Saturday, August 21, 2010

40 சீட்! வைகோ உறுதி!




""ஹலோ தலைவரே... .... சுதந் திர தின விழா கொடியேற்றதின் போது ஒரு மந்திரி நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையாகி டெல்லி வரைக்கும் விவாதத்தை உண்டாக்கி யிருக்குது.''

""கோப்புகள் சம்பந்தமான சர்ச்சைகளில் மந்திரிகள்சிக்குவது வழக்கம். இப்ப கொடியேற்றுவது கூட சர்ச்சையாயிடிச்சா?''

""பிரெஞ்ச் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரியில் ஆகஸ்ட் 16-ந் தேதிதான் சுதந்திர தினம். புதுச்சேரி யூனியனுக்குட்பட்ட ஏனம் பகுதியில் நடந்த சுதந்திர தினக் கொடியேற்றத்தில் அமைச்சர் மல் லாடி கிருஷ்ணராவ் கலந்துக்கிட்டார். வழக்கமா வெள்ளை குர்தா, வெள்ளை சட்டையில் இருக்கும் மந்திரி, அன்னைக்கு மிலிட்ரி டிரஸ் போட்டுக் கொண்டு வந்தார். அதோடு அச்சு அசல் போலவே ராணுவப்பதக்கங் களையும் சட்டையில் குத்தியிருந்தார். இதைப் பார்த்த அணி வகுப்பு வீரர்கள் உள்பட எல்லோ ருக்கும் அதிர்ச்சி. மந்திரியோ விறைப்பா நின்னு சல்யூட் அடித்தார்.''

""என்னதான் வாடகைக்கு மிலிட்ரி டிரஸ் எடுத்திருந் தாலும் அதில் ராணுவப் பதக்கங்களை குத்திக்கிட்டு ஒரு மந்திரி சல்யூட் அடிக்கலாமா?''

""விஷயம் தெரிஞ்சவங்க இதுபற்றி அவர்கிட்டே சொன்னப்ப, மலையாள நடிகர் மோகன்லால்கூடத்தான் மிலிட்ரி டிரஸ்போட்டுகிட்டு போஸ் கொடுத்தார்னு முன்னுதாரணம் காட்டியிருக்கிறார் மல்லாடி கிருஷ்ணராவ். மோகன்லாலுக்கு மிலிட்ரியில் கௌரவப் பதவி கொடுத்து, அதற்கான பயிற்சியும் கொடுத்துதான் உடுப்பு மாட்டிவிட்டாங்கங்கிற விவரத்தையும் மந்திரிகிட்டே எடுத்துச் சொல்லியிருக்காங்க. அவர் சட்டை செய்யலையாம். இந்த மிலிட்ரி சட்டை விவகாரம் இப்ப பெரிய விவகாரமாயிருக்கு. புதுவை உள்துறை அமைச்சர் வல்சராஜ், ஒரு மந்திரி இப்படி வந்தது தப்புதான். ஏன் இப்படி செய்தாருன்னு தெரியலை. விசாரிக்கிறோம்னு சொல்லியிருக்கிறார். ராணுவத்தினரோ ராணுவ சட்டத்தை மீறிய அமைச்சர் மல்லாடி மேலே நடவடிக்கை எடுக்கணும்னு டெல்லி வரைக்கும் முறையிட்டிருப்பதால் புதுவை அரசியல் பரபரப்பா இருக்குது.''

""95 வயதாகும் பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங்கின் புது புத்தகமும் பரபரப்பை கிளப்பியிருக்குதே!''

""தினமும் 2 பெக் போட்டுட்டுப் படுத்தால் தப்பே இல் லைன்னும், இந்த வயதிலும் தனக்கிருக்கிற பெண் நண்பர்கள்தான் தன்னோட சுறுசுறுப்புக்கு காரணம்னும் வெளிப்படையா பேசவும் எழுதவும் கூடியவர் குஷ்வந்த்சிங். அவர் சமீபத்தில் ஹூம்ரா குரோஷி என்பவரோடு சேர்ந்து எழுதியிருக்கிற புத்தகத்தில், இந்தியாவுக்கு கிடைத்த பிரதமர்களிலேயே மன்மோகன்சிங்தான் பெஸ்ட்டுன்னு சொல்லியிருக்கிறார். 1999-ம் வருஷத்து தேர்தலில் தெற்கு டெல்லியில் மன்மோகன்சிங் போட்டி யிட்டபோது, குஷ்வந்த்சிங் கிட்டே அவரோட மருமகன் வந்து, பிரச்சார கார் வாடகைக்காக 2 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். தேர்தலில் மன்மோகன் ஜெயிக்கலை. ரிசல்ட் வந்தபிறகு ஒருநாள், குஷ்வந்த்சிங் கிட்டே அப்பாயிண்ட் மென்ட் கேட்டிருக்கிறார் மன்மோகன்சிங். அந்த சந்திப்பின்போது தன் கையி லிருந்த கவரை குஷ்வந்த்சிங்கிடம் மன்மோகன்சிங் கொடுத்திருக்கிறார். பணத்தை செலவு பண்ண லைன்னு சொல்லி அதே கவரை மன்மோகன்சிங் அப்படியே திருப்பிக் கொடுத்ததைப் பார்த்ததும் குஷ்வந்த்சிங்குக்கு பயங்கர ஆச்சரியம்.''

""ஆமாப்பா... .. கொடுத்த கடனைக் கேட்டாலே சட்டையைப் பிடிக்கிற ஆட்கள் உள்ள காலத்தில், தேர்தலுக்குப் பணத்தைச் செலவு பண்ணலைங்கிறதால் அந்த நோட்டுகளை அப்படியே திருப்பிக்கொடுத்த ஒருத்தர் நமக்கு பிரதமரா வாய்த்திருப்பது பெருமைதானே!''

""தலைவரே.. பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சம்பந்த மிருப்பதா மக்கள் ஜனநாயக கட்சித் தலை வர் மதானி கேரளாவில் கைது செய்யப் பட்டு, கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கிறார். இந்த குண்டுவெடிப்பில் நேரடி தொடர்புடைய நசீர் என்பவன் சம்பவத்துக்கு முன்பும் பின்பும் மதானியை சந்தித்ததாகவும், கோவை குண்டு வெடிப்பு அனுபவத்தின் அடிப்படையில் எப்படி குண்டு வைப்பது, அதன் பின் எப்படி செயல்படுவதுன்னு மதானியிடம் நசீர் பயிற்சி பெற்றார்ங்கிறதும் குற்றச்சாட்டு. கோவை குண்டுவெடிப்பின்போதும் கேர ளாவில் சி.பி.எம். ஆட்சிதான். இப்பவும் சி.பி.எம். ஆட்சிதான். சி.பி.எம். தலைமையி லான இடதுசாரி முன்னணியில் மதானியின் கட்சி ஒரு அங்கம். அதனால் காங்கிரஸ் கட்சி இதை விவகாரமாக்க, கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க.வும் இதை கையில் எடுத் திருக்கிறது. அதனால் மதானி விவகாரத் தால, கேரளாவை மையமா வைத்து தேசிய அரசியல் சூறாவளியா சுழன்றடிக்குது.''

""தேசிய லெவலிலான செய்தியாகவே இருக்குதே... நம்ம மாநிலத்துப் பக்கம் வாப்பா..''

""வர்றேங்க தலைவரே.. .. நம்ம மாநில விஷயம்தான். ஆனா, நடந்தது டெல்லி யிலே. முரசொலி மாறனின் 76-வது பிறந்த நாளையொட்டி டெல்லி நாடாளுமன்ற தி.மு.க. அலுவலகத்தில் அவரோட படத் துக்கு சோனியா, அத்வானி உள்பட பல தலைவர்களும் மலரஞ்சலி செலுத்தினாங்க. இதற்கப்புறம் ஒரு இடத்தில் டி.ஆர். பாலுவை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பார்த்திருக்கிறார். வாங்க.. வாங்கன்னு கும்பிடுபோட்டு இளங்கோவனை டி.ஆர்.பாலு வரவேற்க, போடு றதையெல்லாம் போட்டுக் கொ டுத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி வரவேற்குறீங்களேன்னு சொன்ன இளங்கோவன், நான் தான் வசமா திட்டு வாங்கிக் கட்டிக்கிட்டேன்னு சொல்லியிருக் கிறார். கூட்டணிக்குள் சர்ச்சை உண்டாக்குற விதத்தில் பேசியதால், சோனியாகிட்டே வாங்கிக் கட்டிக்கிட்டதைத்தான் இளங்கோவன் சொல்றாருன்னு மற்ற எம்.பி.க்கள் பேசிக்கிட்டாங்க.''

""ம.தி.மு.க. மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடந்ததே, என்ன பேசினாங்களாம்?''

""கூட்டம் தொடங்கியதிலிருந்து முடிகிறவரைக்கும் வைகோ டென்ஷனாகவே இருந்திருக்காரு. அவரோட குரல் வழக்கம்போலவே உணர்ச்சிகரமா இருந்திருக்கு. போன எலெக்ஷனில் ரிசல்ட் வந்ததும், என் வீட்டுக்கு வந்து என்னை அடிக்கப்பார்த்தார் ஸ்டாலின் மருமகன் சபரீசன் என்று ஆரம்பித்து, ஸ்டாலின் மேலே கடும் விமர்சனம் வச்சிருக்காரு வைகோ. அதற்கடுத்து, நம்ம கட்சியின் அங்கீகாரம் ரத்தானதற்கு காரணம் சோனியாவும் தலைமைத் தேர்தல் ஆணையரா இருந்த நவீன்சாவ்லாவும்தான்னு சொல்லி, சோனியாவை கடுமையா விமர்சித்திருக்காரு.''

""கூட்டணி, சீட்டு இதுபற்றியெல்லாம் பேசியிருப்பாரே?''

""அதுதானே வந்திருந்தவங்களோட எதிர்பார்ப்பு. அ.தி.மு.க.வோடு காங்கிரஸ் கூட்டணி சேராதுன்னு சொன்ன வைகோவிடம் நமக்கு எத்தனை சீட்டுன்னு நிர்வாகிகள் கேட்டிருக்காங்க. உணர்ச்சிகரமான குரலெடுத்த வைகோ, நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமக்கு 40 சீட்டு தருவதாக உறுதியளித்திருக்கிறார். உரிய மரியாதையோடு நடத்துவார். அம்மாவின் துணையோடு, நாம் இழந்த அங்கீகாரத்தை பெறலாம்னு சொல்லி யிருக்கிறார். இதுபோன்ற கூட்டத்தில், சாதக பாதகம் பற்றி மற்ற நிர்வாகிகள் அலசுவாங்க. ஆனா ம.தி.மு.க.வில் இதுபற்றி பேசக்கூடிய எல்.ஜி, செஞ்சி, கண்ணப்பன் போன்ற விஷயம் தெரிஞ்சவங்க யாரும் இப்ப அங்கே இல்லை. அதனால், மற்ற யாரும் பெருசா எதுவும் பேசலை.''

""ம.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் நடந்த அதே 18-ந் தேதி போயஸ் கார்டனில் விருந்தாமே?''

""ஆமாங்க தலைவரே.. அன்னைக்குத்தான் சசிகலாவுக்குப் பிறந்தநாள். அதற்காக மதியம் கார்டனில் லஞ்ச். தினகரன், மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ், எம்.நடராஜன் தம்பி ராமச்சந்திரன் எல்லோரும் கலந்துக்கிட்டாங்க. அவங்ககிட்டே சசிகலா பேசுறப்ப, தேர்தல் வருது.. எல்லோரும் ஒற்றுமையா இருந்தாதான் ஜெயிக்க முடியும். கோஷ்டி அரசியல் நடத்தினா இன்னமும் கஷ்டப்படவேண்டியிருக்கும்னு சொல்லியிருக் கிறார். இந்த லஞ்ச்சில் ஜெ. கலந்துக்கலை. ஆனா, அதன்பிறகு சசிகலாவுக்கு தனியா வாழ்த்து சொல்லி, விருந்து சாப்பிட்டிருக்கிறார். விருதுநகரில் ஒரு கிளை செயலாளரோ ஜெ.வுக்கு பணி செய்வதை வாழ்நாள் பிரதிபலனாக கருதும் சசிகலா நூற்றாண்டு வாழ வாழ்த்தி பெரிய சைஸ் போர்டே வைத்திருக்கிறார்.''

""ஜெ.வுக்கு மதியம் விருந்து.. சாயங்காலம் நோன்புக் கஞ்சியா?''

""அ.தி.மு.க. சார்பில் ஜெ. கொடுத்த இஃப்தார் விருந்தை சொல்றீங்களா... வழக்கமா அ.தி.மு.க.வின் இஃப்தார் விருந்துன்னா கூட்டணிக் கட்சியின ரோடு மதுசூதனன், பொன்னையன் போன்ற நிர்வாகிகள்தான் கலந்துக்குவாங்க. எலெக்ஷன் வருதுன்னா மட்டும், ஜெ. பச்சை சேலை கட்டிக்கிட்டு விருந்துக்கு வருவார். இப்ப தேர்தல் நெருங்குவதால அதேபோல அவர் வந்துட்டார்.''

""அடுத்த தகவல்?''

""சேலத்தில் ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிடப்பட்டிருக்குது. லோக்கல் போலீஸ் விசாரிக்காமல் சி.பி.சி.ஐ.டி. விசாரிப்பது சேலம் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிற நிலையில்தான் கலைஞரின் சேலம் பயணம். இதற்காக ஃப்ளெக்ஸ் வைப்பதில் ஆளுங்கட்சிக்குள் கோஷ்டி மோதல். அதே மாதிரி, திருச்சிக்கு 8-ந் தேதி வரும் கலைஞருக்கு ஃப்ளெக்ஸ் வைப்பதிலும் ஆளுங்கட்சிக் குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு, ஒருவர் மண்டை உடைந்து ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக துணைமேயர் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்குது. எதிர்த்தரப்பு மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.''

""ஆளுந்தரப்புக்கு சொந்தக் கட்சிக்குள்ளான மோதல்களில்தான் கவனம். எதிர்க்கட்சிகளோ வேற ஒரு விஷயத்தில் கவனமா இருக்குது. அதைப் பற்றி நான் சொல் றேன். க்ரீன் ஃபீல்டு விமான நிலையம் அமைப்பதற்காக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நிலம் எடுக்கப்படும் விவகாரத்தில், விவசாயிகளையும் பொதுமக்களையும் கிளப்பிவிட்டு, உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதி அரசுக்கு எதிரா விவசாயிகள் போராடுற மாதிரி தமிழகத்திலும் நிலைமையை உண்டாக்கி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையால் தமிழக அரசை திணறடிக்கணும்னு எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆலோசித்துக்கொண்டிருக்குது.''

No comments:

Post a Comment