Wednesday, September 15, 2010

குரூப் பாலிடிக்ஸ்! லீவு தர மறுப்பு! அரசு ஊழியர் பலி!


ஒரு அரசு ஊழியரின் மரணம் தலைமைச்செயலகத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளமுடியாமல் தவிக்கிறார்கள் அவருடன் பணிபுரிந்த பணியாளர்கள். தமிழக அரசு செய்தித் துறையின் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக (ஏ.பி.ஆர்.ஓ.) தலைமைச்செயலகத்தில் பணிபுரிந்த வர் மோகனவேல். நேரம்காலம் பாராமல் உழைக் கக் கூடியவர். தனது மனைவி தீபவேணியுடன் சென்னை திருவல்லிக்கேணியில் கடும்காய்ச்சல், இருமல், தலைவலியுடன் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த மோகனவேல், 9-ந் தேதி பொது மருத்துவமனையில் அட்மிட்டாக.... சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்து போனார். அவரை பன்றிக்காய்ச்சல் கடுமையாகத் தாக்கியிருந்தது.


சென்னை பொது மருத்துவமனையின் டீன் மோகனசுந்தரம்,’’""தனியார் மருத்துவமனையில் ட்ரீட்மெண்ட் எடுத்திருக்கிறார் மோகனவேல். பன்றிக்காய்ச்சல் என்று அங்கேயே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாங்கள் எவ்வளவோ முயன்றும் அவரை காப்பாற்ற முடிய வில்லை''’’என்கிறார். மருத்துவமனையில் விசாரித்த போது,’’ ""இங்கு வரும்போதே அவருக்கு பன்றிக்காய்ச்சல் கடுமையாகத் தாக்கியிருந்தது. எந்த ட்ரீட்மெண்டுக்கும் அவரது உடல் ஒத்துழைக்க வில்லை. ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸாக அவர் இருந்தார். கடுமையான காய்ச்சல் இருந்துள்ள நிலையிலும் அவர் முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்ளத் தவறி யிருக்கிறார்'' என்கிறார்கள் டாக்டர்கள்.

மோகனவேலின் சக பணியாளர்கள் பலரும் மருத்துவமனையில் குவிந்து விட்டனர். மருத்துவமனையில் இருந்த மோகனவேலின் தந்தை பேராசிரியர் பழனிச்சாமி, "லீவு கொடுக்காம என் புள்ளையை சாகடிச்சிட்டாங்களே' என்று கதறியுள்ளார். பத்திரிகையாளர்களிடமும் இதே ஆதங்கத்தைக் கொட்டினார் பேராசிரியர் பழனிச்சாமி. நாம் பலமுறை அவரை தொடர்பு கொண்டபோது,’""நான் சடங்கில் இருக்கிறேன். இப்போதைக்கு நான் எதுவும் சொல்வதற் கில்லை''’’என்றே பதில் தந்தார்.

மோகனவேலின் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் இருக்கும் செய்தித்துறையின் பணியாளர்கள் பலரிடம் விசாரித்தபோது,’’""போன மாசமெல்லாம் ரொம்பவும் அவஸ்தைப்பட்ட மோகனவேல் சக்தி மருத்துவமனையில் ட்ரீட் மெண்டுக்கு போயிருக்கிறார். உடனடியாக அட்மிட் டாகுங்கள்’என்று சொல்லியிருக்கின்றனர். உடனே ஹாஸ்பிட்டலில் இருந்து ஆஃபிஸ் வந்ததும் அவர் எங்க டிபார்ட்மெண்ட் அதிகாரியிடம் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை லீவ் வேண்டும்னு கேட்க, அப்போதும் கொடுக்கப்படவில்லை.

