Sunday, August 29, 2010

தேர்தல் களத்தில் குதித்த தி.மு.க.!



""ஹலோ தலைவரே... .... தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம், தேர்தல் களத்துக்கு கட்சியை தயார்படுத்து றதுக்கு வழி வகுத்திடிச்சி.''

""சேவை வரி விதிப்பு, பொதுநுழைவுத்தேர்வு, இலங்கைத் தமிழர் பிரச்சினை இது பற்றியெல்லாம் விவாதித்தது பற்றித்தானே செய்திகள் வெளியானது.''

""அறிவாலயத்தில் 24-ந் தேதி நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில், நாம போன முறை பேசியதுபோலவே மத்திய அரசின் சேவை வரி விதிப்பு திருத்த மசோதா பற்றிய சப்ஜெக்ட்தான் மெயினா இருந்தது. டெல்லியில் இது சம்பந்தமான கூட்டத்தில் கலந்துக்கிட்ட அமைச்சர் துரை முருகன்கிட்டே இந்த மசோதாவின் நன்மை, தீமை பற்றி எம்.பி.க்கள்கிட்டே பேசும்படி சொல்லியிருந்தார் கலைஞர். துரைமுருகனும் எல்லா விவரங்களையும் தயார் செய்துட்டு வந்து, எம்.பி.க்களுக்குப் புரிகிற மாதிரி விளக்கிப் பேசியிருக்கிறார். அதோடு, பொதுநுழைவுத் தேர்வை நிரந்தரமா ரத்துசெய்வது, இலங்கைத் தமிழர் நலன்களைப் பாதுகாப்பது உள்பட பல விஷயங்களும் விவாதிக்கப்பட, கூட்டத்தின் பிற்பகுதியில் அரசியல் நிலவரம், எலெக்ஷன் களம் பற்றிய விவாதங்கள் தொடங்கிடிச்சி.''

""அரசியல்னா எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி எல்லாவற்றையும் பற்றி பேசியிருப்பாங்களே!''

""ஜெ.வின் இரண்டு கண்டனப் பொதுக்கூட்டங்களுக்கான ரெஸ்பான்ஸ் பற்றி பேச்சு வந்தப்ப, அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி மூணு பேரும், நமக்கு ஆதரவு நல்லாத்தான் இருக்கு. எம்.பி. எலெக்ஷன் நேரத்திலயும் மீடியாக்காரங்க இப்படித்தான் எழுதினாங்க. ஆனா நாமதான் ஜெயித் தோம். அதனால இது பற்றியெல்லாம் அலட்டிக்கத் தேவையில்லைன்னு சொல்லியிருக்காங்க. மத்திய இணையமைச்சர் பழனிமாணிக்கம், அது கூட்டப்படுகிற கூட்டம்னு சொன்னார். அப்ப டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, கூட்டப்படுற கூட்டமா இருந்தாலும் நாம் அதை சாதாரணமா எடுத்துக்கக்கூடாது. தேர்தல் நெருக்கத்தில் இருப்பதால் நாம் தீவிரமா வேலை செய்யணும்னு சொன்னதையும் மற்ற எம்.பிக்கள் கூர்ந்து கவனிச்சாங்க.''

""ஜெ.வின் அடுத்த பொதுக்கூட்டம் மதுரையில் நடக்குதுங்கிறதால எல்லோர் கவனமும் அழகிரி பக்கம் இருந்திருக்குமே?''





""அவர் பேசுறப்ப, அந்தம்மாவுக்கு கூட்டம் கூடுவதா சொல்றாங்களே... .. மதுரையில் என்ன கூட்டம் வருதுங்கிறதை நான் பார்க்கிறேன்னு சொல்ல, அப்ப தயாநிதி மாறன் குறுக்கிட்டு, இல்லை மாமா.. மீடியா நம்ம கூட இல்லை. அதுதான் பிரச்சினைன்னு சொன்னார். உடனே, சன் டி.வி. எந்தப் பக்கம் இருக்குன்னு கேட்ட அழகிரி, உங்க டி.வியில் தான் ஜெ. பற்றியும் விஜயகாந்த் பற்றியும் அதிகமா செய்தி வருதுன்னு சொன்னார். மொத்த எம்.பிக்கள்கிட்டேயிருந்தும் கைதட் டல் சத்தம். நிலைமையை புரிஞ்சுக்கிட்ட தயாநிதி, நான் எம்.பியாகத்தான் பேசுறேன். சன் டி.வி.யோட ஸ்டாண்ட் பற்றி கலாநிதி கிட்டேதான் கேட்கணும்னு சொல்லியிருக் கிறார். உங்க நாலெட்ஜ் இல்லாமல்தான் இதெல்லாம் நடக்குதான்னு அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார் அழகிரி.''

