Sunday, July 4, 2010

அதிகமாக ஆசைப்பட்ட பிரகாஷ்ராஜ்... ஆளை மாற்றிய இயக்குனர் ஹரி


shockan.blogspot.com

சூரியாவின் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான ‘சிங்கம்’ படம் கடந்த ஜூன் 28ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படம், சன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தால் உலகமெங்கும் திரையிடப்பட்டது.


கனடாவின் பாக்ஸ் ஆபீசில் 8வது இடமும், இங்கிலாந்தின் பாக்ஸ் ஆபீசில் 21வது இடமும் பெற்ற பெருமைக்குறிய சிங்கம், தற்போது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட பட்டுள்ளது.


ஜுலை 2 ந் தேதி, சிங்கம் படம் ‘‘யமுடு” என்றப் போரில் ஆந்திராவிலும் கலக்க களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜின் ‘டப்பிங்’ பிரச்சனை திரைவட்டாரத்தில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி உள்ளது...


சூர்யா-அனுஷ்கா கதாநாயகன், நாயகியாக நடித்த சிங்கம் பாடத்தின் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். இந்தப் படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ பட நிறுவனம் தயாரித்தது.


படம் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில்... தாயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சிங்கம் படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்படுவது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜிடம் கூறியுள்ளார்.

மேலும், சன் பிக்சர்ஸாரால் உலகமெங்கும் வெளியிடப்பட்டாலும், படத்தின் தெலுங்கு உரிமத்தை மட்டும் தானே பெற்றுள்ளதாகவும் தெரியப்படுத்தியுள்ளார்.

அதற்கு, பிரகாஷ்ராஜ், ‘‘அப்படின்னா உங்களுக்காக, தெலுங்கில் என்னோட ‘டப்பிங்’ பகுதிய சும்மாவே பண்ணித் தாறேன்” என்று நட்புமிகுதியில் கூறியுள்ளார் .

இதனால், சந்தோஷப்பட்ட தயாரிப்பாளரும்பிரகாஷ்ராஜ்,, இயக்குனரும் படம் முடிந்து, பின்னணிக் குரல் பதிவின் போது, பிரகாஷ்ராஜினை அனுகினர். அப்போது, பிரகாஷ்ராஜ் 15லட்சம் கொடுத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்றுள்ளார்.


அப்படி, அவர் கேட்டதும், என்னடா... இது, சும்மாவே பண்ணித்தாறேன்னு சொன்னவரு, சாதாரண சம்பளத்தை விட இவ்வளவு அதிகமாக கேட்கிறாரே...! என்று அதிர்ந்து போயினர்.

சரி... முதலில் தமிழில் முடித்துவிட்டு, பிறகு தெலுங்கு குறித்து யோசிக்கலாம் என்று நினைத்து தமிழ் குரல் பதிவினை மட்டும் அப்போது முடித்தனர்.


சிங்கம் படமும், வெளியாகி உலகம் எங்கும் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெலுங்கு டப்பிங் குறித்து மீண்டும் பேசியுள்ளார்.


அதற்கு, படத்தின் வெற்றியைக் கணித்து 25 லட்சம் கேட்டு தனது வில்லத்தனத்தை காட்டியுள்ளார் பிரகாஷ்ராஜ்.







இதனால், வெறுத்துப் போன தயாரிப்பாளர், இது பற்றி இயக்குனர் ஹரியிடம் கூற, பிரகாஷ்ராஜூக்கு பதிலாக வேறொருவரைப் பேச வைத்து படத்தை முடித்துள்ளார் ஹரி.


இதை தொடர்ந்து, பிரகாஷ்ராஜிற்கு ஏதோ பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளது போலும், தயாரிப்பாளரைத் தானே தொடர்பு கொண்டு, 10 லட்சம் தாங்க போதும் என்றாராம்.


அதற்கு, படத்தின் ட்ப்பிங் எல்லாம் முடிந்து, ஜூலை 2ல் படம் தெலுங்கில் வெளியாகப் போவதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிட.

அடைந்த பிரகாஷ்ராஜ், “எனக்கும், என்னோட குரலுக்கும் தெலுங்கில் தனி மவுசு இருக்கும் போது, எப்படி... நீங்க எனக்குப் பதிலா வேறொருத்தர பேச வைக்கலாம்?” என்று, கோபப்பட்டு தெலுங்கு ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷனில் (மா)’ ஞானவேல்ராஜா மீது புகார் கொடுத்தார்.


இயக்குனர் ஹரியிடம், தொலுங்கு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தினர்(மா), இவ்விவகாரம் பற்றி கேட்டதற்கு, “இந்தப் படத்தின் தெலுங்கு உரிமம் பெற்றுள்ள தயாரிப்பாளருக்கு, படத்திற்கு தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்தும் பொறுப்பு உள்ளது.

மேலும், பிரகாஷ்ராஜ் டப்பிங் பேச 25 லட்சம் கேட்டதால் தான், வேறொருவரை பேச வைத்தோம். இது தயாரிப்பாளரின் உரிமை. இதில், தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை” என்றார்.

இந்நிலையில், ‘‘யமுடு” (சிங்கம்) வெளியிடப்பட்டும் விட்டதால்... வில்லன் நடிகரின் இந்த வில்லங்கத்தில்... தொலுங்கு ‘மா’ என்ன முடிவு எடுப்பது என குழப்பத்தில் உள்ளது.

No comments:

Post a Comment