Monday, September 13, 2010

தினமும் 22 மணி நேர வேலை! மலேசியா கொடுமை!

புரோக்கரிடம் 80 ஆயிரத்தை கட்டி, கையில் 30 ஆயிரத்துடன் மலேசியா சென்றார். கோலாலம்பூரில் 3 வருடம் வேலை செய்தார். சம்பாதித்த 7 ஆயிரம் ரூபாயுடன், உயிரோடு ஊருக்கு ஓடி வந்திருக்கிறார். மேலூர் வலைச்சிகுளத்தைச் சேர்ந்த சசிகுமார்.

""கல்யாணமான 3 மாதத்தில போ னான். மனைவியோட சந்தோஷமா இருக்க வேண்டிய வயசுல சம்பாதிக்கப் போனவ னுக்கு இப்படியா நடக்கணும்... உசுரோட வந்திருக்கானே... அதுவே போதும்!'' -சொல்லும் போதே சசிகுமாரின் தந்தை ராமதாஸின் கண்கள் குளமாகி விட்டன. அங்கே என்னதான் நடந்தது? வலைச்சி குளத்தில் ஓட்டு வீட்டுத் தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்த சசிகுமாரிடம் கேட்டோம்.

""2007 ஏப்ரல் 17ஆம் தேதி... விமானத்தில ஏற்றிவிட்டார்கள். மறுநாள் காலைல சுங்கப்பட்டானில போய் இறங்கி னேன். ராத்திரிக்கு தான் என்னை கூட்டிப் போக ஆள் வந்துச்சு. மெடிக்கல் செக்கப் பண்ணணும்னு என் கையில இருந்த 300 வெள்ளியையும் வாங்கிட்டாங்க. ஸ்வீட் கடையில வேலைனு சொல்லியிருந்தாங் களா... அது ஸ்வீட் கடையில்லை... ஸ்வீட் தள்ளுவண்டி...''.

""வீட்டில் தயாரித்த ஸ்வீட்டை வண்டியில் வைத்து 10 கி.மீ. தூரமுள்ள சந்தைக்கு தள்ளிக் கொண்டு போய் அங்கே விற்க வேண்டும். முதலாளி சுப்பிரமணியும் தமிழ்நாட்டுக்காரர் தான். என்னோடு பரமக்குடி கருப்பையாவும் வேலை செய் தார். 8 மணி நேர வேலை என்று தானே கூட்டிப் போனார்கள். ஆனால் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்கணும். இரவு 3 மணி வரை ஏதாவது வேலையிருக்கும்... தினமும் 22 மணி நேர வேலை. ஆறு மாதம் வரை எப்படியோ சகித்துக் கொண்டு வேலை செய்தேன். தீபாவளி வந்தது. சம்பளம் என்னாச்சு என்றேன். மாதம் 7000 சம்பளம். அதையும் இப்போ தரமுடியாது... ஊருக்கு போகும் போது மொத்த மாகத் தான் தருவேன்'' என்றார்.

""இவ்வளவு நேரம் என்னால் வேலை செய்ய முடியாது... நீங்க சாப்பிட் டது போக மீதியை போடு கிறீர்கள்... இப்படி கஷ்டப் படமுடியாது என்று எதிர்த்துப் பேசியதும் அடித்து உதைக்க ஆரம்பித்தார்கள்... என்னால் தாங்க முடியவில்லை. நானும் கருப்பையாவும், கோலாம்பூருக்கு கிளம்பிச் சென்றோம்.

""அங்கே பத்தி உட்லண்ட் என்ற ஸ்வீட் கடையில் வேலைக்குச் சேர்ந்தோம். அங்கேயும் 22 மணி நேர வேலை... 2 மாதத்திற்கு மேல் வேலை செய்ய முடியவில்லை. அங்கிருந்து தப்பித்து எம்.கே. மாஜீம் என்ற ஊரில் உள்ள பூஞ்சோல் பகுதிக்கு ஓடினோம்...''.

""அங்கே ஏழெட்டு தமிழர்கள், அடி உதைபட்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் கடை முதலாளி பாலா எங்கள் பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டார். கக்கூஸ் பக்கத்தில் தான் சாப்பாடு... படுக்கை... எப்படியோ 6 மாதத்தை கடத்தினோம். முடியவில்லை. பாஸ்போர்ட் போனால் போகட்டும் என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தோம். பாஸ்போர்ட் இல்லாமல் தலைமறைவு வாழ்க்கை. பயந்து பயந்து 2 வருடத்தை கழித்தோம்...''.

""பிறகு... அந்த உட்லண்ட்ஸ் ஓனர் டத்தோ செல்வ ராஜ் தந்த 50 ஆயிரத்தை அபராதமாகக் கட்டி விட்டு வெறும் 7000 ரூபாயுடன் தமிழகம் திரும்பினோம்!''.

""அந்த நாட்டுக்காரர்கள் நமக்குச் செய்யும் கொடுமை யை விட, நம்ம தமிழர்கள் நமக்குச் செய்யும் கொடு மைதான் அதிகம். இனி என் ஜென் மத்துக்கும் வெளி நாடுபோக நினைக்க மாட்டேன்!'' -பெருமூச்சை அடக்கிக் கொண்டார் சசிகுமார்.

No comments:

Post a Comment