Saturday, August 21, 2010

முதல்நாள் அதிரடி!


திருச்சி மண்டல டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்க வேல்... எப்போது வந்து இறங்குவார் என மாவட்ட எல்லைக்குள் நுழையும் அத்தனை அரசு வாகனங்களையும் காக்கிகள் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்க... பொன்.மாணிக்கவேலோ சீக்ரெட்டாக ஒரு பிரைவேட் காரில் திருச்சி நோக்கி வந்தார். வரும் வழியில் பேட்ரோல் ரோந்துப் போலீஸார்... லாரி போன்ற வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்தபடியே இருக்க... இதைத் தன் செல்போனில் படம் பிடித்தபடியே வந்தார்.

நேராக டி.ஐ.ஜி.க்கான அலுவலகத்துக்குப் போகாமல் ... அவரது வாகனம் ஏ.ஆர். கிரவுண்டுக் குள் நுழைய... அங்கிருந்த காக்கிகள் விதிர்விதிர்த் துப்போய்... ஓடிவந்து சல்யூட் வைத்தனர். அப்போது தடித்த உடலோடு நடக்க முடியாமல் ஒரு வயதான சீனியர் எஸ்.ஐ. ஓடிவருவதைக் கண்ட பொன்.மாணிக்கவேல்... "என்ன உடம்பில் ஏதாவது பிரச்சினையா? ஓய்வுபெற எவ்வளவு மாதம் இருக்கு?' என்றார் அக்கறையாய். அந்த எஸ்.ஐ.யோ "ஐயா. நான் சுகர்பேஷண்ட். ஓய்வுபெற மூணுமாதம்தான் இருக்கு'’என்றார் பவ்வியமாய்.

""இனி நீங்க கஷ்டமான டூட்டியெல்லாம் பார்க்கவேணாம். ரோல்காலில் கூட நிக்கவேணாம். மிச்சமிருக்கும் மூணு மாசத்தையும் டி.எஸ்.பி. ஆபீஸில் ரைட்டிங் வேலைபார்த்துக் கழிச்சிடுங்க''’ என்று மாணிக்கவேல் சொல்ல... அந்த எஸ்.ஐ. நெகிழ்ந்துபோய் ""நன்றிங்கய்யா''’என்றார். பிறகு அங்கிருந்து அண்ணா ஸ்டேடியத்தின் பின்புறம் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு அவர் புறப்பட... துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அவருடன் புறப்பட்டனர். ""எனக்கே போலீஸ் பாதுகாப்பா? என்னிடம் துப்பாக்கி இருக்கு. என்னைக் காப் பாற்றிக்க எனக்குத்தெரியும். நீங்க வரவேண் டாம்''’என்றபடி தனியாக வீட்டுக்குச் சென்றார். அங்கு காத்திருந்த ஆர்டர்லி போலீஸாரிடம் ‘""நீங்க இனி உங்க ஸ்டேஷன் ஒர்க்கை கவனிங்க. இங்க ஆள் தேவையில்லை''’ என்றவர் அங்கிருந்த டைப்பிஸ்டையும் அலுவலகத்துக்கு அனுப்பினார். பின்னர் அருகிலிருந்த தன் அலுவலகத்தில் சார்ஜ் எடுத்துக்கொண்ட டி.ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்... தன் கண்ட்ரோலில் இருக்கும் 5 மாவட்டங்களின் எஸ்.பி., இன்ஸ்பெக் டர்களை தனித்தனியாக மைக்கில் கூப்பிட்டு...’’""ஆறு மாசத்துக்குள்ள ஓய்வுபெற இருக்கும் காவலர் களுக்கு கடுமையான வேலைகளைத் தரவேண்டாம் என்று உங்கள் எஸ்.பி.யைக் கேட்டுக்கொண்டதாகச் சொல்லுங்கள்''’என்று தகவல் கொடுத்தார்.

அப்போது தமிழரசி என்ற பெண்மணி புகார் மனுவோடு வந்து ""எங்க தி.மு.க. கவுன்சிலர் சேகர், தொகுப்பு வீடு ஒதுக்க லஞ்சம் கேட்டார். நான் கொடுக்காததால் வீடு தரவில்லை. பிறகு நானே இடம் வாங்கி வீடு கட்டினேன். அப்போது வி.ஏ.ஓ. மூலம் மீண்டும் அவர் லஞ்சம்கேட்க.. வி.ஏ.ஓ.வை விஜிலென்சில் பிடித்துக்கொடுத்தேன்.

இதனால் ஆத்திரமான கவுன்சிலர்... இன்ஸ்பெக்டர் வாசுதேவனுடன் சேர்ந்து என் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார். இது குறித்து டி.எஸ்.பி., எஸ்.பி.ன்னு புகார் கொடுத்தும் புகாரைக் கூட பதிவு பண்ண லைங்கய்யா''’ என்று தேம்பினார். உடனே எஸ்.பி.கலியமூர்த்தியைக் கூப்பிட்டு.. உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட... டிபார்ட்மெண்ட் விறுவிறுக்க ஆரம்பித்தது.

முதல்நாளிலேயே அதிரடி ஆக்ஷனைப் பார்த்த பொது மக்கள்... டி.ஐ.ஜி.க்கு சபாஷ் போட்டார்கள். இந்த அதிரடி தொடரவேண்டம் என்கிறார்கள்.

No comments:

Post a Comment