Sunday, August 29, 2010

அடங்காத வி.ஏ.ஓ.க்கள்!


நாமக்கல் கலெக்டர் சகாயத் திற்கு எதிராக தமிழகத்திலுள்ள அத்தனை வி.ஏ.ஓ.வினரும் திரண்டு நிற்கிறார்கள்.

""கலெக்டர் சகாயம், சங்கத்தி லுள்ள மூவரை சஸ்பெண்ட் செய் துள்ளார். பலரை டிரான்ஸ்பர் செய்திருக்கிறார். பலருக்கு மெமோ கொடுத்திருக்கிறார். எங்களது ஒரே கோரிக்கை கலெக்டர் சகாயத்தை டிரான்ஸ்பர் செய்ய வேண்டுமென்பதுதான். மேலிடத்தில் பேசிவிட்டோம். விரைவில் எங்கள் கோரிக்கை நிறைவேறும்!'' என்கிறார் நாமக்கல் மாவட்ட கிராம நல அலுவலர் (வி.ஏ.ஓ.) சங்க செயலாளர் பாலு.

மக்கள் நலத் திட்டங்கள், அரசின் சலுகைகள் அனைத்தும் மக்களுக்கு லஞ்சமில்லாமல் கிடைக்க வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்தி, மக்களோடு நெருங்கிப் பழகி, நேர்மையான அதிகாரி எனப் பெயர் எடுத்திருப்பவர் கலெக்டர் சகாயம்.

இவைகள்தான், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கலெக்டரைப் பகையாக்கி விட்டது. ""கலெக்டரை உடனே மாற்ற வேண்டும்!'' என்று மாவட்ட வி.ஏ.ஓ.வினர் பல போராட்டங்களை நடத்தினார்கள். தீர்மானம் போட்டார்கள். பிறகு மாநில அளவிலிருந்து வி.ஏ.ஓ.வினர் திரண்டு வந்து நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வி.ஏ.ஓ.வின ருக்கு எதிராக, கலெக்டர் சகாயத்திற்கு ஆதரவாக நாமக்கல் மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் போராடத் தொடங்கினர்.

இதை, நக்கீரனில் "லஞ்சத்தில் விளையாடும் வி.ஏ.ஓ.வினர்' என 4.6.10 இதழில் வெளியிட்டிருந்தோம்.

இதன்பிறகும் தொடர்ச்சியாக வி.ஏ.ஓ.வினர் சங்கம் போராட்டங்களை நடத்தியது. 16.8.10 அன்று ""நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்து, கலெக்டரை முற்றுகையிடுவோம்!'' என அறிவித் தார்கள்.

இதற்குப் பதிலடியாக, ""கலெக் டரை முற்றுகையிட வரும் வி.ஏ.ஓ.வின ரை நாங்கள் முற்றுகையிடுவோம்!'' என அறிவித்தார்கள் நாமக்கல் மாவட்ட விவசாயிகளும் பொதுநல அமைப்புகளும். இரண்டு தரப்புக்கும் தடை போட்டது போலீஸ்.

இதற்கிடையே நுகர்வோர் அமைப்பு மாதேஸ்வரி என்ற பெண்மணி உட்பட 14 விவ சாயிகளை 16-ஆம் தேதி கைது செய்து ஜாமீனில் வெளிவராதபடி சிறைக்கு அனுப்பியுள்ளது போலீஸ்.

கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்லுமுன் மாதேஸ்வரியைச் சந்தித்தோம்.

""வி.ஏ.ஓ.வினர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது கலெக்டரிடம் மனு கொடுப்பதற்கு நானும் இன்னும் சிலரும் சென்றோம். எங்களைத் தடுத்த வி.ஏ.ஓ.வினர் ""வந்து விட்டாள் சமூக சேவை செய்ய...'' என்று கேவலமாக திட்டி அடித்து வெளி யே தள்ளி விட்டார்கள். நான் போலீசில் புகார் செய்தேன். போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. மறுபடி கலெக்டர் ஆபீஸ் போனபோது, என்னைத் திட்டி அடித்த அதே வி.ஏ.ஓ.வினர் மீண்டும் மிரட்டி னார்கள். டி.எஸ்.பி.வேலனுக்கு போனில் தகவலைச் சொன்னோம். மீண்டும் நல்லிபாளையம் போலீ ஸில் புகார் கொடுக்கச் சொன்னார். ஸ்டேஷனுக்கு வந் தோம். டி.எஸ்.பி.யும் வந்தார். ""கலெக்டருக்கு எதிராக வி.ஏ.ஓ. வினர் போராட்டம் நடத்தினால் உங்களுக்கு என்ன வந் தது?'' என்று சத்தம் போட்டவர், மேலிடத்தின் உத்தரவு என்று எங்களை கைது செய்து எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்புகிறார்!'' என்றார்கள் மாதேஸ்வரி யும், சந்திரமுகிலனும், சேந்தை தங்கமும் பூபாலனும்.

டி.எஸ்.பி.யைத் தொடர்பு கொண்டோம்.

""14 பேர் கைதா? எனக்குத் தெரியாதே!'' என்றார்.

நாமக்கல் எஸ்.பி. பாரியைத் தொடர்பு கொண்டோம்.

""அப்படியா இப்ப நான் டி.எஸ்.பி. கூட்டத்தில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்!'' என்றார்.

கலெக்டர் சகாயமோ ""அரசுப் பணியாளர்கள் மக்களின் ஊழியர்கள்!'' என்கிறார். நாமக்கல்லில் ஜெயிக்கப் போவது தர்மமா? அதர்மமா?

No comments:

Post a Comment