Sunday, August 29, 2010

நக்கீரன் செய்தி! கலைஞர் அறிவிப்பு!


ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் கடந்த வருடம் ஊதியத்தை உயர்த்திக் கொடுத்த கலைஞர், தற்போது அந்த ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளையும் களைந்து மேலும் நன்மை செய்திருக்கிறார். இதனால் ஏகத்துக்கும் உற்சாகத்தில் இருக்கிறார்கள் அரசு ஊழியர்கள்.

நக்கீரன் தேர்தல் கள ஆய்வில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பவைகளின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதையும் எழுதியிருந்தோம். அதில் அரசு ஊழியர்களின் ஆதரவு யாருக்கு? என்கிற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் ""ஊதிய விகிதங்களில் உள்ள முரண் பாடுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டுமென்று அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனை தமிழக அரசு நிறைவேற்றும்பட்சத்தில் அரசு ஊழியர் களின் முழுமையான ஆதரவு தேர்தல் களத்தில் தி.மு.க.வுக்கே எதிரொலிக்கும்'' என்று சுட்டிக்காட்டியிருந்தோம்.

இதனைத் தொடர்ந்து, அது குறித்து தீவிர கவனம் செலுத்திய கலைஞர், ""தற்போது அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப ஒருநபர் குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதாக அறிவித் துள்ளார். இதனால் ஏகத்துக்கும் துள்ளிக் குதிக்கின்றனர் அரசு ஊழியர்கள்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில செயலாளர் சாமிநாதன், ""மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தில் பல முரண்பாடுகள் இருப்பதாக அரசின் கவனத் துக்கு கொண்டு சென்றோம். இதனைக் கருத்தில் கொண்டு ஆராய, தொழில்துறை செய லாளர் ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்தார் கலைஞர்.

அரசு ஊழியர் சங்கங்களை அழைத்து விவாதித்தது ஒருநபர் குழு. அப்போது, ஊதிய விகிதங்களில் உள்ள முரண்பாடுகள், தவறுகள் அனைத்தையும் விரிவாக எடுத்துச் சொன் னோம்.

அதனை ஏற்றுக்கொண்ட ஒருநபர் குழு, தனது அறிக்கையை கடந்த ஏப்ரலில் அரசிடம் சமர்ப்பித்துவிட்டது. ஆனால், அதுகுறித்து எவ்வித முடிவையும் அரசு எடுக்காத சூழலில், தற்போது ஒருநபர் குழுவின் அத்தனை பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்வதாக கலைஞர் அறிவித்திருப்பது எங்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. நக்கீரன் செய்திதான் இதற்குக் காரணம். நக்கீரனுக்கு எங்கள் நன்றிகள்'' என்கிறார் உற்சாகமாக. அரசு ஊழியர்கள் தெரிவித்த ஊதிய முரண் பாடுகள் களையப்பட்டிருப்பதால், வரு ஷத்துக்கு 223 கோடி ரூபாய் கூடுதல் தொடர் செலவினமாக அரசுக்கு ஏற்படும். அதேசமயம், 2 லட்சம் அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் பலன் பெறுவார்கள்.

No comments:

Post a Comment