Tuesday, August 31, 2010

டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா?


டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம்.

என்ன, சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்றிருப்பார் நம் வடிவேலு.

ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம் பூமியில் உண்டானது. அப்போது எழும்பிய தூசு மண்டலம், சூரிய ஒளியை பல்லாண்டுகள் மறைத்ததால் உலகின் பெரும்பாலான தாவரங்கள் அழிந்து, அதை நம்பி வாழ்ந்த மிருகங்களையும் அழித்தது, குறிப்பாக டைனோசர்களை கூண்டோடு ஒழித்துக் கட்டியது என்பது தியரி) டைனோசர்களை அழிந்தன.

ஆனால், அதில் தப்பிப் பிழைத்த ஒரு சில தாவர வகைகளில் ஒன்று ஆப்பிள் என்பது சமீபத்திய 'ஜீனோம்' ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் சுமார் 600 மில்லியன் அடிப்படை டிஎன்ஏக்களை சமீபத்தில் அக்குவேறு ஆணிவேறாக வகைப்படுத்தி (genome profiling) முடித்துள்ளனர் நியூசிலாந்து விஞ்ஞானிகள்.

ஆப்பிளின் நிறம், சுவை, அதன் ஜூஸ் தரும் தன்மைக்கான காரணங்களை ஆராய்வதற்காகவும், இந்த குணங்களை அதிகரித்து மிகச் சுவையான ஆப்பிள்களை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சி தான் இது. ஆனால், இந்த ஆராய்ச்சி நம்மை டைனோசர்களின் கதையை நோக்கி கொண்டு போயுள்ளது.

ஆப்பிள்களுக்கு மிக நெருக்கமான இனத்தைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட தாவர வகைகளில் 7 அல்லது 8 குரோமோசோம்கள் தான் உள்ளன. (நமது ஜீன்களை ஏந்திய டிஎன்ஏக்களைக் கொண்ட செல் உறுப்பு தான் குரோமோசோம்). ஆனால், ஆப்பிள்களில் 17 குரோமோசோம்கள் உள்ளது சமீபத்திய 'ஜீனோம்' ஆராய்ச்சியில் (டிஎன்ஏக்களை வரிசைப்படுத்தல்) தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட இந்த குரோமோசோம்கள் இரண்டு முறை உருவாகியுள்ளன. அதாவது 'டூப்ளிகேட்' ஆகியுள்ளன. இதனால் தான் ஆப்பிள் குடும்பத்தைச் சேர்ந்த பிற தாவரங்களில் 8 குரோமோசாம்கள் இருக்க, ஆப்பிளில் மட்டும் 17 குரோமோசாம்கள் உள்ளன.

இந்த டூப்ளிகேசன் நடந்தது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அந்த சமயததில் தான் பூமியில் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்தது. அந்த காலகட்டத்தில் தான் டைனோசர்கள் கூண்டோடு காலியாயின.

இந்த இரு தனித்தனி சம்பவங்களுக்கும் ஒரே காரணம் இருந்திருக்கலாம் என்பது தான் விஞ்ஞானிகள் சொல்லும் சுவாரஸ்யமான தகவல்.

எரிகல் தாக்கி தாவர இனங்கள் அழிந்தபோது, தாக்குப் பிடித்த ஓரிரு இனங்களில் ஆப்பிளும் ஒன்று என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். அந்த காலகட்டத்தில் தப்பிப் பிழைக்க, ஆப்பிள் இனத்தில் நடந்த 'சம்பவம்' தான் குரோமோசாம் டூப்ளிகேஷன் என்கிறார்கள்.

எந்திரன்..படத்தின் வர்த்தகம் ரூ 300 கோடியைத் தாண்டும்...


ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே வாய் பிளந்து பார்க்கிறது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பட வர்த்தகத்தை.

இப்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்தப் படத்தின் வர்த்தகம் ரூ 300 கோடியைத் தாண்டும் என்பது இந்திய திரையுலக வல்லுநர்களின் கருத்து. பிரபல பாலிவுட் இணையதளம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ரோபோ (இந்தி) படம் சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாகவும், ரோபோ வெளியீட்டாளர் வீனஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் எந்திரன் வினியோக உரிமை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

சென்னை மாநகர விற்பனை உரிமையை இதுவரை யாருக்கும் தரவில்லை சன் பிக்சர்ஸ். முதல் போணியாக மதுரை ஏரியாவை ரூ 13 கோடிக்கு விற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனை வாங்கியிருப்பவர் பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்புவின் தம்பி அழகர். இந்த விலை பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. மதுரையே இந்த விலை என்றால், சென்னை உரிமை இதைவிட இருமடங்காக இருக்குமோ என்ற கேள்விதான் இப்போது விநியோகஸ்தர்கள் மத்தியில்!

அடுத்து என்எஸ்ஸியை விலைபேசிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மொத்த ஏரியாக்களும் விற்று முடியும் போது எந்திரனின் விற்பனை, இந்திய சினிமாவுலகம் பார்த்திராத சாதனை விலையைத் தொட்டிருக்கும் என்கிறார்கள்.

இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை யாருக்கு என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் எந்திரன் விலை எங்கேயோ போய்விடும்...!

Monday, August 30, 2010

2011ல் தமிழக முதல்வர் விஜகாந்த்தான்...


சென்னை: எந்தக் கூட்டணி எப்படி அமையும் என்ற 'கெஸ்'ஸில் மக்கள் இருக்க, புதிய திருப்பமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் , காங்கிரஸ் தலைவர்களான ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் கூடி திடீரென ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் புதிராக பார்க்கப்படுகிறது.

இன்று ஜி.கே.மூப்பனார் எனப்படும் கருப்பையா மூப்பனாரின் 9வது நினைவு தினமாகும். இதையொட்டி இன்று தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சியினரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி தீப்பந்தம் ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முடிவில் தீப்பந்தம் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கினார்.

மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி 'மூப்பனாரின் வாழ்க்கை வரலாறு' எனும் புத்தகத்தை திரைப்பட பாடலாசிரியர் வாலி வெளியிட்டார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இசையமைப்பாளர் தேவா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திருப்புமுனை சந்திப்பு

மலர் வளையம் வைக்க வந்த விஜயகாந்துடன், இளங்கோவன், வாசன், திருமாவளவன் ஆகியோர் தனியாக அமர்ந்து சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.

இளங்கோவன் திமுகவுக்கு கடுமையான எதிர்ப்பாளர். வாசன் அப்படி இல்லை. திமுகவை எதிர்க்கவில்லை. அதேசமயம், திமுகவுடன் அவர் மிகவும் நெருக்கமானவராக இருப்பவரும் இல்லை. திருமாவளவன், திமுக கூட்டணியில் இருப்பவர். விஜயகாந்த் கூட்டணி அரசியலுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டவர். எனவே இவர்களின் இந்த திடீர் சந்திப்பு பல யூகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மூப்பனாரை தனது குருக்களில் ஒருவராக கருதுகிறேன் என பலமுறை முன்பு விஜயகாந்த் கூறியுள்ளார். மூப்பனார் உயிருடன் இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்தவர். அந்த வகையில் வாசனும், விஜயகாந்த்துக்கு நெருக்கமானவராகவே கருதப்படுகிறார்.

இளங்கோவனும் நீண்ட காலமாக விஜயகாந்த்துடன் நட்பில் இருப்பவர்தான். சமீபத்தில் விஜயகாந்த்தின் பிறந்த நாளன்று அவரை சந்தித்து, விஜயகாந்த் ரொம்ப நல்ல தலைவர், அவர் வளர்ந்து வரும் முக்கியத் தலைவர் என்று 'ஐஸ்' பெட்டிகளை தூக்கி தலையில் வைத்து விட்டு வந்தவர்.

இப்படிப்பட்டவர்கள் திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு புதிய அரசியல் கூட்டணிக்கான முதல் படியா என்ற கேள்வியும் எழுகிறது.

தனது தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். எனவே வாசனையும், திருமாவளவனையும் விஜயகாந்த் தலைமையின் கீழ் கொண்டு வர இளங்கோவன் பாடுபடுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனவே இந்த சந்திப்பு எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்ட சந்திப்பா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அரசியலாச்சே, எது வேண்டுமானாலும் நடக்கலாம், என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நாங்க வளர்ந்துட்டோம்-பண்ருட்டியார்

இதற்கிடையே, கோவை சவுரிபாளையத்தில் நடந்ததேமுதிக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தேமுதிக வளர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றை நடத்தி வருகிறது. இதில், தங்களை வருத்தி தான் செய்கின்றனர். மக்களுக்கு பிரச்சனைகள் வருவதுபோல் நடப்பதில்லை.

தே.மு.தி.க. வுக்கு என்றுமே வன்முறை மீது நம்பிக்கை இல்லை. கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது, 70 கட்சியோடு 71 ஆக இருக்கும் என அரசியல் விமர்சனம் செய்தனர். ஆனால், 71ல் 7 மறைந்து ஒன்றுவது கட்சியாக தமிழகத்தில் வளர்ந்துள்ளது தே.மு.தி.க.

அண்ணாவுக்கு அடுத்து எம்.ஜி.ஆர். வந்தார். அடுத்து தலைமுறையாக விஜயகாந்த் உருவெடுத்துள்ளார். தமிழகத்தில் மக்களின் பல்வேறு பிரச்னைகள் கட்டாயம் தீர்க்க வேண்டிய உள்ளன. வறுமையை ஒழிப்பதற்காக அ.தி.மு.க., தி.மு.க., போட்ட திட்டங்களால் 20 சதவீதமாக இருந்த வறுமை 22.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. கவர்ச்சி திட்டங்களை அவர்கள் போட்டனர். வளர்ச்சி திட்டங்களை போடவில்லை என்றார்.

மெகா கூட்டணி அமையும்-மச்சான் சுதீஷ்

இதேபோல சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் தேமுதிக இளைஞர் அணி செயலாளரும், விஜயகாந்த்தின் மச்சானுமான சுதீஷ் பேசுகையில்,

நான் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று பல பொது கூட்டங்களில் கலந்துகொண்டு வருகிறேன். ஆனால் இன்று நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது எனக்கு பிரமிப்பாக உள்ளது. காரணம் இங்கு ஒரு மாநாடு நடப்பது போன்ற கூட்டம் அலைமோதுகிறது. இதுவே வரும் 2011ல் தமிழக முதல்வர் விஜகாந்த்தான் என்பதற்கு ஓர் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

மேலும் தே.மு.தி.க.வின் வளர்ச்சியை பார்த்து. தி.மு.கவும், அ.தி.மு.கவும் அஞ்சி நிற்கின்றன. தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் அப்பாவி பொதுமக்களின் ஓட்டுகளை பணம்கொடுத்து வாங்குகின்றன. அவர்கள் ஓட்டுக்காக வழங்கும் பணம் தற்காலிகமாக உயர்ந்துவருவதற்கு காரணம் தே.மு.தி.க வின் வளர்ச்சிதான். அவர்கள் தொகையை உயர்த்த உயர்த்த தே.மு.தி.க வளர்ந்து கொண்டே போகிறது என்று அர்த்தம்.

விஜயகாந்த்துக்கு 5 ராசி

அடுத்ததாக வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நமது தலைவர் 14வது முதல்வராக வருவார். அவருக்கு எப்போதும் 5ஆம் எண் ராசியானது. அதற்காக அ.தி.மு.க, ,தி.மு.க தவிர்த்த பிற கட்சிகள் தே.மு.தி.க தலைமையில் மெகா கூட்டணி அமைத்து எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நமது தலைவர் முதல்வராக அமர்வார் அப்போது நடைபெறும் வெற்றிப் பொதுக்கூட்டத்தில் நான் மீன்டும் உங்களை வந்து சந்திபேன் என்றார் சுதீஷ்.

Sunday, August 29, 2010

திரைக்கூத்து!


விசுவாசம்!



டைரக்டர் மு.களஞ்சியம்தான் 'அங்காடித் தெரு' அஞ்சலியை கோலிவுட்டுக்கு கொண்டுவந்தவர். ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்ட நிலையிலும் இப்போது பெரிய நடிகை யாகிவிட்டாலும் கூட களஞ்சியம் இப்போது இயக்கி வரும் "கருங்காலி' படத்தில் நடித்து வருகிறார். அதனால் ரெண்டு பேருக்கும் இடையே அது இருப்பது உண்மைதான் என கோலிவுட்டில் ஒரு பேச்சு.


ஆனால் அஞ்சலியோ, ‘"என்னை அறிமுகப்படுத்த முயற்சி எடுத்தவர் அவர் தானே. அந்த விசுவாசத் தை தப்பா பேசாதீங்க' என்கிறார்.


மீண்டும் கூட்டணி!


அஜீத்தோடு ஆரம்பத்திலேயே மோதல் ஏற் பட்டதால் விலகிக்கொண்ட டைரக்டர் கவுதம் மேனன்... இப்போது கமலுடன் மீண்டும் கூட்டணி போடப்போகி றாராம்.


அப்ரோச்!



லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த படம் கைவிடப் பட்ட நிலையில் விஜய்யை வைத்து பண்ணுவதற்கு ஏற் பாடுகள் நடந்தது. இப் போது விஜய்யும் "நோ' சொல்லிவிட்டாராம்.
ஆனால் ‘"பையா' போல திரும்ப நாம சேர்ந்து ஒரு படம் தரலாமே... என லிங்குவை அப்ரோச் செய்கிறாராம் கார்த்தி.


ஹிட் பிரதர்ஸ்!


"பருத்தி வீரன்', "ஆயிரத்தில் ஒருவன்', "பையா', "நான் மகான் அல்ல' என தொடர்ந்து ஹிட் கொடுத்து ராசியான ஹீரோவாக வலம் வருகிறார் கார்த்தி. சூர்யாவும் ஹிட் கொடுத்து வருகிறார். இப்போது ஆந்திரா மார்க்கெட்டையும் ஒரு கை பார்த்துவிட அண்ணனும், தம்பியும் சேர்ந்து ஹைதராபாத்தில் ஆபீஸ் போட்டி ருக்காங்க.


பஞ்சமுகி!



மந்திரதந்திர படங்களில் நடித்து போரடிக்குது... என அனுஷ்கா அலுத் தக் கொண்டாலும் அவர் நடிக்கும் அந்த மாதிரி படங்கள் செம ஹிட் டாகுது. தெலுங்கின் பிரபல ஹீரோ நாகர்ஜுனா தயாரிப்பில் அனுஷ்கா நடித்த "‘பஞ்சமுகி' படம் சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப்போடு போடு கிறது. தமிழிலும் இந் தப்படம் வெளியாக விருக்கிறது. தியேட்டர் காரர்கள் "பஞ்சமுகி'யை வெளியிட ஆவலா இருக்காங்களாம்.


குமுறல்!


ரம்யா கிருஷ்ண னின் ஹைதராபாத் வீட்டில் அடிக்கடி பார்ட்டி நடக்கும். தெலுங்கின் பிரபலங்கள் கலந்து கொள்ளும் அந்த பார்ட்டியில் த்ரிஷா உட்பட சில தமிழ் நடிகைகளும் கலந்து கொள்ளுவது வழக் கம். அது வழக்கமான காக்டெயில் பார்ட்டி தான்.

ஆனால் அந்த லிங்கைத்தான் போதைக் கும்பலோடு த்ரிஷா உள்ளிட்டோருக்கு தொடர்பு என ஆந்திர மீடியாக்கள் மிகைப் படுத்திவிட்டதாம். ஒரு நடிகையின் செல் நம்பர் யாருக்கும் ஈஸியா கிடைச்சிடும். அதை வச்சுக்கிட்டு கதை கட்டலாமா?' என்பது த்ரிஷா தரப்பின் குமுறல்.


மனசு!




"சிக்கு புக்கு'படத்தில் ஸ்ரேயா நாயகி. இன்னொரு நாயகியாக பாலிவுட் அம்ரிதாவோட தங்கச்சி ப்ரீத்திகா. ரசிகர்கள் மனசுல யாரு இடம் பிடிக் கிறதுங்கிற மோட் டிவ்ல ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு கவர்ச்சி காட்டியிருக்காங் களாம்.

அப்படியா!



அந்த பெயிண்ட்டிங்கான நடிகை தன்னை அறிமுகம் செய்து திருப்பு முனை தந்த தயாரிப்பாளருக்கு நன்றிக்கடன் செய்ய விருந்து தந்தார். எழுச்சி மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு வந்தார் தயாரிப்பாளரும். ஆனால் ஏதோ பதட்டத்தில் சம்பவம் சரிவர நிகழாமல் பாதியிலேயே முடிந்ததாம்.

நக்கீரன் செய்தி! கலைஞர் அறிவிப்பு!


ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் கடந்த வருடம் ஊதியத்தை உயர்த்திக் கொடுத்த கலைஞர், தற்போது அந்த ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளையும் களைந்து மேலும் நன்மை செய்திருக்கிறார். இதனால் ஏகத்துக்கும் உற்சாகத்தில் இருக்கிறார்கள் அரசு ஊழியர்கள்.

நக்கீரன் தேர்தல் கள ஆய்வில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பவைகளின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதையும் எழுதியிருந்தோம். அதில் அரசு ஊழியர்களின் ஆதரவு யாருக்கு? என்கிற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் ""ஊதிய விகிதங்களில் உள்ள முரண் பாடுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டுமென்று அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனை தமிழக அரசு நிறைவேற்றும்பட்சத்தில் அரசு ஊழியர் களின் முழுமையான ஆதரவு தேர்தல் களத்தில் தி.மு.க.வுக்கே எதிரொலிக்கும்'' என்று சுட்டிக்காட்டியிருந்தோம்.

இதனைத் தொடர்ந்து, அது குறித்து தீவிர கவனம் செலுத்திய கலைஞர், ""தற்போது அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப ஒருநபர் குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதாக அறிவித் துள்ளார். இதனால் ஏகத்துக்கும் துள்ளிக் குதிக்கின்றனர் அரசு ஊழியர்கள்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில செயலாளர் சாமிநாதன், ""மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தில் பல முரண்பாடுகள் இருப்பதாக அரசின் கவனத் துக்கு கொண்டு சென்றோம். இதனைக் கருத்தில் கொண்டு ஆராய, தொழில்துறை செய லாளர் ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தார் கலைஞர்.

அரசு ஊழியர் சங்கங்களை அழைத்து விவாதித்தது ஒருநபர் குழு. அப்போது, ஊதிய விகிதங்களில் உள்ள முரண்பாடுகள், தவறுகள் அனைத்தையும் விரிவாக எடுத்துச் சொன் னோம்.

அதனை ஏற்றுக்கொண்ட ஒருநபர் குழு, தனது அறிக்கையை கடந்த ஏப்ரலில் அரசிடம் சமர்ப்பித்துவிட்டது. ஆனால், அதுகுறித்து எவ்வித முடிவையும் அரசு எடுக்காத சூழலில், தற்போது ஒருநபர் குழுவின் அத்தனை பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்வதாக கலைஞர் அறிவித்திருப்பது எங்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. நக்கீரன் செய்திதான் இதற்குக் காரணம். நக்கீரனுக்கு எங்கள் நன்றிகள்'' என்கிறார் உற்சாகமாக. அரசு ஊழியர்கள் தெரிவித்த ஊதிய முரண் பாடுகள் களையப்பட்டிருப்பதால், வரு ஷத்துக்கு 223 கோடி ரூபாய் கூடுதல் தொடர் செலவினமாக அரசுக்கு ஏற்படும். அதேசமயம், 2 லட்சம் அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் பலன் பெறுவார்கள்.

