Monday, August 16, 2010

சி.பி.எம். மாநாட்டில் கலைஞர் ஆதரவுக் குரல்!


""ஹலோ தலைவரே... விஜயவாடாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விரிவடைந்த மத்திய கமிட்டி கூட்டம் பற்றிய தகவலோடு லைனில் வந்திருக்கேன்.''

""ஆகஸ்ட் 7, 8, 9, 10 இந்த 4 நாட்களும் மத்திய கமிட்டி கூட்டம் நடந்திருக்குதே.. ரொம்ப காரசாரமான விவாதமா?''

""ஆமாங்க தலைவரே... பிரகாஷ்காரத் பொதுச்செயலாளர் ஆனபிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அலசுவதுதான் இந்தக் கூட்டத்தில் முக்கிய அம்சமா இருந்திருக்குது. அமெரிக்காவுடனான அணுசக்திகாக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் வாங்கிய நடவடிக்கை பற்றித்தான் மெஜாரிட்டியான தோழர்கள் பேசியிருக்காங்க.''

""என்ன சொன்னாங்களாம்?''

""அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்துப் போட்டதும் நாம் வாபஸ் வாங்கினோம். ஆனா, அதற்கு முன்னாடியே சர்வதேச அணுசக்தி கழகத்தோடு பல முறை இதுசம்பந்தமா பேச்சுவார்த்தை நடந்தது. அப்பவே நாம வாபஸ் வாங்கியிருந்தால் நாட்டைக் காப்பாற்றியிருக்கலாம். இப்ப நாம ஆதரவை வாபஸ் வாங்கியும் காங்கிரஸ் கட்சி தன்னோட ஆட்சியைக் காப்பாற்றிவிட்டது. ஏன் இந்த தாமதமான முடிவுன்னு கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்காங்க.''

""கட்சியோட நிர்வாகிகள் என்ன பதில் சொன்னாங்களாம்?''

""தப்புதான்னு சொல்லியிருக்காங்க. அதற்கப்புறம் மேற்குவங்காளத்தை மையமா வச்சு விவாதம் நடந்தது. இந்தியா முழுக்க சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நடக்கும் ஏகபோக கொள்ளையைத் தடுக்கணும்ங் கிறதுதான் நம்ம கட்சியோட கொள்கை. ஆனா, மேற்குவங்கத்தில் சிறு விவசாயிகளின் நலன்களை பாதிக்கும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அனுமதித்தது எப்படின்னு கேள்வி வந்திருக்குது. இதுவும் தவறுதான்னு நிர்வாகிகள் ஒப்புக்கொண்டாங்களாம். மேற்குவங்கத்தில், சிறுவிவசாயிகளுக்கு எதிரான கட்சியாக சி.பி.எம். செயல் படுகிறதுங்கிறதுதான் மாவோயிஸ்ட்டுகள் வைக்கும் குற்றச்சாட்டு. அது உண்மைதான் என்பதுபோல சி.பி.எம். நிர்வாகிகளே விஜயவாடா கூட்டத்தில் ஒப்புக்கொண்டது தோழர்களைஅதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைய வைத்திருக்குது. இதற்கப்புறம், ஒவ்வொரு மாநிலத்திலும் சி.பி.எம். எடுத்துள்ள நிலைப்பாடு பற்றி அலசப் பட்டது.''

""தமிழகம் பற்றியும் பேசியிருப் பாங்களே?''

""கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான சீதாராம் யெச்சூரிதான் தமிழக நிலைப்பாடு தொடர்பா கூர்மையா கேள்விகள் எழுப்பினார். அதாவது, காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. நீடிக் கிறதுங்கிறதாலதான் நாம் அ.தி.மு.கவோடு கூட்டணி அமைத்தோம். பக்கத்திலே இருக்கிற கேரளாவில் தேசியவாத காங் கிரசோடு நம்ம கட்சி தலைமையிலான இடதுமுன்னணி கூட்டணி அமைத்திருக் குது. அதே தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்ட்ராவில் காங்கிரசோடு கூட்டணி அமைத்து, மத்தியில் காங்கிரசின் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருக்குது. தி.மு.க. விஷயத்தில் ஒரு நிலைப்பாடு, தேசியவாத காங்கிரஸ் விஷயத்தில் இன் னொரு நிலைப்பாடுன்னு ஏன் இந்த முரண்பாடுன்னு கேட்ட யெச்சூரி, தேசிய தலைவர்களை நம் விருப்பத்துக்கு கையாள் வது தவறு. கலைஞர், சரத்பவார், லாலு, முலாயம் இவங்களெல்லாம் ரொம்ப முக்கியமான ஜனநாயக சக்திகள். அ.தி.மு.க.ங்கிறது தொழிலாளர் விரோத கட்சி. அதன் தலைவர் ஜெயலலிதா நம்மை பல முறை அவமானப்படுத்தி யிருக்கிறார். அவருக்கும் நம்பிக்கைக்கும் ரொம்ப தூரம்னு சொல்லியிருக்கிறார்.''

