Saturday, August 21, 2010

கசக்கும் இல்லறம்! இனிக்கும் கள்ள உறவு! -தலைகீழாகும் கலாச்சாரம்!


பார்த்தவுடன் பற்றிக்கொள்வது... பழக ஆரம்பித்ததும் பற்றிக்கொள்வது... செல் ஃபோனில் குரலைக்கேட்ட மாத்திரமே பற்றிக்கொள்வது... மிஸ்டுகால் மூலம் பற்றிக்கொள்வது... சாட்டிங் மூலம் பற்றிக்கொள்வது... என பலரையும் பலவகை களிலும் காதல் தீ பற்றிக்கொண்டு... பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது.

இத்தகைய காதல் இன்றைய வாழ்க்கையில் சகஜம்தான் என்றபோதும்... இதுபோன்ற காதல் அரங்கேற்றங்களைப் பார்க்கும் பெருசுகள்... "காமம் கண்ணை மறைக்கும்' ’என பெருமூச்சோடு சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் வகைதொகை இல்லாமல்.... வயது வித்தியாசம் இல்லாமல்... குடும்ப உறவுகள் பற்றியெல்லாம் யோசிக்காமல்... கல்யாணமான நிலையிலும் லவ் மாரத்தானில் ஓட ஆரம்பித்திருக்கும் சிலரைப் பார்க்கும் போது... காமம் கண்ணை மட்டுமல்ல; அது அன்பையும் அறிவையும் கௌரவத்தையும் மறைக்கும் என்றபடி... வெட்டவெளி நோக்கி வெறிக்கத்தோன்றுகிறது.

தமிழகம் முழுக்க பரவிவரும் இத்தகைய லஜ்ஜையற்ற காதல் கலாச்சாரத்துக்கு... சில சம்பவ சாட்சிகள்.

சம்பவம்-1 :

தேவராஜ்-கலைச்செல்வி தம்பதிகளுக்கு ஆணும் பெண்ணுமாய் இரண்டு அழகிய பிள்ளைகள். வடமாவட்ட தலைநகரம் ஒன்றில் சந்தோசமாக வாழ ஆரம்பித்தார்கள். பிள் ளைகளை நல்லமுறை யில் படிக்க வைக்க ஆசைப்பட்ட தேவராஜ்... ஃபாரினுக்குப் போனார். கடுமையாக உழைத்தார். வியர்வைத் துளிகளைத் தங்கக்காசு களாக மாற்ற ஆரம்பித் தார். இப்படி திரைகட லோடிச் சம்பாதித்த செல்வத்தை எல்லாம்... தன் மனைவி பெயரில்... வீடு நிலபுலன்கள் என வாங்கிப் போட்டு தமிழகத்தில் முத லீடாக்கினார். பிளாட் வாங்கி மாடிவீடும் கட்டினார்.

மகள் கல்லூரிக்குப் போக... மகன் பள்ளிப் படிப்பைப் படித்துவந்தான். இந்த நிலையில்.... இரண்டு வாரங்களுக்கு முன் மகளின் கல்லூரிக் கட்டணத்துக்காக நகைகளை அடமானம் வைத்து வருவதாகச் சொல்லி... இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற கலைச்செல்வி.. வீடு திரும்பவில்லை. பரிதவித்துப்போன தேவராஜும் அவரது பிள்ளைகளும் கலைச்செல்வியை பதட்டத் தோடு தேடினர். எந்தத் தகவலும் இல்லாததால்.. பயந்துபோன அந்தக் குடும்பம்... காவல் நிலையத்துக்குப் போனது.

"என் மனைவி ரொம்ப வெளி உலகம் தெரி யாதவ. அவ அடமானம் வைக்கப்போன நகை களைக் காணாப்போட்டுட்டாளோ என்னவோ. பயந்துபோய் வீடு திரும்பலை போலிருக்கு. நகை போனாப்போகுது. எங்களுக்கு என் மனைவி கலைச்செல்வி பத்திரமா வந்தாலே போதும்ங்க'’என்று தேவராஜ் கண்கலங்க ..... அவரது பிள்ளைகளோ ‘"சார்... சார் எப்படியாவது எங்க அம்மாவைக் கண்டு பிடிச்சிக் கொடுத்துடுங்க. அம்மா இல்லாம எங்களால இருக்கமுடியாது'’என்று காக்கிகளிடம் கெஞ்சினர்.

அப்போது ஸ்டேஷன் வாசலுக்கு வந்து நின்றது அந்தக் கார். அதிலிருந்து கலைச்செல்வியும்... அரசு சித்த மருத்துவர் பாஸ்கரனும் இறங்க.... தேவராஜ் குடும்பத்தினரின் முகத்தில் குபீரென நிம்மதி வெளிச்சம். காரணம்... பாஸ்கரன் தேவராஜ் வீட்டின் மாடிப் போர்ஷனில்தான் குடியிருக்கிறார். அவரைப் பார்த்ததும்.. தேவராஜ்...

""வாங்க டாக்டர். என் மனைவியைக் கண்டு பிடிச்சிக் கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி''’ என்று நெகிழ்ந்தார். பாஸ்கரோ பதில் ஏதும் சொல்லாமல் இறுக்கமான முகத்தோடு இருக்க....

கலைச்செல்வியோ ""என்னை நீங்க தேடிக்கிட்டு இருக்கீங்கன்னு கேள்விப்பட்டுதான் வந்தேன். இனி தேடாதீங்க. நானும் பாஸ்கரும் சேர்ந்து வாழப் போறோம். எங்க வாழ்க்கைல குறுக்கிடாதீங்க'' என்றாள் தெனாவெட்டாக.

இதைக்கேட்டு தேவராஜ் தலையில் இடிவிழுந்த மாதிரி நிற்க... அவரது மகள் கோபமாகி ""அம்மா உன் வயசென்ன? கல்யாண வயசில் உன் மகள் நான் இருக்கேன். அப்படியிருக்க... எங்களையெல்லாம் விட்டுட்டு... உன்னைவிட சின்ன வயசுக்காரனோட போறேன்னு சொல்றியே உனக்கு வெட்கமா இல்லையா''’என்றாள் காட்டமாக.

பள்ளியில் படிக்கும் மகனோ, ""அம்மா தயவுசெஞ்சு நீ வீட்டுக்கு வந்துடும்மா. இல்லைன்னா எல்லாரும் கேள்வி கேட்பாங்க. அவமானமா ஆய்டும்மா. நான் ஸ்கூலுக்குக் கூடப் போகமுடியாதும்மா. ப்ளீஸ் வந்துடும்மா''’என்று கண்ணீருடன் கெஞ்ச ஆரம்பித்தான்.

கலைச்செல்வியோ, போலீஸார் பக்கம் திரும்பி ""என்னை யாரும் கடத்தலை, என் விருப்பப்படிதான் போறேன். வழக்கெல்லாம் பதிவு பண்ணாதீங்க''’என்றபடி.. பாஸ்கரின் கையைப்பிடித்துக் கொண்டு, .பிள்ளைகளைக்கூட திரும்பிப் பார்க்காமல்... காரில் போய் ஏறி னாள். தேவராஜ் குடும் பம் தலைகவிழ்ந்து கண்ணீர் வடிக்க... காக்கிகள் அவர்களை ஆறுதல் படுத்த படாதபாடு பட்டனர்.

சம்பவம்-2 :

பெரம்பலூர் ஆயுதப்படையில் போ லீஸாக இருக்கிறார் கல்பனா. அவருக்கும் அவரது அத்தை மகன் சங்கருக்கும் திருமணம் ஆனது. ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் கல்பனா கர்ப்பமானார். இதைக்கண்டு மகிழ்ச்சியான கணவர் சங்கர்... ""இந்தத் தடவை நமக்கு ஆம்ப ளைப் பிள்ளைதான் பிறக்கப்போவுது.. வாயும் வயிறுமா இருக்கும் உன்னை கொஞ்சநாள் எங்க அம்மா வீட்டில் விடுறேன்'' என்று அழைக்க... ""நான் எங்கும் வரமுடியாது '' என்று அடம் பிடித்தார் கல்பனா. ஏன் என்று சங்கர் கேட்க... கல்பனாவோ... ""என் வயித்தில் வளரும் குழந்தைக்கு நீ அப்பா இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கும் டிராஃபிக் போலீஸ்காரர் காளிதாஸ் தான் அப்பா. அவரை விட்டுட்டு நான் எங்கும் வரமாட்டேன்''’ என்று கணவர் சங்கரின் தலையில் குண்டைப்போட்டார்.

இதைக்கண்டு கொதித்துபோன சங்கர்... என் மனைவியின் மனதைக் கெடுத்துவிட்டார் என டிராஃபிக் காளிதாஸ் மீது புகார் கொடுக்க... காக்கிகள் கண்டித்தனர். கல்பனா தன் முடிவில் உறுதியாக இருக்க.. காளிதாஸின் மனைவியையும் கூப்பிட்டு விசயத்தைச் சொன் னார்கள். காளிதாஸின் மனைவி யோ... ""எனக்கும் என் வீட்டுக் காரருக்கும் இத்தனை வருசம் ஆகியும் குழந்தை இல்லை. அதனால் கல்பனாவை அவ ருக்கு நானே ரெண்டாம் தாரமா கட்டிவச்சிடுறேன். கல்பனாவும் எங்க வீட்டிலேயே இருக்கட் டும்''’என்று வீடு ’டிராபிக்’ ஆவதைப்பற்றிக் கவலைப்படாமல் சொன்னார். இதைக்கேட்டு காக்கிகள் திகைத்துப்போக... கல்பனாவின் உறவினர்களும் சங்கரின் உறவினர்களும் "குடும்ப கௌரவத்தைக் கெடுக்காதே. உன் கணவரோடு வாழு'’என கல்பனாவை சமாதானப்படுத்த முயன்றனர். இந்தக் களேபரங்களைக் கண்டு கல்பனாவின் பெண்குழந்தை அழுதது. கல்பனாவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் காளிதாஸுடன் புறப்பட... போலீ ஸோ, கணவர் சங்கர் கொடுத்த புகாரைப் பதிவு செய்துவிட்டு... "அடச்சே'’என்று தலையில் அடித்துக்கொண்டது.

சம்பவம்-3 :

வெளிநாட்டில் வேலைபார்க்கும் ஜாபர் அலிக்கு... அழகிய குடும்பம். ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் ரோஜா மலர்கள் போல் இரண்டு குழந்தைகள். மனைவியையும் குழந்தைகளையும் தனியாக விட்டுவிட்டு... கடல்கடந்து வந்துவிட்டோமே என கவலைப்பட்ட ஜாபர்... தன் சித்திப் பையனை செல்போனில் கூப்பிட்டு "டேய் தம்பீ... அங்க அண்ணியும் குழந்தைகளும் துணையில்லாம தனியா இருக்காங்க. அடிக்கடி போய்ப் பார்த்துக்க. கடை கண்ணிக்குப் போக ஆள் இல்லை. அடிக்கடிபோய்... வீட்டுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்துடு'’என்று கேட்டுக்கொண்டார். தன் மனைவியையும் அடிக்கடி தொடர்பு கொண்டு... "கவலைப்படாதே கண்ணு. 6 மாசத்தில் வந்துடறேன். என் சித்திப் பையனை உனக்கு ஹெல்புக்கு வரச்சொல்லி யிருக்கேன் புள்ள. பயப்படாம இரு. நேரா நேரத்துக்கு சாப்புடு. பிள்ளைகளையும் பத்திரமா பார்த்துக்க'’என விசாரித்தபடியே இருந்தார்.

