Wednesday, July 7, 2010

படுகொலை பின்னணியில் எம்.எல்.ஏ?

shockan.blogspot.com

அந்தப் பதினைந்து சென்ட் நிலத்தை விலைக்கு வாங்குவதில் ஊர்க்கவுண்டர் ராம ஜெயத்துக்கும் அதே ஊரைச்சேர்ந்த மாதேசுக்கும் போட்டாபோட்டி ஏற்பட்டது. ஊர்க்கவுண்டர் ராமஜெயம் வாங்கிவிட்டார்.

""மாதேஸ்... நான் வாங்கிவிட்டேன்னு கோபப்படாதீங்க. நாளை மறுநாள் அந்த நிலத்தில் பூமி பூஜை போடப்போறோம். மனசுல எதையும் நினைக்காமல் நீங்களும் வரணும்'' -மாதேசுக்கும் அழைப்பு விட்டார்கள் ஊர்க்கவுண்டர் ராமஜெய மும் அவர் மகன் இளையராஜாவும்.

24.6.10 அன்று நடந்த பூமி பூஜைக்கு உறவினர்கள் எல்லாரும் வந்திருந்தனர். மாதேசும் வந்தார். பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தன. ""தேங்காயை நான் உடைக்கிறேன் கொண்டாங்க... அந்த அரிவாளையும் தாங்க'' -தேங்காயை உடைத்துக் கொடுத்துவிட்டு, கையில் அரிவாளோடு சிரித்தபடி நின்றார் மாதேஸ்.

கற்பூர ஆராதனை நடந்தது. பயபக்தியோடு கண்களை மூடி வணங்கினார்கள் ஊர்க்கவுண்டர் ராமஜெயமும் மகன் இளையராஜாவும். அந்த நேரத்திற்காகவே காத்து நின்றதைப் போல அவர் களுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த மாதேஸ்.... அரிவாளால் ஓங்கி வெட்டினான். மகன் இளையராஜாவின் தலை துண்டானது. ""அய்யோ... மகனே....'' -கீழே விழுந்த மகனின் உடலைத் தாங்கிப் பிடிக்க முயன்ற ஊர்க்கவுண்டரின் பிடரியில் அடுத்த வெட்டு விழுந்தது. அவருடைய தலையும் துண்டானது. பூமிபூஜை நடந்த இடமே அதிர்ந்தது. இருவரையும் பிணமாக்கிய மாதேஸ்... வெட்டிய அரிவாளைப் போட்டுவிட்டு தயாராக நின்ற காருக்குள் தாவி ஏறினான். கார் பறந்தது.

""அந்தக் காருக்குச் சொந்தக்காரர் நம்ம எம்.எல். ஏ.தான்...'' -அங்கே நின்றவர் களில் ஒருவர் அலறினார்.

இந்தக் கொடூரம்... கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டி னம் அருகிலுள்ள பெரியதளிஅள்ளி கிராமத்தில்தான் நடந்தது.

""இந்தப் படுகொலைக்கு மாதேஸ் ஒரு கருவிதான். பின்னணியில் காவேரிப்பட்டினம் எம்.எல்.ஏ. பா.ம.க. மேகநாதன், அ.தி.மு.க. முன்னாள் ஒ.செ.கிருஷ்ணன் மற்றும் கட்டப் பஞ்சாயத்து கும்பல் இருக்கிறது. அதனால் எம்.எல்.ஏ. மேகநாதன் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது போலீஸ்'' என்கிறார்கள் பெரியதளிஅள்ளி ஊர் மக்கள்.

""பெரியதளிஅள்ளி கிராமத்திற்கு ஏரி மீன், மற்றும் தென்பெண்ணை ஆற்று மணல் மூலம் வருடத்திற்கு ஏழெட்டு லட்சம் வருமானம் வருகிறது. இதை எம்.எல்.ஏ. மேகநாதன், அ.தி.மு.க. கிருஷ்ணன், பலராமன், சத்துணவு ராமசாமி ஆகியோர் கூட்டாக பங்கு போட்டுக்கொண்டனர். வருடம் 20 ஆயிரம்தான் வருமானம் என்று பொய் கணக்கு காட்டினார்கள். ஊர்க்கவுண்டர் ராம ஜெயமும் நாங்களும் ஊரைக்கூட்டி அவர்களை நீக்கிவிட்டு, வங்கியில் பணத்தைப் போட்டோம். ஊரைக்கூட்டி கணக்கு கேட்டு அவமானப்படுத்தி விட்டதால்தான் ஊர்க்கவுண்டரையும் அவரது மகனையும் கொலை செய்யக் காரணமாகிவிட் டார்கள்'' என்கிறார்கள் ஊர் பெரியவர்கள்.

எம்.எல்.ஏ. மேகநாதனிடம் இதுபற்றிக் கேட்டோம்.

""சம்பவம் நடந்தபோது நான் ஒரு திருமண விழாவில் இருந்தேன். என் காரில் கொலைகாரன் தப்பிச் சென்ற தாய் கூறுவது சுத்தப்பொய். இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்கிறார் எம்.எல்.ஏ.

No comments:

Post a Comment