""கட்சி நிர்வாகிகள் மட்டத்திலேயும் அதிருப்திகள் வெளிப்படுதே...!''

""அதைப் பற்றியும் எம்.பிக்கள் கூட்டத் தில் குரல் ஒலித்தது. உட்கட்சி தேர்தலுக்குப் பிறகு நிறைய மாவட்டங்களில் இரண்டு குரூப்பாக பிரிஞ்சு கிடக்கிறாங்கன்னும் அதை யெல்லாம் சரி செய்யணும்னும் சொல்லப்பட்டது. எம்.பிக்கள் கூட்டம் முடிந்து மதியம் சி.ஐ.டி காலனி வீட்டுக்குப் போன கலைஞரை திருச்சி சிவா எம்.பி சந்தித்தார்.''

""அவர் ஏரியாவில் தானே குரூப் பாலிடிக்ஸ் அடிதடியா வெளிப்பட்டது...''

""அதைப் பற்றித்தான் கலைஞரிடம் கம்ப்ளைண்ட் பண்ணினார் சிவா. கலைஞரின் வருகையையொட்டி வரவேற்பு பேனர் வைக்கும் விவகாரத்தில் திருச்சி துணை மேயர் அன்பழகன் தரப்பு தன்னோட ஆட்களை தாக்கியது பற்றி சொல்லியிருக்கிறார். எல்லா வற்றையும் கேட்டுக்கிட்ட கலைஞர், சாயங் காலம் அமைச்சர்களை சந்தித் தப்ப, திருச்சி மாவட்டச்செய லாளரான அமைச்சர் நேரு கிட்டே பேனர் விவகாரம் பற்றி கலைஞர் விசாரித்திருக் கிறார்.''

""அமைச்சர் என்ன சொன்னாராம்?''

""பெயரில் திருச்சி இருந்தாலும் சிவா இதுவரைக்கும் தன் எம்.பி. நிதியிலிருந்து திருச்சிக்கு எதையும் செய்யலைங்கிறதைச் சொன்ன நேரு, நடுரோட்டில் பேனர் வைக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சினையையும், அழகிரி படம் போட்ட தாலதான் எடுக்கச் சொன்னதா சிவா தரப்பு டைவர்ட் பண்ணியதாகவும் கலைஞர்கிட்டே சொல்லியிருக் கிறார். அப்ப பக்கத்தில் இருந்த வனத்துறை அமைச் சர் செல்வராஜை பார்த்து, நீ என்னய்யா சொல் றேன்னு கலைஞர் கேட்க, இரண்டு தரப்புக்குமிடை யில் இணக்கமான சூழ்நிலை இல்லைங்கய்யான்னு பொதுவா சொல்லிவிட்டார் செல்வராஜ். தேர்தலுக்கு இன்னும் ஏழெட்டு மாதங்களே இருப்பதால ஒழுங்கா, தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் போட்டு அரசாங்க நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு போகணும்ங்கிறதுதான் கலைஞரோட அட்வைஸ்.''

""கோஷ்டிப் பூசல்கள் இருந்தால் இதெல்லாம் எப்படி ஒழுங்கா நடக்கும்?''

