Tuesday, August 24, 2010

18வயசு .....


ரேனிகுண்டா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஜானி. இவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்ரவர்த்தியின் பையன். ரேனிகுண்டா படத்தினை தயாரித்து அதில் தனது பையனையே நடிகனாக்கினார் சக்ரவர்த்தி. தற்போது நிக் ஆர்ட்ஸ்சின் அடுத்த தயாரிப்பான “18 வயசு” படத்திலும் ஜானியே நாயகன்.


ரேனிகுண்டா படத்தில் அமைதியான அதே நேரத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டும் பெற்றவர் ஜானி. இவருக்கு 18வயசு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரம் தரப்பட்டுள்ளது.காதலை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் ஜானி காதல் சைகேவாக நடிக்கிறார்.


ரேனிகுண்டா படம் போல் சிறப்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படும் 18 வயசு படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள்.


இந்தப் படத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களான ஆரியன் தினேஷ், சார்லஸ் போஷ்கோ ஆகிய இருவரும் இசையமைப்பாளர்களாக அறிமுகமாகிறார்கள். இவர்கள் விஜய்


ஆண்டனியிடமும், டி. இமானிடமும் பல ராப் பாடல்களை பாடியுள்ளனர்.


ராப் பாடகர்களான இவர்கள் இசையமைக்கும் இந்தப் படத்திலும் ராப்பிசையின் ஆளுமை உள்ளதாம். அப்படியான ஒரு பாடலை சிம்பு படியுள்ளார்.


இந்தப் பாடல் இளைஞர்களின் செல்போனின் கலக்கல் ரிங்டோனாவது நிச்சயமாம்.

No comments:

Post a Comment