Wednesday, September 15, 2010

விஜயகாந்த்தின் மூணாவது அணி!


""ஹலோ தலைவரே... .. அங்கே மோதி, இங்கே மோதி கடைசியில கட்சிக்குள்ளேயே பகி ரங்கமா மோதல் நடப்பதை கவனிச்சீங்களா?''

""ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விஷயத்தைத் தானே சொல்றே...''

""ஆமாங்க தலைவரே... கூட்டணிக் கட்சியான தி.மு.க.வை விமர்சித்துக் கொண்டிருந்த இளங்கோவன், இப்ப காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலுவோடு வெளிப் படையா மோதிக்கிட்டிருக்காரு. என்னை நீக்கிப்பாருன்னு சவால் விடும் அளவுக்கு இந்த மோதல் வளர்ந்திருக்குது. கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாதுன்னு குலாம்நபி ஆசாத் அறிக்கைவிட்டபிறகு, இளங்கோவன் அமைதி யாத்தான் இருந்தாரு. அப்ப தங்கபாலு, "நான் ஆசாத்கிட்டே இளங்கோவன் பற்றி சொன்ன தாலதான் அவருக்கு வாய்ப்பூட்டு போடுற மாதிரி அறிக்கை விட்டாரு'ன்னு சொல்ல, இதை இளங்கோவன் ஆதரவாளர்கள் அவர் காதுக்குக் கொண்டு போயிட்டாங்க.''

""இளங்கோவன் டென்ஷனோட பின்னணி இதுதானா!''

""அதுமட்டுமில்லீங்க தலைவரே... இளங்கோவன் ஆதரவாளர்கள் மேலே தங்கபாலு எடுத்த ஒழுங்கு நடவடிக்கையும், இளங்கோவன் சிபாரிசு செய்தவர்களை பி.சி.சி. மெம்பராக்காமல் கண்டுகொள்ளாமல் விட்டதும் பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கிடிச்சி. போதாக்குறைக்கு இளங்கோவன் தரப்பும் தங்கபாலு தரப்பும் ஒருத்தரை யொருத்தர் குற்றம்சாட்டி போஸ்டர் யுத்தமும் நடத்தினாங்க. இதற்கப் புறம்தான், "நீக்கிடுவேன்'னும், "நீக்கிப்பாரு'ன்னும் பட்டிமன்ற பாணியில் மோதல் நடந்துக்கிட்டிருக்குது.''



""இதையெல்லாம் டெல்லித் தலைமை கவனிச்சிக்கிட்டிருக்குமே.. என்ன நடவடிக்கை எடுக்கப் போகுதாம்?''

""தலைமைகிட்டே ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மூணு பேருமே தங்கபாலு தலைவரா நீடிச்சா காங்கிரஸ் வளராதுன்னு ஒரே குரலில் சொல்லியிருக்காங்க. ப.சியைப் பொறுத்தவரை தன்னோட ஆதரவாளரான கடலூர் தொகுதி எம்.பி. கே.எஸ்.அழகிரியை தலைவராக்க ணும்னு வலியுறுத்துறார். வாசனுக்கு, தான் தலைவராகணும்ங்கிற விருப்பம் இருந்தாலும் மத்திய அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் அதை விட்டுட்டு மாநிலத் தலைவர் பதவிக்கு வரவேணாம்னு நினைக்கிறாரு. தன் சார்பில் ஞானதேசிகனை தலைவர் பதவிக்கு வாசன் வலியுறுத்துறாரு. இளங் கோவனோ தனக்கே தலைவர் பதவி தரணும்னு கேட்டுக் கிட்டிருக்காரு.''

""அவர் தலைவரானா கூட்டணி சர்ச்சை இன்னும் அதிகமாயிடுமே!''

""காங்கிரஸ் தலைமையும் அதைத்தான் யோசிக்குது. திருநாவுக்கரசர் தன் ஆதரவாளர்களோடு சோனியா முன்னிலையில் காங்கிரசில் முறைப்படி இணையும் விழா திருச்சியில் பிரம்மாண்டமா நடக்கவிருக்குது. அதற்கான கூட்டத்தை திரட்டும் வேலையில் திருநாவுக்கரசர் தீவிரமா இருக்கிறார். இந்தக் கூட்டத்திற்கு முன்னாடி, இளங்கோவன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படணும்னு தி.மு.க உடன்பிறப்புகள் நினைக்கிறாங்க. இதற்கிடையில், இளங்கோவன் மத்திய அமைச்சரா இருந்தப்ப என்னென்ன செய்தாருங்கிறதை தங்கபாலு தரப்பு திரட்டிக்கிட்டிருக்குது. இளங்கோவனோ, தங்கபாலு பற்றிய ரகசியம் விரைவில் உடையும். அதிலிருந்து அவர் தப்பிக்க முடியாதுன்னு ராமேஸ்வரத்தில் சொல்லியிருக்கிறார். அதோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தன்னோட நண்பரான ஓய்வு பெற்ற பேராசிரியரான ஜெயபாலின் பண்ணை வீட்டிலும் ஆலோ சனை நடத்தியிருக்கிறார்.''

""என்ன ஆலோசனை? யார் யார் கலந்துக்கிட்டாங்க?''

""இளங்கோவனின் ஆதரவாளர்களான மொடக்குறிச்சி எம்.எல்.ஏ பழனிச்சாமி, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மங்கள்ராஜ், விருதுநகர் மாவட் டத் தலைவர் கணேசன், திருச்சி ஜெரோம், நாகர்கோவில் சேர்மன் அசோகன் சாலமன், ராமநாதபுரம் வேலுச்சாமி, பொன் பாண்டியன் உள்பட பலர் கலந்துக்கிட்டாங்க. நம் மீது மாநிலத் தலைமை நடவடிக்கை எடுத்தா ஒற்றுமையா நின்னு கடுமையா எதிர்க்கணும்னு பேசியிருக்காங்க. அதோடு, வர்ற தேர்தல்ல வியூ கத்தை மாத்தி அமைக்கணும்னு ஆலோசனை நடந்திருக்குது. தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் இல்லாத மூன்றாவது அணியை காங்கிரஸ் தலைமையில் அமைக்க ணும். தே.மு.தி.க.வை அ.தி.மு.க. பக்கம் போக விடக்கூடாது. நம்ம பக்கம் கொண்டு வந்து அணி அமைச்சா நிச்சயம் நாம ஆட்சிக்கு வந்திடலாம். இதை தலைமைகிட்டே வலியுறுத்தணும்னு ஆலோசனை நடந்திருக்குது.''

""விஜயகாந்த்தும் மூணாவது அணி பற்றித்தானே பேசுறாரு?''

""அவர் தன்னோட தலைமையில மூணாவது அணி அமைக்கணும்ங்கிறதில் கவனமா இருக்காரு. அ.தி.மு.க.வில் 40 சீட்டுக்கு மேலே தே.மு.தி.க.வுக்கு தரமுடியாதுன்னு தொடர்ந்து சொல்லிக்கிட்டிருப்பதால, தன் தலைமையிலான அணி பற்றி விஜயகாந்த் தீவிரமா ஆலோசிச் சிக்கிட்டிருக்காரு. இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து சமீபத்தில் விஜயகாந்த்தை சந்திச்சி, "காங்கிரசை நீங்க நம்பவேணாம். அவங்க தி.மு.க.கிட்ட அதிக சீட் வாங்கிட்டு அதே கூட்டணியில் நீடிப்பாங்க. நாம வலுவான கூட்டணி அமைச்சு, ஒற்றுமையா செயல்பட்டா நம் தயவில்லாம யாரும் ஆட்சியமைக்க முடியாது'ன்னு சொல்லியிருக்காரு.''
""இந்தக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்குமாம்?''

""பா.ம.க.வை இந்த அணிக்கு கொண்டு வரணும்னு பச்சமுத்து சொல்லியிருக்காரு. அதோடு, திருமாவளவனுக்கு நிறைய உதவிகள் செய்திருப்பதால் தன்னோட பேச்சை அவர் தட்டமாட்டாருன்னும் அவரை இந்த அணிக்கு கொண்டு வர்றேன் னும் சொல்லி யிருக்காரு. மேற்கு மாவட்டங் களில் அணிக்கு பலம் சேர்க்க கொங்கு முன்னேற்றக் கழகத்தையும் சேர்த்துக்க லாம்ங்கிறது பச்சமுத்து வோட கணக்கு. அ.தி.மு.க. அணியில் புதிய தமிழகம் இருப்பதால், தென்மாவட்டங்களில் சப்போர்ட்டுக்கு பசுபதி பாண்டியன் கட்சியை சேர்த்துக்கலாம்னு சொல்லி யிருக்கிறார். தே.மு.தி.க., பா.ம.க., விடுதலைச்சிறுத்தைகள் ஓரணியில் இருந்தால் வடமாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் இந்த அணி வசம்தான்னும், யார் ஆட்சியமைக்கணும்னாலும் தங்கள் தயவு தேவைன்னும் பச்சமுத்து சொன்னதைப் பற்றி தன் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்த விஜயகாந்த், இதுவும் நல்லாத்தானே இருக்குன்னு சொல்லியிருக்காராம்.''

""பா.ம.க இன்னும் எந்தப் பக்கம்னு முடிவு செய்யாமல், தேர்தல் நெருங்கட்டும்னு காத்திருக்குதே?''

""தி.மு.க மீதான அட்டாக் கடுமையா இருக்குது. டாஸ்மாக் கடைகளை நொறுக்கப்போறோம்னு ராம தாஸ் பேட்டி கொடுத்திருக்காரு. அதே நேரத்தில், கட்சித் தலைவரான கோ.க.மணி தி.மு.க.வில் துரைமுருகன் போன்றவங்களை சந்தித்துப் பேசிக்கிட்டுத்தான் இருக்காரு. "உங்க கூட்டணியில்தான் இருக்கணும்னு நினைக்கி றோம். தலைமைகிட்டே சொல்லி, அதற்கான வழியைச் செய்யுங்க'ன்னு சொல்றாராம். இந்த நிலையில், பா.ம.க.வின் காடுவெட்டி குருவுக்கு எதிராகப் பேசிக்கொண்டி ருக்கும் சுபா.இளவரசன், கலைஞரை சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது பா.ம.க தரப்பை ஷாக் அடைய வச்சிருக்கு. என்னதான் நடக்குதுன்னு புரியலை யேன்னு பா.ம.க வட்டாரம் குழம்பிப் போயிருக்குதாம்.''

""மதுரை விமான நிலையத்துக்குப் பேர் வைப்பதிலும் குழப்பம் தீரலையே... விரிவு படுத்தப்பட்டு, பன்னாட்டு விமான நிலையமா தரம் உயர்த்தப்பட்டி ருக்கும் மதுரை ஏர் போர்ட் திறப்புவிழாவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மு.க.அழகிரி, பிரஃபுல் பட்டேல் மூன்று பேரும் முன்னின் றாங்க. இந்த விமான நிலையத் துக்கு இமானுவேல் சேகரன் பெயரை வைக்கச் சொல்லி தேவேந்திர குலவேளாளர்கள் வலியுறுத்தினாங்க. முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்கணும்னு முக்குலத் தோர் குரல் கொடுத்தாங்க. அவர் பெயரை வைத்தால் இவர் சமுதாயமும், இவர் பெயரை வைத்தால் அவர் சமுதாயமும் கலவரத்தில் ஈடுபடும்னு ரிப்போர்ட் போனதால, யார் பெயரையும் வைக்காமலேயே ஏர் போர்ட்டை திறந்துட்டாங்க.''

""தலைவரே... மதுரையைப் பற்றிச் சொன்னதும் அ.தி.மு.க கண்டனப் பொதுக்கூட்ட தேதிதான் ஞாபகத்துக்கு வருது. கொடநாட்டுக்கு ஓ.பன்னீர், செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்த ஜெ., தேர்தலை சீக்கிரம் நடத்த கலைஞர் முடிவு பண்ணியிருக் காரு. அதனாலதான் நலத்திட்டங்களையெல்லாம் வேகமா நிறைவேற்றும் வேலைகள் நடக்குது. நாம அலட்சியமா இருந்திடக்கூடாது. டிசம்பரில் மதுரை பொதுக்கூட்டத்தை நடத்தினா லேட்டா யிடும்னு சொல்லி, அக்டோபர் 18-ந் தேதியே நடத்தணும்னு உத்தரவிட்டிருக்காரு. இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஓ.பி, செங்கோட்டை யன், நத்தம் விசுவநாதன், நயினார் நாகேந்திரன், கோகுல இந்திரா ஆகியோரை பொறுப்பாளரா நியமிச்சிருந்தார். இப்ப கோகுல இந்திராவை நீக்கிட்டு ராஜகண்ணப்பனைப் போட்டிருக் கிறார்.''

""என்னோட தகவலைச் சொல்றேன்... கோவை யில் நடந்த சி.எஸ். நூற்றாண்டு விழாவில் பேசிய ப.சி., தனிப்பட்ட கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. கூட்டணி ஆட்சி என்பதை தவிர்க்க முடியாதுன்னு பேசினார். என்ன அர்த்தத் தில் அப்படி சொன்னாருன்னு அவருக்கு நெருக்கமான வங்க கேட்டிருக்காங்க. ப.சி.யோ.. பிரணாப் முகர்ஜி இருந்தப்பதான் அதைப் பேசினேன். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்கணும்ங்கிறதுதான் கட்சியோட எதிர்பார்ப்பு. அந்த நிலைமையைத்தான் சுட்டிக்காட்டிப் பேசினேன்னு சொன்னாராம்.''

மிஸ்டுகால்!



ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரி விக்க வேண்டும் எனக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு ஏற்புடையதல்ல என தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவே சி.பி.ஐ., ஆ.ராசா உள் ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ""இது நல்லதுதான்'' என்கிற ஆ.ராசா தரப்பு, ""ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கிளப்புவோருக்கு உண்மை நிலையை விளக்கும் வகையில் சி.பி.ஐ.யின் நடவடிக்கைகள் குறித்த பதில் மனு தாக்கல் செய்யப்படும். அதன் மூலம் இப்பிரச்சினையில் உண்மை என்ன என்பதை மக்கள் தெளிவாக அறிந்து கொள்வார்கள்'' என்கிறது.



மனிதநேய அறக்கட்டளையின் மூலமாக ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ் பயிற்சி அளித்து வெற்றிபெறச்செய்யும் சைதை துரைசாமியின் மகன் திருமணமும் வரவேற்பும் கரூரில் நடந்தது. மிகவும் கோலாகலமாக நடந்த இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு 24ஆயிரம் பேர் விருந்து சாப்பிட்டிருக்கிறார்கள். விழாவுக்கு வந்த அனைவருக்கும் தாம்பூலப் பைக்குப் பதிலாக இரண்டு மரக்கன்றுகளை வழங்க ஏற்பாடு செய்தார் சைதை. மரம் வளர்ப்போம். மக்கள் நலம் காப்போம் என மரக்கன்றுகள் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பையில் அச்சிடப் பட்டிருந்ததுடன், அவற்றை எப்படி வளர்ப்பது, அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை விளக்கும் சிறுபுத்தகமும் உடன் வழங்கப்பட்டுள்ளது.



சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியரான தாண்டவன் ஓய்வு பெறவிருக்கிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள், தாண்டவன் துணையுடன் யார் மூலமாவது தீசிஸ் எழுதி, தங்கள் பெயரில் டாக்டரேட் பட்டம் வாங்கி யிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இப்போது ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பேராசிரியர் தாண்டவன் பாராட்டுக் கமிட்டி என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், "இக்கமிட்டியின் கூட்டம் நடைபெறும் நாளில் டி.டி. அல்லது செக்குடன் வாருங்கள்' என தெரி விக்கப்பட்டுள்ளது. பாராட்டு என்ற பெயரில் கடைசிநேர கலெக்ஷனில் படுதீவிரமாக இருக்கிறது தாண்டவன் தரப்பு.



இலட்சிய தி.மு.க தலைவர் டி.ஆரை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக மேடைகளில் பேச வைப்பதற்காக ஒரு டீம் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.



அமெரிக்காவின் இரட் டைகோபுரம் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11-ஆம் தேதியில், திருக்குரானை எரிக்கப்போவ தாகச் சொல்லி பெரும் சர்ச்சையை கிளப்பினார் அமெரிக்காவைச் சேர்ந்த பாதிரியார் எரிக். அவரது பேச்சையும் செயலையும் கண்டித்து கடந்த 10-ந் தேதி சென்னையில் இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். உலகம் முழுவதும் இதுபோல நடந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக அமெரிக்க பாதிரியார் பயந்துபோய் தனது திட்டத்தை கைவிட்டார்.



சிவகங்கை மாவட்டத்தில் நடந்த படுகொலை, விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பேனர் கிழிப்பு ஆகியவற்றால் இமானுவேல் சேகரன் நினைவுநாளில் கலவரம் உருவாகலாம் என இருமாவட்ட காவல்துறையும் முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை பலப் படுத்தியது. கடந்த முறை கலவரம் நடந்த பகுதிகள் வழியே அரசுபஸ் உள்பட எந்த வாகனத்தையும் அனுமதிக்கவில்லை. அதுபோல இளையான்குடி பகுதியில் இரு தரப்புக்கு நேர்ந்த மோதலில் போலீசும் காயமடைந்தபோதும், லத்தியை சுழற்றாமல் சமாதான நடவடிக்கை மேற்கொண்டது போலீஸ். இத்தகைய சாமர்த்திய மான நடவடிக்கைகளால் செப் டம்பர் 11 அன்று அமைதியான முறையில் நினைவுநாள் நிகழ்ச்சிகள் முடிந்தன. இதே பாணியை ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள் பொது மக்கள்.



கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் குழப்பத்தில் இருக்கிறார் என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி கண்டனம் தெரிவித் திருந்தார். அ.தி.மு.க வலி யுறுத்தலால்தான் டாக்டரிட மிருந்து விஜயகாந்த் அட்டாக் அறிக்கை வெளிப்பட்டுள்ளது என்கிறார்கள் தோட்டத்து ஆட் கள்.

No comments:

Post a Comment