""அதையெல்லாம் சரி செய்யத்தானே செப் டம்பர் 21-ந் தேதி முதல் அக்டோபர் 14-ந் தேதி வரை மாவட்ட வாரியா நிர்வாகிகள் கூட்டம் நடத்துற அறி விப்பு வெளியாகியிருக்குது. எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒலித்த குரல்களின் எதிரொலிதான் இந்த அறிவிப்பு. மாவட்ட, நகர, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் கலைஞரை சந்தித்து தங்கள் பகுதியில் கட்சி நிலவரத்தைச் சொல்லப்போறாங்க. 2006-ஆம் வருஷ எலெக்ஷனுக்கு முன்னாடி இப்படித்தான் தி.மு.க.வுக்குள் கோஷ்டிப் பூசல்கள் அதிகமா இருந்தது. கலைஞர் இதேபோல கூட்டம் நடத்தினார். லோக்கலில் யார் மேலே கோபமோ வருத்தமோ இருந்தாலும் தலைமைகிட்டே அப்படியே சொன் னாங்க. அதுவே அவங்களோட டென்ஷனை குறைச்சிடிச்சி. இனி தலைவர் பார்த்துக்குவார்ங்கிற தெம்போடு இரண்டு கோஷ்டிகளும் தேர்தல் களத்தில் தீவிரமா இறங்கி கட்சி வேலையை செய்ததால தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. இப்பவும் கோஷ்டிப் பூசல்களைத் தீர்ப்ப தற்கு இந்தக் கூட்டம் உதவும்னு நம்பப்படுது.''

""கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் கூட்டம் பற்றி?''

""அரசின் திட்டங்களை முடுக்கிவிடவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைக் கையாளவும் தான் இந்தக் கூட்டம். இலவச திட்டங்கள் எந்தளவு மக்களைப் போய்ச் சேர்ந்திருக்குது, இடைத்தரகர்கள் மூலம் ஏதாவது பிரச்சினைகள் வருதா, இன்னும் எங்கெங்கே இலவசத் திட்டங்கள் போய்ச்சேரலைங்கிறதையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி அதிகாரிகளை வேகப்படுத்துவதுதான் முதல்வரோட திட்டம். இதற்காக மாவட்ட வாரியாக அனைத்து புள்ளி விவரங்களையும் முன்கூட்டியே சேகரித்து வைத்து விட்டார் கலைஞர். அதிகாரிகள் தரப்பின் புள்ளி விவரங்களோடு ஒப்பிட்டு பார்த்து நடவடிக்கை இருக்கும் என்பதால், கூட்டத்துக்கு வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே கலெக்டர்களும் எஸ்.பிக்களும் பரீட்சைக்குப் படிக்கிற மாணவர்கள்போல ரெடியானாங்க.''

""கண்டன பொதுக்கூட்டம், கூட்டணி ஆலோசனைன்னு அ.தி.மு.க., தன் தேர்தல் வேலைகளை தொடங்கிட்டதா சொல்லப் படும் நிலையில், தி.மு.க.வும் தேர்தல் களத் தில் இறங்கிடிச்சி. ஆளுங்கட்சி ஒரு பக்கம் விறுவிறுப்பா வியூகம் வகுத்தால், எதிர்க் கட்சியும் அதிரடியா நிர்வாகிகள் கூட்டத் தைக் கூட்டி பரபரப்பை உண்டாக்குதே!''





""போயஸ்கார்டனில் அ.தி.மு.க மா.செ.க்களை அழைத்து ஜெ. நடத்திய ஆலோசனைகள் பற்றித்தானே சொல்றீங்க. தி.மு.க எம்.பிக்கள் கூட்டம் நடந்த அதே நாளில்தான் அவசர அவரமா எல்லா மா.செ.க்களையும் போன் போட்டு வரச்சொன்னார் ஜெ. எல்லாரும் பரபரக்க வந்து ஆஜரானாங்க. கிராமப்புறங்களில் கவனம் செலுத்தி தேர்தல் வேலை பார்க்க ணும்னு சொன்ன ஜெ., பூத் கமிட்டிகளை எல்லா இடத்திலும் அமைக்கும்படி கட்சிக் காரங்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார். கோவை, திருச்சி கூட்டத்தின் சி.டிகளை எல்லோருக்கும் கொடுத்து, ஊரெல்லாம் இதைப் போட்டுக் காட்டுங்கன்னு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கப்பட்டிருக்குது.''

""தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமா இருப்பதை தேசிய கட்சி களும் கவனிச்சிக்கிட்டிருக்குமே!''

