Wednesday, September 15, 2010

கற்புதான் குருதட்சணையா? கொந்தளிக்கும் மாணவிகள்!


நமது செல்போனில் பதட்டத்தோடு வந்த அந்தப் பெண்குரல்...’’""நர்ஸிங் கல்லூரி மாணவி சாய்னா பேச றேன். நக்கீரன் மூலம் எங்க கல்லூரி தாளாளரின் முகத்திரையைக் கிழிக்க விரும்பறேன். உங்களைச் சந்திக்கணும்'' என்றார் அழுகை கலந்த குரலில்.

"பதட்டப்படாதேம்மா. எப்ப வேண்டு மானாலும் சந்திக்கலாம்'’என்று ஆறுதல் படுத்தினோம். அடுத்த கொஞ்ச நேரத்தில் தன் வாப்பா அப்துல் ரஹீத்துடன் நம்மை சந்தித்தார் சாய்னா. என்ன நடந்தது? என்றோம்.

தனக்கு நேர்ந்த சங்கட அனுபவங்கள் குறித்து விவரிக்க ஆரம்பித்தார் சாய்னா. ""எனக்கு சொந்த ஊர் குடியாத்தம். வாப்பா.. எங்கவூர் மசூதியில் வேலை பாக்கறார். நர்ஸிங் படிச்சி... அன்னை தெரசா மாதிரி... நோயாளிகளுக்கு சேவை பண்ணணும் என்பதுதான் என் லட்சியம். எங்க வாப்பாவும் இதுக்கு ஓ.கே. சொல்லிட்டார். இங்க தமிழ்நாட்டில் இருக்கும் நர்ஸிங் கல்லூரிகள் நன்கொடைகளை அதிகமா கேட்டுச்சி. அப்ப என் தோழிகள்... ஆந்திர மாநில கல்லூரிகள்ல நன்கொடை குறைவு. அதேபோல்.. கட்டணத்தை வசதிக்குத் தகுந்த மாதிரி... கொஞ்ச கொஞ்சமா கட்டலாம்னு சொன்னாங்க. அதைக்கேட்டு சந்தோசமான நான்... திருப்பதியில் இருக்கும் வேதா நர்ஸிங் கல்லூரிக்கு அப்ளிகேஷன் போட்டேன். எனக்கும் சீட் கிடைச்சிது. ரொம்ப சந்தோசமா... அந்தக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன். அங்க என் சந்தோசம் ஒருவாரம் கூட நீடிக்கலை. காரணம், அங்க சேர்ந்தப்பவே என் சீனியர் மாணவிகள் என்னைத் தனியாக் கூப்பிட்டு... "இங்க இருக்கும் கரஸ்பாண்டண்ட் வேதநாயகம் மோசமான ஜொள் பார்ட்டி. அவர்ட்ட ரொம்ப... ஜாக்கிரதையா இருக்கணும்'னு எச்சரிக்கை கொடுத்தாங்க.


அவங்க சொன்னமாதிரியே... கரஸ்பாண்டண்ட் வகுப்பில் டபிள் மீனிங்கில் பேசினார். சிலநேரம் வல்கராவும் கமெண்ட் அடிப்பார். ஹாஸ்டல தங்கி இருக்கும் மாணவிகளை அடிக்கடி வீட்டுக்குக் கூப்பிட்டு.. வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வார். அப்ப அவர் நிறைய சில்மிஷங்களும் பண்ணுவாராம். பல மாணவிகள் இதைச் சொல்லி அழுதிருக்காங்க. அவர் பலவிதமா எனக்குத் தூண்டில் போட்ட போதும் ரெண்டு வருசம் எப்படியோ சமாளிச்சிட் டேன். இப்ப ஃபைனல் இயர். இதற்கிடையில் இதே கல்லூரியில் படிக்கும் எங்க மாமா பையனை எங்க வீட்டில் எனக்கு நிக்காஹ் பண்ணிவச்சிட்டாங்க. எக்ஸாம் நெருங்கிய நேரத்தில் பலருக்கும் ஹால் டிக்கட் கொடுத்த கரஸ்பாண்டண்ட் எனக்கு மட்டும் கொடுக்காம இழுத்தடிச்சார்.. அதைக் கேட்டு நான் அவர் அறைக்குப் போனேன். எடுத்த எடுப்பிலேயே "நீயும் உன் ஹஸ்பண்டும் ஒழுங்கா எக்ஸாமை எழுதி நல்லபடியா ஊர்ப்போய்ச் சேரணும்னா... நான் சொல்றதைக் கேட்கணும். உன்னை நினைச்சி நான் பலநாள் தூங்கலை. உன் அழகு என்னை பைத்தியமா ஆக்கிடிச்சி. ஒருநாள்.. ஒரே ஒருநாள் என் ஆசையை நீ தீர்த்துவச்சா... அடுத்த நிமிஷமே ஹால் டிக்கட் தருவேன். இல்லைன்னா... உன்னைப்பத்தி தப்புத் தப்பா வதந்தி பரப்பி... உன்னை வாழவிடாமப் பண்ணிடு வேன்'னு வில்லன் கணக்கா.. வெட்கமில்லாமப் பேசினார். எனக்கு அழுகை வந்துடுச்சி. அப்படியே வெளில ஓடிவந்துட்டேன்...''’என்று வழிந்த கண்ணீரைத் துடைத்துகொண்டவர்..

