங்ககிட்டே உண்மையும் கிடையாது நியாயமும் கிடையாது. ரெய்டில் எதுவும் கிடைக்கலைன்னா, நீங்களே எதையாவது வச்சி எடுத்துட்டுப்போயிடுவீங்க. இல்லேன்னா குடும்பத்தையே அவமானப்படுத்துவீங்க. நாங்களெல்லாம் மான- அவ மானங்களுக்குப் பயந்து வாழுற மனுசங்க. பெரியவங்க சொல்லியிருக்கிற மாதிரி, எது எதுக்குப் பயப்படணுமோ அது அதற்குப் பயப்படணும். -அதான் பயப்படுறோம்.''

-நான் சொன்னதற்கு டி.எஸ்.பி.யிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பக்கத்திலிருந்த போலீஸ் அதிகாரிகளைத் திரும்பிப் பார்த்தார். இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் உடனே ஒரு ஃபைலை எடுத்தார். என்னைப் பார்த்தார்.

""பக்தவத்சலத்தை ஏன் கொன்னீங்க?''

""ஏன் கொன்னேனா? என்ன சார் சொல்றீங்க? வீரப்பன் சம்பந்தப்பட்ட கேஸையெல்லாம் எங்க மேலே போடுறீங்க. எதற்கு எங்க மேலே இப்படி அநியாயமா பழி போடுறீங்க. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.''

நான் கோபமாகவே சொன்னதைக் கேட்டதும் டி.எஸ்.பி. நாகராஜன், ""பக்தவத்சலம் நாங்க அனுப்புன ஆள். ஒரு ஸ்டூடண்ட். பி.பி.சி. நிருபர்ங்கிற பேருல போலீஸ் இன்ஃபார்மரா நாங்க தான் அனுப்பி வச்சோம். நிருபர் இல்லைன்னு தெரிஞ்சதும் வீரப்பன், அவனைக் கொன்னுட்டான். அதற்கு நீங்கதான் காரணம்.''

போலீஸ் அனுப்பிவைத்த ஆளை வீரப்பன் கொலை செய்ததற்கு நக்கீரன் எப்படி காரணமாக முடியும்? பொய் களால் சதிவலை பின்னும் போலீசாரின் கொடூரத்தனத்திற்கு அளவேயில்லையா என நினைத்த எனக்கு, இளைஞன் பக்தவத்சலம் சம்பவம் நினைவுக்கு வந்தது.

அது வீரப்பனிடமிருந்து நக்கீரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆடியோ கேசட். ஏதேனும் முக்கியமான தகவலாக இருந்தால் இதுபோல செயல்படுவது அவன் வழக்கம். என்ன தகவல் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலுடனும் பதட்டத்துடனும் அந்த கேசட்டை டேப் ரிகார்டரில் ப்ளே செய்தேன். கேசட் ஓடத் தொடங் கியதும் ஒரு இளைஞனின் பயம் கலந்த குரல் ஒலித்தது. மரணத்தின் வாசலில் நின்றுகொண்டு அந்த இளைஞன் பேசுவதை உணர்ந்தபோது அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றேன்.

""ஐ.ஜி. காளிமுத்து அவர்களுக்கு, நான் பக்தவத்சலம் பேசுறேன். வீரப்பனும் அவங்க ஆட்களும் என்னைப் பிடிச்சு வச்சிருக்காங்க. அவங்க எவ்வளவு காசு கேட்கிறாங்களோ அதைக் கொடுத்து என்னை மீட்டுக்கிட்டு போங்க. உங்க திட்டங்கள் எல்லாம் வீரப்பன் அண்ணனுக்கு தெரிஞ்சு போச்சு... உலகமே அழிஞ்சாலும் அண்ணனை நீங்க பிடிக்க முடியாது. அதனால அவங்க கேட்கிற கோரிக்கையை கொடுத்திடுங்க.... அண்ணே சுட்டுடாதீங்கண்ணே...''

இளைஞனின் குரல் அலறுகிறது. வீரப்பன் தரப்பின் பிடியில் அவன் இருப்பது நன்றாகத் தெரிகிறது. தொடர்ந்து அந்த பதட்டக் குரல் ஒலிக்கிறது.

""அவங்க கேட்கிற காசையும் கோரிக்கையையும் தரலைன்னா என்னை கொலை செய்து விடுவாங்க. .. போலீஸ் இன்பார்மராக இருக்கும் நான் வீரப்பன் பிடியிலே இருக்கேன். காசும் கோரிக்கையும் கொடுத்து என்னை மீட்டுட்டுப்போங்க.''

கொஞ்ச நேரம் இடைவெளி. டேப் வெறுமனே சுழல்கிறது. மீண்டும் அந்த இளைஞனின் குரல்.

""அன்புள்ள அப்பா -அம்மாவுக்கு... பக்தவத்சலம் ள்/ர் ரத்னம் , 545-சுக்ரவார்பேட்டை வீதி, காந்தி பார்க், கோவை . போன் நம்பர் 471752 என்ற விலாசத்தில் உள்ள என்னை வீரப்பன் அண்ணன் பிடிச்சு வச்சிருக்காரு. அவரு என்ன கேட்கிறாரோ அதைக் கொடுத்து என்னை மீட்டுட்டு போகும்படி கேட்டுக்குறேன். இன்னொரு விலாசம்.. பி.பி.சி. பிராஞ்ச் ஆபீஸ், பொள்ளாச்சி மெயின் ரோடு, ஆத்துப்பாலம்.''

-அட்ரஸ் சொல்லி முடித்ததும் திரும்பவும் பேச்சு துண்டிக்கிறது. கேசட் நாடாவில் தொடர்பில்லாமலும் பல இடங்களில் சத்தம் குறைந்தும் பதிவாகியிருந் தது அந்த கேசட். அதனுடன் ஒரு லெட்டரும் இருந்தது. "டேப் ரிகார்டர் ரிப்பேராகிவிட்டதால் இப்படிப் பதிவாகியிருக்கிறது. அதனால் நடந்த சம்பவங்களை எழுதி அனுப்பியிருக்கிறோம்' என்கிற அந்தக் கடிதம் வீரப்பன் தரப்பிலிருந்து அனுப்பப் பட்டிருந்தது.

அதில், "இந்த இளைஞன் பக்தவத்சலத்தை தாளவாடி பாயும் இன்பார்மர் கந்தவேலுவும் சில மாதங்களுக்கு முன் அழைத்து வந்தார்கள். அவன் பி.பி.சி. நிருபர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். போலீஸ் இன்பார்மராக இருப்பானோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதனால் அவனுக்குப் பேட்டி தரவில்லை. அதிரடிப்படை தொடர்ந்து என்னையும் என் ஆட்களையும் தேடியதால் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கணும்னு சொல்லி தாளவாடி பாய் மூலமா அந்தப் பையனை அழைத்து வரச்சொன்னேன். அவன் வந்ததும், நீ போலீஸ் இன்பார்மர்தானேன்னு கேட்டு, போடு போட்டதும் உண்மையைச் சொல்லிவிட்டான்' என்பது அந்த கடிதத்தின் சாராம்சம்.

யார் இந்த இளைஞன் பக்தவத்சலம்? வீரப்பன் காட்டுக்கு அவன் ஏன் சென்றான்? இவன் நிருபரா, இன்பார்மரா? -அலறும் குரலுடன் ஒலித்த அந்த ஆடியோ கேசட்டும் அதனுடன் இணைந் திருந்த கடிதமும் நம்முடைய அதிர்ச்சி அளவினை அதிகரிக்கச் செய்தது. உடனடியாகப் புலனாய்வில் இறங்கினோம்.

ஆடியோ கேசட்டில் அவன் தெரிவித்திருக்கும் முகவரிக்கு நமது நண்பர் ஒருவர் மூலம் தொடர்புகொண்டோம்.

"ஆமாம்.. பக்தவத்சலம் இங்கே உள்ள பையன்தான். டி.எம்.இ. படிச்சிருக்கான். பி.இ. படிப்பதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப் பட்டதால் படிப்பைத் தொடர முடியலை. ஏதாவது சாதிக்கணும்னு நினைக்கிறவன். வேலை தேடி மெட்ராசுக்குப் போனான்' என்ற தகவல் கிடைத் தது. இந்தத் தகவலோடு நக்கீரன் நிருபர் தம்பி மகரன், பக்தவத்சலம் வீட்டுக்குப் போனார்.

பக்தவத்சலத்தின் அப்பாவையும் அண்ணனையும் சந்தித்தார்.

""ஆமாந்தம்பி.. 20 நாளுக்கு முன்னாடி அவன் ஃப்ரெண்டோட அப்பா போன் செய்தாரு. அவரு இன்ஸ்பெக்டரா இருக்காரு. போலீஸ் வேலைக்கு எங்க பக்தவத்சலம் செலக்ட்டாகியிருப்பதாவும் கூடிய சீக்கிரம் நல்ல சேதி வரும்னும் சொன்னார்'' என்றார் கள்.

போலீஸ்தான் பக்தவத்சலத்தைக் காட்டுக்குள் அனுப்பியதா என்பதை கண்டுபிடிக்க, அந்த இன்ஸ்பெக்டர் பற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். அவர் ஈரோட்டில் ரேடியோ இன்ஸ்பெக்டராக இருப்பது தெரிந்தது. அது, மத்திய அரசு வேலை என்றாலும் அதிரடிப்படையோடு நெருக்கமான தொடர்புடைய பணிதான். இந்த விவரத்தோடு, பக்தவத்சலத்தின் நண்பர்களைத் தொடர்புகொண்டோம்.

""நாங்க அவனை பரத்.. பரத்துன்னுதான் கூப்பிடுவோம். மலையேறுவதில் ரொம்ப ஆர்வமா இருப்பான். வீரப்பனைப் பார்க்கப்போறேன்னும் சொல்லுவான். நாங்க கிண்டல் பண்ணுவோம். அவன் கவலையேபடமாட்டான். நான்தான் தலைவர் வீரப்பனை வெளியில அழைச்சிட்டு வரப்போறேன்னு சொல்லுவான்'' என்றார்கள். வீட்டிலும் இப்படித்தான் பக்தவத்சலம் அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பான் என்றும் அவன் நண்பர்கள் சொன்னார்கள். நக்கீரனில் வெளியான வீரப்பன் பற்றிய செய்திகளையும் தினசரி பத்திரிகைகளில் வந்த செய்திகளையும் கத்தரித்து தனி ஃபைலே வைத்திருந்திருக்கிறான்.

அவனுடைய தாய்மாமன்களுக்கு தாளவாடியில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே போகும்போது, நாட்டுத் துப்பாக்கியால் முயல் வேட்டையாடுவதில் அவனுக்கு அலாதிப் பிரியம். இரண்டு மாதங்களுக்கு முன்பாக நண்பனோடு அந்தப் பகுதிக்குப் போயிருக்கிறான். அந்த சமயத்தில்தான் தாளவாடி பாய் என்ற பிரமுகரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீரப்பன் பற்றிய தகவல்களை யெல்லாம் ஆர்வமாகக் கேட்டிருக்கிறான். தனக்கு வீரப்பனைப் பார்ப்பதில் ரொம்ப ஆர்வம்னு சொல்லியிருக்கான். வீரப்பனைப் பார்ப்பதற்கு இது சரியான ரூட் என்பது பக்தவத்சலத்தின் கணக்கு.

தாளவாடியிலிருந்து கோயம்புத்தூருக்கு பக்தவத்சலம் திரும்பியபிறகு, பாயிடமிருந்து அடிக்கடி போன் வந்திருக்கிறது.

"தலைவர் வீரப்பனை எப்படியாவது பார்த்திடணுமுங்க. நீங்கதான் ஏற்பாடு செய்யோணும்' என்று சொல்லி, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பது பக்தவத் சலத்தின் வழக்கம். அவனுடைய வீட்டில் இருந்தவர்களுக்கும் பக்தவத்சலத்தின் போக்கு என்ன வென்று தெரிந்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அவன் காட்டுக்குச் செல்வான் என்பதை அவர்கள் எதிர்பார்த்தே இருந்திருக்கிறார்கள்.

ஓசியில் ஒரு கேனான் கேமரா வாங்கிக்கொண்டு தீபாவளிக்கு மறுநாள் விடியற்காலை 4 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான் பக்தவத்சலம். அதன்பிறகு அவன் வீட்டாருக்கோ சொந்தக்காரர் களுக்கோ நண்பர்களுக்கோ எந்தத் தகவலும் வராத நிலையில்தான், வீரப்பன் தரப்பிலிருந்து நக்கீரனுக்கு கேசட் வந்தது.

அதில்தான், அதிரடிப்படைத்தலைவர் காளிமுத்துவுக்கு மரணத்தின் முனையிலிருந்து கோரிக்கை வைத்திருக்கிறான் பக்தவத்சலம். போலீஸ் அவனை எப்படி பயன்படுத்திக் கொண்டது? வீரப்பனின் கொடூரப் பிடியில் சிக்கியிருக்கும் அவனது கதி?

-யுத்தம் தொடரும்

புரிதலின்றி பிரியும் உறவுகள்!


shockan.blogspot.com

"தங்கள் பிள்ளைகள் பட்டப்படிப்பு படிக்க வேண்டுமென்று ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோரே பெரிதும் முயற்சிப்பதில்லை. ஆனால், வறுமையில் உழலும் சமுத்திரமோ தன் மனைவி பாண்டி ஈஸ்வரி படித்து பட்டம் பெறவேண்டும்' என இக் கல்லூரியில் சேர்த்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரை லேடி டோக் கல்லூரியே வியந்து பாராட்டிய சமுத்திரம் சோகம் அப்பிய முகத்தோடு நம்மைச் சந்தித்தார்.

""பொண்டாட்டிய படிக்க வச்சேன்ல... அவளுக்கு உலகம் புரிஞ்சுப் போச்சு. தளுக்கி மினுக்கி குஷியா வாழற வழி தெரிஞ்சுப் போச்சு. அதான் இனிமே புருஷன் எதுக்குன்னு என்னைக் கழட்டி விட்டுட்டா. 11 வருஷ குடும்ப வாழ்க்கைல எனக்குப் பொறந்த ரெண்டு பிள்ளைகளும் இப்ப தப்பான அவங்க அம்மா கிட்ட வளருது. எம்.ஏ. பட்டதாரியாகி, ஆசிரி யர் வேலை பார்த்த நான் இப்ப ஒரு வேலையும் இல் லாம சிவகாசி போலீஸ் ஸ்டே ஷன்ல கண்டி ஷன் பெயில்ல கையெழுத்துப் போட்டுட்டிருக் கேன். ஆமா சார்... மாமியாரை வெட்டிட் டேன்னு என்மேல கேஸ் போட்டுட்டாங்க'' என்று பெருமூச்சு விட்டவர்...

""கட்டுன பொண்டாட்டியே கை நீட்டி என்னை அடிக்கிறா. வாரத்துக்கு ஒருநாள்னு "அதை'க்கூட ரேஷனாக்கிட்டா. அதுவும் கசந்து இப்ப என்னை விட்டுட்டுப் போயிட்டா. அவ உருவத்துல, நடை, உடை, பாவனைல அப்படி ஒரு தலைகீழ் மாற்றம். ஒரு மலையாளியின் பிடியில் முழுநேர தொழிலாளி யாகிவிட்டாள். ஆஸ்திரேலியாவுக்கு அவளைக் கடத்தும் திட்டம் இருக்கு. இதை நான் தடுத்துருவேங்கிற கோபத்துல என்னைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவிவிட்டிருக்கா. என்னைக் குறிவைத்து கூலிப்படை பின் தொடர்வது குறித்து முதலமைச்சர் வரைக்கும் புகார் அனுப்பியிருக்கேன். மதுரையில் சொகு சான ஒரு விடுதியில் சிக்கியிருக்கும் அவள் அங்கிருந்து மீண்டு நல்வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்'' என்று விக்கி விக்கி அழுதார்.

"படிக்க வைத்த கணவனை பரிதவிக்கச் செய்வாளா மனைவி?'

மனதுக்குள் உறுத்தலாக கேள்வி எழ... "தீர விசாரிப்பதே மெய்' என மதுரை பீபிகுளம் ஏரியாவில் உள்ள அந்த வீட்டை முதலில் நோட்டமிட்டோம். பிறகு, உள்ளே சென் றோம். பெண்கள் சிலர் நம்மை வரவேற்று அமரச் செய்தார்கள். டேவிட் என்ற முதியவரை அழைத்து வந்தார்கள். அவர் நம்மிடம் ""சலோம் என்ற பெயரில் மனவளர்ச்சி குன்றியோருக் காக நாங்கள் நடத்தும் தொண்டு நிறு வனம் இது. பாண்டி ஈஸ்வரி திருமண மானவள். அதனால், அவள் தங்கிப் படிக்க லேடி டோக் கல்லூரி அனுமதிக்க வில்லை. அக்கல்லூரியிலேயே இயங்கும் சுடர் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலேயே பாண்டிஈஸ்வரி இங்கு தங்கியிருக்கிறாள். அவளது வெளி நடவடிக்கைகள் குறித்தெல்லாம் நாங்கள் ஆராய முடியாது'' என்றார்.

தேர்வை முடித்துவிட்டு கல்லூரியிலிருந்து திரும்பிய பாண்டி ஈஸ்வரியை அங்கு சந்தித்தோம். குடும்பப் பாங்கான சாதாரண தோற்றத்தில் இருந்த அவர் ""மொதல்ல படிக்க வச்ச என் கணவரே அப்புறம் படிப்பைக் கெடுக்க நினைச்சாரு. அவரு சொல்லுற மாதிரி எங்கம்மா தப்பான வங்க கிடையாது. மாறி, மாறி அவர் கொடுத்த புகாரால் மதுரை தல்லாகுளம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி போலீஸ் ஸ்டேஷன்கள்ல விசாரணையைச் சந்திச்சு என் தரப்பு நியாயத்தை விளக்கியிருக்கேன். கணவன்ங்கிற முறை யில என்னைக் கேவலப்படுத்துற உரிமை அவருக்கில்லைன்னு விசாரணை பண்ணுன போலீஸ் ஆபீசர்கிட்ட அழுத்தமாச் சொல்லிட்டு வந்தேன். நான் தப்பானவ கிடையாது. நல்லவள்னு இன்னும் எத்தனை பேருகிட்டதான் நிரூபிக்கணுமோ தெரியலை. பிரிஞ்ச பிறகும்கூட என் நிம்மதியைக் கெடுக்கிற சைக்கோவா இருக்காரு. அந்த ஆளைப் பார்க்கணுமே... நல்லா நாலு கேள்வி கேட்கணுமே...'' என்றார் ஆதங்கத்துடன்.

சமுத்திரத்தை அழைத்து வந்து மனைவி பாண்டி ஈஸ்வரி யின் முன் அமரச் செய்தோம். "பழைய குப்பைகளைக் கிளறா தீர்கள். அதனால் ஒரு பலனுமில்லை. வீண் சந்தேகங்களுக்கு இடம் தராதீர்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்' என்று பேச்சைத் துவக்கி வைத்தோம்.

சமுத்திரமோ முந்திக்கொண்டு ""அநியாயத்தைக் கண்டால் நான் மனம் கொதிப்பேன்னு உனக்குத் தெரியாதா?'' என்று வாஞ்சையாகக் கேட்க... ""நான் பேசற ஒவ்வொரு வார்த் தைக்கும் என்னோட ஒவ் வொரு செயலுக்கும் தப் பர்த்தம் கண்டுபிடிக்கு றீங்க. சின்னச் சின்ன விஷயத்தைக்கூட பெரிசுபடுத்திக் கிட்டே இருக் கீங்க. உங்களை விட எனக்கு 14 வயசு கம்மி. என்னைவிட உசரத்துல நீங்க கம்மி. இந்தத் தாழ்வு மனப்பான்மை உங்ககிட்ட ரொம்ப இருக்கு. அசிங்க அசிங்க மாத் திட்டுனீங்க. என்னை அடிச் சீங்க. எத்தனை காலத்துக்குத்தான் விட்டுக் கொடுக்க முடியும்? எவ்வளவுதான் பொறுமை காக்க முடியும்?'' என்ற பாண்டி ஈஸ்வரியை இடை மறித்து ""நீயும்தான் என் னை அடிச்ச... உங்க குடும்பமே ஒண்ணு சேர்ந்து என்னை அடிச்சுச்சு. இப்ப கொலை வெறியோட திரியுது...'' என்று சமுத்திரம் அழ... ""எதையும் அழுது சாதிக்க நெனைக்கிறது ஒரு ஆணுக்கு அழகா? கணவன்- மனைவியோட அந்தரங்க விஷ யங்களைக்கூட முதலமைச்சர் வரைக்கும் கொண்டு போயிட் டீங்க. நல்ல மனசோட இப்ப நக்கீரன் பண்ணுற மாதிரி, இதுக்கு முன்னாலயும் ரெண்டு, மூணு கவுன்சிலிங்ல நாம உட்கார்ந்திருக்கோம். ஆனா ஒண்ணுசேர முடியலை. நீங்க மாறுவீங்கங்கிற நம்பிக்கை எனக்கில்லை'' என்று பாண்டி ஈஸ்வரி அழுத்தமாகச் சொல்ல... ""நான் வேணாம்னு நீயே முடிவெடுத்த பிறகு நான் என்ன பண்ண முடியும்?'' என்று கண் கலங்கினார் சமுத்திரம். பிறகு நம் பக்கம் திரும்பிய பாண்டி ஈஸ்வரி...

""தப்பானவளா இருந்தாத் தான் பயப்படணும். எனக்கு ஒரு பயமும் இல்ல. அடுத்தடுத்து படிக்கணும். நல்ல வேலைக்குப் போகணும். இந்தச் சமுதாயம் மதிக்கிற அளவுக்கு முன் னேறணும். அப்புறம் ஆஸ்திரேலியா என்ன? அமெரிக்கா, லண்டனுக்கு கூட வாய்ப்பிருந்தா போவேன். அடுக்கடுக்கா கற்பனையான குற்றச் சாட்டுகளை என் மேல சுமத்தி, சதா சந்தேகப் படற இவர் நிச்சயம் எனது வளர்ச்சிக்குத் தடையாத் தான் இருப்பாரு. அத னாலதான் இவர் வேண்டவே வேண்டாம்னு ஒரு முடி வெடுத்துட்டேன். அதற்கான சட்ட நடவடிக்கைகளை சீக்கிரமே எடுப்பேன்'' என படபட வென்று பேசி விட்டு சற்றே இமைகளை மூடினார்.

பிறகு முகத்தை துடைத்து விட்டு ""பாவம் சார் என் கணவர். என் மீது கொண்ட அதீத பாசத் தால்தான் என்னைத் தவறானவள் என்று சித்தரிக்க முயல்கிறார். இதுகூட என்னைவிட அவர் நேர்மையானவர் என்று காட்டிக் கொள்ளத்தான். என்னோடு வாழ வேண்டும், இல்லையென் றால் கேவலப்படுத்துவேன் என மிரட்டுவது... அவரை விட்டு நிரந்தரமாகப் பிரியும் நிலையை ஏற்படுத்தி விட்டது'' என்றார் தீர்க்க மாக.

பாண்டி ஈஸ்வரியின் இந்த நிலைப்பாடு சரியா? தவறா? வாசகர்களின் தீர்ப் புக்கே விட்டுவிகிறோம்.

தமிழச்சிகள் கற்பழிப்பு! -சிங்கள ராணுவம்...


shockan.blogspot.com

தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களை அவர்களது வாழ் விடங்களில் குடியமர்த்தா மலும் அவர்களின் வாழ் வாதாரங்களுக்குத் தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தராம லும் வஞ்சித்து வருகிறார் மகிந்த ராஜபக்சே!

இத்தகைய துயரங்கள் ஒருபுறம் அதிகரித் துக்கொண்டிருக்க, மற்றொரு புறம் ஈழத்தமிழச்சி கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்திவரும் பாலியல் வன்முறைகள் ஜீரணிக்க முடியாத அதிர்ச்சிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் பதினைந்து தினங்களுக்கு முன் அடையாள அணி வகுப்பு ஒன்றை நடத்தினார் நீதிபதி சிவக்குமார். இந்த அணிவகுப்பில் 20-க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர். நீதிபதி சிவக்குமாரின் உத்தரவின் பேரில் 30 வயதான மேரி மார்க்கிரட்டும் 28 வயதான திருக்குமரியும் அழைத்து வரப்பட்டனர். அணிவகுப்பை உற்றுக் கவனித்த இரு வரும், தனுஷ்பிரிய ரத்ன நாயக, புஸ்ப குமர, பதிலமுடித்துவ பண்டார நாயகே, சாந்தசுபசிங்கே ஆகிய 4 சிங்கள ராணு வத்தினரை அடையாளங் காட்டினார்கள்.

இந்த 4 பேரையும் வவுனியா சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி சிவக் குமார், ""எந்தச் சூழலிலும் இவர்கள் தப்பி யோடி விடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்'' என்று போலீஸை கடுமையாக எச்சரிக்கை செய்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 சிங்கள ராணுவத்தினரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏன், எதற்கு இந்த அடையாள அணிவகுப்பு?

கிளிநொச்சியில் உள்ள தமிழர்களை தொடர்பு கொண்டு பேசியபோது... ""வவுனியா தடுப்பு வதை முகாமிலிருந்து 2 குழந்தைகளுடன் வெளியே வந்த திருக்குமரி, தனது சொந்த ஊரான விசுவமடு பகுதிக்கு வந்தபோது, அவரது வீடு இருந்த இடம் சிங்களவர் களின் ஆக்ரமிப்பில் இருந்தது.

இதனால் தங்குவதற்கு இடமின்றி தவித்தார் திருக்குமரி. அங்கிருந்த தமிழர்களின் உதவியோடு ஓரிடத்தில் டெண்ட் அடித்து வசித்தார். தமிழர் பகுதிகள் முழுவதும் சிங்களமயமாக்கப் பட்டுவிட்டதால் எங்கு பார்த்தாலும் சிங்களர்களும் சிங்கள ராணு வத்தினருமே சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இரு வாரங்களுக்கு முன்பு இரவில் ரோந்து வந்துகொண்டிருந்த 2 சிங்கள ராணுவ காடைகள், திருக்குமரியின் டெண்டுக்குள் புகுந்து அவரை தாக்கி கற்பழித்திருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து திருக் குமரியால் போராட முடியவில்லை. கதறித் துடித் திருக்கிறார். அவரது கதறலைக் கேட்டு அந்த வழியாக சென்ற மேலும் 2 ராணுவத்தினர் வர... அவர்களும் திருக்குமரியை நாசப்படுத்தியுள்ளனர். தாயின் கதறலில் 2 குழந்தைகளும் விழித்துக்கொண்டு அழ... அந்த குழந்தைகளை அடித்து வெளியே கொண்டு வந்தான் ஒரு சிங்களவன். மற்ற மூன்றுபேரும் தங்கள் காரியத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்ததும் குழந்தைகளை உள்ளே கொண்டுபோய் விட்டுவிட்டுப் போய்விட்டனர். குற்றுயிரும் குலையுயிருமாக விடியும்வரை போராடிக் கொண்டிருந்தார் திருக்குமரி. மறுநாள் காலையில் இந்த சம்பவத்தை அறிந்து திருக்குமரியை ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர் அங்கிருந்த தமிழர்கள்.

இந்த சம்பவம் நடந்த இரண்டாம் நாள், இதே பகுதியைச் சேர்ந்த மேரி மார்க்கிரட்டையும் கொடூர மாக சீரழித்திருக்கிறார்கள் சிங்கள ராணுவத்தினர். இந்த இரண்டு சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த... ராணுவத்தின் பாலியல் வன்முறையை கண்டித்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் மனு போடப்பட்டது. இதன்மூலம் இரண்டு கொடூர சம்பவங்களையும் அறிந்து அதிர்ச்சியடைந்த நீதிபதி, அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்டார். அந்த அணிவகுப்பில்தான் பாதிக்கப்பட்ட 2 பெண்களும் தங்கள் மீது பாலியல் வன்முறை நடத்திய சிங்கள ராணுவத்தினரை அடையாளம் காட்டினர்'' என்று விவரித்தனர்.