கொஞ்சநாள் ஆனது. ஜாபர் வியர்வை சிந்தி அனுப்பி வைத்த 2 லட்சம் பணம், 100 பவுன் நகைகளோடும்... தன் அண்ணி யான ஜாபரின் மனைவியோடும் எஸ்கேப் ஆகிவிட்டான் சித்திப்பையன். உறவினர்கள் மூலம் தகவல் கேட்டு... பகீராகி... பாதி உயிராய்... பிளைட் பிடித்து தன் வீட்டுக்கு ஓடிவந்தார் ஜாபர். அவரது இரண்டு குழந்தைகளும் வீட்டில் தனியாய்த் தவித்துக்கொண்டிருந்தன. அவர்களுடன் போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு... பிள்ளை களை எப்படி வளர்ப்பது? பிள்ளைகளை விட்டுவிட்டு மறுபடியும் எப்படி வெளிநாட்டுக்குப் போவது? என கலக்கத்தோடு கை பிசைந்துகொண்டிருக்கிறார் ஜாபர். திருச்சி மண்டலத்தில் நடந்த கதை இது.

காவல்துறை அதிகாரியான சிவசுப்பிரமணியன் சொல்கிறார். ""இப்படிக் கள்ளத்தொடர்பு வைத்து... குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஓடும் பெண்களைப் பிடித்து நாம் விசாரித்தால்... "எனக்கு கணவரோடு வாழப் பிடிக்க வில்லை. அதனால் எங்காவது லேடீஸ் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு என் மிச்ச காலத்தைக் கழிக்கப்போகி றேன்'’என்று பதில் விளக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு.... கள்ளக் காதலனோடு குடும்பம் நடத்தப் போய்விடு கிறார்கள். இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று புரியவில்லை. இவர்களால் இவர்களது பிள்ளைகள் படுகிறபாடுதான் சகிக்கமுடியாததாக இருக்கிறது'' என்கிறார் வருத்த வருத்தமாய்.

நெய்வேலியைச் சேர்ந்த சமூக சேவகர் மதியோ ‘""இப்போது கலாச்சாரச் சீர்கேடு ஏகத்துக்கும் பெருகிவிட்டது.. டி.வி.க்களிலும் திரைப்படங்களிலும் ஆபாசக் காட்சிகளுக்கு அளவே இல்லை. இது தவிர செல்போன்களில் காஞ்சி தேவநாத குருக்கள் தொடங்கி... நித்யானந்தா வரையிலான செக்ஸ் காட்சிகள் தாராளமாகப் புழங்குகின்றன. கணவன் அருகில் இல்லாத நிலையில் இதுபோன்ற படங்களைப் பார்க்கும் பெண்கள்.. புத்தி பேதலிப்புக்கு ஆளா கிறார்கள். அவர்கள் பார்க்கும் ஆபாசக்காட்சி கள் அவர்களைச் சறுக்கவைக்கிறது. பெண் களை வளைக்கவிரும்பும் வில்லன்களும்... இதுபோன்ற ஆபாசக் காட்சிகளை பெண் களின் பார்வைக்குக் கொண்டுபோய்... எதுவும் தப்பில்லை என்று மூளைச்சலவை செய்து... அவர்களை வீழ்த்துகிறார்கள். எனவே சமூகமே ஆபாசக் கலாச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஒவ்வொருவரும் நமக்கென்ன என்று போய்க்கொண்டிருந்தால்... நாளை நம்மைச் சார்ந்தவர்களே கூட தடம்மாறலாம். அவமானத்தைத் தேடித்தரலாம். முன்பெல் லாம் அதோ போறாரே அவருக்கு இரண்டு தாரம், மூணு தாரம் என்பார்கள். இப்போது அதோ போறாளே... என்று சொல்லுமள வுக்கு நிலைமை மாறியுள்ளது. இப்படி தடம்மாறிப் போகிறவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மோக வேகம் குறைந்ததும் புதிதாகத் தேடிக்கொண்ட திடீர் உறவுகள் புளிக்கத் தான் செய்யும்''’என்று எச்சரிக்கை மணியடிக்கிறார்.

குடும்பம் என்னும் அன்புக் கோட்டைக்குள் இருந்தபடியே... மன்மத வேதத்தை ஓதுவது போற்றுதலுக்குரியது. மன்மதத்துக்காக குடும்பக் கோட்டையை உடைத்தெறிவது தூற்றுதலுக்குரியது.

No comments:

Post a Comment