இதனால் கோபமாகிவிட்ட மோகனவேல் எங்களிடம்,’ "லீவு கொடுக்காம கொல்றாங்க'னு அழுதார். அதுக்கு நாங்க மெடிக்கல் லீவு போட்டுட வேண்டியதுதானேன்னு சொன்னோம். அப்போ மோகனவேல்,’ "மெடிக்கல் லீவு போடறேன்னு போன மாசமே சொன்னேன். அதுக்கு பி.ஆர்.ஓ.க்கள் ’லீவு போட்டா டிரான்ஸ்ஃபர் பண்ணிடுவோம்னு மிரட்டறாங்க. நான் என்னத்த பண்றது'ன்னு கதறினார்.

கடுமையான காய்ச்சலுடனேயே வேலை செய்துக்கிட்டிருந்த மோகனவேல் கடந்த 6-ந்தேதி ரத்தவாந்தி எடுத்து மயங்கிட்டாரு. உடனே முதலுதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய எங்க டிபார்ட்மெண்ட் அதிகாரிங்க... அதைச் செய்யாம ஒரு ஆளை கூப்பிட்டு மோகனவேலை வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டு வந்திடுன்னு உத்தரவு போட்டாங்க. அதன்படி வீட்டுல விடப்பட்டார் மோகனவேல். அதன்பிறகே ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனார். சட்டப்படிப்பு உட்பட 4 எம்.ஏ.பட்டம் பெற்றவர் மோகனவேல். கடுமையான உழைப்பாளி. ஆனா அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு லீவு தராம கொடூரமாக நடந்துக்கிட்டதால அநியாயமா ஒரு உயிர் போயிருக்கிறது. செய்தித் துறையில் குரூப் பாலிடிக்ஸ் ஏராளம். அதனால்தான் லீவு தரப்படவில்லை''’’என்கிறார்கள்.

லீவு தரவேண்டிய பொறுப்பில் இருப்பவர் செய்தித்துறையின் பி.ஆர்.ஓ.மேகவர்ணம். இது குறித்து அவரை நேரில் சந்தித்து கேட்டபோது,’’ ""லீவு தரவில்லையென்று சொல்வது பொய்யான குற்றச்சாட்டு. 3-ந்தேதி ஒரு லீவு லெட்டர் கொடுத்திருக்கிறார். அதில் தனக்கு 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையிலும் 13-ந்தேதியிலிருந்து 16-ந் தேதி வரையிலும் என 7 நாள் முதுகு வலி சிகிச்சைக்காக லீவ் கேட்டுள்ளார். நானும் 3-ந்தேதியே லீவ் சேங்ஷன் செய்துவிட்டேன்''’’என்று சொல்லி அதற்கான ஆதாரத்தைக் காட்டியவர்,’’ ""இவருக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது எப்படின்னு யாருக்கும் தெரியாது. லீவ் தரலைன்னா பன்றிக்காய்ச்சல் வருமா?ன்னும் எனக்கு தெரியாது.. சோகத்தில் இருப்பவங்க ஆதங்கத்தில் ஏதேனும் சொல்லியிருக்க லாம். அதனால இத பெரிசுப்படுத்தாதீங்க''’’என்றார்.

நாம் மேலும் செய்தித் துறையில் விசாரித்த போது,’’""ஆகஸ்ட் மாசம் ரெண்டாவது வாரத்திலிருந்தே கடுமையான காய்ச்சலில் இருந்தார்ங்கிறதும் அப்போதே லீவு கேட்டார்ங்கிறதும் டிபார்ட்மெண்ட்ல எல்லாத்துக்குமே தெரியும். அப்போதே லீவு கொடுத்திருந்தா... ஒரு உயிர் அநியாயமா போயிருக்காது. இன்னைக்கு அவர் செத்திட்ட பின்னால எல்லா சமாளிப்புகளும் பண்றாங்க. "சடங்கு சாஸ்திர சம்பிரதாயங்க ளெல்லாம் முடிஞ்சதும் என் மகன் சாவுக்கு நீதி வேணும்னு கேட்கத்தான் போறேன்'னு எங்களிடம் சொல்லிட்டுப் போயிருக்கிறார் கலைஞரின் "தாய் காவிய'த்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பேராசிரியர் பழனிச்சாமி'' என்கிறார்கள்.

No comments:

Post a Comment