இதேபோல மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, யாழ்ப் பாணம் பகுதிகளில் உள்ள பள்ளிக் கூடங்களில் படிக்கும் சிறுமிகள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படும் கொடுமைகள் அதிகரித்து வரு கிறது.

""அம்பாறையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்துக்கொண் டிருந்த கமலினி, நந்தினி, தேன் மொழி ஆகியோர் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும் பிக்கொண்டிருந்தனர். ஊரைவிட்டு தள்ளியிருந்தது இந்த சிறுமிகளின் வீடுகள். ஒற்றையடிப் பாதை வழியாக இவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ராணுவ வாகனத்தில் இந்த மூவரும் கடத்தப்பட்டு வாகனத்திலேயே கற்பழிக்கப் பட்டார்கள். தங்கள் வேலை முடிந்ததும் கடத்தப்பட்ட இடத்திலேயே கொண்டு வந்து அவர்களை இறக்கிவிட்டுப் போனது ராணுவம்'' என்கிறார் அம் பாறை மாவட்ட மருத்துவமனை டாக்டர் ஒருவர்.

வவுனியா முதல்நிலைப் பள்ளி யில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டி ருக்கும் தனது மகள் சாந்தியை அழைத்துச் செல்ல பள்ளிக்கூட வாச லில் காத்திருந்தார் மலர்விழி. அப்போது பள்ளியினுள்ளே இருந்து வந்த விக்ரமசிங்கே என்ற சிங்கள ராணுவத்தினன், மலர்விழியின் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்ய... மலர்விழி கதறினார். பள்ளிக்கூடம் அருகே கடை வைத்திருந்த சிலர் ஓடிவந்து மலர்விழியை காப்பாற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விக்கிரமசிங்கே தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து நீட்டி, ""இன்னைக்கு நீ தப்பிச்சிருக்கலாம், நாளைக்கு என் நண்பர்களோடு வந்து உன்னை கடத்தறேன்'' என்று கூறிவிட்டுப் போயிருக் கிறான். அவனைப் பிடிக்க முடியாமல் நின்றிருக்கிறார்கள் தமிழர்கள். நடந்த சம்பவத்தை நினைத்து கதறித் துடித்த மலர்விழி, பள்ளிக் கூடத்திற்கு மகள் செல்வதை நிறுத்திவிட்டார்.

இப்படி பல்வேறு சம்பவங்கள் தினம் தினம் நடந்து கொண்டிருப்பதால் தமிழ்ப்பெண்கள் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டி ருக்கிறார்கள். தாய்மார்கள், இளம்பெண்கள், பள்ளிச் சிறுமிகள் என தமிழச்சிகளை குறி வைத்து பாலியல் வன்முறைகளை நடத்திக்கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம்.

தாதாக்களுக்கு ஆஜரான வக்கீல் கைது!


shockan.blogspot.com
நீதிக்காக வாதாடவேண்டிய வழக்கறிஞர்களில் சிலர்... க்ரைம் பிரைனாக செயல்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுக் குரல்... அங்கங்கே ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில்...

க்ரைம் பிரைனாக இருந்தார் என்று காரணம் காட்டி.. சென்னை எழும்பூர் கோர்ட் அருகே ரவுடி சின்னாவோடு இருந்த வழக் கறிஞர் பகத்சிங்கையும் போட்டுத்தள்ளியது ஒரு கும்பல். இது கருப்புக்கோட் தரப்பை அண்மை யில் அதிரவைத்த திகில் சம்பவம்.

இப்படிப்பட்ட விபரீத சூழலில்.... குற்றவாளிகளுக்கு க்ரைம் பிரைனாக இருந்தார் என்ற அதிரடிக் குற்றச்சாட்டின் பேரில்... திருச்சியின் பிரபல வழக்கறிஞரான புனிதனைக் கைது செய்து... வழக்கறிஞர் தரப்பைத் திகைக்க வைத்திருக்கிறது தஞ்சை போலீஸ்.

முட்டை ரவி, குணா, ரோக்கு, பன்னி சேகர், பன்னி பெரியசாமி, கொக்கி ஜேம்ஸ், நெட்டை ஜேம்ஸ், பிச்சைமுத்து போன்ற திருச்சி பகுதியில் பிரபல திகீர் பகீர் தாதாக் களுக்கு வக்கீல் என்ற முறையில் பிரபல மானவர்தான் இந்தப் புனிதன். பார் அசோசி யேசனே குறுக்கே நிற்கும் விவகாரங்களிலும்... தயங்காமல் வரிந்துகட்டிக் களம் இறங்குவது இவரது ஸ்பெஷாலிட்டி.

ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பான மோதலில்... கீரனூர் வக்கீல் கார்த்திகேயன்... படுகொலை செய்யப்பட்டார். இதில் அரிவாள் தூக்கிய நாகேந்திரனுக் காக... எந்த வக்கீலும் ஆஜராகக் கூடாது என்று வக்கீல்கள் சங்கம் தீர்மானம் போட்டது. இருந்தும் இதுபற்றிக் கவலைப் படாமல் நாகேந்திரனுக்காகவும் கருப்பு கோட்டை மாட்டினார் புனிதன்.

இதேபோல் 76 வயது குற்றவாளி ஒருவர், அஜ்மல் என்கிற வக்கீ லைக் கோர்ட்டில் வைத்தே தன் காலணியால் தாக்க... இதிலும் வழக்கறி ஞர்கள் எதிர்ப்பையும் மீறி... 76-க்காக ஆஜராகி கோர்ட் தரப்பில் சலசலப் பை புனிதன் ஏற் படுத்தினார்.

இப்படி சர்ச்சைக்குரிய வழக்கறிஞ ரான புனித னைக் குறி வைத்து... தஞ் சையில் இருந்து திருச்சிக்குப் புறப் பட்டு வந்த ஒரு போலீஸ் டீம்... கண்ட் டோன்மெண்ட் பகுதியில் இருக்கும் அவரது வீட்டை அதிகாலையில் முற்றுகையிட்டது. "கொலை முயற்சிக்கு ஆலோசனை வழங்கினார்... சதித்திட்டம் தீட்டினார்' என்ற புகாரை வாசித்து அதிரடியாக அவரைக் கைதுசெய்ய... பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.

என்ன நடந்தது?

தஞ்சை மாவட்ட திருக்காட்டுப்பள்ளி அருகே இருக்கும் பவனமங்கலம் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் நிலத்தை ஏலம் எடுப்பது தொடர்பான பிரச்சினையில்... ஊர்க்காரரான ரத்தினகுமார் அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக பிரகாஷ், முத்துக்குமார், கணேசமூர்த்தி, சேகர், ரமேஷ் உள்ளிட்ட கும்பலை போலீஸ் வளைத்தது. உயிர் பிழைத்த ரத்தினகுமாருக்கு... கைகாலெல்லாம் ஏகப்பட்ட வெட்டுகாயம்.

இந்தப் பிரச்சினையில்தான் வழக்கறிஞர் புனிதன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த தாக்குதல் நிகழ்ச்சிக்கும் வழக்கறிஞர் புனிதனுக்கும் என்ன தொடர்பு?

பொன்னியம்மன் கோயில் நிர்வாகியான சந்திரசேகரன் சொல்கிறார்... ""“எங்க கோயில் நிலத்தை வருசா வருசம் ஏலம் விடுவோம். போன தடவை 3,100 ரூபாய்க்கு பிரகாஷ் ஏலம் எடுத்தார். அதே நிலத்தை இந்த வருடம் குணசேகரன் என்பவர் 7,100 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இருந்தும் பிரகாஷ் குணசேகரன்கிட்ட இடத்தை விட்டுக்கொடுக்க மறுத்தார். இது சம்பந்தமா பேச்சுவார்த்தை நடந்தது. அப்ப.. தி.மு.க. பிரமுகரான ரத்தினகுமார்... ஏலம் எடுத்த குணசேகருக்கு இடத்தை விட்டுக்கொடுப்பதுதானே முறைன்னு நியாயம் பேசினார். இதனால் கோபமான பிரகாஷ் டீம்.... ரத்தினகுமார் ஏலம் எடுத்த மீன் வளர்ப்புக் குளத்தில் விஷம் கலந்து மீன்களை சாக அடித்தது. இருந்தும் ரத்தினகுமார்... குணசேகருக்காக குரல்கொடுத்தபடியே இருக்க... இதில் ஏகக்கடுப்பான பிரகாஷும் அவர் ஆளுங்களும்... வயல்ல தண்ணீர் பாய்ச்சிக்கிட்டு இருந்த ரத்தினகுமாரை சுத்திவளைச்சி அரிவாளால சரமாரியா வெட்டிட்டு ஓடிட்டாங்க. இந்த வழக்கு தொடர்பா முதல்ல 4 பேர் போலீஸ்ல ஆஜரானாங்க. அதில் ரெண்டுபேரை புனிதன் ஜாமீன்ல எடுத்தார். மேலும் இரண்டுபேரையும் அவர் ஜாமீனில் எடுக்க முயற்சித்தார். மேலும் 4 குற்றவாளிகளுக்கு புனிதன்.. பாதுகாப்பு கொடுத்திருந்தார். இதை போலீஸ்ல சொன்னோம். இதன் பிறகுதான்... புனிதன் இருக்கும் தைரியத்தில்தான்... அந்தக் கும்பல் ரத்தினகுமாரை வெட்டிய விஷயமே போலீஸுக்குத் தெரிஞ்சிது. இது சம்பந்தமா விசாரணை செய்த இன்ஸ்பெக்டருக்கு 3 தடவைக்கு மேல வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் புனிதன். இதில் எரிச்சலான இன்ஸ்பெக்டர்... புனிதன் சதித் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்ததுன்னு எஃப்.ஐ.ஆரில் எழுதிவச்சிட்டு டிரான்ஸ்பரில் போய்ட்டார். அவர் எழுதியதுதான் இப்ப வேலை செஞ்சிருக்கு''’என்று முடித்துக்கொண்டார்.

ரத்தினகுமாரோ ""ஏலம் எடுத்த குணசேகர்ட்ட நிலத்தை ஒப்படைங்கன்னு சொன்னது தப்பா? உடனே புனிதன்கிட்ட பிரகாஷ் போயிருக்கார். "போய் பொலி போட்டுட்டு வாங்கடா... நான் பார்த்துக்குறேன்'னு அவர் சொல்ல... இதன் பிறகுதான் அவங்க என்னைத் தாக்குனாங்க. அரிவாளால் என்னை வெட்டியபிறகு அதே ஸ்பாட்ல இருந்து... புனிதனுக்கு அந்த கும்பல் தகவல் கொடுத்தது'' என்கிறார்.

திருவையாறு நீதிமன்ற வளாகத்தில் நாம் பார்த்த வழக்கறிஞர் புனிதனோ, ""ரத்தினகுமார் மட்டுமல்ல. பிரகாஷும் குணசேகரும் கூட தி.மு.க. காரங்கதான். இருந்தும் அமைச்சர் பழனி மாணிக்க மும் அவர் தம்பி ராஜ் குமாரும் பிரஷர் கொடுத்து தான் என்னைக் கைது பண்ணவச்சிட்டாங்க. ஒரு வழக்கறிஞரா குற்றம் சாட் டப்பட்டவங்களுக்கு நான் ஆஜராவது தவறா?. இந்த விவகாரத்தை சட்டப்படி நான் எதிர்கொள்வேன்''’என்றார் கொஞ்சமும் அசராமல்..

காவல் துறையின் கருத்தை அறிய எஸ்.பி. செந்தில்வேலனை சந்தித்தோம். அவரோ, ""இதை டி.எஸ்.பி. அமித்குமார் தான் விசாரிக்கிறார். அவரிடமே இது பற்றிக் கேளுங்கள்''“என ஒதுங்கிகொண்டார்.

டி.எஸ்.பி.அமித்குமாரையும் நாம் விடவில்லை. நிதானக்குரலில் பேச ஆரம்பித்த அவர், ""சாட்சிகளை விசாரிச்சப்ப... வக்கீல் புனிதன் தான் இந்தத் தாக்குதலுக்கு ஐடியாக் கொடுத்தார்னு தெரிஞ்சிது. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது. மற்றபடி எங்களுக்கு பிரஷர் என்று சொல்வதெல்லாம் தவறான தகவல்''’என்றார் புன்னகையோடு.

தற்போது வழக்கறிஞர் புனிதனை ஆதரிப்பதா? கூடாதா? என விறுவிறுப்பாய் விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

கார்த்திக் ஐ.ஏ.எஸ்! -கை கொடுத்த நம்பிக்கை!


shockan.blogspot.com

விடுமுறையைக் கழிக்க தன் தாய் வள்ளியுடன் குன்றத்தூரி லுள்ள பாட்டி வீட்டுக்கு சென்றான் ஒன்பது வயது கார்த்திக். வீட்டின் முன்பு குழந்தையுடன் கார்த்திக் நின்றுகொண்டிருந்த போதுதான்... ரோட்டிலிருந்து விலகி நிலை தடுமாறி சீறிப் பாய்ந்து வந்த லாரியைக் கவனித்தான். தப்பித்து வீட்டிற்குள் ஓடுவதற் குள்ளேயே அவனது வலது காலை பதம் பார்த்தது வேல்முருகன் டி.யூ.வி.792 என்ற அந்த லாரி. இது பதினெட்டு வருடங்களுக்கு முன்பு 24.7.93 தேதியிட்ட நக்கீரனில் வெளிவந்த செய்தி. அந்த சிறுவன் கார்த்திக்தான்... இன்று கார்த்திக் ஐ.ஏ.எஸ். வெற்றியாள னாக தமிழ் மக்களின் நெஞ்சில் நிற்கிறார். எப்படி?

""சிகிச்சை செலவுக்குக்கூட பணம் இல்லாம ஆஸ்பிட்டலில் ரொம்ப கஷ்டப்பட்டோம். சின்ன வயதிலேயே என் வாழ்க்கையை முடக்கிப்போட்ட லாரியின் முதலாளி பண பலத்தால் தப்பிச்சுக் கிட்டே இருந்தது என் மனசை வேதனைப் படுத்தியது. வலதுகால் பறிபோய் நான் தாங்கித்தாங்கி நடக்கிறதைப் பார்த்துட்டு பலரும் பரிதாபமா அணுகியது என்னை கூனிக்குறுக வெச்சது. எல்லாரும் என்னை பிரமிப்பா பார்க்கணும்ங்கிற வெறி ஆழ்மனசுல தீயா பற்றி எரிஞ்சது. இந்த நிலையில், நான் என்ஜினியரிங் படிக்கும்போது இப்போ மத்தியபிரதேசத்துல ஐ.ஏ.எஸ். ஆக இருக்கிற சிபி சக்கர வர்த்தியோட நட்பு கிடைச்சது. "உன் னோட லட்சிய வெறிக்கு ஐ.ஏ.எஸ். ஆக வந்தாதான் பெஸ்ட்டாக இருக்கும்'னு நம்பிக்கையூட்டி கெய்டு பண்ணினாரு. 2007-லிருந்து ஐ.ஏ.எஸ்.ஸுக்கான பயிற்சியை ரொம்ப கடுமையா பெற்றேன். அதுக்கு எங்கப்பா மாணிக்கமும் அம்மா வள்ளியும் எல்லா விதத்திலேயும் உதவியா இருந்தாங்க'' என்கிற கார்த்திக் மாணிக்கத்தின் வீடு சைதாப்பேட்டையிலுள்ள தாடண்டர் அரசு ஊழியர் குடியிருப்புதான்.

""என் காலை இழந்ததுக்கு பத்து வருஷம் கழிச்சே நஷ்டஈடா மூணு லட்சம் கிடைச்சது. அது எதுக்கு? ஆனா உங்க முன்னால எழுந்து நிற்க... நடக்க முடியுதுன்னா அதுக்கு முக்கிய காரணம் பல்லாவரத்துல இருக்கிற முக்தி ஃபவுண்டேஷன்தான். என்னை மாதிரி விபத்துல கை, கால் இழந்த ஏழைகளுக்கு இலவசமாகவே செயற்கையான கை, கால்களைப் பொருத்தி நம்பிக்கையூட்டுறாங்க'' என்று நன்றியுணர்ச்சியோடு கூறியவர்...

""நம்பிக்கையும் வைராக்கியமும் இருந்தா யார் வேணும்னாலும் ஐ.ஏ.எஸ். ஆகலாம். என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்களை மனிதாபிமானத் தோடு கவனிச்சுக்கிற சமூக நலத்துறைக்கு ஐ.ஏ.எஸ். ஆக பொறுப்பேற்கணும்ங்கிறதுதான் என் ஆசை'' என்றார் அக்கறையோடு.

ஆசை நிறைவேற வாழ்த்திவிட்டு கிளம்பினோம்.

சாலையில் படுத்துறங்கிய வருங்கால ராணுவத்தினர்!


shockan.blogspot.com

பதினாறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் களுக்கான ராணுவத் தேர்வு முகாமை முதல் முறையாக ராமநாதபுரத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த ஒரு மாத காலமாக ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் தேர்வு செய்யவிருப்பதை விதவிதமாய் பல ஊடகங்களின் மூலமும் விளம்பரம் செய்தனர்.

இதையெல்லாம் செய்தவர்கள்... ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு தங்குவதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல், நாட்டைக் காக்கும் வேலைக்கு வரும் அவர்களை ரோட்டில் படுக்கவிட்டதுதான் பார்ப்பவர்கள் அத்தனை பேரையும் வேதனைப்பட வைத்தது.

14-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிவரை நடந்த இந்த ஆள் சேர்ப்பு முகாமில், சிப்பாய் டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர், சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் தொழில்நுட்ப வியலாளர், சிப்பாய் கிளார்க், ஸ்டோர் கீப்பர் போன்ற பணிகளுக்கு தேர்வு நடந்தது. இதற்காக காரைக்கால், திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர் மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கிளம்பி வந்ததால், ராமநாதபுரம் நகரமே ஸ்தம்பித்துப்போனது. பல இளைஞர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரோடு வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் தங்குவதற்கு திண்டாடிப்போனார்கள்.

நம்மிடம் பேசிய ராமநாதபுரம் வழக்கறிஞர் ஒருவர், ""இளைஞர்கள் அதிகச் சம்பளமுள்ள சொகுசான வேலைக் குத்தான் பெரும்பாலும் ஆசைப்படுறாங்க. ஆனா ராணுவ வேலைங்கிறது அர்ப்பணிப்புடன் கூடியது. இந்த வேலைக்கு வருகின்றவர்களை நாம் தாங்க வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் தங்க இடமில்லாமல் சாலையோரங் களிலும், கோயில் வாசல்களிலும், ரயில்நிலையங்களிலும் படுத்துக் கிடந்ததைப் பார்த்தபோது மனசுக்கு வேதனையாக இருந்தது. கட்சி மாநாடு, அரசு விழா என்றால் எத்த னையோ திருமண மண்டபங்களை பிடிக்கும் அதிகாரிகள் ராணுவ வேலைக்கு வந்த இளைஞர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ராமநாதபுரத்தில் மொத்தமே 15 லாட்ஜ்கள் தான் உள்ளன. இதில் ஆயிரம் பேர்களுக்கு மேல் தங்க முடியாது'' என்று வருத்தப்பட்டார்.

இசக்கிமுத்து என்ற இளைஞர், ""நாங்க தூத்துக்குடியிலிருந்து வர்றோம். இண்டர்வியூ, டெஸ்ட் எல்லாம் முறையாதான் நடக்குது. எந்தப் பாகுபாடும் இல்லை. போலீஸ் தேர்வுல கூட சிபாரிசு அது இதுன்னு இருக்கும். இது பக்காவா இருந்தது. என்ன ஒரே கஷ்டம்னா அஞ்சுநாள் தங்க வேண்டியிருக்குது. எந்த லாட்ஜ்லயும் ரூம் கிடைக்கலை. குளிக்க, தங்க எந்த ஏற்பாடும் பண்ணலை'' என்றார் ஆதங்கமாய்.

கடலாடியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற இளைஞர், ""முன்னெல்லாம் ராணுவ வேலைக்கின்னா கோயமுத்தூருக்கோ திருச்சிக்கோ போகணும்னு சொல்வாங்க. அங்க உள்ள கூட்டத்துல நம்ம மாவட்டத்திலிருந்து போறவங்க போட்டி போட முடியாது. ஆனா இன் னைக்கு நம்ம ஊர்லயே நடக்குது. இருந்தாலும் வெளியூர்லயிருந்து வந்த வங்க ரொம்ப சிரமப்பட்டுட் டாங்க'' என்று வருத்தப்பட்டார்.

விருதுநகரிலிருந்து தன் மகனுக்குத் துணையாக வந்து கலெக்ட்ரேட் கேம்பஸில் தங்கியிருந்த முன்னாள் படை வீரரான வெள்ளையப்பன்... ""நான் எக்ஸ் சர்வீஸ்மேன்தான். என்னுடைய பிள்ளைகளும் ராணுவத்திலேயே பணி யாற்றணும்னு விரும்பினேன். இந்தி கத்திருந்தா ராணுவத்துல உயர் பதவிகளுக்கு சீக்கிரம் போகலாம். ஏன்னா, ராணுவ மொழியா இந்திதான் இன்னும் இருக்கு. மத்தபடி ஆள்தேர்வு முறையா நடத்துறாங்க. ராணுவத்துல தமிழர்களோட எண் ணிக்கை குறைவா இருக்கு. இதை நாம மாத்தணும். இதுக்கு தமிழக அரசு ராணுவ வேலை வாய்ப்பு பற்றி மக்களிடம் இன்னும் பிரச்சாரம் செய்யணும்'' என்றார். நம்மிடம் பேசிய ராணுவ ஆள் சேர்ப்பு துணை இயக்கு நர் ஜெனரல் பங்கஜ் சின்கா, ""ராணு வத் தேர்வு ராமநாதபுரத்தில் சிறப்பான முறையில் நடந்தது. அனைத்துத் தகுதியும் உள்ளவர்கள் எளிதாக தேர்வாகலாம். சமீபகாலமாக ராணுவத்தில் தமிழகத்தின் பங்கு குறைவாக உள்ளது. வெறும் 6 சதவீதம்தான்.

ஆரம்ப நிலையிலேயே 12 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படுகிறது. நிறைய சலுகைகள் உள்ளன. மேலும் ராணுவ வீரர்கள் சிலர் குடும்பப் பிரச்சினை களால் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதை தடுப்பதற்கும் நாங்கள் ஆலோசனைகள் வழங்கு கிறோம்'' என்றார் நம்பிக்கையூட்டும் விதமாய்.

பல கஷ்டத்திற்கு இடையிலும் ஒருவழியாக ராணுவ ஆளெடுப்பு நடந்து முடிந்திருக்கிறது.

விவசாயக் கடன் மோசடி!

shockan.blogspot.com


""சார் விவசாயக் கடன் வேணும் இந்தாங்க டாக்குமெண்ட்ஸ்.''

""ம்... எல்லாம் கரெக்டாத்தான் இருக்கு ஓ.கே... இந்தாங்க விவசாயக்கடன்'' -டாக்குமெண்டுகளை சரிபார்த்த பாரத ஸ்டேட் பேங்க்கின் அதிகாரி விவசாயக் கடனைக் கொடுக்க... சந்தோஷத்தில் மிதந்தபடி போகிறது லோன் அப்ளை பண்ணிய விவசாயி(?) டீம்.

என்ன ஆச்சர்யம்! வங்கி அதிகாரி களின் காலில் விழுந்து கும்பிடாத குறையாய் கெஞ்சி... நாயாக பேயாக அலைந்து வாங்க வேண்டிய விவசாயக் கடனை இவ்வளவு ஈஸியாக வாங்கி விட்டுப் போகிறார்கள் விவசாயிகள். புளகாங்கிதப்பட்டுக்கொண்டு நின்ற போதுதான் தூக்கிவாரிப்போட வைத்தது அந்த அதிர்ச்சித் தகவல்.

ஆமாங்க.. பேங்க்கில் விவசாயிகள்(?) டீம் கொடுத்த டாக்குமெண்டுகள் ஃபோர் ஜரியானது. அதுக்குத்தான் கடலூர் மாவட்டம் கானூரிலுள்ள பாரத ஸ்டேட் பேங்க்கின் அதிகாரி உடனடியாக விவ சாயக் கடன் சாங்ஷன் பண்ணி புண்ணியம் கட்டியிருக்கிறார். இப்படிப் போலி டாக்கு மெண்டுகளைக் கொடுத்து வங்கியை ஏமாற்றிய (வங்கி அதிகாரி ஏமாந்துதான் கடன் கொடுத்தாரா... என்பது வேறு கதை) கடலையத்தூர் பாலமுருகன், தில்லை கோவிந்தன், காவலாக்குடி பிச்சைமணி, கானூர் காசிநாதன் என 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது காவல் துறை... கடந்த வருடம் நவம்பர் 24-ந் தேதி.

இதன் அடிப்படை யில் இன்னும் பலர் மோசடி செய்திருப்பார்களோ என்று அலர்ட்டான மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸ், எஸ்.ஐ. அம்பேத் கர் தலைமையிலான டீமை அதிரடி யாக ரெடிபண்ணினார்.

வங்கி மோசடி வேட்டையில் சிக்கினான் ஸ்ரீமுஷ்ணம் - நாகபந்தல் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணியின் மகன் செந்தில். டீமிலுள்ள காக்கியோ ""தன் குடும்பத்தில் கிடைத்த பங்கு ஆறு ஏக்கரோடு ஆசை தீரவில்லை செந்தி லுக்கு. அம்மா, அப்பா, அண்ண னுக்கு சேரவேண்டிய நாலு ஏக்கர் நிலத்தையும் தனது அப்பா தண்ட பாணி பத்துரத்துல எழுதி கையெ ழுத்து போட்டது போல... தாசில்தார் ஆபீசுக்குப் போகாமலேயே பத்திரப் பதிவு செஞ்ச மாதிரி டாக்குமெண்டு களை ரெடிபண்ணியிருக்கான். இவனுக்குத் துணையா இருந்த தர்மா நல்லூரைச் சேர்ந்த ரங்கநாதனையும் பிடிச்சு விசாரிச்சோம். அடப்பாவிப் பய... போன வருஷம் கானூர் பாரத ஸ்டேட் பேங்க்ல ஃபோர்ஜரி பண்ணின அக்யூஸ்ட்ல ஒருத்தன்தான் இவனும். திருந்தாம அதுக்கப்புறமும் போலி பட்டா தயாரிக்கிறது, போலி டாக்குமெண்டுகள் கொடுத்து வங்கி மோசடியில் ஈடுபடுறதுன்னு கிட்டத் தட்ட ஒரு கோடிக்கு மேல சீட்டிங் பண்ணியிருக்கான்.

வங்கிகளில் கரும்புக் கடன் வாங்கணும்னா அந்தப் பகுதியில இருக்குற மற்ற வங்கிகளில் கடன் பாக்கி இல்லைன்னு நோ-அப் ஜெக்ஷன் சர்ட்டிபிகேட் வாங்கிட்டு வரணும். அதேபோல் "கடன் பெறும் விவசாயி எங்கள் ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்புவதாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்... இத்தனை ஏக்கர் கரும்பு நட்டுள்ளார்'னு கரும்பு ஆலை நிர்வாகம் பரிந்துரைக் கடிதம் கொடுக் கணும். அதையும் போலியா தயார்பண்ணியிருக்கு இந்தக் கும்பல். குறிப்பா எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை, அம்பிகா சர்க்கரை ஆலைகளின் "கரும்புப் பதிவுச் சான்று' கொடுத்ததாக 100-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களைக் கொடுத்து ஏமாத்தியிருக்காங்க. 35 விதமான போலி ரப்பர் ஸ்டாம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கு. இந்தப் பகுதியில இருக்கிற பல தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள்லதான் இவர்களின் மோசடி அதிகமா நடந்திருக்குன்னு விசாரணையில் தெரிய வருது. இதற்கு பேங்க் மேனேஜர்களும் உடந்தையா?ன்னு விசாரிச்சிக்கிட்டிருக்கோம்'' என்கிறார் அதிரடியாக.