காலம் விளையாடிய மரண விளையாட்டு! கல்லூரி திக்... திக்!


திரைப்படங்களில் கூட பார்க்க முடியாத திடீர் கிளைமாக்ஸ்கள் நம் வாழ்வில் அரங்கேறி விடுவதுண்டு. அப்படிப் பட்ட ஒரு கிளைமாக்ஸ் சூறாவளியில் இரண்டு குடும்பங்கள் சிக்கின. அந்த சூறாவளி ஏற்படுத்திய பகீர் அனுபவங்கள் வேறுயாருக்கும் ஏற்படக்கூடாது என்பதே அந்த இரண்டு குடும்பங் களின் கண்ணீர்ப் பிரார்த்தனை. அப்படி என்னதான் ஆனது?

மனதை தைரியப் படுத்திக்கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.

சேலம் சக்தி கைலாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம். இங்கு முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்பில் படிக்கும் தன் செல்ல மகள் ரேகாவைப் பார்க்கும் ஆவ லோடு... ரேகாவுக்குப் பிடித்த தின்பண்டங்களுடன் சென்றார் அப்பா ராஜேந்திரன். சேலத்தில் மெஷின் ஆப்பரேட்டராக வேலை பார்க்கிறவர் அவர். வகுப்பறையில் ரேகா இல்லை என்று தெரிந்துகொண்டு ஹாஸ்டலுக்கு அவர் போக... அவரை அடையாளம் கண்டுகொண்ட வார்டன் ‘""என்னசார் பாப்பாவைப் பார்க்க வந்தீங்களா? ஹாஸ்டல் ரூம்லதான் இருக்கும் வாங்க''’ என்றபடி... மாணவியர் விடுதியின் மூன்றாவது தளத்திற்கு அவரை அழைத்துசென்றார். ரேகாவின் அறையோ உள்ளே தாழிடப்பட்டிருந்தது. குழப்பமான ராஜேந்திரன்... ’""ரேகா... நான் அப்பா வந்திருக்கேன்டா கதவைத் திற'' என்று பலமுறை கதவைத்தட்டினார். உள்ளே எந்த சலனமும் தெரியாததால்... அவரது வயிறு கலங்கியது. ஜன்னல் கண்ணாடியில் கண்களை ஒட்டிவைத்து அவர் பார்க்க... உள்ளே யாரோ நிற்பது மாதிரி மங்கலாகத் தெரிந்தது. என்னவோ ஏதோவென பகீரானவர்... ஒரு கல்லை எடுத்து ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். உள்ளே... தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது அந்த உடல்.


தலையில் இடிவிழுந்த மாதிரி ஆனவர் ""ஐயோ ரேகா.. என்னடா இது? எதுக்கு இப்படிப் பண்ணினே?'' ராஜேந்திரன் கதற... ஹாஸ்டல் துக்க பிராந்தியமானது. வகுப்பில் இருந்து அழைத்து வரப்பட்ட ரேகாவின் ரூம்மேட்டுகளான சௌமியாவும் கல் பனாவும் ""காலைல நல்லாதான் பேசிக் கிட்டு இருந்தா. லேட்டா அட் மிஷன் ஆன வருத்தம் மட்டும் அவளுக்கு இருந்தது. இப்படி திடீர்னு அவ தொங்கு வான்னு நாங்க எதிர்பார்க்கலை''’ என்றபடி கண் கலங்கினார்கள்.

போலீஸ் அறைக்கதவை உடைத்துக்கொண்டு போய்... தொங்கிய உடலை கீழே இறக்கினர். கதறிய படியே போன ராஜேந்திரன்... மகள் முகத் தைக்கூட பார்க்க தெம்பற்றவராய் “""ஆமாங்க. சமீபத்தில் எடுத்த டிரஸ்தாங்க இது. இது என் மகதான்''’’என்று தலையில் அடித்துக்கொண் டார்.

சோகமாக வந்த ரேகாவின் ஆசிரியர்கள் ""பெங்களூர்ல டிப்ளமா படிச்சப் பொண்ணு. இங்க ரெண்டாம் வருசம் ஜாயின் பண்ண வந்துச்சி. ப்ளஸ்-டூ மார்க்கை வச்சி ஃபர்ஸ்ட் இயர்தான் சேரமுடியும்னு சொன்னோம். வகுப்பு கன்ஃபார்ம் ஆகும்வரை பொறுத்துக்கன்னு சொன்னோம். அதுக்குள்ள...''’என்றார்கள் சோகக்குரலில்.

அப்போது... ரேகாவின் உறவினர்களில் ஒருவர் மாடியில் இருந்து கீழே பார்த்து திகைத்தார். திகைத்தவர்...

""ராஜேந்திரன் மாமா... நம்ம ரேகா வர்ற மாதிரி இருக்கு''’என மைதானம் பக்கம் கைகாட்ட... ராஜேந்திரன் ஓடிவந்து எட்டிப் பார்த்தார். கீழே வந்துகொண்டிருந்த அந்த மாணவி ‘""அப்பா... எப்ப வந்தீங்க. என்ன ஆச்சரியமா இருக்கு''’ -என்ற படி மேலே ஓடிவர.. .ஒரேநொடியில் காட்சிகள் மாறியது. மேலே ஓடிவந்த ரேகாவைக் கண்டு எல்லோரும் திகைத்து குஷியாக... மகளை ஓடிவந்து கட்டிக்கொண்டு ""என் செல்லம்... உனக்கு ஒண்ணும் ஆக லையே...'' என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார் ராஜேந்திரன். திகைத்த காக்கிகள் டீம்...’"அப்ப இறந்தது யார்?'’’என்றபடி குழம்பியது. சக மாணவிகளை அழைத்துப்போய் உடலைக்காட்ட...

""ஐயோ இது குருவி சுகன்யாங்க. காலைல கூட தலைவலிக்குது. கிளாஸுக்கு வரலைன்னு சொன்னா. பாவம்ங்க. அவ நடிகர் விஜய் ரசிகை. அதனால் அவ பெட்நேம் குருவின்னு வச்சுக்கிட்டா''’’ என்றார்கள் அதே சௌம்யாவும் கல்பனாவும். தகவல்அறிந்து சுகன்யாவின் அப்பா ஆறு முகமும் அம்மா செல்வியும்.. பதறியபடி ஓடி வந்து "அடி நான்பெத்த மகளே.. என் செல்லமே... என்ன ஆச்சும்மா? உனக்கு'’ என ஸ்ட்ரெச்சர் மீது விழுந்து கதறினர்.

டி.சி.பாஸ்கரனின் காலை இறுகப் பிடித்துக்கொண்ட ஆறுமுகம் ""சார் எம்புள்ளை உடம்பை அறுக்கவேணாம்னு சொல்லுங்க சார். அவ பிஞ்சுமேனி தாங்காது சார்'' என்று தேம்ப... காக்கிகளே கண்களைத் துடைத்துக்கொண்டனர்.

ஆறுமுகத்தை நாம் ஆசுவாசப்படுத்தி பேச வைத்தபோது ""நான் மீன் வித்து பிழைக்கிறவன்ங்க. இருந்தும் என் பிள்ளை என்னை மாதிரி லோல் படக்கூடாது. எதிர்காலத்துல பெரிய என்ஜினியரா ஆகணும்னு ஆசைப்பட்டு.. சிரமத்துக்கு மத்தியில் படிக்கவச்சேன். அதுக்குள்ள இப்படி ஆய்டிச்சே. என் மக தற்கொலை பண்ணிக்கிற ரகமில்லை. இதில் ஏதோ மர்மம் இருக்கு''’’என்று தேம்பினார்.

கரஸ்பாண்டண்ட் ராஜவிநாயகமோ ""சுகன்யா 4 சப்ஜெக்ட்டில் பெயில். அதோட தான் மாநிறமா இருப்பதாலும் மீனவப் பிள்ளை என்பதாலும் மத்தவங்க ஏளனமாப்பார்க்கிறதா தாழ்வுமனப் பான்மையில் இருந்திருக்கு. சரியா படிக்கலைன்னா டீச்சர்ஸ் அட்வைஸ் பண்ணத்தான் செய்வாங்க. அதுக்காக இன்னைக்கு வகுப்புக்குப் போகாம இப்படி ஒரு முடிவைத் தேடிக்கிட்டது எங்களுக்கே ஷாக். ஒன்றைப் புரிஞ் சிக்கணும்... பெத்தவங்களுக்கு அவங்க பிள்ளைகள் மட்டும்தான் பிள்ளைகள். ஆனா எங்களுக்கு இங்க படிக்கும் அத்தனைப்பிள்ளைகளுமே பிள்ளைகள்தான்'' என்றார் கலக்கமாக.

இத்தகைய சம்பவங்கள் இளைய சமுதாயத்துக்கு மன உறுதி தேவை என்பதையே அடித்துச்சொல்கிறது.

தேர்தல் களத்தில் குதித்த தி.மு.க.!



""ஹலோ தலைவரே... .... தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம், தேர்தல் களத்துக்கு கட்சியை தயார்படுத்து றதுக்கு வழி வகுத்திடிச்சி.''

""சேவை வரி விதிப்பு, பொதுநுழைவுத்தேர்வு, இலங்கைத் தமிழர் பிரச்சினை இது பற்றியெல்லாம் விவாதித்தது பற்றித்தானே செய்திகள் வெளியானது.''

""அறிவாலயத்தில் 24-ந் தேதி நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில், நாம போன முறை பேசியதுபோலவே மத்திய அரசின் சேவை வரி விதிப்பு திருத்த மசோதா பற்றிய சப்ஜெக்ட்தான் மெயினா இருந்தது. டெல்லியில் இது சம்பந்தமான கூட்டத்தில் கலந்துக்கிட்ட அமைச்சர் துரை முருகன்கிட்டே இந்த மசோதாவின் நன்மை, தீமை பற்றி எம்.பி.க்கள்கிட்டே பேசும்படி சொல்லியிருந்தார் கலைஞர். துரைமுருகனும் எல்லா விவரங்களையும் தயார் செய்துட்டு வந்து, எம்.பி.க்களுக்குப் புரிகிற மாதிரி விளக்கிப் பேசியிருக்கிறார். அதோடு, பொதுநுழைவுத் தேர்வை நிரந்தரமா ரத்துசெய்வது, இலங்கைத் தமிழர் நலன்களைப் பாதுகாப்பது உள்பட பல விஷயங்களும் விவாதிக்கப்பட, கூட்டத்தின் பிற்பகுதியில் அரசியல் நிலவரம், எலெக்ஷன் களம் பற்றிய விவாதங்கள் தொடங்கிடிச்சி.''

""அரசியல்னா எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி எல்லாவற்றையும் பற்றி பேசியிருப்பாங்களே!''

""ஜெ.வின் இரண்டு கண்டனப் பொதுக்கூட்டங்களுக்கான ரெஸ்பான்ஸ் பற்றி பேச்சு வந்தப்ப, அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி மூணு பேரும், நமக்கு ஆதரவு நல்லாத்தான் இருக்கு. எம்.பி. எலெக்ஷன் நேரத்திலயும் மீடியாக்காரங்க இப்படித்தான் எழுதினாங்க. ஆனா நாமதான் ஜெயித் தோம். அதனால இது பற்றியெல்லாம் அலட்டிக்கத் தேவையில்லைன்னு சொல்லியிருக்காங்க. மத்திய இணையமைச்சர் பழனிமாணிக்கம், அது கூட்டப்படுகிற கூட்டம்னு சொன்னார். அப்ப டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, கூட்டப்படுற கூட்டமா இருந்தாலும் நாம் அதை சாதாரணமா எடுத்துக்கக்கூடாது. தேர்தல் நெருக்கத்தில் இருப்பதால் நாம் தீவிரமா வேலை செய்யணும்னு சொன்னதையும் மற்ற எம்.பிக்கள் கூர்ந்து கவனிச்சாங்க.''

""ஜெ.வின் அடுத்த பொதுக்கூட்டம் மதுரையில் நடக்குதுங்கிறதால எல்லோர் கவனமும் அழகிரி பக்கம் இருந்திருக்குமே?''





""அவர் பேசுறப்ப, அந்தம்மாவுக்கு கூட்டம் கூடுவதா சொல்றாங்களே... .. மதுரையில் என்ன கூட்டம் வருதுங்கிறதை நான் பார்க்கிறேன்னு சொல்ல, அப்ப தயாநிதி மாறன் குறுக்கிட்டு, இல்லை மாமா.. மீடியா நம்ம கூட இல்லை. அதுதான் பிரச்சினைன்னு சொன்னார். உடனே, சன் டி.வி. எந்தப் பக்கம் இருக்குன்னு கேட்ட அழகிரி, உங்க டி.வியில் தான் ஜெ. பற்றியும் விஜயகாந்த் பற்றியும் அதிகமா செய்தி வருதுன்னு சொன்னார். மொத்த எம்.பிக்கள்கிட்டேயிருந்தும் கைதட் டல் சத்தம். நிலைமையை புரிஞ்சுக்கிட்ட தயாநிதி, நான் எம்.பியாகத்தான் பேசுறேன். சன் டி.வி.யோட ஸ்டாண்ட் பற்றி கலாநிதி கிட்டேதான் கேட்கணும்னு சொல்லியிருக் கிறார். உங்க நாலெட்ஜ் இல்லாமல்தான் இதெல்லாம் நடக்குதான்னு அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார் அழகிரி.''

""கட்சி நிர்வாகிகள் மட்டத்திலேயும் அதிருப்திகள் வெளிப்படுதே...!''

""அதைப் பற்றியும் எம்.பிக்கள் கூட்டத் தில் குரல் ஒலித்தது. உட்கட்சி தேர்தலுக்குப் பிறகு நிறைய மாவட்டங்களில் இரண்டு குரூப்பாக பிரிஞ்சு கிடக்கிறாங்கன்னும் அதை யெல்லாம் சரி செய்யணும்னும் சொல்லப்பட்டது. எம்.பிக்கள் கூட்டம் முடிந்து மதியம் சி.ஐ.டி காலனி வீட்டுக்குப் போன கலைஞரை திருச்சி சிவா எம்.பி சந்தித்தார்.''

""அவர் ஏரியாவில் தானே குரூப் பாலிடிக்ஸ் அடிதடியா வெளிப்பட்டது...''

""அதைப் பற்றித்தான் கலைஞரிடம் கம்ப்ளைண்ட் பண்ணினார் சிவா. கலைஞரின் வருகையையொட்டி வரவேற்பு பேனர் வைக்கும் விவகாரத்தில் திருச்சி துணை மேயர் அன்பழகன் தரப்பு தன்னோட ஆட்களை தாக்கியது பற்றி சொல்லியிருக்கிறார். எல்லா வற்றையும் கேட்டுக்கிட்ட கலைஞர், சாயங் காலம் அமைச்சர்களை சந்தித் தப்ப, திருச்சி மாவட்டச்செய லாளரான அமைச்சர் நேரு கிட்டே பேனர் விவகாரம் பற்றி கலைஞர் விசாரித்திருக் கிறார்.''

""அமைச்சர் என்ன சொன்னாராம்?''

""பெயரில் திருச்சி இருந்தாலும் சிவா இதுவரைக்கும் தன் எம்.பி. நிதியிலிருந்து திருச்சிக்கு எதையும் செய்யலைங்கிறதைச் சொன்ன நேரு, நடுரோட்டில் பேனர் வைக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சினையையும், அழகிரி படம் போட்ட தாலதான் எடுக்கச் சொன்னதா சிவா தரப்பு டைவர்ட் பண்ணியதாகவும் கலைஞர்கிட்டே சொல்லியிருக் கிறார். அப்ப பக்கத்தில் இருந்த வனத்துறை அமைச் சர் செல்வராஜை பார்த்து, நீ என்னய்யா சொல் றேன்னு கலைஞர் கேட்க, இரண்டு தரப்புக்குமிடை யில் இணக்கமான சூழ்நிலை இல்லைங்கய்யான்னு பொதுவா சொல்லிவிட்டார் செல்வராஜ். தேர்தலுக்கு இன்னும் ஏழெட்டு மாதங்களே இருப்பதால ஒழுங்கா, தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் போட்டு அரசாங்க நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு போகணும்ங்கிறதுதான் கலைஞரோட அட்வைஸ்.''

""கோஷ்டிப் பூசல்கள் இருந்தால் இதெல்லாம் எப்படி ஒழுங்கா நடக்கும்?''

""அதையெல்லாம் சரி செய்யத்தானே செப் டம்பர் 21-ந் தேதி முதல் அக்டோபர் 14-ந் தேதி வரை மாவட்ட வாரியா நிர்வாகிகள் கூட்டம் நடத்துற அறி விப்பு வெளியாகியிருக்குது. எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒலித்த குரல்களின் எதிரொலிதான் இந்த அறிவிப்பு. மாவட்ட, நகர, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் கலைஞரை சந்தித்து தங்கள் பகுதியில் கட்சி நிலவரத்தைச் சொல்லப்போறாங்க. 2006-ஆம் வருஷ எலெக்ஷனுக்கு முன்னாடி இப்படித்தான் தி.மு.க.வுக்குள் கோஷ்டிப் பூசல்கள் அதிகமா இருந்தது. கலைஞர் இதேபோல கூட்டம் நடத்தினார். லோக்கலில் யார் மேலே கோபமோ வருத்தமோ இருந்தாலும் தலைமைகிட்டே அப்படியே சொன் னாங்க. அதுவே அவங்களோட டென்ஷனை குறைச்சிடிச்சி. இனி தலைவர் பார்த்துக்குவார்ங்கிற தெம்போடு இரண்டு கோஷ்டிகளும் தேர்தல் களத்தில் தீவிரமா இறங்கி கட்சி வேலையை செய்ததால தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. இப்பவும் கோஷ்டிப் பூசல்களைத் தீர்ப்ப தற்கு இந்தக் கூட்டம் உதவும்னு நம்பப்படுது.''

""கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் கூட்டம் பற்றி?''

""அரசின் திட்டங்களை முடுக்கிவிடவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைக் கையாளவும் தான் இந்தக் கூட்டம். இலவச திட்டங்கள் எந்தளவு மக்களைப் போய்ச் சேர்ந்திருக்குது, இடைத்தரகர்கள் மூலம் ஏதாவது பிரச்சினைகள் வருதா, இன்னும் எங்கெங்கே இலவசத் திட்டங்கள் போய்ச்சேரலைங்கிறதையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி அதிகாரிகளை வேகப்படுத்துவதுதான் முதல்வரோட திட்டம். இதற்காக மாவட்ட வாரியாக அனைத்து புள்ளி விவரங்களையும் முன்கூட்டியே சேகரித்து வைத்து விட்டார் கலைஞர். அதிகாரிகள் தரப்பின் புள்ளி விவரங்களோடு ஒப்பிட்டு பார்த்து நடவடிக்கை இருக்கும் என்பதால், கூட்டத்துக்கு வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே கலெக்டர்களும் எஸ்.பிக்களும் பரீட்சைக்குப் படிக்கிற மாணவர்கள்போல ரெடியானாங்க.''

""கண்டன பொதுக்கூட்டம், கூட்டணி ஆலோசனைன்னு அ.தி.மு.க., தன் தேர்தல் வேலைகளை தொடங்கிட்டதா சொல்லப் படும் நிலையில், தி.மு.க.வும் தேர்தல் களத் தில் இறங்கிடிச்சி. ஆளுங்கட்சி ஒரு பக்கம் விறுவிறுப்பா வியூகம் வகுத்தால், எதிர்க் கட்சியும் அதிரடியா நிர்வாகிகள் கூட்டத் தைக் கூட்டி பரபரப்பை உண்டாக்குதே!''





""போயஸ்கார்டனில் அ.தி.மு.க மா.செ.க்களை அழைத்து ஜெ. நடத்திய ஆலோசனைகள் பற்றித்தானே சொல்றீங்க. தி.மு.க எம்.பிக்கள் கூட்டம் நடந்த அதே நாளில்தான் அவசர அவரமா எல்லா மா.செ.க்களையும் போன் போட்டு வரச்சொன்னார் ஜெ. எல்லாரும் பரபரக்க வந்து ஆஜரானாங்க. கிராமப்புறங்களில் கவனம் செலுத்தி தேர்தல் வேலை பார்க்க ணும்னு சொன்ன ஜெ., பூத் கமிட்டிகளை எல்லா இடத்திலும் அமைக்கும்படி கட்சிக் காரங்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார். கோவை, திருச்சி கூட்டத்தின் சி.டிகளை எல்லோருக்கும் கொடுத்து, ஊரெல்லாம் இதைப் போட்டுக் காட்டுங்கன்னு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கப்பட்டிருக்குது.''

""தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமா இருப்பதை தேசிய கட்சி களும் கவனிச்சிக்கிட்டிருக்குமே!''

""கவனிக்காமல் இருக்குமா.. டெல்லியின் மனநிலை எப்படி இருக்குன்னு நானும் நம்ம சோர்ஸ்கள் மூலம் கவனிச்சிக் கிட்டுத்தான் இருக்கேங்க தலைவரே.. ... கார்த்தி சிதம்பரத் துக்கு நெருக்கமான இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஒருத்தர் சமீபத்தில் ராகுல்காந்தியை சந்தித்திருக்கிறார். தி.மு.க.வுக்கு எதிரான விஷயங்களை அடுக்கிக்கொண்டே போக, எல்லா வற்றையும் ராகுல் கேட்டுக்கிட்டாராம். கடைசியில், தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமையணும்ங்கிறதுதான் என் னோட விருப்பம். அதற்கு கட்சியைப் பலப் படுத்தணும். அது சம்பந்தமான யோசனை இருந்தா சொல்லுங்க. இந்தத் தேர் தலைப் பொறுத்தவரை தி.மு.க.வோடு தான் கூட்டணின்னு முடிவாயிடிச்சி. அதில் எந்த மாற்றமும் கிடையாதுன்னு ராகுல் சொல்லியிருக்கிறார். டெல்லிக்குப் போய்த் திரும்பிய இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் இதை கார்த்தி சிதம்பரத்திடம் சொல்லியிருக்கிறார். அதற்கப்புறம் தான், கார்த்தியின் தி.மு.க. எதிர்ப்பு பேச்சு சுத்தமா குறைந்து போனதாம்.''

""ஓ...''

""ஆனா.. குலாம்நபி ஆசாத்தின் எச்சரிக்கை பேட்டிக் குப் பிறகும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பில் சூடு குறைஞ்சதா தெரியல. விஜயகாந்த்துக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக நேரில் போன இளங்கோவன், கேக் ஊட்டி விஜயகாந்த்தை வாழ்த்தினார். இதைப் பத்திரிகை காரங்க ஃபோட்டோ எடுத்தாங்க. இதுதான் பேப்பரிலே முக்கிய செய்தியா இருக்கப்போகுதுன்னு விஜயகாந்த் சொல்ல, ஆமாமா.. இதைப் பார்த்து கலைஞர் டென்ஷ னாவார். நல்லா ஆகட்டும்னு கமெண்ட் அடித்தாராம் இளங்கோவன். தன் ஆதரவாளர்கள்கிட்டே, மேலிட அறிவிப்புக்காக சும்மா கொஞ்ச நாள் அடக்கி வாசிப்போம். அதற்கப்புறம் வழக்கமான கச்சேரியை ஆரம்பிச்சிடவேண்டி யதுதான்னு சொல்லிக்கிட்டிருக்காராம். கூட்டணியை உறுதிப்படுத்தி ஆசாத் பேட்டி கொடுத்திருக்கிற நிலையில், இளங்கோவன் இனியும் அட்டாக்கில் இறங்குவதை அனு மதிக்கக்கூடாதுன்னு தி.மு.க. தரப்பு நினைக்குது. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய அழகிரி, காங்கிரசில் சிலர் ரொம்ப ஓவரா பேசிக்கிட்டிருக்காங்க. நாமும் அவங்களுக்குப் பதிலடி கொடுக்கணும்னு சொல்லியிருக்கிறார்.''

""காங்கிரசைப் பொறுத்தவரை பதிலடிகளைவிட உள்ளடிகள்தான் அதிகம். முன்னாள் அமைச்சர் சி.சுப்ரமணியத்தின் நூற் றாண்டுவிழா கோவையில் நடக்குது. ப.சிதம்பரம் முன்னின்று நடத்தும் இந்த விழாவில் சி.எஸ். உருவம் பொறித்த நாணயத்தை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிடுறார். இந்த விழாவுக்கு வருமாறு அழைத்தும், வியாழக்கிழமை இரவு வரை வாசன் ஓ.கே. சொல்லவேயில்லை. சி.எஸ். நூற்றாண்டு விழாவை ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியா கொண் டாடத் திட்டமிட்டிருக்குது.''

""சி.பி.எம்.மிலிருந்து நீக்கப்பட்ட கோவிந்தசாமி எம்.எல்.ஏ. முறைப்படி, தி.மு.க.வில் சேர்ந்துட்டாரே?''

""அறிவாலயத்தில் கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த கோவிந்தசாமியோடு திருப்பூர் ஏரியா வாசிகள் நிறைய பேர் வந்திருந்தாங்க. ஆனா, சி.பி.எம். தரப்போ கோவிந்த சாமியோடு வந்தவர்கள் யார், யார்னு ஒருவரை விடாமல் வாட்ச் பண்ணியதாகவும் அவர்களில் ஒரே ஒரு மாவட்டக் குழு உறுப்பினர், ஒரு கவுன்சிலர், டைஃபி தோழர் ஒருவரைத் தவிர வேறு யாரும் சி.பி.எம். நிர்வாகிகள் இல்லைன்னு சொல்லுது.''

""அரசியல் கணக்குகள் எப்போதுமே வித்தியாச மாகத்தான் இருக்கும்!''

""திருச்சிக்கு 15 நாளில் இரண்டாவது முறையாக ஜெ. விசிட் அடித்தது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பான பேச்சை உண்டாக்கியிருக்குது. வியாழக்கிழமையன்னைக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஜெ. கலந்துக்கிட்டார். என்ன காரணம்னு கோவில் வட்டாரத்தில் நான் விசாரித்து அறிந்த தகவலைச் சொல்றேன். இப்போதெல்லாம் ஜெ.வுக்கு கோபம் உச்சக்கட்டத்துக்குப் போகுதாம். கண்ட்ரோல் பண்ண முடியலையாம். அதைக் கட்டுப்படுத்தத்தான் ஸ்ரீரங்கத்தில் சிறப்பு பூஜை. இதற்காக கோவிலுக்குள் ஜெ. நடந்து வர வசதியாக ஸ்பெஷல் படிக்கட்டு ரெடி செய்யப் பட்டிருந்தது. நடந்து வந்தவர் ஓய்வெடுப்பதற்காக ஸ்பெஷல் நாற்காலியும் போடப்பட்டது. சாமி இருக்கும் மூலஸ்தானத்திற்கு நடந்து சென்றார் ஜெ. அங்கும் அவரது வசதிக்காக ஸ்பெஷல் சேர் போடப் பட்டது. ஜனாதிபதி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.கள் யாராக இருந்தாலும் மூலஸ்தானத்தில் நின்றபடி வழிபடுவார் கள். சிறப்பு பூஜை செய்ய வந்த ஜெ.வுக்கு சிறப்பு மரியாதையாக சேர் போடப்பட்டது.''

மிஸ்டுகால்!



தனது பிறந்தநாளை பெரியளவில் செலவு செய்து கொண்டாடிய இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் எஸ்.ஆர்.எம்.பச்ச முத்து, 46 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிப்பவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்று பேசியுள்ளார். பச்சமுத்துவின் பிறந்தநாளுக்கு விஜயகாந்த்தும், விஜயகாந்த் பிறந்தநாளுக்கு பச்சமுத்துவும் பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டது, மூன்றாவது அணி அமைப்பதற்கான முன்னோட்டம் என்கிறார்கள்.



இரண்டாவது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார் ரஜினி, கட்சி வேறுபாடு பார்க்காமல் கலைஞர், ஜெ., பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த விஜயகாந்த், திருமாவளவன், தா.பா. உள்பட பல தலைவர்களுக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தது போலவே, தனது பாபா படத்தை திரையிட விடாமல் தடுத்த பா.ம.க. வுக்கு இளைஞரணி பொறுப்பு வகிக்கும் அன்புமணியிடமும் நேரில் அழைப்பிதழ் கொடுத்தார். அப்போது அன்பு மணி, ""உங்களுக்கோ திரையுலகிற் கோ நாங்க எதிரிகள் கிடையாது. கருத்து ரீதியாகத்தான் எதிர்த்தோம்'' என்று சொல்ல ரஜினியும், ""நீங்களும் மத்திய அமைச்சரா சிறப்பா செயல்பட்டீங்க'' என்று பாராட்டியிருக்கிறார். இருவரும் 45 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

இப்படியும் ஒரு வாழ்க்கை! -மரணகானா விஜி



""கடவுள்களையும் காதல்களையும் புறக்கணித்து மரணத்தை மட்டுமே பாடுகிறேன், இதனைச் சொல்வதினால் பல பேருக்கு செரிமானம் ஆவதில்லை'' என்கிறார் மரண கானா விஜி.

"இன்றைக்கு இலக்கியம் என எழுதிக் குவிக் கப்படுகிற படைப்புகளை அப்புறப்படுத்தவோ அல்லது அதனை எழுதிய படைப்பாளிகளுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தவோ கூடியது விஜியின் அனுபவங்கள்' என்கிறது படைப்பாளிகள் உலகம்.

அந்தளவுக்கு இவர் சந்தித்த மரணங்களும் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களும் மனதை உலுக்குவதாக இருக்கின்றன.





மத்திய சென்னையின் பரபரப்பான பகுதி அது. அந்த ஏரியாவின் நெரிசல் மிகுந்த தெருக் களுக்கிடையே பத்துக்குப் பத்து அளவு கொண்ட அறையில் இருக்கிறது விஜியின் வாழ்க்கை. அவரை நாம் சந்தித்தபோது... பறை அடித்து மரணத்தைப் பற்றிப் பாடிவிட்டு, தன்னைப் பற்றி நம்மிடம் பேசினார் மரண கானா விஜி.

""என்னைப் பெத்தவங்க யாருன்னு எனக்குத் தெரியாது. எனக்கு நெனைவு தெரிஞ்ச நாள்ல இருந்து மெரினா பீச்சாண்டதான் விழுந்து கிடந் தேன். போலியோ அட்டாக் ஆன மாதிரி ரெண்டு காலும் சூம்பிப் போனதால நடக்க முடியாம ஒரே இடத்துல விழுந்து கெடப்பேன். என்ன பெத்தவங் களுக்கு என்ன கஷ்டமோ... பீச்சுல வீசி எறிஞ் சிட்டுப் போயிட்டாங்க. பொறந்த கொழந்தயா இருந்தப்பவே கெடாசிட்டாங்களா? இல்ல... மூணு, நாலு வயசானப்புறம் வீசினாங்களான்னு எனக்குத் தெரியலை. ஆனா எனக்கு நெனவு தெரிஞ்சப்ப பீச்சுலதான் நகர முடியாம கெடந்தேன்.

ஒருநாள் ஒரு அம்மா என்னப் பார்த்து "என்னடா தம்பி இங்கேயே கெடக்கிற? உன்னால நடக்க முடியாதா?'ன்னு கேட்டாங்க. என்கிட்டே பேசுன முதல் உறவு அவங்கதான். என்னோட நெலமையைப் பாத்துட்டு, ஒரு டீயும் பன்னும் வாங்கித் தந்தாங்க. அமிர்தமா இருந்துச்சு.

அவங்களுக்கு 25, 26 வயசு இருக்கும். குட்டையா, கறுப்பா இருந்தாங்க. நான் டீயைக் குடிச்சதும் "என் பேரு விஜி. என்னைக் கேட்டு நெறைய ஆம்பளைங்க வருவானுங்க. வந்தா... அதோ அங்கே இருக்கேன்னு சொல்லிவுடு'ன்னு சொன்னாங்க. அப்பதான் அவங்க விபச் சாரின்னு புரிஞ்சது. விஜி சொன்ன மாதிரி நெறய ஆம்பளைங்க வந்தானுங்க. நானும் சொல்லிவுட்டேன். நான் பார்த்த மொத தொழில்... இந்த மாமா வேலதான்.

நாலுபேருகிட்ட படுத்து எழுந்திரிச்சதாலே எனக்கு பால், டீ, பரோட்டான்னு வாங்கிக் கொடுக்கும் விஜி. அதுலதான் எப்படியோ உயிர் வாழ்ந்தேன். என்னால நடக்க முடியாததால... கொஞ்சம் காசு போட்டு ஒரு ஆசாரிக்கிட்ட சொல்லி நாலு வீலு வெச்ச ஒரு கட்டையை விஜி வாங்கிக் கொடுத்துச்சு. அதுல உட்கார்ந் துக்கிட்டு தரையை தேச்சுக்கிட்டுப் போவேன். எனக்குக் கெடச்ச மொத வாகனம் அதுதான்.

ஆளுங்க கெடைக்காதன்னைக்கு சீக்கிரமே என்கிட்டே வந்துடுவாங்க. செம மப்புல இருப்பாங்க. அவங்கள கட்டிப்புடிச்சுக்கிட்டு தூங்கு வேன். அந்த உஷ்ணம் எனக்கு ரொம்ப புடிச்சிருந் தது. இப்படியே நாட்களும் நகர, நானும் உயிர் வாழ்ந்துக்கிட்டு இருந்தேன், என்னை உயிருக்கு உயிரா பார்த்துக்கிட்ட விஜி... ஏரியாவ மாத்திட்டா போல. மூணு நாளு, நாலு நாளு கழிச்சி ஒருமுறை மெரினா பீச்சாண்ட வருவாங்க. வரும்போது ஏதாச்சும் எனக்கு வாங்கிட்டு வரும்.

"எங்கே விஜி போனே'ன்னு கேட்டேன். "இப்பல்லாம் தொழில் பண்ண முடியலடா. அடிக்கடி காய்ச்சல், இருமல்னு வருது. ஆஸ்பத்திரியாண்ட போயிட்டு வந் தேண்டா'ன்னு சொல்லும். அப்புறம் ஒருநா ராத்திரி 12 மணிக்கு வந்த விஜி... "என்னால முடியல. நான் படுத்துக் கிறேன். என் கூடவே இரு'ன்னு சொல்லி அப்படியே படுத்துக்கிட்டாங்க. ஒரு கோணி எடுத்து போர்த்தி விட்டுட்டு அதுக்குள்ளே நானும் புகுந்துக்கிட்டேன். காலைல எழுந்து பார்த்தா... ராத்திரி எப்டி கெடந்தாங்களோ... அப்படியே கெடந்தாங்க விஜி.

"விஜி... விஜி'ன்னு சத்தம் போட்டு, அடிச்சி, உதைச்சி, எழுப்புனேன். எழுந்திருக்கவே இல்ல. நான் சத்தம் போடுறதைப் பார்த்துட்டு வாக்கிங் போனவங்க, "டேய்... அவ செத்துப் போயிட்டாடா'ன்னு சொல்ல... செத்துப் போயிட்டாங்கன்னா... என்னன்னு தெரியாம முழிச்சேன்.

விஜி பக்கத்துல உட்கார்ந்து அழுதுகிட்டே இருந்தேன். அதுதான் என்னால செய்ய முடிஞ்சது. போற வர்ற மனுஷங்கள்லாம் பார்த்துக்கிட்டே போனாங்களே தவிர... எதையும் செய்யல. இப்படியே ரொம்ப நேரம் கடந்து போச்சு. காக்கா, ஈ, எறும்புன்னு எல்லாம் எங்களச் சுத்திச் சுத்தி வந்ததுங்க.

அப்போஅந்த வழியா போய்க்கிட்டிருந்த ஒரு குப்பை வண்டி எங்ககிட்டே வந்து, "யார்ரா இவ... உங்க ஆத்தாளா?'ன்னு கேட்டுட்டு, எதைப்பத்தியும் யோசிக்காம என்னைத் தூக்கி ஓரமாவும், விஜியைத் தூக்கி குப்பை வண்டியிலயும் போட்டுட்டுக் கிளம்பிப் போனது.

எனக்கிருந்த ஒரு உறவும் போயிடுச்சு. இனி விஜி வரமாட்டான்னு தோணுச்சு. இனி யார் பரோட்டாவும் பன்னும் வாங்கித் தருவாங்கிற ஏக்கம். செத்துப் போய்ட்டாளாமே செத்துப் போயிட்டாளாமேங்கிறது மட்டும் எனக்குள் கேட்டுக்கிட்டு இருந்துச்சு.

விஜி, என்ன மொதமொத பார்த்த இடத்துலயே போய் உட்கார்ந்துக்கிட்டேன். எத்ன நாள் அப்படியே இருந் தேன்னு தெரியாது. ஆனா, அங்கேயேதான் கெடந்தேன். விஜியை தெரிஞ்சவன்னும், விஜியோட இருந்த பையன், விஜியோட இருந்த பையன்னு பரிதாபப்பட்டாங்க. ஒரு கட்டத்துல விஜி... விஜி...ன்னு என்னை கூப்பிட, அதுவே என் பேரா ஆயிடுச்சு'' என்று தனக்குப் பெயர் வந்த காரணத்தையும் தான் சந்தித்த முதல் மரணத்தையும் யதார்த்தமாக விவரித்தார் விஜி.

தொடர்ந்து பேசியவர் ""பீச்சாண்ட குப்பைப் பொறுக்கிற பையன் பாபு ஒருநாள் எனக்கு அறி முகமானான். என்கிட்டே வந்து, "உன்ன ரொம்ப நாளா பார்க்கிறேன். இங்கேயே கெடக்கிறியே... உனக்கு அப்பா, அம்மால்லாம் இல்லையான்னு கேட்டான். தெரியலைடான்னு சொன்னேன். உடனே அவன் "சரிடா மச்சான், இனி உனக்கு நான் இருக்கேன்டா'ன்னு சொல்லி கட்டிப் பிடிச்சிக்கிட்டான். எனக்கு கெடச்ச ரெண்டாவது உறவு பாபு.

அவன்ட்ட உனக்கு அப்பா, அம்மா இருக் காங்களாடா மச்சான்னு நான் கேட்க, "அப்பா இருக்கானான்னு தெரியலைடா, அம்மா இருக்கா. கொய்யாக்கா வித்துக்கிட்டு இருக்கா. ராத்திரி யானா தண்ணி அடிப்பா. அதோ தெரியுதே... அந்த கட்டுமரத்துக்குப் பின்னால படுத்துக் கெடப்பா. நிறைய பேரு அவகிட்டே வந்துட்டுப் போவா னுங்க' என்றான். அப்போ எனக்கும் சின்ன வயசுதான்னாலும் பாபு சொன்னதை காது கொடுத்து கேட்க முடியலை. விஜி மாதிரி பாபுவோட அம்மாவும் விபச்சாரின்னு நெனச்சிக் கிட்டேன். பாபுவை பாவமா பார்த்தேன்.

பாபு, குப்பை பொறுக்கிறது எனக்குத் தெரியும்ங்கிறதால நானும் பீச்சுல கெடக்கிற பீர் பாட்டில், பிராந்தி பாட்டில் களை பொறுக்கி வெச்சிருப்பேன். இந்த பாட்டில்களையும் பேப்பரையும் வித்துட்டு அதுல கெடைக்கிற காசுல இட்லி, கிட்லி வாங்கிட்டு வருவான். ரெண்டுபேரும் சாப்பிடுவோம். பிளாட்ஃபார்ம்ல படுத்துக்குவோம்.

இப்படிக் கெடைக்கிற காசுல அப்பப்போ கஞ்சா பொட்டலம் வாங்கி வருவான் பாபு. ராத்திரி நேரத்துல இத ஒரு வலி, வலிடான்னு கொடுப்பான். நானும் வலிப்பேன். அப்படி யே ஆகாயத்துல பறக்குற மாதிரி இருக்கும். எழுந்து ஓடலா மான்னு தெம்பு வரும். அவ்வளவு சக்தி இருந்துச்சு கஞ்சாவுக்கு.

ஒருநா கஞ்சாவ நல்லா வலிச்சுட்டு ரொம்ப நேரம் தூங்கிட்டோம். வெயிலு சுள்ளுன்னு அடிச்சதும் அந்தச் சூட் டுல எழுந்திருச்சோம். பீச்சுல தூரத்துல கூட்டமா இருந்துச்சு. அங்கே ஏதோ கூட்டமா இருக்கு. வாடா போய் பார்ப்போம்னு சொல்லிக்கிட்டே, என் கட்டை வண்டியில கயிற கட்டி இழுத்துக்கிட்டுப் போனான் பாபு.

கூட்டத்துக்கிட்டே போய் கூட்டத்தை வெலக்கி எட்டிப் பார்த்தோம். ஒரு பொம்பளை முகம் மண்ணுக்குள்ள புதைஞ்சு இருந்தது. அதப் பார்த்ததும் "டேய்... அவ எங்கம்மாடா'ன்னு கத்திக்கிட்டே போய் அவளை எழுப்பினான். ஆனா எழுந்திரிக்க வே இல்லே. "ஏய்... காலையிலேயே தண்ணி அடிச்சிட்டியா? எழுந்திரி... எழுந்திரி...'ன்னு கத்தினான் பாபு. அப்போ அங்கி ருந்தவங்க "உங்கம்மா செத்துப் போயிடுச்சுடா... எவனோ அடிச் சுப் போட்டுட்டுப் போயிட்டான்'னு சொன்னாங்க. செத்து போயிட்டாளா? நாங்க என்ன பண்றதுன்னு பாபு கேட்க... கூடி யிருந்தவங்க எல்லாரும் அவங்ககிட்ட இருந்த காசை எடுத்துப் போட்டுட்டுக் கிளம்பிப் போனாங்க. அந்த காசையெல் லாம் பொறுக்கி எடுத்துக்கிட்டு "வாடா மச்சான் போகலாம். நல்ல ஓட்டலா பார்த்து சாப்பிடலாம்'னு சொல்லிட்டு என்னை கூட்டிட்டுப் போனான்.

ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டு வெளியே வந்தோம். எங்களைக் கடந்து ஒரு குப்பை லாரி போனது. அதுல பாபுவோட அம்மா. அத அவன்கிட்டே காட்டினப் போ, "ஆமாடா... அவ எங்க அம்மாதான். நாம என்னடா பண்ண முடியும்?'னு சாதாரணமா சொன்னான். அவன் அப்படிச் சொன் னதும் அந்த மரணமும் என்னை ஏதோ பண்ணிடுச்சு. நாமளும் இப்படித்தான் செத்துப் போவோமான்னு நெனைப்பு வந்துச்சு. ரொம்ப நாளைக்குப் பெறகு அன்னிக்கு நான் அழுதேன்''.

(தொடரும்)

யுத்தம் 83 நக்கீரன் கோபால்


அருப்புக்கோட்டை வீடு. நள்ளிரவு நேரம். கதவு தட்டப்படுகிறது. அப்போதுதான் கண் அயர்ந்திருந்தார் அம்மா. தூக்கம் கலைந்து எழுந்து வந்து கதவைத் திறக்கிறார்.

""ராமநாதன் இருக்காரா?''

""நீங்க யாரு... இந்த நேரத்திலே?''

-விசாரித்தபடியே உற்றுப் பார்க்கிறார் அம்மா. காக்கிச் சட்டை போட்டவர்கள் நிற்கிறார்கள். இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலனும் தலைமை தாங்க, ஒரு போலீஸ்படை அந்த நள்ளிரவு நேரத்தில் வீட்டை முற்றுகையிட்டிருந்தது.

பேச்சு சத்தம் கேட்டு அப்பா எழுந்து வர்றாங்க.

""என்ன சார், இந்த நேரத்திலே?'' -அப்பா கேட்டதும், கொஞ்சம் விசாரிக்கணும் என்று போலீசிடமிருந்து பதில் வருகிறது.

""இந்த நேரத்திலா? எதற்காக விசாரணை'' என்று அப்பா யோசித்தபடி நிற்கிறாங்க.

உங்க பையன்தானே நக்கீரன்கோபால்.. அவரைப் பற்றி சில விவரங்கள் எங்களுக்கு வேணும். அதனாலதான் விசாரிக்க வந்திருக்கோம்.

அப்போது மிட்நைட் மசாலா ஆட்சி நடந்துகொண்டிருந்த நேரம். முன்னாள் முதல்வரை கைது செய்வது என்றாலும் நள்ளிரவில்தான். அரசு ஊழியர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது என்றாலும் நள்ளிரவில்தான். கண்ணகி சிலையை கடற்கரையிலிருந்து தூக்குவது என்றாலும் நள்ளிரவில்தான். சட்டப்படி நடக்கிற விஷயமாக இருந்தால் பகலில் செய்யலாம். எல்லாமே, சட்டத்திற்கு விரோதமானதுதானே.. அதனால் நடுராத்திரியில்தான் கைது, விசாரணை, சிறையடைப்பு எல்லாமே நடந்து கொண்டிருந்தது. என்னைப் பற்றி விசாரிப்பதற்காக அருப்புக்கோட்டை வீட்டுக்கு போலீசார் போனதும் நடுராத்திரியில்தான்.

எதிரியாகவே இருந்தாலும் வீடு தேடி வந்துவிட் டால் அவர்களை உரிய மரியாதையோடு நடத்துவதுதான் தமிழ்நாட்டு வழக்கம். அதுவும், அருப்புக்கோட்டை போன்ற வளர்ந்து வரும் ஊர்களில் இன்னும் நம் பண்பாடு அப்படியே இருப்பதால், விசாரிக்க வந்த போலீசாரை வீட்டுக்குள் அழைச்சாங்க அப்பா.

""என் மகனைப் பற்றி உங்களுக்கு என்ன தகவல் வேணும்?'' -அப்பாவின் குரல் உறுதியாகவே ஒலித்தது.

""உங்க பையன் பிறந்தது இந்த ஊரில்தானா?''

""ஆமா..''

""படிச்சது?''

""இங்கேதான்..''

""பள்ளிக்கூடம் இங்கேதான் இருக்குதா?''

""ஆமா..''

""காலேஜ் போனாரா?''

""ஆமா.. பி.காம் படிச்சிருக்கான்''- அப்பாவுக்கு அதில் பெருமிதம்.

""காலேஜ் எங்கே இருக்கு?''

""அதுவும் இங்கேதான்.''

""உங்க பையன் சிலோனுக்குப் போயிருக்காரா?''

""எதுக்கு கேட்குறீங்க?''

""கேட்குறதுக்கு பதில் சொல்லணும். குறுக்கு கேள்வி கேட்கக்கூடாது''-இன்ஸ்பெக்டரின் குரல் அதிர்ந்தது. அப்பா அதற்கெல்லாம் மிரளவில்லை.

அவன் படிக்கிறப்ப, ஹாக்கி விளையாட ஒவ்வொரு ஊருக்கு போவான். அவன் எங்கே சிலோனுக்குப் போனான்?

""எதற்காக சென்னைக்குப் போனாரு?''

""பொழைப்புக்காகத்தான்.''

""என்ன வேலை?''

பத்திரிகையிலதான் வேலை. அவன் நல்லா படம் போடுவான்.

""எப்ப கல்யாணம் ஆச்சு? எத்தனை குழந்தைங்க? இது உங்க சொந்த வீடா? உங்க பையனுக்கு மெட்ராஸில சொந்த வீடு இருக்குதா?''

-போலீசார் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்கள். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தாங்க அப்பா. ஒரு சில கேள்வி களுக்கு அம்மா விருட்டென பதில் சொல்லியிருக்கிறாங்க. ஏதாவது ஒரு பொறி வைத்துப் பிடிக்கமுடியுமா என்று கோபியில் 10 நாள் என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்த போலீசுக்கு எந்தப் பிடிமானமும் கிடைக்கவில்லை. அதனால், இப்போது அடுத்தகட்டமாக பொறி வைக்க ஆரம்பித்தார்கள். அதன் ஒரு கட்டம்தான், அருப்புக்கோட்டை வீட்டில் நள்ளிரவில் நடந்த விசாரணை.

கதவைத் தட்டி விசாரணை நடத்தி விட்டு போலீசார் போனபிறகு, அப்பா எனக்கு போன் செய்து விவரத்தைச் சொல்ல...

""எதுக்காக இந்த நேரத்திலே வந் தாங்கன்னு தெரியலைப்பா... நீ கவனமா இரு''ன்னு சொன்னாங்க.
எனக்கு உறக்கம் போய்விட்டது. எதற் காக போலீஸ்காரங்க இன்னொரு ரவுண்டை ஆரம்பிச்சிருக்காங்க? பழைய கேஸ்களிலேயே ஏதாவது எவிடென்ஸ் தேடுறாங்களா.. இல் லைன்னா புதுசா ஏதாவது பொய்வழக்கு போடுறாங்களா என்பதுதான் புரியாமல் இருந்தது. பிறப்பு, படிப்பு, வேலைன்னு அப்பா கிட்டே விசாரித்த போலீசார் திடீர்னு நான் சிலோனுக்குப் போனேனான்னு ஏன் விசா ரிக்கணும்? மனதுக்குள் பலவிதமான கேள்விகள்.

2002-ஆம் ஆண்டு. டிசம்பர் 20-ம் தேதி.

நான் ஒரு வழக்கிற்காக கோபிக்கு செல்ல வேண்டியிருந்தது. ரயில் பயணம் தான். ஈரோடு போய் தங்கி, அட்வகேட் டிடம் ஆலோசனை நடத்திவிட்டு கோபி நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டும். அன் றைக்கு ட்ரெயின் லேட். காலை பத்தரை மணிக்குத்தான் ஈரோட்டில் இறங்குகிறேன். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியே வரும்போது, யாரோ ஒரு ஆள் என்னைப் பின்தொடர்வதுபோல இருந்தது. மெல்ல நோட்டம் விட்டேன். அந்த நபரின் உயரமும் முடிவெட்டும் தோரணையும் போலீஸ்தான் என்பதை அடையாளம் காட்டிவிட்டது. ஆனால், அவர் மஃப்டியில்தான் இருந்தார்.

ரயில்வே ஸ்டேஷனில் என்னை அவர் ஃபாலோ செய்வதை கண்டுகொள்ளாதது போல இருந்தேன். ஈரோட்டில் வழக்கமாக ஆக்ஸ்ஃபோர்டு லாட்ஜில் தங்குவதுதான் வழக்கம். அன்றைக்கும் அங்கேதான் போய்க் கொண்டிருந்தேன். தம்பி ஜீவாவும், டிரைவர் மோகனும், குண்டு பூபதியும், முகவர் பெரியசாமியும் உடன் வந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அட்வகேட் ப.பா.மோகன் வந்துவிடுவார். லாட்ஜ் வரவேற்பறையில் நிற்கும்போது, மறுபடியும் அதே நபரை பார்க்கிறேன்.

என்னைப் பார்க்காதது போல எங் கேயோ பார்த்துக்கொண்டிருந்தார். ரயில்வே ஸ்டேஷனிலிருந்தே என்னை ஃபாலோ செய்து வந்திருப்பது தெரிந்தது. என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றேன்.

ரூமுக்குள் நுழைந்த வேகத்தில் சடாரென வெளியே வந்தேன். எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்த அதே ஃப்ளோரில் என் அறைக்கு எதிர் அறை முன் நின்று கொண்டிருந்தார் அந்த நபர். நான் இப்படி சட்டென வெளியே வருவேன் என்பதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். என்ன செய்வதென்று தெரியாமல், எதிர்ப்பக்க அறை யின் காலிங் பெல்லை அழுத்துவது போல போஸ் கொடுத்தார். என் ரூம் கதவை மூடி விட்டு உள்ளே போனேன். ஒரு நிமிடம் கூட ஆகவில்லை. மறுபடியும் டக்கெனக் கதவைத் திறந்து பார்த்தேன். இப்போதும் என்னைப் பார்த்துவிட்டு, அந்த நபர் மீண்டும் காலிங் பெல்லை அடிப்பதுபோல போஸ் கொடுத்தார்.

அவர் ரொம்ப நேரம் நடிப்பதற்கு நான் இடம் கொடுக்கவில்லை. நேருக்கு நேராக, "யார் நீங்க... உங்களுக்கு யார் வேணும்?' என்றேன்.

""சா.. சா.. சார்...'' என ஆரம்பத்தில் கொஞ்சம் தயங் கிய அந்த நபர், அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டார். ஒரு பெயரைச்சொல்லி, அந்தப் பெயரில் சென்னை பெரியமேட்டில் எக்ஸ்போர்ட் கம்பெனி இருப்பதாகவும், அதில் டிரைவர் வேலை பார்ப்பதாகவும் தயக்கமேயில்லாமல் பொய்யை அடுக்கிக் கொண்டு போனார். போலீசிற்கு எந்தளவு ட்ரெயினிங் கொடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அடுத்த நிமிடமே, நமது முகவரைக் கூப்பிட் டேன்."நான் நேரா கோபி கோர்ட்டுக்கு கிளம்புறேன். அங்கேயிருந்து சென்னைக்கு நேரடியா புறப்பட்டுடு வேன். நீங்க லாட்ஜை காலி பண்ணிடுங்க' என்று சொல்லிவிட்டு கோபிக்குப் பயணமானேன்.

டிசம்பர் 23.

கோவை குரும்பலூரில் உள்ள யுனைடெட் ஊனமுற்றோருக்கான பள்ளியில் ஒரு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன். கோவையிலிருந்து புறப்பட்டு குரும்பலூருக்குப் போகிறவரை போலீசார் என்னை ஃபாலோ செய்துகொண்டே இருந்தார்கள். யுனைடெட் பள்ளிக்குள் நான் சென்றதும், வெளியி லேயே போலீஸ் படை காத்திருந்தது.

ஊனமுற்ற பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் நண்பர் ராதாகிருஷ்ணனால் நடத்தப்படுகிற கல்வி நிறுவனம் என்பதால், கடுமையான வழக்கு நெருக்கடிகளுக்கிடை யிலும் அந்த விழாவில் மனமுவந்து நான் கலந்துகொண் டேன். 3 மணி நேரத்திற்கும் மேலாக விழா போய்க் கொண்டிருந்தது. விழா முடிந்து, வெளியே வந்து என் காரில் கிளம்புகிறேன். அப்போதும் போலீஸ் அங்கேயே நோட்டம் விட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது.

என் வாகனம் வெளியேறுவதைப் பார்த்ததுமே, போலீஸ் டீம் ஒன்று சரசரவென அந்தப் பள்ளிக்குள் நுழைந்தது. "நக்கீரன் கோபால் இங்கே ஏன் வந்தார்? எதற்கு வந்தார்? அவரோடு உங்க நிர்வாகத்துக்கு என்ன தொடர்பு?' எனப் போலீஸ் டீம் அந்த பள்ளி நிர்வாகத் தை குடைய, போன் லைனில் வந்த டி.எஸ்.பி.யும் சகட்டுமேனிக்கு மிரட்டியிருக்கிறார். என் முதுகில் போலீசார் தங்கள் கண்களைப் பதித்து, ஃபாலோ செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகவே புரிந்தது.

டிசம்பர் 25. கிறிஸ்துமஸ் தினம். அலுவலகத்தில் உள்ள கிறிஸ்தவ தம்பிகளான ஃபிரான்சிஸ், பெருசு சுந்தர், உதயன், சந்திரமோகன், ஆடிட்டர் மோரீஸ் எல் லோரும் கேக்கும் கையுமாக என் அறைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்கள். தம்பி காமராஜ் வந்தார். அவர் கையில்... .. கத்தையாக காகிதங்கள். அதில் இருந்த ஆபத்து...?

-யுத்தம் தொடரும்

இப்படியும் கூட மோசடிகள் பண்ணமுடியுமா?



இப்படியும் கூட மோசடிகள் பண்ணமுடியுமா? என திகைத்து திகிலடிக்க வைக்கிறார்கள்... சிதம் பரத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்புச் சகோதரர் களான அந்த மும்மூர்த்திகள்.

பி.வாசுவின் மகனான ஷக்தி மற்றும் சந்தியா ஆகியோரை வைத்து ’"மகேஷ் சரண்யா மற்றும் பலர்'’ என்ற படத்தையும்... பரத், பிரியாமணியை வைத்து "ஆறுமுகம்'’படத்தையும் புதுமுகங்களைக் கொண்டு "புடிச்சிருக்கு'’ என்ற படத்தையும்... தங்கள் ’கூல் புரொடக்ஷன்ஸ்’ மூலம் எடுத்தவர்கள்... சிதம்பரத்தைச் சேர்ந்த மும்மூர்த்திகள். அதாவது... மீனாட்சிசுந்தரம், செண்பக குமார், முத்தரசு ஆகிய உடன்பிறந்த சகோதரர்கள்தான் இந்த மும்மூர்த்திகள்.

இவர்கள் மேற்கண்ட படங்களை எப்படி எடுத்தார்கள்?

இந்தக் கேள்வியின் பின் னணியில்... துபாய்க்கு வேலை தேடிப்போன நம் தமிழகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அப்பாவிகளின் வேதனை மிகுந்த கண்ணீர்க் கதை இருக்கிறது.

நம்மை சார்ஜாவில் இருந்து முதலில் தொடர்புகொண்டவர்... ஜெயராமன். பேச வேண்டிய அவர் பேச முடியாமல் தேம்பித் தேம்பி அழ... அவருக்கு பதில் ரிசீவரில் வந்தார் ராமசாமி. அவரிடமும் அழுகை கலந்த குரல்தான் வெளிப் பட்டது.