""கவனிக்காமல் இருக்குமா.. டெல்லியின் மனநிலை எப்படி இருக்குன்னு நானும் நம்ம சோர்ஸ்கள் மூலம் கவனிச்சிக் கிட்டுத்தான் இருக்கேங்க தலைவரே.. ... கார்த்தி சிதம்பரத் துக்கு நெருக்கமான இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஒருத்தர் சமீபத்தில் ராகுல்காந்தியை சந்தித்திருக்கிறார். தி.மு.க.வுக்கு எதிரான விஷயங்களை அடுக்கிக்கொண்டே போக, எல்லா வற்றையும் ராகுல் கேட்டுக்கிட்டாராம். கடைசியில், தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமையணும்ங்கிறதுதான் என் னோட விருப்பம். அதற்கு கட்சியைப் பலப் படுத்தணும். அது சம்பந்தமான யோசனை இருந்தா சொல்லுங்க. இந்தத் தேர் தலைப் பொறுத்தவரை தி.மு.க.வோடு தான் கூட்டணின்னு முடிவாயிடிச்சி. அதில் எந்த மாற்றமும் கிடையாதுன்னு ராகுல் சொல்லியிருக்கிறார். டெல்லிக்குப் போய்த் திரும்பிய இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் இதை கார்த்தி சிதம்பரத்திடம் சொல்லியிருக்கிறார். அதற்கப்புறம் தான், கார்த்தியின் தி.மு.க. எதிர்ப்பு பேச்சு சுத்தமா குறைந்து போனதாம்.''

""ஓ...''

""ஆனா.. குலாம்நபி ஆசாத்தின் எச்சரிக்கை பேட்டிக் குப் பிறகும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பில் சூடு குறைஞ்சதா தெரியல. விஜயகாந்த்துக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக நேரில் போன இளங்கோவன், கேக் ஊட்டி விஜயகாந்த்தை வாழ்த்தினார். இதைப் பத்திரிகை காரங்க ஃபோட்டோ எடுத்தாங்க. இதுதான் பேப்பரிலே முக்கிய செய்தியா இருக்கப்போகுதுன்னு விஜயகாந்த் சொல்ல, ஆமாமா.. இதைப் பார்த்து கலைஞர் டென்ஷ னாவார். நல்லா ஆகட்டும்னு கமெண்ட் அடித்தாராம் இளங்கோவன். தன் ஆதரவாளர்கள்கிட்டே, மேலிட அறிவிப்புக்காக சும்மா கொஞ்ச நாள் அடக்கி வாசிப்போம். அதற்கப்புறம் வழக்கமான கச்சேரியை ஆரம்பிச்சிடவேண்டி யதுதான்னு சொல்லிக்கிட்டிருக்காராம். கூட்டணியை உறுதிப்படுத்தி ஆசாத் பேட்டி கொடுத்திருக்கிற நிலையில், இளங்கோவன் இனியும் அட்டாக்கில் இறங்குவதை அனு மதிக்கக்கூடாதுன்னு தி.மு.க. தரப்பு நினைக்குது. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய அழகிரி, காங்கிரசில் சிலர் ரொம்ப ஓவரா பேசிக்கிட்டிருக்காங்க. நாமும் அவங்களுக்குப் பதிலடி கொடுக்கணும்னு சொல்லியிருக்கிறார்.''

""காங்கிரசைப் பொறுத்தவரை பதிலடிகளைவிட உள்ளடிகள்தான் அதிகம். முன்னாள் அமைச்சர் சி.சுப்ரமணியத்தின் நூற் றாண்டுவிழா கோவையில் நடக்குது. ப.சிதம்பரம் முன்னின்று நடத்தும் இந்த விழாவில் சி.எஸ். உருவம் பொறித்த நாணயத்தை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிடுறார். இந்த விழாவுக்கு வருமாறு அழைத்தும், வியாழக்கிழமை இரவு வரை வாசன் ஓ.கே. சொல்லவேயில்லை. சி.எஸ். நூற்றாண்டு விழாவை ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியா கொண் டாடத் திட்டமிட்டிருக்குது.''

