Wednesday, September 15, 2010

உங்கள் தொகுதியில் யாருக்கு சீட்!


விறுவிறு மாவட்டமான விருதுநகரில் 7 தொகுதிகளிலும் சீட் ரேஸ் பரபரப்பாகத் தொடங்கிவிட்டது. கட்சி வாரியாக சீட்டை கேட்ச்பண்ண... ஓட ஆரம்பித்திருப்பவர்கள் யார்,, யார் என்று பார்க்கலாமா?

விருதுநகர் : "காமராஜர் பிறந்த விருது நகர், காங்கிரசுக்கே' என கதர்ச்சட்டைகள் உரக்கச் சொல்வதால், வழக்கம்போல் தி.மு.க. தரப்பில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. முனிசிபல் சேர்மன் கார்த்திகா கரிக்கோல்ராஜ் எம்.எல்.ஏ. கனவோடு ரேஸில் ஓடுகிறார். இவருடன். எம்.பி. மாணிக்க தாகூரின் சிபாரிசில் "சீட்' பெற்றுவிடும் துடிப்பில் மாநில மாணவர் காங்கிரஸ் தலைவரான நவீனும் கலைஞரின் செல்லப்பிள்ளையான சொக்கரும் எக்ஸ் எம்.எல்.ஏ. தாமோதரனும் ரேஸில் இருக்கிறார்கள். விளம்பர ஆர்வ லரான சிட்டிங் ம.தி.மு.க. எம்.எல்.ஏ. வரதராஜன் மீண்டும் சீட் வாங்கும் விறு விறுப்பில் இருக்கிறார். "இந்தத் தொகுதியில் வெற்றிபெறும் கூட்டணிக்கு எதிர்க் கட்சி வரிசைதான்' என்ற "திக் திக்' சென்டிமென்ட் இருப்பதாலோ என்னவோ அ.தி.மு.க. இன்னும் ரேஸுக்கே ரெடியாக வில்லை.

சிவகாசி : தொடர்ந்து இரண்டு தடவை வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க. வேட்பாளர் தங்கராஜ். இந்த அனுதாபமே தாங்கிப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் ஓட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். சிவகாசி யூனியன் சேர்மன் வனராஜாவுக்கும் "எம்.எல்.ஏ. புரமோஷன்' அவசியத் தேவையாக இருக்கிறது. இந்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் மூன்றை கேட்க நினைக்கும் காங்கிரசும் இத்தொகுதி மீது கண் பதித்திருக்கிறது. அதனாலேயே, சிவகாசி நகர்மன்றத் துணைத்தலைவர் அசோகன், எக்ஸ் சேர்மன் ஞானசேகரன் போன்றோரும் சீட் ரேஸில் களமிறங்கத் தயாராகி வரு கிறார்கள். சிட்டிங் ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கு(?) மீண்டும் சீட் கிடைக்கும் யோகம் இல்லை. அந்த அளவுக்கு தாமரை இலை தண்ணீ ராக தொகுதி மக்களிடமிருந்து விலகியே நிற்கிறார்.

எனவே "நானே வேட்பாளர்' என்று இங்கு வைகோ நின்றாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. ஏனெனில், எம்.பி. தேர்தலில் தோற்றாலும்கூட செயலகம் ஒன்று அவரது பெயரால் இங்கு இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே பசையான இத்தொகுதியை இந்தத் தடவை ம.தி.மு.க.வுக்கு கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் அ.தி.மு.க. தரப்பில் வலுப்பெற்று வருவதால், அ.தி.மு.க. முன்னாள் மா.செ. ராதா கிருஷ்ணன், ஒ.செ.ஜெயச்சந்திரன் போன்றோரும் எம்.எல்.ஏ. ஆகவேண்டும் என்ற ஏக்கத்தில் ரேஸில் ஓட ஆரம் பித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கூட் டணியில் ஐக்கியமானாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி... இத்தொகுதியின் அன்னபோஸ்ட் வேட்பாளர் மாஃபா பாண்டியராஜன்தான்.

சாத்தூர் : கே.கே.எஸ்.எஸ்.ஆர். தொகுதி மாற இருப்பதால், சாத்தூரின் தி.மு.க. வேட்பாளர் விருதுநகர் மாவட்ட ஒன்றிய குழுத்தலைவர் கடற்கரை ராஜ்தான் என்று பேச்சு அடிபடுகிறது. அண்ணாச்சியின் பூரண ஆசி இவருக்கு உண்டு. எனவே சீட் ரேஸில் உற் சாகமாக ஓடுகிறார். அ.தி.மு.க.வில் வெங்கடாசலபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தனசேகரன் "எனக்கு சீட் கொடுத்தால் வாக்காளர்களுக்கு என் னென்ன செய்வேன்' என்று இப்போதே தம்பட்டம் அடித்து வருகிறார். வைகோ இங்கு போட்டியிடாவிட்டால் 100-க்கும் மேற்பட்டோர் சீட்டுக்காக இலைததரப்பு ரன்வேயில் ஓட ரெடியாக இருக்கிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஒரு காலத்தில் தாமரைக்கனியின் கோட்டையாக இருந்து இப்போது தனித்தொகுதி ஆகிவிட்ட ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஸ்டாலின் சிபாரிசில் சீட் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் இருக்கிறார் ராஜபாளையம் எக்ஸ் எம்.எல்.ஏ. வி.பி.ராஜன். யூனியன் சேர்மன் மல்லி ஆறுமுகத்துக்கு அச்சங் குளம் பிரஸிடெண்ட் சத்யாவை எம்.எல்.ஏ. ஆக்கிப் பார்க்கவேண்டும் என்ற ஆசை பொங்கி வழிகிறது. சிட்டிங் எம். எல்.ஏ.வாக சி.பி.ஐ. ராமசாமி இருப்பதால், அக்கட்சிக்கே அ.தி.மு.க. தலைமை சீட் ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதனாலேயே, எம்.எல்.ஏ. ராமசாமியின் உதவியாளர் பொன்னுப்பாண்டியன் சீட்டுக்கு ஆயத்த மாகிவருகிறார். ஆனாலும் அ.தி.மு.க. தரப்பில் அத்திகுளம் வள்ளி, நக்கமங்கலம் காளிமுத்து போன்றோரும் ரேஸில் இருக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி இங்கு போட்டியிடுவார் என ஹேஸ்யம் கூறுகிறார்கள் அக்கட்சியினர். இந்தத் தொகுதியிலும் சீட் ரேஸ் களைகட்டுகிறது.

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையின் தி.மு.க. வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தான். அந்த அளவுக்கு தொகுதி மக்களை வசீகரமாக வளைத்து வைத்திருக்கிறார். அதனால் காங்கிரஸ் சீட் கேட்க முடியாமல் தவிக்கிறது. அண்ணாச்சியை எதிர்த்து பணபலத்தோடு போட்டியிட அப்படியொரு தயக்கம் இருக்கிறது அ.தி.மு.க. தரப்பில். தே.மு.தி.க. வேட் பாளராக கடந்த தடவை போட்டியிட்ட சினிமா தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் அதே ஆர்வத்தோடு இந்தத் தேர்தலிலும் சீட்டு ரேஸில் ஓடிக்கொண்டிருக்கிறார்.

திருச்சுழி : தங்கம் தென்னரசுதான் திருச்சுழியின் தி.மு.க. வேட்பாளர். அதில் மாற்றமிருக்காது. ஆக்டிவ் அமைச்சரான இவரை எதிர்த்துப் போட்டியிட விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. மா.செ. சிவசாமியைத் தான் அக்கட்சி களமிறக்கும். ஆனாலும் திருச்சுழி ஒன்றிய சேர்மன் ரமாதேவியின் கணவர் குருசாமி, எக்ஸ் எம்.எல்.ஏ. பஞ்சவர்ணம் போன்றோரும் சீட்டை கேட்ச் பண்ண ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ம.நடராசன் அடிக்கடி "விசிட்' அடிக்கும் இத்தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் நிச்சயம் அண் ணனின் சாய்ஸாகத்தான் இருப்பார் என்று அடித்துச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

ம.தி.மு.க. மா.செ. ஆர்.எம்.சண்முகசுந்தரத் துக்கு இத்தொகுதியை விட்டால் போட்டியிட வேறு தொகுதியில்லை. "சேவு வாங்கித் திங்க அடிக்கடி காரியாப்பட்டி வருவேன்' என கேப்டனே சப்புக்கொட்டும் இத்தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளராக கமலிபாரதி சீட் ரேஸில் இருக்கிறார்.

ராஜபாளையம் : மறு சீரமைப்பில் பொதுத் தொகுதி ஆகிவிட்ட ராஜபாளையம் இந்தமுறை "எங்களுக்குத் தான்' என்று அடித்துச் சொல்கிறார்கள் கதர்ச் சட்டைகள். வாசன், தங்கபாலு ஆதரவோடு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பி.எஸ்.ராமச் சந்திரராஜா இங்கு ரேஸில் இருக்கிறார். வெளி யூரிலிருந்து வேட்பாள ரைத் தருவிக்கும் எண்ணத்தில் இருக் கிறாராம் ப.சிதம்பரம். ஒருவேளை தொகுதி தி.மு.க.வுக்கு என்றால் போட்டியிடும் ஆர்வத் தில் இருக்கிறார் செட்டி யார்பட்டி பேரூராட்சி துணைத்தலைவரான தங்கபாண்டியன்.

கடந்தமுறை வென்றாலும், சட்ட சர்ச்சையில் மாட்டிக் கொண்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரா பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவே படாத பாடு பட்டுப்போனார். அத னால், இந்தத் தடவை குழப்ப மில்லாத வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் கார்ட னுக்கு இருக்கிறது. ஜெ. பேரவை மா.செ. செல்வ சுப்பிர மணியராஜா மற்றும் ஒ.செ. முருகையா பாண்டியன் போன் றோரும் சீட்டை துரத்து கிறார்கள். திருத்தங்கல் நகராட்சி துணைத்தலைவர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கும்கூட இத்தொகுதி மீது ஒரு கண் உண்டு. அதனால், அவரும் ரேஸில் பரபரக்கிறார்.

No comments:

Post a Comment