""இதற்கு கட்சியின் தரப்பிலிருந்து என்ன பதில் வந்ததாம்?''

""தமிழகத்தைச் சேர்ந்த மத்திய கமிட்டி உறுப்பினரான டி.கே.ரங்க ராஜன்தான்யெச்சூரிக்கு உடனடியா பதில் சொல்லியிருக்கிறார். கலைஞர் நம்ம கட்சி எம்.எல்.ஏ.வையே தன் பக்கம் இழுத்து, நம்மை பலவீனப் படுத்துறார். நம்ம கட்சிப் பத்திரிகை யான தீக்கதிருக்கு கொடுக்கப்பட்ட அரசு விளம்பரங்களையும் நிப்பாட் டிட்டாங்க. இதனால பத்திரிகையை நடத்துவதே சிரமமா இருக்குது. தி.மு.க. தலைமையின் இந்த மாதிரியான போக்குகளால்தான் நாம் அ.தி.மு.க. கூட்டணியைத் தொடர வேண்டும்னு சொல்லியிருக்கிறார். சி.பி.எம். விரிவடைந்த மத்திய கமிட்டியும், கூட்டணி விஷயமா தமிழகத்தில் சி.பி.எம். நிலையில் எந்த மாற்றமும் இல்லைன்னு முடி வெடுத்திருக்குது.''

""அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணின்னு சி.பி.எம். முடிவு செய்யுது. ஆனா, அ.தி.மு.க. தரப்பில் காங்கிரஸ் கட்சி தங்கள் பக்கம் வரும்ங்கிற எதிர்பார்ப்பு இன்னமும் இருக்குதே?''

""தலைவரே... ... டெல்லியில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டில் தி.மு.க. எம்.பிக்கள் கூட்டம் நடந்தப்ப கூட்டணி பற்றி டி.ஆர்.பாலு விளக்கமா பேசியிருக்கிறார். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகத்தான் இருக்குது. ஆனா, நம் உறவை சிக்கலாக்கணும்னு எல்லாத் தரப்பிலிருந்தும் முயற்சிகள் நடக்குது. அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சி பற்றியோ அதன் தலைவர்கள் பற்றியோ விளையாட்டா கூட யாரும் கமெண்ட் அடிக்கவேணாம்னு எம்.பி.க்கள் கூட்டத்தில் பாலு அறிவுறுத்தியிருக்கிறார். கூட்டத்திற்கு வந்த எம்.பி.க் களுக்கு அழகிரி விருந்து வைத்ததோடு, காஸ்ட்லி பேனா செட்டும் அன்பளிப்பா கொடுத்தாராம்.''

""டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடந்த அதே நாளில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டம் தோல்வின்னு அரசுத் தரப்பும், வெற்றின்னு எதிர்த்தரப்பும் சொல்லுதே.. உண்மை நிலவரம் என்ன?''

""தலைவரே... தமிழ்நாட்டில் மொத்தம் 6 ஆயிரத்து 717 டாஸ்மாக் கடைகள் இருக்குது. அதில் 11-ந் தேதி மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை 200. அதையும் மதியத்துக்குப் பிறகு மாற்று ஆட்களை வைத்து அரசாங்கம் திறந்திடிச்சி. ஸ்டிரைக்கில் கலந்துக்கிட்ட 300 பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டி ருக்குது. தி.மு.க., காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து கட்சிகளின் தொழிற்சங்கங்களும் கலந்துக்கிட்ட இந்த வேலைநிறுத்தம் ஏன் வெற்றி பெறலைன்னு டாஸ்மாக் பணியாளர்கள் வட்டாரத்திலேயே விசாரித்தேன்.''

""என்ன சொல்றாங்க?''

""டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் கம்மி. ஆனா, கடையிலிருந்து கிடைக்கிற மாத வரும் படிங்கிறது சம்பளத்தை விட 3, 4 மடங்கு இருக்கு தாம். எப்படியும் தங்க ளோட சம்பளத்தை அரசாங்கம் உயர்த்தப் போறதில்லை. ஸ்டிரைக் அது, இதுன்னு பிரச் சினை பண்ணி, வேலை யை பறிகொடுத்து, வரும் படியையும் இழந்திடணு மாங்கிற பயத்தில்தான் பெரும்பாலான பணியா ளர்கள் ஸ்டிரைக் நாளில் வேலைக்கு வந்துட்டாங் களாம்.''





