Saturday, August 21, 2010

""ஜெயலலிதாவின் பூச்சாண்டிக்கு பயந்தவள் நானல்ல'' -சீறும் கனிமொழி எம்.பி!


இலக்கிய மேடை, பொது மேடை, அரசியல் மேடை என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லா மேடைகளிலும் கனிவான பேச்சையே வெளிப்படுத்தி வருபவர் கவிஞர் கனிமொழி. அப்படிப்பட்டவரே தூத்துக்குடியில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜெ.வுக்கு எதிராக சீறியிருக்கிறார். கோவை, திருச்சி என்று பொதுக்கூட்டங்களை கூட்டி தி.மு.க.வுக்கு எதிராகவும், கலைஞர் குடும்பத்துக்கு எதிராகவும் அதிரடி அட்டாக் பேச்சினை ஜெ. வெளிப்படுத்தி வரும் நிலையில் கனிமொழி எம்.பி.யுடன் பேசினோம். அவருடைய பேட்டியிலிருந்து...

தேர்தல் வருடம் தொடங்கிவிட்டது. பொதுத்தேர்தலுக்கு தயாராகி விட்டதா தி.மு.க.?

கனிமொழி எம்.பி. : சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க தி.மு.க. எப்போதும் தயாராகவே உள்ளது. 5-வது முறையாக முதல்வர் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களே எங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். தலைவரின் ஆட்சிக்கு தங்கள் ஆதரவு என்ன என்பதை கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதே வெளிப்படுத்தி விட்டார்கள் தமிழக மக்கள். அந்த தேர்தலுக்கு பிறகும் நிறைய திட்டங்கள் முழுமை பெற்றிருக் கின்றன. எனவே வரும் சட்டமன்றத் தேர்தலிலும் முழுமையான வெற்றியை தி.மு.க. கூட்டணி பெறும்.

நலத்திட்டங்களால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியும் என்று நினைக்கிறீர்களா? கடந்த 1996-2001 ஆட்சி காலத்திலும் நிறைய திட்டங்களை செயல்படுத்தியது தி.மு.க. ஆனால் அதன் பிறகு வந்த தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாமல் போனதே?

கனிமொழி எம்.பி. : 2001-ம் ஆண்டு தேர்தலின் போது ஜெயலலிதாவின் வாய்ச்சவடால்களையும், பொய்ப்பிரச்சாரத்தையும் நம்பி மக்கள் வாக் களித்துவிட்டார்கள். ஆனால் தங்களின் நம் பிக்கை எவ்வளவு பொய்யானது என் பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டார்கள் அந்த அம்மையா ரின் 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில். அரசு ஊழியர் கள், ஆசிரியர் கள், விவசாயி கள், சாலைப் பணியாளர்கள், காவல்துறை யினர் என்று எத்தனை லட் சம் பேர் பாதிக்கப்பட்டார்கள் என் பதை எல்லோருமே நினைவில் வைத் திருக்கிறார்கள். அதனால் மீண்டும் ஒரு முறை ஜெயலலிதாவால் மக்களை ஏமாற்ற முடியாது.

கோவை, திருச்சி என்று ஜெயலலிதா பேச்சை கேட்க கூட்டம் கூடிவருகிறதே?

கனிமொழி எம்.பி. : என்றைக்காவது ஒரு நாள் அத்திப்பூத்தார் போல கூட்டங்களுக்கு வருபவரை பார்க்க கூட்டம் வரும்தானே? 4 வருஷம் காணாமல் போன ஒருத்தர் வருகிறாரே... அவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க வருகிறார்கள். வந்த கூட்டத்தில் பொதுமக்கள் எத்தனை பேர் இருந்தார்கள்? பெரும்பாலும் அ.தி. மு.க.வினர்தான் வந்திருப்பார்கள். தங்கள் கட்சித்தலைவியை சந்திக்கவே முடியாத நிலையில் இருக்கும் கட்சிக்காரர்கள் இப்படிப்பட்ட கூட்டங்களிலாவது தலைவியை பார்க்க முடியுமா என்ற நினைப்பில் வந்திருப்பார்கள்.

இந்த கூட்டமும் தானாக வந்த கூட்டமா? திரட்டப்பட்ட கூட்டம்தானே? அதுவும் தமிழகம் முழுவதிலும் இருந்து வண்டி வாகனம் வைத்து, தலைக்கு நூறு, இருநூறு என்று கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம்தானே?

அபூர்வமாக கூட்டம் போடு பவர்களுக்கு வருகிற கூட்டத்தை விட தினம் ஒரு நிகழ்ச்சி என்று கலந்துகொள்ளும் தலைவர் கலைஞர் பொதுக்கூட்டத்துக்கு வரும் கூட்டம் அதிகமாகத்தானே இருக்கிறது.

ஒரு பெண் அரசியல்வாதியாக ஜெயலலிதாவின் பொதுக்கூட்ட பேச்சினை எப்படி பார்க்கிறீர்கள்? உங்களையும் அடிக்கடி விமர்சிக்கிறாரே?

கனிமொழி எம்.பி. : அரசியல்வாதியில் ஆண், பெண் என்கிற வித்தியாசம் எல்லாம் எனக்கு இல்லை. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக ஜெயலலிதாவின் பேச்சு யாருக் கும் முன் மாதிரி யாக அமைய வில்லை. ஜெய லலிதாவின் பொதுக்கூட்ட பேச்சினை எந்த அரசியல் கட்சி யின் அடிமட்ட பேச்சாளரும் கூட முன்மாதிரியாக எடுத் துக்கொள்ள கூடாது.

ஜெயலலிதாவின் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவள் நானல்ல. எதிர்ப்புகள்தான் ரத்தினக்கம்பளங்கள் என்று பழகியவர்கள் தி.மு.க.வினர். ஒரு அரசியல் கட்சியின் தலைமையே அநாகரிகமாக பேசும்போது அந்த தலைமையின் கீழ் செயல்படும் பேச்சாளர்கள் எப்படி பேசுவார்கள் என்று எண்ணிப்பாருங்கள். நாகரிக அரசியலுக்கு ஏற்ற வகையில் ஜெயலலிதா பேசவில்லை.

தன்னுடைய பேச்சில் பிரதானமாக கலைஞர் குடும்ப அட்டாக்கைத்தான் வெளிப்படுத்துகிறார் ஜெ. தேர்தல் பிரச்சாரத்திலும் இதுவே எதிரொலிக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

கனிமொழி எம்.பி. : குடும்பமாக ஜெ.வை எதிர்கொள்வோம். தி.மு.க.வே ஒரு குடும்பம் என்ற உணர்வில்தான் எங்களை வளர்த்திருக்கிறார் தலைவர். ஒரு அரசியல் கட்சித் தலைவரின் மகள் என்பதற்காகவே எனக்கான அரசியல் வாய்ப்புகள் மறுக்கப்பட முடியாது. குடும்ப அரசியல் என்று பேசுகிற ஜெயலலிதாவின் யோக்கியதை என்ன? ஒரு குடும்பத்தையே தத்தெடுத்து அரசியலில் புகுத்தவில்லையா அவர்? ஆடம்பரமாக ஒரு திருமணம் செய்து வைப்பதற்காகவே ஒரு பிள்ளையை தத்தெடுக்கவில்லையா?

காங்கிரஸ்-தி.மு.க. உறவு சரியில்லை என்றும் விரைவில் தங்களுடைய கூட்டணிக்கு காங்கிரஸ் வந்துவிடும் என்றும் காத்திருக்கிறதே அ.தி.மு.க.?

கனிமொழி எம்.பி. : கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. தூங்கி எழுந்ததும்தான் உண்மை எது என்பது புரியும். இப்போது கனவு கண்டு கொண்டி ருக்கிறார் ஜெயலலிதா. 4 ஆண்டுகால தூக்கத்திற்கு பிறகு இப்போதுதான் கண் விழித்திருக்கிறார். இன்னும் தூக்கம் முழுமையாக கலையவில்லை. உதயசூரியன் உண்மை நிலவரத்தை புரிய வைக்கும்.