""மேதாவி வேசத்திலிருக்கும் அந்த அயோக்கியனின் முகமூடியைக் கிழிக்கணும். என்னோட எக்ஸாமை நான் நல்லபடியா முடிச்சி.. நர்ஸ் சேவையை வாழ்நாள் முழுக்கத் தொடரணும். இதுதான் என் விருப்பம். நம்ம வேலூர் கலெக்டர்ட்ட கூட... அந்த கேடுகெட்ட கரஸ்பாண்டண்ட் பத்தி புகார் கொடுத்திருக்கேன். எனக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன்''’’ என்றார் அழுத்தமாக.
அந்தக் கல்லூரி கரஸ்பாண்டண்ட் வேதநாயகத்தைப் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும்.. ’அவர் பிஸி. வெளியே போயி ருக்கிறார்’ என்ற பதிலையே காலர் ஐ.டி.போல சொல்லிக் கொண்டிருந்தது அந்தக் கல்லூரி நிர்வாகம்.

இது குறித்து வேலூர் ஆட்சியர் ராஜேந்திரனிடன் நாம் கேட்டபோது ‘""சாய்னாவின் புகார் திடுக்கிடவைத்தது. இது குறித்து சித்தூர் கலெக்டருக்கு இவரது புகார் மனுவை அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருக்கிறேன். கல்லூரிக்குள்ளேயே இப்படி காமப் பிசாசுகள் என்றால்... சங்கடமாகத்தான் இருக்கிறது''’என்றார் வருத்தம் இழையோட.

இந்த நிலையில்.... நமது நண்பர் ஒருவர் மூலம் கடலூர் பகுதியைச் சேர்ந்த அந்த இரண்டு கல்லூரி மாணவிகளும் நம்மைச் சந்தித்தனர். அவர்கள் முகத்தில் கவலையான கவலை. அவர்களின் புகாரும் இதே ரகம்.

அவர்களை விசாரித்தபோது... ""கடலூரில் இருக்கும் ஒரு கிறிஸ்த்தவக் கல்லூரியில் படிக்கிறோம். எங்க கல்லூரியில்.. தனது பெயரில் அருமையை வைத்திருக்கும் வசதிப் பேராசிரியர்... துறைத் தலைவரா இருக்கார். அவரிடமும் ஜானின் மகன் என்ற பொருள் வரக்கூடிய பெயரையுடைய பேராசிரியரிடமும் நாங்க படாதபாடு படறோம். புராஜக்ட் ஒர்க்குக்கு கையெழுத்து வாங்கப்போனா.... அனுசரிச்சிப்போனாதான் கையெ ழுத்துன்னு கட்டிப்பிடிக்கறாங்க. மிரட்டி மிரட்டியே தப்புத்தப்பா நடந்துக்கறாங்க. குறிப்பா துறைத் தலைவர் வீட்டில் பெரும்பாலும் அவர் மனைவி இருக்கமாட்டாங்க. அதனால் மகள் வயசு உள்ள மாணவிகளை எல்லாம் பலவந்தமா வீட்டுக்கு கூட்டிட்டுப்போய்.... விதவிதமா தன் ஆசையைத் தீர்த்துக்குவார்.

அழகான மாணவிகளைப் பார்த்தா எதையாவது சொல்லி... தங்கள் சபலத்தை தீர்த்துக்கறதில் இவங்க ரெண்டுபேருமே கில்லாடிங்க. போன வருசம் டூர் போனப்ப... இந்த மன்மதப் பேராசிரியர்கள் பல மாணவிகளைத் தனித்தனியா கூட்டிட்டுப்போய் அங்க இங்க தொட்டுத் தடவி... எல்லா அசிங்கமும் பண்ணி... செல்போன்லயும் படம்பிடிச்சாங்க. அதே போல் இப்ப வந்திருக்கும் பாதரும்.. அந்த விஷயத்தில் பிளேபாயா இருக்கார். படிக்கவரும் மாணவிகள் வாழ்க்கையில் இவர்கள் விளையாடுவது எந்த வகையில் நியாயம்? இவங்க அட்டூழி யம் நாளுக்கு நாள் அதி கரிச்சிக் கிட்டே இருக்கு. இவங்களை யாரு தட்டிக்கேட்கறது.?''’’ என குமுறி யவர்கள்....

""எங்களுக்கு மட்டும் இல்லை. திருவண்ணாமலை கடவுள் பெயரில் இருக்கும் அந்த கல்வி உலகத்தில் படிக்கும் மாணவிகளையும்... சில பேராசிரிய மிருகங்கள் வேட் டையாடிக்கிட்டு இருக்கு. என் தோழி ஒருத்தியை போனில் பேசச் சொல்றேன் அவ கிட்டயும் விசாரிங்க''’ என்றபடி அந்த மாணவியை செல்போன் லைனில் பிடித்துக்கொடுத்தனர்.

லைனில் வந்த அந்த மாணவி...

""எங்க கல்லூரியில் மகிழ்ச்சியானவரும்... அரச மோகனமானவரும் பேராசிரியரா இருக்காங்க. இவங்க மாணவிகளை பாலியல் ரீதியாய்ப் பாடாய்ப் படுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க எந்த மாணவியைக் குறிவைக்கிறாங்களோ அவங்க.. இவங்க கூப்பிடற இடத்துக்கு வந்தாகணும். இல்லைன்னா... எல்லா வகையிலும் பழிவாங்கிடுவாங்க. சமீபத்தில்... நாங்க நெட்டை குட்டைன்னு பட்டப்பெயர் வச்சிக்கூப்பிடும் ரெண்டு மாணவிகளை அவங்க வற்புறுத்தி... பிச்சாவரத்துக்குக் கூட்டிட்டுப்போனாங்க. குட்டையான மாணவிக்கு தங்கமான பெயர். ஆள் சிவப்பா, கொஞ்சம் புஷ்டியா இருப்பா. அந்த நெட்டை மாணவிக்கோ ஒரு மிடுக்கான கவிஞரின் பெயர். ஆள் கருப்பா இருந்தாலும் வளர்ந்து வாட்டசாட்டமா இருப்பா. இவங்களை அங்க இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. அப்ப ஒரு பேராசிரியர் தன் செல்போன்ல... ஒரு மாணவியை அங்க அங்கமா... படம் எடுக்க... அந்த மாணவி... என் வாழ்க்கையை ஏன் சார் வீணாக்கறீங்கன்னு அழுதிருக்கா. அவ அழுகையைப் பார்த்து பயந்துபோன அந்த பேராசிரியர்... சரி இதோ டெலிட் பண்ணிடறேன்னு அவ எதிர்லயே அழிச்சிருக்கார். அப்பவும் அந்தப் பொண்ணு... அழிச்சாலும் படத்தை ரெகவரி பண்ணமுடியும். எனக்கு எதிர்காலத்தில் பிரச்சினை வந்தா என்ன பண்றதுன்னு... கதற... "உனக்கு நிறைய மார்க் போடறேன். ஏன் கவலைப்படறே. இதை நானும் மறந்துடறேன், நீயும் மறந்துடு'ன்னு சொல்லியிருக்கார். பாடம் போதிக்கக்கூடிய புனிதமான தொழிலில் இருப்பவர்கள் செய்யக்கூடிய செய்கையா இது?''’என்றார் கொதிப்பாய்.

இவர்கள் சொன்ன தகவல்களைக் கேட்டு கலவரமான நாம்.. சிதம்பரத்தில் இருக்கும் அந்த எஸ்.ஐ.யைத் தொடர்பு கொண்டு... இது குறித்தெல்லாம் கேட்க...

""கல்விக்கூடங்கள் சமீபகாலமா காமக்கூடங்களா மாறிக்கிட்டு வருது. பிச்சாவரத்துக்கு போறதோட இதே சிதம்பரத்தில் இருக்கும் லாட்ஜ்களில் ரூம்போட்டும் மாணவிகளை இப்படிப் பட்ட பேராசிரியர்கள் வேட்டை யாடறாங்க. ஒரு தடவை நாங்க ரெய்டுக்குப் போனப்ப.... ஒரு லாட்ஜில் மாணவிகளோட தங்கியிருந்த பேராசிரி யரைக் கையும் களவுமா பிடிச்சோம். அந்த மாணவிகள்... வீட்டுக்குத் தெரிஞ்சா தற்கொலை பண்ணிக்குவோம்னு கதற அவங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பி வச்சோம். அந்தப் பேராசிரியருக்கு மட்டும் நாலு அறைகொடுத்து எச்சரிச்சோம். இதேபோல்.... இன்னொரு ரெய்டில் டி.டி.யில் ஒர்க் பண்ணும் 35 வயசு பேராசிரியை ஒருத்தர்... 19 வயசு மாணவ னோட மாட்டினாங்க. அந்தப் பேராசிரி யை இனி இப்படி செய்யமாட்டேன். என்னை விட்டுடுங்கன்னு காலில் விழுந்து கதறினாங்க.

பையனோ மேடம்தான் வற்புறுத்தி அழைச்சிக்கிட்டு வந்தாங்கன்னு கண்ணைக் கசக்கினான்.... அடக் கருமமேன்னு ரெண்டுபேரையும் துரத்திவிட்டோம். காலம் எப்படியெல்லாம் மாறிப்போச்சு பாருங்க'' என்று அதிரவைத்தார்.

இத்தகைய கொடு மைகளுக்கு யார் முற் றுப்புள்ளி வைப்பது?

No comments:

Post a Comment