Saturday, July 3, 2010

234 தொகுதி எந்தக் கட்சிக்கு செல்வாக்கு? நக்கீரன் தேர்தல் கள ஆய்வு முடிவுகள்!
shockan.blogspot.com

தமிழக அரசியல் களம், சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கிவிட்டது. இருக்கிற கூட்டணியை வலிமைப்படுத்தவும், புதிய கூட்டணி அமைக்கவுமான காய் நகர்த்தல்கள் ரகசியமாக நடந்துகொண்டிருக்கின்றன. செம்மொழி மாநாடு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போராட்டம் எல்லாவற்றிலுமே தேர்தல் கணக்கு அடங்கியிருக்கிறது என்பதுதான் அரசியல் வல்லுநர்களின் பார்வை. 2011 மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும் அதற்கு முன்பாகவே நடந்தாலும் எதிர்கொள்வதற்கான வியூகங்களில் ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் தயாராகவே இருக்கின்றன என்பதுதான் தற்போதைய நிலைமை.

தேர்தல் களத்தில் பாய்ச்சலோடு முன் செல்வதே நக்கீரனின் வழக்கம். கள நிலவரம் எப்படியிருக்கிறதென நக்கீரன் தரும் தகவல்களே நம்பகத்தன்மையானவை என்பது தமிழக வாக்காளர்கள்-அரசியல்வாதிகள்-நக்கீரன் வாசகர்கள் ஆகியோரின் மனதில் பதிந்துள்ள உண்மை. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் நக்கீரனின் செய்திகளும் சர்வேக்களும் இதையே நிரூபித்தன. மீண்டும் அந்த நம்பகத்தன்மையை உறுதி செய்யும் விதத்தில் தேர்தல் களத்தில் இறங்கி யிருக்கிறது நக்கீரன்.

2006 மே மாதம் தொடங்கி, கடந்த 50 மாதங்களாக நடந்து வரும் தி.மு.க ஆட்சி மீதான மக்களின் மதிப்பீடு, எதிர்க் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்த மக்களின் கண்ணோட்டம், கூட்டணிகளின் போக்கு, தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, கட்சிகளின் நிலை என அனைத்துக் கோணங்களிலும் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகள், வரும் தேர்தலில் தமிழக மக்கள் எப்படித் தீர்ப்பளிக்கப் போகிறார்கள் என்பதற்கான முன்னோட் டம்.

ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை ஆய்வின் வசதிக்காக, மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளின் தன்மையின் அடிப்படையில் 9 மண்ட லங்களாகப் பிரித்துக்கொண்டோம்.

1.சென்னை, 2.வேலூர், 3.கடலூர், 4.சேலம், 5.கோவை, 6.திருச்சி, 7.தஞ்சை, 8.மதுரை 9.திருநெல்வேலி ஆகிய 9 மண்டலங்களில் நடத்தப்பட்ட கள ஆய்வுகள் ஒவ்வொரு மண்டலமாக, இந்த இதழ் முதல் வெளிவருகிறது. 9 மண்டலங்களின் ஆய்வு முடிவுகளும் வெளியானபின், 10-வது இதழில் தமிழகத் தேர்தல் களத்தின் முழு நிலவரமும் வெளியிடப்படும்.

நக்கீரன் வாசகர்கள் ஒவ்வொரு வரும் வாக்காளர்கள் என்பதால், தங்கள் மதிப்புமிக்க வாக்குரிமையைப் பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்க, இந்தக் கள ஆய்வுகள் மிகவும் கைகொடுக்கும்.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் கள நிலவரத்தை முந்தைய தேர்தல்கள் தொடர்பான வரலாற்றுப்பார்வையுடன் துல்லியமாகத் தரப் போகும் இந்த இதழ்களை தேர்தல் வரையிலும் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டால், தேர்தல் நேரத்திலான விவாதங்கள், முடிவுகள் ஆகியவற் றுக்குத் துணையாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நக்கீரனின் தேர்தல் களப் பாய்ச்சல் தொடங்கி விட்டது. இந்த இதழில்...


சென்னை மண்டலம்!
சென்னை மண்டலத்தில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர், திரு.வி.க நகர், வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம்- திரு வல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், அம்பத்தூர் என 24 சட்டமன்றத் தொகுதிகள் அடங்குகின்றன.

இந்த மண்டலத்தில் ஒவ் வொரு கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் உள்ள செல் வாக்கினை வரைபடம் வாயி லாகக் காணவும்

தி.மு.க.வின் கோட்டை என ஒரு காலத்தில் பெயர் பெற்றி ருந்த சென்னை மாநகரத்தில் உள்ள 14 தொகுதிகளில் கடந்த 2006 தேர்தலின் போது தி.மு.க கூட்டணியும் அ.தி.மு.க கூட்டணியும் சம அளவிலான இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. 2009 எம்.பி தேர்தலில் தென்சென்னை நாடாளு மன்றத் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.

எனவே இந்தத் தேர்தலிலும் இருதரப்பும் சமபலத்துடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்குமான வாக்கு சதவீதத்தில் 5% மட்டுமே இடைவெளி இருப்பது கவனத்திற்குரியது.

அ.தி.மு.க கூட்டணி யில் தே.மு.தி.க இணைந் தால் அந்த அணி, சென்னை மண்டலத்தில் தி.மு.க.வை முந்தக்கூடிய வாய்ப்பிருப்பதையே நமது கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பா.ம.கவின் செல்வாக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி யில் மட்டும் கணிசமாகத் தெரிகிறது. அதே நேரத்தில், தமிழகத்தில் பரவலான செல்வாக்கு இல்லாத பா.ஜ.க.வுக்கு சென்னையில் 4% வாக்குகள் உள்ளதை நமது ஆய்வில் காண முடிந்தது. காங்கிரசுக்கு மாற்றான தேசிய கட்சி என்ற அளவிலும், இந்துத்வா மீது விருப்பம் கொண்டவர்களாலும் பா.ஜ.க.வுக்கு சென்னை மண்டலத்தில் இந்த செல்வாக்கு கிடைத்துள்ளது. கம்யூனிஸ்ட்டுகளின் 3% வாக்குகளில் சி.பி.எம்., சி.பி.ஐ. இரு கட்சிகளும் அடங்கும்.

தமிழகத்தின் மற்ற மண்டலத்தைப் போலவே சென்னை மண்டலத்து வாக்காளர்களிடமும் முக்கிய பிரச் சினையாக இருப்பது விலைவாசி உயர்வுதான். கூடுதல் சுமைகளாக, அறிவிக்கப்படாமல் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, போதியளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகாதது, போக்கு வரத்து நெருக்கடி, ஆளுந்தரப்பு கவுன் சிலர்களின் மிரட்டல்கள், அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகள் உள்ளிட்டவையும் சேர்ந்துள்ளன.

மழைநீர் சேகரிப்பு, வீராணம் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை அ.தி.மு.கவினர் தங்கள் ஆட்சியின் சாதனைகளாக இப்போதும் சென்னை மக்களிடம் நெஞ்சு நிமிர்த்தித் தெரிவிக்கின்றனர். தி.மு.க அரசின் கடல்நீர் குடிநீர்த் திட்டம் நிறைவேறியபிறகுதான் ஆளுந்தரப் பால் இதற்கு பதில் சொல்ல முடியும்.

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலங்கள், சுற்றுச்சாலைகள், சென்னையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெருகியுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கார் தொழிற்சாலைகள் ஆகியவை தி.மு.க அரசின் சாதனைகளாக முன்வைக்கப்படுகின்றன.

அரசின் இலவச திட்டங்களும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான தனி கவனிப்பும் பெண்களிடம் தி.மு.கவுக்கான செல்வாக்கை உயர்த்தியிருந்தாலும், விலைவாசி உயர்வு-மின் வெட்டு ஆகியவை அவர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளன.

ஜாதி-மத கணக்குகள் சென்னையில் பெரிய தாக்கத்தை உண்டாக்குவதில்லை என்றாலும் முஸ்லிம்கள், மீனவர்கள், நாடார்கள், வன்னியர் கள், பிராமணர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின ரின் வாக்குகள் சில தொகுதிகளின் குறிப்பிட்ட பகுதிகளில் முக்கிய பங்காற்றுகின்றன.

தற்போதைய கள நிலவரத்தின்படி, சென்னை மண்டலத்தில் இரண்டு கழகங்களுக்கு மிடையிலான போட்டியில் தி.மு.க தரப்பு தனது மூக்கை முன்னே நீட்டி முந்துவதுபோல இருந் தாலும், தே.மு.தி.க எடுக்கப்போகும் முடிவு, தேர்தலுக்கு முன்பாக தி.மு.க அரசு சென்னை யின் மீது செலுத்தும் கவனம் இவற்றின் அடிப் படையில்தான் வெற்றி-தோல்வி அமையும்.

-(வரும் இதழில் வேலூர் மண்டலம்)

முதல்வரின் அணுகுமுறை!


இந்தியாவில் எந்த முதல்வரும் தலைமைச் செயலகத்துக்கு எல்லா வேலை நாட்களிலும் வருவ தில்லை. கலைஞர் மட்டும் தான் தவறாமல் வருகிறார். சில வேளைகளில், ஞாயிற் றுக்கிழமை போன்ற விடு முறை நாட்களிலும் தனது உடல்நலக்குறைவைப் பொ ருட்படுத்தாமல் தலைமைச் செயலகம் வருகிறார்.


