Saturday, September 4, 2010

திரைக்கூத்து!


அஜீத்துக்கு ரஜினி சிபாரிசு!


"சந்திரமுகி' இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினியிடம் கால்ஷீட் கேட்டு வந்தார் டைரக்டர் பி.வாசு. சமீபத்தில் அஜீத்திடம் பேசிய ரஜினி ‘சந்திரமுகி-பார்ட்-2'வில் நீங்க பண்ணினா நல்லாருக்கும்' என ரெகமெண்ட் செய்தாராம். தலயும் சந்தோஷமாக தலையாட்டி யிருக்கிறார்.


நகுல் கேட்ட கோடி!


"ஈரம்' பட இயக்குநர் அறிவழகன் தனது அடுத்த படத்திற்கு நகுலிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால்... ஒருகோடிப்பக்கமாக சம்பளம் கேட் டாராம் நகுல். இதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. புதிய கமிட்மெண்ட்டுகள் எதுவும் தேடி வராததால்‘"எவ்வளவு வேணாலும் சம்பளத்தை குறைச்சுக்கிறேன்' என தூதுவிட்டபடி இருக் கிறாராம் நகுல்.


சானாவுக்கு பரத் ஒட்டிய போஸ்டர்!


"தம்பிக்கு இந்த ஊரு' படத்தில் பரத்தும் சானா கானும் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இருவரையும் பற்றி கிசுகிசு எழுந்து அடங்கியது. இந்நிலையில் பரத் வசிக்கும் சூளைமேடு வீட்டுப்பகுதியில் சானா கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி கலர்ஃபுல் போஸ் டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது பரத் தரப்பின் கைவண்ணமோ... என கண் ணடிக்கிறார்கள் கோலிவுட்டில்.


ஓடாத நல்ல படங்கள்!


"நல்லால்லாத படம் ஓடாமப் போனா... அது நியாயம். ஆனா கடந்த இருபது நாளா பலபடங்கள் வெளியானது. அதில் சில நல்ல படங்களும் அடக்கம். ஆனால் எந்த தியேட்டரிலுமே கூட்டமில்லை.

மக்கள் கையில் பணப்புழக்கம் குறைவா இருக்குனு நினைக்கிறோம் கோழி...' என வெசனப்பட்டார்கள் தியேட்டர் பார்ட்டிகள் சிலர். ஆனா எல்லா ஒயின்ஷாப்பும் நிரம்பித்தான் வழியுது.


கார்த்தி காதல் வம்பு!


கார்த்தி நடிக்கும் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் அந்தப்பட நாயகிக்கும், கார்த்திக்கும் "அது இது' என கிசு கிசு கிளம் பீருது. ஆனால் தமன்னாவோ, காஜல் அகர் வாலோ ‘"அப்படி எதுவும் இல்ல' என துப்பட்டாவ போட்டு தாண்டாத குறையா விளக்கம் சொல்றாங்க. ஏன் இப்புடி வம்பு கிளம்புதுங்கிற ரகசியம் தான் தெரியல.


அள்ளும் ஹன்சிகா!
தெலுங்கில் இருந்து கோலி வுட்டுக்கு வந்த ஹன்ஸிகா மொத்வானிக்கு எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிறு கிறது மார்க்கெட் நிலவரம். தனுஷுடன் ‘"மாப்பிள்ளை', ஜெயம்ரவியுடன் ‘"இச்', விஜய்யுடன் "வேலாயுதம்' என அள்ளு கிறார். மகளுக்கு இருக்கும் கிரேஸைப் பார்த்து கிறங்கிப்போன ஹன்ஸிகா மம்மி துட்டை கொண்டுபோய் மும்பையில் தன் மகள் பெயரில் ஒரு ஃபிளாட்டை வாங்கி சமீபத்தில் நடந்த மகளின் பர்த்டே வுக்கு வீட்டுச் சாவியை பரிசளித்திருக் கிறார்.

அப்படியா!அந்த பிரமாண்ட டைரக்டர் சின்ன பட்ஜெட்டில் தரமான படங் களை பிற டைரக்டர்களை வைத்து தயா ரித்து வந்தார். ஆனால் சமீபத்தில் ஆற அமர உட்கார்ந்து கணக்குப் பார்த்த போது நிறைய்ய நஷ்டம். அதனால் தயாரிப்பு நிறுவனத்தை தற்காலிக மாக மூடிவிடும் ஐடியாவில் இருக்காராம்.

No comments:

Post a Comment