Saturday, July 31, 2010

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயல்வது தேவையற்றது -கேபி பகுதி -2

இலங்கையின் http://www.shockan.blogspot.com/ நாளிதழுக்கு கொடுத்துள்ள பேட்டிமுடிந்து போன போராளி இயக்கத்திற்கு (விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிற்பிகளில் ஒருவரான கேபி, அந்த இயக்கத்தைத்தான் இப்படி போராளி இயக்கம் என்று கூறுகிறார்) மீண்டும் உயிர் கொடுக்க முனைவது, பல்வேறு பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும் என்று கூறியுள்ளார் கேபி.ராணுவப் பிடியில் சிக்கியுள்ள கேபி என்கிற குமரன் பத்மநாதன் இலங்கையின் http://www.shockan.blogspot.com/ நாளிதழுக்கு கொடுத்துள்ள பேட்டியின் 2ம் பாகம்:4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா? ராணுவத்தை தடுக்க முடியவில்லை என்று உங்களது தலைமை உங்களிடம் கூறியதா?பிரபாகரன், அவரது முக்கியத் தளபதிகள், புலம் பெயர்ந்த தமிழர்களில் சில பிரிவினர், தமிழ்நாடு நமக்கு உதவும் என நம்பியிருந்தனர். தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கு உதவ முன்வரும், பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவார் என அவர்கள் பெரிதும் நம்பினர்.நாங்களும் கூட சில ஐ.நா. அதிகாரிகளை அணுகினோம், கிழக்கு தைமூர் அதிபரை அணுகினோம். ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடன்பாட்டை ஏற்படுத்த முயன்றோம். இந்த நேரத்தில்தான் 2009ம் ஆண்டு மே மாதம் 3வது வாரத்தில் விடுதலைப் புலிகள் வசம் இருந்த கடைசிப் பகுதியையும் ராணுவம் சுற்றி வளைத்து விட்டது.தற்போது விடுதைலப் புலிகளின் ராணுவ கட்டமைப்பு இல்லை. இந்த நிலையில், அரசுடன் இணைந்து செயல்பட புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்வருவார்கள் என கருதுகிறீர்களா?புலம் பெயர்ந்த மக்களின் மன நிலையில் மாற்றம் வர வேண்டியது அவசியம். விடுதலைப் புலிகளின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைந்து போய் விட்டது. எனவே புதிய சூழ்நிலை குறித்து பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். தற்போதைய நிலையை புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் சிந்தித்துப் பார்க்க முன்வர வேண்டும். அதற்கேற்ப அவர்கள் செயல்பட வேண்டும்.முடிந்து போன போராளி இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைவது, பல்வேறு பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும். எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம்.இப்போது ராணுவரீதியான பலம் விடுதலைப் புலிகளிடம் இல்லை என்பதால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.இந்த இடத்தில்தான் நாங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட விரும்புகிறோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு திரும்புவது தொடர்பான பணிகளில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள வடக்கு கிழக்கு மறு சீரமைப்பு வளர்ச்சிக் கழகம் தயாராக உள்ளது. இந்த வாய்ப்பை புலம் பெயர்ந்த தமிழர்கள் விட்டு விடக் கூடாது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுதந்திரமாக நடமாட முடியும் என யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.வெளிநாடுளிலிருந்து ஆயுதங்களைப் பெற்று அனுப்புவதில் நீங்கள் மிகவும் வெற்றிகரமானவர் என்று அறியப்பட்டவர் நீங்கள். அப்படி இருக்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவரை உங்களது இடத்தில் அமர்த்தினார் பிரபாகரன். எப்போது அதைச் செய்தார், ஏன் செய்தார்?2003ம் ஆண்டு நான் நீக்கப்பட்டேன். வெளிநாட்டுக் கட்டமைப்பை காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார் பிரபாகரன். உளவுப் பிரிவினரின் தொடர் கண்காணிப்பு காரணமாக நான் மிகவும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். (இலங்கை உளவுப் பிரிவினரின் திறமை காரணமாகத்தான் வெளிநாடுளில் புலிகள் அமைப்பின் செயல்பாடுகள் முழுமையாக செயலிழந்து போனதாக கூறியுள்ளாராம் கேபி)உங்களது ஆதரவாளரான ரணில் விக்கிரமசிங்கே தேர்தலில் தோற்றது ஏன்?அப்போதைய பிரதமர் உறுதியானவராக இல்லை என்று பிரபாகரன் கருதினார். ஈழப் பிரச்சனையை ரணில் விக்கிரமசிங்கேவால் தீர்த்து வைக்க முடியாது என்பது அவரது எண்ணம். இதன் விளைவாக மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற முடிந்தது. ராஜபக்சேவுக்கு முன்பு இருந்த தலைவர்களை எளிதில் வென்ற பிரபாகரனுக்கு ராஜபக்சேவை வெல்ல முடியவில்லை.2006 ஆகஸ்ட் மாதம் மீண்டும் சண்டைகளில் ஈடுபடுவதற்கு முன்பு உங்களிடம் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆலோசனை நடத்தியதா?பாதுகாப்பு படையினர் மீது மிகப் பெரிய தாக்குதலை தொடுப்பதற்கு முன் என்னுடன் பிரபாகரன் ஆலோசனை நடத்தினார். உடனடியாக பெருமளவிலான ஆயுதங்களை வாங்கி அனுப்புமாறு அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.மேலும் இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அதேசமயம், ராணுவரீதியாக ஈழத்தை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் பிரபாகரன் உறுதியாக இருந்தவரை அவர் யாருடைய ஆலோசனையையும் கேட்கத் தயாராக இல்லை.நீங்கள் தற்போது கொழும்பில் இருப்பதால், உங்களுக்கும் அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்படும், அதனால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என சில தமிழ் அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். அப்படி ஏதேனும் உள்ளதா?நான் கொழும்பில் இருப்பதால் யாரும் பயப்படத் தேவையில்லை. தற்போதைய தேவை போருக்குப் பிந்தைய பிரச்சனைகளைத் தீர்க்கத் தேவையான அரசியல் அணுகுமுறை மட்டுமே. போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவவும், வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் தேவையான ஒருங்கிணைந்த திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். இதைத் எந்த அரசியல் தலைவருடனும், கட்சியுடனும் மோதும் எண்ணம் எனக்கு இல்லை.தமிழ் சமுதாயத்தின் நன்மைக்காக, புலம் பெயர்ந்த தமிழ் சமூகமும், அரசியல் கட்சிகளும், பிரிவுகளும், இலங்கையில் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும். மற்றபடி எனக்கு வேறு எந்த அரசியல் அபிலாஷைகளும் இல்லை. இலங்கை அரசை தவிர்த்து விட்டு எதையும் செய்யலாம் என்று நான் நினைக்கவில்லை. அதுசாத்தியமில்லை. பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.புலிகளுக்கு உங்களது நிதி சேகரிப்பு எப்படி இருந்தது?மிகப் பெரிய அளவில் அப்போது எங்களுக்கு நிதி சேர்ந்தது. நிதிக்குப் பஞ்சமே இல்லை என்று கூறும் அளவுக்கு வந்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் பணம் வந்தது. சுனாமியின்போதும் கூட எங்களுக்கு பெருமளவில் பணம் வந்தது. இருப்பினும் அதுகுறித்து என்னால் விரிவாகச் சொல்ல முடியாது. காரணம், அவற்றையெல்லாம் அப்போது பராமரித்தது காஸ்ட்ரோதான். அவர் ஒருபோதும் என்னுடன் ஒத்து வந்ததே இல்லை. பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர், இந்த நிதி குறித்து புலம் பெயர் தமிழ்ச் சமுதாயத்தினர் விவாதித்தனர். அவர்களில் சிலர் வசம் நிதிப் பொறுப்பு இருந்தது. அவர்கள் உடன்பட்டு வர மறுத்து விட்டனர். இதனால்தான் பெரும் பிளவு ஏற்பட வாய்ப்பானது.பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவை எப்போது சந்தித்தீர்கள்?நான் பிடிபட்டு கட்டுநாயகே விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, மிகவும் மனம் உடைந்திருந்தேன். மிகவும் பதட்டத்துடன் இருந்தேன். எனது முடிவு நெருங்கி விட்டதாக கருதினேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியும், என்னை அவர்கள் கைது செய்ததும் எனது இதயத்தை நொறுங்கச் செய்தது.கட்டுநாயகே விமான நிலையத்திலிருந்து நேராக என்னை கோத்தபயா வீட்டுக்குக் கொண்டு சென்றனர். மிகச் சிறந்த நிர்வாகியாக, திறமையாளராக அறியப்பட்ட கோத்தபயா ராஜபக்சேவை அப்போது எனக்கு சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்த அடுத்த சில நிமிடங்களிலேயே எனது அனைத்துப் பயத்தையும் அவர் போக்கி விட்டார். எனக்கு டீ, கேக் தரப்பட்டது. பின்னர் அங்கிருந்து நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.கோத்தபயா வீட்டுக்குள் நான் நுழைந்ததும் அங்கு ஒரு புத்தர் சிலையைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்தது. இங்கு எனக்கு எதுவும் நடக்காது என்ற தைரியம் கிடைத்தது.பின்னர் கோத்தபயாவின் ஆசிர்வாதங்களுடன், கனடா, இங்கிலாந்து , பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா , ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து 9 தமிழர்களை நான் கொழும்புக்கு அழைத்து வந்து அவரை சந்திக்க வைத்தேன். மறு வாழ்வு நடவடிக்கைகளில் அவர்களது உதவியைப் பெறுவது தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டது.புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான விரிசலை குறைக்க நிறைய செய்ய வேண்டியுள்ளது. இதற்காக நான் பல நாட்கள் இரவு கூட தூங்காமல் விழித்திருந்து பாடுபட்டேன். எங்களது நடவடிக்கையை சிலர் எதிர்க்கிறார்கள். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை, அதன் ராணுவ பலம் இல்லை என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட முன்வர வேண்டும்.அரசின் அனுமதியோடு நாங்கள் படைத் தலைவர்கள் சிலரையும் சந்திக்க முடிந்தது. ராணுவம் எங்களை இதமாக, அன்பாக வரவேற்கும் என நான் கருதவே இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை. குறிப்பாக பலாலியில் அப்படி ஒரு வரவேற்பு எங்களுக்குக் கிடைக்கும் என கருதவில்லை. ஆனால் அவர்கள் என்னை அன்போடு வரவேற்றுப் பேசினர்.(பேட்டியின் இறுதிப் பகுதி நாளை தொடரும்)

Endhiran mp3 songs download.mp4

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறுகிறார் சாய்னா நேவால்


டெல்லி: உலகின் நம்பர் 2 பாட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வருட காலமாக சாய்னா பாட்மின்டன் விளையாட்டில் சிறந்து விளங்குவதை கௌரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது அளிக்கப்பட உள்ளது.

ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் இருந்து இந்த விருதை பெறுகிறார். விருதுடன் ரூ.7.5 லட்சம் ரொக்கமும் வழங்கப்படுகிறது.

இது குறித்து சாய்னா கூறியதாவது:

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு நான் தேர்வாகியுள்ளதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தேசிய விருதுகள் என்னைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். மேலும், தாய்நாட்டுக்காக சாதிக்க உந்து சக்தியாக இருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். அன்மையில் நான் 3 பட்டங்களை வென்றது என் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. தற்போது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன். அதில் பட்டம் வெல்வேன் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு சாய்னா அர்ஜுனா விருது பெற்றார். வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டியின் 6 தூதர்களில் ஒருவராக சாய்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக தர வரிசை பட்டியலில் சாய்னா தற்போது 2-வது இடத்தில் உள்ளார். கடந்த மார்ச் மாதம் நடந்த இங்கிலாந்து சூப்பர் சீரிஸ் போட்டியின் அரைஇறுதி வரை சென்றார் சாய்னா. அன்மையில் அவர் இந்திய கிராண்ட்பிரீ, சிங்கப்பூர் ஓபன், இந்தோனேசிய ஓபன் ஆகிய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வினாடியும் துடித்துப் போகிறோம்-நித்யானந்தா பக்தர்கள்


சென்னை: நாங்கள் இழந்த சமூக பாதுகாப்பையும், மத உரிமைகளையும் மீட்டுத்தர காவல்துறையும், அரசும் உதவ வேண்டும் என்று நித்யானந்தாவின் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு தியான பீட பக்தர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நித்யானந்தர் ஒரு தனி நபர் அல்ல, பல லட்சம் குடும்பங்களின் உயிர்நாடி. எங்களின் மீது நடந்தேறியிருப்பது மாபெரும் மதத் தாக்குதல் . மனிதாபிமானம் துளியும் இல்லாமல் கொடூரமான உணர்வு படுகொலைகள் நடந்தேறியிருக்கிறது.

நித்யானந்தரையும், தியான பீட பக்தர்களாகிய எங்களையும் உண்மைக்கு புறம்பான முறையில் ஒட்டு மொத்த சமூகமும் விமர்சிக்கும் அளவிற்கு சமூக விரோதிகள் செய்த திட்டமிட்ட சதி எங்களை பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும்.

எங்களின் குழந்தைகளும், பெண்களும் சாலையில் நடக்க முடியவில்லை. நிம்மதியாக பள்ளி சென்று திரும்ப முடியவில்லை. வேலை செய்யும் இடங்களில் கூட நாங்கள் படும் கஷ்டங்கள் படுமோசமானவையே.

யோகா, தியானம், பூஜை, மாலை, காப்பு அனிதல் போன்ற எங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நாங்கள் மைனாரிட்டியாக வாழும் சமூகம் என்பதால் ஒவ்வொரு நாளும் நாங்கள் செத்து பிழைக்கிறோம். எங்களின் மத ஆன்மீக உணர்வுகளை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது.

பல வருடங்களுக்கு முன் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சுற்றிக் கொண்டிருந்த, லெனின் கருப்பன் தந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு போர் கால முக்கியத்துவம் தரப்பட்டது. ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற நிலையிலும் நிரபாரதி நித்யானந்தரை குற்றவாளியாகவே சமூகம் பார்க்க வைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டும் எங்களின் இதயத்தை கிழிக்கும் செயல்கள். சேவையையும், ஆன்மீகத்தையும் அடிப்படையாக கொண்ட எங்களின் வாழ்வு எங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும்.

இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அஹிம்சையை கடைபிடிக்கும் லட்சக்கணக்கான தமிழ் வாழ்பக்தர்கள், கயமைத்தனம் மிக்க இந்த நவீன வன்முறை தாக்குதலால் பாதிக்கப்படுகிறோம். எங்களின் புனிததன்மை மீண்டும் உலகிற்கு சொல்லப்பட வேண்டும்.

எங்களின் வாழ்வின் ஆதாரமான குருநாதர் அவமதிக்கப்படும் ஒவ்வொரு வினாடியும் துடித்துப் போகிறோம்.

நாங்கள் இழந்த சமூக பாதுகாப்பையும், மத உரிமைகளையும் மீட்டுத்தர காவல்துறையும், அரசும் உதவும்படி வேண்டுகிறோம். சதிகாரர்களின் முகத்திரையை கிழித்து, நாங்கள் வாழ வழி செய்ய வேண்டுகிறோம். எங்களுடைய மத உணர்வுகள் தாக்கப்படுவதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

எங்களின் குலத்தையும், குருவையும் அவமதிப்பதை ஒரு கணமும் பொறுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

'கோடி' நடிகைகளுக்கு நெருக்கடி!


குறைந்த விலை, கூடுதல் லாபம் என்று ஜவுளிக் கடைகளில் கூறுவதைப் போல இப்போது கோலிவுட்டிலும் புது டிரென்ட் உருவாகியுள்ளது. பெரிய பெரிய சம்பளம் கேட்கும் நடிகைகளைப் போடுவதை விட புதுமுக நடிகைகளை நடிக்க வைத்து குறைந்த சம்பளத்தில் நிறைந்த லாபம் பார்ப்பதே அது.

இந்த புதிய நடைமுறைக்கு நல்ல பலனும் கிடைத்துள்ளாம். டென்ஷன் இல்லாமல் படத்தை முடிக்க முடிகிறது, புது நாயகிகள் தொல்லை கொடுப்பதில்லை, சமர்த்தாக நடந்து கொள்கிறார்கள், கொடுக்கும் வசதிகளைப் பெற்றுக் கொண்டு அடக்கமாக இருக்கின்றனர் என்று சந்தோஷமாக கூறுகிறார்கள் திரையுலகினர்.

விஜய், அஜீத், விக்ரம், சூர்யா என சில முன்னணி ஹீரோக்களுக்கு மட்டும்தான் முன்னணி ஹீரோயின்கள் தொடர்ந்து தேவைப்படுகிறார்கள். சுற்றிச் சுற்றி தமன்னா, ஆசின், திரிஷா , நயனதாரா எனத்தான் வர வேண்டியுள்ளது. ஆனால் இவர்களெல்லாம் கோடி சம்பளம் கேட்கிறார்கள். கேடி நாயகி தமன்னா லேட்டஸ்டாக ஒரு கோடி சம்பள வளையத்திற்குள் வந்துள்ளார்.

நயனதாராவுக்கு மார்க்கெட் விழுந்து விட்டது என்றாலும் கூட அவரும் ஒரு கோடி என்றுதான் விரலை காட்டுகிறாராம். 2வது கட்ட நாயகிகளும் கூட 50 லட்சத்திற்குக் கீழ் இறங்க மாட்டேன் என்கிறார்கள்.

இது சரிப்படாது என்று உணர்ந்து பல தயாரிப்பாளர்களும், புதுமுக இயக்குநர்களும் புதிய பாதை அமைத்து, பல புதுமுக நடிகைகளை சரமாரியாக இறக்குமதி செய்யத் தொடங்கி விட்டனர்.

நீண்ட காலமாகவே இந்த டிரென்ட் இருக்கிறது என்றாலும் தற்போதுதான் மகா விறுவிறுப்பாகியுள்ளதாம் புதுமுகங்களின் வரவு. சுப்ரமணியபுரம் படத்தில் ஸ்வாதிக்குக் கிடைத்த வெற்றிதான் இந்த புதுமுக அலை வேகமாக அடிக்க காரணம் என்கிறர்கள்.

