Thursday, August 19, 2010

"இளவட்ட' ரவுசு! -கசப்புணர்வான விழிப்புணர்வு!


ஒன்னரை லட்சம் இளைஞர்கள் சங்க மிக்கும் உலகத்தின் மிகப்பெரிய இளைஞர் திருவிழா என்ற முழக்கத்தோடு எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக இளவட்டம் எனும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 10,11,12 ஆகிய 3 நாட்கள் நடந்த இந்த இள வட்டம் நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டம், கொண் டாட்டம் என தூள் பறந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியைக் கண்ட எய்ட்ஸ் நோயாளிகளோ ஏகத்துக்கும் கொந்தளிக்கின்றனர்.

தமிழ்நாடு ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் (ஐஒய +யஊ) உள்ளோர் கூட்டமைப்பின் விழுப்புர மாவட்டத் தலைவர் நந்தகுமார், ""தமிழக இளைஞர்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காகத்தான் இந்த இளவட்டம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சம்புகல்லோலிகர் ஐ.ஏ.எஸ்.

இளவட்டம் என்னும் இந்த இளைஞர் திருவிழாவிற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து பள்ளி, கல்லூரிகளின் மாணவ-மாணவிகளை திரட்டியிருந் தனர். ஒன்னரை லட்சம் இளைஞர்கள் திரளும் திருவிழா என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் திரட் டப்பட்ட இளவட்ட கூட்டமோ... 15, 20 ஆயிரம் பேர் இருந்தனர். அதுவும் முதல்நாள் தவிர மற்ற 2 நாட்களிலும் 1000, 2000 என சுருங்கிவிட்டது இளவட்டத்தின் எண்ணிக்கை. காரணம், இளவட் டங்கள் சென்னையைச் சுற்றிப் பார்க்க ஜோடி ஜோடியாக கிளம்பிப் போய்விட்டனர். பல லட்சங்கள் இறைக்கப்பட்டும் ஒன்னரை லட்சம் இளைஞர்களை திரட்ட முடியவில்லை.

விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார நடனங்கள், மியூசிக் கச்சேரிகள் மூலம் இளைஞர் களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இந்த புரோக்ராமின் நோக்கம். அதன்படி போட்டிகள், நடனங்கள், கச்சேரிகள் நடந்தன. ஆனா, விழிப்புணர்வுக்காக எந்த புரோக்ராமும் நடக்கவில்லைங்கிறதுதான் சோகம். போட்டிகள், நடனங்கள், கச்சேரிகள் மூலம் எப்படி எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் என்பது யாருக்குமே விளங்கவில்லை.

எய்ட்ஸ் நோய் பற்றிய விளம்பர புரோச்சர்களும் நோட்டீஸ்களும் கொடுத்தனர். இதனை கல்லூரி இளைஞர்கள் அம்பு (ஏரோ) போல செய்து தங்களுக்குப் பிடித்தமானவர்கள் மீது எறிந்தனர்.

இளவட்டங்கள் பலர் "காதல் மொழி' யில்லயித்துக் கிடந்ததுதான் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம். அதுவும், நடன நிகழ்ச்சி களின்போது, கேலரியில் இருந்த லைட்டுகள் எல்லாம் அணைக்கப்பட்டுவிட்டது இள வட்டங்களுக்கு வசதியாகப்போனது. பலபேர் மெய்மறந்து உடல்மொழி வாசித்துப் பார்த்தனர். மொத்தத்தில் காதலர் பூங்கா வாக மாறிப்போனது நேரு ஸ்டேடியம்'' என்று தான் பார்த்ததை விவரித்தார் ஆவேசத்துடன்.

மேலும் இவர், ""மத்திய சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியிலிருக்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு வருஷத்திற்கும் 100-லிருந்து 150 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கவும், எய்ட்ஸ் நோயாளி களின் நலன்களுக்காகவும், அவர்களுக்குரிய சிகிச்சை முறைகளுக்காகவும் ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. ஆனா, அதிகாரிகள் இதில் அக்கறை காட்டுவதில்லை. மாறாக, விழிப்புணர்வுங்கிற பேரில் நிதியை கொள்ளை யடிப்பதில்தான் குறியாக செயல்படு கின்றனர். ஒதுக்கப்படும் நிதி எப்படி செலவழிக்கப்பட்டது என்று மத்திய-மாநில அரசுகளும் கேள்வி கேட்பதில்லை என்ப தால் அதிகாரிகள் புகுந்து விளையாடு கிறார்கள்.

