Monday, August 16, 2010

சினிமாவில் நடக்கலையா? 12ஐ சீரழித்த 14

""பன்னண்டு வயசு கூட ஆகாத எங்க மகளை... அந்தப் படுபாவி கெடுத்துப்புட் டான்ய்யா'' -என மதுரை ஒத்தக்கடை காவல்நிலையத்துக்கு பதறியபடி ஓடிவந்தார்கள் வெச்சராயன், மலையாயி தம்பதியினர்.

""என்ன 12 வயசு கூட ஆகாத மகளையா ஒருத்தன் கெடுத்தான்?''’ என காக்கிகள் திகைத்துப்போய்க் கேட்க...

""ஆமாங்கய்யா. எங்க பஞ்சுக்கு 12 வயசு ஆக இன்னும் 18 நாள் இருக்கு. உலகம் தெரியாத பச்சக்குருத்துய்யா அது. அதைப் போயி அந்த தர்மாப் பய கெடுத்துப்புட்டான்ய்யா. இப்படி அநியாயம் பண்ணுவான்னு நாங்க நினைக்க லையே. இதை அவங்க அப்பன்கிட்ட போய்ச் சொன்னா... "உன் மகளை அடக்கிவைக்க வேண்டியதுதானே. எம்புள்ளைக்கு அவங்க அக்கா மகளோட கல்யாணம் நடக்கபோவுது. மரியாதையா ஓடிப்போயிடு'ன்னு அந்த அயோக்கியனைப் பெத்த அயோக்கியன் என்னையே அடிக்கவர்றான்''யா’என்றார் கண்ணீருடன் வெச்சராயன்.

""உன் மகளைக் கெடுத்த அந்த தர்மாப்பய எங்க இருக்கான்?''’ என மீசையை முறுக்கியபடி காக்கிகள் கேட்க...

""எங்க பட்டாளம் கிராமத்திலேதான்ய்யா இருக்கான்''’என்றார் வெச்சராயன்.

நகம் கடித்தபடி நின்றுகொண்டிருந்த 12 வயது சிறுமி பஞ்சுவை தனியே அழைத்த காக்கிகள்... என்ன நடந்தது என்றனர்.

பஞ்சுவோ ""எங்க அப்பாவும் அம்மாவும் பகல்ல வேலைக்குப் போய்டுவாங்க. நான் மட்டும்தான் வீட்டில் இருப்பேன். அப்ப அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து டி.வி.பார்க்கும் தர்மா.... உன்னை லவ் பண்றேன்னு சொல்லுவான். "அதெல்லாம் ஆகாது. நீ பேசாமப் போறியா.. எங்க அப்பா, அம்மாக்கிட்ட இதைச் சொல்லவா'ன்னு மிரட்டுவேன். அன்னைக்கு ’பசங்க’ படத்து காட்சிகளை டி.வி.யில் போட்டாகளா. அதைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்ப எங்க வீட்டுக்கு வந்த அந்த மொரட்டுப்பய தர்மா... மெதுவா என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். "பார்த்தியா சின்னச்சின்ன பசங்கள்லாம் கூட படத்தில் காதலிக்கிறாங்க. அதே மாதிரி சின்னப்பொண்ணான உன்னை நானும் காதலிக்கவா'ன்னு கேட்டான். நான் அவனை திட்டினேன். ஆனா அந்தப்பய... திடீர்னு என்னைக் கீழே தள்ளி என் வாயில் துணியைத் திணிச்சி... தப்புத் தப்பா நடக்க ஆரம்பிச்சிட்டான். எனக்கு வலில உயிரே போய்டிச்சி''’என்றாள் ஈர விழிகளோடு..

""பாருங்கய்யா... தர்மாங் கிற ஒரு அயோக்கியப் பய.. ஒரு சின்னப்பிள்ளையக் கெடுத்திருக்கான். வாங்க அவனை சுத்திவளைச்சி ஸ்டேஷனுக்கு கொண்டுவரலாம்''’’என்றபடி காக்கிகள் டீம் ஆவேசத்தோடு பட்டாளத்துக்குப் போனது.

அப்போது அங்கே ஒரு வீட்டுவாசலில் ஒரு சிறுவன் தென்பட... ""டேய் தம்பி. இந்த கிராமத்தில் யார்றா தர்மா? அவனை அடையாளம் காட்டு''’என்றனர் காக்கிகள்.

அந்தச் சிறுவனோ எச்சில் விழுங்கியபடி “"நாந்தாங்க தர்மா'’என்றான்.

""டேய்... லூசுப்பயலே... அந்த வெச்சராயன் மக பஞ்சுவை யாரோ ஒரு திமிர்பிடிச்ச மொரட்டுப் பய கெடுத்திருக்கான். அந்தப் பயலைக் கேட்டா.. நாந்தான் தர்மாங்கிறீயே. அவனைக் காட்றா''’என்றனர் பொங்கிவந்த சிரிப்போடு.

அந்தச் சிறுவனோ ""நாந்தாங்க அது. நானும் பஞ்சுவும் லவ் பண்ணிக்கிட்டிருந்தோம். அப்பத்தான் படத்துல வர்ற மாதிரி கொஞ்சம் தீவிரமா லவ் செஞ்சு பார்த்தேன்'' என்றான் கூலாக. இதைக்கேட்டு திகைத்துப்போன காக்கிகள்... “"உன் வயசென்னடா தம்பி?'’ என்றனர்.

அந்த தர்மாவோ "14 ஆவுதுங்க'’ என்றான்.

""உனக்கு வயசு 14. அந்த பாப்பாவுக்கு வயசு 12. மரப்பாச்சி பொம்மையைவச்சி விளையாடற வயசில் கற்பழிப்பா? வாடா ஸ்டேஷனுக்கு'' என்றபடி அவனை ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்தனர். காவல் நிலையத்தில்... ஜன்னல் வழியே பிராக்கு பார்த்துக்கொண்டிருந்த தர்மாவைப் பார்த்தோம். அவன் நம்மிடம் “"" "பருத்திவீரன்', "பசங்க' படத்தில் எல்லாம் சின்னப்பசங்க காதலிக்கிலையா? ஜாலியா இல்லையா? நாங்க பண்ணினா மட்டும் தப்பா?''’என்றான் அலட்டிக்கொள்ளாமல்.

காக்கிகளிடம் பேசியபோது ""இன்னும் கிறுகிறுப்பு அடங்கலை. டவுசர் சட்டையைக் கூட ஒழுங்கா போடத் தெரியாத பசங்கள்லாம் ஏடாகூடமாக் கூத்தடிக்கிதுங்க. இந்த வயசில் கற்பழிப்பு வழக்கு போட முடியுமான்னு தெரியலை. அந்தப் பிள்ளை யின் தொடையெல்லாம் நகக்கீறலா இருக்கு. பய மொரட்டுத்தனமாத் தான் அப்ரோச் பண்ணியிருக்கான். ரெண்டுபேரையும் மருத்துவ பரிசோத னைக்கு அனுப்பி... அதுக்கப்புறம்தான் கேஸைப் போடணும். மதுரையில் என்ன நடக்குதுன்னு ஒரு எழவும் புரியமாட் டேங்குது''’என்றபடி தலையில் கை வைத்த ஒரு காக்கி...

""ஏம்மா அந்தப்பய பார்வையே சரியா இல்லை. அவங்கிட்ட போ காதே''’என அங்கிருந்த ஒரு மகளிர் காக்கியை எச்சரித்தார்.

அடக் கொடுமையே!

No comments:

Post a Comment