Thursday, August 19, 2010

குழந்தைகளிடம் மதுபாட்டில்! தடகள சர்ச்சை!

போர்க்குற்ற பூமியான இலங்கையில் யார் கால் வைத்தாலும் அவர்களை சர்ச்சைகள் விடாது போலிருக்கிறது. தற்போது சங்கட சர்ச்சையில் சிக்கியிருப்பவர்கள் தடகள வீரர்கள்.

கொழும்பில் நடந்த தடகள விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள 12 வயதுக்கும் குறை வான தமிழக சப்-ஜூனியர் இளம் வீரர்கள் 21 பேர் இலங்கைக்கு சென்றனர். திருச்சி தடகள சங் கச் செயலாளர் அண்ணாவியின் ஏற் பாட்டின் பேரில்... இவர்களைப் பயிற்சியாளர் சுகந்தி அண்ணாவி தான் தலைமை ஏற்று அழைத்துச் சென்றார்.

அங்கு நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு, 17 தங்கம், 6 வெள்ளி, 3 வெங்கலம் என பதக்கங்களை வாரிக் குவித்துவிட்டு... திருச்சிக்கு விமானம் மூலம் திரும்பினர். இவர்களை வரவேற்க... திருச்சி தடகள சங்கத்தி னர் ஏராளமாய்த் திரண் டிருக்க.. அங்கு நாமும் ஆஜரானோம்.

விமானத்தில் இருந்து இறங்கி தள்ளுவண்டி யுடன் வெளியே உற்சாக மாக இளம் தடகள வீரர்களான மாணவ- மாணவிகள் வெளி யே வர... அவர்களின் தள்ளுவண்டிகளைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியான அதிர்ச்சி. காரணம், 12 வயது கூட நிறையாத அந்த பிஞ்சு வீரர்களின் தள்ளுவண்டியில் உயர்தர வெளிநாட்டு மதுப்புட்டிகள் தலா 2 வீதம் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன..

நாம் பயிற்சியாளர் சுகந்தி அண்ணாவியிடம்... "மாணவ-மாணவிகள் சுமக்கக்கூடிய லக்கேஜா இது? என்ன கொடுமைங்க இது?' என்றோம்.

உடனே பதட்டமான சுகந்தி “""எனக்கே தெரியாம இப்படி நடந்துடுச்சி. இலங் கை ஏர்போர்ட்டில் ஒருத்தர் என்னை அணுகி ... இந்த மதுப் புட்டிகளை திருச்சிவரை கொண்டுவந்து தரமுடியுமான்னு கேட்டார். நான் முடியாதுன்னு மறுத்துட்டேன். ஆனா எனக்கே தெரியாம இந்தப் பிள்ளைகளிடம் அவர் இதை கொடுத்துவிட்டிருக்கார் போலிருக்கு. ரொம்ப சாரி சார்''’என்றார் கூலாய்.

ஏர்போர்ட்டிலிருந்த நமது நண்பரோ “""இலங்கையில் இருந்து வரும் ஒருத்தர் வரி இல் லாம தலா 2 மதுப்புட்டிகள் வீதம் கொண்டுவர முடியும். இதை சிலர் தவறாப் பயன்படுத்தி சும்மா வர்ற பயணிகள் மூலம் இதை இங்க கொண்டு வந்து வித்துடறாங்க. இதுக்கு இந்த பயிற்சி யாளரும் உடந்தையா இருந்திருக்காங்க போலி ருக்கு''’என்றார் அதிரடியாக. இவர் சொன்னது போலவே ஒரு நபர்.. வந்து மதுப்புட்டிகளை மாணவ-மாணவிகளிடமிருந்து வாங் கிக்கொண்டு போனார். இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்ததைக் கண்ட தடகள சங்கத் தலைவரான தேவாரம் "இலங்கை செல்ல எந்தவித முன்அனுமதியும் பெறாமல் சென்று... விளையாட்டுத்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும்விதமாக இளம் வீரர்கள் கைகளில்... மதுப்புட்டிகளை எடுத்து வந்ததால்... இதற்கு பொறுப்பான அண்ணாவி அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்' என்று அறிவித்து விட்டார்.

அண்ணாவி தரப்போ ""அனுமதி பெறவில்லை என்று தேவாரம் பொய் சொல்கிறார். கோவையில் நடந்த தடகள வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தேவாரம்... இலங்கையில் நிறைய பதக்கங்களைப் பெற வாழ்த்துகிறேன் என்று பாராட்டிப் பேசினார். அப்படிப்பட்டவர் இப் போது அனுமதி பெறவில்லை என் கிறார். தேவையில்லாமல் அண் ணாவியை சஸ்பெண்ட் செய்து பழிவாங்கிவிட்டார். இதனால் அப் செட்டில் இருக்கும் அண்ணாவி... ராஜினாமா செய்யப்போவதாக புலம்பிக்கொண்டிருக்கிறார்''’என்கிறது வருத்தமாக.

அட இப்படியும் கூட சர்ச்சைகள் வருமா?

No comments:

Post a Comment