போலீஸ் பிடியில் இருந்த செந்தில், ரங்கநாதன் இருவரிடமும் இப்படியெல்லாம் பண்ணலாமா? என்று கேட்டபோது... ""பின்ன என்ன சார்... மயிலே மயிலேன்னா இறகு போடாது. அதான் நாங்களே புடுங்குனோம். வங்கிகள் எங்களை நம்பி லோன் கொடுக்கணும்ங்கிறதுக்காக "எங்க வங்கியில் வாங்கிய கடனை உரிய தவணை முறையில் செலுத்திவிட்டார்'னு மற்ற வங்கிகள் நோ-அப்ஜெக்ஷன் சர்ட்டிபிகேட் கொடுக்கிற மாதிரி போலியா தயார்பண்ணிக் கொடுத்தோம். அதை நல்லா நம்பிட்டாங்க?'' என்கிறார்கள் அசால்ட்டாக.

இவர்கள் கொடுத்த வாக்குமூலத்துக்குப் பிறகுதான் சுத்துப்பட்டிலுள்ள வங்கிகள் டாக்கு மெண்டுகளை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளன.

சத்தியவாடியைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன், ""கருவேப்பிலங்குறிச்சி ஸ்டேட் பேங்க்ல பல வருஷமா என்னோட சில ஏக்கர் நிலங்களை வைத்து பயிர்க்கடன் வாங்கி தவணை முறையில் சரியா செலுத்துறேன். என் சொத்து பத்திரங்கள் கூட வங்கியிலதான் இருக்கு. இதையெல்லாம் ஜாமீனா வெச்சுக்கிட்டுக் கூட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துல படிக்கிற என்புள்ள நீதிதேவனுக்கு கல்விக்கடன் கொடுங்கன்னு கெஞ்சினேன். ஆனா கொடுக்கல. அதனால தான் பலர் போலி டாக்குமெண்டுகளை கொடுக்க ஆரம்பிக்கிறாங்க'' என்கிறார் வேதனையோடு.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் காமராஜ், ""உண்மையான விவசாயிகளுக்கும், ஏழைபிள்ளைகள் கல்விக் கடன் கேட்டால் கொடுக்க மறுக்கும் வங்கி கள்... போலி டாக்குமெண்டுகள் கொடுத்தால் மட்டும் வாரி வழங்குகின்றன. அதுக்கு காரணம்... வங்கி அதிகாரிகளின் துணை இல்லாமல் இப்படிப்பட்ட மோசடிகள் நடப்பதில்லை'' என்கிறார் அவர்.

கடலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயி சங்க செயலர் ரவீந்திரனோ ""உண்மையா போய் லோன் கேட்கிறவங்களை எப்படி எப்படியெல்லாம் விசாரிக்கிறாங்க? சரியாக விசாரிக்கும்போதே உண்மையா பொய் யான்னு தெரிஞ்சிடும். வங்கியின் ஃபீல்டு ஆபீஸர்கள், வருவாய்த்துறையினர், கூட்டு றவுத்துறையினர்னு பலரது துணையில்லாம இவ்வளவு பெரிய மோசடிகள் செஞ்சுட முடியாது.

இந்த வழக்கை சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி. விசாரிச்சாதான் பல உண்மைகள் வெளிவரும், இல்லேன்னா ஆர்ப்பாட்டம் நடத்துவோம்'' என்கிறார் அதிரடியாக.

இப்படியும் ஒரு சீட்டிங்! -மாணவர்களே உஷார்!

shockan.blogspot.com

மருத்துவம், பொறியியல் படிப்புக்கான டொனேஷன்களை வாரிக் குவித்துக் கொண்டிருக் கின்றன தனியார் கல்லூரிகள் என்றால் அட்மிஷனுக் காக போகும் மாணவர்களிடம் வேறுவித சீட்டிங்கு களும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. அதென்ன சீட்டிங்? ஏமாந்த மாணவன் சபரிஷே சொல்லட்டுமே.

""அண்ணே... கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ணும்னு ஆசை. சென்னை வேளச்சேரியில இருக்குற குருநானக் காலேஜுக்கு அப்ளை பண்ணியிருந்தேன். 17-ந்தேதி வந்து பாருங்கன்னு சொன்னதால நானும், எங்க சொந்தக்கார அண்ணனும் 9 ஆயிரம் பணத்தோட போயிருந்தோம். அப்போ 40-லிருந்து 45 வயசு மதிப்புள்ள ஒருத்தர் வந்து "என்னப்பா எதுக்காக வந்திருக்க'ன்னு கேட்டாரு. காரணத்தை சொன்னதுமே "ம்... கம்ப்யூட்டர் சயின்ஸ் சீட் இருக்குற மாதிரி தெரியலையே... சரி வெயிட் பண்ணுப்பா'ன்னு சொல்லிட்டு... செல்ஃபோன்ல "சார்... நம்ம காலேஜ்லேர்ந்து போஸ்ட் கார்டு லேட்டாப் போனதுக்கு பாவம்... அவன் என்ன சார் பண்ணு வான்? நாமதானே ஹெல்ப் பண்ணணும்'னு யார்க்கிட்டயோ பேசினார்.

அதுக்கப்புறம் "10,000 இருக்காப்பா?'ன்னுக் கேட்டார். "சார் ஒன்பதாயிரம்தான் எடுத்துக்கிட்டு வந்திருக்கோம்... ப்ளீஸ் சார் ஆயிரம் ரூபாய் ஏ.டி.எம்.ல எடுத்துட்டு வந்து கொடுத்துடுறேன். இந்தப் பைய னுக்கு சீட் இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க'ன்னு அவர்கிட்ட கெஞ்சுன என் சொந்தக்கார அண்ணன் எழில்... ஏ.டி.எம்.ல பணம் எடுக்கப் போனாரு.

உடனே அந்தாளு பிரின்ஸ்பாலோட ரிசப்ஷன்ல இருந்த மேடம்கிட்ட ஏதோ பேசினாரு. அதுக்கப்புறம் என்கிட்ட வந்தவர் "சரிப்பா உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. அந்த ஒன்பதாயிரத்தைக் கொடு... சீக்கிரமா கட்டிடுறேன். மீதியை அப்புறமா கட்டிடுப்பா'ன்னு சொன்னதால எங்கிட்ட இருந்த ஒன்பதாயிரத்தை கொடுத்தேண்ணே. பிரின்ஸ் பால் ரூமுக்கு பக்கத்துல இருக்குற ரிசப்ஷன்ல வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேண்ணே. அப்போ தான் ஒரு பையனும், அவங்க அம்மாவும் "அய்யய்யோ பணத்தை ஏமாத்திட்டு ஓடிட் டான்'னு அலறி அடிச்சுக்கிட்டு அழுதுக்கிட்டு ஓடி வந்தாங்க. அதுக்கப்புறம்தான் நானும் அவன்கிட்ட ஏமாந்தது தெரியவந்தது.

அந்தப் பையன் பேரு பாண்டியன். அவன்கிட்ட 23,500 ரூபாய் வாங்கி பேங்க் டி.டி. எடுக்குற மாதிரி எஸ்கேப் ஆகியிருக்கான். போலீஸ்ல புகார் கொடுத்திருக்கோம்ணே. கடன் வாங்கி எடுத்துட்டு வந்த பணம்னே...' சீட்டும் கிடைக்கல, பணமும் போச்சுண்ணே'' என்கிறார் கண்ணீருடன் சபரிஷ்.

குருநானக் கல்லூரியின் பிரின்ஸ்பால் ராகவனிடம் கேட்டபோது, ""சீட் இல்லைன்னு சொன்ன பிறகும்... யாரோ கேட்டாங்கன்னு பணம் கொடுக்கலாமா? இப்படி ஏமாந்ததுக்கு கல்லூரி நிர்வா கம் எப்படிங்க பொறுப்பேற்க முடியும்?'' என்கிறார் பொறுப் பில்லாமல்.

கிண்டி இன்ஸ்பெக்டர் அன்புசாமி, ""விசாரிச்சுக் கிட்டிருக்கோம்'' என்கி றார். அட்மிஷன் நேரத் தில் இப்படியுமா போர் ஜரிகாரர்கள் உலவுவார் கள். அவர்கள் கல்லூரி தரப்புக்கு அறிமுகமான வர்களா என்பதை காவல்துறை விசா ரிக்க வேண்டும்.

Thursday, June 24, 2010

டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு!


shockan.blogspot.com

டெல்லி: டாலர், பவுண்ட், யூரோ என மதிப்புக்குரிய நாணயங்களுக்கு நிரந்தரமாக குறியீடு இருப்பதைப்போல, இந்திய ரூபாய்க்கும் புதிய அடையாளக்குறி உருவாக்கப்டுகிறது.

தற்போது அமெரிக்க டாலருக்கு $ என்ற குறியீடும், ஐரோப்பிய பொது நாணயமான யூரோவுக்கு € என்றும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு £ என்றும் குறியீடுகள் உள்ளன. சீனாவின் யுவான், ஜப்பானின் யென் போன்ற நாணயங்களுக்கும் கூட குறியீடு உள்ளது. ஆனால் இந்தியாவின் நாணயத்தைக் குறிப்பிட ₨ அல்லது Re அல்லது INR என்ற எழுத்துக்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இது பொதுவான குறியீடு அல்ல. பாஷைக்கேற்ப மாறுகிறது.

இன்னொன்று இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் , இந்தோனேஷியா போன்ற நாடுகளின் நாணயங்களுக்கும் ரூபா என்ற பெயர்தான் (லேசான உச்சரிப்பு வித்யாசத்துடன்). இவற்றையும் ஆங்கிலத்தில் Rs அல்லது Re என்றே அழைக்கிறார்கள்.

இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எனவே சர்வதேச நாணயங்களுக்கு நிகரான செலுத்து சக்தி இந்திய ரூபாய்க்கும் கிடைத்துள்ளது. இந்த சூழலில் இந்திய ரூபாயை சர்வதேசமெங்கும் பொதுவாகக் குறிப்பிட ஒரு குறியீடு வேண்டும் என கடந்த ஆண்டிலிருந்தே மத்திய அரசு யோசித்து வருகிறது.

இப்படி உருவாக்கப்படும் குறியீடு, இந்தியாவிந் கலாச்சார அடையாளத்தையும் பிரதிபலிக்க வேண்டும், தனித் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் பல்வேறு டிசைனர்கள் உருவாக்கிய வடிவங்களைப் பார்த்து, இறுதியாக 5 எளிய ஆனால் வசீகரமான டிசைன்களை தேர்வு செய்துள்ளது மத்திய நிதித்துறை. தேவநாகிரி எழுத்தான ர வின் குறுக்கே இரு கோடுகள் இருப்பதுபோல இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இறுதி செய்யப்பட்ட இந்த 5 டிசைன்களில் ஒன்றினை மத்திய அரசு பிரதிநிதிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தேசிய வடிவமைப்பு மைய பிரதிநிதிகள், லலித் கலா அகாடமி குழுவினர், ஜே ஜே அப்ளைட் ஆர்ட் மற்றும் இந்திரா காந்தி தேசிய மைய பிரதிகள் அடஹ்கிய குழு முடிவு செய்யும்.

இணையதளத்தில் பாஸ்போர்ட்... ஐஸ்வர்யா அதிர்ச்சி!


பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் பாஸ்போர்ட்டை சிலர் ஸ்கேன் செய்து இணையதளத்தில் பரவவிட்டுள்ளனர். இதில் அவரது பிறந்த நாள், எந்தெந்த நாடுகளுக்குப் போனார் உள்ளிட்ட சில விவரங்கள் வெளியாகியுள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

தனது பாஸ்போர்ட்டை வெளியாட்களிடம் எப்போதும் கொடுக்கமாட்டாராம் ஐஸ்வர்யா. ஆனால் இப்போது எப்படி வெளியானது என்று புரியாமல் குழம்பியுள்ளார். பாஸ்போர்ட்டில் தனது பெயரை ஐஸ்வர்யா என்று குறிப்பிட்டுள்ளார். பிறந்த தேதி 1.11.1973 என்று உள்ளது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராய்க்கு 37 வயது என்பது உறுதியாகியுள்ளது.

திருமணத்துக்கு முன்பே இந்த பாஸ்போர்ட்டை எடுத்துள்ளார். இதை இண்டர்நெட்டில் வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது. போலீசுக்கும் இந்த பிரச்சினை ஒரு புகாராகத் தந்துள்ளனர்.

இந்த விஷயத்தில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மீதுதான் ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம். வெளிநாட்டு படப்பிடிப்பு களுக்கு செல்லும்போது விசா பெறும் நடைமுறக்காக பாஸ்போர்ட்டை படப்பிடிப்பு குழுவினர் வாங்கிச் செல்வது உண்டு. அப்போது யாரோ இதனை ஸ்கேன் செய்து இண்டர்நெட்டில் வெளியிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு முன்பு இது போன்று முக்கிய பிரமுகரின் பாஸ்போர்ட் இண்டர்நெட்டில் வெளியான சம்பவங்கள் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களே! தமிழர்களே!முள்ளிவாய்க்கால் நந்திக் கடல் பகுதியை சீன நாட்டு நிறுவனம் ஒன்றிடம் ராஜபக்சே அரசு ஒப்படைக்கப் போவதாய் செய்தி வந்திருக்கிறது. மீன்வள ஆராய்ச்சி என்ற பெயரில் அந்நிறுவனம் வருகிறதாம். ஆனால் அவர்களுக்கு தரப்பட்டுள்ள உண்மையான வேலை முள்ளிவாய்க்கால் பகுதியெங்கும் தமிழர் இன அழித்தலின் ஆதாரங்களாய் புதையுண்டு கிடக்கிற எலும்புக் கூடுகளையெல்லாம் அப்புறப்படுத்தி துப்புரவு செய்து அழிப்பது என்று சொல்லப்படுகிறது.

தமிழர்களே, நண்பர்களே! இது போலொரு அவலம் உலகில் வேறெந்த மக்கள் இனத்திற்கும் இந்நவீன காலத்தில் நடக்கவில்லை. நம் கண்ணெதிரே நம் இனத்தின் குரல்வளை அறுக்கப்பட்டது. நாதியற்றிருந்தோம். பாய்ந்தோடிய குருதியின் வாசனை நம் மனசாட்சியின் நாசியிடை மண்டியிட்டுக் கெஞ்சுகிறது. குறைந்த பட்சம் நொறுக்கப்பட்ட அப்பாவிகளின் நினைவுகளைக் கூட காப்பாற்ற முடி யாதவர்களாய் நாம் கேவலப்பட்டு நிற்கிறோம்.

உணர்வுகளின் கைதியாகி, விரக்தியுற்று, எதுவும் செய்ய முடியாத இயலாமையில் ஒருவரை யொருவர் பிறாண்டிக் கிழிக் கிறோம். நம் பிரதான எதிரிகளான சிங்களப் பேரினவாதமும், இந்திய வெளியுறவுக் கொள்கையும் அலட்டிக் கொள் ளாமல் அமைதி பூத்து தம் அசுர நடை யைத் தொ டர்கின்றன. செல்லுமிட மெல்லாம் உணர்வாளர்கள் வந்து கரம் பற்றுகிறார்கள். தமிழினத்திற்காய் விதைநெல்கள் இன்றும் நிறையவே மிச்சமிருக்கின்றன. ஆயினும் அனைவரையும் பொதுநோக்கில் ஒன்றிணைக் கிற அமைப்போ, தலைவர்களோ இல்லை. ஈழத்தின் அழிவை பாவித்து திடீர் தலைவர்களாய் மாறிவிட முடியுமா என்றுகூட சிலர் பரிசோதித்துப் பார்க்கிறார்கள். இனி சில காலம் தமிழராகிய நமக்கு கதாநாயகர்கள் எவரும் அவசியமில்லையென்றே கருதுகிறேன். அரசியல் லாப நோக்கு ஏதுமில்லா, கூட்டுத் தலைமையை, செயற்பாட்டுத் தணிக்கையை நம்புகிற சமூக இயக்க மொன்று தேவைப்படுகிறது.

இன்னும் நமக்கு சற்று தேவைப் படுவது நண்பர்கள். தோழமை தருகிறவர் கள். துணை நிற்கிறவர்கள். பாறைக்கு என்றுமே பிரச்சினைகள் இருப்பதில் லை. அதன் மேல் வளர்கிற கொடிதான் தன் வளர்ச்சி வழியை பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழராகிய நாம் இன்று கொடியின் நிலையில் இருக்கிறோம். கொஞ்சம் பணிந்தும் வளைந்தும் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது. பாறையின் முகடு தொட்டு பூத்துச் சிரிக்கிற காலம் வராமலா போய்விடும்?

உரையாடுவதை சமரசம், சரணாகதி என்று பார்க்கிற பக்குவமற்ற மனநிலை உணர்வாளர்களிடையே இருக்கிறது. காங்கிரசோடு உரையாடுவதால் அக்கட்சியின் கொள்கைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோ மென்றோ, நமது நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்கிறோமென்றோ ஆகாது. இது எல்லா கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், தலைவர் களுக்கும் பொருந்தும். முள்ளிவாய்க்கால் கடைசி கட்டத்தில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருந்தால் விடுதலைப் புலிகள் கொடூரனாகிய அந்த ராஜபக்சேவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தி யிருப்பார்கள். அப்படிப் பேசுவதாலேயே தமி ழீழத்தை சமரசம் செய்து விட்டார்களென்பது ஆகாது. ஆட்சியில் இருக்கிறவர்கள், அதிகார அமைப்பை கட்டுப்படுத்துகிறவர்கள், நமக்கு எதிரான கட்சிகள், அமைப்புகள் அனைவ ரோடும் நாம் பேச வேண்டும், பேசித்தான் ஆக வேண்டும். நம் மக்களுக்காக, நம் இனத்திற்காக, தமிழகத்தைப் பொறுத்தவரை இடை விடா உரையாடல்கள் மூலம் தமிழகத்தின் அரசியற் கட்சிகளிடையே ஈழம் தொடர்பான குறைந்தபட்சம் பொதுக் கருத்தினை நம் மால் உருவாக்க முடியுமானால் அது மிகப் பெரிய செயலாக அமையும், முயன்று பார்ப்போம்.

நாம் தோற்றுப் போய்விட்டோமே என்று தோழர்கள் அங்கலாய்க்கிறார்கள். தவறு. நாம் தோற்கவில்லை, தோற்கவும் முடியாது. லட்சக்கணக்கான அப்பாவி மக்களை ஒரு சிறு பரப்பில் அடித்து விரட்டிக் கூட்டி குழந்தைகள், பெண்கள், முதியோர் என்றெல்லாம் பிரித்துக் கூட பார்க்காமல் கொன்றழித்த ஓர் கொலைகார கும்பலா வென்றவர்கள்? ரத்தமும் சதையுமாய் சிதறுண்டு கிடந்த தமிழரின் உடல் களுக்கு மேல் நின்று வெற்றிவிழா கொண்டாடிய பேரின வாத வெறிபிடித்த ஓர் இனத்தையா வெற்றி பெற்ற இனமென்று கருதுவது? நாகரீக உலகின் குமட்டும் குறைபிறவி இனம் அது. இந்த வெறியின் வெற்றி நீண்டு நிற்காது. இயற்கை இறங்கி வரும். தமிழருக்குச் செய்த கொடுமை களுக்கு சிங்களம் பதில் சொல்லித்தான் தீரவேண்டும்.

நாமொன்றும் தோற்றுப் போகவில்லை. சில சண்டைக் களங்களை இழந்திருக்கிறோம். ஆனால் போர் ஒன்றும் முடிந்துவிடவில்லை. இப்போதுதான் புதிய வேகத்தோடு தொடங்கியிருக்கிறது. உலகின் பரப்பெல்லாம் இன்று தமிழர்கள். இணைய வெளியெங்கும் இன்று தமிழ். கால் நூற்றாண்டுகளுக்கு முன் அகதியாய் வந்திறங்கிய ஈழத் தமிழன் இன்று உலகின் சமூக- பண்பாட்டு- பொரு ளாதார சக்தி களுள் ஒன்றாய் சத்தமின்றி உரு மாறியிருக்கிறான்.

2009 செய் யப்பட்ட மேம் போக்கானதொரு மதிப்பீட்டின்படி புலம் பெயர் ஈழத் தமிழர்களின் நிகர பொருள்வள மதிப்பு 1,500,000,000,000 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் அறிய வேண்டு மென்றால் 45-ஆல் பெருக்கிப் பாருங்கள். கணக்குக் குறியீட்டில் கொண்டு வருதல் கடினம். 60 டிரில்லியன் ரூபாய்கள் என்று சொல்லலாம். புலம்பெயர் தமிழர்களின் நிகர ஆண்டு வருமானம் இருபது பில்லியன் டாலர்கள். இந்திய ரூபாய்க்கு சுமார் 1 லட்சம் கோடி. சிங்கள தேசத்தின் நிகர ஆண்டு வருவாயை விட இது அதிகம். லட்சம் கோடி ரூபாயை ஆண்டு வருவாயாகக் கொண்ட ஓர் குழுமம் சற்றே அரசியல் மயப்பட்டு விட்ட தென்றால் எந்தக் கொம்பனாலும் அதன் எழுச்சியை தடுத்து நிறுத்த முடியாது. அவ்வகையில் நாமெல்லாம் நினைத்துப் பார்த்திராத பெரும் உயரங்களுக்குத் தமி ழினத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற மனிதன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதை விரைவில் வரலாறு பேசத் தொடங்கும்.

அச்சம் தவிர்க்க நம் இனத்திற்கு கற்றுத் தந்த தலைவன் அவன். கோழைகள் ஒருநாளும் பெருமையின் கிரீடங்களை சூடிக் கொள்ள முடியாது. நீண்டகாலமாய் இந்த இனத்தின் மீது படிந்திருந்த தாழ்வு மனம், தயக்கம், கூழைத்தனம் அனைத்தை யும் துடைத்தெறிந்து துணிவு கற்பித்தவன்.நான் அவரை நேர் கண்டபோது நிறைவாக ஒரு கேள்வி கேட்டேன். வீடியோவில் அக்கேள்விக்கான பதிலை பதிவு செய்ய முடியவில்லை. ""உலக நாடுகளின் பொதுப் படை உங்களை அழிக்க வந்தால் என்ன செய்வீர்கள்?'' என்றேன். அவரது பதில் எளிதாயும் தெளிவாயுமிருந்தது. ""என் மக்கள் மீது சிங்களம் நடத்திய கொடுமை கண்டு தான் நான் போராடப் புறப்பட்டேன். அன் றைய என் இலக்கு என் இனத்தின் பெண்களது கற்பினைச் சூறையாடும், என் மக்களை கொல்லும் சிங்கள ஆமிக்காரன், போலீசில் இரண்டுபேரைக் கொல்வது. ஆனால் பயணத்தில் பலவற்றைக் கற்றுக் கொண்டு மிகப்பெரும் விடுதலைப் போராட்டமொன்றை கட்டி யெழுப்பினோம். இன்று உலகப் பொதுப்படை வந்தால் எளியவர் களாகிய எங்களால் என்ன செய்துவிட முடியும்? அவர் களில் இரண்டுபேரை சுட்டுப் போட்டுச் சாவேன்''. பகை கண்டு அஞ்சியவன் அல்ல வேலுப்பிள்ளை பிரபாகரன். கடந்த ஆயிரமாண்டு நம் வரலாற்றினை தமிழ் காத்தது. அடுத்த ஆயிர மாண்டுப் பயணத்தினை வரையறுக்கப் போவது இந்த மனிதனின் ஆளுமைதான்.
shockan.blogspot.com

சிங்கப்பூர் நாட்டை செதுக்கிய சிற்பி லீ க்வான் யூ கடந்த மாதம் பேட்டி யொன்றில் குறிப்பிட்டிருந்தார்: ""இலங்கையில் சிங்களருக்கு இணையான தொன்மையுடையவர்கள் தமிழர்கள். அந்த நாடு இன்று மகிழ்ச்சியான இன ஒருமைப் பாட்டைக் கொண்டிருக்கவில்லை. புலிகளை ராணுவரீதியாக அழித்துவிட்டதால் பிரச்சினை தீர்ந்துவிட்டதாய் இப்போதைய அதிபர் நம்புகிறார், நாமெல்லாம் அவரைப் போல் நம்பவேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடிபணிந்து கிடப்பார்களென்று நான் நினைக்கவில்லை. மனஉறுதி நிரம்பவே கொண்ட ஓர் இனத்தின் மக்கள் அவர் கள்''.

"ஈழம் சாத்தியமா?' என்று உணர்வாளர்கள் கேட்கிறார்கள். கேள்வியே தவறு. 37,000 போராளிகளையும் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான மக்களையும் தியாக வேள்விக்குத் தந்தபின் ஈழம் மலர வைப்போம் என்றுதான் நாம் முழங்க வேண்டுமேயன்றி, ஐயம் கொள்வதல்ல. இன்றைய களத்தின் உடனடி தேவைகள் புனர்வாழ்வு, மீள் கட்டுமானமென இருக்கலாம். ஆனால் நிரந்தர அரசியற் தீர்வு ஈழமே. கூட்டாட்சி, தன்னாட்சி என்று படிப்படியாகக் கூட இறுதி இலக்கை நாம் அடையலாம். ஆனால் இறுதி இலக்கு ஈழமே.

தமிழருக்கென ஓர் தனி நாடு அமைந்தால் உலகின் அத்தனை நாடு களோடும் அரசியல்-வர்த்தக-பண்பாட்டு உறவுகளை தமிழர்கள் விரிவு செய்து இப்பூவுலகின் மிகப்பெரும் இனங்களில் ஒன்றாக எழுந்து விடுவார்கள் என்ப தால்தானே எம்.கே.நாராயணன்களும், சிவசங்கர மேனன்களும் சிங்களப் பேரினவாதத் தோடு அணி வகுத்து நம் இனத்தை அழிக்க நின் றார்கள்? ஆதலினால் ஈழம் தமிழ் இனத்தின் பொதுக் கனவு. ஆயுதம் தாங்கி நாம் பயணிக்க விழையவில்லை. ஜனநாயகம் தந்த வழியில் அணிவகுப்போம். இது இன்று நாளை முடிகிற போருமல்ல. ஆயிரம் ஆண்டு போர். பொறுமை எமக்குண்டு. வெல்லும் வரை ஓயோம்.

இரண்டு இதழ் களென எழுதத் தொடங்கி 122 எழுதி விட்டேன். நம்பிக்கைகள் தகர்ந்துபோன ஓர் காலக்கட்டத்தில் உணர் வாளர்களின் ஆறுதல் தாய் மடியாய் நக்கீரனை ஆக்கிய அண்ணன் கோபால், தோழர் காமராஜ் இருவரும் இவர்களோடு நக்கீரன் குடும்பத்தாரும் என் நன்றிக்குரியவர்கள். நான் எழுத்தாளன் அல்லேன். எழுத வைத்தவர் தோழர் காமராஜ். அதே வேளை வாசகர்கள் படிக்காமல் 122 கட்டுரைகள் தொடர்ந்திருக்கவும் முடியாது. என் உணர்வு களைப் பகிர்ந்து கொண் டது பரிசுத்தமான நக்கீர னின் அக்னிக் குஞ்சுகளது பாதங்களை பக்தியோடு தொடுகிறேன். தொடர்பு கொள்ள விழைவோருக்கு மின் அஞ்சல்:

jegath66@yahoo.co.uk, 94440-72217, 94440-72217.
நன்றி. ஈழம் வரும். தமிழினம் வெல்லும்.

