Saturday, August 21, 2010

கொ.மு.க. பலம்? -விளாசும் தனியரசு!

தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தில் தன்னை பிரதான அரசியல் சக்தியாக அறிவித்து வருகிறது கொங்கு நாடு முன்னேற்றக் கழகம். அதற்கு காரணம், சென்ற பாராளு மன்றத் தேர்தலில் இக்கட்சி வாங்கிய 6 லட்சம் ஓட்டுக்கள்தான். ஆளுங்கட்சியான தி.மு.க. பொள்ளாச்சியிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு என நான்கு தொகுதி களிலும் தோல்வியடைந்து அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நான்கு தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் என கொ.மு.க. ஓட்டு வாங்கியதே தி.மு.க. கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் ஏற்கனவே பெற்ற ஓட்டு கணக்கை சொல்லி கூடுதல் இடம் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி என்ற நிலைபாட்டை எடுத்துள்ளது கொ.மு.க.
ஆனால், கொ.மு.க. பொய் பிரச் சாரத்தைப் பரப்பி அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு பிரதான கட்சிகளையும் ஏமாற்றப் பார்க்கிறது என அதிரடியாகவும் ஆவேசமாகவும் பேசுகிறார் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவ ரான உ.தனியரசு. அவரை சந்தித்தபோது...

கொ.மு.க. வின் போட்டி அமைப்பு என்பதாலே யே நீங்கள் அவர்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்களா?

தனியரசு : எங்கள் இயக்கம் கொ.மு.க. ஆரம்பிக்கும் முன்பே வலிமையான அமைப்பாக இயங்கி வருகிறது. நாங்கள் கவுண்டர் சமுதாயம் மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட சமூகத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறோம். உழைப்பாளிகள், தொழிலாளர்கள் எங்களோடு உள் ளார்கள். கொ.மு.க.வில் பணக்காரர்கள் உள்ளார்கள். கொ.மு.க. என்பது கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் அல்ல. அது "கோடீஸ்வரர்களின் முன்னேற்றக் கழகம்'. சென்ற பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் பெற்ற ஓட்டுகள் 6 லட்சம். அவர்கள் செலவு செய்தது ஐம்பது கோடிக்கும் மேல். நாங்கள் பெற்றது 1 லட்சம் ஓட்டுக்கள். எங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யக் கூட பொருளாதாரம் இல்லை. பெரும் தொழிலதிபர்கள், பஸ் ஓனர்கள், கல்வி நிறுவன அதிபர்கள் என கவுண்டர் சமுதாயத்தில் உள்ள பணக்காரர்கள் கோடி கோடியாக அவர்களுக்கு கொடுத்தார்கள். அதை வைத்துதான் அவர்களால் 6 லட்சம் ஓட்டுக்கள் வாங்க முடிந்தது. அதுவும் கவுண்டர் சமுதாய மக்களிடம் அவர்கள் செய்த பொய் பிரச்சாரம்தான். மக்களை நம்ப வைத்து ஓட்டு வாங்கினார்கள், இப் போது அப்படி இல்லை.

பொய் பிரச்சாரம் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?

தனியரசு : நகரம், கிராமம், ஊராட்சிப் பகுதி என வீதி வீதியாகப் போய் "இது நம்ம சாதிக் கட்சி, நம் சாதிக்கு உள்ள பலத் தை நாம் காட்ட இந்த தேர்தலில் கொ. மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள்' என்றார் கள் அது மட்டு மில்லை.

டெல்லி வரை கவுண்டர் சமுதாயத் தில் சக்தியை காட்ட இதுதான் சரியான வாய்ப்பு' என்றெல்லாம் பேசினார்கள். கவுண்டர் சமுதாய மக்களும் நம்பி ஓட்டுப் போட்டார்கள் அவ்வளவுதான். அந்த தேர்தலுடன் கவுண்டர் சமுதாய மக்கள் கொ.மு. க.வை மறந்து விட்டார்கள். அதற்கு உதாரணம், தொண் டாமுத்தூரில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏற் கனவே வாங்கிய ஓட்டிலிருந்து சரிந்து வெறும் 19 ஆயிரம் ஓட்டுக்கள் ஈஸ்வரன் வாங்கியிருந்தார். இத்தனைக்கும் அங்கு அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்திருந்தது. இதை விட கொடுமை உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் திருப்பூர் மையப்பகுதியில் நடந்த வார்டு எலக்ஷனில் மொத்தம் 6 ஆயிரம் ஓட்டு. அந்த வார்டு கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமியின் சொந்த வார்டு. இங்கு கவுண்டர் சமுதாய மக்கள் மட்டும் இரண்டாயிரம் பேர் உள்ளார்கள். இங்கு போட்டியிட்ட கொ.மு.க. வெறும் 35 ஓட்டுக்கள்தான் வாங்கியது. ஆக கவுண்டர் சமுதா யத்தினரின் நம்பிக்கையை பெற முடியாத பலவீனமான கட்சியாக மாறிவிட்டது கொ.மு.க.

தி.மு.க. ஆட்சியில் கொங்கு நாடு புறக்கணிக்கப் படுவதாக குற்றம் சுமத்துகிறார்களே...?

தனியரசு : இது அப்பட்டமான பொய். இந்த ஆட்சி யில்தான் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு ஏராளமான சலுகைகளை அரசு வழங்கியுள்ளது. ஜவுளி தொழிலுக் கும், தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கும் சிறப்பான திட் டங்களை அரசு வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியில் அதிகம் பயனடைந்தது கொங்கு மண்டலம்தான். பொருளாதார ரீதியாக இப்பகுதி அதிவேகமாக வளர்ந்து வருகிறது. லட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள் செழிப்பாக உள்ள பகுதியும் இதுதான். தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மட்டுமில்லாமல் வடமாநிலத்தவர்கள் கூட வேலை தேடி இங்குதான் வரு கிறார்கள். எல்லோருக்கும் வேலை கொடுத்து மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உத்தரவாதம் உள்ள பகுதி இது. வளர்ந்து வரும் நகரத்தில் உள்கட்டு மானங்கள், டைடல் பார்க், விசைத் தறிகளுக்கு இலவச மின்சாரம் -இப்படி ஏராளமான சலுகை களை அரசு கொடுத்துள் ளது. அதேபோல திருப் பூர் சாயக் கழிவுநீரை 1500 கோடி செலவில் கடலில் கலக்கும் திட் டம் என தி.மு.க. அரசு ஏராளமான திட்டங் களை செய்து வரு கிறது. எந்த கோரிக் கையும் வைக்க முடிய வில்லை என்பதால் பொத்தாம் பொது வாக பேசுகிறார்கள்.

கொங்கு நாடு என இவர்கள் கூறுவது கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களை. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வன்னியர் மற்றும் பிற சமூக மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். கொங்கு நாட்டுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை இந்த நான்கு மாவட்டங்களும் எப்படி கொங்கு நாடு ஆகும்? கொங்கு நாட்டை பிரித்து பெஸ்ட் ராமசாமியும், ஈஸ்வரனும் முடிசூட நினைப்பது பகல் கனவு.

40 தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்தி 25 சட்டமன்ற தொகுதிகளில் தனித்து நின்றே வெற்றிபெறுவோம் என கூறுகிறார்களே?

தனியரசு : கூட்டணியில் 25 தொகுதி கொடுக்கும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அவர்கள் கூறுவது பெரிய ஜோக். தனிப்பட்ட ஒரு தொகுதியில் கூட நின்று வெற்றி பெற முடியாது. கொ.மு.க. வை ஒரு கம்பெனி போலத்தான் பெஸ்ட் ராமசாமியும், ஈஸ்வரனும் நடத்துகிறார் கள்.
கொள்கை, லட்சியம் என்று எதுவுமே இல்லை. இப்போது அ.தி.மு.க.வுடன் நெருக்க மாக உள்ளார்கள். செங் கோட்டையனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் கள். அ.தி.மு.க. கூட் டணிக்குள் நுழைந்து இரண்டு அல்லது மூன்று சீட் வாங் குவதே அவர்களின் திட்டம். அதில் ஈஸ்வரனும், பெஸ்ட் ராமசாமியும் எம்.எல்.ஏ. ஆவதே குறிக்கோள்.

No comments:

Post a Comment