
ஒரே படத்தில் ஹிட் ஆகி அதே வேகத்தில் குடும்ப வாழ்க்கைக்குப் போய் விட்டவரான நடிகை பாரதி மீண்டும் நடிக்க வருகிறாராம்.
அம்முவாகிய நான் படத்தில் விபச்சாரப் பெண்ணாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பாரதி. அவருக்கு சரியான எதிர்காலம் தமிழ் சினிமாவில் உள்ளது என்று பலரும் கணித்தார்கள்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தனது உறவுக்காரரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார் பாரதி.
இவரது கணவர் சமீபத்தில் பண மோசடி தொடர்பாக தலைமறைவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மீண்டும் நடிக்க வருகிறாராம் பாரதி.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ், மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். கடைசியாக, ஆயுதம் என்ற மலையாளப் படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்தேன்.
அம்முவாகிய நான் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டதால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். இப்போது ஒரு குழந்தைக்கும் தாயாகி எனது குடும்ப கடமைகளை முடித்து விட்டேன். அதனால் மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டேன்.
திருமணத்துக்குப் பிறகும் உடம்பை கவனமாக பார்த்துக் கொண்டதால் அப்படியேதான் இப்போதும் இருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு ஹீரோயினாக நடிப்பது சிரமம் என்பது தெரியும். அதனால் நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். முக்கியத்துவம் நிறைந்த கேரக்டர்கள் கொண்ட கதைகளை கேட்க ஆரம்பித்திருக்கிறேன் என்றார்.
மறுபடியும் நடிக்க வந்திருக்கிறாரே பாரதி, வீட்டில் ஏதாவது பிரச்சினையோ...?
No comments:
Post a Comment