ம.ஜெகத் கஸ்பர்

உயிருக்கு நேர்


shockan.blogspot.com

தமிழின் பெருமைகளை உரக்கச் சொல்லும் வகையில் "உயிருக்கு நேர்' என்ற சிறப்பு மலரினை நக்கீரன் நிறுவனம் தயாரித்துள்ளது. மலரின் முதல் படியினை மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞரிடம் நக்கீரன் ஆசிரியர் 20-06-2010 ஞாயிறு காலையில் நேரில் வழங்கினார். கோபாலபுரம் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வின்போது நக்கீரன் இணையாசிரியர் அ.காமராஜ், தலைமைத் துணையாசிரியர் கோவி.லெனின் இருவரும் உடனிருந்தனர். நக்கீரன் தயாரித்துள்ள சிறப்பு மலரின் உள்ளடக்கத்தையும் வடிவமைப்பையும் உன்னிப்பாகக் கவனித்து அகமகிழ்ந்தார் முதல்வர்.

கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை (திருவள்ளுவராண்டு 2041 ஆனி 9-13) நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான மக்கள்தொடர்பு மற்றும் விளம்பரக் குழுவில் நக்கீரன் இடம்பெற்றுள்ளது. முதல்வர் தலைமையில் நடந்த இக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், "செம்மொழிக்காக பத்திரிகைகள் அனைத்தும் தனித்தனியே மலர் வெளியிட்டு சிறப்பு செய்ய வேண்டும். நக்கீரன் சார்பில் ஒரு சிறப்பு மலர் வெளியிடுகிறோம்' என உறுதியளித்திருந்தார் ஆசிரியர் நக்கீரன் கோபால். அதனை நிறைவேற்றும் வகையில் உயிருக்குநேர் எனும் 232 பக்க சிறப்புமலர் முற்றிலும் வண்ணப்பக்கங்களுடன் 130 ரூபாய் விலையில் வெளிவந்துள்ளது.

தமிழ் அறிஞர்களின் கைவண்ணத்தால் சிறந்துள்ள, உயிருக்குநேர் எனும் இந்த மலரில் பரிதிமாற்கலைஞர், கால்டுவெல், திரு.வி.க, தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட அந்நாளைய தமிழறிஞர்களின் கட்டுரைகளில் தொடங்கி, இன்றைய தமிழ் வல்லுநர்களின் கட்டுரைகள் வரை இடம் பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி பாரதி, பாரதிதாசன், கண்ண தாசன், மு.மேத்தா, வைரமுத்து எனத் தொடரும் தமிழ்க்கவிதை பாரம்பரியத்தின் இன்றைய கவிஞர்கள் வரையிலான படைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

செம்மொழித் தமிழின் தொன்மைச் சிறப்புகளையும் இன்று அது எதிர்கொள்ளும் சவால்களையும் நாளை பெறவேண்டிய வெற்றிகளையும் அலசி ஆராயும் வகையில் அமைந்துள்ள இம்மலர், செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு சேர்க்கும் முயற்சியாகும்.

கோர்ட்டில் தமிழ்! தலைமை நீதிபதியின் கருத்து!
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி யாக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்துக்கான வழக்கறிஞர்களின் போராட்டம் இப்போது அரசியலாகி வருகிறதோ என கவலைப்பட தொடங்கி விட்டார்கள் நீதித்துறையை சேர்ந்தவர்கள்.

தொடர் உண்ணாவிரதத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மதுரை வக்கீல்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னையிலும் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர் வக்கீல்கள் சிலர். இதனால் நீதிபதிகள் கூட்டத்தை இரண்டு முறை கூட்டி இது பற்றி விவாதித்தார் தலைமை நீதிபதி எம்.ஒ.இக்பால்.

shockan.blogspot.com
"கோர்ட் வளாகத்துக்குள் போராட்டங்கள் நடத்த 2006-ம் ஆண்டிலேயே தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை' சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார் தலைமை நீதிபதி இக்பால். அப்போது நாங்கள் யாரும் வக்கீல்களின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள் வக்கீல் சங்கத்தின ரும், மூத்த வக்கீல்களும். இதைத் தொடர்ந்து நீதிபதிகளிடம் ஆலோ சித்த தலைமை நீதிபதி, நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம் நடத்துவதை தடுக்கும் அதிகாரத்தை பதிவாளருக்கு கொடுத்தார். இதைத்தொடர்ந்தே பதிவாளர் விமலா, போராட்டம் நடத்துபவர்களை நீதிமன்ற வளாகத்தில் இருந்து அகற்றும்படி காவல்துறையை கேட்டுக்கொண்டார். உண்ணாவிரத வக்கீல்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பதிவாளர் விமலாவின் அறிக்கைக்கு பிறகும் 3 வக்கீல்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட டென்ஷன் கூடியது. இதற் கிடையே மதுரை வக்கீல்கள் சிலர் மாநாட்டுக்கு வரும் ஜனாதிபதி பிரதீபாவுக்கு கறுப்புக்கொடி காட்டுவது என திட்டமிட்டுள்ளனர். இன்னும் சில வக்கீல்களோ அதிக பட்ச உணர்ச்சியில், தமி ழுக்காக தீக்குளிப்போம் என்றும் கூறிவருவதை காவல்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

வக்கீல்களின் இந்த போராட்டம் குறித்து நம்மிடம் பேசிய சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், ""தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை யாருமே எதிர்க்கவில்லை. எங்களிடம் பேசிய நீதிபதி களும் கூட அரசாணை வரும் வரையில் காத்தி ராமல் இப்போதே தமிழில் வாதாடுவதை நாங்கள் அனுமதிக்கிறோம் என்றே சொன்னார்கள். இத்தனை வருடம் பொறுத்தவர்கள் இன்னும் சில மாதங்கள் பொறுப்பதில் தவறில்லை. உண்ணாவிரதம் இருக் கும் வக்கீல்கள் தாங்களாக அந்த முடிவை எடுத்துக் கொண்டு ஒட்டு மொத்த சங்கங்களும் தங்கள் முடிவை ஆதரிக்க வேண்டும் என்று நிர்பந்திக்க பார்க்கிறார்கள். நம்முடைய கோரிக்கையின் மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்த ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு செய்திருக்கிறோம். குறிப்பிட்ட கால அளவுக்கு மேலும் தாமதமானால் மீண்டும் போராட்டம் பற்றி யோசிக்கலாம். அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக சில காரியங் களில் ஈடுபடுவதை வக்கீல்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் அர சியலுக்கு நாம் இரையாகி விடக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு'' என்கிறார் பால்கனகராஜ்.

செம்மொழி மாநாட்டில் தமிழை வழக்காடு மொழியாக்குவது தொடர்பான அறிவிப்புகள் வருமா என்பதே வக்கீல்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முதியவனுக்கு வந்த சபலம்!shockan.blogspot.com

முதியவர்கள், எல்லா வகையிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையை நாசம் செய்திருக்கிறார் இந்த 70 வயது தாளாளர்.

மலைகளின் இளவரசியான கொடைக் கானலில், 300-க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் பயிலும் கே.பி.எஸ். (கொடைக் கானல் பப்ளிக் ஸ்கூல்) பள்ளியின் தாளாளர் 70 வயதைத் தாண்டிய பிரைட்.

பிரைட்டின் கெஸ்ட் ஹவுஸில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருந்த 10-ஆம் வகுப்பு ஏழை மாணவி கர்த்தவ்யா, தனது உறவினரான ஏற்காடு சி.எஸ்.ஐ. சர்ச் பாதிரியார் சார்லஸ் சாமுராஜுக்கு போன் செய்தாள்.

""அங்கிள்... வார்டன் ரத்தினம் செல் ஃபோன்ல பேசுறேன்... கரஸ்பாண்டண்ட் பிரைட் சார்... ரொம்ப அசிங்கமா... ஆபாசமா நடத்து கிறார். செக்ஸ் டார்ச்சர் பண்றார்... ப்ளீஸ் அங்கிள் உடனே வந்து என்னை கூட்டிட்டுப் போயிடுங்க. இல்லைனா... செத்துப் போயிடுவேன் அங்கிள்!'' கதறினாள் கர்த்தவ்யா.

கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலுக்கு காரமடை, கன்னிவாடி, கோத்தகிரியிலும் பள்ளிக்கூட கிளைகள் உள்ளன. காரமடைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படித்த கர்த் தவ்யாவை, கூட்டி வந்து இந்த கே.பி.எஸ்.சில் சேர்த்திருந்தார் சார்லஸ் சாமுராஜ்.

""என் மனைவியின் சொந்தக்கார மாணவி இந்த கர்த்தவ்யா. ரொம்ப ஏழ்மையான குடும்பம். ஏழை மாணவிகளை மிகக் குறைந்த கட்டணத்தில் கே.பி.எஸ். பள்ளியில் பிரைட் சேர்த்துக் கொள்கிறார் என்று ஃபாதர் கிறிஸ் டோபர் சொன்னார். அதனால்... அங்கு 9-ஆம் வகுப்பில் சேர்த்தேன். ஹாஸ்டலில் தங்க வைத்தார். மாதா மாதம் 500 ரூபாயை தவறாமல் செலுத்திக் கொண்டிருந்தேன். திடீரென்று கர்த்தவ்யா எனக்குப் போன் செய்து பதட்டத்தோடு சொன்னதும் உடனே கொடைக்கானல் போனேன்.... அந்த 70 வயதுப் பெரியவர் நடந்து கொண்ட விதத்தை நீங்களே கர்த்தவ்யாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!'' கர்த்தவ்யாவை நம்முன் நிறுத்தினார் பாதிரியார் சார்லஸ் சாமுராஜ்.

""நான் ஸ்கூல்ல இருந்து ஹாஸ்டலுக்குப் போகும் போது வழிமறிச்ச பிரைட் சார் "இனிமே நீ ஹாஸ்டல்ல தங்கக் கூடாது. உன்னை மாதிரி ஏழைப்பசங்க 16 பேர் என் கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்கிப் படிக்கிறாங்க. நீயும் தங்கிக் கொள்'னு கூட்டிப்போனார். அன்னைக்கி நைட்... நைட்டியை போட்டுக்கிட்டு படம் பார்க்க மாடிக்கு வாங்கனு கூப்பிட்டார்.

எல்லாரும் மாடிக்குப் போனோம். அசிங்கமான இங்கிலீஷ் படத்தை டி.வி.யில போட்டுக் காட்டி... "இந்த மாதிரி படங்களைப் பாருங்க அப்பத்தான் இங்கிலீஷ் சரம் சரமா பேச வரும்' என்றார் பிரைட்.
மறுநாளும் அதே மாதிரி படம்... 4-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு மாணவிகள் எல்லாரும் படம் பார்த்தபடியே தூங்கிட்டாங்க. அப்ப எங்க நடுவில வந்து உட்கார்ந்த பிரைட் சார்... முதல்ல தோள்ல கையைப் போட்டார். பிறகு, கண்ட கண்ட இடத்தில எல்லாம் தொட்டாரு... நான் அழுதுகிட்டே எழுந்து கீழே ஓடி வந்துட்டேன். காய்ச்சல் வந்துவிட்டது. மறுநாள் கிளாசுக்கு போக முடியலை. படுத்துக்கிடந்தேன். கெஸ்ட் ஹவுஸ்ல நான் மட்டும் இருந்ததை தெரிஞ்சுக்கிட்டு பிரைட் சார் வந்தார்... கட்டிப் புடிச்சு டார்ச்சர் செஞ்சாரு... எழுந்து சுவரோரமாப் போய் நின்னேன்...

"உன் மாமன் மாதம் 500 தான் கொடுக்கிறான்... மீதியை நான்தான் போடுறேன்... என் இஷ்டப்படி நடக்கலைனா வெளியே போடி'னு மிரட்டினாரு... அதுக்குப் பிறகு தான் வெளிய ஓடினேன். ஹாஸ்டலுக்கு போய் வார்டன்ட்ட செல்ஃபோனை வாங்கி அங்கிள்ட்ட சொன்னேன்!'' திக்கித் திணறி கண் கலங்கியபடி சொன்னார் மாணவி.

இனிமேல் "பிரைட்' டின் கட்டுப்பாட்டில் கர்த்தவ்யாவை படிக்க வைக்க விரும்பாத பாதிரியார் சார்லஸ் சாமுராஜ் மாணவியின் டி.சி.யை வாங்குவதற்காக தலைமையாசிரியர் சீபாபால் அறைக்குச் சென்றிருக்கிறார்.

""ஹெச்.எம்.மிடம் பேசிக் கொண்டிருக் கும் போது ரொம்ப கோபமா அங்கே வந்த பிரைட் "டேய்... இந்த புள்ளை உடம்பில எங்கெங்கே நான் தொட்டம்னு சொல்லச் சொல்லுடா'னு என்னை அடிக்க வந்தார்... நான் சத்தமா பேச ஆரம்பிச்சதும் உடனே டி.சி.யை கொடுத்துவிட்டார்கள். சின்னஞ்சிறுமிகளை பாழ்படுத்தும் இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட முதியவரை சும்மாவிடக் கூடாது. காவல் துறையில் புகார் கொடுக்க விரும்புகிறேன். நக்கீரன் எனக்கு உதவி செய்யணும்!'' -நடந்ததை விளக்கி, நமது உதவியைக் கேட்டார் பாதிரியார் சார்லஸ் சாமுராஜ்.

பாதிரியாரை, டி.எஸ்.பி. பாஸ்கரனிடம் அழைத்துச் சென்றோம். நடந்த விஷயங்களை பொறுமையாகக் கேட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ், எஸ்.ஐ. ராஜபுஷ்பம் தலைமையில் ஒரு டீமை அந்த ஸ்கூலுக்கு அனுப்பினார்.

தாளாளர் பிரைட் டின் கெஸ்ட் ஹவு ஸில் தங்கியிருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்திய ஸ்பெஷல் டீம் பிரைட் மீது எஃப். ஐ.ஆர். போட்ட தும் தலைமறை வாகி விட்டார் பிரைட்.
பள்ளியின் முதல்வர் சீபா பாலோ ""அந்த மாணவி வேண்டுமென்றே பொய் சொல்கிறார்!'' என்கிறார்.