""அடுத்த மேட்டருக்கு போலாமா? ஆகஸ்ட் 14-ம் தேதி சனிக்கிழமை திருச்சியில் ஜெ. கலந்துகொள்ளும் அ.தி.மு.க. கண்டனப் பொதுக் கூட்டம், கோவையை மிஞ்சிய கூட்டமா இருக்க ணும்னு ஏற்பாடுகள் பலமா நடந்துக்கிட்டி ருக்குதாமே?''

""ஆமாங்க தலை வரே... ... கோவையை விட 2 மடங்கு அதிக கூட்டத்தைக் கூட்டணும்னு கார்டனிலிருந்து உத்தரவு வந்திருப்பதால், ஒரு வாரமா ஓ.பன்னீர், செங்கோட்டையன், ஜெயக் குமார் மூணுபேரும் திருச்சியிலேயே தங்கி, சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி, பணப் பட்டுவாடா பண்ணி யிருக்காங்க. பண விஷயத்தில் சில இடங்களில் வெளிப்படையாகவே மோதல் வெடித்திருக்குது. எப்படியும் கூட்டத்தைக் கொண்டு வந்திடணும்ங் கிறதில் தீவிரமா இருக்காங்க.''

""வரும் சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் எங்கே போட்டியிடப் போறாருங்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்குது. அது பற்றி சொல்றேன். ரிசர்வ் தொகுதியா இருந்து பொதுத் தொகுதியாகியிருக்கும் அவரோட திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவாருன்னு பேச்சு இருந்தது. ஆரம்பத்தில் கலைஞரிடமும் அப்படி ஒரு எண்ணம் இருந்ததாம். இப்ப அவர் கவனம் தனது பழைய தொகுதியான தஞ்சாவூர் பக்கம் திரும்பியிருக்குது. சமீபத்தில், தஞ்சாவூரில் பிரம்மாண்ட பொதுக்கூட் டத்தில் கலந்துக்கிட்ட கலைஞர், இப்ப தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை அரசே நடத்தும்னு அறி வித்து, அதில் கலந்துக்கவும் போகிறார். பொதுவா, தஞ்சாவூர் பெரிய கோயில் விழான்னா அரசியல்வாதிகள் சென்டி மென்ட்டா ஒதுங்குவாங்க. ஆனா, அதை மீறி கலைஞர் கலந்துகொள்ள விருப்பதன் மூலம், அங்கேதான் போட்டியிடப்போறாருங்கிற பேச்சு வலுவடைந்திருக்குது.'"

மிஸ்டுகால்!



சென்னை விமானநிலையத்தை விரிவாக்குவதற்காக 400 கிராமங்களை கையகப்படுத்த நினைக்கிறது மத்திய அரசு. இதற்காக சர்வே எடுக்க வந்த அதிகாரிகள் முன் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், திருவாலங்காடு ஒன்றியத்து மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். கலெக்டரிடம் மனு கொடுங்கள் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, 12-ந்தேதி திருவள்ளூர் கலெக்டரிடம் மனுகொடுக்க கிராமத்தினர் 2000 பேர் திரண்டு வந்தனர். அவர்களைத் தடுத்த போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஏ.டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையிலான போலீஸ் படை, வழக்கறிஞர் தாமோதரன் மீதும் பொதுமக்கள் மீதும் சரமாரியாக தடியடி நடத்தியது. இதில் பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்பட நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த தடியடி சம்பவம் பெரும் பதட்டத்தை உண்டாக்கியுள்ளது.


கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு 12-ந்தேதி சென்னையில் நடந்தது. இதில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், ""தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை, அ.தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை. காங்கிரசிலிருந்து பேசுறாங்க. தே.மு.தி.க.விலிருந்து பேசுறாங்க. யார் நமக்கு 25 சீட் தர்றாங்களோ அவங்களோடுதான் கூட்டணி'' என்றார்.



அகதிகளாக படகில் வந்த 75 ஈழத்தமிழர்களை மலேசிய அரசு சிறைப்பிடித்து வைத்ததைப் பற்றி முதன்முதலில் வெளிப் படுத்திய நக்கீரன், அந்தத் தமிழர்களின் விடுதலைக்காக, பினாங்கு மாநில துணை முதல்வர் உள்ளிட்டோர் வாயிலாகத் தொடர்ந்து முயற்சித்து வந்தது. சிறைப்படுத்தப்பட்ட ஈழத்தமிழர்கள் கடந்த 12-ந் தேதியன்று மலேசிய அரசால் விடுதலை செய்யப்பட்டனர்

No comments:

Post a Comment