""ஐயா... அந்த சிதம்பரம் சகோதரர்களை நம்பி துபாய்க்கு வேலைக்காக வந்தோம். இப்ப சோத்துக்குக் கூட வழியில்லாமல், துபாய் மக்கள் ரோட்டோரம் வீசும் வெற்று குளிர்பான டப்பாக்களைப் பொறுக்கி விற்று... அரைகுறையா சாப்பிட்டு உயிரைக் கையில் பிடிச்சிக்கிட்டு இருக்கோம். தமிழ்நாட்டுக்குத் திரும்ப முடியுமா? எங்க பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்க்க முடியுமா? இல்ல.... இங்கேயே எங்க ஆயுள் முடிஞ் சிடுமான்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருக்கோம். எங்க துயர நிலையை நக்கீரன்தான் வெளியே கொண்டுவந்து.. எங்களை மீட்க உதவணும்''’என தங்கள் நிலையைச் சொன்னார் தேம்பலோடு வேலை தேடித் துபாய் போன இவர்களுக்கெல்லாம் என்ன ஆனது?

""அந்த சிதம்பரம் சகோதரர்கள் சார்ஜாவில் ஒரு கட்டடத்தைப் பிடிச்சி அதில் மிஸ்கோ மரைன் சர்வீஸ் என்ற பெயரில் ஒரு மேன்பவர் கம்பெனியைத் தொடங்கினாங்க. வெல்டர், பிட்டர், என்ஜினியர்னு தமிழ்நாட் டில் அவங்க ஆள் எடுக்க... இவங்களை நம்பி... கடன்பட்டு பாஸ் போட், விசா எடுத்து லட்சக்கணக்கில் பணம் கட்டி.. இங்க வேலைக்கு வந்தோம். அப்படி வேலைக்கு வந்த எங்களின் பேரில் எங்களுக்கே தெரியாம சார்ஜாவில் இருக்கும் வங்கிகள்ல கோடிக் கணக்கில் கடன்வாங்கி... தமிழ்நாட்டில் முதலீடு போட்டு படம் எடுத்தாங்க. இதெல் லாம் எங்களுக்குத் தெரியாது. கடன்கொடுத்த வங்கிக்காரங்க எங்களைத் தேடிவந்தப்ப தான் இது எங்களுக்குத் தெரிஞ்சிது. அதிர்ந்துபோய்ட்டோம். எங்களைத் துரத்த ஆரம்பிச்ச வங்கிக்காரங்களுக்கு பயந்து.... இப்ப தலைமறைவா இங்க வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். எங்க பெயர்கள்ல அவங்க சார்ஜா வங்கிகள்ல வாங்கிய கடன்மட்டும் 80 கோடிக்கு மேலாம்''’ என்றார்கள் அவர்கள் பதட்டமாய்.

ஜெயராமனின் அனுபவம் இது. ""எனக்கு சொந்த ஊர் திருச்சி மாவட்டம் வந்தலைக் கூடலூர். எனக்கு விஜயகுமாரின்னு மனைவி யும் ரெண்டு பிள்ளைகளும் இருக்காங்க. புள்ளம்பாடியில் தையல் கடைவச்சேன். அதிகமா சம்பாதிக்க முடியலை. அப்பதான் வெளி நாட்டுக்குப் போனா நல்லா சம்பாதிக்கலா மேன்னு கடனை வாங்கி ஏஜெண்டான அனுந் தலைப்பூர் மகேஷ் மூலம் இங்க வந்தேன். இந்த மூவர் டீம் நடத்திய கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். கொடுத்த சம்பளத் தையும் 2008-ல் இவங்க நிறுத்திட்டாங்க. சரி சம்பளமே வேணாம். எங்களை ஊருக்கு அனுப்பிடுங்கன்னு கேட்டோம். பார்க்கலாம்னு சொன்ன முத்தரசும் மீனாட்சிசுந்தரமும் தமிழ்நாட்டுக்கு பெரும் பணத்தோட ஓடிவந்துட்டாங்க. அப்புறம்தான் தெரிஞ்சிது என் பேர்ல அவங்க 90 லட்ச ரூபாயை இங்க இருக்கும் வங்கியில் கடன்வாங்கிய விசயமே.


இதனால் வெளியேயும் தலைகாட்ட முடியாம... ஊருக்கும் திரும்பமுடியாம தவிச்சிக் கிட்டு இருக்கேன்''’என்கிறார் துக்கம் தொண் டையை அடைக்க.

திருவாரூர் மாவட்டம் பில்லூர் முருகனோ ‘""எனக்கு ஒரு அண்ணன், 5 சகோதரிகள். அப்பா ரொம்ப வருசத்துக்கு முன்னயே இறந்து போயிட்டார். வயசான அம்மாதான் குடும் பத்தைத் தாங்கறாங்க. குடும்பத்தைத் தூக்கி நிறுத்தணும்னு இங்க வேலைக்கு வந்தேன். என் பேரிலும் அந்த மோசடி முதலாளிகள் லட்சக் கணக்கில் கடன் வாங்கியிருக்காங்களாம். என்ன பண்றதுன்னே தெரியலைங்க''’என்றார் துயரத் தோடு.





தூத்துக்குடி காளியப்பர் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணனோ ""2005-ல் இங்க வேலைக்கு வந்தேன். ஆரம்பத்தில் 8 ஆயிரம் ரூபா சம்பளம் கொடுத்தாங்க... என் செலவு போக 5 ஆயிரம் ரூபா வீதம் வீட்டுக்கு அனுப்பிக்கிட்டு இருந்தேன். சம்பளத்தை இனி நேரா வங்கிகள்ல எடுத்துக்கலாம்னு சொல்லி என்னென்னவோ டாக்குமெண்டுகளில் என்னிடம் கையெழுத்து வாங்கினாங்க. அப்புறம்தான் தெரிஞ்சிது யு.ஏ.இ. வங்கியில் என்பேர்ல அவங்க 50 லட்சம் கடன்வாங்கியது.

அந்த பேங்க் ஏஜெண்டுகள் தூத்துக்குடியில் இருக்கும் என் வீட்டில்போய் சத்தம் போட்டி ருக்காங்க. இது சம்பந்தமா இந்திய தூதரகத்தில் முறை யிட்டோம். வெளியுறவு அமைச்சர் வயலார் ரவிக்கு புகார் அனுப்பினோம். ஒரு நடவடிக்கையும் இல்லைங்க''’என்றார் அழுகை பிதுங்கும் குரலில்..

இவர்களைப் போலவே இந்த மூவர் டீமினால் சிக்கலை சந்தித்திருக்கும் பெரம்பலூர் மாவட்ட ஒதியம் ராமசாமி ‘""மூவர் டீமில் மீனாட்சிந்தரமும் முத்தரசும் தமிழ்நாட்டுக்குத் தப்பி ஓடிட்டாங்க. இங்க இருந்த செண்பக குமாரையும் அவர் அண்ணன் மகன் கார்த்திகேயனையும் துபாய் போலீஸ் பிடிச்சி ஜெயில்ல அடைச்சிடிச்சி. அவங்க எப்படியோ போய்த்தொலையட்டும். என் மனைவி பரமேஸ்வரியும் என் மூணு பொம்பளைப் பிள்ளைகளும் எப்படி இருக்காங்கன்னு கூடத் தெரியலை. அவங்க அங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்க.. நான்... தமிழகம் திரும்ப முடியுமான்னு தெரியாம இங்க தவிச்சிக்கிட்டு இருக்கேன்'' என்றபடி அழுதார்.

சார்ஜாவில் சிறைப்பட்டிருக்கும் தமிழர்களின் குடும்பங்கள் இங்கே எப்படி இருக்கின்றன என அறிய முதலில் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் இருக்கும் ராமசாமியின் வீட்டுக்குச் சென்றோம்.

அங்கிருந்த ராமசாமியின் மனைவி பரமேஸ்வரியை சந்தித்தோம். ""சம்பாரிக்கப்போன என் வீட்டுக்காரரின் நிலைமையைப் பார்த் தீங்களா?''’ என்று கதறியழ ஆரம்பித்துவிட்டார். அவரை ஆசுவாசப்படுத்திப் பேச வைத்தபோது “""என் மூணு பொம்பளைப் பிள்ளைகளையும் கரை ஏத்தணும் என்பதற்காகத்தான் அவர் சார்ஜாவுக்குப் போனார். ஆனா அவர் பேர்ல அவர் வேலை பார்த்த கம்பெனி ஓனருங்க 70 லட்ச ரூபா கடன் வாங்கியிருக்காங்களாம். சார்ஜாவில் இருக்கும் வங்கியின் தமிழக ஏஜெண்டுகள் பணத்தை ஒழுங்கா திருப்பிக் கட்டிடுங்கன்னு எங்களை வந்து மிரட்டிட்டுப் போறாங்க. வாடகை வீட்டில் கஷ்ட ஜீவனம் பண்ணும் நாங்க எப்படி இந்தக் கடனை அடைப்போம்?. 100 நாள் வேலை திட்டத்தாலும் ஒரு ரூபா அரிசியாலும்தான் நாங்க இப்ப உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். எங்களை தமிழக அரசுதான் இந்த மோசடிக் கடன்கள்ல இருந்து மீட்கணும். இல்லைன்னா என் பிள்ளைகளோட நான் தற்கொலைதான் பண்ணிக்கணும்''’என்றார் அழுதபடியே.

பாடாலூரில் இருக்கும் ஜெயராமனின் வீட்டுக்கும் சென்றோம். அங்கிருந்த அவரது மனைவி விஜயகுமாரியோ, ""எங்க பொண்ணு டென்த்தில் 500-க்கு 465 மார்க் வாங்கியிருக்கா. அவளை மேல படிக்கவைக்க முடியாமத் திண்டாடிக்கிட்டு இருக்கேன். என் வீட்டுக்காரர் பேர்ல சார்ஜாவில் 90 லட்சம் கடன் வாங்கப்பட்டு இருப்பதா அந்த வங்கி ஏஜெண்டுகள் ரெண்டுதடவை இங்க வந்து மிரட்டிட்டுப்போனாங்க. ஒரே திகிலா இருக்கு. என் வீட்டுக்காரர் நல்லவிதமா உயிரோட திரும்பி வந்தாலே போதும்ங்க. அதான் என்னோட பிரார்த்தனை. அதுக்கு அரசாங்கம்தான் உதவணும்''’என்று கைகூப்பினார்.

பிழைக்க வந்த ஆட்களின் பேரில் கோடிக் கணக்கில் கடன்வாங்கி... அந்தப் பணத்தில் சென்னையில் சினிமாப் படம் எடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில்.... மன்மதக் கூத்து நடத்தி ஆட்டம் போட்டிருக்கிறதாம் இந்த மூவரணி. இது தவிர செண்பககுமார்... இந்த அப்பாவிகளின் பணத்தில் கேரளாவிலும் தமிழகத்திலும் இருக்கும் தன் இரண்டு மனைவிகளுக்கும் ஆடம்பர பங்களாக் களுடன் நவீனரக கார்களையும் வாங்கிக் கொடுத் திருக்கிறாராம். இது தவிர பெங்களூரில் இருந்து சார்ஜாவுக்கு வேலைதேடிவந்த இளம்பெண் சமந்தாவையும் செட்டப்பாக வைத்துக்கொண்டு... ஆடம்பரமாக வாழ்ந்திருக் கிறார் செண்பககுமார்.

இந்த மூவரணியின் கருத்தறிய முத்தரசுவின் 9443361111 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோம். எதிர் முனைக் குரலோ ""முத்த ரசு பிஸி. அவர் ஃப்ரீ யானதும் உங்களுடன் பேசுவார்''’என்ற பதி லையே கிளிப்பிள்ளை போல் சொன்ன படியே இருந் தது கூலாய்.

சார்ஜா வில் கடன் சுமை சுமத்தப் பட்டு சொந்த மண்ணுக்கு வர முடியாமல் தவிக் கும்... நம் தமிழக உழைப்பாளர்களை தமிழக அரசுதான் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுவே அனைவரின் எதிர்பார்ப்பு..

""அ.தி.மு.க.விலும் பேசுகிறார்கள்!'' -கொ.மு.க. ஈஸ்வரன் பேட்டி!

""கொங்கு மண்டல கட்சியான "கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்' தற்போது அதன் சக்தியை இழந்து பலவீனமான கட்சியாக மாறிவிட்டது. வருகிற சட்டமன்ற தேர்தலில், இல்லாத செல்வாக்கைச் சொல்லி கூட்டணி பேசி தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளை யும் ஏமாற்றப் பார்க்கிறது...'' -இப்படி கொ.மு.க. பற்றி கடும் விமர்சனங்களை நக்கீரன் ஆகஸ்ட் 21-24 இதழில் பேட்டியாக கூறியிருந்தார் கவுண்டர் சமுதாயத்தின் மற்றொரு பிரதான அமைப்பாக செயல்படும் "தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை'யின் தலைவர் உ.தனியரசு. இந்நிலையில் எங்களின் இளைஞர் பலத்தைப் பற்றி பேசும் தகுதி தனியரசுக்கு துளியும் இல்லை என காட்டமாகவே கூறுகிறார் கொங்கு நாடு முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளரான ஈஸ்வரன். அவரைச் சந்தித்தோம்.

உங்கள் கட்சிக்கான பலம் என்ன?

ஈஸ்வரன்: கொங்கு சமுதாய மக்கள்தான். ஆரம்பத்தில் கொங்கு வேளாள கவுண்டர் பேரவையாக செயல்பட்டு வந்தோம். மூன்று வருடங்களுக்கு முன்பு கோவை கருமத்தம்பட்டி யில் லட்சக்கணக்கான கொங்கு இன மக்களை ஒன்றுதிரட்டி கொ.மு.க.வை தொடங்கினோம். அதன் தொடர்ச்சியாக வந்த பாராளு மன்ற தேர்தலில் 6 லட்சம் ஓட்டுக்கள் பெற்றோம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி களின் வெற்றி கனவை உடைத்து பல தொகுதிகளின் முடிவுகளை மாற்றி னோம். இப்போதும் கூடுதல் பலத்துடன் உள்ளோம்.

வளமான பகுதியாக உள்ள கொங்கு மண்டலம் ஆளும் அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்று எதை வைத்து கூறுகிறீர்கள்?

ஈஸ்வரன்: பொருளாதார ரீதியாக இப்பகுதி வளர்ந்து வருகிறது என்றால் அதற்கு காரணம், மக்களின் கடுமையான உழைப்புத்தான். அரசுக்கு ஏற்றுமதி, இறக்குமதி, வரி இனங்களில் அதிக வருவாய் கொடுப்பதும் இங்குதான். ஆனால் அரசு கொங்கு மண்டலத்திற்கு தனி கவனம் செலுத்தி புதிய திட்டங்கள் எதையுமே செய்யவில்லை. விவசாயம் தான் நாட்டின் உயிர்மூச்சு. இன்று உயிர் விடும் நிலையில் விவசாயிகள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழில் களை விவசாயத்தில் சேர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப் பட வேண்டும். புதிய நீர்ப்பாசன திட்டங்கள் எதுவும் இல்லை. விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி, பெரும்பாலான விசைத்தறிகள் நசிந்து விட்டது. நூல் விலை கடுமையாக ஏறிவருகிறது. பவர்கட் பிரச்சினையால் சிறு, குறு தொழில்கள் அழிவை நோக்கிப் போய்விட்டன. இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் புறக்கணிக்கிறார்கள்.

கட்சி, ஆட்சி நிர்வாகத்தில் கவுண்டர் சமுதாயத்தினர் கூடுதலாகவே இருக்கும்போது சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள்?

ஈஸ்வரன்: தி.மு.க.விலும் சரி, அ.தி.மு.க.விலும் சரி... அவர்கள் கட்சியின் ஒன்றிய, நகர, மாவட்டச் செயலாளர்களை கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் கள் நியமிக்கிறார்கள் என்றால் அது அவர்களின் கட்சி வளர்ச்சிக்கு அதேபோல்தான் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் அது அவர்கள் கட்சி சார்ந்தவர்களாக உள்ளார்கள். கவுண்டர் சமுதாயத்தின் மீது அவர்களுக்கு பாசம் இல்லை. அரசு பொறுப்புகளில் எங்கள் சமுதாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அரசு தேர்வாணைய குழுவிலேயோ, பல்கலைக்கழக சிண்டிகேட் மெம்பர்களிலேயோ இப்படி பலவற்றில் எங்களுக்கான அடையாளம் இல்லை.

நீங்கள் நடத்துவது சாதி கட்சிதானே உங்களுக்கு எப்படி மற்ற சமூகத்தினர் ஓட்டுப் போடுவார்கள்?

ஈஸ்வரன்: சாதி கட்சியாகத்தான் தொடங் கினோம். பெரும்பான்மை எங்கள் சமூகம்தான். ஆனால் இப்போது எங்கள் கட்சியில் இருபது சதவீதம்பேர் மற்ற சமூகத்தின் உறுப்பினர்களாக, நிர்வாகிகளாக உள்ளார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதி மக்களுக்கும் நாங்கள் போராடுகிறோம்.

கவுண்டர் சமுதாய மக்கள் தங்கள் சாதி பலத்தை தெரிந்துகொள்ளத்தான் சென்ற பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். இப்போது கொ.மு.க.வை மறந்து விட்டார்கள் என கூறப்படுகிறதே?

ஈஸ்வரன்: நிச்சயமாக இல்லை. மேற்கு மண்டலத்தில் நாங்கள்தான் மாற்று சக்தி என்பதை உணர்ந்ததால் மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். அப்போது 6 லட்சம் ஓட்டு. இப்போது 12 லட்சம் ஓட்டாக கூடுதல் பலத்துடன் உள்ளோம். வரும் தேர்தலில் 15 லட்சம் ஓட்டு எங்கள் பக்கம் இருப்பதை காட்டுவோம்.

உங்கள் சமுதாயத்தில் உள்ள பெரும் பணக்காரர்கள் மூலம் பல கோடிகள் வாங்கி செலவு செய்வதால் சென்ற தேர்தலில் லட்சக்கணக்கான ஓட்டுக்கள் பெற முடிந்தது என்ற கருத்து உள்ளதே...?

ஈஸ்வரன்: இது பொய் குற்றச்சாட்டு அவ்வளவுதான் சொல்ல முடியும்.

வரும் சட்டமன்ற தேர்தலில் உங்கள் கட்சியின் வியூகம் என்ன?

ஈஸ்வரன்: பிரதான அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போகிறோம். எங்களின் வாக்கு வங்கி 50 தொகுதிகளில் உள் ளது. எங்களோடு அணி சேரும் கட்சி யே ஆட்சி மாற்றத்தைக் கொடுக்கும். 30 தொகுதிகள் வரை எங்களுக்கு 25 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ளது.

எந்த கட்சியுடன் கூட்டணி சேர முடிவெடுத்துள்ளீர்கள்?

ஈஸ்வரன்: அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் என எதுவாக இருப்பினும் எங்கள் கோரிக்கைகளை, எங்களின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் கட்சியாக இருக்க வேண்டும். கொங்கு மண்டல மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு போகப் போவதாகவும் செங் கோட்டையன் உங்களோடு பேசுவ தாகவும் கூறப்படுகிறதே...?

ஈஸ்வரன்: ஆமாம் செங்கோட் டையன் மட்டுமல்ல... தி.மு.க.வில் சு.முத்துச்சாமி, என்.கே.கே.பி.ராஜா உள்ளிட்ட பலரும் என்னோடு தொடர்பில் உள்ளார்கள். இப்போது எந்த கட்சியுடனும் பேசுவோம்.

கூட்டணியில் எவ்வளவு சீட் எதிர்பார்க்கிறீர்கள்?

ஈஸ்வரன்: சீட் கணக்கு டிமாண்ட் எதுவும் நாங்கள் வைக்க வில்லை. எங்கள் வாக்கு பலத்தை அடிப்படையாக வைத்து பேசுவோம். இணக்கமான கூட்டணி அமைந்தால் குதிரை பேரம் பேச மாட்டோம்.

அடங்காத வி.ஏ.ஓ.க்கள்!


நாமக்கல் கலெக்டர் சகாயத் திற்கு எதிராக தமிழகத்திலுள்ள அத்தனை வி.ஏ.ஓ.வினரும் திரண்டு நிற்கிறார்கள்.

""கலெக்டர் சகாயம், சங்கத்தி லுள்ள மூவரை சஸ்பெண்ட் செய் துள்ளார். பலரை டிரான்ஸ்பர் செய்திருக்கிறார். பலருக்கு மெமோ கொடுத்திருக்கிறார். எங்களது ஒரே கோரிக்கை கலெக்டர் சகாயத்தை டிரான்ஸ்பர் செய்ய வேண்டுமென்பதுதான். மேலிடத்தில் பேசிவிட்டோம். விரைவில் எங்கள் கோரிக்கை நிறைவேறும்!'' என்கிறார் நாமக்கல் மாவட்ட கிராம நல அலுவலர் (வி.ஏ.ஓ.) சங்க செயலாளர் பாலு.

மக்கள் நலத் திட்டங்கள், அரசின் சலுகைகள் அனைத்தும் மக்களுக்கு லஞ்சமில்லாமல் கிடைக்க வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்தி, மக்களோடு நெருங்கிப் பழகி, நேர்மையான அதிகாரி எனப் பெயர் எடுத்திருப்பவர் கலெக்டர் சகாயம்.

இவைகள்தான், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கலெக்டரைப் பகையாக்கி விட்டது. ""கலெக்டரை உடனே மாற்ற வேண்டும்!'' என்று மாவட்ட வி.ஏ.ஓ.வினர் பல போராட்டங்களை நடத்தினார்கள். தீர்மானம் போட்டார்கள். பிறகு மாநில அளவிலிருந்து வி.ஏ.ஓ.வினர் திரண்டு வந்து நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வி.ஏ.ஓ.வின ருக்கு எதிராக, கலெக்டர் சகாயத்திற்கு ஆதரவாக நாமக்கல் மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் போராடத் தொடங்கினர்.

இதை, நக்கீரனில் "லஞ்சத்தில் விளையாடும் வி.ஏ.ஓ.வினர்' என 4.6.10 இதழில் வெளியிட்டிருந்தோம்.

இதன்பிறகும் தொடர்ச்சியாக வி.ஏ.ஓ.வினர் சங்கம் போராட்டங்களை நடத்தியது. 16.8.10 அன்று ""நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்து, கலெக்டரை முற்றுகையிடுவோம்!'' என அறிவித் தார்கள்.

இதற்குப் பதிலடியாக, ""கலெக் டரை முற்றுகையிட வரும் வி.ஏ.ஓ.வின ரை நாங்கள் முற்றுகையிடுவோம்!'' என அறிவித்தார்கள் நாமக்கல் மாவட்ட விவசாயிகளும் பொதுநல அமைப்புகளும். இரண்டு தரப்புக்கும் தடை போட்டது போலீஸ்.

இதற்கிடையே நுகர்வோர் அமைப்பு மாதேஸ்வரி என்ற பெண்மணி உட்பட 14 விவ சாயிகளை 16-ஆம் தேதி கைது செய்து ஜாமீனில் வெளிவராதபடி சிறைக்கு அனுப்பியுள்ளது போலீஸ்.

கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்லுமுன் மாதேஸ்வரியைச் சந்தித்தோம்.

""வி.ஏ.ஓ.வினர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது கலெக்டரிடம் மனு கொடுப்பதற்கு நானும் இன்னும் சிலரும் சென்றோம். எங்களைத் தடுத்த வி.ஏ.ஓ.வினர் ""வந்து விட்டாள் சமூக சேவை செய்ய...'' என்று கேவலமாக திட்டி அடித்து வெளி யே தள்ளி விட்டார்கள். நான் போலீசில் புகார் செய்தேன். போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. மறுபடி கலெக்டர் ஆபீஸ் போனபோது, என்னைத் திட்டி அடித்த அதே வி.ஏ.ஓ.வினர் மீண்டும் மிரட்டி னார்கள். டி.எஸ்.பி.வேலனுக்கு போனில் தகவலைச் சொன்னோம். மீண்டும் நல்லிபாளையம் போலீ ஸில் புகார் கொடுக்கச் சொன்னார். ஸ்டேஷனுக்கு வந் தோம். டி.எஸ்.பி.யும் வந்தார். ""கலெக்டருக்கு எதிராக வி.ஏ.ஓ. வினர் போராட்டம் நடத்தினால் உங்களுக்கு என்ன வந் தது?'' என்று சத்தம் போட்டவர், மேலிடத்தின் உத்தரவு என்று எங்களை கைது செய்து எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்புகிறார்!'' என்றார்கள் மாதேஸ்வரி யும், சந்திரமுகிலனும், சேந்தை தங்கமும் பூபாலனும்.

டி.எஸ்.பி.யைத் தொடர்பு கொண்டோம்.

""14 பேர் கைதா? எனக்குத் தெரியாதே!'' என்றார்.

நாமக்கல் எஸ்.பி. பாரியைத் தொடர்பு கொண்டோம்.

""அப்படியா இப்ப நான் டி.எஸ்.பி. கூட்டத்தில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்!'' என்றார்.

கலெக்டர் சகாயமோ ""அரசுப் பணியாளர்கள் மக்களின் ஊழியர்கள்!'' என்கிறார். நாமக்கல்லில் ஜெயிக்கப் போவது தர்மமா? அதர்மமா?

நாட்டு நடப்பு!

பாளையங்கோட்டை : நீங்க நெனைச்சா நடக்காதா...!

சிறையில், எந்தப் பொரு ளுக்கும் விலை கொஞ்சம் கூடுத லாத்தான் இருக்கும். பாளை சிறையில், மிளகு சைஸில் உள்ள கஞ்சா உருண்டையின் விலை 10 ரூபாயாகி விட்டது. செல்போனில் ஒரு நிமிடம் பேசுவதற்கு 5 ரூபாய் வசூலிக்கிறார்கள். பீடி, சிகரெட் விலையும் எக்குத் தப்பாக எகிறிக் கொண்டி ருக்கிறது என்று கைதிகள் குமுறிக் கொண்டிருக் கிறார்கள்.

ஆனால் சிறைக் காவலர்களின் கவலை யோ வேறு. செல் போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர்கள், கஞ்சா, பீடி, சிகரெட் எல்லாம் மெயின்கேட் வழியாகத் தான் எப்படியோ உள்ளே வருகிறது என்று மெயின்கேட்டில் கெடுபிடிகளை அதிகப்படுத்தியும் பயனில்லை.

இரண்டுவாரமாக திணறிக் கொண்டிருந்தார்கள் காவலர்கள். திடீரென ஒரு தகவல் ""ஏழெட்டுப் பிளாஸ்டிக் பைகளை ரோட்டிலிருந்து சிறைக்குள் தூக்கிவீசி விட்டு இரண்டு, மூன்று பேர் ஓடிவிட்டார்கள்!'' என்பதுதான் அந்தத் தகவல். சிறைக்குள் பாய்ந்து சென்று பொட்டலங்கள் வீசப்பட்ட இடத்தில் தேடிப் பார்த்தார்கள். அதற்குள் மாயமாகி விட்டன பிளாஸ்டிக் பொட்டலங்கள். வார்டன்களுக்குத்தான் வெளிச்சம் என்கிறார்கள் காவலர்கள்.

-பரமசிவன்

சென்னை : உள்ளம் என்பது உலகமாகலாம்!

தனி மரம் தோப்பாகுமா? ஆகும் என்பதற்கு " எம்.பி.நிர்மல்- தனிமரத் தோப்பு' என்ற தலைப்பில் ராணி மைந்தன் எழுதிய புத்தகமே சாட்சி.

தலைசிறந்த சாதனையாளர், இந்தியாவின் எட்டு வழிகாட்டிகளில் ஒருவர், இந்தியாவை மாற்றும் பத்து தேவதை களில் ஒருவர், இன்றைய கதாநாயகன் என்றெல்லாம் இந்திய மற்றும் வெளி நாட்டுப் பத்திரிகைகளின் பாராட் டைப் பெற்றிருக்கும் எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் அமைப்பின் நிறுவனர் எம்.பி.நிர்மலைப் பற்றிய நூல்தான் இந்த "எம்.பி.நிர்மல் -தனிமரத் தோப்பு'.
இந்த நூலை வெளியிட்டு, இந்த நூலையும் நிர்மலையும் எக்ஸ்னோரா வையும் பாராட்டிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ""1989-ல் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, என்னை அழைத்து அடையாறில் எக்ஸ்னோராவை தொடங்கி வைக்கும் வாய்ப்பைத் தந்தார் நிர்மல். சமூக சேவையில் பொதுநலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு இந்த எக்ஸ்னோரா தொடங்கியதில் இருந்துதான் எனக்கு ஏற்பட்டது. இளைஞர்களுக்கு வழி காட்டும் இந்த நூலை வெளியிடு வதில் உள்ளபடியே நான் பெருமை யடைகிறேன்'' நெகிழ்ச்சியோடு சொன்னார்.

-சுந்தர்

மணப்பாறை : கருணையுள்ள மனுசரெல்லாம் கடவுளுக்கும் மேலே!

மணப்பாறை கோயில்பட்டித் தெருவில் வசிக்கும் முறுக்கு வியாபாரி சுரேந்தருக்கு, சுரேஷ்-சூரியா என்று இரண்டு மகன்கள். இருவரும் தியா னேஸ்வரம் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கின்றனர். மிகக்குறைவான மதிப்பெண்களைப் பெற்ற இருவரிட மும் "ராங்க் கார்டு'களைக் கொடுத்த ஆசிரியர், ""அப்பாவிடம் கையெ ழுத்து வாங்கிக் கொண்டு வரவேண்டும்'' என்று சொல்லியிருந்தார். அப்பாவிடம் அடிவாங்கப் பயந்த சுரேசும், சூரியாவும், பாடப்புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் போட்டு காசை வாங்கிக்கொண்டு திண்டுக்கல்லுக்கு பஸ் ஏறிவிட்டார்கள்.

மூன்றாம் நாள், திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பட்டினியோடு திரிந்த இருவரையும் விசாரித்த ஆட்டோ ஓட்டுநர் ஜாப்பர், அவர்களைச் சமாதானப்படுத்தி தனது ஆட்டோவில் மணப்பாறைக்கே கூட்டிவந்து ஒப்படைத்தார். மூன்று நாட்களாக மகன்களைத் தேடி அலைந்து கொண்டிருந்த சுரேந்தர், ஆட்டோ ஓட்டுநருக்கு 1000 ரூபாயைக் கொடுத்து நன்றி தெரிவித்திருக்கிறார். மணப்பாறை காவல் நிலையத்திலும் ஓட்டுநர் ஜாப்பருக்கு பாராட்டு கிடைத்தது.

-ஜெ.டி.ஆர்.

தூத்துக்குடி : வாழ்வைக் கெடுக்குது, பணத்தைப் பெருக்குது!

துபாய் மற்றும் மாலத்தீவில் இருந்து கோட்டயம், கலூர் ஆகிய கேரள நகரங்களில் உள்ள கம்பெனிகளுக்காக, தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தன 3 கண்டெய்னர்கள்.

இரும்பு கிராப்ஸ் என்ற குறிப் பிடப்பட்ட அந்த கண்டெய்னர்களைத் தாண்டி வெளியே வந்தது கொடூர நாற்றம். சந்தேகப்பட்ட வருவாய் புலனாய்வுத்துறை இயக்குநர் ராஜன் அவற்றைத் திறக்கச் சொன்னார்.

உள்ளே தடை செய்யப்பட்ட 148 கேட்னியம் பேட்டரிக் கழிவுகள், கம்ப்யூட்டர் கழிவுகள், யு.பி.எஸ். குப்பைகள்... அத்தனையும் கதிர்வீச்சுத் தன்மை கொண்ட நச்சுக் குப்பைகள்.

""இந்தியா என்ன சுகாதார நாடுகளின் குப்பைத் தொட்டியா? கண்ட கண்ட நோயையும் இறக்குமதி செய்து பரப்புகிறீர்களா? எப்படி வந்ததோ, அதே மாதிரி உங்க செலவில் உடனே திருப்பி அனுப்புங்கள்'' எச்சரித்து திருப்பி அனுப்பச் செய் திருக்கிறார் இயக்குநர் ராஜன்.

-சிவன்

கள்ளக்குறிச்சி : ஏமாற்றாதே! ஏமாற்றாதே! ஏமாறாதே... ஏமாறாதே...!

சென்னை செல்வதற்காக, விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை, கீழ்ப்பாச்சேரியைச் சேர்ந்த முருகன், இரவு 1 மணிக்கு கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்து நின்றார். ""உன்னைப் பார்க்க சந்தேகமா இருக்கு... நடடா ஸ்டேஷனுக்கு'' -போலீஸ் தோரணையில் மிரட்டிய 5 வாட்டசாட்ட இளைஞர்கள், முருகனிடம் இருந்த செல்போனையும், பணத்தையும் பிடுங்கிக்கொண்டு, ""காலையில் வந்து கள்ளக்குறிச்சி ஸ்டேஷன்ல வாங்கிக்கடா'' -சொல்லிவிட்டு அடுத்தும் சிலரை விசாரிக்கச் சென்றனர். அடுத்த 10-வது நிமிடம் உண்மையான போலீஸ் டீம் நுழைந்தது. அதே முருகனிட மும் வந்தது... ""இப்பதானே உங்க போலீஸ்காரங்க வந்து செல்போனையும், இருந்த பணத்தையும் மிரட்டி வாங்கிட்டுப் போனாங்க... அதோ அந்தக் கடையில் நிக்கிறாங்க பாருங்க...'' அடையாளம் காட்டி னார் முருகன். உடனே சென்று 5 வாட்ட சாட்டங்களையும் மடக்கியது போலீஸ்.

""நீங்க செய்ற தைப் பார்த்துப் பார்த்துதான் நாங்க செய்தோம். இது ஒரு குத்தமா?'' என்றார்கள் ஐவரும். அவர்களில் பாதுஷா, தமிழரசன் என்ற இருவர் மீது மட்டும் சீட்டிங் கேஸ் போட்டு சிறைக்கு அனுப்பி வைத்தது கள்ளக்குறிச்சி ஒரி ஜினல் போலீஸ்.

கமலை அவமதித்த மலையாள நடிகர்கள்!


குழந்தை நட்சத்திரமாக கலைப் பயணத்தை தொடங்கிய கமல் அரை நூற்றாண்டு களை எட்டி வெற்றி நடை போட்டுக் கொண்டி ருக்கிறார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், விநியோகஸ்தர், கதாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதாசிரியர், டான்ஸ் மாஸ்டர், ஒப்பனையாளர், தொழில்நுட்ப வல்லுநர்.... என பன்முகத் தன்மையோடு இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் தன் முத்திரையை பதித்துக் கொண்டிருப்பவர். இங்கிலாந்து அரசி இந்தியா வந்தபோது கமலை வியந்து புகழ்ந்து "மருத நாயகம்' படப்பிடிப்பை துவக்கிவைத்தார். அவ்வளவு தூரத்திற்கு இண்டர்நேஷனல் கலைஞராக இருப்பதால்தான் உலகநாயகன் என கமலை மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்திய சினிமா விற்கு புதிய தொழில்நுட்ப அறிவியலை அறிமுகப்படுத்தி சேவை செய்வதோடு தன் ரசிகர்கள் நற்பணி இயக்கம் மூலம் ரத்ததானம், உடல்தானம், கண்தானம் என சமூக சேவையை யும் செய்து வருகிறார். வருமானவரி கட்டுவதில் முதல் ஆளாக இருந்து சிறந்த இந்தியக் குடிமகனாகவும் திகழ்கிறார் கமல். அதனால் தான் கமலின் 50-வது ஆண்டு கலையுலக சேவையை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் விழா எடுத்து கௌர வித்தது.

தமிழனாக இருந்தாலும் கமல் எப்போதுமே கேரளத்தின் செல்லப்பிள்ளைதான். ஏகப்பட்ட மலையாளப்படங்களில் நடித்து ஒருகட்டத்தில் கமல் பேசுகிற தமிழ் கூட மலையாள வாடைதான் அடித்தது.


"அந்தரங்கம்' படத்தில் "ஞாயிறு ஒளி மழையில்' என்கிற பாடலை கமலை பாடவைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். அந்தப் பாடல் வெளிவந்து சில வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் தனிமையில் இளையராஜா அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தபோதுதான் கமலின் உச்சரிப்பில் ஒரு தவறு இருப்பதை இளையராஜா கண்டுபிடித்து கமலிடம் சொன்னார். அதாவது ‘"திங்கள் குளிக்க வந்தாள்' என்பதற்குப் பதிலாக ‘"திங்ஙள் குளிக்க வந்தாள்' என கமல் பாடியிருந்தார். அந்த அளவுக்கு கமலுக்குள் மலையாளம் ஆட்கொண்டிருந்தது.

இப்படி பன்முகத்தன்மையோடு விளங்கும் கலைஞனை கௌரவிக்க கேரள அரசு முடிவு செய்தது. அதற்காக கடந்த 22-ந் தேதி கேரளாவில் அரசு பாராட்டு விழா நடத்தியது. ஆனால் இந்த விழாவில் மலையாள நட்சத்திரங்களோ, தொழில்நுட்ப கலைஞர்களோ ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை.

""ஐம்பதாண்டுகள் கலைப்பணியாற்றிய நடிகர்கள் கேரளாவிலேயே இருக்கும் போது தமிழரான கமலுக்கு எப்படி பாராட்டுவிழா நடத்தலாம்? இந்த விழாவை கேரள நடிகர் சங்கமான "அம்மா' அமைப்பு புறக்கணிக்கும். விருப்பமுள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளலாம்'' என நடிகர்சங்க தலைவர் இன்னோசென்ட் அறிக்கைவிட்டார்.

"கேரளத்தை சொந்தமாக கொண்ட எம்.ஜி.ஆரை "புரட்சித் தலைவர்' என இதயத்தில் வைத்து கொண்டாடியதோடு, ஆட்சியிலும் அவரை அமரவைத்து அழகுபார்த்தவர்கள் தமிழர்கள். அந்த பரந்த மனப்பான்மை கேரள நடிகர் சங்கத்திற்கு ஏன் இல்லை? கமலுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்' என மலையாளத்தின் பிரபல நடிகர் திலகன் பதிலடி கொடுத்தார். இதனால் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்ட நிலையில்....

"வெறும் நடிகர் என்பதற்காக மட்டுமல்ல... பல்வேறு திறமைகள் கொண்ட தேசத்தை தாண்டியும் புகழ் பெற்ற இந்தியன் என்கிற முறையிலேயே கமலுக்கு கேரள அரசு பாராட்டுவிழா நடத்துகிறது. எனவே இதை சர்ச்சையாக்க வேண்டாம்' என அரசு சார்பில் விளக்கம் கொடுத்தும் கூட கேரள நடிகர்கள் புறக்கணித்து விட்டனர்.

"யாத்ரா மொழி' எனும் மலையாள படத்தில் நடிப்பதற்காக போன நடிகர்திலகம் சிவாஜியை "கேரள நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தால்தான் நடிக்கமுடியும்' என நெருக்கடி கொடுத்தவர்கள் தான். அவர்களுக்கு நம்மைப்போல எப்போதுமே மொழிகளுக்கு அப்பாற்பட்டு திறமையை மதிக்கும் மனோபாவம் இருந்ததில்லை. ஆனால் இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் முன்னணி நட்சத்திரங்களாக, தொழில் நுட்ப கலைஞர்களாக இருக்கிறார்கள். தமிழக மக்கள் அவர்களின் திறமைக்கு உரிய மரியாதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இலங்கைக்கு சென்ற அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற விஷயத்தில் கூட நம்ம நடிகர் சங்கம் எப்படி எப்படியெல்லாம் பல்டி அடித்தது என்பதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட முறையில் கமல் விழாவுக்கு போகலாம் என்று கேரள நடிகர் சங்கம் சொல்லியும் கூட நடிகர் சங்க முடிவுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்கிற உறுதியில் மலையாள நட்சத்திரங்கள் விழாவுக்கு போகவில்லை. இதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னன்னா... மலையாள நடிகர் சங்கம் போல நமது சங்கமும் ஒற்றுமையோடும், கட்டுப்பாட்டோ டும் இருக்க வேண்டும். ஆளுங்கட்சி, எதிர் கட்சி என்கிற எந்த பாகுபாடுமில்லாமல் செயல்படும் அந்த சங்கத்தைப் போல, அரசு விழாவையே புறக்கணிக்கும் துணிச்சலைப் போல நமது சங்கமும் சுயமாக இயங்கும் அமைப்பாக மாறவேண்டும்'' என விவரித்தார் நமது நடிகர் சங்க சீனியர் பிரமுகர் ஒருவர்.

நடிகர் சங்கத்தலைவர் சரத்திடம் இதுகுறித்து கேட்டோம். ""கமலுக்கு கேரள அரசு பாராட்டு விழா நடத்தியது தெரியும். ஆனால் அதில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து முழு விபரமும் எனக்கு தெரியாது. தெரியாத விஷயத்தில் எப்படி கருத்து சொல்ல முடியும்?'' எனக் கேட்டார் சரத்.

விழா முடிந்த மறுநாள்.... சென்னையில் நடிகர் ஜெயராம் கொண்டாடிய ஓணம் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தை தெரிவித்து தமிழரான கமல் தனது பெருந்தன்மையை காட்டிவிட்டார்.

கேரள நடிகர்களோ தலைகவிழ்ந்து நிற்க வேண்டும்.

நடிகர் பாலா - அம்ரிதா திருமணம்


நடிகர் பாலாவுக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்ரிதாவுக்கும் வெள்ளிக்கிழமை காலை திருமணம் நடந்தது.

காதல் கிசு கிசு, மஞ்சள் வெயில் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளவர் பாலா. தமிழ் நடிகரான இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார். அங்கு 20-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகன் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.

பாலாவுக்கும் கேரளாவைச் சேர்ந்த அம்ரிதாவுக்கும் சென்னை திருவான்மியூரில் உள்ள சிவன் கோவிலில் வெள்ளிக் கிழமை திருமணம் நடந்தது.

அம்ரிதா மலையாளத்தில் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார். இருவருக்கும் காதல் மலர்ந்ததாக இரு வருடங்களுக்கு முன்பே கிசு கிசு வெளியானது நினைவிருக்கலாம்.

பாலா, அம்ரிதா திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.

விலகினார் விக்ரம்... விசனப்படாத சசிகுமார்!

சசிகுமார் இயக்கும் புதிய படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து நடிகர் விக்ரம் விலகிக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

'சுப்ரமணியபுரம்' படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு சசிகுமாருக்கு வந்த வாய்ப்புகள் ஏராளம். அவரோ தனது 'நண்பர்' நடிகர் விக்ரமுக்கு முன்பு அளித்த வாக்குறுதிப்படி ஒரு படம் செய்வதாக அறிவித்தார்.

சமுத்திரக்கனி, ஏ எல் அழகப்பனை வைத்து முற்றிலும் வித்தியாசமான கதையுடன் இந்தப் படத்தை இயக்கி வந்தார் சசிகுமார். நகரம் என்று படத்துக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கிட்டத்தட்ட 90 சதவிகிதம் படம் முடிந்துவிட்ட நிலையில், தடாலடியாக இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் நடிகர் விக்ரம். காரணத்தைக் கூட சொல்லவில்லையாம்.

ஆனால் சசிகுமார் இதற்கெல்லாம் கவலைப்படுகிறவரா என்ன... அடுத்த நிமிடமே படத்தை தனது சொந்தப்பட நிறுவனமான 'கம்பெனி புரொடக்ஷன்' தயாரிப்பதாக அறிவித்துவிட்டு, உற்சாகமாக வேலையைத் தொடர்கிறார்!

கவுதம் மேனன் இல்லாமல் 50 படம் முடிச்சிட்டேனே! - அஜீத்தின் கிண்டல் பதில்


மூன்று முறை மீடியாவில் அஜீத் தை விமர்சித்து வெளிப்படையாக பேட்டிகள் கொடுத்திருந்தார் கவுதம் மேனன்.

ஆனால் ஒரு முறைகூட அதற்கு பதிலடி கொடுத்ததில்லை அஜீத்.

இப்போதுதான் முதல்முறையாக வாய்திறந்துள்ளார் அஜீத்.

'இனிமேல் அஜீத் எனக்குத் தேவை இல்லை' என்ற கௌதம் மேனனின் கமென்ட் குறித்த என்ன சொல்கிறார்?

"சினிமாவில் நான் இல்லாமல் 10 படங்களை கௌதம் இயக்கிவிட்டார். அவர் இல்லாமல் நானும் 50படங்களை முடித்துவிட்டேன். இதுதான் என் சிம்பிள் பதில்!

கார் ரேஸில் ஆர்வம் இருப்பதால், அதற்காக வெளிநாடு போவதால், சினிமாவில் கவனம் செலுத்தலைன்னு சொல்றது அபத்தம். நான் எதில் ஈடுபட்டாலும் அதிலேயே மூழ்கிவிடுவேன். அது என் இயல்பு. கார் ரேஸுக்குப் போனதால் ஓர் இடைவெளி ஏற்பட்டது உண்மைதான். அதற்காக அதிலேயே இருந்துவிடுவேன் என்று அர்த்தமல்ல. இதோ, மீண்டும் நான் வந்துட்டேனே!" என்றார்.

9 வயசிலேயே பார்த்து விட்டேன்-ஹன்சிகா!


நான் திடீரென சினிமா வுக்கு வரவில்லை. 9 வயதிலேயே கேமராவைப் பார்த்து விட்டேன். இப்போது எனக்கு 19 வயதாகிறது. சினிமா குறித்து எனக்கு எல்லாம் தெரியும். நடிக்கவும் தெரியும், கிளாமராக கலக்கவும் தெரியும் என்று படு வேகமாக பேசுகிறார் வேலாயுதம் பட நாயகி ஹன்சிகா.

தனது பெயர் வெறும் ஹன்சிகாதான் என்பதை முதலிலேயே தெளிவாக சொல்லி விடுகிறார் ஹன்சிகா(-எனவே மோத்வானி 'கட்').

இவருடைய அம்மா மும்பையில் டாக்டராம். குட்டிப் பாப்பாவாக ஹன்சிகா இருந்தபோது அம்மாவுடைய கிளினிக்குக்குப் போவாராம். அங்கு வேலை பார்க்கும் நர்ஸ் உள்ளிட்டோரை அப்போதே மிமிக்ரி செய்து கலாய்ப்பாராம். இதைப் பார்த்து கிளினிக்குக்கு வந்த ஒருவர் வியந்து, போய் விளம்பரப் படத்தில் நடிக்க வைத்தாராம். அன்று முதல் அவருடன் நடிப்பு ஒட்டிக் கொண்டு விட்டதாம்.

ஹன்சிகாவுக்கு சிறு வயது முதலே சிரிப்புதான் பெரிய பிளஸ் பாயின்ட்டாம். நீ சிரிச்சுகிட்டே இருந்தா பார்த்துக்கிட்டே இருக்கலாம் என பலரும் கூறுவார்களாம். பெருமையுடன் சொல்கிறார் ஹன்ஸ்.

இதுகுறித்து கூறிய ஹன்சிகா, எனக்கு சினிமா என்றால் என்ன என்று நன்றாகவே தெரியும். அதிலும் தமிழ் சினிமா வில் எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன். கிராமத்து வேடங்களிலும் கலக்குவேன்.

கவர்ச்சியாக மட்டுமே நடிப்பேன் என்று நினைக்காதீர்கள். எப்படிப்பட்ட ரோலாக இருந்தாலும் சரி பின்னிடுவேன்.

எனக்கு வேகம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் இப்போது விஜய், தனுஷ், ஜெயம் ரவி என அடுத்தடுத்து இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கி வருவது பெரும் குஷியாக இருக்கிறது. இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த வேகம்தான் எனக்கும் பிடிக்கிறது. ஒரு படம் வரட்டும், நான் யார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் (குறிப்பாக தமிழ் சினிமா நாயகிகள்) புரிந்து கொள்வார்கள் என்று சவால் விடுவதைப் போல பேசுகிறார் ஹன்சிகா.

ஹன்சிகா என்று வைத்ததற்குப் பேசாமல் 'ஹார்ஸ்'சிகா என்று மாற்றி வைத்திருக்கலாம் பெயரை, ரொம்ப வேகம்ப்பா...!

Saturday, August 28, 2010

தமிழின அழிவு! துணை போனார்களா ஈழ ஆதரவுத் தலைவர்கள்? -அதிர்ச்சித் தகவல்கள்!



டி.பி.எஸ். ஜெயராஜ் ஓர் இதழியலாளர். ஆங்கிலத்தில் நன்றாக எழுதும் ஆற்றல் பெற்றவர். ஈழத் தமிழர். சுமார் 20 ஆண்டுகளாய் கனடா நாட்டில் வாழ்ந்து வருபவர். மிகக் குறுகியதோர் காலக்கட்டம் தவிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரமாக விமர்சித்து வருபவர். இவர் கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்' (Daily Mirror) நாளிதழுக்காய் புலிகளின் முன்னாள் அனைத் துலக செயற்பாடுகளுக்கான பொறுப்பாளர் கே.பி. (K.P.) என்ற குமரன் பத்மநாபனை நேர்கண்டு உரையாடி மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

அதில் 2009 இறுதிக்கட்ட போரின்போது சண்டை நிறுத்தம் கொணர இந்தியா முயன்ற தாகவும் அதனை சீர்குலைத்தது சில தமிழக அரசியற் தலைவர்கள் என அவர்தம் பெயர்களையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருப்பது உலகத்தமிழரிடையே தீவிர விவாதத்திற் குள்ளாகியிருக்கிறது. சண்டை நிறுத்த முயற்சிகளில் கே.பி. எனது பெயரையும் குறிப்பிட்டிருந்தமையால் கடந்த சில நாட்களாய் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அக்கறையோடும் ஆதங்கத்தோடும் விசாரித்து வருகின்றனர்.

கே.பி. கூறியிருப்பதொன்றும் புதிய செய்தியல்ல. ஏற்கனவே ""மறக்க முடியுமா'' தொடரில் நான் விரிவாக எழுதிய விஷயம்தான். ஆனால் ஈழப் பிரச்சினையில் ஏற்கனவே பிரிந்தும், பிளவுண்டும், குழம்பியும், நொறுங்கியும் கிடக்கிற உணர்வாளர்களை மேலும் மனச் சோர்வடையச் செய்ய வேண்டாம் என்ற அக்கறையில் எவருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் ஒருமுறை மனம் நொந்து குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகிறது. ""நானும் பார்த்து விட்டேன், ஈழப்பிரச்சினையில் ஒருவர்தானும் இங்கு நேர்மையான வர்களாய் இல்லை''. -அவரது கூற்று நூறு சதம் உண்மை.


தனிநபர்கள், தலைவர்கள், இயக்கங்கள் மட்டில் நாம் உள்ளார்ந்த உணர்வுகளால் வசீகரிக்கப்பட்டு நாமே நம்மையுமறியாமல் உருவாக்கிக் கொள்ளும் புனித மாயைகளை துணி வுடன் அகற்றி அறிவின் துணைகொண்டு உண்மையைத் தேடினாலொழிய இந்த இனத்திற்கான பயணத் திசையை நாம் இன்னும் பல்லாண்டுகளுக்குக் கண்டறிய முடியாதென்பது மட்டும் கசப்பான நிஜம்.


கே.பி.யின் குற்றச்சாட்டினை நிராகரிக்கிறவர்களுக்கு இரண்டு வாதங்கள் வசதியாக வந்து நிற்கின்றன. முதலாவது வாதம் விடுதலைப் போராட்டத்தினை அழித்திட சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசுக்கு பல்வேறு உதவிகளும் புரிந்த இந்தியா சண்டை நிறுத்தம் கொணர முயற்சி செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பது. இரண்டாவது வாதம் கே.பி. இன்று ஒரு துரோகி. அவர் சிங் களப் பேரினவாதத்தின் கைக்கூலியாக இன்று செயல்படுகிறார் என்பது. இரண்டு வாதங்களிலும் உண்மை உண்டு. அதே வேளை இந்த இரண்டு உண்மைகளோடு தொடர்புடைய வேறு உண்மை களும் உண்டு. அவை என்ன?

கே.பி. இன்று சிங்களப் பேரினவாதத்தோடு ஒத்துழைப்பவர் தான். அதில் ஐயமில்லை. அவருக்கு வேறு வழியும் இல்லை. மாட்டிக் கொண்டபின் ஒன்றேல் சித்திரவதைகளுக்குள்ளாகி மடிய வேண்டும், இன்றேல் ஒத்துழைத்துப் பிழைத்துக் கொள்ள வேண்டும். பிழைத்திருக்க அவர் முடிவு செய்திருக்கிறார். ஈவிரக்கமின்றி இன அழித் தல் செய்த பாவிகளோடு வாழ்வது அவருக்கான வரலாற்றுச் சாபம்- வரலாறு அவரை நிச்சயம் விடுதலை செய்யாதுதான்.

அதேவேளை கே.பி. தமிழினம் கண்ட அபார ஆற்றல்கள் கொண்ட ஒரு மிகப்பெரிய போராளியும் கூட. வெறுங்கையோடு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கையை மட்டும் உணர்வாதாரமாய் கொண்டு வெளிநாடு பயணித்த கே.பி. தனியொரு மனிதனாய் புலிகளின் அனைத்துலக ஆயுதக் கொள்வனவு வலைப் பின்னலை கச்சிதமாகக் கட்டியெழுப்பியவர். உலகெங்கும் தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத் திற்காய் பலநூறு கோடிகள் புரளும் பன்னாட்டு வர்த்தகத்தை உருவாக்கியவர். கடல்வழிப் பாதையில் தமிழனும் ஆளுமை செலுத்திய ஓர் காலத்தை நாற்பதுக்கும் மேலான வர்த்தகக் கப்பல்களை ஓட்டி வரலாறு சமைத்தவர். கே.பி. என்றொரு ஆளுமை இல்லையென்றால் தனித்தமிழ் ஈழத்திற்கு வெகு அருகில் வந்த ஆனையிறவு வரையான போர்க்கள வெற்றிகள் சாத்தியப் பட்டிருக்காது. அது கே.பி.யின் பொற்காலம்.

ஆனையிறவு வெற்றிக்குப்பின் வந்த அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் கே.பி. பதவியிறக்கம் செய்யப்பட்டார். அவர் செய்த தவறுகள் என்னவென்று எனக்குத் தெரியாது. அவரோடு உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்குப் பொறுப்பாயிருந்த விடுதலைப் போராட்ட பொறுப்பாளர்களும் ஓரங்கட்டப்பட்டனர். அவர்களில் பலர் ஒவ்வொரு செங்கல்லாய் விடுதலைப் பேரியக்கத்தை புலம் பெயர் நாடுகளில் கட்டியெழுப்பியவர்கள். அவர்கள் கட்டியெழுப் பிய கோபுரத்தில் அமர்ந்து கோலோச்சப் புறப்பட்டு வந்தவர்கள் "காஸ்ட்ரோ குழுவினர்'. இவர்களின் முகமாக வெளிநாடுகளில் இன்று அறியப்படுகிறவர் நெடியவன். தமிழீழ விடுதலைப் போராட் டத்தை சுமார் இருபது ஆண்டுகளாய் ஆழ்ந்து படித்து வருகிறவ னென்ற வகையில் இந்த விடுதலைப் போராட்டம் இத்துணை மோசமான அழிவினை சந்திக்க பல்வேறு காரணங்களென்றாலும் முதற்காரணம் இந்த காஸ்ட்ரோ குழுதான். முள்ளிவாய்க்கால் கொடுமை நடந்த காலத்தில் "வணங்கா மண்' கப்பலை வைத்து இவர்கள் அடித்த கொள்ளையின் கணக்கைக் கேட்டாலே தமிழ் வரலாறு காறி உமிழும். இன்றும் உலக அளவில் விடுதலைப் போராட்டம் சேமித்த சொத்துக்களை கட்டுப்படுத்துவது இவர்கள்தான். தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களாய் காட்டிக்கொள்கிற தலைவர்கள் பலரும் இந்த காஸ்ட்ரோ குழுவின் ஆதரவாளர்கள் என்பதும் முக்கியமானது.




தமிழீழ மக்களின் அரசியற் சிக்கலை ஓரளவு அனுசரணையுடன் அணுகி வந்த ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்திடக் காரணமாக இருந்தவர்கள் இந்த "காஸ்ட்ரோ குழு' புண்ணிய வாளர்கள்தான். ராஜபக்சேக்களின் ரத்தவெறி போர் கண்டும் மேற்குலகம் பாராமுகம் காட்டியமைக்கு சகல பொறுப்பும் காஸ்ட்ரோ குழுவினரின் பொறுப்பற்ற அணுகுமுறைதான்.

இரண்டாவது இந்தியா தொடர்பான கேள்விக்கு வருவோம். ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வோம். அன்றும் சரி, இன்றும் சரி -இந்திய அதிகார அமைப்பு தமிழரை ஒரு பொருட்டாக மதித்ததில்லையென்பதே உண்மை. லட்சக்கணக்கான இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடற்றவர்களாக்கிய சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தம் தொடங்கி, கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோதும், இன்று வெறிபிடித்த "தொடர் கொலைகாரன்' - நங்ழ்ண்ஹப் ஃண்ப்ப்ங்ழ் போல் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் சிங்கள தேசத்தை சங்கோஜம் ஏதுமின்றி "நேச நாடு' என வெளிப்படையாகவே கொண்டாடுவதுவரை... தமி ழரை ஒரு பொருட்டாக இந் திய அதிகார அமைப்பு கருத வில்லை என்பதே உண்மை. பிரதமர், அமைச்சர் பெரு மக்களுக்கெல்லாம் அப்பால் இந்த நாட்டுக்கான முக்கிய கொள்கைகளை வகுக்கிற அதிகாரக் கூட்டம் தமிழர் களை வெறுக்கிற தென்பதே உண்மை. இவர்களை எதிர் கொள்கிற பெரும் அறிவுக் கூட்டமொன்று தமிழகத்தி லிருந்து எழுகின்றவரை அது தொடரத்தான் செய்யும்.