தினசரி ஒரு புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தும் நிலை கோலிவுட்டில் உருவாகியுள்ளது. ஒவ்வொரு நடிகைக்கும் 5 முதல் 10 லட்சம் வரைதான் சம்பளம் கொடுக்கிறார்கள். அதிலும் முதல்முறையாக அறிமுகமாகும் நடிகைக்கு அதிகபட்சமே 5 லட்சம்தானாம். அவர் நடித்த படம் ஓடி விட்டால் 10 லட்சம் வரை போகிறார்களாம்.

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களின் நாயகிகள் புதுமுகங்கள்தான். அதில் களவாணி நாயகி ஓவியாவுக்கு இப்போது நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.

இதேபோல அரவான் படத்தில் அறிமுகமாகும் அர்ச்சனா கவிக்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாம். இதேபோல மேலும் பல புதுமுகங்கள் தமிழ்த் திரையுலகில் புதிய தென்றலாக வீசத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் என்ன கொடுமை என்றால் அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக கேரளாவிலிருந்து ஷிப்ட் ஆகி வந்தவர்கள் என்பதுதான்!

Thursday, July 29, 2010

என் பேச்சை கேட்டிருந்தால் பிரபாகரன் இறந்திருக்க மாட்டார்-சொல்கிறார் கேபி


கொழும்பு: இறுதிக் கட்ட போரின்போது எனது பேச்சை கேட்க தவறி விட்டார் பிரபாகரன் . இதனால்தான் அவர் கொல்லப்பட நேரிட்டது. அவர் மட்டும் எனது பேச்சைக் கேட்டிருந்தால், இலங்கை அரசுடன் உடன்பட்டு செல்ல முன்வந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கேபி.

கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக அறிவித்த சிங்கள அரசு, ஆகஸ்ட் மாதம் கேபியை மலேசியாவில் வைத்துக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்தின் முகாமில்தான் வசித்து வருகிறார் கேபி.

ஒரு காலத்தில் பிரபாகரனின் வலதுகரமாக கருதப்பட்டவர் கேபி. ஆனால் இன்று இலங்கை அரசின் கைப்பாவையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவத்தின் பிடியில் உள்ள கேபி, இலங்கை அரசின் ஐலன்ட் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

கைதுக்குப் பின்னர் கேபி அளித்துள்ள முதல் பேட்டி இது. பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

4வது ஈழப் போரின் திருப்பு முனை எது என்று கருதுகிறீர்கள்?

அமெரிக்காவில் அல் கொய்தா அமைப்பினர் நடத்திய அதி பயங்கரத் தாக்குதல்தான் அனைத்தையும் மாற்றிப் போட்டு விட்டது. அந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் மேற்கத்திய சக்திகள் தலைமையிலான அனைத்து நாடுகளும் அனைத்து ஆயுதம் தாங்கிய குழுக்களையும் அபாயகரமானவை என்று அறிவித்தன. இது எங்களது நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது.

அல் கொய்தாவின் அதிவேக வளர்ச்சியால் ஒட்டுமொத்த ஆயுதக் குழுக்களும் பாதிக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகள் ஆயுதப் போராட்டம் குறித்த தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள நேரிட்டது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர்.

பிரிவினைவாத கருத்துக்களைப் பரப்புவதில் பெரும் சிரமங்கள் ஏற்படத் தொடங்கின. துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சில முக்கியத் தலைவர்கள், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்பட யாருமே இந்த புதிய சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை. தங்களது உத்தியை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை.

அதை அவர்கள் செய்திருந்தால், செய்ய முன்வந்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். இன்று புதிய உலக நடைமுறை உள்ளது. இது ஆயுதப் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாது. இதை உணர வேண்டும். அதுதான் உண்மையும் கூட.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி உங்களுக்கு எப்போது கிடைத்தது. அப்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?

மே 19ம் தேதி எனக்கு பிரபாகரன் மரணச் செய்தி கிடைத்தபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். சர்வதேச மீடியாக்கள் இந்த செய்தியை முரண்பட்டு வெளியிட்டுக் கொண்டிருந்தன. சில மீடியாக்களில் மரணச் செய்தி குறித்து சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வந்தன. நான் பிரபாகரனின் மிகச் சிறந்த நண்பன். இதனால், அவருடைய உயிரிழப்பு குறித்து அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தேன்.

அவர் எனது பேச்சைக் கேட்டிருந்தால், அரசுடன் உடன்பாட்டுக்கு ஒத்து வந்திருந்தால் இது நடந்திருக்காது. இறுதிப் போரில் நடந்தவை தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் எல்லாமே கால தாமதமாகி விட்டது.

மே 10ம் தேதி வன்னிக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 400 அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நான் அரசியல் பிரிவு தலைவர் நடேசனுடன் பேசினேன். ஆனால், ராணுவத் தாக்குதலை தடுக்க முடியும், 3வது தரப்பின் மூலமாக சமரசம் பேச முடியும் என அவர்கள் நம்பினர்.

நாங்களும் கூட பலருடன் பேசினோம். பல அமைப்புகளுடன் பேசினோம். ஐ.நாவுடன் கூட பேசினோம். சில ஏற்பாடுகளை செய்ய முயற்சித்தோம். ஆனால் எல்லாமே தோல்வியல் முடிந்தன. இது பிரபாகரன் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தாமதத்தால் ஏற்பட்டது. விரைந்து செயல்பட அவர் தவறி விட்டார்.

புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதியைப் பெற்று மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்த நீங்கள் சமீபத்தில் ஒரு என்ஜிஓ அமைப்பை உருவாக்கினீர்கள். அதற்கு என்ன பலன் கிடைத்துள்ளது?

வடக்கு-கிழக்கு மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சிக் கழகம் என்பது அதன் பெயர். இப்பிராந்தியத்தில் மறு சீரமைப்பு, புதுக் கட்டமைப்பு மற்றும் மறு குடியேற்ற நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இந்த அமைப்பு தயாராக உள்ளது.

இதன் தலைமை அலுவலகம், வவுனியா, வைரவபுதியன்குளத்தில் அமைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக இது பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. எங்களது மக்கள் குறிப்பாக குழந்தைகள் நலன் குறித்து நாங்கள் பெரிதும் அக்கறை காட்டுகிறோம்.

இந்தப் போரினால் மக்கள் பெரும் சோர்வடைந்து விட்டனர். எனவே அந்த பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும். அதில் எந்தவித அரசியலும் கலக்காமல், மனிதாபிமான நடவடிக்கை மட்டுமே மேலோங்கி நிற்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

ஒரு டாலரிலிருந்து எத்தனை டாலர் வரை வேண்டுமானாலும் நிதியாகத் தாருங்கள் என்று புலம் பெயர்ந்த தமிழர்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மாதாந்திர அடிப்படையில் இந்த நிதியை அவர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த நிதி வசூலை மேற்கொள்வதற்கு வசதியாக சமீபத்தில் வவுனியாவில் உள்ள கமர்ஷியல் வங்கியில் ஒரு கணக்கையும் தொடங்கியுள்ளோம். (கணக்கு எண்ணையும் சொல்கிறார்).

எங்களது இமெயில் முகவரி- info@nerdo.lk/www.nerdo.lk

மறு சீரமைப்பு, மறு கட்டுமான நடவடிக்கைகளில் உங்களுக்கு திருப்தி உள்ளதா?

நான் எதிர்பார்த்ததை விட இப்போது நிலைமை நன்றாகவே உள்ளது. மக்கள் நம்பிக்கையை கட்டமைப்பதில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றாலும் கூட, இந்த அரசு இதுவரை செய்துள்ளதை நான் பாராட்டுகிறேன்.

அரசையும், ஐ.நா. அமைப்புகளையும், என்ஜிஓக்களையும் தங்களது தேவைகளுக்காக தமிழ் மக்கள் முழுமையாக நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை விரைவாக செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

சமீபத்தில் நான் வடக்குக்குச் சென்றிருந்தபோது, பல நூறு மாணவர்களுக்கு தேர்வு எழுதக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பரீட்சை எழுத முடியுமா என்ற சந்தேகத்தில் அவர்கள் இருந்தனர்.

ஆனால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் அது சாத்தியமாயிற்று. அதை அவர்களும் உணர்ந்துள்ளனர். எங்களுக்கு உதவ வாருங்கள் என்று தமிழ் மக்களிடமிருந்து எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.

சமீபத்தில் இரண்டு பள்ளிகளின் முதல்வர்கள் எங்களிடமிருந்து நிதியைப் பெற்று தமது பள்ளியின் ஏழை மாணவர்கள் தேர்வெழுதவும், கல்விக் கட்டணத்தை செலுத்தவும் உதவியுள்ளனர்.

இப்போது போர் முடிந்து விட்டது. எனவே வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். சமீபத்தில் கூட நாங்கள் வவுனியாவில் உள்ள சுந்தரலிங்கம் தமிழ் மகா வித்தியாலயாவுக்கு ரூ. 50,000 நிதியளித்தோம்.

அதிபர் ராஜபக்சே அரசுடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட முன் வருவார்கள் என நீங்கள் நம்புகிறீர்களா?

பல்வேறு சமுதாய மக்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை போக்கி, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிபர் ராஜபக்சே சீரிய வழியில் செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவே உள்ளன.

போர் முடிந்த ஒரு வருட காலத்திற்குள், போரினால் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையினோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். முன்னாள் போராளிகள் பலருக்கு மறு வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச சமுதாயமும் கூட இலங்கை அரசின் முயற்சிகளுக்கு பெரும் துணையாக உள்ளது.

இவையெல்லாம் அதிபர் ராஜபக்சேவின் திறமையான நிர்வாகத்தால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அவரது அரசியல் தலைமையால்தான் இதை சாதிக்க முடிந்துள்ளது.

எனவே நடப்பு நிலையை புலம் பெயர்ந்த தமிழர்கள் உணர முனவர வேண்டும். விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையை நிலையை அவர்கள் அனுமானிக்க வேண்டும். புதிய சவால்களை சந்திக்க அவர்கள் தயாராக வேண்டும்.

கடந்த காலத்தில் நடந்ததை நினைத்துக் கொண்டு இப்போதும் அதே நினைவிலேயே நாம் இருக்கக் கூடாது. மறுசீரமைப்பு நடவடிக்கைளில் அனைவரும் இணைந்து தோள் கொடுக்க வேண்டும்.

மீடியாக்களும் விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையந நிலையைப் புரிந்து கொண்டு, ஆக்கப்பூர்வமாக செயல்பட முன்வர வேண்டும். எதிர்மறையாக எழுதுவதால் எந்தப் பயனும் எமது மக்களுக்கு ஏற்படப் போவதில்லை. எது பொருத்தமானதோ அதையே செய்ய வேண்டும்.

அமைதியை நிரந்தரப்படுத்துவதிலும், வளர்ச்சியிலும் மட்டுமே மீடியாக்கள் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

எப்போது முதன் முதலில் இலங்கையை விட்டு வெளியேறினீர்கள். அதன் பிறகு கடைசியாக இலங்கைக்கு எப்போது வந்தீர்கள்.?

1980ம் ஆண்டு பிரபாகரனுடன் நான் இந்தியாவுக்கு தப்பி ஓடினேன். என்னை ராணுவம் கைது செய்வதற்காக தேடியது. ராணுவத்தின் நடவடிக்கை தீவிரமாக இருந்ததால் நான் இலங்கை திரும்பவில்லை. அப்போது ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வந்த காரணத்தால், நாங்கள் ஒரு படகின் மூலம், வல்வெட்டித்துறையிலிருந்து இந்தியாவுக்கு சென்றோம்.

டியூஎல்எப் தலைவர் அமிர்தலிங்கம்தான் 70களில் என்னை பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அது 1976 என்று நினைக்கிறேன். அப்போது டெலோ மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு அமைப்புகள்தான் பெரிதான அமைப்புகளாக இருந்தன.

நான் யாழ்ப்பாணம் மகாராஜா கல்லூரியில் படித்தேன். பின்னர் எமது உரிமைகளுக்காகப் போராடுவதற்காக படிப்பை விட்டு விட்டேன். எங்களது உரிமைகளை தொடர்ந்து வந்த அரசுகள் புறக்கணித்ததாக நாங்கள் கருதியதால் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இன்று எங்கள் முன்பு வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டிலும் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. இந்த அமைதி நிரந்தரமாக வேண்டும் என கருதுகிறோம்.

யாழ்ப்பாணம் மேயர் ஆல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்ததற்குப் பின்னர் அமைப்பின் அரசியல், ராணுவ கொள்கையாளர்கள், பிரபாகரனை அமைப்பிலிருந்து நீக்கினர். அவர் என்னிடம் வந்தார். அப்போது நான் சாதாரண மாணவன்தான். எனது அறையில் நான் பிரபாகரனுக்கு இடம் கொடுத்தேன். அவரைக் கொல்ல பலரும் முயன்றனர். டெலோ தலைவர் தங்கதுரையும் ஒருவர்.

(கேபி அளித்த பேட்டி நாளை தொடரும்...)

Wednesday, July 28, 2010

திரைக்கூத்து!


ஃபேஷன் ஷோ விற்பனைக் கூடம் நடத்தி வரும் கவர்ச்சி நடிகை சோனா இப் போது படத் தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுடன் சேர்ந்து "கனிமொழி' படத்தை தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் ஆடியோவை கலைஞர் வெளியிட, விஜய் பெற்றுக்கொண்டதில் கொள்ள சந்தோஷம் சோனாவுக்கு. கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் சமூக அக்கறை ஜாஸ்தி சோனாவுக்கு. ஒரு ட்ரஸ்ட் ஏற்படுத்தி வயதான பாலியல் தொழிலாளிகளுக்கு உதவுவது, ஏழைகளுக்கு மருத்துவ உதவி என செய்யப் போகி றாராம். இந்த சமூக சேவைக்கு இடைஞ்சல் வந்துவிடக் கூடாது என்பதால் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டாராம். "என்னா... இப்புடிச் சொல்றீக?'னு கேட்டா..... "ஆண்கள் இல்லாம வாழ முடியாது. ஆனா ஆண்களோட வாழ முடியாது' சித்தி மாதிரி பேசுகிறார். யாரோட சித்தி?னு கொழம்ப வேணாம். சித்தருக்கு பெண்பால் சித்தினு சொல்லிக்க வேண்டியதுதான்.


கவுண்டர் கவுண்டர்தான்!


புதியவர் லட்சுமணன் இயக்கத்தில் சத்யராஜ், கவுண்டமணி நடித்த "பொள்ளாச்சி மாப்ளே' சமீபத்தில் வெளியானது. பத்திரிகையாளர் சிறப்புக் காட்சியில் தியேட்டரே குலுங்கியது கவுண்டரின் லூட்டியால். படம் தொடங்கியதிலிருந்து கடைசி பிரேம் வரை நக்கலும் நையாண்டியுமாக பட்டயக் கிளப்பியிருக்கிறார் கவுண்டர். இப்பவும் கவுண்டர் கவுண்டர்தான்.


உல்லால்... உள்ளார்!


ரஜினி தோஸ்த் மோகன்பாபுவின் மகன் நடித்த "என்னைத் தெரியுமா?' பட விழாவுக்கு வந்திருந்த அதன் நாயகி சிநேகா உல்லால் "சிம்பு கூப்பிட்டா தமிழ்ல அவர்கூட சேந்து நடிப்பேன்'னு பெருமூச்சு விட்டி ருந்தார். அதை இம்புட்டு நாளா ஞாபகம் வச்சிருந்த சிம்பு தான் இப்போது நடித்து வரும் ‘"வானம்' படத்தில் நடிக்க கேட்டார். அதன்படி இப்போது உல்லாலும் படத்தில் உள்ளார். இது ஒருபுறமிருக்க... லிங்குசாமிக்கும், சிம்புவுக்கும் புகைச்சல்.

லிங்கு தயாரித்து இயக்க, சிம்பு நடிக்கவிருந்த படம் தொடங்குவதில் தாமதமானது. சிம்புவை கலந்தாலோசிக் காமலேயே துரை தயாநிதி நிறுவனத்திற்கு இந்த புராஜெக்ட்டை கைமாத்தினாராம் லிங்கு. அதனால் சிம்பு விலகிவிட்டார் லிங்கு படத்திலிருந்து.


கண்ணீரும் ஆறுதலும்!


"இவருக்கு கால்ஷீட் கொடுத் திருக்கேன்' என ஒரு துண்டுச்சீட்டில் ராமராஜன் எழுதிக் கொடுத்த அடுத்த சில மணிநேரங்களிலேயே எழுதப்பட்ட பெயருக்கு சொந்தக்காரரைத் தேடி விநியோகஸ்தர்கள் பணத்தை கொட்டு வார்கள். ரஜினியும், கமலுமே ராம ராஜனின் வெற்றியைக் கண்டு அசந்த காலம் உண்டு. திடீர் சரிவைச் சந்தித்த ராம ராஜன் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு என்.டி.ஜி.சரவணன் இயக்கத்தில் "மேதை' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ‘"மேதை' இசை வெளியீட்டு விழாவில் சினிமா புள்ளிகள் அசந்து போகிற அளவுக்கு ராம ராஜன் ரசிகர்கள் திரண்டுவிட்டனர். விழாவில் ராமராஜன் உருக்கமாக கண்கலங்க.... ‘"அண்ணே... நீங்க அழக்கூடாது. நாங்க எப்பவுமே ஒங்க கூட இருப்போம்' என ரசிகர்கள் சொல்ல.... விழா படு நெகிழ்ச்சியாக இருந்தது.


ஸ்பெஷல் விமானத்தில் எந்திரன்!


இந்த மாத கடைசியில் சன் டி.வி. தயாரித்து வரும் "எந்திரன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மிகப் பிரமாண்டமாக நடக்கிறது. பொதுவாக விழாக்களில் தலைகாட்டாத சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறன் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக கலாநிதி மாறன், ரஜினி உள்ளிட்டோர் கலாநிதி மாறனின் சொந்த விமானத்தில் கிளம்புகிறார்கள். இதர கலைஞர்கள் தனிவிமானம் மூலம் கிளம்புகிறார்கள்.


உண்டானவர்கள்!


மீனா உண்டாகி யிருக்காராம். ஆனா மீடியாக்கள் கேட்டால் அதெல்லாம் இல்லியே என்கிறாராம். பத்துமாசம் பொறுக்கக்கூடாதா? அதுக்குள்ள கேக்கணு மாக்கும். ஏற்கனவே மம்மி யாகிவிட்ட மாளவிகா மீண்டும் உண்டாகியிருக் காராம்.


