Monday, September 13, 2010

அங்கவை சங்கவை! -ராகிங் கொடுமைக்கு மாணவி..."தாயி நம்ம சாதி சனத்திலேயே நீதான் பட்டணத்துக்குப் படிக்கப் போற. நல்லா படிச்சு பெரிய இஞ்சினீயரா வாம்மா. அதுக்கு எம்புட்டுச் செலவா னாலும் நம்ம ஊரு சனமே பார்த்துக்கும். எதுனாலும் கடிதாசி போடு' -பெற் றோர்களின் கனவுகளோடு கடந்த மாதம் சென்னைக்கு அனுப்பி வைத்த ஜோதி இன்று பிணமாக... காரணம் ராகிங்?

தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த ஜோதியை வீட்டுத் திண்ணையில் கிடத்த... ராசிபுரம் முள்ளுக் குறிச்சி அருந்ததி தெருவே திரண்டு வந்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது. அவர்களிடம் பேசினோம். ""அவங்கப்பா ரோடு போடும் ரோலர் டிரைவரா இருக்காரு. அம்மா பத்து வருஷம் முன்னாடியே இவங்களை விட்டுட்டு டெல்லி போயிடுச்சு. தாத்தாதான் இவளையும் இவங்க அண்ணனையும் வளர்த்தாரு. அண்ணனுக்கு படிப்பு ஏறாம பொக்லைன் வண்டி டிரைவரா போறான். ஆனா ஜோதி குடும்ப கஷ்டத்தை புரிஞ்சு படிப்புல கண்ணும் கருத்துமா இருந்தா. 10-வதுல 475 மார்க் வாங்கி மாவட்டத்துலயே ரெண்டாவதா வந்தா. 12-வதுல 1105 மார்க் வாங்கினா. மேற்படிப்புக்கு பண வசதி இல்லை. இருந்தாலும் எங்க அருந்ததி சமூகத்துல கிராமத்துல இருந்து போயி படிச்சவங்களே இல்லைன்னுதான் நாங்க ஊரே சேர்ந்து பணம் திரட்டி சென்னைக்கு அனுப்பி வச்சோம். இப்படி தூக்குல தொங்கிட்டாளே...'' -மேற்கொண்டு பேச முடியாமல் அனைவரும் கதறி அழ...

ஜோதியின் அண்ணன் தீபக்கிடம் தற்கொலைக்கான காரணம் என்ன என்றோம். ""ராக்கிங்தான்.'' கோபமாக பேசியவர், தொடர்ந்து ""சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துல கவுன்சிலிங்குல பி.இ. இ.சி.ல சீட்டு கிடைச்சது. போன மாசம்தான் சேர்த்துட்டு வந்தோம். ஆனா சில நாட்கள்லயே "இங்க என் சீட்டு முன்னாடியும் பின்னாடியும் இங்கிலீஷ் மீடியத்துல படிச்சிட்டு வந்த பசங்க உக்கார்ந்திருக்காங்க. தமிழ்ல படிச்சிட்டு வந்த பொண்ணுக்கு சென்னையில இஞ்சினீரு படிப்பு கேக்குதா'ன்னு கிண்டல் பண்றாங்கண்ணா. "அங்கவை சங்கவை'ன்னும் போறப்ப வர்றப் பல்லாம் கேலி பேசுறாங்கண்ணா. கண்ட கண்ட எஸ்.எம்.எஸ். அனுப்புறாங்க. பயமா இருக்கு. எனக்குப் படிக்கவே பிடிக் கலை. ஊருக்கே திரும்பி வந்திடு றேண்ணா'ன்னு அடிக்கடி அழுவா. இப்போ வந்தப்போ, "இனி நான் காலேஜுக்கே போகல. "16 வய தினிலே' மயில் மாதிரி ஆடு பாடுன்னு கிண்டல் பண்றாங்கண் ணா'னு புலம்பிக்கிட்டே இருந்தாள்.

"கவலைப்படாம இருடா தங்கம், போகப்போக எல்லாம் சரி யாயிடும்'னு சொன்னேன். சரிண் ணான்னு சொல்லிட்டு படுத்தவ, விடிஞ்சா தூக்குல தொங்கிட்டு இருக்காளே'' மேற்கொண்டு பேச முடியாமல் தேம்ப... "ராகிங் கொடுமை செஞ்சவங்க மேல கடும் நடவடிக்கை எடுக்கணும்' என டி.எஸ்.பி. தமிழ்ச்செல்வனிடம் முறையிட்டனர் ஊர் மக்கள்.

போலீஸ் தரப்பில் விசாரித்த போது, ""ஜோதியின் வகுப்பில் படிக்கும் தீபக் என்கிற மாணவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். போயிருக்கிறது. அதில் "உன்னோட பேச்சு, கேரக்டர் எல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு. உன்னோட ஃபிரண்டாகணும்னு விரும்பறேன். என்னை யார்னு கேட் காதே. நான் உன்னோட பேட்சில் தான் படிக்கிறேன்' என்றிருந்தது. அடுத்தநாள் அது ஜோதி அனுப்பியது என்று தெரிந்த தீபக், "ஏன் இப்படி எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கு இந்தப் பொண்ணு' என வேறு சில மாணவிகளிடம் கேட்டிருக் கிறார். இதுபற்றி மாணவிகள் மாறி, மாறி கேட்டதால் அவமானப்பட்டு தற்கொலை செய்திருக்கலாம்'' என்கிறது போலீஸ்.

No comments:

Post a Comment