''முதல் படம் 'களவாணி' என்கிறீர்கள், ஆனால், உண்மையான முதல் படம் 'அகராதி'யாமே?''
''ஆமாம், 'அகராதி'யில் மொத்தம் மூணு நாயகிகள். அதில் நானும் ஒண்ணு. 'அகராதி' இன்னும் ரிலீஸ் ஆகாததால், 'களவாணி' என் முழுமுதல் படம்தானே!''
''உங்களுக்கும் தயாரிப்பாளர் நசீருக்கும் இடையே ஏதோ விபரீதமாக நடந்ததா சொல்றாங்களே?''

''இது யார் கிளப்பிவிட்ட வதந்தியோ..? 'களவாணி' படத்தில் எனக்குக் கிடைச்ச நல்ல பெயரைக் கெடுக்கணும்னே, யாரோ பரப்பிய பொய். விபரீதம் நடந்ததா சொல்ற அவங்க சொல்ற அதே தேதியில், இராசு.மதுரவன் சார் இயக்கும், 'முத்துக்கு முத்தாக' ஷூட்டிங்கில் இருந்தேன். இதுதான் நிஜம்!''
முழு நீள காமெடிப் படமான 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் நிறையக் காட்சிகளில் பிரபுதேவா - நயன்தாராவை இணைத்துக் கிண்டல் வசனங்களை சந்தானம் பேசினாராம். 'உனக்கு தாடி இல்லாத ஆம்பிளையைக் கண்டாப் பிடிக்காதே!'' என்பதுபோன்ற நக்கலும் படத்தில் இருந்ததாம். இதைக் கேள்விப்பட்ட பிரபுதேவா, முதல் பிரின்ட் பார்த்து, 'காச்மூச்' என சத்தம் போட... சென்சாருக்கு முன்பே தனி கத்திரி விழுந்ததாம்!
சர்ச்சை இயக்குநர் சாமியின், 'சிந்து சமவெளி' படத்தை முழுசாகப் பார்த்தபோது அதிர்ந்துவிட்டாராம், இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு. மாமனார் - மருமகளுக்கு இடையில் இருக்கும் காதலும் காமமும் கண்டு கொதித்தவர், 'ரீ ரெக்கார்டிங் பண்ண மாட்டேன்' என்று கறாராகச் சொல்லிவிட... பிறகுதான் சபேஷ் - முரளியை வைத்துப் பின்னணி இசை அமைத்தனராம்! போகிற போக்கைப் பார்த்தா... அடுத்தது மனுஷனுக்கும் மிருகத்துக்குமா சாமீய்...!
'தான் தயாரிக்கும் 'அரவான்'படம் சம்பந்தமாக தனக்கும் டைரக்டர் வசந்தபாலனுக்கும் கருத்து வேறுபாடு என்று வந்த செய்தியைப் பார்த்து ஷாக் ஆகியிருக்கிறார், அம்மா கிரியேஷன்ஸ் சிவா. ''300 வருடங்களுக்கு முந்தைய பீரியட் படம் இது. தென் இந்தியாவில் 12 லொகேஷன்களை செலக்ட் செய்து இருக்கிறோம். காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கும் படம் என்பதால் அந்தக் காலத்து ஆடைகளைப்போல, 5,000 வேட்டிகளும், 3,000 புடவைகளும் ஈரோடு, கரூரில் இருந்து ஸ்பெஷலாக வரவழைத்து இருக்கிறோம். கதாநாயகன் ஆதி, 10 மாதங்களாக வேறு எந்தப் படத்துக்கும் கமிட் ஆகவில்லை. தினசரி ஆறு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். 'அரவான்' படத்துக்காக வசந்தபாலனும் நானும் இடைவிடாமல் உழைக்கிறோம். அப்புறம் ஏது சண்டைக்கு இடம்?'' என்று சிலிர்க்கிறார் சிவா!
No comments:
Post a Comment