Thursday, September 23, 2010

தேசத் துரோகிகள்!

இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ 70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா?

தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.

முதலில் 655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள் 11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார் 17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ

70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம் 961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம் 669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம்

262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம் 149 கோடி என்று ஏறத்தாழ 44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு 85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு 80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.

961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.

பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.

விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.

ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை.

அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்?

விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.

வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.

70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.

எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின்

கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்?

இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!

Wednesday, September 22, 2010

ரகசிய போலீஸில் பெண் பகிரங்க வாக்குமூலம்! மீண்டும் நித்யா கைது?


""ஹலோ தலைவரே... ... தப்பு செஞ்சு அம்பலப்பட்ட பிறகும், புகார் கொடுக்க ஆளில்லைங்கிறதால தண்டனையிலிருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்கிறவங்க பற்றி என்ன நினைக்கிறவங்க பற்றி என்ன நினைக்கிறீங்க?''

""தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்ங்கிற வாசகத்தைத்தான் நினைக்கத் தோணுதுப்பா.''

""நித்யானந்தா சாமியாரின் சரச வீடியோ வெளியான பிறகும், அவர் மேலே லெனின்தர்மானந்தா மட்டும்தானே புகார் கொடுத்திருக்காருன்னும், பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது புகார் கொடுத் திருக்காங்களான்னுதான் நித்தி தரப்பு இதுவரை கொஞ்சம் தெனா வெட்டாகவே கேட்டுக்கிட்டிருந்தது. லெனின்தர்மானந்தாவின் புகாரின் பேரில் நித்தி மீதான வழக்கை சீரியஸா விசாரிச்சிக்கிட்டிருக்கும் கர்நாடக சி.ஐ.டி போலீசாருக்கு அந்த மாநில ஆளுந்தரப்பிலிருந்து ஏகப்பட்ட நெருக்கடி. வேகத்தைக் கட்டுப்படுத்தும்படி மாநில உள்துறை அமைச்சரே சொன்னாலும், சி.ஐ.டி.யின் வேகம் குறையலை. இந்த நிலைமையில்தான், நித்யானந்தாவால் பாலியல் பாதிப்புக்குள்ளான ஒரு பெண், சி.ஐ.டி போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.''

""யார் அந்தப் பெண்?''

""புகார் கொடுப்பவர்களுக்கெல்லாம் நித்தி தரப்பால் கொலை மிரட்டல் வந்துக்கிட்டிருக்கிற நிலைமையில், அந்தப் பெண்ணின் பெயரையும் முகத்தையும் நாம ஏன் அடையாளம் காட்டணும். விசாரணை தீவிரமாகும்போது எல்லா விஷயங்களும் வெளியே வந்திடப்போகுது. ஆன்மீகங்கிற பேரில் நித்யானந்தா என்னவெல்லாம் பேசி, தன்னை எப்படியெல்லாம் ஏமாற்றினார், எத்தனை முறை சீரழிச்சாருங்கிற விவரத்தை அந்தப் பெண் சொல்லியிருப்பதால், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்குது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்திருக்கிற புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீண்டும் கைதாவாராங்கிறதுதான் பரபரப்பான எதிர்பார்ப்பா இருக்கு.''

""இங்கே தமிழ்நாட்டிலும் விஜிலென்ஸ் துறை தீவிரமா செயல்பட்டு, லஞ்ச அதிகாரிகளை கையும் களவுமா பிடிக்குது. ஆனா, அவங்க மேலேயே நடவடிக்கை எடுக்க முடியாம அதிகார வர்க்கத்திலிருந்து நெருக்கடிகள் வருதாமே?''

""ஆமாங்க தலைவரே.. ...மின்சார வாரியத்தில் அசிஸ்டெண்ட் இன்ஜினியரான செல்வம்ங்கிறவரை வாரியத்தின் உள்ளடி வேலையில் ஈடுபடுபவர்களின் தூண்டுதலால் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அந்த சஸ்பென்ஷனை ரிவோக் செய்வதற்காக அவர் சீஃப் இன்ஜினியர் சீனி வாசனை நாடினார். சீஃப் அதற்கு லஞ்சம் கேட்க, இது பற்றி விஜிலென்ஸிடம் புகார் கொடுத்தார் செல்வம். விஜிலென்ஸ் அறிவுரைப்படி செயல்பட்ட செல்வம், சீஃப் கேட்ட பணத்தோடு நேரில் போய் அவரை சந்தித்து கொடுத்தப்ப ரெடியா இருந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் மடக்கிட்டாங்க.''

""கையும் களவுமா சீஃப் இன்ஜினியர் சீனிவாசன் கைதானது பெரியளவில் பேசப்பட்டது.''

""தொடர்ந்து நடந்த விசா ரணையில் சீனிவாசனுக்கு பல பேங்க் அக்கவுண்ட் இருப்பதும், கோடிக் கணக்கில் பணம் பல இடங்களில் இருப்பதும் தெரிய வந்தது. அத னால் அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். நிர்வாகத்தின் தவறான நடவடிக்கைகளால் சஸ்பெண்ட்டான ஏ.இ.செல்வத்தின் சஸ்பெண்ட்டை உடனே ரிவோக் செய்திருக்கணும். அதுதான் நடைமுறை. ஆனா, மின்வாரியமோ இதுநாள்வரை செல்வத்தின் சஸ்பெண்ட்டை ரத்து செய்யலை. அதே நேரத்தில், சீஃப் இன்ஜினியரின் சஸ்பென்ஷனை ரிவோக் செய்யும் வேலைகள் நடந்துக்கிட்டிருக்குது. சஸ்பெண்ட் டான நிலையிலும் சீனிவாசனை மின்துறை அமைச்சரின் வீட்டிலும், வாரிய சேர்மன் சி.பி.சிங்குடனும் அடிக்கடி பார்க்க முடியுதுன்னு டிபார்ட்மென்ட்டில் உள்ளவங்களே சொல்றாங்க.''

""கோலிவுட் வட்டாரம் சொல்ற ஒரு தகவலைச் சொல்றேன்.. வரும் 30-ந் தேதியன்னைக்கு தன்னோட ஆதரவாளர்கள் 1000 பேரோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யில் சேரப்போறாரு சினிமா தயாரிப்பாளரான ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய் தீன். சினிமா துறையில் பல நெருக்கடிகளைத் தாண்டி வந்த காஜாமொய்தீன் இப்ப அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறுத்தைகள் கட்சி வேட் பாளரா இவர் களமிறங்கு வார்னு எதிர்பார்க்கப்படுது.''

""தேர்தல் நெருங்குதே... இனி கோலிவுட் ஆட்கள் அரசியலுக்குள் என்ட்ரியாகும் தகவல்களை நிறைய எதிர்பார்க்கலாம்.''

""சென்னையில் நடந்த டேவிஸ்கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரேசில் அணியை இந்திய அணி அபாரமா ஜெயித்திருக்குது. 5 ஆட்டங்கள் கொண்ட போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் சீனியர்களான பயஸும் பூபதியும் ஜெயிக்க முடியாமல் போனாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய இரட்டையர் ஆட்டம், இளம் வீரர்களான சோம்தேவும், போபண்ணாவும் ஆடிய சிங்கிள் ஆட்டங்களில் ஜெயித்து 3-2 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று, உலக சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்குதே..''

""பெருமையான விஷயம்தாங்க தலைவரே.. முதல்வர் கலைஞர் குலுக்கல் முறையில் ஆட்டங்களை நிர்ணயித்தார். இந்த விளையாட்டுப் போட்டியை அனைத்து இந்திய டென்னிஸ் சங்கத்தின் துணைத் தலைவரும் உள்துறை அமைச்சர் ப.சியின் மகனுமான கார்த்தி சிதம்பரம்தான் சென்னையில் நடத்துவதில் முன்னின்றார்.''

""ஆனால், இந்திய டென்னிஸை உலக அரங்கில் உயர்த்தி யவர்களான தமிழகத்தைச் சேர்ந்த விஜய்அமிர்தராஜையோ, ரமேஷ் கிருஷ்ணனையோ இந்த போட்டிக்கு விருந்தினராகக் கூட அவர் அழைக்கலைங்கிற வருத்தம் டென்னிஸ் ஆர்வலர்களிடம் இருக்குது. இத்தனைக்கும், டென்னிஸ் வீரர்களை உருவாக்குவதற்காக விஜய் அமிர்தராஜ் ஒரு அகாடமியே நடத்தி வருகிறார். பயஸ், பூபதி இருவர் உள்பட இன்றைய பிரபல டென்னிஸ் வீரர்கள் பலரும் இந்த அகாடமியில் பயிற்சி எடுத்தவங்கதான். அப்படிப்பட்ட அமிர்தராஜை அழைக்காத கார்த்தியின் செயல் விமர்சனத்திற்குள்ளாகியிருக்குது.''

பாடகி சொர்ணலதா மரணத்தில் மர்மம்!


"மாலையில் யாரோ மனதோடு பேச...' என்று ஒலித்த அந்தக் குரல் இனி நேரில் பேசவோ பாடவோ போவதில்லை. நுரையீரல் பாதிப்பினால் 37 வயது பின்னணிப் பாடகி சொர்ணலதா மரணமடைந்ததால் திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் ஏற்பட்ட அதிர்ச்சி இன் னும் முழுமையாக விலகவில்லை. அவ ருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படத்திறப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி வருகிறது.

தேசிய விருது பெற்ற சொர்ணலதாவின் பெருமைகள் பற்றி சொல்லும் "படத்தொகுப்பாளரும் கதாசிரியருமான சுபாஷ்' ""புகழ்பெற்ற இந்திப்படமான "மொகலே ஆசம்' படத்தை தமிழில் டப் செய்து "அனார்கலி' என்ற பெயரில் தயாரானது. செங்கம் ஜபார்தான் இதற்கானப் பணிகளை செய்தார். இந்திப்படத்தில் நவ்ஷாத் அலியின் இசையில் புகழ்பெற்றிருந்த கவாலி என்ற போட்டிப் பாடலை ஷம்ஷாத் பேகமும் லதாமங்கேஷ்கரும் பாடியிருந்தார்கள். லதாமங்கேஷ்கர் பாடிய பகுதியை தமிழில் பாடுவதற்கு சொர்ணலதாவை தேர்வு செய்தார் இசைச் சேர்ப்பு பணி மேற்கொண்ட சங்கர்கணேஷ். ஷம்ஷாத்பேகம் குரலில் யாரை பாடவைப்பது என்று ஆலோசித்தபோது, அந்தப் பாடலைக் கேட்ட சொர்ணலதா, அந்தக் குரலிலும் தானே பாடுவதாகச் சொன்னார். போட்டிப்பாடலில் இரண்டு வெவ்வேறு குரல்களில் இரு பெரும் பாடகிகள் இந்தியில் பாடியிருந்ததை, தமிழில் சொர்ணலதா மட்டுமே பாடி அசத்தியிருந்தார். இதை அப்போது நவ்ஷாத்திடம் போட்டுக் காட்டினோம். சொர்ணலதாவின் அபார திறமை கண்டு பாராட்டினார் அந்த இசை மேதை. அத்துடன், நாங்கள் வாங்கிச் சென்ற மோதிரத்தையும் சொர்ண லதாவுக்கு விருதுபோல வழங்கினார். "தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் இது' என்று எப்போதும் சொல்வார் சொர்ணலதா'' என்றார்.

அவரால் மறக்க முடியாத சம்பவங்கள் நிறையவே இருக்கின்றன என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ண லதாவின் பெற்றோருக்கு 10 பிள்ளை கள். 4 பெண்கள், 6 ஆண்கள். ஒன்பதாவது குழந்தைதான் சொர்ண லதா. அவருக்கு இரண்டு அக்கா, 6 அண்ணன், 1 தங்கை. இத்தனை பேர் இருந்தாலும், குடும்பத்தில் வரு மானம் ஈட்டக்கூடிய நபர் சொர்ண லதாதான். அக்காக்களுக்கு திரு மணமாகி அவரவர் கணவருடன் தனியாகச் சென்றுவிட்டார்கள். அண்ணன்களுக்கோ தங்கை சொர்ணலதாவின் வருமானத்தில் தான் வாழ்க்கை.

ரெகார்டிங் என்றால் இரண்டு அண்ணன்கள் எஸ்கார்டு போல கூடவே வருவார்கள். பாட்டு சீன் என்ன என்று மியூசிக் டைரக்டர் விளக்கிச் சொல்வதற்குக்கூட சங்கடமாக இருக்கும். அந்தளவுக்கு பின்தொடர்ந்து கொண்டிருப்பார்கள். யாருடனும் சொர்ணலதா பழகிவிடக் கூடாது. அவருக்கு கல்யாண எண்ணம் வந்துவிடக்கூடாது என்ப தற்காகத்தான் இந்தளவுக்கு கண் காணிப்பு. சில மியூசிக் டைரக்டர்கள் கோபப்பட்டு, அண்ணன்களை விரட் டிய சம்பவமும் உண்டு. சொர்ணலதா அதிகளவில் பாட முடியாமல் போன தற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். அண்மைக்காலமாக சொர்ணலதாவை மேடைகளில் கூட பாடவிடவில்லை. அடிக்கடி சொந்த மாநிலமான கேரளாவுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அங்கு டி.வி. நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக உட்கார வைத்து இவர்கள் செட்டுக்கு வெளியே நின்று கண்காணித்து வந்தார்கள். இந்த நிகழ்ச்சிகளில் நல்ல வருமானம் என்கிற அவரது நெருங்கிய வட்டாரத்தினர் மேலும் சில தகவல்களையும் சொல்கிறார்கள்.

குடும்பச் சுமை முழுவதையும் சுமந்து கொண்டு, தனது விருப் பங்களை வெளிப்படுத் தக்கூட முடியாமல் நெருக்கடியில் இருந்த சொர்ணலதா பயங்கர மனஅழுத்தத்தில்தான் இருந்தார். அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டி ருந்ததாக இப்போது சொல்கிறார்கள். சைனஸ், ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா போன்ற நுரையீரல் சம் பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் இத்தனை சிறப்பான பின்னணி பாடகியாக அவர் வந்தி ருக்க முடியாது. அவர் இறப்பதற்கு இரண்டு நாள் முன்னாடிகூட, ஒரு திரைப்பட விழா தொடர்பான அழைப்பிதழை நேரில் கொடுக்க அவர் வீட்டுக்குச் சென்றவர்களிடம், சொர்ணலதா ஊரில் இல்லையென்றும் வருவதற்கு ஒரு மாதமாகும் என்றும் அண்ணன்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இரண்டு நாள்கழித்து நுரையீரல் பாதிப்பால் சென்னை மலர் மருத்துவமனையில் அவர் மரணமடைந்துவிட்டதாக செய்தி வருகிறது.

""சொர்ணலதாவின் வீடு இருப்பது சாலிகிராமத்தில். விஜயா, சூர்யா போன்ற ஆஸ்பிட்டல்கள் பக்கத்திலேயே இருக்கின்றன. ஆனால், எதற்காக அடையாறில் உள்ள மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்? அந்த மருத்துவமனை ஒன்றும் நுரையீரல் நோய்க்கு ஸ்பெஷாலிட்டி இல்லையே! பாடிப் பறந்த அந்தக் குயிலின் இதய கீதம் ரொம்பவும் சோகமானது. மன அழுத்தமே இதயத்தை நொறுக்கியதா, தற்கொலைக்குத் தூண்டியதா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. அவரது குரலைப் போலவே உண்மைகளும் ஒரு நாள் உரக்க வெளிப்படும் என்று நினைக்கிறோம்'' என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

எம்.ஜி.ஆரின் தீர்க்கதரிசனம்! -சோலைதமிழக காங்கிரஸ் கட்சியில் எப்போதும் கோஷ்டி கானங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கும். தேர்தல் நெருங்கினால் அந்த கானங்கள் உச்சநிலையில் ஒலிக்கும்.

அப்படித்தான் கடந்த சில மாதங்களாக அபசுரங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா இல்லையா என்று மக்களுக்கே சந்தேகம் பிறந்து விட்டது.

நல்லவேளையாக "நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். எங்கள் உறவு உறுதியானது, இறுதியானது' என்று குலாம்நபி ஆசாத் அறிவித்தார். சோனியாவின் ஒப்புதலின்றி அவர் அப்படி அறிவித்திருக்க முடியாது. காரணம் அவருடைய அறிவிப்பு என்பது கொள்கை முடிவு.

1971-ம் ஆண்டிலிருந்து தி.மு.க.வுடன் அல்லது அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி கண்டு வருகிறது. ஆனால் அமரர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் அரசியல் நாகரீகம், கண்ணியம், உறவு என்பதெல்லாம் அண்ணா தி.மு.க.வில் மங்கி மறைந்து வருகிறது.

1998-ம் ஆண்டு ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி கண்டது. நாடாளு மன்றத் தேர்தலில் நல்ல வெற்றியும் பெற்றது. வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைக்க பி.ஜே.பி. தயாரானது. ஆனால் அ.தி.மு.க. பரிவாரங்களின் ஆதரவினைப் பெறுவதற்குள் அதன் விழிகள் வெளியே தெறித்து விட்டன. பதினொரு மாதங் களில் வாஜ்பாய் அரசை அ.தி.மு.க. கவிழ்த்தே விட்டது. காரணம் அ.தி.மு.க.வின் கட்டளை களுக்கு பி.ஜே.பி.யால் அடிபணிய முடியவில்லை. தமிழக தி.மு.க. அரசை கலைக்க வேண்டும். தங்கள் மீதுள்ள வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்பனவைதான் அ.தி.மு.க.வின் பிரதான கோரிக்கைகளாகும்.

என்றைக்கு தமது அரசு கவிழ்ந்ததோ அன்றைக்கே வைர வரிகளால் பொறிக்கத்தக்க ஓர் பொன்மொழியை வாஜ்பாய் கூறினார். "அப் பாடா! இனிமேல்தான் நான் நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்' என்றார். அந்த அளவிற்கு அவருக்கு அண்ணா தி.மு.கழகம் தினம் தினம் நெருப்புக் குளியல் நடத்திக் கொண்டிருந்தது.

அதன்பின்னர் அண்ணா தி.மு.கழகம் டெல்லி நட்சத்திர ஓட்டலில் முகாமிட்டது. சோனியாவை நேரில் சந்தித்தது. தாங்கள் அடுத்த பிரதமராக ஆதரவு என்று நேசக்கரம் நீட்டியது. என்ன காரணத்தாலோ அடுத்த சில தினங்களி லேயே அந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தது. அதனையும் இன்னொரு நடை போய் சோனியாவை நேரில் சந்தித்தே தெரிவித்தது. சோதனைதான்.

அதன்பின்னர் 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி காண வேண்டும் என்று அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் வலியுறுத்தியது. ஏற்கனவே பட்ட அவமானங் களை மறந்து கட்சியின் முடிவை சோனியா ஏற்றுக் கொண்டார். தேர்தல் பிரச்சாரத்திற்குத் தமிழகம் வந்தார்... இரண்டு அம்மணிகளும் விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்தனர். சோனியா வந்தார். மணிக்கணக்காக மேடையில் காத்திருந்தார். ஆனால் அ.தி.மு.க. அம்மணி கடைசி வரை வரவே இல்லை. சோனியா தமது கடமையை நிறைவு செய்தார். இது அவர் கண்ட இரண்டாவது சோதனை.

இனி அ.தி.மு.க.வுடன் எந்த உறவும் வேண் டாம் என்று அப்போது சோனியாவிடம் ஒருவர் சொன்னார். அவர் வேறு யாருமல்ல. தனது அன்னை தன் கண் முன்னேயே அவமானப்படுத்தப்பட்டதைக் கண்ட பிரியங்காதான்.

2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆட்சிப் பீடம் ஏறியது. அடுத்து செல்வி ஜெயலலிதா டெல்லி சென்றார். சோனியாவைச் சந்தித்தார். நன்றி கூறினார். வெளியே வந்தார். வாசலில் நிருபர்கள் காத்திருந்தனர். தமிழகத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் கொண்டிருந்த உடன்பாடு தேர்தலுடன் முடிந்தது என்று தெளிவாகத் தெரிவித்தார். இதனை சோனியா சந்தித்த மூன்றாவது சோதனை என்று சொல்லலாமா?

சோனியாவைப் பற்றிய கடுமையான தனி நபர் விமர்சனங்களை அகில இந்திய அரசியலுக்கு அள்ளிக் கொடுத்ததே அ.தி.மு.க. தலைமைதான். அந்த வகையில் பி.ஜே.பி.க்கே ஆசானாக விளங்கியது என்றும் சொல்லலாம்.

இப்படி தங்கள் தலைவி அடுக்கடுக்காக அவமானங்களையும் சோதனைகளையும் சந்தித்தது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் கவலைப்படுவதேயில்லை. சூடு, சொரணையுள்ளவர்கள் மட்டும் எரிச்சல் கொள்கிறார்கள்.

தி.மு.க.வைப் பரம்பரை எதிரியாகக் கருதுகிற ஒரு சிறு பிரிவினர் செயல்படுகிறார்கள். அடுத்து அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி. தங்களுக்கு ராகுல்காந்தி சூசகமாகச் சொல்லிவிட் டார் என்றெல்லாம் அவர்கள் கிசுகிசு பிரச்சாரம் செய்கிறார்கள். காங்கிரஸ்-அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி என்கிறார்கள். காங்கிரஸ்-தே.மு.தி.க.-பா.ம.க. கூட்டணி என்கிறார்கள்.

டெல்லி அதிகாரத்தில் தி.மு.கழகத்திற்கு பங்கு தருகிறோம். தமிழகத்தில் ஏன் தி.மு.கழகம் தங்களுக்கு பங்கு தரக்கூடாது என்று கேட்கிறார்கள். நியாயமான கேள்வி. இதே கேள்வியை கலைஞரிடம் டெல்லித் தலைவர்கள் கேட்டிருந்தால் விடை கிடைத்திருக்கும். தங்கள் அதிகார பற்றை தமிழக காங்கிரசாரும் சோனியாவிற்குத் தெரிவிக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னால் ராகுல் காந்தி தமிழகம் வந்தார். சென்னை சத்யமூர்த்தி பவனில் கட்சியினரை சந்தித்தார். தமிழகத்தில் ஏன் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை என்று ஒரு தொண்டர் துணிச்சலாகக் கேட்டார். ""தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன என்பது தலைமைக்குத் தெரியும். அதனால் கேட்கவில்லை'' என்றார் ராகுல்.

முந்தைய மன்மோகன்சிங் அரசு நிலையாக நின்று ஐந்து ஆண்டுகள் செயல்பட்டதற்கு தி.மு.கழகம்தான் காரணம். அதனை காங்கிரஸ் தலைமை அறியும். இன்றைக்கும் கூட்டணியின் சூத்திர தாரியே கலைஞர்தான் என்று அந் தத் தலைமை பெருமையாகக் கூறு கிறது. எனவே மையத்தில் நிலையான அரசு அமைவதுதான் காங்கிரஸ் கட்சியின் லட்சியம். 1971-ம் ஆண்டிலிருந்து அந்த அடிப்படையில்தான் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும், தமிழகத்தில் கூட்டணி கண்டார்கள். அதன் அடிப்படை யில்தான் தி.மு.க. உறவு நாணயமானது -நம்பிக்கையானது என்பதை சோனியாகாந்தி அனுபவரீதியாக அறிந்து முடிவெடுக்கிறார்.

மையத்தில் நிலையான ஆட்சி வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் நாங்கள் பண்டாரம் பரதேசிகளாக இருக்க வேண்டு மா? எங்களுக்கும் அதிகார அரசியலில் ஆசை யிருக்காதா என்று கேட்க ஆரம்பித்திருக் கிறார்கள். இங்கேயும் ஆட்சியில் பங்கு என்ப தனை முதன் முதலில் உரக்கச் சொன்னவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான். இப்போது ப.சிதம்பரம் என்ன சொல்கிறார்? தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்கிறார் அவர் நாட்டின் உள்துறை அமைச்சர், கோவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை அருகில் அமர்த்திக்கொண்டு அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார். எனவே கூட்டணி ஆட்சி என்று அவர் போகிற போக்கில் கூறியிருக்க முடியாது.

தங்களுக்கு சரிபாதி இடங்கள் வேண் டும். எல்லா மாவட்டங்களிலும் தொகுதிகள் வேண்டும் என்றும் கோருகிறார்கள்.

அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்றும் சொல் கிறார்கள். குலாம்நபி ஆசாத் சொன்ன பின்னரும் இப்படி காங்கிரஸ் அரங்கில் பல்வேறு ராகங்கள் கேட் கின்றன. இதிலிருந்து ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கேட்கும். ஆட்சியிலும் பங்கு கேட்கும் என்பது தெளிவாகிறது. இறுதி முடிவு எடுப்பது சோனியா காந்தி என்று மெத்தனமாக இருந்து விடக்கூடாது. நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக் கும் தி.மு.கழகம் பணிந்த தில்லைதான்.

ஆனாலும் காலத்தோடு நிலைமையைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

வரலாறு ஏற்கனவே நமக்கு ஓர் பாடம் படித்துக் கொடுத்திருக்கிறது. 1980-ம் ஆண்டு தி.மு.கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உடன்பாடு ஏற்பட்டது. நாடாளு மன்றத் தேர்தலில் அந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.கழகம் இரண்டே இடங்களில்தான் வெற்றி பெற்றது.

அடுத்து சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இன்றைக்கு காங்கிரஸ் கட்சியினர் சொல்லும் சூத்திரப்படி அன்றைக்கே தொகுதிப் பங்கீடுகள் நடந்தன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக... தி.மு.கழகம் 109 தொகுதிகளிலும் காங்கிரஸ் 109 தொகுதிகளிலும் போட்டியிட்டன. கூட்டணி வெற்றி பெற்றால் கலைஞர்தான் முதல்வர் என்று சென்னை வந்த அன்னை இந்திரா காந்தி அறிவித்தார்.

ஆனால் அந்தக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அன்னக்காவடியாக எந்த வசதி வாய்ப்பும் இல்லாது களம் கண்ட எம்.ஜி.ஆர். அமோக வெற்றி பெற்றார். அதிகாரத்தில் சமபங்கு என்ற காங்கிரஸ் சித்தாந்தத்திற்கு தமிழகம் முற்றுப்புள்ளி வைத்தது. தி.மு.கழகமும் பாடம் படித்துக்கொண்டது.

விளம்பர வெளிச்சங்களும் வண்ணத் தோரணங்களும் கட்சியின் வளர்ச்சியைக் குறிக்காது. இன்றைக்கு அந்தக் கலையில் காங்கிரஸ் கைதேர்ந்திருப்பதையும் மறுப் பதற்கில்லை. திருமணம் என்றாலும் ஜோடிப் பொருத்தம் சரியாக இருக்க வேண்டும். டென்னிஸ் விளையாட்டில் இரட்டையர் ஆட்டம் என்றாலும் அவர்களு டைய திறமை சமமாக இருக்க வேண்டும்.

சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினரைப் பார்த்து அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஓர் கருத்தைத் தெரிவித்தார். ""தமிழகத்தில் அ.தி.மு. கழகம் ஆட்சி பீடத்தை விட்டு இறங்கினால் தி.மு.கழகம்தான் ஆட்சிபீடம் ஏறும். நீங்கள் கோட்டைக்கு வரலாம் என்று கனவு காணாதீர்கள்'' என்றார். அவருடைய தீர்க்கதரிசனக் கருத்து என்றைக்கும் பொருந் தும்.

தமிழகம் மையத்தில் காங்கிரஸ் அரசு அமைய வாக்களிக்கும். தமிழகத்தில் திராவிடக் கட்சி ஆட்சி அமைக்க வாக்களிக்கும்.

கவுன்சிலர்களின் கட்டப்பஞ்சாயத்து! தி.மு.க.வுக்கு எதிராக சென்னை? -மேயர் மா.சு.


கவுன்சிலர்களின் கட்டப்பஞ்சா யத்துகள் சென்னைக்குள் கட்டுக்கடங் காமல் தலைவிரித்தாடுகின்றன. இந்த நிலை தொ டர்ந்தால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பாதகமாக முடியும் என்கிற தகவல்கள் பரவிக் கிடக்கின்றது. இந்த நிலையில், சென்னை மாநகர மேயரும் தி.மு.க. இளைஞரணி யின் மாநில துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான மா.சுப்ரமணியனை சந்தித்தோம்...


தி.மு.க. கவுன்சிலர்கள் பலரின் கட்டப் பஞ்சாயத்துகளால் தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதே?

கவுன்சிலர்கள் சிலரின் போக்குகள் ஆரோக்கியமாக இல்லை என்பது உண்மைதான். ஆனால், இதுபற்றி நிறைய புகார்கள் வந்ததை யடுத்து கவுன்சிலர்கள் அனைவரையும் அழைத்து கடுமையாகக் கண்டித்தார் தலைவர் கலைஞர். இந்த கண்டிப்புக்குப் பிறகு கவுன்சிலர்கள் தங்களைத் திருத்திக்கொண்டார்கள். தவறு செய்வதில்லை. அதேசமயம், துணை முதல்வரும் (மு.க.ஸ்டாலின்) கவுன்சிலர்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதால் அவர்கள் தவறு செய்ய நினைப்பது கிடையாது. ஆக, கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதில்லை என்பதுதான் இப்போதைய நிலை. அதனால், அவர்களால் ஆட்சிக்கு கெட்ட பெயர் என்பது தற்போது இல்லை.

கவுன்சிலர்களுக்கு என்னதான் நீங்கள் சப்போர்ட்டாக இருந்தாலும், அவர்களைப் பற்றி மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதுதான் எங்களுக்குத் தகவல். ஏற்கனவே சென்னையில் 7 தொகுதிகளை கைப்பற்றியிருக்கும் அ.தி.மு.க. வருகிற தேர்தலில் மொத்த தொகுதிகளையும் கைப் பற்றிவிடும் என்கிறார்களே?

இதனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். கடந்த தேர்தலில் 7 தொகுதிகளை அ.தி.மு.க. ஜெயித்ததற்கு முக்கிய காரணம்... வெள்ள நிவாரணத் தொகை 2000 ரூபாயை எல்லோருக்கும் கொடுத்ததுதான். இன்றைக்கு அப்படிப்பட்ட சூழல்கள் எதுவும் கிடையாது. கடந்த நாலரை வருடங்களில் தமிழக அரசும் மாநகராட்சியும் ஏகப்பட்ட நலத் திட்டங்களை சென்னை மக்களுக்காக நிறை வேற்றியிருக்கிறது.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னை முழுக்க மேம்பாலங்கள், சுரங்கப் பாலங்கள், தரைப்பாலங்கள் கட்டியிருக்கிறோம். தரமான சாலைகள், தடையின்றி குடிநீர் விநியோகம், குப்பை இல்லா நகரம், மாநகராட்சிப் பள்ளிகளில் தரம் உயர்த்தல் போன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் சாதித்திருக் கிறோம். மேலும், மழைக்காலங்களில் வெள்ளம் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளால் மக்களின் அவஸ்தைகள் நீங்கியிருக்கிறது.

இவைகள் தவிர, கலைஞரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சி, ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, மலிவு விலையில் மளிகைப் பொருட்கள், முதியோர் ஓய்வூதியம், திருமண நிதி உதவி, விதவைகளுக் கும், வயது முதிர்ந்த நிலையிலும் திரு மணம் ஆகாத பெண்களுக்கும் வாழ்க்கைப் பாது காப்பிற்கான மாதாந் திர நிதி உதவி, வேலையில்லா பட்ட தாரிகளுக்கு உதவி... இப்படி தலைவர் கலைஞர் நிறைவேற்றியுள்ள ஏகப்பட்ட நலத் திட்டங்கள் சென்னை மக்களையும் முழுமையாக சென்றடைந்திருக் கின்றது. மொத்தத்தில்... அரசின் நலத்திட்டங்களில் ஏதேனும் ஒன்று ஒவ்வொரு குடும்பமும் பெற்றிருக்கிறது. மேலும் தலைவர், தளபதியின் உத்தரவுக் கேற்ப காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களோடு இணைந்து பணி செய்துகொண்டிருக்கிறோம். ஆக, வரும் தேர்தலில் சென்னை தி.மு.க.வின் கோட்டை என்பதை மக்கள் நிரூபிப்பார்கள்.

உங்களின் இதே சாதனைகள்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இருந்தது. ஆனாலும், அந்த தேர்தலில் தென் சென்னையை தி.மு.க. இழந்திருக்கிறதே?

தொகுதி மறு சீரமைப்பு மாற்றங்கள் ஒரு காரணம். இது தவிர சில காரணங்கள் இருக்கிறது. அதனை வெளிப்படையாக சொல்வதற்கில்லை.

சென்னை தி.மு.க.வில் நிலவும் உள்கட்சிப் பிரச்சினைகளால் தி.மு.க.வின் 100 சதவீத வெற்றி என்பது கேள்விக்குறிதான் என்கிறார்களே?

இப்படிப்பட்ட கேள்விகளையெல் லாம் எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களோ...! (சிரிக்கிறார்) ஆனால், இதில் உண்மை இல்லை.

கலைஞரின் வீட்டிலும் அறிவாலயத்திலும் மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்கிறாரே ஜெயலலிதா?

கலைஞர் வீட்டின் பின்புறம் மாநகராட்சிக்கு சொந்தமாக சின்ன லேன் (சந்து) இருக்கிறது. இதைத்தான் ஆக்கிர மித்திருப்பதாகச் சொல்கிறார் ஜெயலலிதா. ஆனால், ஆக்கிரமிக்கப் படவில்லை. ஜெயலலிதாவே நேரில் சென்று அதனை செக் பண்ணிக் கொள்ளலாம். தான் வாழ்ந்த வரலாறுமிக்க இல்லத்தையே மக்களுக்காக எழுதி வைத்த கலைஞரா மாநகராட்சி நிலத்தை ஆக்கிர மிப்பு செய்வார்? இதெல்லாம் மண்டூகங்கள் அறியாது. அறிவாலயத்தை பொறுத்தவரை... மாநக ராட்சிக்குச் சொந்தமான ஓ.எஸ்.ஆர். லேண்ட் விதிகளின்படி பூங்காவாக பராமரிக்கப்படுகிறது.

இந்தப் பூங்காவை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது வெளிப்படையான தெளிவு. பூங்காவாக பராமரிக்கப்படுகிறதா? இல்லையா? என்பதை குற்றச்சாட்டுகள் கூறும் ஜெயலலிதாவும் செங்கோட்டையனும் சேகர்பாபுவும் ஒன்றாக சேர்ந்தோ அல்லது தனித் தனியாகவோ வந்து பார்க்கட்டும்.

பூங்காவில் அமர்ந்து நாள் முழுக்க காற்று வாங்கிச் செல்லட்டும். யார் தடுக்கப் போகிறார்கள்? யாரும் தடுக்கமாட்டார்கள். பூங்காவுக்கு வர ஜெயலலிதா தயாரா?

Tuesday, September 21, 2010

யுத்தம் 90 நக்கீரன் கோபால்


தம்பி சிவக்குமாரின் குரலில் படபடப்பு அதிகமாகவே இருந்தது. ""அண்ணே.. 20-ந் தேதிக்குள்ளே உங்களைப் பிடிச்சி, ஜெயிலில் போட்டுடணும்ங்கிறது மேலிடத்து உத்தரவாம். அதனாலதான், சுப்ரீம் கோர்ட் பெட்டிஷனைக்கூட அப்புறம் பார்த்துக்கலாம்னும், நீங்க உடனே ரொம்ப தொலைவில், பாதுகாப்பான இடத்துக்குப் போயிடணும்னும் சீனியர் சொல்றார். சி.பி.ஐ. வக்கீல் மூலமா சீனியருக்கு இந்த தகவ லெல்லாம் கிடைத்திருக்கு'' என்றார்.

தம்பி காமராஜை உடனே தொடர்பு கொண்டேன். அவர் தான் சுப்ரீம் கோர்ட் விஷயங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கும் 20-ந் தேதி கெடு பற்றி தெரிந்திருக்கிறது. ""அண்ணே... உங்களை ஃபிக்ஸ் பண்ணிட்டதா நம்ம சோர்ஸ் சொல்லுது. சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு சாதகமான எந்த உத்தரவும் வருவதற்குள்ளே அரெஸ்ட் பண்ணிடணும்னு நினைக்கிறாங்க'' என்றார்.

பொடா வழக்கில் ஏற்கனவே கைதானவர் களுக்காக ஆஜராகிக் கொண்டிருந்த பிரபல தி.க. வழக்கறிஞர் துரைசாமி, ""பெரியளவில் பணத்தை கையில் வச்சிக்கிட்டு உங்க எடிட்டரை தேடுறாங்க'' என்று சீனிய ரிடம் சொல்லியிருக்கிறார். காட்டுப்பகுதியில் நான் இருந்தபோது, "பணத்தோடு பிடித்ததாக காட்டவேண்டும்' என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்காகத்தானே இப்படி அடிக்கடி பணத்தோடு வாகனத்தில் போலீஸ் அலைந்துகொண்டிருக்கிறது. சீனியருக்கு இந்தத் தகவல் தெரிந்ததால்தான் என்னை எங்கேயாவது பாதுகாப்பான இடத்திற்குப் போகச் சொன்னார்.

தலைமறைவாக இருந்தால் "அறிவிக்கப்பட்ட குற்றவாளி' என போலீஸ் விளம்பரம் செய்யும். அதனால் தான், புத்தக கண்காட்சி போன்ற இடங்களில் தலைகாட்டும்படி நமது வழக்கறிஞர்கள் சொன்னார்கள். நான் அங்கே சென்ற தை தொலைக்காட்சிகளும் பத்திரிகை களும் பதிவு செய்துவிட்டதால், ஆட்சி செய்தவர்களின் வெறி எக்கச்சக்க மாகிவிட்டது. அவர்களிடம் சிக்கினால் குதறிவிடுவார்கள்.

சுப்ரீம் கோர்ட் வழக்கிற்காக டெல்லிக்குப் புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த நமது அட்வகேட் பெருமாள் அந்த சமயத்தில் வக்கீல் துரைசாமியை சந்தித்திருக்கிறார். ""மிஸ்டர் பெருமாள்.. பொடாவில் புதுசா ஒரு அமென்ட்மெண்ட்டை சப்-கிளாஸாக அவசர அவசரமாக சேர்த்து கவர்னரிடம் அரசாங்கம் கையெழுத்து வாங்கிடிச்சி தெரியுமா? அந்த அமென்ட்மெண்ட் வேறு யாருக்காகவுமில்லை.. உங்க நக்கீரன் கோபாலுக்காகத்தான்'' என்றிருக்கிறார் வக்கீல் துரைசாமி.

பொடா சட்டத்தின் 4(ஹ) பிரிவில்தான் இந்த திருத்தத்தை செய்து, கவர்னரிடம் கையெழுத்து வாங்கியிருந்தது ஜெயலலிதா அரசாங்கம். இந்தப் பிரிவின்படி, ஒரு மாநிலத் தில், கலவரம் ஏற்படும் என அறிவிக்கப்பட்ட (நோட்டிஃபைடு ஏரியா)பகுதியில் கைது செய்யப்பட்டால் அவர் மீது உடனடியாக பொடா சட்டத்தைப் பாய்ச்ச முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை 98-ல் தொடர் குண்டுவெடிப்பு கொடூரத்திற்குள்ளான கோவையும் வீரப்பன் காட் டுப்பகுதியும்தான் நோட்டிஃபைடு ஏரியா. ஆனால், ஜெ அரசு செய்த திருத்தத்தினால், Under Explanation to section 4 of the Preventive of Terrorism Act 2002 (central act 15 of 2002) the Governor of Tamilnadu hereby specifies the whole of the State of Tamilnadu as notified area for the purpose of section 4 of the said Act என்று அரசாங்க கெஜட்டில் அப்போதைய உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோடாவினால் வெளியிடப்பட்டது. அதாவது, என்னைப் பிடித்து பொடாவில் தள்ளவேண்டும் என்பதற்காகவே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கலவரம் ஏற்படும் என அறிவிக்கப்பட்ட பகுதியாக சட்டத்திருத்தம் செய்தது அரசாங்கம். "என்ன கொடுமை பாருங்க. என் ஒருத்தனுக்காக நல்லா இருக்குற தமிழ் நாட்டையே தீவிரவாத மாநிலமாக்கி அரசாணை?'

ஜனவரி 21-ந் தேதி. இன்னும் இரண்டு நாளில் கோபி கோர்ட்டில் ஆஜராகவேண்டும். வக்கீல்கள் யோசிக்கிறார்கள். நானோ "கட்டாயம் ஆஜராகவேண்டும்' என்கிறேன். டெல்லியிலிருந்த பெருமாள் சார் போன் செய்கிறார்.

""அண்ணாச்சி... முகமது அலி உள்ளிட்ட மொத்த போலீஸ் அதிகாரிகளும் டெல்லியில்தான் குவிஞ்சிருக்காங்க'' என்றார். கோர்ட்டில் நமது வழக்கு விசாரணைக்கு வரும் நாளில் பதட்டம் அதிகமாகவே இருந்தது என்றார். தம்பி காமராஜ் போன் செய்தார். ""அண்ணே.. வழக்கு விசா ரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைச்சிருக்காங்க. கவர்மென்ட் தரப்பில் நம்ம வழக்கு அட்மிட் டாகாமல் தள்ளுபடி செய்யப்படும்னு நினைச்சாங்க. சீனியரோட ஆர்க்யூமென்ட்டை கேட்டதும் வழக்கை அட்மிட் பண்ணி, விசாரணையை ஒத்திவச்சிருக்காங்க'' என்றார்.


"சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு சாதகமான மூவ் நடந்திருப்பதால், நிச்சயமாக கோபி கோர்ட்டில்தான் அரசும் போலீசும் செக் வைக்கும். அதிலிருந்து எப்படி தப்பிப்பது' என ஆலோசித்தேன். ஒட்டுமொத்த போலீஸ் அதிகாரிகளின் பார்வையும் கோபி பக்கம் திரும்பியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் நம் வழக்கு 2 வாரத்துக்கு ஒத்தி வைக்கப் பட்டிருப்பது என்பதை காப்பி போட்டு சீனியரிடமிருந்து வாங்கும் படியும், அந்த விவரத்தை சீனியரே அட்வகேட் ப.பா.மோகனுக்கு தந்தி மூலமாகத் தெரிவிக்கும்படியும் சொன்னேன். அவரும் அனுப்பி வைத்தார். சுப்ரீம் கோர்ட் சம்பந்தப்பட்ட காப்பியை நேரில் வாங்குவதற்காக சிவக்குமாரும் கௌரியும் ஏர்போர்ட்டுக்கே போய்விட்டார்கள்.

நிருபர் ஜீவாவைப் பிடித்து, ""உடனடியா ஒரு புது சிம் வாங்கி ப.பா.மோகன்கிட்டே கொடுத்து, அதில் எனக்குப் பேசச் சொல்லுங்க'' என்றேன். அப்படியே பேசினார் ப.பா.மோகன். நான் அவரிடம், ""சார்.. போலீஸ்காரங்க கண்கொத்தி பாம்பா சுத்திக்கிட்டிருக்காங்க. எப்படி கோர்ட்டில் ஆஜராகிறதுன்னு தெரியல. எக்காரணத்தைக் கொண்டும் வாரண்ட் வந்திடக்கூடாது.''

""பிரச்சினையில்லீங்க சார்.. நான் பார்த்துக்கிறேன்.''

இரவு 10.45 மணிக்கு, சுப்ரீம்கோர்ட்டிலிருந்து வாங்கி வந்த காப்பியை ப.பா.மோகனுக்கு ஃபேக்ஸ் செய்கிறார்கள் தம்பிகள் சிவாவும் கௌரியும்.

மறுநாள் 22-ந் தேதி மதியம். சென்னையில் பெருமாள் சாரிடமிருந்து போன். ""அண்ணாச்சி... 1 மணிக்கு சீனியர் வரச் சொன்னார். ஆனா கொஞ்ச நேரம் கழித்து அவரே போன்செய்து, அவரோட வீட்டை போலீஸ் சர்வைலன்ஸ் பண்றதாகவும், ஒன்றரை மணிக்கு வாங்கன்னும் சொன்னார். ஏதோ சீரியஸ்னு நினைக்கிறேன்'' என்றார்.

12.30 மணி. தம்பி சிவக்குமாருக்கு போன் செய்தேன். ""அண்ணே... சீனியர் தன்னோட சேம்பருக்கே வரச்சொல்லிட்டார். பெருமாள் சாரோடு போய்க்கிட்டிருக்கேன்'' என்றார். 1.30 மணிக்கு பெருமாள் சார் லைனில் வந்தார். ""அண்ணாச்சி, ரொம்ப சீரியஸா இருக்கு போலிருக்கு. உங்க மேலே கோபி கோர்ட்டில் வாரண்ட் வாங்கிவிட்டதாகவும், போலீஸ் இங்கே வந்துக்கிட்டிருப்பதாகவும் நாம என்ன செய்யப்போறோம்னும் சீனியர் கேட்கிறார்.''

""இருக்காதுங்க சார்... வாய்தா நாளைக்குத்தானே... அதற்குள் எப்படி வாரண்ட் வாங்குவாங்க? நாளைக்கு ஆஜராகலைன்னா வாரண்ட் வாங்கணும்னு பேசியிருப்பாங்க. அது இப்படி பாஸ் ஆகியிருக்கும்''.

""அண்ணாச்சி அவங்க சீரியஸாகத்தான் இருக்காங்க. ஹைகோர்ட்டில் நாம போட்டிருக்கிற 6 ரிட் வழக்கும் என்னைக்கு போஸ்டிங்னு செக்ஷனுக்குப் போய் விவரம் கேட்டிருக்கிறார் சீனியர். அங்கே இருந்தவங்க, "இப்பதான் போலீஸ் ஆஃபீசர்ஸ் வந்து உங்க பண்டல்களை வாங்கிட்டுப் போனாங்க'ன்னு சொல்லியிருக்காங்க''

-பெருமாள் சார் சொன்னபோது, போலீஸ் எந்தளவுக்கு வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது புரிந்தது. பண்டல் களை அட்வகேட் ஜெனரல் அல்லது அடிஷனல் பி.பி.தான் வாங்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாமலேயே போலீசார் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.

போலீசின் வேகத்தைவிட நமது தரப்பு வேகமாகச் செயல் பட்டால்தான் சட்டப் பாதுகாப்பை பெற முடியும். மாலை ஆறரை மணிக்கு அட்வகேட் பெருமாளை வரச்சொல்லியிருந்த சீனியர் கே.எஸ்., மறுபடியும் போன் செய்து.. ""4 மணிக்கெல்லாம் வந்தி டுங்க'' என்றிருக்கிறார். "ரொம்ப அவசரம்' என்று சீனியர் சொன்ன தால், அடுத்த சில நிமிடங்களில் அவரை சந்தித்தார் பெருமாள்.

""அந்த பொம்பளை ரொம்ப சீரியஸா இருக்காம். எப்படியும் உள்ளே தூக்கிப் போடணும்னு சத்தம் போட்டிருக்குது. டெல்லியிலிருந்து சுப்ரீம் கோர்ட் அட்வகேட் ரேவதிராஜன்ங்கிறவர் இங்கே வந்து கேம்ப் போட்டிருக்கிறார். நாளைக்கு கோபியில் வாரண்ட் வராமல் பார்த்துக்கணும். அதனால , கோபாலை ஆஜராகச் சொல்லிடுங்க. வாரண்ட் விழுந்திடிச்சின்னா, சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நம்ம வழக்கில் பிரச்சினையாயிடும். கோர்ட்டை நாம் மதிக்கலைன்னு ஆயிடும்.''

""நான் அண்ணாச்சிகிட்டே சொல்லிடுறேன் சார்..''

""மிஸ்டர் பெருமாள்.. டெல்லியிலே அ.தி.மு.க தரப்பிலிருந்து 2 பேர் வந்து என்னை இந்தக் கேஸிலிருந்து ஒதுங்கிக்கச் சொன்னாங்க. பத்திரிகைகாரர் விஷயத்திலிருந்து நீங்க ஒதுங்கிக்குங்க. நானும் ஒதுங்கிக்கிறேன்னு சொன்னேன்.''

-சீனியர் சொன்ன விஷயங்களை என்னிடம் தெரிவித்தார் அட்வகேட் பெருமாள். பெருமாள் சார் சொன்னதை அப்படியே ப.பா. மோகனிடம் சொன்னேன். ""சார்.. நான் வாய்தா வாங்கிடுறேன். நீங்க கவலைப்படவேண்டாம்.''

""வாய்தா தேதியை 2 வாரம் கழிச்சி வாங்குங்க சார். நாம் ஆஜராகும்போது வேற கேஸில் கைது செய்தால் என்ன செய்யமுடியும்?''

""நீங்க சொல்றதும் சரிதான்.''

அங்கிருந்து பெருமாள் சாரை தொடர்புகொண்டேன். ""சார்... கோபியில் ஆஜரானால் என்ன ப்ளஸ், என்ன மைனஸ்னு நீங்க ஒரு பேப்பரில் எழுதிக்குங்க. நானும் எழுதிப் பார்க்கிறேன். ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிக்குவோம்.''

அவரிடம் பேசியபின், என் வீட்டுக்குப் போய்விட்டு இரவு 3 மணிக்கு மேல் கோபி செல்வதாக திட்டம்.. போலீஸ் நடமாட்டம் தெரியவில்லை. நள்ளிரவு கடந்திருந்தது. என் மகள்களும் தம்பி பையனும் என்னுடைய கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டி ருந்தார்கள். நான் எழுதிக் கொண் டிருக்கிறேன். ப்ளஸ், மைனஸ் விஷயங்களையும், அன்றைக்கு முழுவதும் என்ன நடந்தது என்பதையும் நோட்டில் விரிவாக எழுதிக்கொண்டிருந்தேன். வாரண்ட் விழுந்தால் நிச்சயமாக சர்ச் என்ற பெயரில் போலீசார் வந்துவிடுவார்கள். அவர்களிடம் சிக்கக்கூடாது என்பதால் பெட்டியில் துணிகளை தயாராக எடுத்துவைத்துவிட்டுத்தான் எழுதிக்கொண்டிருந் தேன். கதவருகே ஏதோ நிழல்..

திரும்பிப் பார்க்கிறேன். என் துணைவியார் நின்று கொண்டிருக்கிறார். அவர் முகத்தில் கலக்கம் தெரிகிறது.

""நீங்க வீரப்பனை பார்க்கப் போனப்பகூட இவ்வளவு பயம் வரல. இப்ப ரொம்ப பயமா இருக்குது. ஏன் இப்படியெல்லாம் நடக்குது? இந்த பொம்பளை நம்மையெல்லாம் என்னதான் செய்ய நினைக்குது?'' -பேசப் பேச அவரது கண்களில் கண்ணீர். நான் தைரியப்படுத்துகிறேன்.

மணி 3.30. அந்த இரவு நேரத்தில், போலீஸ் ஜீப் சத்தம்... ...

-யுத்தம் தொடரும்

ஜெயேந்திரர் உத்தரவு! மதக்கலவர டென்ஷன்!

""சாமியில்லாமல் இருந்த நம்ம மலைக்கோட்டை கோயிலுக்குள்ளே அபிராமி அம்மன் விக்கிரகத்தை வச்சு ஆராதனை பண்ணியாச்சு. எல்லாரும் தேங்காய் பழத் தோட போய் அர்ச்சனை செய்து அம்மனை கும்பிட்டு பிரசாதம் வாங்கிக்கங்க.''

14.9.10 காலையில், திண்டுக்கல் நகரம் முழுதும் இந்தத் தகவல் பரவியது. பக்தர்கள் கூட்டம், புகழ்பெற்ற மலைக்கோட்டை கோயில் நோக்கிக் கிளம்பியது.

3 அடி உயர கருங்கல்லால் ஆன படிமம். 4 கரங் களுடன் அருள்சொரியும் முகத்துடன் காட்சியளித்தாள் அபிராமியம்மன். சிலமணி நேரத்திற்கு முன்புதான் யாகம் நடத்தி, இந்த அம்மன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து விட்டுப் போயிருக்கிறார்கள் இந்து மக்கள் கட்சியினர்.

கோயில் வளாகத்திலும் கோபுரத்திலும் காவிக் கொடியும், இந்து மக்கள் கட்சிக் கொடியும் பறந்துகொண்டிருந்தன.

தொல்பொருள் ஆராய்ச்சித் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள மண்டபக் கோயிலுக்குள் சிலை வைத்து வழிபாடு நடக்கும் செய்தி காவல்துறைக்கும் எட்டி யது. எஸ்.பி.தினகரன், டி.எஸ்.பி.ராமமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு வந்தனர். ""இது வழிபாட்டுத் தலமல்ல, திரும்பிச் செல்லுங்கள்'' பக்தர் களைத் தடுத்தது போலீஸ். போலீஸாரின் தடுப்பையும் மீறிக்கொண்டு புதிய அம்மனை வழிபடுவதற்காக கோஷங்களோடு செல்ல முயன்ற, இந்து முன்னணி மா.செ. ரவிபாலன் உட்பட 200 பேரை கைது செய்தது போலீஸ்.

இதற்கிடையில் திண்டுக்கல் பகுதியில் வாழும் முஸ்லிம் கள், ""நம்ம திப்பு சுல்தான் மலைக்கோட்டைக்குள் இந்து சாமியை வைத்துவிட்டார்கள். திரண்டு வாருங்கள்... நாமும் பள்ளிவாசலை உருவாக்குவோம். நம்ம கொடியை கோட்டையில் பறக்கவிடுவோம்'' உணர்ச்சிப் பெருக்கோடு கிளம்பினார்கள். திண்டுக்கல் முழுதும் மதப் பதட்டம் மையம் கொள்ளத் தொடங்கியது.

இதற்குள் திருச்சியில் இருந்து தொல் பொருள் ஆராய்ச்சித்துறையின் உதவி ஆய் வாளர் பாஸ்கரன் தலைமையில் வந்த குழு, கோயிலுக்குள் நுழைந்து அம்மன் சிலையை பெயர்த்து, சாக்கு கட்டிக் கொண்டு கிளம் பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங் களிலும் சாலை மறியல்களில் ஈடுபட்ட இந்து பக்தர்களை போலீசார் "சமாதானப்படுத்தி' விரட்டினார்கள்.

""13-ம் நூற்றாண் டில் பாண்டிய மன்னன் சடையவர்மன் குலசேக ரப் பாண்டியனால் கட் டப்பட்டது இந்த மலைக்கோட்டை மண் டபமும் அபிராமி அம் மன் கோயிலும். அதன் பிறகு இதை ஆக்கிரமித்த திப்புசுல்தான், கோயிலில் இருந்த சிலையை கீழே கொண்டு வந்து வைத்துவிட்டான். மீண்டும் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக பக்தர்கள் கோரிக்கை வைத்தும் பலனில்லை. 6 மாதம் முன்பு மலைக்கோட்டைக்கு வந்த காஞ்சி சங்கராச் சாரியாரும், இராம கோபாலனும், "மீண்டும் அபிராமி அம்மனை' மலைக்கோட்டை கோயிலில் வைக்க வேண்டுமென்று எங்க ளுக்கு உத்தரவிட்டார்கள். அதனாலதான் வைத்தோம்'' என்கிறார்கள் இந்து மக்கள் கட்சியினரும், இந்து முன்னணியினரும்.

""இனி இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படாமல் போலீஸ் பாதுகாப்பு போடப் படும்'' என்றார் தொல்பொருள் ஆராய்ச்சி உதவி ஆணையாளர் பாஸ்கரன்.

நக்கீரன் செய்தி! புலவர் குடும்பத்துக்கு முதல்வர் தந்த 10 லட்சம்!


நக்கீரன் செய்தியின் எதிரொலியாக... வறுமையில் வாடிய மேலப்பெருமழை சோமசுந்தரப் புலவரின் வாரிசுகளுக்கு 10 லட்சரூபாய் நிதி உதவிக்கான அரசாணையை தந்தை பெரியாரின் 132-வது பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி பிறப்பித்து... தமிழ் உணர்வாளர்களின் மனதைக் குளிரவைத்திருக்கிறார் முதல்வர் கலைஞர்.

சங்க இலக்கிய நூல்களுக்கு உரைகள் எழுதி.. அவற்றைத் தமிழ் சமூகம் எளிதில் படிக்க வழிவகுத்த உரையாசிரியர் சோமசுந்தரப் புலவர்... தன் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் எண் ணம்கூட இல்லாமல்... தன்னை மறந்து தமிழ்ப்பணி ஆற்றியதையும்... தற்போது அவரது வாரிசுகள்.... அர சின் 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் வயிற்றைக் கழுவிவந்த சோகத்தையும்... "வறுமையில் மேலப்பெரு மழை சோமசுந்தரப்புலவரின் வாரிசுகள்'’ என்ற தலைப் பில் ஒரு செய்திக் கட்டுரையைத் தந்திருந்தோம்.

இந்தக் கட்டுரையின் எதிரொலியாக தமிழார் வலர்கள்... கடந்த 5-ந்தேதி மேலப்பெருமழையில் கூடி... அவரது நூற்றாண்டு விழாவைக் கொண் டாடி மகிழ்ந்ததோடு... புலவர் குடும்ப நிலவரத் தைத் தெரியப்படுத்திய நக்கீரனுக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ந்தனர். விழாவுக்குத் தலைமை தாங்கிய புலவரின் பழைய நண்பர் ரெங்கசாமி ""நக்கீரனின் செய்திக்குப் பிறகே.. அனைவரின் கவனமும் புலவரின் பக்கம் திரும்பியிருக்கிறது'' என்று உணர்ச்சி வயப்பட்டார். புதுவை பேராசிரி யர் முனைவர் இளங்கோவனோ “என் தமிழறிவை வளர்த்தது புலவரின் புலமை. அவர் வாரிசுகள் வறுமையில் வாடியதை நக்கீரன் மூலம் அறிந்து திடுக்கிட்டேன். செய்தியைப் படித்ததுமே புலவர் குடும்பத் தைச் சந்தித்தேன். அவரது நூற்றாண்டுவிழாவை வருடம் முழுக்க நடத்துவோம்''’என்று முழக்கமிட்டார்.

இந்த நிலையில்தான் புலவரின் குடும்பத்துக்கு நிதி உதவி யை அறிவித்து... அனைவரின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பை யும் நிறைவேற்றியிருக்கிறார் கலைஞர். மேலப்பெருமழை கிரா மத்துக்குச் சென்றோம். ஊர்மக்கள் உற்சாகத்தில் இருந்தனர். செல்போனில் பேசியபடியே எதிர்ப்பட்ட அ.தி.மு.க. மாஜி ஊராட்சிமன்ற தலைவர் ராஜமாணிக்கம்.. நம்மைக் கண்டதும் ‘""வாங்க நக்கீரன் தம்பீ... புலவர் குடும்பத்துக்கு உதவிசெய்த முதல்வர் கலைஞருக்கும்... முயற்சியெடுத்த நக்கீரனுக்கும் நன்றி. புலவர் குடும்பத்துக்கு கலைஞர் உதவிசெய்யும் செய்தியைத் தான் என் நண்பர்களுக்கெல்லாம் போன்ல சொல்லிக்கிட்டு இருக்கேன். எங்க ஊர் ஜனங்க சார்பில் கலைஞருக்கு பாராட் டுக் கூட்டம் நடத்தப்போறோம்'' என்றார் ஏக உற்சாகமாய்.
""கலைஞருக்கு விழா எடுத்தா உங்க கட்சித் தலைமை உங்க மீது நடவடிக்கை எடுக்காதா?'' என்றோம். அ.தி.மு.க. ராஜ மாணிக்கமோ ""நல்ல காரியத்தை செய்யும்போது... மத்த விவ காரங்களை யோசிக்கக்கூடாது. முதல்வரின் தாயுள்ளத்தைப் பாராட்டாட்டி நான் மனுசனே இல்லை'' என்றார் உணர்சிப் பூர்வமாய். புலவரின் வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் யாரும் இல்லை. புலவரின் இளையமகன் மாரிமுத்து வயல்வேலைக்குச் சென்றிருக்க... சாதிச்சான்றிதழ் வாங்க திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் போயிருந்தார் மூத்த மகன் பசுபதி. மதியம் 3 மணிக்கு உற்சாகமாக வந்த பசுபதி... ""தம்பீ... தாசில் தார் அலுவலகத்தில் இருந்த ஒரு ஆர்.ஐ.தான் விசயத்தைச் சொன்னார். சந்தோசத்தில் அழுகை வந்துடுச்சி. உடனே நேத்தைய கூலிக்காசில் சாக்லெட் வாங்கி... அங்க எல்லாருக்கும் கொடுத்தேன். இந்தாங்க நீங்களும் எடுத்துக்கங்க. கலைஞரின் உதவியையும்... அவர் கவனத்துக்கு எங்க நிலைமையை கொண்டு போன நக்கீரனையும் எந்தக் காலத்திலும் மறக்கமாட்டோம். புலவரின் மகன்களான நாங்களும் எங்க பிள்ளைகளும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கலை. அதனால் கலைஞரின் உதவிப்பணத்தை வைச்சி எங்க பேரன் பேத்திகளை நல்லா படிக்கவைப்போம்'' என்றார் நெகிழ்ச்சியாய். அடுத்த கொஞ்ச நேரத்தில் வயலிலிருந்து வந்த இளையமகன் மாரிமுத்துவும் நெகிழ்ச்சியோடு நமக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த வீடு முழுக்க குதூகலம் பொங்கியது. பிள்ளைகள்.. சாக்லெட்டு களை அக்கம்பக்கம் குழந்தைகளுக்குக் கொடுத்துக் குதூகலித்தனர். அந்த இருண்ட வீட்டிற்குள் சந்தோச வெளிச் சம் நுழையத் தொடங்கியதைப் பார்த்த மகிழ்ச்சியோடு அங்கிருந்து மனநிறைவோடு கிளம்பினோம்

காக்கியா? கருப்பா?

பட்டுக்கோட்டை நகரில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியான மணிக்கூண்டுப் பகுதி... நோ பார்க்கிங் போர்டுக்கு அருகில் தனது காரை "பார்க்' செய்துவிட்டு, மனைவியோடு ஷாப்பிங் கிளம்பினார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜராஜன்.

""சார்... சார்... நோ பார்க்கிங்க்ல வண்டியை நிறுத்தக் கூடாது... எடுங்க!'' -சொல்லிக் கொண்டே வேகமாக வந்தார் ஏட்டு ராஜேந்திரன். கடைக்குள் நுழைந்து விட்டார் வழக்கறிஞர்.

அரைமணி நேரத்திற்குப் பிறகு அங்கு வந்த எஸ்.ஐ. சுகுமாரன் ""யாருடைய கார் இது?'' சத்தம் போட்டுக் கொண்டிருந்தபோது கடைக்குள்ளிருந்து வெளியே வந்த வழக்கறி ஞர், ""இருய்யா என் மனைவி இப்ப வந்திடு வாங்க... வந்ததும் எடுக்கிறேன்!'' என்றார்.

எஸ்.ஐ.க்கும் வக்கீலுக்கும் வாக்குவாதம் ஆரம்பமானது. பொதுமக்களும் கடைக் காரர்களும் வேடிக்கை பார்க்கத் திரண்டனர். வாக்குவாதம் முற்றி, கைகலப்பு, அடிதடி, தடியெனப் பரபரப்பானது. எஸ்.ஐ.சுகுமாற னின் சட்டை கிழிந்து ஸ்டார்பேட்ஜ் கீழே விழுந்ததும் இன்ஸ்பெக்டர் ஆவேசமானார். அவரும் அங்கு வந்த காக்கிகளும் சேர்ந்து வழக்கறிஞர் ராஜராஜனை ரவுண்ட் கட்டினர்.

வழக்கறிஞர் தாக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அவருடைய தந்தையும் வழக்கறிஞரும் அ.தி.மு.க. முன்னாள் ந.செ.யுமான விவேகானந்தன், உறவினர்களு டன் காவல்நிலையத்திற்கு வந்தார்.

இரண்டு தரப்பும் புகார்களைப் பதிவு செய்தார்கள். இருவருமே மருத்துவமனை களுக்குக் கிளம்பினார்கள்.

மருத்துவமனையில் எஸ்.ஐ. சுகுமாறனைச் சந்தித் தோம். ""காரை எடுக்கச் சொன்னதுக் காக ஏட்டு ராஜேந்திரனை ஓவராக பேசிக் கொண்டிருக் கிறார் வக்கீல். அப்பத்தான் நான் போனேன். ஏன் பிரச் சினை பண்றீங்க, காரை எடுங்க என்றேன். வேணும்னா நீயே எடுத்துக்கோ என்று சாவி யைத் தூக்கி வீசினார். ஏன் சார் இப்படி செய்றீங்கன்னு கோபமாகக் கேட் டதும் என் சட் டையைப் பிடித்து தாக்கினார். ஸ்டாரும் விழுந்து விட்டது. அப்புறம்தான் நாங்க ரெண்டு தட்டுத் தட்டி தூக்கிச் சென்றோம்!'' என்றார் எஸ்.ஐ.

வழக்கறிஞர் ராஜ ராஜன் தனது பெரி யப்பாவின் மருத்துவ மனையில் ஐ.சி.யூனிட் டில் இருந்தார். ""வழக்கறிஞர்னு கூடப் பார்க் காம சுற்றி நின்று அடித்தார்கள். ரொம்ப காயம். அதனால்தான் இங்கே வந்து அட்மிட் ஆனேன்!'' என்றவர் ""இந்த எஸ்.ஐ. ரொம்ப மோசம்... ஏற்கனவே இவர் மேல கேஸ் இருக்கு. இவரை உடனே சஸ்பெண்ட் செய்ய ணும்!'' என்றார். ""எஸ்.ஐ.யை சஸ்பெண்ட் செய் யும் வரை நீதிமன்ற புறக்கணிப்புதான்'' என் கிறது பட்டுக்கோட்டை வழக்கறிஞர் சங்கம்.

எஸ்.ஐ.யும் வழக்கறிஞரும் ஒரே சாதி தான். என்றாலும் வேறு வேறு குலம். அதனால்தான் இவர்கள் பிரச்சினை உள்சாதி மோதலாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

சிறையிலும் நல்லவங்க - விடுதலையான புஷ்பவள்ளி பாட்டி!

திருச்சி பெண் கள் சிறையில் இருந்து வெளி யில் வந்த புஷ்பவள்ளி பாட்டியின் கண்களில் கண்ணீர்த்திரை.

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, இந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்ட 13 கைதிகளில், 80 வயதுப் பாட்டி புஷ்பவள்ளியும் ஒருவர்.

""எப்படிக் கூட்டிக்கழிச்சுப் பார்த் தாலும் இன்னும் 10 வருஷத்தை நான் ஜெயில்லதான் கழிக்கணும். அது வரைக்குமா என் உடம்புல உசுரு இருக்கப் போகுது? ஜெயில்லதான் எனக்குச் சாவுனு திடமா நம்புனேன். புண்ணியவான் கலைஞர் அய்யா உத்தரவு போட்டு என்னை விடுதலை செஞ்சுட்டாங்க. என் பேரன் பேத்தி மக்க முன்னால சாகிற குடுப்பினை எனக்கு கெடைச்சிருக்கு... அறிஞர் அண்ணா பேரைச் சொல்லி என்னை விடுதலை செய்யச் சொன்ன கலைஞர் அய்யாவுக்கு என்னோட நன்றியைச் சொல்லுங்கய்யா!'' மகிழ்ச்சியில் தழுதழுத் தார் பாட்டி.

விடுதலையான பாட்டியின் மடியில், 8000 ரூபாய் இருந்தது. ""கடைசிக் காலத்தில எனக்கு உதவியா இருக்கும்னு கலெக்டரய்யா சவுண் டையா 3000 தந்தார். சிறை மீண்டோர் மறு வாழ்வு சங்க பொருளாளர் கோவிந்த ராஜய்யா 5000 தந்தார். நான் வெளியே வந்தது... வீட்டுக்குப் போகப் போறது... எல்லாமே ஒரு கனவு மாதிரி நிறைவேறுது...!'' கண்களைத் துடைத்துக் கொண்டார்.

தனிக்குடித்தனம் போக விரும்பிய மருமகள் கவிதாவின் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொன்ற வழக்கில், 1998-ல் கைதாகி, 15 நாளில் ஜாமீனில் வெளியே வந்தார் பாட்டி. 2000-ஆம் ஆண்டில், நாகை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மீண்டும் சிறை வாசம். உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்கள். ஜாமீனில் வந்தார் பாட்டி. 3.10.2005-ல் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் புஷ்பவள்ளி பாட்டி.

""உங்க சிறை அனுபவங்களைப் பற்றி சொல்லுங்க பாட்டி!''.

""குடும்பத்தினரோடு வீட்டில இல்லைங்கிறது தவிர வேற குறையொண்ணுமில்லை. ஜெயில்ல ரொம்ப வயசானவ நான்தான். எல்லாக் கைதிகளும் "செல்லப் பாட்டியா' கவனிச்சுக்கிட்டாங்க. சாப்பாடு கூட வேளா வேளைக்கு டான்னு நான் இருக்கிற இடத்துக்கே வந்துடும். அதான் சொல்றன்ல... வீட்ல கூட இவ்வளவு சிறப்பா கவனிக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு கவனிச்சிக்கிட்டாங்க. சிறையிலயும் ரொம்ப ரொம்ப நல்ல மனுஷங்க எல்லாம் கைதிகளா இருக்காங்க. தம்பி... இங்க கைத்தொழில்களெல்லாம் கத்துக் கொடுக்கிறாங்க. என்னாலதான் முழுசா எதையும் கத்துக் கொள்ள முடியலை!'' -சிரித்துக் கொண்டார் பாட்டி.

""பாட்டி... நீங்க எந்த ஊர்னு சொல்லலையே!''.

""நாகப்பட்டினம்... என் புருஷன் தங்கராஜ். 5 பையன் கள் ஒரு பொண்ணு. எல்லாருக்கும் கூலி வேலைதான். என் வாழ்க்கையில இப்படியொரு களங்கம்... ம்... என் பேரனுக்கு சொல்லி விட்டிருக்கோம். இப்ப வந்திடுவான்... அதோ...!'' விடைபெற்ற பாட்டி வீட்டுக்குக் கிளம்பினார்.

சிறுமிகள் நரபலி?

பட்டாம் பூச்சியாய் சிற கடித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளின் மர்ம மரணத்தால் திகைத்து நிற்கிறது சேலம்.

சேலம் ஜாரிகொண்டலாம் பட்டியில், வழக்கமாக ரசாயன மற் றும் சாயப்பட்டறைக் கழிவுகளோடு ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடை வாய்க்காலில் ஒரு சிறுமியின் சடலம் மிதந்து வந்தது. தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. பிறப்புறுப்பில் சூட்டுக்காயம். கை, கால், முட்டிகளில் வெட் டுக்காயம். நிர்வாணமாக மிதந்து வந்த அந்தச் சிறுமிக்கு 5 வயதிருக்கும்... அங்கே ஒதுங்கிய அந்தச் சிறுமியின் சட லத்தை பார்த்த லட்சுமி பாட்டி பெருங்குரலில் அலறினார். ""அய்யோ... காயத்ரி எங்களை விட்டுட்டு போயிட்டியேடி... ஒண்ணை இந்த ஆக்கினை பண்ணுன பாவி யாருடீ...?''.

செய்தி தெரிந்து ஓடி வந்தார் காயத்ரியின் தந்தை நாகராஜ். ""நான் சாதாரண தறி ஓட்டுற கூலிங்க. டி.பி. வியாதியில கிடந்த என் சம்சாரம் 20 நாள் முன்னாடிதான் எங்களையெல்லாம் விட்டுட்டு ஒரேயடியா போய்ச் சேர்ந்தாள். நான் பெத்த செல்வம் இப்ப சாக்கடையில பொணமா ஒதுங்கிக் கெடக்கிறாள். 5 நாள் முன்னாடி வீட்டு வாசல்ல விளையாடிட்டு இருந்த காயத்ரியை திடீர்னு காணலை. எங்கெங்கேயோ தேடினோம். போலீஸ்லயும் புகார் கொடுத்தோம்... இப்படி பிணமாப் பார்ப்பேன்னு நெனைக்கலியே!'' தேம்பினார்.

காயத்ரியின் வீட்டருகே வசிப்பவர்களோ ""இது நிச்சயமா மந்திரவாதிங்க வேலைதான்... நரபலி கொடுத்துட்டானுங்க!'' என்று ஆளாளுக்கு பயமூட்டினர்.

அடுத்த ஆறாம் நாளில்... ஓமலூர் குப்பாண்டியூரில், ஒரு கிணற்றில் மிதந்தது 9 வயது சிறுமி வனிதாவின் சடலம்.

வனிதாவின் வலது கண்ணைக் காணவில்லை. காது, உதடு, கழுத்தில் காயங்கள்... வனிதா வின் தாய் சுமதியின் கதறல் குப்பாண்டி யூரையே கண்ணீரில் மிதக்க விட்டது.

""ரெண்டு மாசமா குரூப் குரூப்பா புள்ளை புடிக்கிறவனுங்க சுத்திட்டு நிக்கிறானுங்க. போன வாரம்... யாரோ முகம் தெரியாதவன் எங்க பக்கத்து வீட்டுக்காரர் குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து கொஞ்சுனதைப் பார்த்து ரெண்டு போட்டு விரட்டினோம்.

ஏதோ ஒரு குரூப்தான் குழந்தைகளை கடத்தி நரபலி கொடுக்குது... இந்தக் குழந் தையை அப்படித்தான் நரபலி கொடுத்திருக் கானுங்க. போலீஸ்தான் விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்!'' என்கிறார்கள் ஓமலூர் குப்பாண்டியூர் வாசிகள்.

ஆனால் ஓமலூர் காவல்துறையோ ""கிணற்று மீன்கள் கடித்துதான் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. தீயணைப்புத்துறை, குழந்தையை மேலே கொண்டு வரப் பயன்படுத்திய பாதாள கரண்டி பட்டுத்தான் கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது!'' என்கிறது.

போலீசார் சொல்வதை ஏற்பதற்கு, இந்தக் குழந்தைகளின் பெற்றோரோ, ஏரியா மக்களோ தயாராக இல்லை.

ஏவல் பிசாசான யட்சையை வசப் படுத்துவதற்காக சிறுமிகளை நரபலி கொடுத்துவிட்டு, சாக்கடை, வாய்க்கால், கிணறு போன்ற நீர் நிலைகளில் தூக்கிப் போடுகிறார்கள். இவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்பதே ஏரியா மக்களின் பயம் கலந்த கோரிக்கை.

மீண்டும் மோதல்! தி.மு.க டென்ஷன்!
""எந்தலைவனுக்கு கிடைத்த வரவேற்பை பாத்தியா?'' முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள குமரி மாவட்டம் வந்த கலைஞரை, வழி நெடுகிலும் மக்கள் திரண்டு நின்று வரவேற்ற காட்சியைப் பார்த்து பூரித்துப் போன "வட்டம்' துரை மணி ""இதே கலைஞரை'' என இழுத்து பெருமூச்சு விட்டு இமை களை மூட... அம்முதியவரின் கண்களிலிருந்து கசிந்தது கண்ணீர்-

""நேசமணி நாடார் இறந்து நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதிக்கு 1969 ஜனவரி 8-ல் இடைத்தேர்தல் வருகிறது. காங்கிரஸ் வேட்பாளராக பெருந்தலை வர் காமராஜர். தி.மு.க. கூட்டணியின் சுதந்திரா கட்சி வேட்பாளராக டாக்டர் மத்தியாஸ். காங்கிரஸின் கோட்டையாகத் திகழ்ந்த கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிரச்சாரம் செய்ய வருகிறார்கள், அப்போது பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞரும், விவசாயத்துறை அமைச்சரான சி.பா.ஆதித்தனாரும். விருதுநகரில் காமராஜரைத் தோற்கடித்ததால் கடுங்கோபத்தில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள், கலைஞர் தங்கியிருந்த நாகர்கோவில் பயணியர் விடுதிக்கே சென்று அவர் கார் மீது கல்லெறிந்தார்கள். சாணிக் கரைசலை ஊற்ற ஆயத்தமாக இருந்தார்கள். ஆனாலும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு சில இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு திருச்சி சென்றார் கலைஞர். அங்கே நாகர்கோவில் இடைத்தேர்தல் குறித்து பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் கேள்வி கேட்க, "கட்டாந்தரையில் விதைத்திருக்கிறோம்' என ஒரே வரியில் பளிச்சென்று நிலவரத்தைச் சொன்னார்.

அன்று கட்டாந்தரையில் கலைஞர் விதைத்ததுதான், இன்று இதே குமரி மாவட்டத்தில் தி.மு.க.வுக்கென்று ஒரு எம்.பி., ஒரு அமைச்சர், 2 எம்.எல்.ஏ.க்கள், மேலும் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள், கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் என மாவட்டம் பூராவும் தி.மு.க.வை செழித்து வளர்த்திருக்கிறது. இன்று இம்மாவட்டம் முப்பெரும் விழா காண்கிறது.''

""ஆனாலும்...'' கட்சி விசுவாசத்தால் துரைமணி சொல்ல தயங்க...

"தென் மண்டல அமைப்புச் செயலாளரான நானல்லவா முப்பெரும் விழாவை முன்னின்று நடத்த வேண்டும்? எனக்கெதிராக அமைச்சர் சுரேஷ் ராஜன் போன்றவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள்?' என மு.க.அழகிரி ஆதங்கப்பட, விழாவுக்கு அவர் வராதது ஒரு பேச்சாகிவிட்டது என்றனர் உ.பி.க்கள். அவரது அடியொற்றி மதுரை தி.மு.க.வும் ஊருக்குள்ளேயே தன்னை முடக்கிக் கொண்டது.

"பகுத்தறிவு ஏர்பூட்டி பெரியார் உழுது, அண்ணா விதைத்து, கலைஞர் வளர்த்த திராவிட இயக்கமல்லவா?' முதல்நாள் இரவே கலைஞர் வந்துவிட, கட்சிப் பணியோடு, குமரிமாவட்ட மக்கள் பணியிலும் மு.க.ஸ்டாலின் சுறுசுறுவென இறங்க... உற்சாகப் பெருக் கோடு களை கட்டியது முப்பெரும் விழா.

மறுநாளும் சாலையின் இருபுறமும் நெடுநேரம் காத்திருந்து ஆவலுடன் கலைஞரை வரவேற்றார்கள் மக்கள். அவரும் நெகிழ்ச்சி யுடன் புன்னகைத்து, கையசைத்து பதில் மரியாதை செய்தவாறே விழா மேடைக்கு வந்தார்.

முப்பெரும் விழா திடலிலும் "அழகிரிக்கு அப்படி என்ன கோபம்?' என்பதை விவாதப் பொருளாக்கிக் கொண்டிருந்தார்கள் அவரது ஆதரவாளர்கள் ஓரிருவர். ""தென்மாவட்டத்தில் முப்பெரும் விழா எங்கே நடத்துறதுன்னு அண்ணனைக் கேட்டுல்ல முடிவு பண்ணிருக்கணும். தளபதி மூலம் சுரேஷ்ராஜன்ல காய் நகர்த்தி காரியம் சாதிச்சுட்டாரு. அழைப்பிதழிலும் விளம்பரங்களிலும் அண்ணனுக்கு முக்கியத்துவம் தரல. அத விடு, நேர்ல போயி அழைக்காததும் முறையில்லியே. எல்லாமே தளபதி கண்ணசைவுலதான் நடக்கு. அப்புறம் அண்ணனுக்கு என்ன மரியாதை? அவர் எப்படி விழாவுக்கு வருவாரு?'' என்றார்கள் அங்கலாய்ப்புடன்.

சுரேஷ்ராஜன் தரப்பிலோ, ""மதுரைக்கு நேர்ல போயி அழைக்கணும்னு எதிர்பார்க்கிறாரு. இங்கயிருந்து மதுரை போயிட்டு வர்றதுன்னா ஒருநாள் வீணாயிரும். இங்க தலைவர் வர்றாரு, தளபதி வர்றாரு, விழா வேலையவும் பொறுப்பா கவனிக்கணும். எங்கே நேரம் இருக்கு? எம்புட்டு கஷ்டப்பட்டு இந்த மண்ணுல கட்சிய வளர்த்தாரு கலைஞர். அதச் சிந்திச்சுப் பார்க்க வேணாமா?'' என்கிறார்கள்.

முப்பெரும் விழா நடந்த செப்டம்பர் 20-ந் தேதி மதியம் 1.30 மணி ஃப்ளைட்டில் மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்ப சூட்கேசுடன் ரெடியாகிவிட்டார் அழகிரி. மதுரை மாவட்டத்திலயிருந்து அமைச்சர் தமிழரசி மட்டும் விழாவுக்காக நாகர் கோவிலுக்கு சென்றிருக்க, அழகிரியுடன் இருந்த மற்ற நிர்வாகிகளில் சிலர், ""தலைவர் நேற்றிரவே குமரி மாவட்டத்துக்கு வந்துட்டாரு. நாம விழாவுக்குப் போறதுதான் சரியா இருக்கும். கிளம்பலாமாண்ணே'' என்று கேட்க, இன்னும் சிலரோ, ""நாம ஏன் அழையா விருந்தாளியா போகணும்?'' என எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். ஒரு சிலர், ""நாங்க விழாவுக்கு போலாமாண் ணே'' என்று கேட்க, ""அது உங்க விருப்பம்'' என்று சொன்ன அழகிரி, ""நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன்'' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

அழகிரியின் முடிவு, தி.மு.க தொண்டர்களிடம் டென்ஷனை உண்டாக்கியுள்ளது. ""சிறப்பா நடந்துக் கிட்டிருக்கிற விழாவில், அழகிரி-ஸ்டாலின் மோதல்ங்கிற விஷயம்தான் முக்கியத்துவம் பெறும். இதைத்தான் எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்குது. ஆளுங்கட்சி மேலே எந்தக் குறையும் சொல்ல முடியல. நலத்திட்டங்களால் மக்கள் ஆதரவும் ஆளுந்தரப்பின் பக்கம்தான் இருக்குது. கழகத்திற்குள் ஏதாவது கலகம் நடந்தால்தான் நல்லதுன்னு நினைக்கிற எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்புக்கு நம்ம கட்சியிலே இருப் பவங்களே காரணமாகலாமா? 2000த்தில் நடந்த முப்பெரும் விழாவை யும் இப்படித்தான் அழகிரி புறக்கணிச்சாரு. அப்ப தன் மகன் என்று கூட பாராமல் கட்சியிலிருந்து நீக்கினாரு. இப்ப என்ன நிலைமைகள் ஏற்படப் போகுதோ'' என கவலையை வெளிப்படுத்தினார்கள் உ.பி.க்கள்.

அந்தக் கவலையெல்லாம் நிகழ்ச்சி தொடங்கியதும் போன இடம் தெரியவில்லை. முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கி குமரி மாவட்டத்தினர் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிவிட்டு பேச்சைத் தொடங்கினார் கலைஞர். ""பெரியார் இடத்தில், அண்ணா இடத்தில் இந்த சாதாரண கருணாநிதியை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். என் உயரம் என் காலிலிருந்து தலை வரை அல்ல. உங்க உள்ளத்திலிருந்துதான் என் உயரம் அளக்கப்படும். என்னை எதிர்த்தவர்கள் நெஞ்சில் குத்தியிருக்கிறார்கள். முதுகில் குத்தியிருக்கிறார்கள். பக்கத்தில் தூங்கும் போது குத்திக்கொல்ல பார்த்திருக்கிறார்கள். அதிலிருந்தெல்லாம் தப்பித்தவன் தான் இந்த கருணாநிதி. என் பிள்ளைகளுக்காக, என் பேரன்களுக்காக என் குடும்பத்திற்காக நான் இல்லை. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. 86 வயதில் பிள்ளையா என்று கேட்கலாம்... 90 வயதானாலும் 100 வயது வரை நான் வாழ்ந்தாலும் உங்கள் வீட்டுப் பிள்ளை தான்'' என்று சொன்னபோது, "அதையும் தாண்டி வாழ்வீங்க தலைவா' என்ற குரல் கூட்டத்திலிருந்து உரக்கக் கேட்டது.

""திராவிட இயக்கத்தின் பணி இந்த மக்களுக்கு கிடைக்கத்தான் இந்தக் கட்சி பாடுபடுகிறது. திராவிடர் என்ற உணர்வை இங்கு உள்ள எல்லோரும் பெற்றுவிட் டோம் என்ற உணர்வுதான் எனக்கு அளிக்கும் பெரிய பரிசு. என்று காலைத் தொட்டு கும்பிட்டுக் கேட்கிறேன். காஷ்மீர் பிரச்சினையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறோம். அயோத்தி பிரச்சினை தீர்ப்பில் என்ன நடக்குமோ என்ற கவலை உருவாகிறது. வன்முறையைத் தவிர்த்து வாழ்விலே வளம் சேர்க்க உங்களை அர்ப்பணிக்க வேண்டும்'' என்றவர், ""இதற்கு உறுதுணையாக இருப்பீர்களா'' என்று கேட்க, "இருப்போம்.. இருப்போம்..' என்ற குரல்கள் கடல் அலைபோல ஒலித்தன.
* நாகர்கோவிலில் முப்பெரும் விழாவை நடத்தி வரவேற்புரையாற்றியவர் மாவட்ட தி.மு.க செயலாளரும் அமைச்சருமான சுரேஷ்ராஜன். பெண்கள், குழந்தைகள் என்று கலைஞர் வரும் வழியெல்லாம் மக்கள் நின்றதும், கூட்டத்திற்கு வந்தி ருந்ததும் அவரது முயற்சிக்கான வெற்றியைக் காட்டியது.


* மேடைக்கு சக்கர நாற் காலியில் கலைஞர் வந்தபோது, பார்வையாளர் வரிசையிலிருந்த ஒரு பெண்மணி எழுந்து நின்று கும்பிட்டுக் கொண்டே இருந்தார். பின்னால் இருந்தவர்கள் மறைக்கிறது என்ற போதும், தொண்டர் படையினர் உட்காரச்சொன்னபோதும் அவர் கும் பிட்டபடியே இருந்தார். என்ன காரணம் என்று நாம் அவரிடம் விசாரித்தோம். மதுரையில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றும் கவிதாராணி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், ""கலைஞரைப் பார்க் கும்போது பரவசத்தால் சிலிர்க்கிறது. அந்த உணர்வுதான் என்னைக் கும்பிட வைக்கிறது. எந்த சோதனைக்கும் கலங்காத உள்ளத் தையும் அயராத உழைப்பையும் அவரிடம் கற்றுக்கொண்டு, ஒவ் வொரு தமிழனும் தனதாக்கிக் கொண்டால் வெற்றி நிச்சயம். கலைஞரை நான் தமிழன்னையாகப் பார்க்கிறேன்'' என்றார்.


* மாணவ-மாணவியருக்கு பரிசு, ஆட்டோ ஓட்டுநருக்குப் பரிசு ஆகியவற்றுக்குப்பின் அமைச்சர் வீரபாண்டி ஆறு முகத்ததுக்கு பெரியார் விருது. முன்னாள் எம்.பி. செ.குப்புசாமிக்கு அண்ணா விருது, மகளிரணி ராஜம் ஜானுக்கு பாவேந்தர் விருது, ஜி.எம்.ஷாவுக்கு கலைஞர் விருது ஆகியவை வழங்கப்பட்டன. பரிசு வாங்க வந்த மாணவிகளில் சிலர் தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்த விரும்பி, கலைஞரிடம் தெரிவிக்க அவர்களுக்கு மேடையில் வாய்ப்பளிக்கப்பட்டது. புதிய தலைமுறையின் பேச்சாற்றல் தி.மு.க மேடை வழியாக வெளிப்பட்டது.


* முப்பெரும்விழா விருது பெற்றவர்களின் சார்பில் பேசிய வீரபாண்டி ஆறுமுகம், நாஞ்சிலாரின் பெயரை மறக்காம குறிப்பிட்டதுடன், 1993-ல் கட்சியிலிருந்து சிலர் பிரிந்த நேரத்தில், கொடியும் சின்னமும் யாருக்கு என்ற வழக்கில் தேர்தல் ஆணையம் தீர்ப்பு தரவேண்டிய நாளில், கலைஞர் அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கும் போகாமல் இருந்தார். அவரிடம் நான் பேசியபோது, அண்ணா தந்த கட்சிக்கொடியோ உதயசூரியன் சின்னமோ நம்மைவிட்டுப் போனால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றார் . அத்தகைய கொள்கைப் பற்று உள்ள தலைவர் விரும்பிய படியே கட்சியையும் சின்னத்தையும் மீட்டார் என்று உணர்ச்சிகரமான சம்பவத்தைக் கூறினார்.


* குஷ்பு பேச்சை ஆர்வ மாகத் தொண் டர்கள் கேட்டனர். வடநாட்டில் ஒரு தலைவர் பெரிய கூட்டம் கூட்டி னார். ஆனால் அவர் முகம் கவலை யாகவே இருந்தது. அருகிலிருந்த வர்களோ, உங்களுக்கு 60 மாலைகள் போட்டார்களே அப்புறம் ஏன் கவலையாக இருக்கிறீங்கன்னு கேட்க, என்கிட்டே 90மாலைக்கு காசு வாங்கிட்டாங்க. 60தான் போட்டிருக்காங்க என்றார். அதுபோலத்தான் எதிர்க்கட்சித் தலைவி நடத்தும் கூட்டத்துக்கு ஆள் சேர்க்கி றார்கள். அவர் முகத்தில் சந்தோஷ மில்லை. இங்கே நம் தலைவர் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார் பாருங்கள் என்றபோது, கலைஞரின் முகத்தில் புன்னகை.


* கவிஞர் கனிமொழி எம்.பியின் பேச்சு உணர்ச்சிமயமாக இருந்தது. நான் டெல்லிக்குப் போகும்போதெல் லாம் பார்க்கிறேன். லாலுபிரசாத் யாதவி லிருந்து எல்லாத் தலைவர்களும் என் னிடம், எங்க தலைவர் எப்படி இருக் கிறார் என்று கலைஞரைப் பற்றிக் கேட்பார்கள். அப்படிப் பட்ட தலைவரை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் நள்ளிரவில் கைது செய்து இழுத்துச் சென்றார். சிறைச்சாலை முன்பு கட்டாந்தரையில் உட்கார வைத்தார். இப்போதும் என் கண்களை மூடினால் அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. இப்படிப்பட்ட கொடுங்கோலாட்சி நடத்திய அவர்களை எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்க மாட்டார் கள்'' என்றார் ஆவேசமாக. தொண்டர்கள் அதைக் கேட்ட தும் கண்கலங்கினார்கள்.


* பேராசிரியர் பேசும் போது, திராவிட இயக்க வரலாற்றை இந்த முப்பெரும் விழா விருது பெறுபவர்களின் வரிசையைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். எப்படிப் பட்ட லட்சிய வீரர்கள் இருக்கி றார்கள் என்பது தெரியும்.அந்த வரலாறு தெரியாத சிலபேர், தி.மு.க ஆட்சியை வீழ்த்தப் போவதாகப் பேசுகிறார்களாம். எனக்கு அவர்களைத் தெரியாது. அவர்களின் முகவரியைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஒவ்வொரு வரையும் அவரவர் அளவில் மதிக்கிறேன். ஆனால், கலைஞரோடும் தி.மு.க வோடும் ஒருவரையும் ஒப்பிட முடியாது என்று சொன்னவர், இந்தியாவுக்கே வழிகாட்டும் தலைவராக இருக்கிறார் கலைஞர் என்றார்.


* துணைமுதல்வர் ஸ்டாலின் முதல் நாளே நாகர்கோவிலுக்கு வந்து ஏற்பாடுகளை பார்வையிட்டார். தனது படங்கள் அதிகமாக இருந்ததை எடுக்கச் சொல்லிவிட்டு, பேராசிரியர் படங்களை வைக்கச் சொல்ல, விழா ஏற்பாட்டாளர் கள் உடனடியாக அதைச் செய்தனர். முப்பெரும்விழாவில் நிகழ்ச்சி நிரலை வாசிப்பது, பரிசு பெற்றவர்கள் பற்றிய விவரங்களை அறிவிப்பது, முதல்வருக்கு உறுதுணையாக மைக்கை அட்ஜஸ்ட் பண்ணுவது, தண்ணீர் எடுத்துக் கொடுப்பது என்று ஒரு தொண்டர் போல பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.


* குமரி மாவட்ட அரசியல் வர லாற்றில் 40ஆயிரம் பேருக்கு மேல் திரண்ட பிரம்மாண்ட கூட்டம் இதுதான் என்றனர் பத்திரிகையாளர்களும் அர சியல் பார்வையாளர்களும்

ராமரா? பாபரா?


செப்டம்பர் 24-ந் தேதி இந்தியாவின் ஜனநாயக பன்முகத்தன்மையை காப்பாற்றக்கூடிய அல்லது பாதிக்கக்கூடிய விதத்தில் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு அமையும் என்ற கருத்து அனைவரின் மத்தியிலும் நிலவுகிறது. கடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு அவதாரங்களை எடுத்த இந்த வழக்கு, இப்போது ஒரு உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு பெஞ்ச்சின் தீர்ப்பில் அடுத்த கட்டத்தை அடையவிருக்கிறது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் மற்றொரு தரப்பினர் கண்டிப்பாக உச்சநீதிமன்றத்திற்குச் சென்று மேல்முறையீடு செய்ய இருப்பதால் 60 ஆண்டுகால நீதிமன்றப் போராட்டம் முடிவுக்கு வரப்போவதில்லை. ஆனாலும், இந்தத் தீர்ப்பின் தாக்கம் பலமாக இருக்கும் என்ற அச்சம் ஆளுங்கட்சியிடமும் இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.கவிடமும் இருக்கிறது.

வரும் வெள்ளியன்று வெளிவரும் தீர்ப்பில் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு விடை கிடைக்க இருக்கிறது. ஒன்று, பாபர் மசூதி இருந்த இடத்தின் கீழ்தான் ராமர் பிறந்தாரா என்பது முதல் கேள்வி. இரண்டாவது, பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கே ஒரு கோயில் இருந்ததா, இல்லையா? என்ற கேள்வி. இதில் முதல் கேள்வியானது சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கேள்வி என்பது அடிப்படை அறி வுடைய அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. மத நம்பிக்கை அடிப்படையிலோ அல்லது மத துவேஷத்தின் அடிப்படையிலோ இங்குதான் ராமர் பிறந்தார் என்று வாதிட் டாலும்கூட, அங்குதான் பிறந்தார் என்பதற்கான எந்தவித ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை. கைகேயிக்கு பிள்ளைப் பேறு பார்த்த மருத்துவச்சியைத் தவிர வேறு யாராலும் ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடியாது. கைகேயி யின் மருத்துவச்சி யாரென்று வால்மீகிக்கே தெரிய வில்லை. ஆக, இந்த விஷயத்தில் சட்டரீதியாக நீதிபதிகள் எப்படி முடிவெடுக்கப்போகிறார்கள் என்பது மக்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய விதத்தில் உள்ளது.


இரண்டாவதாக, மசூதி இருந்த இடத்தில் கோயில் இல்லை என்று கூறிவிட்டால், அந்த நிலம் முஸ்லிம் மக்களுக்கே சென்றுவிடும். அவர்கள் அதில் மசூதி கட்டுவது உள்பட என்ன வேண்டு மானாலும் செய்துகொள்ளலாம். ஆனால், கோயில் இருந்தது உண்மை என்றொரு நிலையை நீதி மன்றம் எடுத்தால்கூட, வி.ஹெச்.பியும் ஆர்.எஸ். எஸ்ஸும் அங்கு சென்று நிலத்தை கையகப்படுத் திக்கொள்ள முடியாது. 400 வருட வயதுடைய மசூதியை 1992ஆம் ஆண்டில் இவர்கள் இடித்துத் தள்ளியது அனைவரும் அறிந்ததுதான். இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்ன வென்றால், பல்லாண்டு காலமாக இருக்கக்கூடிய வழிபாட்டுத்தலத்தில் வரலாற்றின் அடிப்படையில், முதல் வழிபாட்டுத் தலத்திற்குரிய மதத்தினர், பின்னால் வந்தவர்களுக்கு அதனைத் தர வேண்டியதில்லை என்பதே சட்ட முன்னுதாரணமாகும்.

1940ஆம் ஆண்டு இன்றைய இந்திய உச்சநீதி மன்றத்தின் முன்னோடியான பிரிவி கவுன்சில் என்றழைக்கப்பட்ட காலனி ஆதிக்க உச்சநீதி பரிபாலன அமைப்பு, லாகூரில் சாகித் கஞ்ச் மசூதி பற்றி அளித்த தீர்ப்புதான் இந்த முக்கிய முன்னுதாரணம். அங்கு 1722 முதல் ஒரு மசூதி இருந்து வந்தது. ஆனால், 1962ஆம் ஆண்டு சீக்கிய ஆட்சியின்கீழ் அந்தக் கட்டிடம் குருத்வாராவாக மாற்றம் பெற்றது. இது எங்களுடைய வழிபாட்டுத் தலம் எங்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என்று பல நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு, 1935ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் ஒரு வழக்கு தொடுத்தனர். பல்வேறு நீதி மன்றங்களைக் கடந்த இந்த வழக்கு 1940-ல் பிரிவி கவுன்சில் முன்னால் வந்தது. அதை முழுமையாக விசாரித்த பிரிவி கவுன்சில் இந்த இடத்தை சீக்கியர்கள் வக்ஃப் வாரியத்தின் நலனுக்கு எதிராக எடுத்திருப்ப தற்கான வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால், எடுத்த 12 வருடங்களுக்குள் இது எந்தவிதமான சட்டமுறை களுக்கும் வராத காரணத்தினால் இந்த நிலத்தின் உரிமை குறித்து, 200 வருடங்கள் கழிந்த நிலையில் விவா திக்க முடியாது. ஆகவே, வரலாற்று ரீதியாக மசூதி யாக இருக்கிறதா அல்லவா என்பதல்ல பிரச்சினை.

எப்படி குடியுரிமை என்பது, இரண்டு தலை முறைகளாக ஒருவர் ஒரு நாட்டில் இருந்துவிட்டால் அவர் அந்த நாட்டின் குடியுரிமைக்குப் பாத்தியதாரர் ஆகிறாரோ அது போலவும், எப்படி நிலச்சுவான்தார் களுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள், அவர்கள் அங்கு இல்லாத நிலையில்- அங்கு வேலை செய்யும் தொழி லாளர்களால் தொடர்ந்து 14 ஆண்டுகள் விவசாயம் செய்யப்பட்டபின்- 3 தலைமுறை கழித்து திரும்பி வரும் நிலச்சுவான்தாரர்களின் வாரிசுகள் அதனை உரிமை கொண்டாட முடியாதோ, அதுதான் வழி பாட்டுத் தலங்களுக்கும் பொருந்தக்கூடிய பொது வான சட்டமாகும். காரணம், வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் அதை சொத்துப் பிரச்சினையாகவும் சொத்தின் வாரிசுதாரர் உரிமைப் பிரச்சினையாகவும் மட்டுமே பார்க்க முடியும் என்று தெளிவாகச் சொல்லியுள்ளது பிரிவி கவுன்சில். ஆக, பாபர் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு இடத்தை 400 ஆண்டு கள் கழித்து உரிமை கொண்டாட வருவதற்கு சொத் துரிமை சட்டத்தின்கீழ் இடமில்லை என்பதே முதல் கருத்து. எனவே அந்த இடம் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி.க்கு செல்லும் வாய்ப்பு குறைவே.

அடுத்ததாக, சொத்து சட்டம் மட்டுமில்லாமல் இந்தியாவில் பொதுநல சட்டமும் உண்டு. சொத்து தகராறில் குற்றம் இழைக்கப்பட்டால் பொதுநல சட்டமும் சொத்து சட்டமும் இணைந்தே பார்க்கப் படவேண்டும் என்பது சட்டவிதி. உதாரணமாக, சொத்துக்கு ஆசைப்பட்டு தன் மூதாதையர் யாரையேனும் ஒருவர் கொன்றுவிட்டால் அவர் வாரிசுதாரராகும் உரிமையை இழந்துவிடுகிறார். பாபர் மசூதி வழக்கைப் பொறுத்தவரையில், மசூதி இடிப்பு என்பது நீதியரசர் ராஜேந்தர் சச்சார் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், ம்ன்ழ்க்ங்ழ் ம்ர்ள்ற் ச்ர்ன்ப் அதாவது, மிக மோசமான திட்டமிட்ட கொலை. இந்த விதத்தில் பார்க்கும்போது, நிலத்தை அபகரிப்பதற்காக அங்கிருந்த வழிபாட்டுத் தலத்தை அழித்த காரணத்தினால் நிலத்தை பெறும் உரிமையை இந்துத்வா அமைப்புகள் இழந்துவிடுகின்றன.

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு சில இஸ்லாமிய அமைப்புகள் இந்துத்வா அமைப்புகளைப் போலவே அனுசரித்து போகக்கூடிய தன்மை யற்றவையாக மாறியது உண்மை. ஆனால், பெரு வாரியான முஸ்லிம்கள் இந்தியாவின் பன்முக அமைப்பினை ஏற்றுக்கொண்டு, தங்களுக்கான அடையாளத்தை இழக்காமல் நம்பிக்கையுடன் இருப்பதை நாம் மறக்கக்கூடாது. 1947ல் மதத்தின் அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்தபோதுகூட, இந்தியா வை விட்டு வெளியேறிய முஸ்லிம்களைவிட இந்தியாவி லேயே தங்கிவிட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 75% அதிகமாகும். இன்று, உலகத்தில் இந்தோனேஷியா வுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இரண்டாவது நாடு இந்தியாவாகும். ஆக, இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு காரணம், பெருவாரியான இந்துக்களின் பரந்த மனப்பான்மை என்ற பொய்முகத்தைத்தாண்டி, இந்த நாட்டின் மீதும் இந்த மக்களின் மீதும் சிறுபான்மையினர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் அடிப்படை காரணம் என்பதை உணரவேண்டும்.

சாதகமான தீர்ப்பு வந்தாலும், பாதகமான தீர்ப்பு வந்தாலும் இதனை எப்படி எதிர்கொள்வது என்ற தெளிவில்லாமலேயே இருக்கிறார்கள் இந்துத்வா தலைவர்கள் என்பது நிதர்சன உண்மை. 1986 முதல் 96 வரையிலிருந்த தீ உமிழும் மொழிகள் இன்று பரிவாரத் தலைவர்களிடமிருந்து வெளிப்படவில்லை. காரணம், அவர்களைப் பொறுத்தவரையில் அயோத் தியா விவகாரம் 80-களின் இறுதியிலும் 90களிலும் இருந்த அளவுக்கு, மக்களைத் திரட்டக்கூடிய ஒரு ஆயுதமாக இப்போது இல்லாமல் போய்விட்டதுதான்.

இதில் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், 1992-ல் மசூதி இடிக்கப்பட்டபோது அதன் செயல்தலைவராய் விளங்கிய அத்வானி இப்போது கட்சிக்குள்ளேயே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். 92-ல் கதாநாயகனான கல்யாண்சிங், எந்தவித அடையாளமும் இல்லாதவ ராக மாறியிருக்கிறார். அவர் செப்டம்பர் 14-ந் தேதி அயோத்தியில் நடத்திய போராட்டத்தில் அவரும் அவரது நிழலும் மட்டுமே கலந்து கொண்டதை டெலிவிஷனைப் பார்த்தவர் களுக்குத் தெரியும். இன்னும் ஒரு தள்ளு தள்ளுவோம் என்று கோஷம் எழுப்பிய சாத்வி ரிதம்பரா இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தனியாக இருக்கிறார். உமாபாரதியும் பஜ்ரங்தள் நிறுவனரான வினய் கட்டியாரும் தங்களுடைய ஆகிருதி மிகச் சுருங்கி, கட்சியில் மீண்டும் தங்களுக்கு ஒரு இடம் கிடைக்காதா என்ற ஆவலில் அலையும் நிலையில் இருக்கி றார்கள்.

அடுத்ததாக, 92-ல் பாபர் மசூதி இடித்தபிறகு ஒரு புதிய தலைமுறை யையே இந்த நாடு கண்டுவிட்டது. இந்தத் தலைமுறையினர் தாராள மயமாக்கல், தொழில்நுட்பத்தின் பரவல், உலகமயமாக்கல் ஆகியவற்றின் கவர்ச்சியில் இந்துத்வாவை விட்டு வெளியேற ஆரம் பித்துவிட்டனர் என்ற உண்மையை யும் நாம் மறுக்க முடியாது. 1991-க்கு முன்பிருந்த வணிகம் சார்ந்த வியாபாரிகளும் தொழிலதி பர்களும் காங்கிரசின் இடதுசாரித்தன்மைக்கு எதிரான நிலையை பா.ஜ.க எடுத்து, தங்கள் நலனைப் பாதுகாக்கும் என அதற்கு பணமளித்து வந்தது உண்மை. ஆனால், தாராளமயமாக்கலின் தந்தையான மன்மோகன்சிங்கே பிரதமராக இருக்கும் ஆட்சி, தங்களுடைய நலனை மிக அதிகம் பாதுகாக்கும் என்று முடிவெடுத்திருக்கிற காரணத்தினால் தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கடந்த 7 ஆண்டுகளில் குறைந்திருப்பதை கண் கூடாக காணமுடிகிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது 1980-களின் இறுதியில் இருந்த தீவிர இந்துத்வா வெறியை, அயோத்தி தொடர்பான தீர்ப்புக்கு பிறகு இந்துத்வா அமைப்புகளால் தூண்ட முடியாது என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது

இந்தியா மூன்றாவது சக்திவாய்ந்த நாடு : அமெரிக்க ஆய்வறிக்கை


அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து உலகின் அதிக சக்திவாய்ந்த நாடாக இந்தியா இருக்கிறது என அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

'குளோபல் கவர்னன்ஸ் 2025' என்ற பெயரில் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் குறித்த ஆய்வறிக்கையை, அமெரிக்காவின் நேஷனல் இன்டெலிஜன்ட்ஸ் கவுன்சில் மற்றும் ஐரோப்ப்பிய யூனியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் செக்யூரிட்டி ஸ்டடிஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ளன.

2010-ல் 22 சதவீத சர்வதேச அதிகாரத்துடன், அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, 16 சதவீத உலக அதிகாரத்தை சீனாவும் ஐரோப்பிய யூனியனும் கொண்டுள்ளன; இந்தியா 8 சதவீத்தை பெற்றுள்ளது. அடுத்தாக, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் 5 சதவீத அதிகாரத்தைப் பெற்றுள்ளன.

2025-ல் தற்போதைய தரநிலைப் பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லாமல் இருந்தாலும், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிகாரம் சரிந்துவிடும்.

அதேவேளையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் அதிகாரம் குறிப்பிடத்தக்க வகையில் உயரும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-ல் அமெரிக்கா 18 சதவீத சர்வதேச அதிகாரத்துடனும், சீனா 16 சதவீத அதிகாரத்துடனும் இருக்கும்; ஐரோப்பிய யூனியனிடம் 14 சதவீத அதிகாரம் இருக்கும்; இந்தியா 10 சதவீத அதிகாரத்தைக் கொண்டிருக்கும் என அந்த ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் காலநிலை மாற்றம், எல்லை பிரச்னை, புதிய தொழில்நுட்பம் மற்றும் இயற்கை ஆதாரத்தை மேலாண்மை செய்தல் போன்ற விவகாரங்களில் சர்வதேச அளவில் பிரச்னைகள் வலுவாக வாய்ப்புள்ளது என்றும் ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

சீக்கிரம்ன்னா எப்ப?


'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து 'நண்பேன்டா!' என்று கலக்கி எடுத்த ஆர்யாவிடம் பேசினோம்!

''பாலாவின் 'அவன் இவன்' டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பதைப்போல் வேறு டைரக்டர்கள் படத்திலும் நடிப்பீர் களா?''

''நான் ஆரம்பத்தில் நடித்த 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்' ஆகியவை டபுள் ஹீரோ மேட்டர்தானே! அவ்வளவு ஏன்... தெலுங்கில் வில்லனாகக்கூட நடித்து இருக்கிறேன். நல்ல கதை ப்ளஸ் இரண்டு ஹீரோக்களுக்குமே செம வேலை இருந்தால், நிச்சயம் நடிப்பேன்.''

''உண்மையைச் சொல்லுங்கள்... 'பாஸ் (எ) பாஸ்கரன்' படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தபோது பிரபுதேவா, நயன்தாராவை டிஸ்டர்ப்செய்தாரா?''

''எத்தனை மணிக்கு ஷ¨ட்டிங், எவ்வளவு நேரம் ஸ்பாட்டில் இருக்க வேண்டும் என்று முதல் நாளே கேட்டுத் தெளிவாகத் தெரிந்துகொள்வார், நயன்தாரா. மறு நாள் சொன்ன நேரத்துக்கு கரெக்ட்டாக ஸ்பாட்டில் இருப்பார். அவர் நடிக்க வேண்டிய ஸீன்கள் முடிந்தவுடன், பறந்துவிடுவார்... நமக்கு அவ்வளவுதான் தெரியும், பாஸ்!'' சிரித்தார் ஆர்யா.சென்னை சத்யம் தியேட்டரில் 'எந்திரன்' டிரெய்லர் வெளியானதும், தியேட்டர் வாசலில் இருந்த தனது காரில் சூப்பர் ஸ்டார் மின்னலாக ஏற... அப்போது வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் கௌரவத் தலைவர் குருசீனிவாசன் பாசத்தோடு ஓடி வந்து, ''எப்ப தலைவா எங்களுக்கு விருந்து தரப்போறீங்க?'' என்று ஆசையோடு கேட்டார். அவரையே சில நிமிடம் வெறித்துப் பார்த்த ரஜினி, ''சீக்கிரமா... சீக்கிரமா!'' என்று படபடத்தபடி காரில் ஏறிப் பறந்தார்.

முதன் முதலாக பின்னணி இசைக்கான தேசிய விருது இசைஞானியிடம் பெரிய சலனம் எதையும் உண்டாக்கவில்லை. ''இப்போது உள்ள இசை... அழகான இசை மகளை... மொட்டை அடித்து, புருவத்தையும் மழித்த கதையாகிவிட்டது. இப்படி ஒரு நிலைமை வரும் என்று முன்னாடியே தெரிந்தால், சென்னைக்கே வந்திருக்க மாட்டேன். பாடலுக்கான இசை விருது கிடைத்தால் மகிழ்வேன். பின்னணி இசைக்கான விருது பெறுவதில் பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை. ஏனென்றால், அந்த உழைப்பில் பலருடைய பங்கு இருக்கிறது!'' என்கிறார் ராஜா!

இசையின் மாப்பு ஒரு படத்தை இயக்கும் அளவுக்கு பரபரப்பாக இருந்தார். இடையில், அவருக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று லவட்டிக்கொண்டதாம். கேட்கப் போனபோது, ரியல் எஸ்டேட் பின்னால் கரை வேட்டிகள் கைகோத்து நின்றனவாம். நொந்துபோனவர் இப்போது புழுதி பாய்ந்த செருப்போடு பாவமாக அலைந்து திரிகிறார்!

கலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெயலலிதா ஏன் சிரிக்காமல் இருந்தார்:


திமுக முப்பெரும் விழா இன்று மாலை 6 மணிக்கு நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் தொடங்கியது. இந்த விழாவில் திமுக தலைவர், முதலமைச்சர் கருணாநிதி தலைமையேற்றார்.


மத்திய, மாநில அமைச்சர்கள்,எம்.பிக்கள், சட்டமன்ற உருப்பினர்கள் இவ்விழாவில்பங்கேற்றனர்.

திமுகவின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு இவ்விழாவில் பேசினார்.


அவர், ‘’திமுகவின் முப்பெரும் விழா. இது திமுகவினருக்கு தீபாவளி;பொங்கல் விழா.
நாகர்கோயில்…இந்த மண்ணுக்கும் எனக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உண்டு. 20 வருடங்களுக்கு முன்பு வடமாநிலத்தில் இருந்து வருசம்-16 படத்தில் நடித்த படம் இந்த மண்ணில் பெரிய அளிவில் வரவேற்பை பெற்றது.

அதனால்தான் நான் தமிழ்நாட்டின் மருமகள் ஆகி, திமுகவின் உறுப்பினர் ஆகி இன்று அதே மண்ணில் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்.


இங்கே கூடியிருக்கும் தொண்டர்களைப்பார்த்து நம் தலைவர் கலைஞர் மகிழ்ச்சி கொள்கிறார். அந்த மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.


ஆனால் எதிர்க்கட்சி தலைவர், சமீபத்தில் திருச்சியில் மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில் அவர் சிரிக்கவேயில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன்.


வடஇந்தியாவில் ஒரு தலைவர் கட்சி கூட்டம் நடத்தினார். தொண்டர்கள் அவருக்கு 60 மாலைகள் போட்டார்கள். அப்போது அந்த தலைவர் கடு கடுவென்று இருந்தார். ஒருவர் அவரிடம், என்ன தலைவரே..60 மாலைகள் போட்டிருக்கிறோம்.அப்படியிருந்தும் இப்படிகோபமாக இருக்கிறீர்களே என்று கேட்டாராம். அதற்கு அந்த தலைவர், அடப்போய்யா, நேற்று 90 மாலைகளுக்கு காசு வாங்கினார்கள்;இன்று 60 மாலைகள் தான் போட்டிருக்கிறார்கள் என்று கோபத்துக்கான காரணம் சொன்னாராம்.அப்போதுதான் புரிந்தது. காசு வாங்கிட்டு சரியா கூட்டத்தை கூட்டலேன்னா கோபம் வராதா என்ன? ஆனால் இங்கே கூடியிருக்கும் கூட்டம் காசுக்காக கூடிய கூட்டமல்ல. கொள்கைக்காக கூடிய கூட்டம்.


இது பிரியாணிக்காக கூடிய கூட்டம் கிடையாது; தலைவரின் அன்புக்காக கூடிய கூட்டம்.

தலைவர் எப்போதும் அடுத்த தேர்தல் பற்றி சிந்திப்பதில்லை. அடுத்த தலைமுறை பற்றியே சிந்திக்கிறார்.இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு கலவரங்களால் மக்கள் அவதிப்படுகிறார்கள். தமிழகம் மட்டும்தான் சொர்க்க பூமியாக இருக்கிறது. அதற்கு காரணம் நம் தலைவர் ஆட்சிதான்.திருச்சி கூட்டம் முடிந்து தலைவர் பிளைட்டில் வந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி வரவிலை. வழியெங்கும் தொண்டர்களை பார்த்து வர காரில் வந்தார். ஆனால் எதிர்கட்சி தலைவரோ தொண்டர்களை பற்றியெல்லாம் கவலைபடுவதில்லை. பிளைட்டிலேயே வந்து பிளைட்டிலேயே சென்றுவிட்டார்.எதிர்க்கட்சியின் தலைவர் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். தொண்டர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். நான் கேட்கிறேன்….ஒரு கட்சியின் தலைவர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம்.அந்த சமயத்தில் ஒரு பெண்மணி அந்த தலைவரிடம் வந்து, நான் ஒவ்வொரு கூட்டத்திலும் கோஷம் போடுவேன் என்று சொல்கிறார். ஒரு கட்சி தொண்டர் இப்படி சொல்லும்போது கட்சியின் தலைமை என்ன செய்யவேண்டும். அப்படியா, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்;என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று விசாரிக்க வேண்டும்.

அது தலைமைக்கு அழகு. ஆனால் அவர் என்ன செய்தார்? நான் இதுவரை உங்களை கோஷம் போட்டு பார்க்கவில்லையே என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.தொண்டர்கள் கோஷம் போடுவதை அவர் ரசிக்கிறார்;மகிழ்கிறார். அவர் தொண்டர்களை சர்க்கஸ்காரர்களை போல் நடத்துவதால்தான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் நமது கட்சியில் வந்து இணைகிறார்கள்.கூட்டணி..கூட்டணி.. என்கிறார்கள்..எங்கள் தளபதி, அஞ்சாநெஞ்சன் இருக்கும் வரை அந்த கூட்டணி எல்லாம் தூள் தூளாகிவிடும்.எதிர்க்கட்சி தலைவர் நம் தலைவரை தீய சக்தி என்று சொல்கிறார். நம் தலைவர் தீய சக்தி அல்ல; தூய சக்தி-ஊக்க சக்தி, ஆக்க சக்தி’’ என்று பேசினார்.

பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள் யாழ்ப்பாணத்தில் பெருகும் ’ரெடிமெட்’ காதல்களின் பெறுபேறா?

முதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத் தொடங்கிய கிராமத்தின் வீதிகளில் இன்னமும் மனித நடமாட்டம் தொடங்கவில்லை. எங்கும் அமைதி போர்த்தப்பட்டி ருந்தது. அந்த அமைதி வெகு நேரம் நீடிக்கவில்லை. வீதியோரமாய் தேங்கிநின்ற வெள்ள நீரைவிலக்கியவாறு வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவரின் காதில் திடீரென எழுந்த முனகல் ஒலி விழுந்தது.வீதியில் யாருமில்லை. வீடுகளும் திறந்திருக்கவில்லை. எங்கிருந்து அந்த முனகல் சத்தம் வருகின்றதென அவருக்கு ஒரே குழப்பம். சுற்றும் முற்றும் துழாவிப் பார்த்த போதுதான் ஒரு சாக்குப்பை அவரின் கண்ணில் பட்டது. அதிலிருந்தே பூனைக்குட்டியின் மெலிதான குரல் போல ஒலி வந்துகொண்டிருந்தது. அவருக்கு எரிச்சலாக வந்தது.

""வேற இடம் இல்லையெண்டு பூனைக்குட்டிகளை எங்கட றோட்டில போட்டிருக்கிறாங்கள்'' என்று சற்று உரத்து சொல்லியவாறே அகன்றார். அவருடைய வார்த்தைகள் வீட்டின் வாசலுக்கு வந்துகொண்டிருந்த பெண்ணொருவரின் காதுகளிலும் விழுந்தது. மெதுவாக எட்டிப்பார்த்தார். தூரத்தே சாக்கு மூடை ஒன்று அசைந்து கொண்டி ருந்தது. அது பூனைக்குட்டியாய் இருக்க முடியாது என்று அவருக்கு சந்தேகம் தோன்றியது. சந்தேகம் வலுக்கவே என்னவோ ஏதோவோ என்று பதறியவாறு ஓடிச்சென்று பார்த்தார். உதிரமும் கண்ணீரும் மழைநீரும் சேர்ந்து சாக்குமுழுதையும் ஈரமாக்கியிருந்தன. ஆனாலும் துளிகூட நெஞ்சில் ஈரமில்லாமல் ஒரு சிசுவை சாக்கில் சுற்றி யாரோ வீசி விட்டுப் போயிருக்கிறார்கள். தொப்புள் கொடிகூட அறுக்கப்படாமல் ஒரு அவசரத்தனத்தோடு அந்தச் சிசு எறியப்பட்டிருந்தது. நடந்தது எதுவுமே அறியமுடியாமல் பிரசவித்த மறுநொடியே பெற்றவளால் தூக்கி வீசப்பட்ட அவலம் புரியாமல் தாயின் அணைப்பைத் தேடி பூமியில் பிறந்து ஒரு சில மணித்துளிகளேயான அந்த சிசு அழுதுகொண்டிருந்தது.

குழந்தையைக் கண்டெடுத்த அந்தப் பெண் துணைக்கு அயலவர்களை அழைத்தார். "ஒரு குழந்தையை ஆரோ போட்டுட்டுப் போட்டாங்களாம்' என்ற தகவல் காட்டுத்தீயாய் அடுத்த நொடியே எங்கும் பரவியது. கூட்டம் குழுமியது. அனுபவமுள்ளவர்களால் குழந்தையின் தொப்புள் கொடி அகற்றப்பட்டு, பிறந்த மேனியாக இருந்த அந்த ஆண் குழந்தைக்கு சின்னதாக சட்டையும் அணிவிக்கப்பட்டது. குழந்தையைக் கண்டெடுத்த பெண்ணும் அண்மையிலேயே குழந்தை ஒன்றைப் பிரசவித்திருந்ததால் அநாதரவாகக் கிடந்த சிசுவுக்கு இரவல் தாய்ப்பாலும் கிடைத்தது. மகாபாரதத்திலே குந்தியால் கர்ணன் இதே போன்று கைவிடப்பட்ட போது குந்தியின் சேலையால் சுற்றியே ஆற்றில் பெட்டியினுள் வைத்து விடப்பட்டான். தனது தாய் குந்தி என்பதை கர்ணனுக்கு கடைசியில் அந்தச் சேலை தான் காட்டிக்கொடுத்தது. அதே போன்று இந்தக் குழந்தை வீசப்பட்டுக் கிடந்த சாக்கிலும் ஒரு "பெற்சீற்'றும், தாயின் "கவுண்' ஒன்றும் இருந்தன. வீதியெங்கும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகின்ற நாய்கள் போன்ற பிராணிகளால் எவ்வித ஆபத்தும் நேராமல் குழந்தை தப்பியது அதிசயம் தான். கிராமசேவகர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. இப்போது அந்தக் குழந்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டு நலமாக உள்ளது. ஆனாலும் இன்னமும் தாயைத் தேடியோ அந்தக் குழந்தை அலைவதையும், அழுவதையும் நிறுத்தவேயில்லை. கடந்தவாரம் கொக்குவில் சம்பியன் லேனில் நிகழ்ந்த சம்பவமே இது. இது தவிர இந்த ஒரு வாரத்தில் மட்டும் திருகோணமலை, மட்டக்களப்பு, பசறை, போன்ற இடங்களிலும் இதே பாணியில் குழந்தைகள் கைவிடப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் பசறை என்ற இடத்தில் தனது குழந்தையை தூக்கி வீசிவிட்டுச் சென்ற தாயை பொலிஸார் கண்டுபிடித் திருக்கிறார்கள். மற்றைய இடங்களில் எல்லாம் இந்தக் குழந்தைகள் இன்னமும் தாய்மாரின் மடியைத் தேடியபடியே உள்ளன.


யாழ்ப்பாணத் தில் பொதுவாகவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம் நீண்டகாலமாக எழுதப்படாத விதியாகப் பேணப்பட்டு வருகிறது. ஒருவகையில் பல சமூகச் சீரழிவுகள் இல்லாமல் போவதற்கும், எயிட்ஸ் முதலான பாலியல் சார் நோய்களின் தாக்கம் மிகக் குறைந்தளவில் இருப்பதற்கும் இத்தகைய பண்பே காரணமாக உள்ளது. யாழ்ப்பாணத்தவர்களின் குறிப்பாக பெண்களின் நன்னடத்தை பற்றி அனைவருமே சிலாகித்துச் சொல்வதுண்டு. ரஜினிகாந்த் நடித்த "சிவாஜி' படத்தில் ஒரு காட்சி வருகிறது. தமிழ்ப்பண்பாடுடைய பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று ரஜினிகாந்த் ஒற்றைக்காலில் நிற்க அவரது மாமனான விவேக் அத்தகைய கலாசாரமுள்ள பெண்ணைத் தேடி ஊரெல்லாம் அலைந்துவிட்டு கடைசியாக ""தமிழ்ப் பண்பாடுள்ள பெண் தேவையென்றால் இனி யாழ்ப்பாணத்துக்குத்தான் செல்ல வேண்டும்'' என்று கூறுவார். அந்தளவு தூரம் தமிழ்ப் பெண்கள் என்றாலே அது யாழ்ப்பாணத்துப் பெண்கள் தான் என்று அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு பண்பாட்டோடு ஊறித்திளைத்தவர்கள். (ஒருசிலர் மிக மோசமான ஆணாதிக்கத்துக்குள் யாழ்ப்பாணத்துப் பெண்கள் சிக்குண்டிருப்பதாகவும் இத்தகைய ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை விமர்சிக்கவும் செய்கிறார்கள்)

யாழ்ப்பாணத்து இளம் சந்ததியினரிடையே இத்தகைய நீண்டகால மரபு செல்லாக்காசாகி வருவதையே குழந்தைகள் அநாமதேயமாக கைவிடப்படும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. போர், அது சார்ந்து உருவான புறச்சூழல் என்பனவெல்லாம் கலாசாரச் சீரழிவுகளை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. ஆனால் அவையெல்லாம் விலகியவுடன் மிக மோசமான சூழலுக்குள் எமது இளையவர்கள் பிரவேசிக்கத் தொடங்கிவிட்டார்கள். வீட்டில் இருந்து நீங்கள் வீதிக்கு வந்தால், வீதியில் பயணிப்பவர்களில் 80%மானோர் காதுகளில் "ஹான்போனை' பொருத்திய படி தம்பாட்டுக்குச் சிரித்துக் கதைத்தபடி சென்று கொண்டிருப்பார்கள். இவர்களில் அனேகமானோர் இளையோர். அவர்களது இத்தகைய வீதியோர நடமாடும் செல்போன் உரையாடலை கொஞ்சம் உற்றுக் கேட்டால் நிச்சயம் யாரோ ஒரு எதிர்ப்பாலரோடுதான் அவர்கள் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இத்தகைய "ரெடிமெட்' காதல்களின் பெறுபேறுகளே கடைசியில் கைவிடப்பட்ட குழந்தைகளாக மாறுகின்றன. வெறுமனே பாலினக் கவர்ச்சியில் மயங்கித் தவறான பாதையில் பயணிக்கும் இளையவர்கள் தமக்குப் பின்னே நீண்டு கிடக்கும் பெரும் பாதையைக் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இதுவே அவர்களது காதலுக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிடுகிறது. அனேகமாக "ரெடிமேட்'காதல் தந்த பரிசுகளைப் பெண்களே சுமக்க வேண்டியதாகி விடுகின்றது. அவர்களும் ஏதோ ஒரு வழியில் ஊருக்குத் தெரியாமல் உண்மைகளை மறைத்து, இறுதியில் பெற்றெடுத்த சில நொடிகளிலேயே தமது பிள்ளைகளைத் தூர உள்ள இடங்களில் வீசி விட்டு வந்துவிடுகிறார்கள்.

கைத்தொலைபேசிப் பாவனை மட்டுமல்லாது குடாநாடெங்கும் மலிந்து போய்விட்ட உல்லாச விடுதிகளின் பெருக்கம், ஆபாசப் படங்களின் அதிகரிப்பு, தவறான பாதைக்கு வழிகாட்டும் இணையத் தளங்களின் உள்நுழைவு, போதைப் பொருள்கள் பாவனை போன்றவையெல்லாம் இத்தகைய மோசமான நிலைக்கு நமது இளையவர்களைக் கைபிடித்து அழைத்துச் செல்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட நல்லூர் ஆலயத்திருவிழாவில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான "பாவுள்' என்னும் பொருள் அடங்கிய பீடாவை பகிரங்கமாக விற்பனை செய்ததைக் காணமுடிந்தது. இதனை எல்லோருமே கண்ணுற்றாலும் எவருமே தடைசெய்யவோ, கட்டுப்படுத்தவோ முன்வரவில்லை. கண்முன்னே நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் முதுகெலும்பு நம்மில் பலருக்கும் காணாமல் போய் இருப்பதும் இத்தகைய சமூக சீரழிவுகளின் பெருக்கத்திற்கு பெரிதும் காரணம்.

யாழ்.பஸ் நிலையப் பகுதி தவறான நடத்தைகளுக்கான மையப்புள்ளியாக மாறிவருவதாக சமூக அக்கறையுள்ளவர்கள் பலரும் சுட்டிக்காட்டிவருகின்றார்கள். தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகவோ அல்லது வேறேதோ முக்கியமான அலுவலுக்காக செல்வதாகவோ கூறி வீட்டிலிருந்து "சிங்கிளாகப்' புறப்படும் இளசுகள் பஸ்நிலையத்தில் சோடிகளாக மாறி எங்கெங்கோவெல்லாம் செல்வதாக தகவல்கள் வந்தவண்ணமே உள்ளன. (யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையரங்குகளில் காதலர்களுக்கான தனிப்பட்ட அறைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.) கணநேரத் தவறுகள் காரணமாக ஒரு குழந்தைக்கு தாயாகி பின்னர் பிரசவமானவுடனேயே அவற்றைக் கைகழுவிவிடுவதற்கு சில நியாயப்பாடுகளை அவர்கள் தமக்குத்தாமே சொல்லக்கூடும். குடும்பக் கௌரவம், சகோதரர்களின் சமூக அந்தஸ்து நிலை, எதிர்காலம் பற்றிய தொலைநோக்கு இவற்றை தக்கவைத்துக் கொள்ளவே தவறின் அடையாளமான சிசுக்களை உதறிவிடுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் உண்மையில் தமது தவறுகளை மறைப்பதற்காக, தமது எதிர்காலத்தின் இருப்புக்காக எதுவுமே அறியாத மனித உயிர் ஒன்றோடு விளையாடுவது உலகிலேயே மிகப்பெரிய பாவகாரியம். இவ்வாறு கைவிடப்படும் குழந்தைகளில் அனேகமாவை இறந்த நிலையிலேயே மீட்கப்படுகின்றன. கொக்குவில் சம்பவம் போல தெய்வாதீனமாகத் தப்புகின்ற குழந்தைகள் கூட மனக் குறைகளோடே வளரவேண்டியுள்ளது. இத்தகைய மனக்குறைகள் எதிர்காலத்தில் இந்த சமூகத்தின் மீது கோபம்கொள்ளக்கூடிய மனிதன் ஒருவனை உருவாக்கிவிடும். அது சமூகச் சீரழிவுகள் இன்னும் பெருக புதிய வழியைத் திறந்துவிடுவதாகவே இருக்கும்.

