Saturday, July 3, 2010

அமைச்சர்கள் பாஸா? பெயிலா? முதல்வர் விசாரணை!


shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... செம் மொழி மாநாடு நிறைவடைஞ்சு ஒரு வாரம் ஆகப்போகுது. ஆனாலும், அதன் பிரம்மாண்டம் ஏற்படுத்திய தாக்கம் உலகத்தின் பல பகுதிகளிலும் வாழும் தமிழர்களிடம் இன்னும் குறையவில்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், பிறமாநிலங்களில் இருக்கும் தமிழர்கள், மாநாட்டுக்கு வர முடியாமல் போன தமிழறிஞர்கள் எல்லோரும் கலைஞரை நேரிலும் போனிலும் கடிதத்திலும் தொடர்புகொண்டு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லிக் கிட்டிருக்காங்க.''

""கலைஞரும் படுவேகமா பழைய சட்டமன்றத்தில் செம்மொழி நூலகத்தை அமைக்கும் பணியைத் தொடங்கிட்டாரே... தமிழின் வளர்ச்சிக்காக மாநாட்டில் அவர் அறிவித்த அறிவிப்பு களும் விறுவிறுன்னு நிறைவேறும்னு எதிர்பார்க்கலாம்.''

""மாநாட்டின் நிறைவு விழாவுக்குத் தலைமை வகித்த பிரணாப் முகர்ஜி, 3-ந் தேதியன்னைக்கு கும்பகோணத்தில் மூப்பனார் சிலையைத் திறந்து வைப்பதற்காக வர்றாரு. இதுசம்பந்தமா டெல்லி யில் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள்கிட்டே பேசுறப்ப, செம்மொழி மாநாடு ரொம்ப நல்லா இருந்தது. பொதுமக்கள் இப்படி ஆர்வமா வருவாங்கன்னு எதிர்பார்க்க லை. இப்ப தேர்தல் நடத்தினா நல்ல ரிசல்ட் கிடைக்கும். நல்லவேளை... பிரைம் மினிஸ்டர் வெளிநாட்டில் இருந்ததால, நானும் டெல்லியை விட்டுப் போவது சரியா இருக்காதுன்னு நினைச்சு மாநாட்டுக்குப் போகாம இருந்திடலாமான்னு நினைச்சேன். டி.ஆர். பாலுதான் மேடத்துக்கிட்டே வலியுறுத்திப் பேசினார். அதற்கப்புறம்தான் வந்தேன். நான் வந்தது நல்லதா போச்சு. இல்லேன்னா ஒரு பெரிய ஃபங்ஷனை மிஸ் பண்ணியிருப் பேன். மாநாட்டு வெற்றியையும் தேர்தல் பற்றியும் மேடத்துக்கிட்டேயும் பேசியிருக்கேன்னு சொன்னாராம்.''

""தேர்தல் சம்பந்தமான பேச்சு எல்லா பக்கமும் அதிகமாகிக்கிட்டிருக்குப்பா.''

""தலைமைச் செயலகத்திலும் அதே பேச்சுதாங்க தலைவரே... ஒவ்வொரு அமைச்சகமும் இந்த நாலாண்டுகளில் என்ன செய்திருக் குன்னு ஜூலை 2-வது வாரத்தி லிருந்து துறைரீதியா ஆய்வு செய்ய கலைஞர் ரெடியாயிட்டார். அதனால, அமைச்சர்கள் இப்பவே டென்ஷனாயிட்டாங்க. தங்களோட துறை அதிகாரிகள்கிட்டே, நம்ம டிபார்ட் மெண்ட் சார்பா என்னென்ன செய்திருக்கோம்னு புள்ளிவிவரம் எடுங்கன்னு விரட்டிக்கிட்டிருக்காங்க. முதல்வர் நடத்தப்போற ஆய்வில் பாஸாகாத மந்திரிகளுக்கு வரும் தேர்தலில் எம்.எல்.ஏ சீட்டே கிடைக்காதுங்கிறதுதான் இப்போ இருக்கிற நிலைமையாம். அமைச்சர்களெல்லாம் இந்த டென்ஷனில் இருந்தால், துணை முதல்வருக்கு வேறொரு டென்ஷன்.''

""அவருக்கு என்ன டென்ஷன்?''

""அவர் லண்டன் போவதற்குத் திட்டமிட்டிருந்தார். ஆய்வுப் பணிகளை முதல்வர் தொடங்குவதால், தனது துறைகளின் ஆய்வு எப்போது நடக்கும்னு தெரியாத நிலையில், பயணத்தை உறுதி செய்யாமல் இருக்கிறார். மத்திய அமைச்சர் அழகிரி 3-ந் தேதி தயாளு அம்மாளுடன் அமெரிக்காவுக்குப் போறார். மருத்துவ சிகிச்சைக்காக இந்தப் பயணமாம்.''

""பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து 5-ந் தேதி எதிர்க் கட்சிகள் நடத்தும் பந்த்தில் விஜயகாந்த் கலந்துக்கணும்னு கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் வெளிப்படையா அழைப்பு விடுத்தாரே... என்ன ரியாக்ஷன்?''

""இதுவரைக்கும் எந்த பதிலும் விஜயகாந்த் தரப்பிலி ருந்து வரலை. கொடநாட்டில் இருக்கிற ஜெ, கடைசி நேரத்தில் சென்னைக்கு கிளம்பி வந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்க லாம்னு அ.தி.மு.க கூட்டணியில் பேச்சு நிலவுது. ஜெ கலந்துகொள் ளும் நிலையில், தே.மு.தி.க தரப்பி லிருந்து யாராவது ஒரு பிரதிநிதி கலந்துக்கிட்டா அது கூட்டணிக் கான அச்சாரமா இருக்கும்ங்கிற கணக்கோடு கம்யூனிஸ்ட் தோழர் களும், அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தே.மு.தி.க தரப்பிடம் தொடர்ந்து பேசிக் கிட்டிருக்காங்க.''

""தே.மு.தி.க கட்சிக்குள்ளே என்ன பேச்சு நிலவுது?''

""கட்சியின் மா.செ.க்களெல்லாம் விஜயகாந்த்கிட்டே, "அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் எங்ககிட்டே ரொம்ப ஃப்ரீயா பேசுறாங்க கேப்டன். கூட்டணி முடிவாயிடிச்சின்னு சொல்றாங்க. போராட்டத்தில் கலந்துகொள்ளணும்னு கூப்பிடுறாங்க. என்ன பதில் சொல்றது?'ன்னு கேட்டிருக்காங்க. செம டென்ஷனான விஜயகாந்த், கூட்டணி பற்றி அவங்களோ நீங்களோ என்ன முடிவு பண்ணுறது? நான்தான் முடிவெடுக்கணும்னு தன் கட்சி மா.செ.க்களுக்கு டோஸ்விட்ட விஜயகாந்த், வேறு தேதியில் போராட்டம் நடத்தலாமான்னு ஆலோசனை நடத்திக்கிட்டிருக்கிறார். ஆனாலும் அவருக்கு அ.தி.மு.க தலைவர்கள்கிட்டேயிருந்தும் கம்யூனிஸ்ட் தோழர்கள்கிட்டே யிருந்தும் அழைப்பு வந்துக்கிட்டேதான் இருக்குது.''

""விடுதலைச்சிறுத்தைகளுக்கும் அ.தி.மு.க தரப்பிலிருந்து அழைப்புகள் வருதாமே?''

""அ.தி.மு.க கூட்டணி வலுவா இருக்கணும்னா வட மாவட்டங்களில் தே.மு.தி.க.வும் சிறுத்தைகளும் இருந்தால் நல்லதுன்னு தோட்டத்தில் ஆலோசனை நடந்திருக்குது. பா.ம.கவை கூட்டணியில் சேர்த்து 30, 35 சீட்டுகள் கொடுப்பதற் குப் பதிலா, சிறுத்தைகளுக்கு அதிகபட்சம் 15 சீட் கொடுத்தால் போதும்ங்கிறதும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டிருக் குது. திருமாவை அ.தி.மு.க கூட்டணிக்குக் கொண்டுவர தஞ்சா வூர் பிரமுகர் ஒருத்தர் பேசிப் பார்த்ததா அ.தி.மு.க வட்டாரம் சொல்லுது.''

""காங்கிரசில் நைனா சுதர்சனம் மறைந்தது பெரிய இழப் புங்கிறதை கட்சிக்காரர்கள் ஒவ்வொரு நாளும் பேசிக்கிட்டி ருக்காங்க. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களோ நைனா வகித்து வந்த சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்குக் கடும் போட்டி போடுறாங்களாமே?''

""இந்த ஆட்சிக்காலத்திற்கு இன்னும் ஒரேயொரு சட்டமன்றக் கூட்டத்தொடர்தான் மிச்சமிருக்குது. அதுவும் 10 நாள்தான் நடக்கும். ஆனாலும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் தீவிரமா காய் நகர்த்திக்கிட்டிருக்காங்க. என்ன காரணம்னா, இந்தப் பதவி இருந்தால் சட்டமன்ற-பார்லிமெண்ட் கமிட்டிகளில் பங்கெடுக்கலாம். தேர்தல் கூட்டணி தொடர்பா மேலிடம் நடத்துற ஆலோசனைக் கூட்டத் தில் கலந்துக்கலாம். தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் கட்சியின் பிரதிநிதியா கலந்துக்க முடியும். இந்தத் தகுதியெல் லாம் இருப்பதால்தான் நைனா இடத்துக்கு அத்தனைப் போட்டி.''

""யார் யார் களத்தில் நிற்கிறாங்க?''

""சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மை இனத்தவர்ங்கிற முறையிலும் கட்சியில் சீனியர், நல்ல பேச்சாளர்ங்கிற முறையிலும் தலைவர் பதவி தனக்கு தரப்படணும்னு மூவ் பண்ணுறார். இன்னொரு சீனியரான யசோதா, பெண் எம்.எல்.ஏங்கிற முறையிலும் தலித்துங்கிற முறையிலும் மூவ் பண்ணுறார். காங்கிரசின் ஓட்டு வங்கியே தலித் மக்கள்தான்ங்கிறதால அந்த சமுதா யத்தைச் சேர்ந்த தன்னைப் பிரதிநிதித் துவப்படுத்தணும்னு சொல்றார். திருவாடா னை கே.ஆர்.ராமசாமி, வாசன் ஆதர வாளர். இவர் 5 முறை எம்.எல்.ஏ. என்ற தகுதியோடு ப.சி. மூலமாகவும் மூவ் பண்ணுறார். வாசன்-ப.சி. ரெண்டுபேர் ஆதரவும் தனக்கு பதவியைப் பெற்றுத் தரும்ங்கிறது இவரோட கணக்கு. அதோடு, வேலூர் ஞானசேகரனும் சீனியர்ங்கிற முறையில் நைனா வகித்த இடத்துக்குப் போட்டி போடுறார். மேலிடம் என்ன முடி வெடுக்கப் போகுதுங்கிறதை எல்லோரும் ரொம்ப எதிர்பார்த்துக் கிட்டிருக்காங்க.''

""பா.ஜ.கவின் அத்வானி ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்திருக்காரே?''

""செம்மொழி மாநாட்டின்போதே அவர் தமிழ்நாட்டுக்கு விசிட் அடிக்க இருந்ததையும், இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கிற அவருக்கு போதிய செக்யூரிட்டி களைப் போடுவதில் சிரமங்கள் இருக் கும்னு சொல்லப்பட்டதால , மாநாடு முடிந்ததும் வந்தார். ராமேஸ்வரம் கோயி லுக்கு வரும் பக்தர்களுக்கு இரண்டு காரணங்கள்தான் இருக்கும். ஒன்று, வேண்டுதல். இன்னொன்று, மனநிறைவு.''

""அத்வானி ஏன் வந்தாராம்?''

""வாரணாசியில் அவரோட ஜாத கத்தைப் பார்த்த ஜோசி யர்கள், இந்த ஜாதகத் தின்படி உயர்பதவிக்கு வரும் வாய்ப்பு உங்களுக்கு இல்லைன்னு சொல்லிட் டாங்களாம். அதாவது, பிரதமர் பதவிக்கு சான்ஸ் இல்லைங்கிறதுதான் அர்த்தம். இதையடுத்து, இந்தியாவில் புகழ்பெற்ற 9 சிவன் கோயில்களுக் குப் போக முடிவெடுத் திருக்கிறார் அத்வானி. காசியில் வழிபட்டு, கங்கை நீரை எடுத்துக்கிட்டு ராமேஸ்வரம் வந்தவர், துணைப் பிரதமர் பதவி வரை தன்னை அரசியலில் உயர்த் தியதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தி, மன நிறைவு அடைந்திருக்கிறார். அதோடு, அரசியலில் கால் வைக்கும் தன் மகள் பிரதிபாவுக்கு நல்ல எதிர்காலம் அமையணும்ங்கிற வேண்டுதலோடு ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு பூஜையும் செய் திருக்கிறார்.''

""கலைஞருக்கு கோயில் கட்டி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறாரே வேலூர் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி? பெரியார் குருகுலத்தில் வளர்ந்த கலைஞருக்கே கோயிலா?''

""இதே கேள்வியைத்தான் குடியாத்தம் பக்கத்தில் உள்ள சாமிரெட்டிபள்ளியில் கோயில் கட்டியிருக்கும் கிருஷ்ணமூர்த்திகிட்டே கேட்டேன். அவரோ, எங்க பஞ்சாயத்திலே 8 பேருக்கு ஹார்ட் அட்டாக் வந்து போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தோம். 2 லட்ச ரூபாய் கட்டவேண்டியிருந்திச்சி. அந்தளவுக்கு அவங்களுக்கு வசதியில்லை. அவங்களை கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்து ஆபரேஷன் செய்ததால் இப்ப நல்லபடியா இருக்காங்க. டிஸ்சார்ஜானதும் என்கிட்டே வந்து, நீங்கதான் கடவுள்னு காலில் விழுந்தாங்க. அவங்க நல்லா இருக்கிறதுக்கு காரணம் கலைஞர்தானே.. அப்ப அவர்தானே கடவுள்? அதனால தான் அவருக்கு கோயில் கட்டினேன்னு விளக்கம் சொல்றாரு. கோயில் கட்டி சிலை வைத்து கடவுளாக்கு வதைவிட, செய்த நன்றியை மறக்காம வாழ்ற மனிதத்தன்மை உயர்ந்தது.''

No comments:

Post a Comment