""சி.பி.எம்.மிலிருந்து நீக்கப்பட்ட கோவிந்தசாமி எம்.எல்.ஏ. முறைப்படி, தி.மு.க.வில் சேர்ந்துட்டாரே?''

""அறிவாலயத்தில் கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த கோவிந்தசாமியோடு திருப்பூர் ஏரியா வாசிகள் நிறைய பேர் வந்திருந்தாங்க. ஆனா, சி.பி.எம். தரப்போ கோவிந்த சாமியோடு வந்தவர்கள் யார், யார்னு ஒருவரை விடாமல் வாட்ச் பண்ணியதாகவும் அவர்களில் ஒரே ஒரு மாவட்டக் குழு உறுப்பினர், ஒரு கவுன்சிலர், டைஃபி தோழர் ஒருவரைத் தவிர வேறு யாரும் சி.பி.எம். நிர்வாகிகள் இல்லைன்னு சொல்லுது.''

""அரசியல் கணக்குகள் எப்போதுமே வித்தியாச மாகத்தான் இருக்கும்!''

""திருச்சிக்கு 15 நாளில் இரண்டாவது முறையாக ஜெ. விசிட் அடித்தது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பான பேச்சை உண்டாக்கியிருக்குது. வியாழக்கிழமையன்னைக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஜெ. கலந்துக்கிட்டார். என்ன காரணம்னு கோவில் வட்டாரத்தில் நான் விசாரித்து அறிந்த தகவலைச் சொல்றேன். இப்போதெல்லாம் ஜெ.வுக்கு கோபம் உச்சக்கட்டத்துக்குப் போகுதாம். கண்ட்ரோல் பண்ண முடியலையாம். அதைக் கட்டுப்படுத்தத்தான் ஸ்ரீரங்கத்தில் சிறப்பு பூஜை. இதற்காக கோவிலுக்குள் ஜெ. நடந்து வர வசதியாக ஸ்பெஷல் படிக்கட்டு ரெடி செய்யப் பட்டிருந்தது. நடந்து வந்தவர் ஓய்வெடுப்பதற்காக ஸ்பெஷல் நாற்காலியும் போடப்பட்டது. சாமி இருக்கும் மூலஸ்தானத்திற்கு நடந்து சென்றார் ஜெ. அங்கும் அவரது வசதிக்காக ஸ்பெஷல் சேர் போடப் பட்டது. ஜனாதிபதி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.கள் யாராக இருந்தாலும் மூலஸ்தானத்தில் நின்றபடி வழிபடுவார் கள். சிறப்பு பூஜை செய்ய வந்த ஜெ.வுக்கு சிறப்பு மரியாதையாக சேர் போடப்பட்டது.''

மிஸ்டுகால்!



தனது பிறந்தநாளை பெரியளவில் செலவு செய்து கொண்டாடிய இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் எஸ்.ஆர்.எம்.பச்ச முத்து, 46 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிப்பவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்று பேசியுள்ளார். பச்சமுத்துவின் பிறந்தநாளுக்கு விஜயகாந்த்தும், விஜயகாந்த் பிறந்தநாளுக்கு பச்சமுத்துவும் பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டது, மூன்றாவது அணி அமைப்பதற்கான முன்னோட்டம் என்கிறார்கள்.



இரண்டாவது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார் ரஜினி, கட்சி வேறுபாடு பார்க்காமல் கலைஞர், ஜெ., பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த விஜயகாந்த், திருமாவளவன், தா.பா. உள்பட பல தலைவர்களுக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தது போலவே, தனது பாபா படத்தை திரையிட விடாமல் தடுத்த பா.ம.க. வுக்கு இளைஞரணி பொறுப்பு வகிக்கும் அன்புமணியிடமும் நேரில் அழைப்பிதழ் கொடுத்தார். அப்போது அன்பு மணி, ""உங்களுக்கோ திரையுலகிற் கோ நாங்க எதிரிகள் கிடையாது. கருத்து ரீதியாகத்தான் எதிர்த்தோம்'' என்று சொல்ல ரஜினியும், ""நீங்களும் மத்திய அமைச்சரா சிறப்பா செயல்பட்டீங்க'' என்று பாராட்டியிருக்கிறார். இருவரும் 45 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment