
தன்னுடன் நீண்ட நாட்களாக வசித்து வந்த டி.வி. நடிகர் சதீஷை நடிகை சீதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆண்பாவம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஆந்திராவைச் சேர்ந்த சீதா, தமிழ்-தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்தார்.
20 வருடங்களுக்கு முன் பார்த்திபனின் புதிய பாதை படத்தில் கதாநாயகியாக நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதற்கு சீதாவி்ன் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால், வீட்டை விட்டு வெளியேறி பார்த்திபனை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா ஆகிய மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். ஆனால், சீதாவுக்கும், பார்த்திபன் இடையே பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
சீதாவுடன் மகள் அபிநயா இருக்கிறார். இளைய மகள் கீர்த்தனாவும், ராதாகிருஷ்ணனும் பார்த்திபனுடன் வசிக்கின்றனர்.
இந நிலையில் டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் சீதா. அப்போது சீதாவுக்கும், டி.வி நடிகர் சதீசுக்கும் காதல் ஏற்பட்டது. திருமணம் செய்யாமலேயே இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந் நிலையில் இப்போது சீதாவும், சதீசும் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள சீதாவின் வீட்டில், அவரது பெற்றோர் முன்னிலையில் இந்த திருமணம் நடந்துள்ளது.
No comments:
Post a Comment