ஒரு மாதத்தில் சரா சரியாக 20 நாட்கள் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசின் செயல் பாடுகளை மக்களிடம் தெரி விக்கிறார். கட்சிக்காரர்கள், அமைச்சரவை சகாக்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர் கள், பத்திரிகையாளர்கள், முதலீட்டாளர்கள், பல் வேறு சங்கத்தினர், திரைப் படத்துறையினர் உள் ளிட்டோர் முதல்வரிடம் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று சந்திக்க முடிகிறது. முந்தைய அரசுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, ஆட்சித் தலைமையை எளிமையாக அணுகமுடி வது இந்த அரசுக்கான சாதக அம்சங்களில் ஒன் றாக இருக்கிறது என்பதை கள நிலவரத்தில் அறிய முடிகிறது.அதே நேரத்தில், முதல்வருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறை வினால் அவரால் மற்ற மாவட்டங் களுக்கு நேரில் செல்ல முடியவில்லை என்பது அர சுக்கும் கட்சியின் தேர்தல் கணக்கிற்கும் இழப்புதான்.முதல்வரின் சார்பாக துணை முதல்வர் பல மாவட்டங்களுக்குத் தொ டர்ந்து சென்று கொண்டிருந்தாலும் , முதல்வரின் வருகை என்ற தேவை நீடித்திருப் பதை தமிழகத்தின் பல பகுதிகளி லும் பரவ லாகக் காண முடிந்தது.


தமிழகம் தழுவிய அளவில் நகரங்களிலும் கிராமங்களிலும் முக்கிய கட்சிகளின் செல்வாக்கு சராசரியாக எந்த அளவில் இருக்கிறது என்பதை வரைபடம் காட்டுகிறது.

நகரப் பகுதிகளில் உள்ள படித்தவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், தொழி லாளர்கள், தொழில்முனைவோர் ஆகி யோரிடம் தி.மு.க.வுக்கு நல்ல செல்வாக்கு நீடிக்கிறது.

இங்கு தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்குமான இடை வெளி கூடுதலாகவே உள்ளது. அதேநேரத்தில், கிராமப் புறங்களில் தி.மு.கவைவிட அ.தி.மு.க சற்று கூடுதல் பலத்துடன் உள்ளது. எனினும், இலவச திட்டங்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான சலுகைகள் உள்ளிட்டவற்றால் அ.தி.மு.கவின் பழைய பலத்தை கிராமப்புறத்தில் தி.மு.க குறைத் துள்ளது என்பதை ஆய்வில் அறிய முடிகிறது.

விவசாயத்தின் மோசமான நிலைமை, சிறுதொழில்துறைக் கான பாதிப்பு, விலைவாசி உயர்வு இவைகளை தி.மு.க அரசு கையாளப் போகும் விதத்தைப் பொ றுத்தே கிராமங் களில் அ.தி.மு.க- தி.மு.க இரண்டுக்கு மான இடைவெளி கூடுவதும் குறைவதும் அமையும்.

நகரங்களை விட கிராமங்களில் கூடுதல் செல்வாக்கு பெற்றி ருக்கும் கட்சிகளின் வரிசையில் பா.ம.க, தே.மு.தி.க ஆகியவை அமைகின்றன.

கம்யூனிஸ்ட்டுகள் இரு பகுதிகளிலும் ஒரேயளவிலான வாக்குகளைக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வைப் போல கிராமங்களைவிட நகரப்பகுதியில் கூடுதல் வாக்குகளைக் கொண்டிருக் கிறது அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸ்.


மக்களை வாட்டும் விலைவாசி உயர்வு!விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்துவதில் தி.மு.க அரசு தோல்வி யடைந்துள்ளது என்பதை நமது கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் வழங்கப்படும் பொருட்கள் , நிலைமையை ஓரளவே சமாளிக்கின்றன.

பொது விநியோகத் திட்டத்தால் நடுத்தர மக்களில் ஒரு பகுதியினர் விலைவாசி உயர்விலிருந்து தப்பினாலும், அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் மோசமான விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள னர்.


இடதுசாரி அமைப்புகளுடன் சேர்ந்து தற்போது போராட்டங்களை முன்னெடுக்கும் அ.தி.மு.கவுடன் விஜயகாந்த்தும் சேர்ந்து விலைவாசி உயர்வுக்கு மத்திய-மாநில அரசுகள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்தால், கிராமப்புறங்களில் அ.தி. மு.கவின் வாக்குபலத்தை இந்தப் பிரச்சாரம் கணிசமாக உயர்த்தும் வாய்ப்பு உள்ளது.


அதனால் தி.மு.க மிகக் கடுமையான போட்டியை சந்திக்கும். மத்திய அரசின் தொடர்ச்சியான பெட்ரோலிய பொருட் கள் மீதான விலை உயர்வு நடவடிக் கைகள் மாநிலத்தில் உள்ள தி.மு.க அரசுக்கு நெருக்கடியை உருவாக்கி யிருப்பதை மக்களின் மனநிலையிலிருந்து அறிய முடிகிறது

No comments:

Post a Comment