இந்த கட்சி வருகிறது... அந்த கட்சி வருகிறது என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு இன்னொரு காரணம்... சொந்தக் கட்சிக்காரர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்கிற கவலைதான். அ.தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் எல்லோரும் தி.மு.க.விற்கு வந்துகொண்டிருப்ப தால் எங்கே தன் கூடாரம் காலியாகிவிடுமோ என்கிற கவலையில் இருக் கிறார் ஜெயலலிதா. கலைந்து கொண்டி ருக்கும் கூட்டத்தை தடுத்து நிறுத்து வதற்காகத்தான் இப்படிப்பட்ட பிரச்சாரங்களை செய்து வருகிறார்.

தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் இடையிலான கூட்டணி உறுதியாக இருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறேன். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்த லிலும் எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.





புதிய தமிழகம், ம.ம.க. என்று புதிய கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருகிறது அ.தி.மு.க. உங்கள் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருமா?

கனிமொழி எம்.பி. : எங்களின் தற்போதைய கூட்டணியே மிக வலுவான கூட்டணியாகத்தான் இருக் கிறது. வலுவில்லாதவர்கள்தான் அவசரப்படவேண்டும். தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக் கின்றன. புதிய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம். வெற்றிக் கூட்டணி அமைப்பது எப்படி என்பது தலைவருக்கு நன்றாகவே தெரியும். உரிய காலத்தில் உறுதியான கூட்டணியை அமைப்பார் தலைவர் கலைஞர்.

கலைஞர் மீதும் அவருடைய ஆட்சி மீதும் அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை வைக்கிறாரே ஜெயலலிதா?

கனிமொழி எம்.பி. : ஜனநாயக நாட்டில் விமர்சிப்பதற்கு எல்லோ ருக்கும் உரிமை இருக்கிறது. அந்த வகையில் ஜெயலலிதாவும் குற்றச் சாட்டுகளை வைக்கட்டும். ஆனால் அவர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? தான் சொன்ன குற்றச்சாட்டை இது வரை அவர் நிரூபித்தது உண்டா? ஜெய லலிதாவின் குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் ஆதாரப்பூர்வமாக பதிலடி கொடுத்து வரு கிறார் தலைவர் கலைஞர். ஆனால் அவரின் அறிக்கை களை படிக்காமலேயே மீண்டும் மீண்டும் பாடிய பழைய பல்லவியையே பாடி வருகிறார் ஜெயலலிதா.

கலைஞர் தன்னுடைய கோபாலபுரம் வீட்டில் 780 சதுர அடி மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்திருப்பதாக கூட குற்றம் சாட்டியிருக்கிறாரே ஜெ.?





கனிமொழி எம்.பி. : இதற்கு தெளிவான பதிலை சென்னை மேயர் மா.சுப்ரமணியன் விளக்கமாகவே கொடுத்திருக்கிறார். தன்னுடைய கோபாலபுரம் வீட்டையே தானமாக தருகிறார் தலைவர் கலைஞர். அப்படிப்பட்ட தலைவரை பற்றி பேச ஜெயலலிதாவுக்கு தகுதி இருக்கிறதா? ஓய்வெடுப்பதற்காக அவர் கட்டியிருக்கும் சிறுதாவூர் பங்களா தலித் மக்களுக்காக கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது என்று அவருடன் கூட்டணியில் இருக்கும் தோழர்களே குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இன்னொரு ஓய்வுத்தலமான கொடநாடு எஸ்டேட் பகுதியில், பாதையை மறைத்து தன் எஸ்டேட் வழியாகச் செல்ல அந்தப் பகுதி மக்களுக்கு தகுதி இல்லை என்று சொல்பவர்தானே அம்மையார் ஜெயலலிதா!

தஞ்சை அல்லது திருவாரூரில் கலைஞர் போட்டியிடலாம் என்றும் கூட பேசப்படுகிறதே?

கனிமொழி எம்.பி. : தமிழகத்தின் எந்த தொகுதியில் நின்றாலும் பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் தலைவர்.

தஞ்சை பெரிய கோயில் விழா குறித்த செண்டிமெண்ட் பயம் ஒரு சில தி.மு.க.வினர் மத்தியிலேயே நிலவுகிறது. கலைஞரின் முடிவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

கனிமொழி எம்.பி.: பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த பெரியாரின் வழித் தோன்றலுக்கு எந்த செண்டிமெண் டும் கிடையாது என்று நிரூபித்திருக்கிறார் தலைவர்.

No comments:

Post a Comment