Thursday, June 10, 2010

இந்தியா என்னை மன்னித்துவிட்டது : டக்ளஸ் தேவானந்தா,


shockan.blogspot.com

ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்றத் தகவல் (10ந் தேதி) காலையில் பரவி, ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா டெல்லியில் நிருபர்களிடம், இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எனக்கு ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே எந்த வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார்.

தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது ஏற்கனவே கொலை, கொள்ளை சம்பந்தமாக 3 வழக்குகள் உள்ளது.

எனவே, 8ந்தேதி, ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு கொடுத்தார். இதனால், இன்று அவர் கைதாகலாம் என்று, காலையில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இது குறித்து, டெல்லியில் டக்ளஸ் தேவானந்தா நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில்.

நான் இந்தியாவுக்கு தற்போது சட்ட விரோதமாக வரவில்லை. உரியச் சட்டப்படி வந்துள்ளேன். நான் இந்தியா வந்துச் செல்ல எந்தத் தடையையும் அரசு விதிக்கவில்லை. அந்தப் பட்டியலில் நான் இல்லை.

இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எல்லா அரசியல் தலைவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனக்கும் ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே, எந்த வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது'' என்று கூறினார்.
என்றாலும், நான் எந்த விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment