Monday, August 16, 2010

அன்பு அட்டாக்! வீரபாண்டி பஞ்ச்!


பா.ம.க.வை கூட்டணியில் இணைத்துக் கொள்வது என தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட தையும்... இதைத் தொடர்ந்து கோ.க.மணி தலைû மயிலான பா.ம.க.வின் ஐவர் குழு கலைஞரை இரு முறை நேரில் சந்தித்ததையும் நக்கீரனில் ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறோம்.

இந்த நிலையில்.. இந்த கூட்டணி முடிவை திசைமாற்றுவதுபோல்.... சேலத்தில் டாக்டர் அன்பு மணியின் பேச்சு அமைய... தி.மு.க., பா.ம.க. இடையே பரபரப்புத்தீ பற்ற ஆரம்பித்திருக்கிறது.

சேலம்-நாமக்கல் மாவட்ட பா.ம.க. பொதுக் குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மைக் பிடித்த அன்புமணி தடாலடியாகவே பேச்சைத் தொடங்கினார்.“""இங்கே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வருவதற்கு காரண மானவனே நான்தான். ஆனால் இங்குள்ள ஒரு அமைச்சர்(வீரபாண்டியார்) இதைத் தான் கொண்டு வந்ததாகத் தமுக்கடிக்கிறார். பென்னாகரம் இடைத்தேர்தலின்போது நம் கட்சிப்பிள்ளைகளிடம் பார்த்துக்கங்கப்பான்னு ஒரு வார்த்தைதான் சொன்னேன். அதற்கே அவர்கள்... "அண்ணே.. 4 பேர் மாட்டியிருக்கானுங்க. அப்படியே கொளுத்திட லாமா'ன்னு கேட்டாங்க. நான்தான் வேண்டாம்னு சொன்னேன். உள்ளூர் அமைச்சர் 100 பேரை அனுப்பினார். அவனுங்களை நம்ம பிள்ளைங்க அடிச்சே ஓடவிட்டானுங்க.. இதைப் புரிஞ்சிக்கங்க. நான் வாயைத் திறந்தா தமிழகமே தாங் காது''’என்றெல்லாம் ’காடுவெட்டி ரேஞ்சுக்கு’ அவர் பேச... உ.பி.க்கள் தரப்பில் அனலான அனல்.

நாம் அமைச்சர் வீரபாண்டியாரிடம் "சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை... சேலத்துக்கு கொண்டுவந்தவர் அன்புமணியாமே?' என்றோம். இதைக்கேட்டதும் காட்டமான வீரபாண்டியார், ""2004-ல் ஆ.ராசா மத்திய சுகா தார அமைச்சராக இருந்தபோது... எய்ம்ஸ் மருத்துவமனையைப் போல சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை 5 இடங்களில் கொண்டுவர முயற்சியெடுத்தார். காபினட்டிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த 5-ல் ஒன்று திருச்சியில் அமைக்கப்பட இருந்தது. பின்னர் அன்புமணி பொறுப்புக்கு வந்தபோது... "ஏம்ப்பா... அந்த மருத்துவமனையை சேலத் துக்கு கொடுத்தா சிறப்பா இருக்குமே'ன்னு கேட்டேன். சரிங்க அங்கிள்ன்னார். ஆனா திருச்சியில் உள்ளதை இங்க மாற்றாமல்... திருச்சிக்கு வாங்கிய அப்ரூவலையும் பிரதமர்ட்ட சொல்லாமல்... சேலத்துக்குன்னு தனியா ஒரு அப்ரூவலை வாங்கினார் அன்புமணி. இது தவறு என்ப தால் ராசா... டெல்லியில் புகார் கொடுத்தார். உடனே பதறிப்போன அன்புமணி... என்னிடம் புலம்ப.. நான் தலை வரிடம் சொல்லி ராசாவின் புகாரை வாபஸ் பெறவைத் தேன். அப்ப "மாநில நிதியை வேணும்னா ஒதுக்குறேன். அதில் திருச்சியில் அப்படியொரு மருத்துவமனையைக் கட்டிக்க'ன்னு சொல்லித்தான் ராசாவை கலைஞர் சமா தானப்படுத்தினார். இதுதான் உண்மை. இதை மறைத்து மட்டமான அரசியல் பண்ணப்பாக்குறார் அன்புமணி. அவருக்கு ராஜ்யசபா சீட்டை வாங்கிக் கொடுத்தவனே நான்தான். பதவி கிடைக்காதுன்னு அவர் டெல்லியில் சோகமா மூட்டை முடிச்சைக் கட்டியபோது கலைஞர்தான்.. "மந்திரி பதவி உடனே கிடைச்சிடுமா? பொறுமையா இரு. வாங்கித் தர்றேன்'னு சொல்லி வாங்கிக்கொடுத்தார். யாராக இருந்தாலும் நாவடக்கம் வேண்டும்''’ என்றார் சூடாக

No comments:

Post a Comment