ஷூட்டிங் ஞாபகார்த்தம்!


தமிழ்வாணன் இயக்கிவரும் "நந்தி' படப்பிடிப்பை முதன்முதலாக முழுக்க முழுக்க ராமநாத புரம் மாவட்டத்திலேயே படமாக்கியிருக்கிறார்கள். மற்றவர்களின் முன்னேற் றத்திற்கு குறுக்கே நந்தி மாதிரி நிற்கும் வெட்டிப் பயல்களால் ஏற்படும் பிரச்சினைகள்தான் கதை யாம். படப்பிடிப்பிற்கு ஆதரவாக இருந்த மக்கள் அதன் ஞாபகமாக தங்கள் ஊர் குழந்தை ஒன்றிற்கு பெயர்வைக்கச் சொல்லி தமிழ்வாணனிடம் கேட்க... அவரும் பெரிய விழா எடுத்து அந்த குழந்தைக்கு "நந்தி கேஸ்வரன்' என பெயர் சூட்டினாராம்.


அப்படியா?அனிமல் படத்தில் நடித்து இப்போது முன்னணியில் இருக்கும் கற்காலத்தை குறிக்கும் பெயர் கொண்ட நடிகரும், ஒரு பாலி டிக்ஸ் வீட்டுப் பெண்ணும் காதல் கொண்டிருப்பதாக காதைக் கடிக்கிறார்கள் கோலி வுட்டில்.

டாஸ்மாக் ஸ்டிரைக்!


ஆண்டுக்கு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் வருமா னத்தை தமிழக அரசுக்கு தந்து கொண்டிருக்கிறது டாஸ்மாக். அரசின் மொத்த நிதிச்சுமையில் பாதியளவுக்கு குறைப்பது டாஸ்மாக் வருமானம்தான்.

இந்த நிலையில் பணி நிரந்தரம், சம்பள உயர்வு, 8 மணி நேர வேலை, வார விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி... காலவரையறையின்றி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவது என்கிற திட்டத்தை டாஸ்மாக் பணி யாளர்கள் கையில் எடுத்திருக்கும் விவகாரம், தமிழக அரசை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இந்தத் திட்டத்திற்கு அ.தி.மு.க. தொழிற்சங்கப் பேரவை, சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி, பாட்டாளி தொழிற்சங்கம், விடுதலைச்சிறுத்தைகளின் தொழி லாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதால், மேலும் பரபரப்பாகியிருக்கிறது இந்த விவகாரம்.

ஆகஸ்ட் 11 முதல் நடத்தப்படவிருக்கும் இந்த தொடர் ஸ்டிரைக்கை எப்படி நடத்துவது என்பதற்கான ஆயத்த மாநாட்டை திருச்சியில் கடந்த 25-ந் தேதி நடத்தியது ஏ.ஐ.டி.யூ.சி-யின் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம். இந்த ஆயத்த மாநாட்டிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக வந்திருந்தனர். இதனால் கூட்டம் நடந்த ரோசன் மஹாலே திணறியது.

டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர், ""அரசு மதுபான கடைகளில் மேற்பார்வையாளராக, விற்பனையாளர்களாக, பார் உதவியாளர்களாக 34 ஆயிரம் பேர் இருக்கிறோம். ஆனால், நமக்கான அடிப்படை உரிமைகள் எதையும் இந்த அரசாங்கம் செய்து தர மறுக்கிறது. தொழிலாளர் நல சட்டங்களை மீறுகிறது அரசாங்கம். இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு எல்லா தொழிற்சங்கங்களும் நமக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால்... கடையடைப்புப் போராட் டம் நிச்சயம் வெற்றி பெறும்'' என்றார்.

ஏ.ஐ.டி.யூ.சி.யின் மாநில பொதுச்செயலாளர் தியாகராஜன், ""ஒரு நிறுவனம் தன்னுடைய லாபத்தில் 3-ல் ஒரு பகுதியை அதன் ஊழியர் களுக்குத் தரவேண்டும். அப்படிப் பார்த்தால் டாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் 16 ஆயிரம் கோடி. இதில் 3-ல் ஒரு பங்கு எனில் கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் அப்படித் தர மறுக்கிறது. நாம் ஒருநாள் கடையை இழுத்து மூடினால் டாஸ்மாக்கிற்கு 40 கோடி ரூபாய் நட்டம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். டாஸ் மாக்கைப் போல, வேறு எந்த நிறுவனமும் பெரிய அளவில் வருமானத்தை தந்ததில்லை. இந்த வரு மானத்தை வைத்துக்கொண்டுதான் உங்களால் இலவச திட்டங்களைக் கொடுக்க முடிகிறது. பணி யாளர்கள் கோரிக்கைகள் ஏற்கப்படா விட்டால், திட்டமிட்டபடி கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியே தீருவோம்'' என்றார் ஆவேசமாக.

பாட்டாளி தொழிற்சங்கத்தின் செயலாளர் ராமன், ""இதுவரை டாஸ்மாக் ஊழியர்கள் 2700 நாட்கள் வேலை செய்திருக்கிறார்கள். முறைப்படி இவர்களுக்கு சம்பளமாக 5.30 லட்சம் தந்திருக்க வேண்டும். ஆனால் 1.50 லட்சம் மட்டுமே தந்துள்ளனர்'' என்றார்.

அ.தி.மு.க. தொழிற்சங்க பேரவை தலைவர் பிச்சை, ""கட்டிங்கிற்கு காசு வாங்குவதாக எங்க ளுக்கு அபராதம் விதிக்கிறீர்களே... கட்டிங் விற்கச் சொல்றதே அதிகாரிகள்தானே. போலீஸ் முதல் ரவுடிகள் வரை எல்லாரும் மாமூல் வாங்கிட்டுப் போறாங்க. மறுத்தால் மிரட்டுறாங்க. இதற்கெல் லாம் பணத்துக்கு எங்கே போவது? அதுக்குத்தான் ஒரு ரூபா, ரெண்டு ரூபா சில்லரையைத் தர்ற தில்லை. இப்போ அதுலயும் மண்ணை வாரிப் போடுற மாதிரி... பாட்டில் விலையை ரவுண்ட் ஆக்கிட்டீங்க. இப்படி கொசுறு பணத்தையும் ரவுண்ட்டாக்கி அதன்மூலம் 400 கோடி ரூபாய் வருஷத்துக்கு லாபம் பார்க்கிறீங்க.. இந்த 400 கோடியை மட்டும் எங்களுக்கு ஒதுக்கினாலே... எங்க பிரச்சினையை தீர்த்துடலாமே?'' என்றார் ஆக்ரோஷமாக.

சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் சவுந்திர ராஜன், ""டாஸ்மாக் ஊழியர்களின் 16 மணி நேர பணியினை 12 மணி நேரமாக குறைக்கிறேன்னு சட்டமன்றத்திலே அறிவிக்கிறார் கலைஞர். இதற்கே நாம் கோர்ட்டில் வழக்குப் போடலாம். ஆகஸ்ட் மாசம் நீங்கள் ஸ்டிரைக் போராட் டத்தை நடத்துங்கள். செப்டம்பரில் நாங்கள் போக்கு வரத்துத் துறையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டு தயாராகிக்கொண்டிருக்கிறோம். முதலில் நிரந்தர சம்பளம் மாசம் 10 ஆயிரம் என அரசு அறிவிக் கும் பட்சத்தில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். இல்லை யேல் தொடர் கடையடைப்பு போராட்டம் நிறுத்தப் படமாட்டாது. நமது போராட்டம் மூலம் இந்த அரசை ஆட்டம் காண வைப்போம்'' என்றார் உரத்த குரல் எழுப்பி.

இப்படி ஆயத்த மாநாட்டில் எழுந்த ஆவேசங் களை அறிந்து, அடுத்தகட்ட ஆலோசனைகளை அதிகாரிகளிடம் நடத்திக்கொண்டிருக்கிறார் டாஸ்மாக் எம்.டி.சஞ்சய் சக்சேனா. டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது... ""டாஸ்மாக் பணியாளர் களின் தொடர் ஸ்டிரைக் அரசுக்கு தலைவலியைத்தான் கொடுக்கும். இந்த பிரச்சினையை எப்படி சால்வ் பண்ணுவதென்று டாஸ்மாக் உயரதிகாரிகளிடமும் நிதித்துறை அதிகாரிகளிடமும் விவாதித்திருக்கிறார் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி. "ஒருநாள் கடையை மூடினாலே 40, 50 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்படும்.

அதனால் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்பது பற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும்'னு தலைமைச் செயலாளரிடம் எங்க துறையின் உயரதிகாரிகள் சொல்லியிருக்காங்க. தொடர் ஸ்டிரைக் நடந்தால் எல்லா பணியாளர்களும் கலந்து கொள்வார்களா? எத்தனை பேர் போகமாட்டார்கள்? தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மட்டும் வேலைக்கு வந்தால் கடையை ரன்பண்ண முடியுமா? என்றெல்லாம் ரிப்போர்ட் அனுப்ப, மாவட்ட டாஸ்மாக் அதிகாரி களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆயத்த மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்? யார்? என்கிற விபரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறோம். அவர்களுக்கு தற்காலிக மெமோ கொடுத்துவிட்டு, அந்த இடத்தில் புதிய ஆட்களை நியமிப்பதன் மூலம் ஸ்டி ரைக்கை முறியடிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது'' என்கின்றனர்.

யுத்தம் 74 - நக்கீரன் கோபால்


ரஜினி பதறிய அந்த நாள், செப்டம்பர் 8-2000.

""கோபால்.. கோபால்.. இது பற்றி நான் ராஜ்குமார்சார் ஃபேமிலிகிட்டே பேசுறேன். நீங்க எவ்வளவு பெரிய காரியத்தில் இறங்கியிருக்கீங்கன்னு எனக்குத்தான் தெரியும். இதில் எவ்வளவு ஆபத்து இருக்குன்னு புரியும். இதெல்லாம் தெரியாத சில பேர், ஏதாவது வயித்தெரிச்சலில் எதையாவது சொல் லுவாங்க. நீங்க அதற்கெல்லாம் கவலைப்படாதீங்க. நீங்க வருத்தப்படக்கூடாது. நான் ராஜ்குமார் சார் சன்ஸ்கிட்டே பேசுறேன்'' என்றார்.

சொன்னதுபோலவே, ராஜ்குமாரின் மகன்கள் இருவரிடம் ரஜினி பேசினார். அன்றே அவர் வீட்டின் மொட்டை மாடியில் நான், ரஜினி, ராஜ்குமாரின் மகன்கள் ஆகியோர் சந்தித்தோம். பத்திரிகைகளின் அவதூறு பிரச்சாரம் அப்போது தான் ராஜ்குமாரின் மகன்களுக்குத் தெரிய வந்திருக்குது.

""ரஜினிசார்... நாங்க அப்பாவைக் காப்பாத்திக்கொண்டு வரணும்ங்கிற நினைப்பிலே இருக்கோம். கோபால்சார்தான் அதை சரியா செய்வாருன்னு நாங்க மட்டுமில்லை, எங்க கர்நாடகா கவர்மெண்ட், இங்கே உள்ள பப்ளிக் எல்லோரும் நம்பு றாங்க. பேப்பரில் என்ன வருதுங்கிறதை நாங்க கவனிக்கலை. இப்படி எதையாவது எழுதி, மிஷனைக் கெடுத்திடக் கூடாது. நக்கீரன் சார் மேலே எங்களுக்கு முழு கான்ஃபிடன்ட் இருக்கு. அவர் டிஸ்டர்ப் ஆகிற மாதிரியான காரியங்கள் எதுவும் நடக்கக்கூடாது. நீங்க என்ன சொல்றீங்களோ அதன்படி நடந்துக்குறோம்.''

""உண்மை என்னவோ, அதை மட்டும் நீங்க அஃபிடவிட்டா கொடுத்தா போதும். அப்பதான் இந்த மிஷன் சக்ஸஸ்ஃபுல்லா நடக்கும்.''

-ரஜினி சொன்னது இதுதான். நக்கீரனின் உண்மையான மீட்பு முயற்சிக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் ராஜ்குமார் மகன்களின் ஒத்துழைப்பு கிடைத்தது.

அடுத்த நாள்.

நாங்கள் மீண்டும் ரஜினி வீட்டில் சந்தித்தோம். "எங்கள் அப்பாவை மீட்கும் முயற்சியில் எந்தவிதமான பண மும் கைமாற வில்லை' என ராஜ்குமார் மகன்கள் தனித்தனியாக அஃபிடவிட் தந்தனர். ரஜினியிடம் இந்த அஃபிடவிட்டை அவர்கள் கொடுத் தனர். ரஜினி நேரில் தலையிட்டு வாங்கிய அந்த அஃபிட விட்டுகளை அவரே தன் கையால் நம்மிடம் கொடுத்தார்.

கடத்தல் விவகாரத்தில் பணம் கைமாறுகிறது என்றும், பணத்திற்காகத்தான் நாம் இந்த வேலையைச் செய்கிறோம் என்றும் நம் மீது வீண்பழி சுமத்திக்கொண்டிருந்தவர்களுக்கு நெத்தியடி தருவது போன்ற அஃபிடவிட் அது.


கோர்ட்டில், இதே பண விவகாரம் தொடர்பாக நமது வழக்கறிஞருக்கும் அரசு வழக்கறிஞருக்கும் கடும் வாக்குவாதம் என்றதும் அந்த அஃபிடவிட் என் ஞாபகத்திற்கு வந்தது. அவசர அவசரமாக தம்பி சிவக் குமாரை வரச் சொல்லி, அந்த அஃபிடவிட்டை எடுத்து வைக்கச் சொன்னேன். மேற்படி அஃபிடவிட்களை உட னடியாக ப.பா.மோகனுக்கு அனுப்பி வைத்தேன்.

அடுத்தடுத்த நாட்கள் நடந்த விசாரணை யில் இந்த விஷயம்தான் பெரும் பரபரப்பாக அமைந்தது. பணம் கைமாறியதாக அரசு வழக்கறிஞர் வைத்த குற்றச்சாட்டுக்கு எதிராக, ராஜ்குமார் மகன்களின் அஃபிடவிட்டை தாக்கல் செய்தார் நமது வழக்கறிஞர். பணவிவகாரம் பற்றி கோர்ட்டில் நடந்த வாக்குவாதங்கள் தொடர் பாக டி.வி.யில் செய்திகளிலும் பத்திரிகைகளிலும் ரிப்போர்ட்டாக, அது கர்நாடகா அரசியலில் புயலைக் கிளப்பியது.

கர்நாடக முதல்வர் எஸ்.எம்..கிருஷ்ணா தனது மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதியைப் பெறுவதற்காகவும், கூடுதல் நிதி வழங்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதற்காகவும் டெல்லிக்குச் சென்றிருந்தார். ராஜ்குமார் கடத்தல் விவகாரம் பற்றி தமிழக கோர்ட்டில் பதிவான விஷயங்கள் குறித்தும் டெல்லியிலுள்ள தனது கட்சி எம்.பிக்களிடம் ஆலோசித்தவர், வெளியே வரும்போது பத்திரிகையாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.பல கேள்விகளைக் கேட்ட பத்திரிகையாளர்கள், ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பான கேள்விகளைக் கேட்கத் தவறவில்லை. அது சம்பந்தமான கேள்விகள் வந்தபோது, எஸ்.எம். கிருஷ்ணா கொஞ்சமும் தயங்கவில்லை.

""ராஜ்குமாரை மீட்க பணம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் எல்லாம் வெறும் ரப்பிஷ்... நான்சென்ஸ்... இந்த ஆங்கில வார்த்தைகள் போல தமிழில் என் னென்ன மோசமான வார்த்தைகள் உள்ளதோ அதையெல்லாம் போட்டுக் கொள்ளுங்கள். மிக மோசமான வார்த்தைகளால் வர்ணிக்கப்பட வேண்டிய மோசமான தகவல் அது'' என்று சொல்லி சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிருஷ்ணா.

கர்நாடக முதல்வர் டெல்லியில் இருந்த நிலையில், பெங்களூரில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கருத்துகளை வெளியிட்டு வந்தனர். அரசின் விளக்கத்தை அளிக்க வேண்டிய இடத்தில் இருந்தவர் உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே. ராஜ்குமார் மீட்பு முயற்சியின் போது கர்நாடக அரசின் சார்பில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் முக்கியத் துவம் வாய்ந்தவை. நடந்தது என்ன என்பதை அறிந்திருந்த அவரிடமிருந்து அதிகாரப் பூர்வ அறிக்கை வெளியானது.

சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து 2000-ஆம் ஆண்டில் நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக 40 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவதில் அடிப்படை உண்மை துளியும் இல்லை. இது முற்றிலும் பொய் என்று தெரிவித்தார் மல்லிகார்ஜூன கார்கே.

தமிழக அரசின் வழக் கறிஞர், ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் பதிவு செய்த அவதூறு அகில இந்திய அளவில் விவாதத்திற்குள்ளானது. இந்த விஷயத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த ஜெ அரசும், கர்நாடகத்தை ஆட்சி செய்த கிருஷ்ணா அரசும் எதிரெதிர் நிலையில் நின்றன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரே காரணத்தால், தமிழகத்தில் பழி வாங்கும் நோக்குடன் அர சாங்கம் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தது. கர்நாடகத்தில், ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தின் போது ஆட்சியிலிருந்தவர் களே 2002-ஆம் ஆண்டிலும் நீடித்ததால், நடந்த உண்மைகளை அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

இரு மாநில அரசுகளுக்கிடையிலான இந்த உரசல், தேசிய அளவிலான மீடியாக்களுக்குத் தீனியாக அமைந்தது. வீரப்பன் விவகாரத்தின் உண்மை நிலை என்ன, மலைவாழ் மக்களின் அவல நிலை என்ன என்பதையெல்லாம் அறியாமல் வெறும் வாயை மென்றுகொண்டி ருக்கும் மீடியாக்களுக்கு, ஜெயலலிதா அரசு அவல் அள்ளிக் கொடுத்ததுபோல ஆனது. ஆனால், அது அவல் அல்ல, உமி என்பதை கர்நாடகத் தரப்பின் விளக்கங்கள் நிரூபித்தன.

இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் டி.ஜி.பியாக இருந்து ஓய்வு பெற்ற தினகர் தன் பங்குக்கு ஒரு வதந்தி குண்டை பற்ற வைத்தார். ராஜ்குமார் கடத்தலின்போது பணம் கைமாறியதாக தனது புத்தகத்தில் அவர் எழுத, அது பற்றியும் மீடியாக்கள் பரபரப் பாக்கின.