தமிழீழத்தை என்றுமே இந்திய அதிகார அமைப்பு விரும்பவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளை ஒரு காலத்தில் அது விரும்பியது. உண்மையில் தென்புலத்தில் தனது பிராந்திய அபிலாஷைகளுக் காக இந்திய அதிகார அமைப்பு உருவாக்கிய முதல் 'நற்ழ்ஹற்ஹஞ்ண்ஸ்ரீ ஹள்ள்ங்ற்' -விடுதலைப்புலிகள் இயக்கம். பொதுவாக நம்மிடையே நிலவும் ஓர் கருத்து 1983 ஜூலை கலவரங்களுக்குப் பின்னர்தான் இந்தியா போராளிகளுக்குப் பயிற்சி தரத் தொடங்கிய தென்பது. அது உண்மையல்ல. பிரபாகரனும் உமாமகேசுவரனும் 1982-ல் பாண்டிபஜாரில் துப்பாக்கி மோதல் நடத்தினார்களென்பது பதிவு. எனில், தனக்காக, தனது நலன்களைப் பேணுவதற் கான அடியாட்களாக விடுதலைப்புலிகள் இயக்கத் தை கட்டமைக்க கலவரங்களுக்கெல்லாம் முன்னரேயே இந்திய அதிகார அமைப்பு விரும்பி யிருக்கிறது. ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூலிப்படைத் தலைவனாகக் குறுகிப்போக விரும்பவில்லை -விடுதலை வேங்கையாக வரலாறு படைக்க விழைந்தார் -எனவே இந்திய அரசமைப்பு அவரை வெறுத்தது. தான் கிழித்த எல்லைக் கோடு களைக் கடந்து கைவிட்டுப் போய்விட்ட 'Stratagic asset' -ஆகக் கருதிப் பொருமியது. அவரை அழிக் கவும் வரிந்து நின்றது. ஒருகட்டத்தில் "பிரபாகரன் இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்' என்ற கொள்கையைக்கூட இந்திய அதிகார அமைப்பு வைத்திருந்தது.

ஆக, வேலுப்பிள்ளை பிரபாகரனை அழிக்க விரும்பிய இந்தியா எப்படி சண்டை நிறுத்தத்திற்கு முயன்றிருக் கக்கூடும் என்ற கேள்வி எழுவது நியாயம்தான். ஆயினும் இரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதே உண்மை. ஒன்று 2009 ஜனவரி இறுதி வாரம் தொடங்கியும், இரண்டாவது ஏப்ரல் இறுதி வாரத்திலும்.

ஆனால் இவை தொடர்பான விப ரங்களை கே.பி. நேரடியாக அறிந்திருந் தது போலும் தெரியவில்லை. அவரது நேர்காணலை வெளியிட்ட டெய்லி மிர்ரர் நாளிதழ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மகேந்திரன் அவர்களது பெயரைக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அந்த மகேந்திரன் ஐயோ பாவம். அவருக்கும் இதற்குமெல்லாம் சம்பந்தமே இல்லை. அதே பெயரினைக் கொண்ட பிறிதொரு காம்ரேட் தோழருக்குப் பதில் இவர் மாட்டிக்கொண்டு விட்டார். அதே வேளை சண்டை நிறுத்த முயற்சிகள் வென்றுவிடாதபடி தமிழகத்தின் ஈழ ஆதரவுத் தலைவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது, குறிப்பாக நடேசன் அவர்கள் மீது தீரா அழுத்தம் கொணர்ந் தார்கள் என்பதும் உண்மை.

(வரும் இதழில்)




சிங்கள அரசின் கைப்பாவை யாகவும் கைக்கூலியாகவும் மாறிப்போனவருமான கே.பி. என்கிற குமரன்பத்மநாபன், ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.அந்த பேட்டியில், ""இந்திய அனு சரணையுடன் கூடிய யுத்த நிறுத்தம் வரும் சாத்தியத்தை, அரசியல் ஆதாயத்திற்காக கெடுத்தவரே வைகோதான்'' என்று கடுமையாக குற்றம்சாட்டியதோடு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் நெடுமாறன், தோழர் மகேந்திரன் உள்ளிட்டோரையும் விமர்சித்திருக்கிறார்.இவரது பேட்டி தமிழர்களிடையேயும் அரசியல் ரீதியாகவும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறது.


இந்த சூழலில், இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரனிடம் கேட்டபோது,’’ ""இந்த பிரச்சினை பற்றி நான் எதுவும் சொல்வதற் கில்லை.கே.பி.என்பவர் மார்க்ஸிஸ்ட் எம்.எல்.ஏ.மகேந் திரனை பற்றித்தான் சொல்லியிருக்கிறார்''’’என்றார். மார்க்ஸிஸ்ட் மகேந்திரனோ,’’""நடேசன் என்பவரிடம் எந்த காலத்திலும் எனக்கோ எங்கள் கட்சிக்கோ தொடர்பு இருந்ததில்லை. அடிப்படையில் விடுதலைப்புலி களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் நாங்கள்'' என்று மறுக்கிறார். அன்றைய காலக் கட்டத்தில் ஈழப்பிரச்சினையில் அனுசரணையோடு இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நடேசனோடு தொடர்பில் இருந்திருப்பதை அறிந்த காரணத்தால் நாம் சி.மகேந்தரனிடம் மீண்டும் இது பற்றி கேட்ட போது அது குறித்துப் பேசவே மறுத்து விட்டார்.


இதனை அடுத்து,வைகோவின் கருத்தறிய அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போது தொடர்பு கிடைக்கவே இல்லை. இதனால் ம.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான நன்மாறனை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினோம்.அவரும் வைகோவிடம் பேசிவிட்டு, ’கே.பி.யின் குற்றச்சாட்டுக்கு வைகோவின் பதில்’ என்று வைகோவின் கருத்தை நமக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.



வைகோ நமக்கு அளித்துள்ள அந்த பதிலில், ""பத்மநாபன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய்.போர் நிறுத்தம் ஏற்பட்டால் என்னை விட, பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது. எவ்வகையிலாவது போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடாதா என்று நாங்கள் துடித்தோம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், புலிகள் அமைப்பினருக்கும் அவர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றி எந்தகாலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது.


ஈழத்தின் நிலைமைகளுக்கு ஏற்ப அம்மக்களின் நலன்களுக்கு ஏற்ற முடிவுகளை பிரபாகரன் மேற்கொள்வார். அப்படிப்பட்ட நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தை தடுத்தேன் என்று குமரன் பத்மநாபன் உளறி இருக்கிறார்.



2009 ஏப்ரல் 7-ந் தேதி நடேசன் என்னிடம் பேசும்போது,’தொகுதி உடன்பாடு முடிந்துவிட்டதா அண்ணா?’ என்று கேட்டார்.அதற்கு நான்,’ கொஞ்சம் நெருடல் இருக்கிறது. ஆனால் அணி மாறமாட்டேன். தேர்தலில் போட்டி யிடாமல் விலகிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்’ என்று சொன்னேன்.


அன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் தொடர்பு கொண்டார் நடேசன்,’’அண்ணா நீங்கள் அவசியம் போட்டியிட வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் விரும்புகிறார் என்று குறிப்பிட்டார் மே 13. வாக்குப்பதிவு முடிந்திருந்தது. இரவு பத்தேகால் மணிக்கு என்னிடம் பேசிய நடேசன் ஜெயித்து விடலாமா அண்ணா? என்றார். அதற்கு நான்,’என் தொகுதியில் கோடிக்கணக்கில் ஆளுந்தரப்பு பணத்தை கொட்டிவிட்டது. சொற்ப வித்தி யாசத்தில் ஜெயிக்கலாம் என்றேன்.


பிரபாகரன், நடேசன் உள்ளிட்டோரின் நிலைமையைப் பற்றி கவலைப்பட்ட போது,’பயப்படாதீங்க அண்ணா!நாங்க வெல்வோம் அண்ணா!’என்றார் நடேசன்'' ’என்று தெரிவித்துள்ள வைகோ, ’""இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டுமென்று உலகின் பல நாடுகள் வேண்டு கோள் விடுத்து இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தபோது... இந்திய அரசு ஒப்புக்குகூட போர் நிறுத்தம் வேண்டும் என்று சொல்லவில்லை. இதுதான் உண்மை. அப்படி யிருக்க, போர் நிறுத்தம் குறித்து இந்திய அரசினர் யோசனை சொன் னார்களாம்.அதனை நாங்கள் தடுத்தோ மாம்''’என்கிறார் வைகோ.


மேலும் ""அனைத்துலக அரங்கில் போர்க்குற்றவாளியாக ராஜபக்சே நிறுத்தப் படுவார் என்று கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள என்னை களங்கப்படுத்த ராஜபக்சேவின் கைக்கூலியாகிவிட்ட குமரன் பத்மநாபனை தற்போது பயன்படுத்தியுள்ளனர். குமரன்பத்மநாபன், கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது'' என்கிறார் வைகோ.


பழ.நெடுமாறனைப் பற்றியும் தனது பேட்டியில் சில விவரங்களை கே.பி. சொல்லியிருப்பதால், அது குறித்து நெடுமாறனை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது,’’""கே.பி.யின் ஆதரவு பத்திரிகையாக நக்கீரன் மாறிவிட்டது. அதனால் நான் எந்த கருத்தையும் உங்களுக்கு சொல்வதற் கில்லை''’என்று கூறி தொடர்பைத் துண்டித்துக்கொண்டு விட்டார்.


ஈழப்பிரச்சினையில் துவக்க காலத்திலிருந்தே எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல் உணர்வுபூர்வமாக தமிழினத்தின் பக்கம் நின்று இலங்கை அரசின் கோரமுகத்தை வெளிக்கொண்டுவந்ததில் நக்கீரனுக்கு பெரும்பங்கு உண்டு என்பதையும் அதற்கு ஏராளமான ஆதார செய்திகளை தரமுடியும் என்பதையும் லட்சோப லட்ச நக்கீரன் வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

எந்திரன் - வியக்கும் ஹாலிவுட்


எந்திரன் என்றாலே சாதனையின் சிறப்பிடமாகிவிட்டது.படம், பாடல், தயாரிப்பு, விற்பனை உரிமை என பல சாதனைகளை படைத்துவரும் எந்திரனின் தற்போதைய சுவாரசியமானத் தகவல் கிளிமாஞ்சாரோ பாடல் பற்றியது.


எந்திரன் பாடல்களில் ஹைலைட் ஹிட்டான கிளிமாஞ்சாரோ பாடல் படமாக்கப்பட்ட இடத்தில், இதுவரை எந்தப் படமும் படமாக்கப்படவில்லை என்பது அறிந்ததுதான். இந்தப் பட்டியலில் ஜேம்ஸ் பாண்டின் ‘குவாண்டம் ஆஃப் சோலஸ்’ படமும் இடம் பெற்றுள்ளது என்பதே ஹாட் நியூஸ்.


பா.விஜய்யின் பாடல் வரிகளில், ஜாவித் அலி-சின்மயி பாடியுள்ள இந்தப் பாடல், பெரு நாட்டில் உள்ள உலகப் புகழ் பெற்ற ‘மச்சு பிச்சு’ மலைத்தொடரில் படமாக்கப்பட்டது. இந்தப் பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.


கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ் பாண்டின் குவாண்டம் ஆஃப் சோலஸ் படத்திற்கான சண்டைக் காட்சி ஒன்றினை இந்தப் பகுதியில் படமாக்க அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் படப்பிட்டிப்பை நடத்தியுள்ளது எந்திரன் படக்குழு. இதனால் வியந்துபோய் உள்ளது ஹாலிவுட்.


உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜேம்ஸ் பாண்டின் படத்திற்கே கிடைக்காத ஒரு அறிய வாய்ப்பு தமிழ்ப்பட சூப்பர் ஸ்டாரின் படத்திற்கு கிடைத்துள்ளது தமிழ்த் திரையுலகுக்குப் பெருமையே.


இப்படியும் எந்திரன் சாதனைப் பட்டியில் நீள்கிறது...

ஜெயம் ரவியின் புதிய தோற்றம்!


சமீபமாக ஜெயம் ரவி விழாக்களுக்கு தாடியோடு வருகிறார். என்ன தான் சங்கதி என விசாரித்ததில் அந்த தகவல் தேசிய விருது வரைக்குமான விஷயமுன்னு பிறகுதான் தெரிந்தது.





பருத்திவீரன் வெற்றிக்கு பிறகு அமீர், ஜெயம் ரவியின் நடிப்பில் இயக்குவதாக இருந்தப் படம் ‘ஆதிபகவான்’. ஆனால் சுப்ரமணிய சிவா இயக்கிய யோகி படத்தில் நாயகனாக நடிக்கவிருந்ததால் இந்தப் படம் இயக்குவதை தாமதப்படுத்தினார் அமீர். அதனால் ஜெயம் ரவியும் ’பேராண்மை’யில் நடிக்க சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து தில்லாலங்கடி படமும் முடித்துவிட்ட நிலையில் தற்போது அமீரின் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரவி.


இதில் ஜெயம் ரவி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பால்வடியும் தனது முகத்தின் கெட்டப்ப மாத்தி, படத்துக்கு ஏற்றாற்போல் தனது செட்டப்பையும் மற்றிக் கொண்டுள்ளாராம் ரவி. இந்த மாற்றங்களுக்காகவே அவர் வெளியில் தலைகாட்டுவதில்லையாம்.


இதே மாதிரிதான் ஆர்யாவும் ‘நான் கடவுள்’ படத்தில் நடித்தபோது இருந்தார். இப்பொழுதும்கூட அவன்-இவன் படத்தில் நடித்து வருவதால் தொப்பி அணிந்துதான் வெளியில் வருகிறார்.


பருத்திவீரனில் கார்த்தி தாடியுடன் அழுக்கா, அதே நேரம் கம்பீரமான கிராமத்து அழகனாய் நடித்திருப்பார். அந்தப் படத்தின் மூலம் கார்த்திக்கு தேசியவிருதையும் தாண்டிய புகழ் கிடைத்தது.


அதேபோன்ற ஒரு மாறுபட்ட, இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. நிச்சயம் தேசிய விருதுக்கான முயற்சியாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது ‘ஆதிபகவான்’.

நக்கீரன் அலுவலகத்தில் ரஜினி


செப்டம்பர் 3, 2010 !

ரஜினி வீட்டின் மிகப்பெரியவிழா. இளைய மகள் சவுந்தர்யாவை அஷ்வின் குமாருக்கு கன்னிகாதானம் செய்து தரப்போகிறார் ரஜினி.

“கடைசி பிள்ளையின் கல்யாணத்தை கடலை உடைத்து கொண்டாடு” என்று கிராமப்புறங்களில் கூறுவர். அதற்கு பிறகு பெரிய விசேஷம் எதுவுமில்லை என்பதால் வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் எனபதே இதன் பொருள்.

கிராமத்திலேயே இப்படி கொண்டாடப்படும் என்றால்... தமிழ்த் திரையுலகம் மட்டுமில்லாமல் இந்திய அளவில் ’கொண்டாடப்படும்’ சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் வீட்டு திருமணம்.... அதுவும் செல்ல மகள் திருமணம்...எப்படி இருக்கும்னு சொல்லணுமா என்ன?

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா - தனுஷ் திருமணத்திற்கு நண்பர்கள் உறவினர் தவிர்த்து அரசியல் அளவில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அழைக்கப் பட்டிருந்தனர்.

ஆனால் இந்தத் திருமணத்திற்கு எந்தப் பாகுபாடோ, வேறுபாடோ இன்றி திரைத்துறை, அரசியல், பத்திரிக்கைத்துறை என்று முடிந்தவரை அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார் பொறுப்பான அப்பா ரஜினி!

தமிழக முதல்வர் கருணாநிதி இல்லத்திற்கு ரஜினி நேரில் சென்று அவரை திருமணத்திற்கு அழைத்தார். அதே போல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் மனைவி சகிதமாக சென்று அழைப்பிதழ் வழங்கினார். இப்படி ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்பது மட்டுமில்லாமல் அனைத்துக் கட்சியினரையும் சந்தித்து வருகிறார்.

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனையும் நேரில் சென்று திருமணத்திற்கு அழைத்தார்.

ரஜினி திரைப்படங்களில் ஸ்டைலாக புகைப்பிடிப்பது இளைஞர்களிடையே தீய பழக்கத்தை தூண்டுகிறது என்று விமர்சித்தார் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சரான அன்புமணி.


அதற்குமுன்பு... ரஜினியுடன் இருந்த மோதல் காரணமாக, பாபா திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கட்சி பா.ம.க. ஒரு கட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் பாபா படப்பெட்டியையே தூக்கிக் கொண்டு போய் பரபரப்பு கிளப்பியவர்கள் பா.ம.க.வினர்.

அப்படிப்பட்ட பா.ம.க.வின் எதிர்காலம் என்று கொண்டாடப்படும் டாக்டர் அன்புமணியையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் ரஜினியும், அன்புமணியும் நெகிழ்ந்து போனார்களாம்.

இப்படி தன்னை எதிர்த்தவர்களையும் நேரில் சென்று தன் வீட்டு விசேஷத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்.

நக்கீரன் ஆசிரியரோடு நீண்ட பல வருடங்களாக நட்பு பாராட்டி வரும் ரஜினி, கடந்த வெள்ளிக்கிழமை (27ந் தேதி) நக்கீரன் அலுவலகத்திற்கே வந்து ஆசிரியர் உள்ளிட்ட நக்கீரன் குடும்பத்தினரை மகள் திருமணத்திற்கு வரும்படி அழைப்பு கொடுத்தார்.

சிங்கம் சிங்கிளாதான் வரும் - சிவாஜியில் தான் பேசிய வசனத்தை சொல்லாமல் சொல்வதாக இருந்தது அவரின் வருகை.


துணைக்கு யாரையும் அழைத்து வராமல்... சிம்பிளாக...தனி மனிதராக நக்கீரன் அலுவலகம் வந்தவர்.... பைண்டிங் ஊழியர்கள் தொடங்கி எடிட்டோரியல் வரை எல்லோரிடமும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.

லிப்ட் எல்லாம் எதுக்கு... அப்படியே நாலு ஸ்டெப் நடந்துடுவோம் என்று நாலு மாடியையும் நடந்தே ஏறினார் ரஜினி’ ஃபெண்டாஸ்ட்டிக்கா இருக்கு ஆபீஸ் அட்மாஸ்பியர். வாழ்த்துகள் கோபால்’ என்றபடி ஆசிரியரின் அறைக்குள் நுழைந்தவர்... கல்யாண பரபரப்புக்கு இடையிலும் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நக்கீரன் அலுவலகத்தில் இருந்த ரஜினி ஒரு மினி ஃபோட்டோ செஷனையே நடத்தி முடித்து விட்டார்.

வயசானாலும் உன் இளமையும்... ஸ்டைலும் மாறவே இல்லை படையப்பா....!