""பிரைட்டைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவருடைய பாஸ்போர்ட்டையும் முடக்கப் போகிறோம்!'' என்கின்றது போலீஸ். யாரைத் தான் நம்புவதோ?

தமிழனுக்கு கிடைத்த புதையல்!


""ஹலோ தலைவரே... .... பாசனத்திற்கு தண்ணீர் வேணும்னு கிணறு வெட்டுற நேரத்தில், புதையல் கிடைச்சா எவ்வளவு சந்தோஷம் கிடைக்குமோ அப்படிப்பட்ட மகிழ்ச்சியில் இருக் கிறார் கலைஞர்.''

""செம்மொழி மாநாட்டைப் பற்றித்தானே சொல்றே?''

""மாநாட்டுச் சிறப்பு ஒருவித மகிழ்ச்சின்னா, சமீபத்தில் கிடைத்திருக்கும் 86 செப்பேடுகள் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்திருக்குது. ராஜராஜசோழனின் பேரனான முதலாம் ராஜாதிராஜன் நிலபுலன்கள் தொடர்பாக அளித்த ஆணையை அவன் தம்பி இரண்டாம் ராஜேந்திர சோழன் உறுதிசெய்து வழங்கிய செப்பேடுகள்தான் அது. மேலைச் சாளுக்கிய மன்னர்களை எதிர்த்து கொப்பம் என்ற இடத்தில் நடந்த போரில், யானை மீது இருந்த முதலாம் ராஜாதிராஜன் வேல் பாய்ந்து இறந்துபோக, அந்தக் களத்திலேயே மன்னனாக முடிசூடிய அவன் தம்பி இரண்டாம் ராஜேந்திரன், சிதறிய சோழப்படைகளை உடனடியாக ஒருங்கிணைத்து போரில் ஜெயித்தான். அந்த கொப்பம்தான், சந்திரபாபுநாயுடுவின் ஊரான ஆந்திர மாநிலம் குப்பம். இப்படிப்பட்ட வரலாறு கொண்ட சோழர்கள் ஆட்சிக்காலத்தில் நில நிர்வாகம் எப்படி இருந்தது என்பதை இந்த செப்பேடுகள் காட்டுது. தமிழ் மூவேந்தர்களின் ஒற்றுமையையும் காட்டும் விதத்தில் புலி, வில், மீன் என மூன்று சின்னங்களும் பொறிக்கப் பட்ட இந்த செப்பேடு கலைஞருக்கு சந் தோஷத்தைக் கொடுத்திருக்குது. செம்மொழி மாநாட்டு கண்காட்சியில் இந்த செப்பேடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.''

""தங்களுக்குள் மோதிக்கொண்ட மூவேந்தர்கள், தமிழுக்காக ஒற்றுமையாக இருந்தது சரி. செம்மொழி மாநாடு நடக்கிற நேரத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து, பிரதான எதிர்க்கட்சி போராட்டம் நடத்துதே?''

""ஈழத்தமிழர்களுக்கு நடந்த கொடுமையை பின்தள்ளுவதற்காகத்தான் செம்மொழி மாநாடு நடத்தப்படுதுன்னு அ.தி.மு.க, ம.தி.மு.க, சில தமிழ் அமைப்புகள் உள்ளிட்டோர் குற்றம்சாட்டிவந்த நிலையில், மின்னஞ்சல் மூலமா இரா.மு.சுபன்- இணைப் பாளர்-தலைமைச் செயலகம்-தமிழீழ விடுதலைப்புலிகள் -தமிழீழம்ங்கிற முகவரியி லிருந்து உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட் டுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும்-எம் இனத்தின் ஒற்றுமைக்கும் மாநாடு உறுதுணையாக இருக்கும் என்று வந்திருக்கிற அறிக்கை முதல்வருக்கு மனநிறைவைத் தந்திருக்குது. மாநாட் டுக்கு 2 நாள் முன்னதாகவே கோவைக் குப் போய் உற்சாகமா இறுதிக்கட்டப் பணிகளை பார்த்து, கடைசி நேர மாறுதல்களை செய்ய ஆரம்பித்து விட்டார்.''

""ஜெ மட்டும் மாநாட்டை தொடர்ந்து எதிர்த்துக்கிட்டே இருக்காரே? புறக்கணிப்பு, போராட்டம், கேலிக்கூத்துன்னு காரசாரமா அறிக்கைகள் வெளியாவதன் பின்னணி என்னவாம்?''

""மாநாட்டுக்கு எப்படியாவது இடையூறு வராதா, கலவரம் உண்டாக வாய்ப்பிருக்கு தாங்கிறதுதான் ஜெ.வோட எதிர்பார்ப்பு. ஆனா, செம்மொழி மாநாட்டுக்கு மக்கள் கிட்டே ஆதரவு இருக்குன்னு அவர் கைக்கு ரிப்போர்ட் போயிருக்குது. இந்த ரிப்போர்ட்டை தொகுத்து கொடுத் திருக்கிறவர், அ.தி.மு.க வட்டாரத்துக்குள் நியூ என்ட்ரியான சேஷாத்திரி அய்யங்கார். இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். தினமும் எல்லா பத்திரிகை செய்திகளையும் படித்து, அதில் ஜெ.வின் கவனத்திற்குப் போகவேண் டிய முக்கிய செய்திகளை தொகுத்து, கம்ப்யூட்டர் மூலமா அதையெல்லாம் ஒரு பத்திரிகை போல வடிவமைத்து கொடுப்பதுதான் இவரோட வேலை. செம்மொழி மாநாடு சம்பந்தமா பாசிட்டவான தகவல்களை இவர்தான் ஜெ.கிட்டே தெரிவித்திருக்கிறார்.''

""அ.தி.மு.க எம்.பிக்கள் டெல்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை திங்கட்கிழமையன்னைக்கு சந்திச்சி மனு கொடுத்தாங்களே?''

""15 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில் அ.தி.மு.க எம்.பி.க்கள் கொடுத்த மனுவில் ஜெ ஒரு விஷயத்தை சேர்த்திருந்தார். அதாவது வழக்காடும் மொழி யாக தமிழை அறிவிக்கணும்ங்கிற கோரிக்கைதான் அது. பார்ப்போம்னு மட்டும் ஜனாதிபதியிடமிருந்து பதில் வந்ததாம். தம்பிதுரை, மைத்ரேயன், பாலகங்கா, வேணுகோபால், சிவசாமி உள்பட 8 அ.தி.மு.க எம்.பி.க்களோடு ம.தி.மு.க கணேச மூர்த்தியும் ஜனாதிபதியைப் பார்க்கப் போனாங்க. மனுவில் சி.பி.ஐ. சார்பில் கையெழுத்து போடப்பட்டிருந்தது. ஆனா, சி.பி.எம். இதில் கையெழுத்திடலை.''

""ஓ...''

""செம்மொழி மாநாட்டுக்கு புலிகளிடமிருந்து வந்த அறிக்கையை கலைஞர் வரவேற்றதால, இதை இஷ்யூவாக்கி காங்கிரசின் ஆதரவைப் பெறலாம்ங்கிற கணக்கில் ஜெ. ஒரு கண்டன அறிக்கை ரெடி பண்ணிக்கிட்டிருக்கிறார். இது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புலி ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்குது?''

""செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகள் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விழுப்புரம் ரயில்வே தண்டவாள வெடிகுண்டு சம்பவத்தில் குற்றவாளிகளும் பிடிபடலை, காரணமும் புரிபடலையே?''

""ரயில்வே நிர்வாகம் சில விவரங்களை மறைக்கிறதுதான் இதற்கெல்லாம் காரணம்னு தகவல் வருதுங்க தலைவரே... என்ன நடந்ததுங்கிறது தொடர்பான சந்தேகங்களை ரயில்வே துறை தெளிவாக்கவேயில்லை. சேலம் பாசஞ்சர் ரயில் க்ராஸாகிப் போனபிறகுதான் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததுன்னு ரயில்வே நிர்வாகம் சொல்லுது. இதுதான் சந்தேகத்துக்கு காரணம். உண்மை என்னன்னு தெரிஞ்சிக் கிறதுக்காக நானே நேரில் போனேங்க தலைவரே.. இன்ஜினுக்கு முன்புறத்தில் , ஒரு இரும்புத்தகடு இருக்கும். தண்டவாளத்தில் கல்லு, கட்டை ஏதாவது இருந்தா இது தள்ளிவிட்டுட்டு, ரயில் போறதுக்கு வழி பண்ணும். அதோடு சேண்ட் பைப் ஒண்ணும் முன்பகுதியில் இருக்கும்.''

""அது என்ன?''

""அதாவது, மழைக்காலத்தில் தண்ட வாளத்துக்கும் சக்கரங்களுக்குமிடையில் க்ரிப் இல்லாமல் போயிடும். அதனால, ரயில் தடம்புரண்டிடக் கூடாதுங்கிறதுக்காக இன்ஜினில் ஒரு லீவர் இருக்கும். அதை டிரைவர் இழுத்தால், அதிலிருந்து சேண்ட் பைப் வழியா தண்டவாளத்தில் மணல் தூவப்படும். மணல் தூவியதும் க்ரிப்போடு வண்டி ஓடும். சேலம் பாசஞ்சர் ரயில் இன்ஜினில் இந்த சேண்ட் பைப் அடிபட்டு வளைஞ்சிருக்குது. குண்டு வெடிக்கிறதுக்கு முன்னாடி ரயில் க்ராஸ் ஆயிருந்தா பைப் இப்படி வளைஞ்சிருக்காது. அதுபோல கடைசியா இருந்த கார்டு பெட்டியும் டேமேஜ் ஆகியிருக்குது. அதனால, குண்டு வெடிச்சபிறகுதான் தண்டவாளத்தில் அந்த ரயில் போயிருக்குது. இந்த உண்மையை ஒத்துக்கொண்டால், ஏன் ரயிலை நிறுத்தலை, மக்கள் உயிர் என்னாகிறதுன்னு ரயில்வே நிர் வாகம் கேள்விக்குள்ளாகும். அந்த ரிஸ்க்கை எதிர் கொள்ளக்கூடாதுன்னுதான் ரயில்வே அதிகாரிகள், வட்டாரம் இந்த வெடிகுண்டு சம்பவம் பற்றி மறைச்சு மறைச்சு பேசுது'.

""விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி அரெஸ்ட் டாகியிருப்பதும், அதையடுத்து 3 விடு தலைப்புலிகள் வெடிகுண்டோடு சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளி யாகிக்கொண்டி ருக்குதே?''

""புலிகளின் உளவுப்பிரிவில் சிரஞ்சீவி ரொம்ப முக்கியமானவர். பொட்டு அம்மானுக்கு அடுத்த நிலையில் இருந்தவர். உளவறிந்து சொல்வதில் ரொம்ப கெட்டிக்காரர்னு ஈழ வட்டாரம் சொல்லுது. இவர் சொன்ன தகவல்கள் எதுவும் தவறாக இருந்ததில்லையாம். இறுதி யுத்தம் நடந்த நேரத்தில் தமிழ்நாட்டுக்கு சிரஞ்சீவி வந்துட்டார். அவர் பிடிபட்டிருப்பது எங்களோட அடுத்த கட்ட முன்னேற்றங்களுக்குப் பெரிய தடையா இருக்கும்னு புலிகள் வட்டாரம் சொல்லுதாம். தமிழக வட்டாரமோ, 15 நாளுக்கு முன்னாடியே சிரஞ்சீவி யை பிடிச்சாச்சுன்னும் வெளியே தெரியாமல் அவர் விசாரிக்கப்பட்டப்ப தமிழ்நாட்டில் யார் யாரைத் தெரியும், எந்தெந்த தலைவர்களை சந்தித்தேன்னு சொல்லியிருக்காராம்.''

""அடுத்த தகவல்?''

""செம்மொழி மாநாட்டுக்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமா நடந்துக்கிட்டிருக்கிற நேரத்தில், பா.ஜ.க தலைவர் அத்வானி பர்சனல் விசிட்டாக தமிழ்நாட்டுக்கு வர்றாரு. அவர் இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கிற தலைவர். 22, 23, 24 இந்த 3 நாட்களும் அவர் தமிழ்நாட்டில் இருப்பதா ப்ளான். மாநாட்டுப் பாதுகாப்புக்கு போலீஸ் உயரதிகாரிகள் வரை எல்லோரும் போயிடுவாங்கங்கிறதால, வேற தேதிக்கு பர்சனல் விசிட்டைத் தள்ளி வச்சிக்க முடியுமான்னு தமிழக காவல்துறை தரப்பி லிருந்து கேட்கப்பட்டிருக்குது. நோ...ன்னு அத்வானி தரப்பிலிருந்து பதில் வந்திருக்குது. அதனால செம்மொழி மாநாட்டு நேரத்தில், அத்வானிக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் வேலையிலும் தமிழக போலீஸ் இறங்கியிருக்குது.''

""தி.மு.க.வில் அழகு திருநாவுக்கரசு சேர்ந்திருப்பதால் ஜெ தரப்பில் ஒரு புது சந்தோஷம் தெரியுது. அந்த விவரத்தை நான் சொல்றேன்.. ஜெ ஆட்சியில் இருந்தப்ப அவரோட பிறந்த நாளுக்கு அனாமத்தா வந்த 3 லட்சம் டாலர் செக் சம்பந்தமா இன்னமும் வழக்கு நடந்துக்கிட்டிருக்குது. இதில் 88 லட்ச ரூபாயை வசூலித்து அதை டி.டி.யா மாற்றியதா இந்த வழக்கில் அழகுதிருநாவுக்கரசு மேலே சார்ஜ் இருக்குது. மெயின் அக்யூஸ்ட்டான அவர் இப்ப ஆளுங்கட்சிக்குப் போயிட்டார். ஏற்கனவே டி.எம்.செல்வ கணபதி இப்படி கட்சி மாறியதால் கலர் டி.வி. வழக்கு புஸ்வாணம் ஆனது. இப்ப அழகு திருநாவுக்கரசால பிறந்த நாள் பரிசு வழக்கும் நீர்த்துப்போயிடும்ங்கிறது தான் ஜெ தரப்பின் சந்தோஷத்துக்கு காரணம்.''