Friday, July 9, 2010

நள்ளிரவு பூஜை! அலறும் மக்கள்!


திகில் கலந்த பதட்டத்தில் மூழ்கியிருக்கிறது மருங்காபுரி. அங்கிருக்கும் அய்யாவு குளத்தை நோக்கி சுத்துப்பட்டு கிராம மக்கள் உட்பட பலரும் கவலை முகத்தோடு சாரிசாரி யாகப் படையெடுக்க... ஊர் முழுக்க இறுக்கமான இறுக்கம். அப்படி என்னதான் நடக்கிறது அங்கே?

திருச்சியில் இருந்து துவரங்குறிச்சி செல் லும் வழியில் இருக்கும் ஊர்தான் மருங்காபுரி. இந்தப் பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் ஜமீன்தார் குடும்பங்களின் கட்டுப்பாட்டின் கீழ் 16 கோயில் குளங்கள் இருக்கின்றன. இந்த ஜமீன்தார் குடும்பங்களை முன்னிலைப்படுத்திதான்... இந்தக் கோயில்களின் திருவிழாக்கள் நடப்பது வழக்கம்.

இந்தக் கோயில்களின் வரிசையில் இருக் கும் பகவதியம்மன் கோயிலும் இந்தக் கோயிலுக் கான அய்யாவு குளமும்... மகேஷ் ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இத்தகைய அய்யாவு குளத்தை நோக்கித்தான் மக்களின் கவலையான படையெடுப்பு.

நாமும் அய்யாவு குளத்துக்குச் சென்றோம். தண்ணீர் இன்றி வறண்டிருந்த இந்தக் குளத்தின் மையத்தில் ஒரு குடிநீர்க் கிணறு. அதன் அருகே ஒரு மனிதத் தலை உருவம் செய்துவைக்கப்பட்டு... அதற்கு பூ, பழம், பொறிகடலை, எலுமிச்சை போன்றவை வைத்து பூஜை நடத்தப்பட்டிருந்தது. அதன் அருகே மனித உருவம் ஒன்று காகிதத்தில் ரத்தத்தால் வரையப் பட்டு... திகில் எஃபெக்ட் கூட்டப்பட்டிருந்தது.

""யாருக்கும் தெரியாம நள்ளி ரவில் பூஜை நடத்தியிருக்காங்க. எங்க ஊர்ப் பெண்கள் அதி காலை 5 மணிக்கு வழக்கம் போல் தண்ணீர் எடுக்க இங்க வந்திருக் காங்க. அவங்கதான் இந்த மனிதத் தலை உருவத்தையும் அதுக்கு பூஜை நடத்தப்பட்டிருப்பதையும் பார்த்துட்டு... பதறிப்போய்... ஊருக்குள்ள ஓடிவந்து சொன் னாங்க. அதுக்குப் பிறகுதான் பூஜை விஷயமே எங்களுக்கு தெரியவந்தது. எங்க ஊருக்கு ஏதோ கெட்டது நடக்கப்போவுதுன்னு தெரியுது. மன செல்லாம் படபடன்னு அடிசிச்கிது''’என்று பரபரப்பாக சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.


நம்மிடம் திகில் விலகாமல் பேசிய சங்கர் கணேஷ், ""இது ரொம்ப சக்திவாய்ந்த குளம்ங்க. இந்தக் குளத்தில் இருக்கும் கிணத்துத் தண்ணீர் தான் எங்களுக்குத் தாய்ப்பால் மாதிரி. எங்களுக்கு குழாய்த் தண்ணீர் இருந்தாக் கூட இந்தக் குளத் துத் தண்ணியைத்தான் குடிப்போம். இதில்தான் சமைப்போம். இது காலா காலமா இப்படிதான். இந்தக் கிணத்துக்கிட்ட இப்ப யாரோ ஏதோ மர்மமா நள்ளிரவில் பூஜை பண்ணியிருக்காங்க. அதனால் இந்தக் கிணத்து நீரே ரத்தமா மாறிக்கிட்டு இருக்கு. தண்ணியோட நிறத்தைப் பார்த்தீங்களா?''’என்று லேசாக ’செம்புலப் பெயல் நீர்போல் தெரிந்த தண்ணீரைக் காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட விக்னேஷ் என்ற சிறுவன், ""அண்ணே.. பாப்பாத்தியக்காவுக்கு சாமி வந்துச்சுல்ல.. அதையும் சொல்லுண்ணே'' என் றான் தவிப்பாக.

""நீ சின்னபிள்ளைடா... நாங்க விபரமா சொல்றோம்'' -என்று அவனை ஓரம்கட்டிவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்த போதையம்மாளும் அழகம்மாளும்... ’""இந்த அய்யாவுகுளத்தைச் சுத்தி பகவதியம்மன், மீனாட்சி சுந்தரம், தொட்டதச்சி பாப்பாத்தி அம்மன்னு ஐந்து சாமிகள் இருக்கு. இதுகளுக்கு பங்குனி மாசத் திருவிழாவை ஏக சிறப்பா நடத்துவோம். 20 ஆயிரம் பேருக்கு மேல காப்புகட்டி, இந்தக்குளத் தில் குளிச்சி, அலகு குத்திக்கிட்டு போறதே கண்கொள்ளாக் காட்சி.. இதைப் பொறுக்க முடியாமதான் எங்க பகவதியம்மனைக் கடத்தப் பாக்குறாங்க''’என்றார் துயரம் பொங்க.

பகவதியம்மனைக் கடத்தப்பாக்குறாங் களா? யார் சொன்னது?’ என கிறு கிறுத்துப்போய் நாம் கேட்க... ஆறு முகம் என்பவரோ ""மூணு கி.மீ.தூரத் தில் இருக்கும் வண்ணாங்குளத்தில் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தூர்வாரும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. அப்ப பாப்பாத் திங்கிற பொண்ணுக்கு திடீர்னு அருள்வந்து டுச்சி. அப்ப... அது... "என்னை திருச்சிக்கார சாமியார் ஒருத்தன் மூணு வருஷத்துக்கு முன்பே கடத்தப் பார்த் தான். அப்ப அவன் மனைவி செத்துப்போன தால் பாதியில் ஓடிட்டான், இப்ப அவன் மீண்டும் என்னை கடத்திக்கிட்டுப்போக வந்திருக்கான். முதல் கட்டமா ஊரின் எல்லைத் தெய்வங்களை மந்திரத்தால் கட்டிவச்சிட்டான். இப்ப என்னைக் கடத்த நள்ளிரவு பூஜையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டான். அதனால் நான் மொட்டைமலை யில் இருக்கும் என் அண்ணன் அருணகிரி மலை யாண்டியிடம் சென்றுவிட்டேன்'னு அருள்வாக்கு சொல்லி சாமியாடிச்சி. அதனால்தான் ஊரே இப்ப திகில்ல இருக்கு. பகவதியம்மனை கடத்தாமத் தடுக்க... எங்க ஜமீன்தார் இப்ப தீவிர முயற்சியில் இருக்கார்''’என்று மேலும் தலைக்குள் விர்ர்ர்ரை உண்டாக்கினார்.

அடுத்து ஜமீன்தார் மகேஷை... அவரது பங்களாவில் சந்தித்தோம். முதலில் பேச மறுத்தவர்... பின் வாய்திறந்தார். ""நாங்க ஒருவித திகிலில் இருக் கோம். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண... வழக்கமா நாங்க குறிகேட்கும் சாமியார்கிட்ட ரெண்டுபேரை அனுப்பிவச்சேன். அப்பதான் பாப்பாத்திங்கிற பொண்ணு மேல சாமி வந்திருக்குன்னு சொன்னாங்க. நான் அங்க ஓடிப்போய்... "நீ உண்மையான சாமின்னா... நான் குறிகேட்க யார்யாரை அனுப்பிவச்சேன்னு அவங்க பேரைச்சொல்ல முடியுமா'ன்னு கேட்டேன். கரெக்டா அவங்க பேரைச் சொல்லிடிச்சி. அப்ப பகவதியம்மன்தான் வந்திருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு பரிகாரம் கேட்டேன். அது சொன்னபடி பூசாரி மூர்த்தி மூலம் பரிகாரத்தையும் பண்ணப்போறேன்''’என்றார் ஜமீன்தார்.

அடுத்து நாம் ஆஜரானது பூசாரி மூர்த்தியிடம். பூசாரியோ ""இதெல்லாம் ஆன்மீக ரகசியம். இருந் தாலும் சொல்றேன். குளத்தில் இருக்கும் மாந்திரப் பொருட்களையெல்லாம் எடுத்து... மாந்திரீகக் கட்டுக்களை அவிழ்த்து முதல்ல காவல் தெய்வங்களை விடுதலை செய்வோம். அப்புறம் அந்த மாந்திரப் பொருட்களையெல்லாம் தகனம் பண்ணி, மதுரை கள்ளழகர் கோயிலின் 18-ம் படிக்கட்டில் வைத்து... கரைத்து தீர்த்தம் ஆக்கி... அதை எடுத்துவந்து ஒவ்வொரு வீட்டு முன்னயும் பக்தியோடு தெளிச்சி... ஊரை சுத்தப்படுத்துவோம். பிறகு சாமியை யாரும் கடத்தாதபடி காப்புக் கட்டுவோம்''’என்றார் கண்களை மூடியபடி.

மக்களும் நம்பிக்கை யோடு காத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment