Monday, September 13, 2010

பூதத்தை விரட்ட பூஜை!

சரோஜாவின் வீட்டுக்குள் நுழைந்த கோயில் பூசாரி முருகனும், சோதிடர் தினகரனும் ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தார்கள். இருவரின் கண்களி லும் மின்சாரம் கசிந்தது. ""வீடு முழுக்க... அஞ்சடி ஆழத்தில் தங்கமும் வைரமும் வைடூரியமும் வெள்ளியும் சுரங்கமா ஜொலிக்குதே... எப்படிம்மா உங்களுக்கு இதுவரை தெரியாம இருந் துச்சு...'' -கண்களை மூடிக் கணக்குப் போட்ட சோதிடர் தினகரன் ""இன்னக்கி உள்ள ரேட்ல கணக்குப் போட்டால்... ம்... நாற்பது அல்லது ஐம்பது கோடி ரூபாய் மதிப்புக்கு இருக்குமே... கவர்மெண்ட்டுக்கு தெரிஞ்சா... இந்த வீட்டை சீஸ் பண்ணிப் போடுவாங்க... யார்ட்டயும் சொல்லிப் போடாதீங்க!'' ஆச்சரியத்தோடு சொன்னார்கள்.

""அப்படியா! நீங்க சொன்னா கரெக்டா தான் இருக்கும். 17 ஆயிரத்தை கடனா வாங்கிட்டு ஓடுன எங்க கோழிப்பண்ணை வேலைக்காரன் எங்கே இருக்கான்ட்டு "மை' வச்சுப் பார்த்து கரெக்டா சொன்னவங்களாச்சே... சொல்லுங்க... இந்தப் புதையலையெல்லாம் எடுக்கணும்னா என்ன செய்யணும்?''.

""புதையலை காக்கிற பூதத்தை முதல்ல சாந்தப்படுத்தணும்... பேய் பிசாசா இருந்தா கொஞ்ச செலவுல வீட்டை விட்டு விரட்டிடலாங்க. இது 50 கோடி ரூபாய் புதையலை காக்கிற பெரிய பூதமுங்க. இதை விரட்ட ணும்னா பல லட்சம் செலவழிச்சு சாம பூசைகள் போடணும்ங்க... இல்லைனா எங்க உயிரை எடுத்துப் போடும்ங்க!'' என்றார்கள் முருகனும் தினகரனும்.

""எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. உடனே பூசையை ஆரம்பிங்க!'' சம்மதித்தார் சரோஜா.

""அமாவாசை அன்னிக்கு ஆரம்பிக்கலாம்!'' என்றார்கள் சோதிடரும் பூசாரியும்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகிலுள்ள மேல் ஈச்சவாரி செல்லப்ப கவுண்டரின் மனைவிதான் சரோஜா. வசதியான குடும்பம். கோழிப்பண்ணை. சொத்து சுகம். ஒவ்வொரு மாதமும் பூசை போட்டு வீட்டுக்குள் எதாவது ஒரு அறையில் தோண்டுவார்கள். பாதி தோண்டிய தும், 4 எலுமிச்சைகளை சரோஜாவிடம் கொடுப்பார்கள். ""வீதியில் கொண்டு போய் அறுத்து நாலு திசையிலும் வீசிட்டு வாங்கம்மா!'' என்பார்கள். சரோஜா திரும்பி வந்ததும் மீண்டும் தோண்டுவார்கள். புதையல் அகப்படும். அது செப்புக்குடமாகவோ பித்தளை பாத்திரமாகவோ இருக்கும். அதற்குள் சின்னச் சிலைகள்... தங்க வெள்ளிக் காசுகள் நிறைந்திருக்கும். இந்தாங்க... இதைக் கொண்டு போய் போன மாதம் எடுத்த புதையல் குடத்துக்கு பக்கத்திலே வைங்க... மறுபடி இதுக்குள்ள என்ன இருக்குனு யாரும் பாக்கக்கூடாதும்மா... எல்லா புதையலையும் எடுத்தபிறகு மொத்தத்துக்கும் ஒரு பூசையை போட்டுட்டு...!'' என்பார்கள். ஒவ்வொரு முறையும் பூதப் பூசைக்காக 10 லட்சம், 5 லட்சம் என்று வாங்குவார்கள். இந்த ஒரு வருடத்தில், சரோஜாவிடம் முருகனும், தினகரனும் 83 லட்சம் வாங்கி விட்டார்கள். சுமார் 20 லட்சத்தில் புதிதாக ஒரு வீடு கட்டிவிட்டார் முருகன்.

கடைசியாக, ஆர்வம் தாங்க முடியாமல் அறையைத் திறந்து புதையல் பானைகளைப் பார்த்தார் சரோஜா... அத்தனையும் பித்தளையும் தகரமும் சரிகைக் காகிதம் சுற்றிய இரும்புத் துண்டுகளும்...
அப்புறம்தான் காவல்நிலையத்திற்குப் போனார் சரோஜா.

பூசாரி முருகனையும் சோதிடர் தினகரனையும் இழுத்துவந்து விசாரித்தார் இன்ஸ்பெக்டர் பிச்சை.
""கடைசியா ஒரு 17 லட்சத்தை கறந்தா நம்ம கணக்கு ஒரு கோடி வந்திடும்... எஸ்கேப்பாயிடலாம்னு இருந்தோம். மாட்டிக் கிட்டோம்...!'' என்றார்கள் இருவரும்.

No comments:

Post a Comment