சமூகத்தின் இருப்பினைக் கறையான்கள் போல் அரித்துச் செல்லும் எதிர்மறையான பண்புகளை, அழிவு நிலைக்கு இட்டுச் செல்லும் புதிய நிகழ்ச்சித் திட்டங்களை இனங்கண்டு அவற்றைத் தடுப்பதற்கு எவருமே தயாராயில்லை. எனினும் அந்தத் திராணியை ஒவ்வொருவருமே வரவழைத்துக்கொள்ளவேண்டும். குறைந்தபட்சம் பெற்றோர் பருவநிலையை அடைந்து விட்ட தத்தம் பிள்ளைகள் மீது அக்கறையோடு ஒருகண் வைத்திருக்க வேண்டும். அவர்கள் தவறுவிடும்போதாவது மாத்திரம் தட்டிக்கேட்டு சரியான வழிக்கு திசைதிருப்ப வேண்டும். ஒவ்வொரு பெற்றோருமே அவ்வாறு செய்தால் எந்தவொரு இளையதலைமுறையும் எப்படி தவறுசெய்யமுடியும்

போராட்டம் நடத்திய மாதர் சங்க பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர்

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த கீரனூரில் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநிலத் தலைவர்அமிர்தம் பேசியது:

கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வானை, ராணி, வசந்தா ஆகியோரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்ய முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இக்கிராமத்தில் 5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வீடில்லாத ஏழைகளுக்கு வழங்க தெய்வானை முயற்சி எடுத்தார். ஆனால், அவர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

புகார் தந்தவர்கள் மீதே பொய் வழக்கு போட்டுள்ளனர். பாலியல் கொடுமை செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு நிலத்தை உண்மையான பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அமிர்தம்.

Monday, September 20, 2010"ஹாய்! மீட் பண்ணி நாளாச்சுல்ல"-அழுத்தமாகக் கை குலுக்குகிறார் டைரக்டர் சித்திக்.


சில நாள் தாடி, ஊடுருவுகிற பார்வையில் புன்னகைக்கிறார். மலையாளத்தின் முக்கியமான இயக்குநர்.

"எனக்கு ஒவ்வொரு படமும் முக்கியம். அதில் மலையாளம், தமிழ்னு வேறுபாடு கிடையாது. மனதைத் தொடணும், அப்படியே மூட் செட் பண்ணிடுவேன். இப்போ, ஆறேழு மாசமா எனக்குள் உட்கார்ந்திருக்கிறது இந்த 'காவலன்'தான். இதில் வருகிற பூமிநாதன்... அதாங்க நம்ம விஜய், சொன்னா சொன்னதைச் செஞ்சே தீருவான். தன்னை நம்புறவங்களை அள்ளி அணைச்சுத் தூக்கிச் சுமக்கிற மனுஷன். அவன் தூக்கிச் சுமக்கிற ஒரு விஷயம்... அதுக்குள் நடக்கிற அதிரடியான, அழகான விஷயங்கள்தான் படம்!"

"இன்னும் சொன்னால் விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுவாங்களே?"

"முத்து ராமலிங்கம்னு அழைக்கப்படுகிற ராஜ்கிரண். ஒரு காலத்தில் ஊரையே குலை நடுங்கவைத்த பெரிய தாதா அவர். எதுவும் வேண்டாம்னு ஒதுங்கி, அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பும் அவருக்கு ஒரே ஒரு பொண்ணு... அசின். தன்னோட பெண்ணுக்குக் காவலனா விஜய்யை நியமிக்கிறார் ராஜ்கிரண். கொஞ்சம் கொஞ்சமாக விஜய் அந்தக் குடும்பத்துக்கும் அசினுக்கும் நெருக்கமாகிற விதம்... அவர்களின் அடையாளம் தெரியாத காதல்... அது கல்யாணத்தில் முடிந்ததா, என்னதான் நடந்தது? விஜய்யின் காமெடித் திறமை இதில் இன்னும் பளிச்னு வந்திருக்கு. 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தை எவ்வளவு தூரம் எல்லோரும் ரசிச்சுப் பார்த்தோம். அந்த ஃப்ளேவர் இதில் இன்னும் தூக்கலா இருக்கும். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்டர்டெயின்மென்ட் செய்யும் படம். ஒரு படத்துக்கு இதைவிட சர்ட்டிஃபிகேட் வேறு எதுவும் வேண்டாம்னு நினைக்கிறேன்!""இப்போ விஜய் அவசியமா ஒரு ஹிட் தேவைப்படுகிற நெருக்கடியில் இருக்கார். தெரியும்தானே?"

"அப்படி ஒரு நெருக்கடி விஜய்க்கு இல்லைன்னு நினைக்கிறேன். ஜனங்க எதிர்பார்த்த மாதிரி சில படங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு படத்திலும் விஜய்யின் உழைப்பு, திறமை கொஞ்சம்கூடக் குறையவே இல்லை. 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் நடிக்கும்போது விஜய் ஒரு ஸ்டார்தான். இப்போ விஜய் இங்கே பெரிய ஸ்டார். ஆனால், அதே அமைதி, உள்வாங்கிக்கிற அழகு, அதிசயக்கவைக்கிற டைமிங், பெர்ஃபெக்ஷன்னு எல்லோரும் கத்துக்க வேண்டியதுதான் அவர்கிட்டே இருக்கு. நானோ, அவரோ, எந்த நெருக்கடியிலும் இல்லை. எல்லா ஹீரோக்களுக்கும் விஜய்க்கு வந்த மாதிரி சின்ன ஒரு இடைவெளி வரும். எல்லோரையும் மாதிரி விஜய் மேலே எழும்பி வருவார்... இன்னும் வேகமா!"

"மலையாள ஒரிஜினல் 'பாடிகார்ட்'ல நயன்தாரா இருந்தாங்க..."

"அந்தப் படத்துக்கும் நான் தேதி கேட்டது அசின்கிட்டேதான். அவங்க அப்போ ஒரு இந்திப் படம் முடிக்கிற கடைசி நாட்களில் இருந்தாங்க. எனக்கோ ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தம். அதான் நயன்தாரா வந்தாங்க. தமிழ்ல ஆரம்பிச்சதும் அசின் வந்துட்டாங்க!"

"நீங்களே திலீப்பை வெச்சு 'பாடிகார்ட்' பண்ணி இருக்கீங்க. இப்போ, இங்கே விஜய். யார் பெஸ்ட்னு உங்களால் சொல்ல முடியும்தானே?"

"மலையாளத்தில், திலீப்தான் சரியான சாய்ஸ். எங்க மொழிக்கு திலீப்பைவிட்டால், யாரும் அவ்வளவு சரியா செய்திருக்க முடியுமான்னு சந்தேகம். ஆனால், இங்கே விஜய் லைஃப் சைஸ் ஹீரோ. அவருக்கு ஏற்றபடி, பொருத்தமா சில மாற்றங்கள் இருக்கு. நிச்சயம் மலையாள ரோலை விஜய் பண்ண முடியாது. அதே மாதிரி தமிழ் விஜய் ரோலை திலீப் செய்யவே முடியாது!"''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்!'' - இந்த வார்த்தைகளை வைகோ உச்சரித்தபோது தொண்டர்களின் கைதட் டலால் காஞ்சிபுரமே கிடுகிடுத்தது!

காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க. மாநாடு என்று அறிவிக்கப்பட்டதுமே, ஊரின் அனைத்துச் சுவர்களையும் வளைத்து விளம்பரங்களாக எழுதித் தள்ளினார் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் வெங்கடேசன். ஆனால் அவர் சாராயம் விற்ற வழக்கில் கைதானார். ''திரும்பிய பக்கமெல்லாம் ம.தி.மு.க. கொடியையும், அண்ணாவையும், வைகோவையும் வரைந்து வைத்தார் வெங்கடேசன். ஸ்டாலின் இங்கு வந்து சென்ற இரண்டாவது நாளே அவர் மீது சாராய கேஸ்!

ஓய்வுபெற்ற ஹெட் கான்ஸ்டபிளின் பையனான வெங்கடேசன், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவர் இருப்பது சின்னக் காஞ்சிபுரம். ஆனால், பக்கத்தில் உள்ள பாலுச்செட்டி சத்திரத்தில் சாராய வழக்கு போட்டிருக் கிறார்கள். செல்லமுத்து என்பவரை சாராயம் விற்றதாக கைது செய்து... அவருக்கு வெங்கடேசன் சப்ளை செய்ததாக


வழக்கு. கையில் விலங்கு போட்டு அவரை நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்துள்ளார்கள். இப்போது காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அவர் இருக்கிறார்...'' என்கிறார் ம.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா,

போலீஸ், மாவட்ட நிர்வாகம் இடைஞ்சல் கொடுப்பது பற்றி கேள்விப்பட்ட வைகோ, ''அதிகமான தொல்லை கொடுத்தால், அண்ணா சமாதிக்குப் போய் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்...'' என்று அறிவித்த பிறகுதான் அமைதியானார்களாம் அதிகாரிகள். மாநாட்டு நாளான 15-ம் தேதி காலையில் இருந்தே காஞ்சி நகருக்குள் கூட்டம் குவிய... உண்மையில் வைகோவுக்கு உற்சாகம். 'எல்லாரும் கைக் காசை செலவு பண்ணி வந்திருக்காங்க. மழை மட்டும் வராமல் இருந்தால் போதும்...' என்று சொல்லிக்கொண்டு இருந்தாராம் வைகோ. மாலை நெருங்க நெருங்க... காஞ்சிபுரம் முழுக்க மனிதத் தலைகளாகவே காட்சி அளித்தது. இதில் இன்னோர் ஆச்சர்யம், எங்கே திரும்பினாலும் அண்ணா படங்கள் மட்டுமே இருந்தன. வைகோ படம் இல்லை. ''வைகோ தனது படத்தை வைக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்...'' என்று காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு சொன்னபோது, வைகோ சிரித்தார்.

மாநாட்டைத் திறந்துவைத்துப் பேசிய செந்தில திபன் முதல் வைகோ வரை அனைவருமே முதல்வர் கருணாநிதி மீதுதான் கடும் தாக்குதல் நடத்தி னார்கள்.

''நாடாளுமன்றத்தில் தமிழ் இனத்துக்காக மட்டுமே வைகோ குரல் கொடுத்தார். 11 பிரதமர்களின் முன்னால் சிங்கத்தைக் குகையில் சந்திப்பதைப்போல பிடரியைப் பிடித்து உலுக்கியவர் வைகோ. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டைப் பார்த்து டெல்லி அஞ்சியது. ஆனால், சோனியாவுக்கு பயம் போய்விட்டது. அதற்குக் காரணம் கருணாநிதிதான். அவர் ராஜாவையே மிஞ்சிய ராஜ விசுவாசியாக மாறிவிட்டார்! இந்த அடிமை மனோபாவமும், குடும்பப் பாசமும் இருக்கும் வரை கருணாநிதியால் இந்த இனத்துக்கும், நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை!'' என்று செந்திலதிபன் சொன்னதற்குப் பின்னால், மைக் பிடித்த நாஞ்சில் சம்பத்தின் பேச்சு மொத்தக் கூட்டத்தையும் சிரிப்பு மழையால் நனையவைத்தது.

''இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று தாசில்தார் ஒருவர் தடுத்திருக்கிறார். உன்னைத் தூண்டிவிடுவது யார், குன்றத்தூர் குள்ளனா?'' என்று அவர் சொன்னபோது ஏதோ புரிந்தாற்போல் பலத்த விசில்.

''ஒரு குடும்பமே அனைத்துப் பதவிகளையும் பங்கு போட்டுக்கொள்கிறது. ஆனால், அந்த இயக்கத்துக்காக உழைத்த டி.ஆர்.பாலு உதாசீனப்படுத்தப்படுகிறார். நான் ம.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல... நொந்துபோன தி.மு.க-காரர்களுக்கும் கொள்கை பரப்புச் செயலாளர் தான். 'இப்படியே போங்க சம்பத்! அப்பதான் இவய்ங்களை ஒழிக்க முடியும்'னு தி.மு.க-காரனே என்னிடம் சொல் றான். ஏன்னா... பணம் ஒரே இடத்தில் குவிகிறது. ஆள்பவர் ஏழையாக இருந்தால்தான், ஆளப்படுபவன் பணக்காரனாக முடியும் என்பார்கள். அண்ணா ஏழையாக இருந்தார். மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இன்று இன்ஜினீயரிங் கல்லூரி இல்லாத மந்திரி உண்டா? கருணாநிதி குடும்பம் நிலத்தை, வானத்தை, கடலை வளைத்துவிட்டது. அடுத்த தேர்தலிலும் அவர்கள் ஜெயித்தால் கறிக் கடையைக்கூட எவனும் நடத்த முடியாது. இன்னார் பெயரில் கறிக் கடை என்று ஆரம்பித்து, இன்னாரை கல்லாப்பெட்டியில் உட்காரவைத்துவிடுவார்!'' என்று சில பெயர்களைச் சொல்லி முடித்தபோது விசில்பறந்தது.

இரவு 8.45 மணிக்கு மைக் பிடித்தார் வைகோ. முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கி... முள்ளி வாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவங்களை அவர் விவரித்து முடிப்பது வரை மொத்தக் கூட்டத்தையும் தனது வார்த்தைகளால் கட்டிப் போட்டிருந்தார்.

''நான் தமிழ்நாட்டு மக்களின் ஊழியன். இந்த நாட்டுக்காக... மொழிக்காக உழைப்பவன். கட்சி சார்பற்ற பொதுமக்களுக்கும் சேர்த்து நான் முன்வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், 'ஒரு குடும்பத்தின் ஆதிக்கமா... தமிழ்நாட்டின் ஜனநாயகமா? எது தேவை?' என்ற ஒரு கேள்வியின் அடிப்படையிலே இந்தத் தேர்தலே நடக்கப்போகிறது...'' என்பதை பகிரங்கமாக அறிவித்த வைகோ, இந்த மாநாட்டில் ஒரு சம்பவத்தைச் சொன்னார்.

''2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நான் சிறையில் இருந்து வெளியே வந்த நாள். அன்று இரவில் கலைஞரை சந்தித்தேன். 'உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்' என்று அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்றேன். 'நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒரே ஒரு ஸீட் அதிகம் வேண்டும். கணேச மூர்த்திக்குத் தாருங்கள்' என்றேன். உடனே கலைஞர், 'அதெல்லாம் முடியாது. அதுக்கு மேல் கொடுக்க முடியாது!' என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே வரப் போனார்.

பிறகு திடீரென்று நின்றவர், 'எனக்குப் பிறகு நீதான்யா... உன் கட்சிதான்யா தி.மு.க-வா இருக்கும்!' என்று தழுதழுத்த குரலில் சொன்னார். நான் பதறிப்போனேன். 'ஏன் அண்ணே, இப்படி எல்லாம் பேசுறீங்க! நீங்க 100 வருஷம் இருப்பீங்கண்ணே!' என்று சொன்னேன். அன்றைக்கு என்னை சமாதானப்படுத்துவதற்காக அப்படிச் சொன்ன பசப்பு வார்த்தைகள் அவை. எனவே, முக்கியஸ்தர்களுக்கு மட்டும் இதைச் சொன்னேன். கட்சித் தொண்டர்களுக்கு இதை முதல் தடவையாகச் சொல்கிறேன்!'' என்ற வைகோ....

''இன்றைக்குச் சொல்கிறேன்... கலைஞர் அவர்கள் 100 ஆண்டுகள் வரை நல்ல நலத்துடன்... திடத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால், உங்களுக்கு முன்னால் உங்களது குடும்ப அரசியல் நொறுங்கிப்போகும். உண்மையான தி.மு.க-வாக ம.தி.மு.க-தான் இருக்கும். உமர் முக்தாரை தூக்கிலேற்றும்போது, அவரது மூக்குக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஒரு சிறுவன் ஓடுவான். அதைப்போல, அண்ணாவின் லட்சியத்தை நிறைவேற்ற நான் இருப்பேன். ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்தினர் எனக்கு வீர வாள் ஒன்றைக் கொடுத்தார்கள். அது தங்க வாளோ, வெள்ளி வாளோ அல்ல. உண்மையான வாள். கூர்மையாக இருந்தது. இதை ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்கிறேன்'' என்று முடித்தபோது... தொண்டர்கள் அனைவரும் முறுக்கேறி இருந்தார்கள்!

வைகோ சொல்வது நிஜமா?
ம.தி.மு.க. அவைத் தலைவராக இருந்து விலகி, இப்போது தி.மு.க-வில் இருக்கும் எல்.கணேசன் என்ன சொல்கிறார்?

''நல்லா இருக்குதுய்யா கதை! 'தனக்குப் பிறகு நீதான்!' என எனக்குத் தெரியாமல் கலைஞர் வைகோவிடம் சொன்னாராமா? கலைஞர் அப்படிப்பட்ட வார்த்தைகளை ஏன் சொல்லணும்? 93-ம் ஆண்டு தி.மு.க-வைவிட்டுப் பிரிந்த நாங்கள், 10 வருடங்களுக்குப் பிறகு கலைஞரிடம் 2004-ல் கூட்டணிக்காகவந்தோம். 10 வருட வசைப் பாடல்களை மறந்துவிட்டு அந்த நேரத்தில் கலைஞர் அப்படிச்சொல்லி இருப்பாரா என்ன? 'தி.மு.க-வுக்கு இவர்தான் அடுத்து' என உயில் எழுதும் பழக்கம் கலைஞருக்குக் கிடையாது. தனக்குப் பின்னால் யார் என்பதை கலைஞர் தன்வாயால் இன்று வரை சொல்லவில்லை. ஆனால், அதனை அடுத்தடுத்த செயல்களால் விளக்கி விட்டார். இன்றைக்கு கலைஞரின் பாதிச் சுமை ஸ்டாலினுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்க, கலைஞரின் வார்த்தைகளாக வைகோ ஏன் இப்படிப் பேசுகிறார் என்பது புரியவில்லை!'' என்றார் எல்.ஜி.