இதுபற்றி கலைஞரிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டார்கள். "எனக்குத் தெரிந்தவரையில் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் பணம் எதுவும் கைமாறவில்லை. அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை' என்று தெரிவித்த கலைஞர், ""இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் தினகருக்கும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் இதுபோல அவர் எதை வேண்டுமானாலும் எழுதிக்கொண்டிருப்பார். ஓய்வுபெற்ற எத்தனையோ டி.ஜி.பிக்கள் தாங்கள் எந்த முதலமைச்சரின் கீழ் பணியாற்றினார்களோ அவர்களைப் பற்றியே விமர்சித்து எழுதியது உண்டு. தமிழ்நாட்டில் கூட மோகன்தாஸ் என்ற ரிடையர்டு டி.ஜி.பி எழுதிய புத்தகத்தில், "பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். 20 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களைக் கொடுத்தார்' என்று எழுதியிருந்தார்.

தினகரன் தன்னுடைய புத்தகத்தில், ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் என்னை என்னுடைய வீட்டில் சந்தித்தார் என்று எழுதியிருக்கிறார். இது தவறான செய்தி. அவர் என்னை வீட்டில் சந்திக்கவில்லை. தலைமைச் செயலகத்தில்தான் அவர் என்னை சந்தித்தார்'' என்று கலைஞர் குறிப்பிட்டு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் கிளப்பப்படும் அவதூறுகளை மறுத்தார்.

எல்லாத் திசைகளிலிருந்தும் மறுப்பு வெளியாகும் நிலையில், ராஜ் குமார் குடும்பத்தினர் என்ன சொல்லப்போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் அவர்களை நோக்கி மீடியாக்களின் பார்வை திரும்பியது. டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையின் பெங்களூரு பதிப்பு, ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாளிடம், பணம் கைமாறியதாக தமிழக அரசு கிளப்பிய புகார் பற்றிக் கேட்டது. அதற்கு பதிலளித்த பர்வதம்மாள், ""தமிழக அரசு வழக்கறிஞர், கோர்ட்டில் என்ன சொன்னார் என்று எனக்கு எதுவும் தெரியாது. என் கணவரைக் காப்பாற்றுவதற்காக எங்கள் குடும்பத்தினர் எந்தப் பணமும் கொடுக்கவில்லை'' எனத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.
இதுபோல டெக்கான் ஹெரால்டு பத்திரிகையும் ராஜ்குமார் குடும்பத்தின ரிடம் கருத்து கேட்டிருந்தது. ராஜ்குமாரின் மகன்கள் மூவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், தாங்கள் பணம் எதுவும் கொடுக்கவில்லை என்பதைத் தெரிவித்தனர். சம்பந்தப்பட்டவர்களே தெளிவாக இது பற்றி விளக்கியதால், மீடியாக்களில் விவாத அலைகள் ஓய்ந்தன. ஜெ அரசின் வழக்கறிஞர் கோர்ட்டில் உளறியதால் தேசிய அளவில் ஒரு பரபரப்பு உருவாகி, அடங்கிப்போனது.

சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் விசாரணை என்ற பெயரில் நக்கீரன் மீது 2 ஆண்டுகளாக சுமத்தி வந்த வீண்பழியை சுக்குநூறாக்கும் வகையில் கர்நாடக அரசிடமிருந்தும் ராஜ்குமார் குடும்பத்திடமிருந்தும் கலைஞரிடமிருந்தும் மறுப்புகள் வெளிப்பட்டு, இந்த அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அடுத்தநாள் காலை நக்கீரன் அலுவலக வாசலில் பவானி இன்ஸ்பெக்டர் போலீஸ் டீமுடன் ஜீப்பில் வந்து இறங்க...

அடுத்த இடி...?

திடீர் ஒப்பந்தம்! கைகோர்த்த சகோதரர்கள்!


""ஹலோ தலைவரே... .... தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளுக்கு இருந்த அபரிமிதமான நம்பிக் கையும், ஆளுங்கட்சித் தொண்டர்களுக்கு இருந்த அதிகப்படியான பயமும் ஒரே விஷயம் சம்பந்தப் பட்டதுதான்.''

""மு.க.ஸ்டாலினுக்கும் மு.க.அழகிரிக்குமான முட்டல் மோதல் விவகாரம்தானே!''

""அரசியலைத் தொடர்ந்து கவனித்துவர்ற எல்லாரும் இந்த விவகாரத்தைத்தான் குறிப்பிடுவாங்க. நீங்களும் சரியா சொல்லிட்டீங்க தலைவரே... அ.தி.மு.கவை மறுபடியும் ஜெயிக்க வைக்க ஜெ தேவையில்லை. இவங்க இரண்டுபேரின் உரசல்களே போதும்னு எதிர்க்கட்சித் தரப்பும், ஆட்சிக்கு எல்லாமே சாதகமா இருக்குது... இது ஒண்ணுதான் மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க பாதகமா இருக்கிற ஒரே அம்சம்னு ஆளுங்கட்சி தொண்டர்களும் சொல்லிக்கிட்டிருந் தாங்க.''

""எத்தனையோ திரைப்படங்களுக்கு சூப்பரா திரைக்கதை-வசனம் எழுதிய கலைஞரேகூட, இந்தப் பிரச்சினைக்கு க்ளைமாக்ஸை எப்படி அமைப்பதுன்னு தெரியாமல், காலம் கனியட்டும்னு காத்திருந்ததா சொல்லப்பட்டதே!''

""இப்ப அந்தக் காலம் ஓரளவு கனிஞ்சிருக்கிறதா அரசியல் வட்டாரத்தில் சொல்றாங்க தலைவரே... தென்மாவட்டங்களில் அழகிரியின் செயல்பாடு தேவைங்கிறதை உணர்ந்த கலைஞரே அவருக்கு எம்.பி. சீட் கொடுத்து, மத்திய அமைச்சரவையிலும் இடம் வாங்கிக் கொடுத்தார். ஆனா, அழகிரியோ மாநில அரசியலுக்குத் திரும்புவதிலேயே கவனம் செலுத் தினார். இதுதான் ஸ்டாலினோடு அழகிரி போட்டிங்கிற சூழலை உருவாக்கிடிச்சி. டெல்லி என்னோட மன நிலைக்கு ஒத்து வரலைன்னு கலைஞர்கிட்டே அழகிரி சொல்லிக்கிட்டே இருந்தார். கலைஞரும், பாராளுமன்றக் கூட்டத் தொடர் முடியட்டும்னு பதில் சொல்லிக் கிட்டிருந்தார்.''

""நடப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடர் முடியும்போது இது சம்பந்தமான முடிவு வெளிப்படுமா?''

""கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையா இருக்கணும்ங்கி றதையும், இல்லைன்னா எதிர்க்கட்சிகளுக்குத்தான் லாபம்ங்கிறதையும் இரண்டு பேர்கிட்டேயும் கலைஞர் அடிக்கடி சொல்லிக்கிட்டிருந்தார். இரண்டு பேருமே எங்களுக்கிடையில் எந்த பிரச்சி னையுமில்லைன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. இப்ப, மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு மாநில அரசியலுக்கு வர விரும்பும் அழகிரியின் முடிவை கலைஞரும் ஏற்றுக்கிட்டா ராம். இதுபற்றி ஸ்டாலின்கிட்டேயும் அழகிரி பேசியிருக்கிறார். அதன்பிறகு அழகிரி, ஸ்டாலின் இருவரும் கலைஞர் முன்னிலையில் பேசியிருக் காங்க.''

""என்ன முடிவு எடுக்கப்பட்டதாம்?''

""மாநில அரசியலுக்கு அழகிரி திரும்புவதற்கு ஓ.கே. தெரிவிக்கப்பட்டிருக்குது. மறுபடியும் தி.மு.க ஆட்சிதான் அமையும்ங்கிறதில் சகோதரர்கள் இரண்டுபேரும் உறுதியா இருக்காங்க. இருவரும் சேர்ந்து செயல்பட்டால் வெற்றியைத் தடுக்க முடியாதுன்னு நினைக்கிறாங்க. அதே நேரத்தில், தேர்தல் சமயத்தில் தென்மாவட்டத்துக்கு முக்கியத் துவம் தரணும்னும், மீண்டும் ஆட்சி அமைந்ததும் இந்த இந்த துறைகளை ஒதுக்கணும்னும் அழகிரி கேட்டிருக்கிறார். குறிப்பா, தன் அப்பா முதன் முதலில் வகித்த பொ.ப.துறையை தனக்கு தரணும்ங் கிறது அழகிரியோட வலியுறுத்தல். இது சம்பந்த மான பேச்செல்லாம் சுமூகமா முடிந்திருக்குது.''

""அதன் பிரதிபலிப்பை டெல்லியில் பார்க்க முடிந்ததே!''

""ஆமாங்க தலைவரே.. .. தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் சார்பில் கலந்துக் கிறதுக்காக துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்குப் போனார். அவர் இதற்கு முன் இரண்டுமுறை துணை முதல்வரா டெல்லிக்குப் போனப்பவும், அழகிரிக்கு தகவல் கொடுத்து விட்டுத்தான் போனார். ஆனா, இரண்டு முறையும் அழகிரி டெல்லியில் இல்லை. அதனால டெல்லியில் ஸ்டாலினை அவர் சந்திக்கலை. ஆனா இந்த தடவை, டெல்லி ஏர்போர்ட்டில் ஸ்டாலினை அழகிரி வரவேற்றார். தி.மு.க.வின் மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆகியோரும் துணை முதல்வருக்கு வரவேற்பு கொடுத்தாங்க.''

""கனிமொழியும் வரவேற்பில் கலந்துக்கிட்டாரே!''

""அது மட்டுமில்லீங்க தலைவரே... .. முதல்வர் கலைஞர் டெல்லிக்குப் போனால் தி.மு.க.வின் மத்திய அமைச்சர்களெல்லாம் தமிழ்நாடு இல்லத்தில் அவரை சந்திப்பது வழக்கம். அதபோல, துணை முதல்வர் ஸ்டாலினை டெல்லித் தமிழ்நாடு இல்லத்தில் மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்தார். ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மூவரும் ஒண்ணா பிரேக்-ஃபாஸ்ட் சாப்பிட்டாங்க. அப்ப பல விஷயங்களை மனம் விட்டுப் பேசியிருக்காங்க. இதெல்லாம் கட்சிக்குள் ஒற்றுமையைப் பலப்படுத்தும்னு எதிர்பார்க்கப்படுது.''

""தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்திலும் துணைமுதல்வர் பல முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்காரே?''

""தலைவரே.. 23-ந் தேதியன்னைக்கு விலைவாசி உயர்வு பற்றி ஆலோசனை நடத்தும் கூட்டம் நடந்திருக் கணும். ஆனா, குஜராத் மந்திரியை சி.பி.ஐ. தேடிய விவகாரத்தால், விலைவாசியைக் கட்டுப்படுத்தும் குழுவுக்கு தலைமை வகித்த நரேந்திர மோடி டெல்லிக்கு வராததால் அந்தக் கூட்டம் கேன்சலாயிடிச்சி. அதனால, மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய நிகழ்ச்சிகள் எதுவுமில்லை. கரோல் பாக்கில் ஷாப்பிங் போய் தன்னுடைய பேரன், பேத்திகளான இன்பா, நலன், நிலா மூணு பேருக் கும் பொறுப்பான தாத்தாவா பர்சேஸ் பண்ணி னார். மறுநாள்தான் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம். அதில் மு.க.ஸ்டாலின், தென்னக நதிகள் இணைப்பைப் பற்றியும், மாநிலங்களுக்கிடையி லான பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றியும் அழுத் தம் கொடுத்ததோடு, இதற்காக ஒரு துணைக் குழு அமைக்கணும்னும் வலியுறுத்தினார்.''

""பிரதமர் என்ன சொன்னாராம்?''

""லஞ்ச் நேரத்தின்போது, எல்லாத் தலைவர் களும் இருந்தப்ப ஸ்டாலினிடம் பிரதமர், ஹவ் இஸ் அவர் கிரேட் லீடர்னு கலைஞரைப் பற்றி விசாரித்திருக்கிறார். மற்ற மாநில முதல்வர்களும் ஸ்டாலின்கிட்டே தமிழக அரசின் திட்டங்கள் பற்றி கேட்டிருக்காங்க. மகளிர் சுய உதவிக்குழுக் கள் பற்றி மராட்டிய முதல்வரும், கலைஞர் வீட்டு வசதித்திட்டம் பற்றி எடி யூரப்பாவும் விவரம் கேட்டுத் தெரிஞ்சுக் கிட்டாங்களாம். முதல் நாள் வரமுடியாமல் போனதற்காக ஸ்டாலினிடம் தனிப்பட்ட முறையில் ஸாரி கேட்டிருக்கிறார் நரேந்திரமோடி. துணைமுதல்வரின் கோரிக்கையை ஏற்று மாநில விவகாரங்கள் குறித்து விவாதிக்க துணைக் குழு அமைக்க பிரதமர் உத்தரவிட்டது, இந்த தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி.''

""டெல்லியிலிருந்து திரும்பிய ஸ்டாலின், தனது இளைஞரணி சார்பில் ஜெ.வுக்கு எதிரா ஆர்ப்பாட்டத்தை அறிவிச்சிருக்காரே?''

""சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ. வாய்தா வாங்குவதைக் கண்டித்து ஆகஸ்ட் 4-ந் தேதி இந்த ஆர்ப்பாட்டம் நடக்குது. ஏதேதோ காரணம் சொல்லி வழக்கை இழுத்தடித்த ஜெ, கடைசியா மொழிபெயர்ப்பு தப்புன்னு சொல்லி வாய்தா கேட்க, நீதிபதியே டென்ஷனாகி ஜெ.வின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சி விசாரணை நடக்கும்னு உத்தரவிட்டிருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை பெங்களூரு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதில் அரசுத் தரப்பு தீவிரமா இருக்குது. அதே நேரத்தில், சாட்சி சொல்லா மல் டிமிக்கி கொடுக்கவும் சில அதிகாரிகள் தீவிரமா இருக்காங்க.''

""சிறுபான்மை சமுதாயத்து மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இந்து மாணவர்களுக்கும் வழங்கப்படணும்னு பா.ஜ.க சார்பில் பல இடங்களிலும் தீவிரமா போராட்டம் நடத்தப்பட்டதே!''

""ஆமாங்க தலைவரே.. .. 25-ந் தேதியன்னைக்கு நாகர்கோவிலில் நடந்தது. கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் சொந்த மாவட்டம்ங்கிறதால இரண்டு மாசத்துக்கு முன்னாடி யிருந்தே விளம்பரங்கள் செய்து, ஆர்ப்பாட்டம் பற்றிய கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தாங்க. போராட்டத்தில் கூட்டமும் பலமா இருந்தது. இந்தப் போராட்டத்திற்கு நரேந்திர மோடியை அழைச்சிட்டு வரணும்னு ராதாகிருஷ்ணன் நினைத் தார். மோடி அரசாங்கமே பல போராட்டங்களை சந்திப்பதால் அவரால வரமுடியலை. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை ராதாகிருஷ்ணன் அணுகி யிருக்கிறார். எடியூரப்பாவோ, தமிழகத்தில் எல்லா தரப்பு மக்களின் ஆதரவையும் பெற் றுள்ளவராகவும், என்னிடம் நல்ல நண்பராகவும் பழகும் கலைஞர் அரசைக் கண்டித்து நடக்கும் போராட்டத்தில் சக முதல்வரா என்னால் கலந்துக்க முடியாதுன்னு எடியூரப்பா சொல்லிட்டாராம்.''

""தமிழ்நாட்டின் அடுத்த தலை மைத் தேர்தல் அதிகாரி யாருங்கிற எதிர்பார்ப்பு அதிகமா இருந்ததே?''

""நரேஷ்குப்தா ரிடையர்டா வதால் 3 பெயர்களை சிபாரிசு செய்யும்படி தமிழக அரசிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. சின்ஹா, கண்ணா, ராமையான்னு 3 அதிகாரிகள் பெயரை அரசாங்கம் சிபாரிசு செய்ய, அதை தேர்தல் ஆணையம் ஏத்துக்கலை. வேற 3 பெயர்களை கேட்டது. இதையடுத்து, மத்திய அரசுப் பணியில் உள்ள மிர்த்யுங் சாரங்கி, ராகேஷ் சாகர், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுந்தரத் தேவன், மூணு பேரில் யார் அடுத்த தலைமை தேர்தல் அதிகாரின்னு தீவிரமா பரிசீலனை நடந்தது.''

""காங்கிரஸ் தரப்பிலிருந்தும் தீவிரமான குரல்கள் கேட்டுக்கிட்டே இருக்குதே?''

""அதன் பின்னணியை நான் விசாரித்தேன்... ... ஈ.வி.கே.எஸ். இளங்கோவனோட பேச்சுகளில் வழக்கம்போல சூடு அதிகமா இருக்கு. இது பற்றி கேட்டால், மத்திய அரசின் திட்டங்களை எடுத்துச்சொல்லவும், மாநில அரசின் குறைகளை சுட்டிக் காட்டவும் ராகுல் காந்தி சொல்லியிருக்கிறார் அதன்படி தான் நான் பேசுறேன்னு சொல்றார். இளங்கோவனைவிட வேகமா கார்த்திசிதம்பரத்தின் குரல் ஒலிக்குது. அவரைக் கேட்டாலும், தேர்தலில் அதிக சீட் கேட்கணும்னு ராகுல்தான் சொல்லியிருக்கிறார். அவர் குரலைத்தான் நான் எதிரொலிக் கிறேன்னு சொல்றார். இதுதான் அரசியல் வட்டாரத்தில் பர பரப்பை உண்டாக்கிக்கொண்டி ருக்குது.''

மிஸ்டுகால்!சொந்தக் காரணங்களுக்காகவோ தொழில் நிமித்தமாகவோ இலங்கை செல்லும் நடிகர், நடிகைகளை யாரும் மிரட்டக்கூடாது என நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே நடிகர் சங்கம்தான் இலங்கையில் நடைபெற்ற இந்தியப் படவிழாவில் தமிழ் நடிகர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என்றும் அதில் கலந்துகொள்ளும் பாலிவுட் நடிகர்களின் படங்களை இனி திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும் தெரிவித்திருந்தது. இதையடுத்து ரஜினி, கமல், அமிதாப் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவரும் விழாவை புறக்கணித்தனர். இப்போது அசின், கருணாஸ் பிரச்சினையில் நடிகர் சங்கம் பல்டி அடித்திருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது

நள்ளிரவில் நடந்த நரபலி! - தமிழக ஷாக்!

காதலனைப் பழி வாங்க... அவரது மகனான சிறுவன் ஆதித்யாவைத் துடிக்கத் துடிக்கக் கொன்று.. தமிழகத்தையே திகிலில் உறையவைத்த பூவரசியின் விவகாரம் அடங்குவதற்குள்....

ஒன்றேகால் வயதுப் பிஞ்சுக் குழந்தையைக் கொடூரமாக நரபலி கொடுத்து எல்லோரையும் பதற வைத்திருக்கிறான் அயோக்கிய மந்திரவாதி அப்துல் கபூர்.

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச்சேர்ந்த சிரின் பாத்திமா, தனது ஒன்றேகால் வயது மகன் யூசுப்பைக் காணவில்லை என மதுரை தல்லாகுளம் காக்கிகளிடம் புகார்கொடுத்துப் பதறினார். எப்படி குழந்தை காணாமல் போனது என நாம் அவரை விசாரித்தபோது...“""மூணு வருசத்துக்கு முன்ன எனக்குக் கல்யாணம் ஆச்சுங்க. நல்லபடியா போன எங்க வாழ்க்கைல மூணு மாசத்துக்கு முன்ன விபத்துவடிவில் சோதனை. என் வீட்டுக்காரர் கவுஸ் பாட்சா... வாகன விபத்தில் சிக்கி... என்னையும் என் பிள்ளையையும் தவிக்க விட்டுட்டு போய்ச்சேர்ந்துட்டார். அதிலிருந்து தூக்கம் இல்லை. நிம்மதி இல்லை. சரியா சாப்பிடக் கூட முடியறதில்லை. எப்பவும் என் வீட்டுக்காரர் நினைவா அழுதுக்கிட்டே இருந்தேன். இதைப்பார்த்த என் மாமியார்தான்... கோரிப்பாளையம் தர்ஹாவில் வியாழக்கிழமைல தங்கி துவா செஞ்சா... மன நிம்மதி கிடைக்கும்னு சொன்னாங்க. அதனால் தர்ஹாவுக்கு அன்னைக்குக் குழந்தை யோடப் போனேன். அங்க 200 குடும்பத்துக்கு மேல தங்கி யிருந்தாங்க. அன்னைக்கு இரவு தர்ஹாவில் அசந்து தூங்கினேன். நடு சாமத்தில் விழிச்சி என் பிள்ளைக்குப் பால்கொடுத்துட்டு மறுபடியும் தூங்கிட்டேன். விடிகாலை 5 மணிக்கு எழுந்து பார்த்தப்ப என் குழந்தையைக் காணோம்ங்க. நான் பிள்ளையைத் தேடிக் கதறி துடிச்சதைப் பார்த்து ஆளாளுக்குத் தேட ஆரம்பிச்சாங்க. இருந்தும் பிள்ளை கிடைக்கலீங்க. எனக்கு என் பிள்ளை வேணும்''’என்றார் கண்ணீருடன். ஆனால் அந்தக் குழந்தைதான் படுகொடூரமாக நரபலி கொடுக்கப்பட்டி ருக்கிறது.

மந்திரவாதி அப்துல் கபூரைப் பிடித்தது எப்படி?

தல்லாகுளம் இன்ஸ் பெக்டர் சிதம்பர முருகேசன் விவரிக்கிறார்.... ""2-ந் தேதி அதிகாலை குழந்தை காணாமல் போயிருக்கு. பல இடங்கள் லயும் தேடிப்பார்த்துட்டு... எங்கக்கிட்ட அன்னைக்கு மதியம் புகார் கொடுத்தாங்க. நாங்க அந்த தர்ஹாவுக்குப் போய் கேட்டை மூடச்சொல்லிட்டு... அங்க தங்கியிருந்தவங்களை லெட்ஜரை வச்சி சரி பார்த்தோம். அப்ப காயல்பட்டின முகவரி கொடுத்திருந்த அப்துல் கபூரும் அவனோடு இருந்த ரமீலாவும் மிஸ் ஆனதைத் தெரிஞ்சிக்கிட்டு... காயல்பட்டினம் போனோம். அவன் ஊரைவிட்டு போயே 10 வருசமாச்சேன்னு சொன்னாங்க. அங்க ரெண்டுநாள் தங்கி விசாரிச்சப்ப.. மாறி மாறி தர்ஹாக்கள்ல தங்கறது அவன் வழக்கம்னு தெரிஞ்சிது. பில்லி சூன்யம், மந்திர மாயம் செய்றதுதான் அவன் தொழிலாம். ஏற்கனவே கட்டிய மனைவி இவனை விட்டுப்போன நிலையில்... இந்த ரமீலாவை செட் டப்பா வைச்சிக்கிட்டிருக்கான். இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு... எங்க எஸ்.ஐ. தர்மலிங்கம் தலைமையிலான டீம் தர்ஹா தர்ஹாவா போய் சலிச்சி... திருச்செந்தூர் அருகே இருக்கும் கல்லாமொழி தர்ஹாவில் இருந்த அப்துல் கபூரை மடக்கியது. எனக்கு எதுவுமே தெரியாதுன்னு மழுப்பினான். ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்து விசாரிச்சோம். அப்பதான் குழந்தையைத் தேடாதீங்க. அதைக் கொன்னுட்டேன்னு அசால்டா சொல்றான். கொஞ்சம் கூட அவனுக்கு பயமோ குற்ற உணர்வோ இல்லை. எதுக்குடா கொன்னேன்னு கேட்டா... "ரமீலா வுக்கு அடிக்கடி சொகமில்லாமப் போவுது. அது சரியாகணும்னா ஒரு தலைச்சன் குழந்தையை நரபலி கொடுக்கணும்னு எனக்குள் அசரீரி சொன்னது'ன்னு சொல்றான். அந்தப் பச்சைக் குழந்தையை... பதைக்கப் பதைக்க கொன்னுருக்கான் அந்த அயோக்கியன்''’ என்கிறார் வருத்தத்தோடு.

சிறுவன் யூசுப்பை கடத்தி நரபலி கொடுத்தது எப்படி? போலீஸ் விசாரணை யில் இருந்த மந்திரவாதி அப்துல் கபூரிடமே கேட்டோம். அலட்டிக் கொள்ளாமல் நம்மிடம் எல்லாவற்றையும் அவன் ஒப்பிக்க ஆரம்பித்தவன்...

""நரபலிக்குத் தோதா ஒரு ஆண் தலைச்சன் குழந்தையைக் கொஞ்சநாளாத் தேடிக்கிட்டு இருந்தேன். அன்னைக்கு கோரிப்பாளையம் தர்ஹாவில் தங்கியிருந் தப்ப... குழந்தையோடு அங்க வந்த பாத்திமாக்கிட்ட பேச்சுக்கொடுத்தேன். அப்ப பாத்திமாவின் கணவன் செத்துப் போனதையும்.. அந்த ஆண் குழந்தை, தலைச்சன் குழந்தை என்பதையும் தெரிஞ்சிக்கிட்டு... இதுதான் நரபலிக்குத் தோதான குழந்தைன்னு தீர்மானிச்சேன். மறுநாள் அதிகாலை குழந்தையைத் தூக்கிட்டு நேரா காயல்பட்டினம் அருகில் இருக்கும் ஏரலுக்குப் போய் ஒரு லாட்ஜில் தங்கினேன். அந்தக் குழந்தை அம்மாட்ட போகணும்னு அழுதுக்கிட்டே இருந்தது. ஆண்டவனை மனசில் நினைச்சி துவா பண்ணிட்டு... நரபலிக்கு ரெடியானேன். பையன் பயந்துபோய் முரண்டுபிடிச்சான். ரமீலா... அவன் கை, காலை இறுக்கிப் பிடிச்சதும்.. நான் கழுத்தை கரகரன்னு அறுத்தேன். ரத்தம் பீய்ச்சிக்கிட்டு அடிக்க... அதை இரும்பு ஊதுபத்திக் குழாயில் கொஞ்சம் பிடிச்சிக்கிட்டேன். குழந்தையின் துடிப்பு அடங்கியதும்... அதன் கழுத்தை யும் உடலையும் தனித்தனியா ஆக்கி... ரெண்டையும் தனித்தனி தூக்குச்சட்டியில் போட்டு எடுத்துக்கிட்டேன். அப்புறம் நேரா ஏர்வாடி காட்டுப் பள்ளி தர்ஹாவுக்குப் போனேன். அங்க சேர்மன் தோப்பில் ஒரு குடிசை வீட்டை, 200 ரூபா மாச வாடகைக்கு எடுத்தேன். தர்ஹாவுக்கு வர்றவங் களுக்காக இங்க நிறைய குடிசை போட்டிருக்காங்க.

அந்த குடிசை வீட்டுக் குள்... அந்தக் குழந்தையின் உடலை வச்சி... ஊதுபத்தி கொளுத்தி... மந்திரம் சொல்லி... பூஜை பண்ணி னேன். பிறகு அங்கேயே குழிதோண்டி உடலைப் பொதைச்சேன். அப்புறம் தலை இருந்த தூக்குச் சட்டிக்குள் தாயத்து, தகடு, குர்ரான் புத்தகமெல்லாம் உள்ளே வச்சி... வாளிக்குள் சிமெண்ட் பூச்சு மூலம்... மூடியை டைட் பண்ணி னேன். அப்பதான் வாடை வராது. பிறகு துக்குச் சட்டியை ஒரு பையில் வச்சி எடுத்துக்கிட்டு பஸ் ஏறி... கல்லாமொழி தர்ஹாவுக்குப் போனேன். அங்க இரவு 8 மணிக் கெல்லாம் நடமாட்டம் அடங்கிடும். தர்ஹா பக் கத்தில் இருக்கும் கடற் கரைக்கு நள்ளிரவில் அந்தத் தூக்குச் சட்டியுடன் ரமீலாவோட போனேன். கடல் ஓரத்தில் ரமீலாவை உட்காரவச்சி.. அவள் தலை யில்... குழந்தையின் ரத் தத்தை தெளிச்சி... காளி படத்தை வச்சி பூஜை பண்ணினேன். அப்புறம் கடலோரம் குழிதோண்டி அந்தத் தலையையும் புதைச் சிட்டு... தலையை வெட்டிய கத்தியை கடல்ல வீசிட்டு.. கை, காலை கழுவிக்கிட்டு வந்துட்டேன். இப்படி செஞ்சா நோய்நொடி யெல்லாம் அண்டாது. மந்திர சக்தியும் கிடைக் கும்''’என்று அழுத்தமாய்ச் சொல்லி வெடவெடக்க வைத்தான்.

மந்திரவாதி அப்துல் கபூரை விசாரித்த காக் கிகள் அத்தனை பேரும் பேய றைந்த மாதிரி ஆகிவிட்டார்கள். அவனை அழைத்துக் கொண்டு ஏர்வாடிக்குப் போன காக்கிகள்... குழந்தை யின் உடல் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டினர். அப்போது காளியின் படம் உட்பட மந்திரித்த பொருட் களும் வெளியே வந்தன. இதே போல் கல்லாமொழியில் புதைக்கப் பட்ட தலையைத் தோண்டியபோதும் மந்திரித்த பொருட்கள் கிடைத்தன. புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காட்டப்போன மந்திரவாதி அப்துல் கபூரையும் ரமீலா பீவியையும் கண்ட பொதுமக்கள்... அவர்களைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என கொந்தளிக்க... போலீஸ் படாத பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தியது.

மந்திரவாதியின் கள்ளக் காதலியான ரமீலா பீவியோ ""தலையைத் துண்டிச்சிக் கொன்னா தான் அது கொலை. கழுத்தை அறுத்தா அது கொலையில்லை. ரத்தம் வெளியேறி.. அந்தப் பையனாத்தான் செத்தான்'' என்று நெஞ்ச ழுத்தத்தோடு. சொல்லியபடியே இருக்க.. இருவரையும் ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தார்கள் காக்கிகள்.

குழந்தை உயிரோடு கிடைத்துவிடும் என்று ஆசையோடு காத்திருந்த பாத்திமா...’"ஐய்யோ மகனே நீயும் என்னை விட்டுட்டுப் போய்ட்டியா?'’ என கதறித் துடித்துகொண்டிருக் கிறார்.

இந்த நரபலிக்கொலை... ஏற்படுத்திய அதிர்ச்சி அலை கள்... பலரையும் பாதித்திருக் கிறது.

தமிழ்ப் பெண்களை மிரட்டி கற்பழித்தோம்


நெல்லை செங்கோட்டையை ஒட்டிய கேரள கும்பாவுருட்டி அருவிக்குச் சுற்றுலாச் செல்லும் தமி ழகப் பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரத்தை அதிர்ச்சி சி.டி. ஆதாரத்தோடு "அடர்ந்த வனம்! கொட்டும் அருவி! இளம்பெண்களை வேட்டையாடிய வனக்கும் பல்' என்ற தலைப்பில் 17.7.10 இதழில் வெளியிட்டி ருந்தோம். கேரள காவல்துறை உடனடியாக களத்தில் இறங்கியது.

கேரள வனத்துறையின் உளவுப் பிரிவு விசாரணை நடத்துமென்றார்கள் வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வமும் வன அதிகாரி வர்க்கீசும்.

கேரள உள்துறை அமைச்சரான கொடியேறி பால கிருஷ்ணன், எதையும் தட்டிக்கழிக்கும் தென்மலைக் காவல்நிலையம் மீது நம்பிக்கை இல்லை என்பதால் கொல்லம் டி.எஸ்.பி. வரதராஜனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக குளத்துப்புழா இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டது.

கொல்லத்தில் பதுங்கியிருந்த மணிகண்டனும் சாகுல்ஹமீதும் உன்னிகிருஷ்ணனும் கைது செய்யப் பட்டு, கும்பாவுருட்டிக்கு கொண்டுவரப்பட்டார்கள்.

இந்த மூவரும் கேரள அச்சன்கோயிலைச் சேர்ந்தவர்கள். கேரள வனத்துறை யால் அமைக்கப்பட்ட வனப்பாது காப்புக் குழுவில் உறுப்பினர்கள்.

ஏற்கனவே "சிறப்பு'க் கவனிப் பால் கிறங்கிப் போயிருந்த அவர்கள் மறுபடியும் உடம்பை புண்ணாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

""சொல்லுங்கடா...?'' -இன்ஸ் பெக்டர் சந்தோஷ்குமார் விசாரித்தார்.

""மலையாளிகள் யாரும் இங்கே வருவதில்லை. தென்காசி, செங் கோட்டை, இலத்தூர் பகுதி தமிழர் கள்தான் வருவார்கள். குழந்தை, குட்டிகளோடு வருபவர்களை நாங்கள் ஒன்றும் செய்வதில்லை. நல்ல மனிதர்களாக நடந்துகொள் வோம். இளம் தம்பதிகள்... காதல் ஜோடிகள் இப்படிப்பட்டவர்களிடம் தான் தப்பு செய்தோம்.''

""எவ்வளவு காலமாக இப்படிச் செய்கிறீர்கள்?''

""இப்பதான் ஒண்ணரை வருஷ மாக.''

""எத்தனை கொலை செய்திருக் கிறீர்கள்?''

""சார்... அதைச் செய்யவே யில்லை சார்!''

""ஆண்களை என்ன செய்வீர்கள்?''

""அடிச்சு விரட்டிவிடுவோம் சார்... எதிர்த்தான்னா மரத்தில் கட்டிப் போடுவோம்.''

""இவனுங்க சொல்றானுங்க... நீ மட்டும் ரவுடி மாதிரி நிக்கிறே... சொல்டா... சொல்லுடா...'' 43 வயது உன்னிகிருஷ்ணன் கன்னத்தில் பளாரென விழுந்தது உபசரிப்பு.

""வர்ற டூரிஸ்ட்ல பெண்களா பார்த்து... "கும்பாவுருட்டி சாதாரண அருவிதான்... அந்தப் பாறைகளைக் கடந்து போனால் மணலாறு காணலாம் சூப்பரா யிட்டிருக்கும்'னு இரக்கமா, பணிவா பேசுவோம். தமிழ்ப் பொண்ணுங்க நம்பிடுவாங்க. பட்டப்பகல்தானேன்னு நம்பி எங்க பின்னாடி வருவாங்க. பாறையிடுக்குக்குப் போனதும் கத்தியைக் காட்டி, திமிர விடாம நெனைச்சதை முடிச்சிக்குவோம்.''

""யாரும் போலீஸ்ல புகார் கொடுக்க லையா?''

""இது அசிங்கமா யிருக்குல்ல... கொடுக்க மாட்டாங்க சார்...''

""இப்ப வெப்சைட்ல நக்கீரன்ல வந்த படம் எல்லாம் எப்ப எடுத்தது? யார் எடுத்ததுடா?''

""என்சனங்கில்... எங்க ஆசை, சல்லாபம் எல்லாம் முடிஞ்சதும் அவங்களை நிர்வாணமா... விதம் விதமா செல்கேமராவில் படம் புடிச்சி... அதை புளூஃபிலிம் சி.டி.யாக்கி கேரளாவுல உள்ள முக்கிய நகரங்கள்ல எங்களுக்கு நம்பிக்கையான கடைகளில் விற்பனை செய்தோம். இதுல எங்களுக்கு தொடர்ந்து நல்ல வருமானம் கிடைச்சது. அப்படி விற்பனை செஞ்ச ஒரு சி.டி.தான் எப்படியோ அந்த நெட்காரங்களுக்கு கிடைச்சு... எங்களை மாட்ட வச்சிருக்கு சார். இந்த தாயும் மகளும் சி.டி.யும் எங்களோடதுதான். ஆனால் எப்ப எடுத்ததுனு ஞாபகம் இல்லை சார்.''

ஸ்பாட் என்கொயரியை முடித்துக் கொண்டு சாலைக்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமாரை சந்தித்து விசா ரணையின் போக்கு பற்றி கேட்டோம்.

""பாதிக்கப் பட்ட யாராவது ஒருத்தர், எங்கா வது புகார் கொடுத் திருந்தாலும், ஆரம்பத்திலேயே இந்தக் கொடூரத்தை தடுத்திருக்கலாம். புகார் கொடுக்காததால் ஒன்றரை வருடமா ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.

