Wednesday, September 15, 2010

ஆரணி பட்டுப்புடவையில் போலி!


காஞ்சிபுரம், திருபுவனம் போல் பட்டுப் புடவைக்கு உலகப் பிரசித்திபெற்றது ஆரணி.

திருமணமா? சீமந்தமா? குழந்தைகளின் காதுகுத்து வைபவமா? தீபாவளி... பொங்கல் போன்ற பண்டிகைக் கால குதூகலமா? நம் தமிழகப் பெண் கள் அத்தனை பேரும் பட்டுப்புடவைகளை அணிந்துதான் பளபளப்பார் கள்.

இப்படி நம் குடும் பங்களின் மகிழ்ச்சியோடு சம்பந்தப்பட்ட பட்டுப் புடவையில்... குறிப்பாக ஆரணி பட்டுப் புடவை யில்... தற்போது போலிகள் புகுந்துவிட்டன என்ற பகீர் குற்றச்சாட்டு பரவலாக எதிரொலிக்க ஆரம்பித் திருக்கிறது.

ஆரணிக்கு என்ன ஆச்சு? என்றபடி... அந்த பட்டு பூமியில் தரையிறங்கினோம்.

இங்கு நூற்பாலை நடத்திவரும் காங்கிரஸ் பிரமுகர் கருணாமூர்த்தியிடம் இது குறித்து நாம் கேட்டபோது...

""இந்த ஏரியாவில் இருக்கும் ஒண்ணுபுரம், சேவூர், அருணகிரிசத்திரம், நெசல், மசூர், அரையாளம், தேவிகாபுரம் மாதிரியான கிராமங் கள்ல ஆரணிப்பட்டுப் புடவை தயாரிப்புதான் பிரதானமா நடந்துக்கிட்டு இருக்கு. இப்படி தயா ராகும் பட்டுப்புடவை எல்லாம் ஆரணி டவுனுக்குத் தான் விற்பனைக்கு வரும். இந்தப் புடவைகள் ஜரிகைக்கு ஏற்ப 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய்வரை விலைபோகும். தறியில் பட்டினை நெய்தால் லேட் ஆகுதுன்னு சிலர் பவர் லூம் மூலம் பட்டுப் புடவையைத் தயாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அது தறியைவிட சுமாராத்தான் இருக்கும்.. ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டா.. நெசவுக்கு ஆள் கிடைக்க லைன்னு சொல்றாங்க. அதுவும் ஒருவகையில் உண்மை தாங்க. சம்பளம் குறைவா இருப்பதால்... பல நெசவுத் தொழிலாளிகள்.. ’"இந்த தொழிலே வேணாம். இதுக்கு பதில் பெங்களூர்ப் பக்கம்போய் வாட்ச்மேன் வேலை பார்த்தாவது பிழைச்சுக்கிறோம்'னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

பிரச்சினை இதோடு முடியலை. சீனாவில் பூகம்பம் வந்தா பட்டுநூல் இறக்குமதி குறைந்துபோய்டும். இதுக்கிடையில் பட்டுநூல் விலையும் அடிக்கடி டாப்கியருக்கு எகிறிடுது. இதையெல்லாம் பார்த்துட்டு இங்க இருக்கும் குஜிலி மார்க்கெட்காரங்க... என்ன பண்றாங்கன்னா... பட்டுப் புடவைக்கு பதில்... சேலத்தில் தயாராகும் போலிப் பட்டுப் புடவைகளை மலிவா வாங்கிட்டு வந்து... நல்லவிலைக்கு வித்து கொழுத்த லாபம் பார்க்கறாங்க. இதை சரியா கவனிச்சி வாங்காத நம்ம ஆளுங்க... ஒட்டுமொத்த மா ஆரணி பட்டே டுபாக்கூர் பட்டுன்னு ஒரேபோடா போட்டு... எங்களை மாதிரி... தர மான பட்டினை விக்கிற வங்களையும் ஓரம்கட்ட றாங்க''’ என தன் வருத் தத்தைப் பகிர்ந்தவர்...’ ""போலிப் பட்டுக்களைத் தடுக்க.. இங்கே ஹால் மார்க் மையத்தை அமைக்க அரசு முன்வர ணும்''’என்றார் எதிர்பார்ப்போடு.

தோழர் அப்பாசாமியோ ‘""வேலை செய்ய வரமாட்டேன் கறாங்கன்னு தொழிலாளர்களைக் குத்தம் சொல்லக்கூடாது. ஒரு வீட்டில் இருக்கும் கணவன், மனைவி, பிள்ளைகள்னு எல் லோருமா சேர்ந்து ஒரு மாசம் பூரா கஷ்டப்பட்டு வேலை செஞ்சாலும்... மாத வருமானம் 5 ஆயிரம் ரூபாய் கூட கிடைப்ப தில்லை. இதைவச்சி அவங்க என்ன பண்ணமுடியும்? இங்க நெசவாளர் கூட்டுறவு சங்கங் கள் இருந்திருந்தா தொழி லாளர்களுக்கு நியாயமான கூலி கிடைச்சிருக்கும். அது இல்லாத தால்.. தொழிலாளர்களை முதலாளிகள் ஏமாத்தறாங்க. இந்தப் பிரச்சினையெல்லாம் தீர ணும்னா ஆரணியில் அரசு ஒரு பட்டுப் பூங்காவை உருவாக்க ணும்'' என்கிறார் அழுத்தமாய்.

சேவூர் ’அமுதா சில்க்ஸ்’ குமாரிடம் இது குறித்து நாம் கேட்டபோது “""ஆரணியில் இருக் கும் பட்டுப்புடவை உற்பத்தி யாளர்கள் என்ன பண்றாங் கன்னா... தொழிலாளிகள்ட்ட பட்டுநூலைக் கொடுத்து... புடவையா நெய்யச்செய்து... அதை வாங்கி அப்படியே பேக் பண்ணி... காஞ்சிபுரத்துக்கும் கேரளாவுக்கும் அனுப்பிடறாங்க. இங்க 10 ஆயிரம் ரூபாய்க்குத் தரும் புடவையை அவங்க 20 ஆயிரம், 25 ஆயிரத்துக்கு விற்பாங்க. இப்படி அவங்களுக்கு சப்ளை செய்யவே இவங்களுக்கு சரியாக இருப்பதால் இங்க இருக்கும் சில்லறை வியாபாரிகளுக்கு அவங்க பட்டுப்புடவைகளைக் கொடுக்கறதில்லை. அதனால்தான் சில வியாபாரிகள் போலிப் பட்டுக்களை வாங்கி.... வியாபாரம் பண்ண ஆரம்பிச்சிடறாங்க. ஆனா இதே பட்டுத்தொழில்ல இருப்பவர்களுக்குத்தான் தெரியும் ஆரணியில் நெய்யும் பட்டுதான் தரமான பட்டுன்னு'' என்கிறார் புன்னகைத்தபடியே.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு தான் என்ன? நெசவாளர் குடும்பத்திலிருந்து வந்தவரும்... தொகுதியின் ஆளும்கட்சி எம். எல்.ஏ.வுமான சிவானந்தத்திடமே நாம் கேட்டோம். ‘""இப்படிப்பட்ட பிரச்சினைகள் இனி இருக்காது. ஏன்னா இங்க பட்டுப்பூங்கா அமைக்க.. முதல்வர் கலைஞர் அவர்கள் பரிந்துரையின் பேரில்... மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஒப்புதல் கொடுத்திருக்கார். அதுக்கான இடமெல்லாம் தேர்வுசெய்யப்பட்டு.. அமைச்சர் தயாநிதி மாறன் பார்வையிடுவதற்காகக் காத்திருக்கு.

இந்தப் பட்டுப்பூங்கா உரு வானதும் பட்டு உற்பத்தியாளர் கள், நெசவாளர்கள், விற்பனை யாளர்கள் பிரச்சினைகள் அத்தனையும் சரிசெய்யப்பட்டு விடும். ஆரணி பட்டின் புகழ் மேலும் மேலும் பரவும்''’ என் கிறார் பரவசமான எதிர்பார்ப் போடு.

ஆரணியே... வழிமேல் விழிவைத்துக் காத்திருக் கிறது அமைச்சர் தயாநிதிமாறனுக்காக.
எது ஒரிஜினல்?பொதுவாக பட்டுப் புடவையில்... வெறும் 550 கிராம் மட்டுமே நூலின் எடை இருக்கவேண்டும். மீதம் இருப்பது சரிகையின் எடைதான். அதேபோல் ஒரிஜினல் ஜரிகை என்றால் அதில் 55 சதம் வெள்ளியும்... 0.6 சதம் தங்கமும்... மீதம் 44.04 சதம் காப்பர் கலந்த பட்டுநூலும் இருக்கவேண்டும். இப்படி தயாரிக்கப்படும் ஒரிஜினல் ஜரிகை கிராம் 32 ரூபாய்..33 ரூபாய்வரை ஆகும். இந்த ஒரிஜினல் ஜரிகையைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டுப் புடவைதான் ஒரிஜினல் பட்டுப் புடவையாகும். ஆனால் இதற்கு பதில் கிராம் 2 ரூபாய்க்கு விற்கக்கூடிய... கெமிக்கல் மற்றும் பாலியஸ்டர் கலந்த போலி டெஸ்டட் ஜரிகைகளைக் கொண்டு சிலர் பட்டுப் புடவையைத் தயார் பண்ணி விற்கிறார்கள். இப்படி டெஸ்டட் ஜரிகையைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டுப் புடவையே போலி பட்டுப் புடவையாகும்.

No comments:

Post a Comment