எய்ட்ஸ் நோய்னா என்ன? அது எப்படி பரவுகிறது? எதனால் வருகிறது? அதன் கொடூரம் என்ன? என்பதெல்லாம் இன்றைய இளைஞர்களில் 99 சதவீதம் பேருக்கு விழிப்புணர்வு உண்டு. அப்படியிருந் தும் தொடர்ந்து விழிப்புணர்வுங்கிற பேரிலே செயல் திட்டம் போடுவது எதற்கு? இளவட்டம் நிகழ்ச்சிக்கு 10 கோடி ரூபாய் பட்ஜெட். ஊழல் செய்யவே விழிப்புணர்வு பயன் பட்டுக்கொண்டிருக்கிறது.

இன்றைக்கு தமிழகத்தில் 3 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள். இவர்களில் முதல்கட்ட சிகிச்சை, இரண்டாம் கட்ட சிகிச்சை, இறுதி கட்ட சிகிச்சை என பல சிகிச்சைகளை எடுத்துக்கொண்டி ருக்கிறார்கள். ஆனா, இவர்களுக்குத் தேவையான, மருந்து-மாத்திரைகள் போதிய அளவில் கிடைப்பதே இல்லை. இது குறித்து திட்ட இயக்குநர் சம்புகல்லோலிகரிடம் சொல்ல முயற்சித்தால்... எய்ட்ஸ் நோயாளிகளை சந்திக்க மறுப்பதுடன் அவர்களது நலனில் அக்கறை காட்டுவதில்லை. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் இருக்கும் அதிகாரிகள்கூட எய்ட்ஸ் நோயாளிகளைப் பரிவுடன் பார்ப்பதே இல்லை. விரட்டி அடிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். ஆக, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மீது மத்திய-மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தாத வரையில் எங்களுக்காக ஒதுக்கப் படும் நிதி... அதிகாரிகளின் பாக்கெட்டு களுக்குத்தான் போகுமே தவிர, தமிழகத்தில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண் ணிக்கையை குறைக்கவே முடி யாது'' என்கிறார் காட்டமாக.

இளவட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவ-மாணவிகள் (முகம் மறைக்கப் பட்டுள்ளது) சிலரிடம் பேசியபோது... ""எய்ட்ஸ் விழிப் புணர்விற்கான புரோக்ராம் என்றனர். இதில் கலந்துகொள்பவர்களுக்கு சான்றிதழ் தரப்படும். இது உங்களின் உயர் கல்விக்குப் பயன்படும்னு சொல்லி கூப்பிட்ட னர். அதனால் வந்தோம். ஆனா விழிப் புணர்வு தொடர்பா எதுவும் சொல்லித் தரப்படவில்லை'' என்றனர்.

மேலும் இது குறித்து விசாரித்தபோது... ""எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநராக விஜயகுமார் ஐ.ஏ.எஸ். இருந்தார். எய்ட்ஸ் நோயாளிகளின் நலன் களுக்காக நிறைய நன்மைகளைச் செய்துகொண்டிருந்தார். திடீரென்று அவரை மாற்றிவிட்டு சம்புகல்லோலிகரை நியமித்தது அரசு. விஜயகுமார் போல இவர் செயல்படு வாருன்னு எதிர்பார்த்தோம். ஆனா அப்படி நடக்கவில்லை. இதனால், சம்புகல்லோலிகருக்கு எதிராக எய்ட்ஸ் நோயாளிகள் போராடினோம். போராடிக்கொண்டிருக்கிறோம். இதனால், தமிழக அரசிடம் இவரது செயல்பாடுகள் குறித்து அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அதனை மறைத்து, அரசிடம் நல்ல பெயர் எடுக்கவே "இளவட்டம்' எனும் இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார் சம்புகல்லோலிகர்'' என்கின்றனர் ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் உள்ளோர் கூட்டமைப்பினர்.

No comments:

Post a Comment