இந்த 3 பேரையும் இப்போது ரிமாண்ட் செய்து விட்டு பிறகு போலீஸ் கஸ்டடியில் எடுத்து தனித் தனியே விசாரிக்க வேண்டும். இவர்கள் மட்டும்தான் செய்தார்களா? இவர்கள் பின்னால் வனத் துறையினர் யாராவது இருக்கிறார்களா என்பதை அடுத்தகட்ட விசாரணை மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும்'' என்றார் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார்.

ஆனால்... நம்மைத் தொ டர்புகொண்ட கொல்லம், குளத்துப்புழா பகுதி மீடியா நண்பர்களோ... ""நோ கம்ப்ளைண்ட்ஸ்... அதனால... இந்த அளவோட விசா ரணையை முடித் துக் கொண்டுவிடப் போகிறார்கள். பாதிக் கப்பட்டவர்கள் யாராவது புகார் கொடுத்தால் மட்டுமே... விசாரணையும் நடவடிக்கையும் தீவிரமாகும்'' என்றார்கள்.

Tuesday, July 27, 2010

ஹன்சிகா மோத்வானி போகும் வேகத்தைப் பார்த்து தமன்னா சற்றே அரண்டு போயுள்ளாராம்


அதிரடியாக வந்த ஹன்சிகா மோத்வானி போகும் வேகத்தைப் பார்த்து தமன்னா சற்றே அரண்டு போயுள்ளாராம். இதனால் இத்தனை நாட்களாக போட்டு வந்த கண்டிஷன்களை எல்லாம் கப்பென்று காற்றில் பறக்க விட்டு விட்டு தாராளமயமாக்கலில் இறங்கியுள்ளாராம்.

கேடி படம் மூலம் தமிழுக்கு வந்த தமன்னாவுக்கு தற்போது தமிழில் ஏறுமுகம். முன்னணி ஹீரோக்கள் எல்லாம் தமன்னாவுடன் ஜோடி சேர கடுமையாக விருப்பப்படுகிறார்கள். இதை பயன்படுத்திக் கொண்டு வரிசையாக ஒவ்வொரு முன்னணி ஹீரோவுடனும் மாறி மாறி ஜோடி சேர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறார் தமன்னா.

நான் ஸ்டாப் கலக்கலாக போய்க் கொண்டிருக்கும் தமன்னாவின் பாதையில் இப்போது ஒரு ஸ்பீட் பிரேக்கர். அது ஹன்சிகா மோத்வானி. வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளார் ஹன்சிகா. அதை விட முக்கியமாக கவர்ச்சியில் பின்னிப் பெடலெடுக்கிறாராம்.

தனுஷுடன் மாப்பி்ள்ளை படத்தில் ஜோடி சேர்ந்த ஹன்சிகா, அடுத்து ஜெயம் ரவியுடன் இச் படத்தில் நச்சென நடித்துக் கொண்டிருக்கிறார். லேட்டஸ்டாக விஜய்யுடன் வேலாயுதம் படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார்.

அடுத்தடுத்து மற்ற ஹீரோக்களையும் வளைத்துப் பிடிக்க விறுவிறுப்பாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஹன்சிகாவின் வேகம் தமன்னாவை சற்றே சிந்திக்கவும், நடுங்கவும் வைத்துள்ளதாம்.

இதனால் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும், இவர்தான் வேண்டும், அவர்தான் வேண்டும் என்று போட்டுக் கொண்டிருந்த கண்டிஷன்களை அப்படியே கடாசி விட்டாராம்.

எந்த வகையான தொல்லையும் தராமல் சமர்த்தாக நடித்துக் கொடுப்பேன் என்றும் வாய்மொழியாக உத்தரவாதத்தை உலவ விட்டுள்ளாராம்.

தமன்னாவின் இந்த மாற்றத்தால் தயாரிப்பாளர்கள் குவிவார்களா, அவரிடம் குவிவார்களா, ஹன்சிகா என்ன ஆவார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியவை.

Sunday, July 25, 2010

ஆதித்யா கொலை வழக்கு! வெளிவராத அதிர்ச்சித் தகவல்கள்!


ஜூலை-18. நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில்... சென்னை பேருந்துகள் வந்து நிற்கும் இடத்தில் ஒரு மர்ம சூட்கேஸ் பெட்டி கிடந் திருக்கிறது. ஈக்கள் வேறு மொய்த்துக் கொண்டிருந்ததால்... அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வலுத்தது. அடுத்த நிமிடமே அருகிலுள்ள கடைக்காரர் கள் நமக்கு தகவல் கொடுக்க விரைந்து சென் றோம். அருகிலுள்ள வெளிப்பாளையம் காவல் நிலையம் போலீஸாரும் வர... பரபரப்பு தொற்றிக் கொண்டது. வெடி குண்டு இருந்தால் என்ன செய்வது என்று போலீஸார் அஞ்சி நிற்க... "ஈக்கள் மொய்ச் சிக்கிட்டிருக்கு நிச்சயமா வேறு ஏதோ இருக்கணும்' என்றபடி போலீஸார் முன்னிலையிலேயே சக பத்திரிகையாளர்களுடன் அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு போய் ஓரமாய் வைத்தோம். சூட்கேஸ் அளவுக்கதிகமான வெயிட்டாக இருந்ததால் சூட்கேஸின் "சிப்'பை அவிழ்க்காமல் நகராட்சி ஊழியரை வைத்து பிளேடால் கிழித்து சூட்கேஸை திறந்தோம். இதயத் துடிப்பும் அப்படியே நின்றுவிட்டது போல்தான் இருந்தது. காரணம்... முகத்தில் பாலித்தீன் கவரால் இறுக கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் உடல்தான் அதற்குள் இருந்தது.

""உங்கப் பையனை காணோம்னு புகார் கொடுத்திருக்கீங்களே. இந்தப் பையனா பாருங்க. சென்னை உயர்நீதிமன்றம் அருகிலுள்ள எஸ்பிளனேடு போலீஸார் இறந்த சிறுவனின் உடலை போட்டோவில் காண்பிக்க... "இவ்ளோ பெரிய பையன் இல்லைங்க... மூன்றரை வயசுதாங்க ஆகுது' என்று மறுத்திருக்கிறார் காணாமல் போன சிறுவன் ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமார். ஆனால்... சிறுவன் அணிந்திருந்த டி-ஷர்ட்டையும் பேண்டையும் காண் பிக்க "அய்யய்யோ அவன் என் புள்ளதாங்க' என்று அடித்து முட்டிக் கொண்டு தாய் அனந்தலட்சுமி கதறி அழ... காணாமல் போன சிறுவன் ஆதித்யாதான் என்பதை உறுதி செய்த காக்கிகள்... இன்வெஸ்டிகேஷனை இன்னும் சீரியஸ் ஆக்கினார்கள்.

இறந்து போன சிறுவன் ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமாரிடம் விசாரணையை தொடங்கியது காக்கிகள் டீம். இந்த வழக்கில் வெளிவராத அதிர்ச்சித் தகவல்கள் வெளிவர ஆரம்பித்தது.


""என்னோட ஃபேமிலி ப்ரண்டு பூவரசியோடுதான் என் பையனை அனுப்பி வெச்சோம். அவங்களும் என் பையன் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. ஆனா, கடத்திட்டுப் போன பாவிங்க... லட்ச லட்சமா பணம் கேட்டிருந்தாக்கூட கொடுத் திருப்பேனே... ஆனா என் செல்லத்தோட உசுரை இப்படி...'' அதற்கு மேல அவரால் பேச முடியவில்லை.

அடுத்து குடும்பத் தோழியான (!) பூவரசியை தனியாக விசாரித்தனர். ""ஆதித்யா என் உசுருங்க. அந்த சின்னக் குழந்தைக்கிட்ட கொஞ்சிப் பேசுறது எனக்கு சந்தோஷம். அடிக்கடி கடைக்கு எல்லாம் கூட்டிட்டுப் போய் பிடிச்சதை எல்லாம் வாங்கிக் கொடுப்பேன். அப்படிப்பட்ட செல்லக் குழந்தையை ஜெயக்குமாரே...'' என்று பூவரசி தேம்பி அழ ஆரம்பிக்க... திடுக்கிட்டுப் போன காக்கிகள்... ""பெத்த புள்ளையை அப்பனே... நீ என்ன சொல்ற?'' நெற்றிப் புருவத்தை சுருக்கியபடி பூவரசியிடம் கேட்க... ""உண்மையை சொல்லிடுறேங்க.

நானும், ஜெயக்குமாரும் ஒரே ஆபீஸ்ல வேலை பார்த்தோம். அப்போதான் எனக்கும் அவருக்கும் காதல் பூத்தது. நாங்க ரெண்டுபேரும் சுத்தாத இடமே இல்ல. அந்தளவுக்கு உயிருக்குயிரா காதலிச்ச ஜெயக்குமார்... என் முன்னாலேயே அனந்தலட்சுமியை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ஆனாலும், எங்களுக் குள்ள உள்ளத் தொடர்பு எப்போதும் போல தொடர்ந்துக்கிட்டுத்தான் இருந்தது. என்னை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சினேன். கொஞ்ச நாளாகட்டும்னான். எனக்கும் ஒரு குழந்தை பொறந்து கொஞ்சணும்னு ஆசை இருக்காதா? அந்த ஆசையை யும், பாசத்தையும்தான் அவனோட மகன்... ஆதித்யாமேல காண்பிக்க ஆரம்பிச்சேன்.
அன்னைக்கு காலையில எப்பவும் மீட் பண்ற இடத்துல வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போ குழந்தை ஆதித்யாவையும் கூட்டிக்கிட்டு வந்திருந் தான்... ஜெயக்குமார்.

சாப்ட்டு முடிச்சதும்... தண்ணி கேட்டான் ஆதித்யா. பக்கத்திலேயே இருக்கிற என்னோட ஒய்.டபுள்யூ.சி.ஏ. ஹாஸ்டலில் போய் வாட்டர் பாட்டில் எடுத்துட்டு வரும்போது... அய்யோ... அவன் மனுஷனா மிருகமா? கார் பின் சீட்ல வச்சு... கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம பெத்த புள்ளையை கயிறால இறுக்க ஆரம்பிச்சுட்டான்.

என்னால அதைப் பார்க்கவே முடியல... "டேய்... என்னடா பண்ற? ஏண்டா இந்தப் பச்சப் புள்ளையை இப்படி பண்றே?ன்னு பதறிப் போய் கேட்டதுக்கு... "நீ இவன் மேல வெச்சுருக்குற பாசத்துலதான் என்னை விட்டு போகமாட்ற... இவனை கொன்னுட்டா'ன்னு சொல்லிக்கிட்டே வெறிப்பிடிச்ச சைக்கோ மாதிரி அந்தக் குழந்தையை கழுத்துல இறுக்கிட்டான். நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன். செஞ்ச கொலையை மறைக்கத்தான் பையன் காணாம போயிட்டான்னு புகார் கொடுத்தோம்'' என்று கதறி அழ... டென்ஷனான காக்கிகள் "பெத்த புள்ளையை கொலை செஞ்சிட்டு நாடகமா ஆடுற?' -ஜெயக்குமாரை தனியாக அழைத்து விசாரணையை தீவிரப் படுத்த...

""ஆபீசுக்கு கூட் டிக்கிட்டு வந்த என் பையனை "சர்ச்சுக்கு கூட்டிட்டுப் போய் ப்ரேயர் பண்ணிட்டு வரேன்'னு கூட்டிட்டுப் போனவளே அவதாங்க. அவளை கல் யாணம் பண்ணிக் கலன்னு ரொம்ப கோவ மா இருந்தா. ஆனா குழந்தை மேல பாசமா இருக்காளேன்னுதான் அவகூட அனுப்பி வைச்சேன்'' என்று ஜெயக்குமாரும் கதற... இருவரையும் ஒரே இடத்தில் உட்கார வைத்து விசாரிக்க ஆரம்பித்தனர்.

"ஏண்டி என் புள்ளைய கொலை செஞ்ச?' என்று ஜெயக்குமாரும், "அப்பவே உன்னை போலீஸ்ல புடுச்சுக் கொடுத்திருக்கணும்... இல்லைன்னா இப்படியொரு நிலைமை வந்திருக்காது'... இருவரும் அங்கேயே அடித்துக் கொள்ளும் அளவுக்குப் போக... அதட்டிய காக்கிகள், சிறுவன் கொலை செய்யப்பட்டிருந்த சூட் கேஸ் யாருடையதுன்னு தெரிஞ்சுப் போச்சு. உண்மை யைச் சொல்லுங்க. ஏன் அந்தக் குழந்தையை இப்படிக் கொடூரமா கொலை செஞ்சீங்க? விசாரணை காக்கி களின் கண்கள் சிவக்க... பூவரசி சொன்ன ஸ்டேட்மெண்ட் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியதுபோல் இருந்தது.

""அடிக்கடி நானும் ஜெயக்குமாரும் ஒண்ணா இருந்ததால கர்ப்பம் ஆனேன். ஆனா இரண்டுமுறை என் கர்ப்பத்தை கலைக்கச் சொல்லிட்டு என் வயித்துல இருக்கிற குழந்தையையும் அழிச்ச பாவியை எப்படி தண்டிக்கிறதுன்னு ஒவ்வொரு நாளும் துடியாய் துடிச்சது மனசு(!). அவனோட குழந்தை ஆதித்யா மேல அவன் உசுரே வச்சிருந்தான். என் குழந்தையை அழிக்கும்போது என் மனசு எப்படி அணு அணுவா துடிச்சதோ, அதே சித்ரவதையை அவனும் அனுபவிக்கணும்னா ஒரே வழி... இதுதான்னு தோணினது. அந்த வெறியோடதான் ஆதித்யாவை நைஸா ஹாஸ்டலுக்கு கூட்டிவந்தேன். ஆதித்யாவின் கழுத்தை நாடாவால் இறுக்கி கொலை பண்ணினேன். மனசு கேட்காமத்தான் சர்ச்சுக்கு பாவமன்னிப்பு கேட்கப் போனேன். அங்கே மயங்கி விழுந்துட்டேன்'' என்று உண்மையை கக்கியிருக்கிறாள் கொஞ்சமும் ஈவு இரக்கமே இல்லாத படுபாதகி பூவரசி.

இவர்களின் கள்ளக்காதலில் அப்பாவியான ஒரு குழந்தையோட உசுரை கொன்னுட்டாளே என்று பொதுமக்கள் பலர் கொதிப்படைந்து கோர்ட்டை முற்றுகையிட்டதால... பூவரசியை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டின் வீட்டில் கொண்டுபோய் விசாரித்தனர். அங்கு வந்த பூவரசியை துப்பட்டாவால் மூடிய பெண் காக்கிகள் கடைசி வரையில் அவரது முகத்தை போட்டோ எடுக்க விடாமல் பாது காப்பாக சென்றனர். பூவரசியை புழல் சிறைக்கு கொண்டுபோக அங்குள்ள பெண் கைதிகளே பூவரசி மீது வெறுப்பையும் வேதனையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இறந்த சிறுவன் ஆதித்யாவின் தாய் அனந்த லெட்சுமியை சந்திக்க சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகர் இரண்டாவது தெருவிலுள்ள வீட்டுக்குச் சென்றோம்.

பிள்ளையை இழந்த துக்கத்தில் படுத்துக் கிடந்த அனந்தலெட்சுமி ""என் புருஷனை எதுவும் பண்ணவேணாம்ங்க. இருக்கிற ஒரு பொம்பளைப் பிள்ளையையாவது நல்லபடியா வளர்க்கணும்'' என்று கைகூப்பி அழுகிறார் அப்பாவியாக.

அருகில் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தவர்களோ, ""இவர்களின் கள்ளக்காதல் அனந்த லெட்சுமிக்கு தெரிஞ்சுதான் இங்க குடிவந்தாங்க. வீட்டிலுள்ளவர்களை எதிர்த்துதான் ஜெயக்குமாரை காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க இவங்க. அதனால அனந்தலெட்சுமிக்கும் ஆதரவா யாருமில்ல. பூவரசியும் சொந்த ஊரான வேலூர்-ராணிப் பேட்டையில் கமல்சந்துங்கிறவனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்காமலேயே குடும்பம் நடத்த... பூவரசியை தலைமுழுகிட்டாங்க பெற்றோரும் உறவினரும். இப்படி பலரிடம் ஏமாந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துட்டு சென்னைக்கு ஓடிவந்த பூவரசிக்கும் ஆதரவா யாருமில்லை. இந்த பலவீனத்தையும் தன்னோட பலமாக ஆக்கிக்கிட்டு இந்த ஜெயக்குமார் மன்மத லீலைகளை புரிஞ்சுக் கிட்டிருந்திருக்கான். ஆக... முதல் குற்றவாளி ஜெயக்குமார்தான்'' என்கிறார்கள் உறுதியாக.
மனநல மருத்துவர் கீர்த்தியோ, ""ஏற்கனவே ஆண்களிடம் ஏமாந்த பூவரசிக்கு ஜெயக்குமாரிடமும் ஏமாறப்போகிறோம் என்று தெரிய ஆரம்பிக்கும்போது அவரது ஆளுமையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. காதல னுக்கு திருமணமான பிறகும் உறவை நீட்டித்திருப்பது பூவரசியின் சறுக்கலான நிலை. எதிரியை பழிவாங்க அந்த எதிரிக்குப் பிடித்தவர்களை வைத்து மிரட்டுவதற்கு மேனிப்புலேஷன் என்று பெயர். ஆனால் அதற்கும் எதிரி பயப்படவில்லையென்றால் அடுத்த நிலை, அதை செயல்படுத்துவதற்கு டிஸ்ப்ளேஸ்மென்ட் என்று சொல்வோம். அதைத்தான் செயல்படுத்தியிருக்கிறார் பூவரசி'' என்கிறார் அவர்.

பழிக்குப் பழி வாங்க... அதற்கு சம்பந்தமே இல்லாதவர்களை- அதுவும் குழந்தைகளை கொலை செய்கிறவர்களை தூக்கில்தான் போட வேண்டும்.

பொய் வழக்கு போட்ட தேவாரத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்!


""ஹலோ தலைவரே... .... ஆன்மீகப் போர்வையில் அனைத்தை யும் செய்து அம்பலப்பட்டுப் போன நித்யானந்தா, தன்னோட இமேஜை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக ஏதேதோ ப்ளான் போடுறாரு.''

""உடைஞ்ச மண்பானையை ஒட்ட வைக்க முடியுமாப்பா?''

""ஹீலிங் பவர்னு சொல்லி பலரை வசியம் பண்ணிய சாமியாச்சே... அதனால புதுப்புது டெக்னிக்கெல்லாம் கடைப்பிடிக்கப் படுது. பக்தர்களை வைத்து பாதயாத்திரை நடத்தும் முயற்சிக்கு சரியா வரவேற்பில்லை. அதனால அரசியல்கட்சிகள் ஊர்வலத்துக்கு ஆள் திரட்டுற மாதிரி, வரும் ஞாயிற்றுக்கிழமை குரு பூர்ணிமான்னும் அதற்காக வாகனவசதி, சாப்பாடு, தண்ணீர் வசதியோடு பிடதி ஆசிர மத்துக்கு ஆட்களை வரவழைக்கும் ஏற்பாடுகள் நடந்தது. பழைய பக்தர்கள் பலரும், நாங்க வந்தா பொதுமக்கள் அடிப்பாங்க... வரமாட்டோம்னு மறுத்தாங்களாம். அவங்களுக் கெல்லாம் ஆசிரமத் தரப்பிலிருந்து, குரு பூர்ணிமாவுக்கு வரலைன்னா உடல்ரீதியான பாதிப்பு வரும்னு மிரட்டல்கள் போயிருக்கு.''

""மிரட்டியாவது பழைய இமேஜை க்ரி யேட் பண்ணணும்னு நித்யானந்தா நினைக் கிறார் போலும்.''
""தஞ்சை-திருவாரூர் மாவட்ட உ.பிக்கள் அவங்க ஏரியாவில் அ.தி.மு.க க்ளீன்போல்டுங் கிற இமேஜை உருவாக்கணும்ங்கிற நோக்கத்தில் செயல்பட்டுக்கிட்டிருக்காங்க. ரொம்ப வருடத்துக்கப்புறம் கலைஞர் தன்னோட சொந்த ஊரான திருவாரூருக்கு ரயிலில் போகப் போறாரு. ஜூலை 27-ந் தேதி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி திறப்புவிழா, தஞ்சாவூரில் கலைஞர் அரங்கம் திறப்புவிழா இதிலெல்லாம் கலந்துகொள்ளப்போகும் அவருக்கு சிறப்பான வரவேற்பு தருவதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கிட்டிருக்குது. அதற்கு முதல்நாள், மன்னார்குடி யில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாஜி மந்திரி அழகு.திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன் இவங்களெல்லாம் தி.மு.கவில் இணையும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு ஆகியிருக் குது.''

""சசிகலா ஊரிலேயே அ.தி.மு.க மாஜிக்களை இழுக்கும் விழாவா?''

""தி.மு.க.வில் ஐக்கியமாகப்போகும் அழகு.திருநாவுக்கரசும் அவரோட ஆட்களும் மன்னார்குடி பகுதியில் வீடுவீடாகப் போய், தேர்தலுக்கு ஓட்டு கேட்பதுபோல.. தி.மு.கதான் நல்ல கட்சி... அதிலே சேரலாம் வாங்கன்னு ஆதரவாளர்களைத் திரட்டிக்கிட்டிருக்காங்க. இவங்களோடு கம்யூ னிஸ்ட் பிரமுகர்கள் சிலரையும் பார்க்க முடியுது. அதோடு, இந்த வட்டாரத்தில் உள்ள சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒன்றிரண்டு பேர்கூட , ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் சேரலாம்ங் கிற எதிர்பார்ப்பு இருக்குது. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே தி.மு.க. தலைமைகிட்டே பேசியிருந்தாங்க. ஆனா, இதை மாவட்ட நிர்வாகத் தில் உள்ள ஆட்கள் விரும்பாம, நீங்க எப்படி நேரடியா பேசலாம்னு சத்தம்போட்டதால இணைப்பு தள்ளிப்போனது. இப்ப மறுபடியும் பேச்சுவார்த்தை ஆரம்பிச்சி சுமூகமா போய்க் கிட்டிருப்பதால், பேச்சு முடிந்ததும் இணைப்பு தான்னு எதிர்பார்க்கப்படுது.''

""இணைப்பு விஷயம் பற்றி சொன்னே... நான் நீக்கம் விஷயம் பற்றி கேட்கிறேன்.. ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்காரே?''

""தலித் கிறிஸ்தவரான அவர், இந்து தாழ்த்தப்பட்டவர்னு சர்டிபிகேட் கொடுத்து பணியில் சேர்ந்ததாகச் சொல்லி சஸ்பெண்ட் செய்திருக்குது அரசாங்கம். ஏற்கனவே தன் மீதான நெருக்கடிகளுக்காக கோர்ட்டுக்குப் போன உமாசங்கர், அரசு கேபிள் கார்ப்பரேஷன் பொறுப்பில் இருந்தபோது சுமங்கலி கேபிள் விஷனை அரசுடைமையாக்க முயற்சி எடுத்தேன் னும், அதற்கு எதிரா அந்த நிறுவனமும் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் இடையூறு செய்ததாகவும், அதனால எஸ்.சி.வி நிர்வாகத்தையும் அமைச்சரையும் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும், அதனால தன் மீது சொத்துக் குவிப்பு வழக்கைப் போடவைத்ததோடு, சான்றிதழ் சம்பந்தமான பிரச்சினையையும் கிளப்புவதா கோர்ட்டில் சொல்லியிருந்தார். இப்ப அந்த சர்டிபிகேட் விவகாரத்தில்தான் அவரை சஸ்பெண்ட் பண்ணி யிருக்காங்க.''

""சர்ட்டிபிகேட் பற்றி சட்டம் என்ன சொல்லுது?''

""1964-ல் பிறந்த உமாசங்கர் 1984-ல் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள செங்கோல் மடம்ங்கிற இடத்தில் கிறிஸ்துவரா இருந்து இந்து மதத்திற்கு மாறிட்டார். அதற்கான சான்றிதழை மத்திய தேர்வாணைய மான யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். ஆன போது கொடுத்திருக்கிறார். சட்டம் என்ன சொல்லுதுன்னா, இந்துவா இருந்த ஒருத்தர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி, பிறகு மறுபடியும் இந்துவா மாறினா அவரோட உறவினர் அஃபிட விட்டும் அரசாங்க நோட்டிஃபி கேஷனும் கொடுத்தால் அவர் இந்துவா ஏற்றுக்கொள்ளப் படுவார். ஆனா, கிறிஸ்துவரா பிறந்தவர் இந்துவா கன்வர்ட் ஆவதை சட்டம் அங்கீகாரம் பண்ணலை. உமாசங்கர் இப்படித் தான் கன்வர்ட் ஆகியிருக்கிறார். பேங்க்கில் வேலை பார்த்தபோது இந்து தாழ்த்தப்பட்டவர் என்ற சலுகையை அவர் பெறலை. ஐ.ஏ.எஸ். ஆகும்போது மட்டும் அதைப் பயன்படுத்தியது சட்டப்படி தப்புன்னு அரசுத் தரப்பு சொல்லுது.''

""இன்னொரு நடவடிக்கை பலரையும் சந்தோஷப்பட வச்சிருக் குங்க தலைவரே... முன்னாள் டி.ஜி.பி. தேவாரத்தின் தங்கை முறை உறவான ஜெசி நிர்மலாவுக்கும் டாக்டர் ராஜன் என்பவருக்கும் கல்யாணமாகி, கருத்து வேற்றுமையால் பிரிஞ்சிட்டாங்க. அந்த கோபத்தில் ஜெசி நிர்மலாவின் சகோதரர்கள் ஜெயசந்திர ஜோசப்பும், ஜாபர் ஜோசப்பும் டாக்டர் ராஜன் காரை ஏற்றி கொல்ல முயற்சித்ததாக பொய்ப்புகார் கொடுக்க, தேவாரத்தின் அதிகாரத்தால் ராஜன் மேலே வழக்கு போடப்பட்டது. 1995லேயே இந்த வழக்கு பொய்யான வழக்குன்னு தீர்ப்பாயிடிச்சி. அதிகாரத்தைத் தவறா பயன்படுத்தி தன்னை பழிவாங்க முயற்சித்த தேவாரம் மேலே நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனாதிபதி வரை டாக்டர் ராஜன் மனு கொடுத்தும் அப்ப எந்த நட வடிக்கையும் இல்லை. அதற்கப் புறம்தான் 97-ல் தேவாரம் மேலே மான நஷ்ட வழக்கு போட்டு 5 லட்ச ரூபாய் கோரினார் டாக்டர் ராஜன்.''

""வழக்கு என்னாச்சு?''

""13 வருசமா வழக்கு இழுத் தடிக்கப்பட்டது. இந்த நிலை மையில்தான், நாகர்கோவில் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் , 13 வருசமா ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதை எடுத்து விசாரித்தார். தேவாரம் தரப்பு கோர்ட்டுக்கே வராமல் புறக்கணித்ததை அறிந்ததுடன், அவர்கள் தரப்பில் சரியான ஆதாரமும் இல்லைன்னு விசாரணையில் தெரியவர, டாக்டர் ராஜனுக்கு 13 வருசத்துக்கான வட்டியோடு 5 லட்ச ரூபாயை தேவாரமும் ஜெசிநிர்மலாவின் சகோதரர்களும் கூட்டாகவோ தனித் தனியாகவோ தரணும்னு போன 21-ந் தேதியன்னைக்குத் தீர்ப்பளித்தார்..''

""மாஜி போலீஸ் அதிகாரியின் அதிகார போதைக்கு சவுக்கடி கொடுத்த இந்த தீர்ப்பு நிச்சயமா வரவேற்கப் படவேண்டிய தீர்ப்புதாம்ப்பா..''

""தலைவரே... கோர்ட் உத்தரவிட்டாலும் காவல் துறையில் உள்ள சிலர் திருந்துவதா தெரியலை. சீட்டிங் குற்றச்சாட்டுக்குள்ளான சுதந்திரசீலன் என்பவரை சென்னை சி.சி.பி. போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. கஸ்டடியில் எடுக்கப்பட்டவரிடம் விசாரணை நடத்த வேண்டிய சி.சி.பி. போலீசார், அவர் மேலே வழக்கு போட்டவரையும் அழைத்து கட்டபஞ்சாயத்து நடத்தி, குற்றஞ்சாட்டப் பட்டவரிடமிருந்து 3 கோடியே 50 லட்ச ரூபாயை டிமாண்ட் டிராப்ட்டாக வாங்கிக் கொடுத் திருக்காங்க. அதோடு, குற்றம்சாட்டப் பட்டவரின் ஜாமீன் பெட்டிஷனுக்கும் சி.சி.பியின் விசாரணை அதிகாரி அப்ஜெக் ஷனும் தெரிவிக்கலை. இதையெல்லாம் சைதாப் பேட்டை மெட்ரோ பாலிடன் மாஜிஸ்திரேட் தன்னோட ஆர்டரில் பதிவுசெய்தே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு பெயில் கொடுத்திருக் கிறார். இதற்குப்பிறகாவது சி.சி.பி. தன்னை மாற்றிக்கொண்டால் நல்லதுன்னு சக காக்கிகளே சொல்றாங்க..''

""நான் கேட்கப்போறதும் காக்கிகள் சம்பந்தப்பட்ட செய்திதான்.. தினபூமி ஆசிரியர் மணிமாறனை ராத்திரி நேரத்தில் போலீசார் கைது செய்ததையடுத்து, பத்திரிகை அமைப்பு கள் கடும் கண்டனத்தை வெளியிட, முதல்வர் உத்தரவின் பேரில் பத்திரிகை ஆசிரியர் விடுவிக்கப் பட்டிருக்கிறாரே, என்ன பின்னணி?.''

""லாட்டரி அதிபர் கே.ஏ.எஸ். சேகரின் தம்பிதான் மணிமாறன். மதுரை ஏரியாவில் நடைபெறும் குவாரி கொள்ளைகளைத் தொடர்ந்து வெளியிட்டதால், ஆளுங்கட்சி மற்றும் போலீஸ் சப்போர்ட்டுடன் குவாரி சக்கரவர்த்திகள் இந்த கைது படலத்தின் பின்னணியில் இருந்ததா பத்திரிகை வட்டாரம் சொல்லுது. குவாரி வட்டாரத்திலும் விசாரித்தேன்..''

""அவங்க என்ன சொல்றாங்க?.''

""மதுரை மேலூர் பக்கத்திலே சித்தம் பட்டிங்கிற இடத்தில், தினபூமி பத்திரிகை யாளர்களின் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி சார்பில் அதிர்ஷ்டம் வீடுகள்னு மனைப்பட்டா போடப்பட்டி ருக்குது. பிரபல குவாரி அதிபரான பி.ஆர்.பி.ங்கிற பி.ஆர்.பழனிச்சாமிக்கு இந்தப் பகுதியில் 5 கோடி மதிப்பிலான ஃபேக்டரி இருக்குது. அதோடு, அதிர்ஷ்டம் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ளாட் போட்டிருக்கிற இடத்தைச் சுற்றி 400 ஏக்கர் நிலத்தையும் பி.ஆர்.பி தரப்பு வாங்கி, வெடி வைத்து குவாரி தொழிலைப் பார்த்துக்கிட்டிருக்குதாம். இதனால, அந்த ப்ளாட்டுகளை அதிர்ஷ்டம் கன்ஸ்ட்ரக்ஷனால் விற்க முடியலை. இதையடுத்துதான், 1300 கோடி ரூபாய் குவாரி ஊழல்னு பத்திரிகையில் தொடர்ச் சியா செய்தி வெளியிட்டதா குவாரி வட்டாரம் சொல்லுது..''

""ம்....''

""இந்த விவகாரம் தொடர்பா குவாரி அதிபர்கள் சங்கம் சார்பில் நடந்த பிரஸ்மீட்டில் பி.ஆர்.பி. பேசினார். தினபூமி பத்திரிகை தரப்பிலிருந்து தங்களை மிரட்டுவதாகவும், பத்திரிகை ஆசிரியர் மிரட்டலைன்னும் அவர் சார்பில் சிலர் மிரட்டுறாங்கன்னும் சொல்லி யிருந்தார். ஆனா, போலீசோ பத்திரிகை ஆசிரியரே குவாரி அதிபரை மிரட்டியதா எஃப்.ஐ.ஆர். போட்டு நைட்டோடு நைட்டா அவர் உள்பட 3 பேரை அரெஸ்ட் செய்துட்டாங்க. இதைக் கண்டித்துதான் பத்திரிகை அமைப்பு கள் ஓங்கி குரல் கொடுத்தது.வியாழக்கிழமை காலையில்தான் முதல்வரின் கவனத்துக்கு இந்த விஷயம் தெரியவந்திருக்குது. மிரட்டல் புகார்னா வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டியதுதானே, எதற்காக கைது நடவடிக்கைன்னு போலீஸ் அதிகாரி களுக்கு டோஸ் விட்ட கலைஞர், பத்திரிகை ஆசிரியரை உடனே விடுதலை செய்யச் சொன்னதையடுத்து, வியாழக்கிழமை காலை யில் பத்திரிகை ஆசிரியர் மணிமாறன் விடுதலையானார்..''

""முதல்வரின் கவனத்துக்குப் போக வேண்டிய ஒரு விஷயத்தை சிவாஜி ரசிகர்கள் மனக்குமுறலோடு சொல்லிக்கிட்டிருக்காங்க. நடிகர் திலகம் சிவாஜியின் 9-வது நினைவுநாள் கடந்த 21-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. அவர் இறந்து இத்தனை ஆண்டுகளாகியும் மணிமண்டபம் கட்டப்படலை. சத்யா ஸ்டுடி யோவுக்கு எதிரே மணிமண்டபம் கட்டுவதற் காக நடிகர் சங்கத்துக்கு ஜெ அரசு இடம் ஒதுக்கி அரசாணை போட்டது. அது பொ.ப.து இடம். அதை நடிகர் சங்கத்திற்கு மாற்றித் தரணும்னு சென்னை கலெக்டருக்கு பொ.ப.துவும் எழுதிடிச்சி. ஆனா, ஜெ ஆட்சி முடிகிற வரைக்கும் நடவடிக்கை எடுக்கலை. பல எதிர்ப்புகளையும் மீறி கடற்கரையில் சிவாஜிக்கு சிலை திறந்த கலைஞர் ஆட்சி யிலாவது மணிமண்டப பணிகள் நடக்கும்னு எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை தொடங்க வேயில்லை..''

""நடிகர் திலகத்துக்காக நடிகர் சங்கம் என்ன செய்யுதாம்?.''

""அதை நான் சொல்றேன்... இடத்தை நடிகர் சங்கம் பெயரில் மாற்றி வாங்குவதற்கு நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. கேட்டால், மணிமண்டபம் கட்ட அந்த இடம் போதாது. இன்னும் பெரிதாக வேறு இடம் வேணும்னு சொல்றாங்க. ஆனா, மாற்று இடம்கேட்டு இதுவரை அரசுக்கு எந்த கடிதமும் அனுப்பலை. இதைச் சொல்லிக் குமுறும் சிவாஜியின் ரசிகர்கள், தன் நண்பருக்காக கலைஞரே சிவாஜி மணிமண்டப விஷயத்தில் கவனம் செலுத்தணும்னு கோரிக்கை வைக்கிறாங்க..''

திருச்சி மண்டலம்


கூட்டணி தொடர்பான வியூகங்களும், நேரடி- மறைமுகப் பேச்சு வார்த்தைகளும் தமிழக அரசியல் களத்தை விறு விறுப்பாக்கிக் கொண்டிருக்கின்றன. மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைக் கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் வரிசையாக போராட்டக் களத்தில் அணிவகுத்து நிற்கின்றன. இந்தப் போராட்டத்தை மக்கள் நலத் திட்டங்களால் எதிர்கொள்ள முடியும் என ஆளுந்தரப்பு நம்பிக்கையுடன் இருக்கிறது.


மக்களின் ஆதரவும், கூட்டணி பலமுமே தேர்தலில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக் கும் முக்கிய காரணிகளாக இருப்பதால் மக்கள் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளவும், கூட்டணியைப் பலப்படுத்தவும் இரு தரப்பிலும் தீவிர காய்நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்தான், நக்கீரனில் தொடர்ச்சியாக வெளிவரும் தேர்தல் களஆய்வு நிலவரம் அரசியல் கட்சியின ரிடமும் பொதுமக்களிடமும் பெரும் வர வேற்பைப் பெற்று, இது தொடர்பான அலசல்களும் விவாதங்களும் பல்வேறு மட்டங்களில் நடந்து வருகின்றன.

மண்டலவாரியாக நக்கீரன் வழங்கிவரும் இந்த கள ஆய்வு முடிவுகளில் இந்த இதழில் இடம்பெறுவது, திருச்சி மண்டலம்.

தமிழகத்தின் மையப் பகுதி என்றும் இரண்டாவது தலைநகரம் என்றும் பெயர் பெற்ற திருச்சியை உள்ளடக்கிய இந்த மண்ட லம்தான், மாநிலத்தின் வடக்கு- தெற்கு மாவட்டங்களைப் பிரிக்கும் அளவுகோலாக உள்ளது. திருச்சி, பெரம்பலுர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வக்கோட் டை, புதுக்கோட்டை, குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், பெரம்பலூர் ஆகிய 12 சட்டமன்றத் தொகுதிகள் இம்மண்டலத்திற்குள் வரையறுக்கப் பட்டுள்ளன.

அகண்ட காவிரி பாயும் வளமான மண்டலம். நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்கள் விளையும் விவசாய பூமி. பாரத மிகுமின் நிலையம், துப் பாக்கித் தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி. சிமெண்ட் ஆலை, சர்க்கரை ஆலை உள்ளிட்ட ஆலைகள், வணிக நிறுவனங்கள், ஆர்.இ.சி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள்ஆகியவை அடங்கிய இந்த மண்டலத்தில் இரு பெரும் கழகங்களும் தங்கள் சக்தியை மாறி மாறி காட்டிவருவதை தமிழக தேர்தல் வரலாற்றைப் புரட்டினால் தெரியும்.


திருச்சி மண்டலத்தில் தற்போதைய நிலவரப்படி கட்சிகளின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை வரைபடம் காட்டுகிறது.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் அ.தி. மு.க.வும் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.கவும் வெற்றி பெற்றன. கள்ளர், தலித், முத்தரையர், பிள்ளைமார், உடையார், கோனார், பிராமணர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய சமுதாயத்தினர் நிறைந்துள்ள இந்த மண்டலத்தில் சாதிரீதியான வாக்குகளைக் கவர்வதில் இரு பெரிய கட்சிகளும் போட்டி போட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த மண்டலத்தில் இரண்டு மத்திய அமைச் சர்கள், இரண்டு மாநில அமைச்சர்கள் இருப்பதால் ஆளுந்தரப்பில் தனிப்பட்ட செல்வாக்குடன் கட்சிப் பணிகள் நடைபெறுவதும், அதை எதிர் கொள்ளும் விதத்தில் எதிர்த்தரப்பு செயல்படுவதும் தொடர்ந்த படியே இருக்கிறது.

திருச்சி கிழக்கு என பெயர் மாற்றம் பெற்றுள்ள பழைய திருச்சி 1-வது தொகுதியில் பிள் ளைமார் வாக்கு கள் அதிகமாகவும் அவர்களின் தொ ழில் செல்வாக்கு கூடுதலாகவும் இருந்தாலும் கள்ளர் இனத்தவர்களே இங்கிருந்து தேர்ந்தெடுக் கப்படுகின்றனர். சட்டமன்றத் தொகுதி தி.மு.க வசமிருந்தாலும் எம்.பி. தேர்தலில் அ.தி.மு.கவே இங்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றது. திருச்சி மேற்கு என மாறியுள்ள பழைய திருச்சி-2தான் இம்மண்டலத்தின் ஸ்டார் தொகுதி. காரணம், இதன் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருப்பவர் அமைச்சர் கே.என்.நேரு.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம், தலித், பிள்ளைமார், முத்துராஜா, கள்ளர் என்ற வரிசையில் இத் தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை அமைந்துள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சரான நேரு தன் சொந்த தொகுதிக்கு செய்துள்ள போக்கு வரத்து-சாலை வசதிகள், குடிநீர் வசதி, கல்விக் கடனுதவிகள், ஏழைகளுக்கான வீடுகள், சுயஉதவிக் குழுக்களுக்கு நிதியுதவி, தி.மு.க அரசின் மற்ற இலவச திட்டங்கள் ஆகியவை அமைச்சருக்கு கட்சி-சாதி இவற்றைக் கடந்த செல்வாக்கைப் பெற்றுத் தந்துள்ளது. அமைச்சரை பொதுமக்கள் எளிதாக அணுகமுடிகிற அதே நேரத்தில், அவரைச் சுற்றி இருப்ப வர்கள் அமைச்சரின் பெயரைச் சொல்லி பொதுமக்களிடம் கறப்பது அதிருப்தியை உண்டாக்குகிறது. 2006 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பி டும்போது எம்.பி. தேர் தலில் இத் தொகுதியில் தி.மு.கவின் பழைய வாக்குபலத்தில் 10ஆயிரம் வாக்குகள் சரிவு ஏற்பட்டதன் காரணமாக, அ.தி.மு.க 400-க்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாகப் பெற்றது. இது அ.தி. மு.கவுக்கு நம்பிக்கையளிக்கும் அம்சமாக உள்ளது.

திருச்சி கிழக்கு, மேற்கு இரண்டு தொகுதிகளும் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளது. மாநகராட்சியின் மோசமான நிர்வாகத்தின் தாக்கம், தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என்பது கடந்த எம்.பி. தேர்தலின்போதே தெரிந்தது. மேயராக இருந்த சாருபாலாதான் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார். அவர் தலைமையிலான திருச்சி மாநகராட்சி மீது வாக்காளர்களுக்கு இருந்த அதிருப்தி, அவரது தோல்வியை உறுதி செய்தது. புதிய மேயர் பொறுப்பேற்ற பிறகும் மாநகராட்சி நிர் வாகம் சீரடையவில்லை. எனினும்,அமைச்சரின் அயராத கட்சிப்பணி, மக்கள் கோரிக்கைகளில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட அம்சங்கள், தேர்தல் நேரத்தில் தி.மு.கவுக்கே சாதகமாக அமையும் என்கி றார்கள் தொகுதிவாசிகள்.

தொழிற்சாலைகள் நிறைந்த திருவெறும் பூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குவங்கி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனாலும் இங்கும் ஆளுந்தரப்பு செல்வாக் கோடு உள்ளது. தலித் சமுதாயத்தினர் அதிக மாகவும், கள்ளர்கள் அடுத்தபடியாகவும் உள்ள இந்த தொகுதியில் தலித் மக்களை அனுசரித்து, கள்ளர் இன வேட்பாளரை நிறுத்துவது ஆளுந்தரப்பின் தேர்தல் அணுகுமுறையாக உள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் பிராமணர் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாகவும் முத்துராஜா சமுதாயத் தினரின் வாக்குகள் அதிகமாகவும் உள்ளது. உடையார், தலித் சமுதாய வாக்குகள் முக்கியத்துவம் உடைய தாகவும் இருக்கின்றன. ஸ்ரீரங்கம் நகரத்தில் பிராமணர்கள் நிறைந்திருக்கிறார்கள். இத்தொகுதியில் ஜெ. போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு ர.ர.க்களிடம் இருப்பதிலிருந்தே இங்கு அ.தி.மு.கவுக்கு உள்ள செல்வாக்கைப் புரிந்துகொள்ளலாம். புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை இரண்டும் பக்கத்து மாவட்டத்திலிருந்து திருச்சியுடன் சேர்ந் தவை. புதுக்கோட்டை எம்.பி தொகுதி பறிபோனதில் ஆளுந்தரப்பு மீது அம் மாவட்ட மக்களுக்கு இருக்கும் வருத்தத்தை சாதகமாக்கிக்கொள்ள அ.தி.மு.க தரப்பு முயற்சிக்கிறது. கள்ளர், முத்தரையர், தலித் மக்கள் நிறைந்துள்ள இவ்விரு தொகுதிகளின் வாக்குகளைக் கவர்வதற்கு ஆளுந்தரப்பும் தீவிரமாக உள்ளது. திருச்சி எம்.பி. தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரசின் பாரம்பரிய வாக்குகள், தே.மு.தி.க.வின் கணிசமான வளர்ச்சி ஆகியவை தவிர்க்க முடியாத சக்திகளாக உள்ளன. எனினும், பெரிய கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் விடாக்கண்டன்-கொடாக்கண்டனாக இருப்பதை களஆய்வின்போது அறிய முடிந்தது.

பெரம்பலூர் எம்.பி. தொகுதிக் குட்பட்ட முக்கிய சட்டமன்ற தொகுதி பெரம்பலூர்தான். மறுசீரமைப்புக்குப் பிறகும் தனித்தொகுதியாக உள்ள இது, மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பூர்வீகம் என்பதால் தி.மு.க கொடி உயரப் பறக்கிறது. தலித் மக்களுக்கு அடுத்தபடியாக இங்கு உள்ள உடையார், கவுண்டர், ரெட்டியார் உள்ளிட்ட சமுதாயத்தினரிடமும் ஆளுந் தரப்புக்கு செல்வாக்கு உள்ளது. தனது பழைய செல்வாக்கை மீண்டும் பிடிக்க வேண்டும் என அ.தி.மு.க போராடுகிறது. உப்பிலியபுரமாக இருந்து துறையூராகியுள்ள சட்டமன்றத் தொகுதியில் தலித், பழங்குடியினர், முத்துராஜா, ரெட்டியார் சமுதாயத்தினர் நிறைந்துள்ளனர். இங்கும் தி.மு.க. முன்னணியில் உள்ளது. அ.தி.மு.க. தனது பாரம்பரியமான வாக்குகளை நம்பியுள்ளது.

லால்குடியில் முத்துராஜா, உடையார், தலித் வாக்குகள் ஒன்றுக்கொன்று சளைக் காமல் முக்கியத்துவம் பெறுகின்றன. அமைச்சர் நேருவின் சொந்த ஊர் என்பதால், சாதி பேதமில்லாமல் கோரிக்கைகள் நிறை வேற்றப்படுகின்றன. இதை அமைச்சரின் அம்மாவி னுடைய இறுதி ஊர்வலத்தில் திரண்ட கூட்டமே உறுதிப்படுத்துகிறது என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

தொட்டியம் தொகுதி இப்போது மண்ணச்சநல்லூ ராகிவிட்டது. முத்துராஜா சமுதாயத்தினர் செல்வாக் காக உள்ள இத்தொகுதியில் தி.மு.க. ஜாதி அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. முத்துராஜா மக்கள் அதிகமாக உள்ள மற்ற இரு தொகுதிகள், குளித்தலை யும் முசிறியும். இங்கே ரெட்டியார், வெள்ளாளர், தலித் ஓட்டுகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முத்து ராஜா இனத்தைச் சேர்ந்த அமைச்சர் செல்வராஜ், தனது சமுதாயத்தினரை மட்டும் கவனிக்கிறார் என்ற புகார் உள்ளது. இது அ.தி.மு.கவுக்கு சாதகமாக அமை கிறது. அரசியல்ரீதியாக முக்கியத்துவமும் போட்டியும் நிறைந்த குளித்தலை தொகுதியில் தி.மு.கவின் செல்வாக்குக்கு இணையாக நிற்க முயற்சிக்கும் அ.தி.மு.கவுக்கு ம.தி.மு.க பக்க பலமாக உள்ளது. இந்த மண்டலத்தில் ம.தி.மு.கவின் வாக்குவங்கி குறிப்பிடும் படியாக அமைந்திருப்பது இங்குதான்.

கிராமப்புறங்களில் பாரம்பரியமாக உள்ள காங்கிரஸ் வாக்குகளும், புதிய வாக்காளர்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள தே.மு.தி.க.வும் முக்கியத்துவம் மிக்கவையாக உள்ளன.திருச்சி மண்டலத்தில் அகண்ட காவிரி ஓடியும் முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய தொகுதிகள் மட்டுமே பாசன வசதி பெற்றுள்ளன. காவிரிக் கரையில் உள்ள குளித்தலைத் தொகுதியில் ஒரு பகுதி மட்டுமே பாசன வசதி பெற்றுள்ளது. போதிய தடுப்பணைகள் கட்டி பாசன வசதியைப் பெருக்கவேண்டும் என்கிற இம்மண்டலத்து மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப் படாம லேயே இருக்கிறது.

துறையூர், முசிறி பகுதிகளில் பருத்தி விளைச்சல் நன்றாக இருப்பதால் நூல் தொழிற்சாலை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்படுகிறது. காவிரி ஆற்று மணலை அளவுக்கதிகமாக அள்ளுவதைக் கட்டுப்படுத்தாததால் விவ சாயமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவது பற்றி தொலைநோக்குப் பார்வையுடன் யாரும் சிந்திப்பதில்லை என்ற கோபம் மக்க ளிடம் உள்ளது. நீண்டகாலத் திட்டங்கள் நிறைவேற்றப்படாத நிலையில் அரசின் இலவச திட்டங்கள் சில இடங்களில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. கேஸ், கலர் டி.வி. கிடைக்கவில்லை என்ற குரல்களும் சில இடங்களிலிருந்து கேட் கிறது. விவசாயத்திற்கானத் தண்ணீர் போது மான அளவில் இல்லாத நிலையில், 100 நாள் வேலைத்திட்டம் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் கையில் பணம் புழங்குவது குறிப்பிடத்தக்கது. மத்திய-மாநில அமைச் சர்களின் நேரடி கவனிப்பால் திருச்சி- பெரம்பலூர் மாவட்டங்களில் ஆளுந்தரப்பு தன் செல்வாக்கைப் பெருக்க, பழைய செல்வாக்கை இழக்கக்கூடாது என அ.தி.மு.க தரப்பு வரிந்துகட்டுவதால் இம்மண்டலம் கடும்போட்டிக்குரியதாக மாறியுள்ளதை நேரில் காண முடிந்தது.

(வரும் இதழில் தஞ்சை மண்டலம்)

அ.தி.மு.கவின் பலவீனம்


4 ஆண்டுகளில் பெரும் பாலும் ஜெ. ஓய்வாகவே இருந்தது அ.தி.மு.க தொண் டர்களிடம் சோர்வை உண் டாக்கியுள்ளது.

நெய்வேலி, விழுப்புரம், கோவை என ஜெ. கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்களில் தொண் டர்களின் எழுச்சி இருந்தபோதும் எப்போதாவது இத்தகைய எழுச்சி உண்டாவதும் இதற்காக பெரியளவில் ஏற்பாடுகளை செய்யவேண்டி யிருப்பதும் நிரந்தரப் பலனைத்தராமல் இருக்கிறது. தலைமையைத் தொண் டர்கள் சந்திக்க முடியவில்லை என்ற குறை இன்றளவும் அ.தி.மு.கவில் நீடிக்கிறது. மனு வாங்கும் முகாம் நடத்திய ஜெ.வால் முழுமையான நேரத்தைச் செலவிட முடியாமல் போனதும் அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது. ஜெ.வின் உடல்நிலை பற்றிய கேள்விகளையும் தொண்டர்களிடம் எழுப்பி யுள்ளது. லோக்கல் மா.செ.க்கள், ஒ.செக்களின் எடுபிடியாக இருந்தால்தான் கட்சியில் இருக்கமுடியும் என்ற நிலைமை நீடிப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் ஆளுந்தரப்புக்கு தாவியிருப்பது அ.தி. மு.கவின் இமேஜை பாதித்துள்ளது. எம்.ஜி.ஆரின் 11ஆண்டு ஆட்சிக்காலத்தில் எம்.எல்.ஏக்களாக இருந்த 200 அ.தி. மு.கவினரில் விரல்விட்டு எண்ணக்கூடிய பிரமுகர்கள் மட்டுமே இன்றைய அ.தி.மு.கவில் நீடிக்கின்றனர். மற்றவர் கள் மாற்று முகாம்களுக்கு சென்று விட்டனர்.

அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பில் ஜெ. இருந்தாலும் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பதிலும், முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் மன்னார்குடி குடும்பமே கோலோச்சுகிறது என்ற எண்ணம் தொண்டர்களிடம் அழுத்தமாகப் படிந் துள்ளது. இது கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்கிறது.

மதுரை மற்றும் தஞ்சை மண்டலங்களில் உள்ள தலித் மக்கள் அ.தி.மு.கவை முக்குலத்தோர் கட்சியாகப் பார்க்கின்றனர். இப்பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் முக்குலத்து சமுதாய வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தலித் மக்கள் வேறு கட்சிக்கு வாக்களிக்கின்றனர். எம்.ஜி.ஆர். காலத்தில் தலித் வாக்குவங்கியை பெருமளவு கொண்டிருந்த அ.தி.மு.கவின் இன்றைய நிலைமை இது. அதுபோல, சிறுபான்மை சமுதாயத்தினர் ஜெ.வை இந்துத்வா சக்தியாகவே பார்ப்பதும் அ.தி.மு.கவின் வாக்கு பலத்தை பெருமளவு குறைக்கிறது.

தேர்தல் களத்தில் தி.மு.க செலவிடும் தொகைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அ.தி.மு.க தலைமை தயங்குவது ஏன் என்ற காரணம் புரியாமல் அ.தி.மு.க தொண்டர்கள் விழிக்கிறார்கள். ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 2 கோடியாவது செலவு செய்யவேண்டும் என்ற நிலைமை உள்ளதால், தலைமையின் மீது அவர் களின் எதிர்பார்ப்பு திரும்பியுள்ளது.

தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் வாக்குபலம் இல்லாத நிலையில், காங்கிரஸ்- தே.மு.தி.க போன்ற கட்சிகள் தங்கள் பக்கம் வராவிட்டால் வெற்றிபெற முடியாது என்ற எண்ணம் அ.தி.மு.க தொண்டர்களிடம் உள்ளது.

தி.மு.கவைச் சேர்ந்த குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக அதே கட்சிக்கு வாக்களிப்பதுபோல, அ.தி.மு.கவில் பரவலாக இல்லை. எம்.ஜி.ஆர். மீதுள்ள விசுவாசம் மட்டுமே கட்சியின் வாக்குவங்கியில் முக்கிய பங்காற்றுகிறதே தவிர, அது அமைப்பு ரீதியான வாக்குகளாக மாறவில்லை. இது, ஜெயலலிதாவின் தலைமை மீது அ.தி.மு.க வாக்காளர்களுக்கே இருக் கின்ற அவநம்பிக்கையை வெளிப் படுத்துவதாக உள்ளது.