Friday, September 17, 2010

காமன்வெல்த் பாடல்-'ட்ரிம்' செய்த ரஹ்மான்!


சரியில்லையே என்ற முனுமுனுப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து தற்போது காமன்வெல்த் போட்டிக்கான தீம் மியூசிக்கை சற்று ட்ரிம் செய்துள்ளார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஓ யாரோ யே இந்திய புலாலியே என்று தொடங்கும் காமன்வெல்த் போட்டிக்கான மையநோக்குப் பாடலுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆனால் இப்பாடல் யாரையும் கவரவில்லை என்று முனுமுனுப்பு எழுந்தது. இப்பாடலை எழுதியவர் பிரசூன் ஜோஷி ஆவார்.

இந்த நிலையில் தற்போது இப்பாடலில் சில நகாசு வேலைகளை செய்து புது மெருகூட்டியுள்ளார் ரஹ்மான். இதை ஜோஷியே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எப்போதுமே தனது படைப்புகள் சிறப்பாக இருக்க வேண்டும் என கருதுபவர் ரஹ்மான். காமன்வெல்த் மைய நோக்குப் பாடலுக்கும் இது பொருந்தும். இப்பாடலை தற்போது மேலும் மெருகூட்டியுள்ளார் ரஹ்மான். நிறைய நாட்டுப்புற இசைக் கருவிகளை சேர்த்துள்ளார். இதன் மூலம் பாடல் ட்ரிம் ஆகி, மேலும் அழகாககியுள்ளது.

விரைவில் திருத்தப்பட்ட பாடலின் வீடியோ பதிப்பு வெளியிடப்படும். இதில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், அவர்களின் சாதனைகள் விவரிக்கப்பட்டிருக்கும் என்றார் ஜோஷி.

முன்பு போடப்பட்ட பாடல் திருப்திகரமாக இல்லை என்று அமைச்சர் கள் குழு கருத்து தெரிவித்ததாக விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந்தப் பாடலை உருவாக்க ஆறு மாதங்களை எடுத்துக் கொண்டார் ரஹ்மான். இதற்காக அவருக்கு ரூ. 5 கோடி கட்டணம் தரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment