Saturday, July 3, 2010

விவேக் ஓபராய்க்கு பாதுகாப்பு வாபஸ்


shockan.blogspot.com

பாலிவுட் பிரபலங்கள் விவேக் ஓபராய், கரன் ஜோகர் உள்ளிட்ட 54 வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றுள்ளது. ஷாருக்கான் உள்ளிட்ட 24 வி.ஐ.பி.,க்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.




மகாராஷ்டிராவில் மாநில அரசின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், சில வி.ஐ.பி.,க்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாத நிலையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும், சிலருக்கு தேவைக்கு அதிகமான பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் பேசப்பட்டது.



இதையடுத்து, பாலிவுட் பிரபலங்கள் விவேக் ஓபராய், கரன் ஜோகர், பைரோஸ் நடியத்வாலா, ஹிமேஷ் ரெஷ்மானியா, ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடியின் மகன் ருசிர், மகள் ஆலியா, ராகுல் மகாஜன் ஆகியோர் உட்பட 54 வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை வாபஸ் பெறுவது என, முடிவு செய்யப்பட்டது.



மேலும், ஷாருக் கானுக்கு இதுவரை தினமும் நான்கு போலீசார், பாதுகாப்பு அளித்து வந்தனர். இனிமேல், ஒரு போலீஸ்காரர் மட்டுமே ஷாருக் கானின் பாதுகாப்பை கவனித்துக் கொள்வார்.



லலித் மோடியின் மனைவி மினாள், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் குடும்பத்தினர், பிரபல வக்கீல் மஜீத் மேனன் மற்றும் அரசியல்வாதிகள் நவாப் மாலிக், சுரேஷ் பிரபு உள்ளிட்ட 24 வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட தகவல் வெளியானதும், சில வி.ஐ.பி.,க்கள், தங்களுக்கு மிரட்டல் தொடர்வதாகவும், இதனால், பாதுகாப்பை வாபஸ் பெறும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment