Thursday, August 19, 2010

கல்யாண மண்டபங்களில் களவாணித்தனம்!


"வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களிடம் அரசு நிர்ணயித்த மின் கட்டணத்தை விட அதிகமாக மின்சாரக் கட்டணம் வசூல் செய்யும் வீட்டு உரிமை யாளருக்கு மூன்று மாத சிறைத்தண்ட னையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்' என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பிக்க... வாடகைதாரரின் வயிற்றில் பசும்பாலை வார்த்ததுபோல் மகிழ்ச்சியடைந்தனர்.

""இதேமாதிரி இந்த கல்யாண மண்டபங்களில் அளவுக்கதிகமா மின்கட்டணம் வசூல் பண்ணி மிரள வைக்கிறாங்களே அதுக்கும் ஒரு வழிபண்ண ணும்ங்க'' என்று டென்ஷனாகப் பேசுகிறார் சமீபத்தில் திருமணமான நாகராஜ். ""மண்டப வாடகை, சாப்பாடு, சீரியல் செட், நாற்காலி, டெக்கரேஷன், சமையல் பாத்திரங்கள், வீடியோ கவரேஜ்னு அந்த ஒரு நாளைக்கு மட்டுமே 40,000-த்துக்கு மேல் செலவு பண்றோம்னா கரண்டு பில்லுக்கு மட்டுமே நாலாயிரத்துக்கு மேல கொடுக்க வேண்டி யிருக்கு. கமர்ஷியல் கரண்ட் யூனிட்டுக்கு 5 ரூபாய் 50 பைசா இருக்கும்போதுகூட சில கல்யாண மண்டபங்களில் யூனிட்டுக்கு 10 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரைக்கும் ட்ரிபிள் மடங்கு ஜாஸ்தியாக வசூல் பண்றாங்க.

அதுமட்டுமில்லீங்க... இப்போல்லாம் எவ்வளவு யூனிட் கரண்ட் ஆகியிருக்குன்னு கூட காண்பிக்கிறதில்ல. ஆவரேஜா இவ்வளவுதான் வரும்னு கணக்கு பண்ணி மொத்தமா ஒரு அமௌண்ட் வாங்கிக்கிறாங்க. அதுக் கான பில்லும் கொடுக்கிறதில்ல. இது மட்டுமா? கரண்ட் போயிடுச்சின்னா எமர் ஜென்ஸிக்கு ஜெனரேட்டர் வாடகை மற்றும் டீசல் வேற. என்ன பண்றது? திருமண பரபரப்புல அந்த நேரத்துல சிந்திக்க முடியலைன்னாலும்... உட்கார்ந்து கணக்குப் போடும்போதுதான் கல்யாண மண்டபத்துக்காரங்க நமக்கு காது குத்தி அனுப்புறது தெரிய வந்து வேதனைப்பட வேண்டியிருக்கு'' என்கிறார் புலம்பலாய்.

""இதே மாதிரிதாங்க எங்க அண்ணன் கல்யாணத்திலேயும் செலவாச்சு'' என்கிற ஹேமநாதன் இன்னொரு அனுபவத்தையும் சுட்டிக்காட்டுகிறார். ""என்னோட ஃப்ரெண்டுக்கு சென்னை எழும்பூர்ல இருக்கிற பிரபல ஹோட்டலில் கல்யாணம். ஒரு யூனிட்டுக்கு 25 ரூபாய்னு (ஹப்பாடா) கணக்குப் போட்டு 220 யூனிட்டுக்கு 5,500 மற்றும் சர்வீஸ் சார்ஜ் 1,000 ரூபாய்னு 6,500 வசூல் பண்ணியிருக் காங்க. என்னதான் வாழ்க்கையில ஒருதட வை கல்யாணம் பண்ணினாலும் எக்கச்சக்க மான செலவுகளுக்கும் மத்தியில கரண்டுக்கு மட்டுமே இவ்வளவா செலவு பண்ண முடியும்?'' -என்று கேள்வி எழுப்புகிறார்.

"கன்சர்ட்' நுகர்வோர் இந்தியா அமைப்பின் துணை இயக்குனரான எம்.ஆர். கிருஷ்ணனோ, ""ரெண்டு மாசத்துக்கு ஒரு முறைதான் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துறோம்னு அளவிடப்படுது. அந்த அடிப்படையில வீடுகளில் ரெண்டு மாதத் தில் 50 யூனிட் வரை பயன்படுத்தினால் 75 பைசா, 51-லிருந்து 100 யூனிட்டுக்கு 80 பைசா, 101-லிருந்து 200 யூனிட்டுக்கு 1.60 பைசா, 201-லிருந்து 600 யூனிட் வரை பயன்படுத்தினால் 2.20 பைசா என்று கட்டணமா வசூலிக்கப் படுது. இப்படி அதிகமான யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த பயன்படுத்த கட்டணத்தையும் கொஞ்சம் அதிகப்படுத்தியதன் நோக்கம் மின்சா ரத்தை சிக்கனமா பயன்படுத்த வேண்டும் என் பதுதான். ஆனால், இதையே காரணமாக வைத் துக்கொண்டு வாடகை வீடுகளில் குடியிருப்பவர் களிடம் யூனிட்டுக்கு 4 ரூபாயிலிருந்து எட்டு ரூபாய் வரை என நாலு மடங்கு வசூலிக்க ஆரம் பித்ததின் விளைவுதான்... கடுமையான எச்சரிப் புக்கும் தண்டனைக்கும் ஆளாக்கப்பட்டிருக் கிறார்கள் வீட்டு உரிமையாளர்கள்.

இதே நிலையைத்தான் திருமண மண்டப உரிமையாளர்களும், கூட்டங்களுக்கு ஹால்களை வாடகைக்கு விடுகிறவர்களும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு கமர்ஷியல் என்ற அடிப்படையில் 50 யூனிட் வரை 4.30 பைசா என்றும், 51-ல் இருந்து 100 வரை 5.30 பைசான்னும் 101-லிருந்து 201 வரை 6.50 பைசா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் யூனிட்டுக்கு 8 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை என மண்டபம் புக் பண்ணுகிறவர்களிடம் கொள்ளைய டிக்கிறார்கள் மண்டப உரிமையாளர்கள். இதைத் தடுக்க வேண்டுமென்றால் மண்டபத் துக்கு லைசென்ஸ் கொடுக்கும்போதே கரண்ட் எவ்வளவு யூனிட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? சர்வீஸ் எவ்வளவு? என்ற கட்டண விபரத்தை மண்டபம் புக் பண்ணுகிறவர்களுக்கு "பில்'லாக கொடுக்க அறிவுறுத்த வேண்டும். இல்லை யென்றால் பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்படும்.

மேலும், சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, கோவை, வேலூர், விழுப்புரம், திருச்சி என ஒன்பது மாவட்டங்களிலும் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றத்திலுள்ள சூப்பிரண்டெண்ட் என்ஜினியரிடம் புகார் கொடுக்கலாம்.

9444018955 என்கிற செல் நம்பரில் ஃப்ளையிங் ஸ்குவாடிடமும் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். (தொலைபேசி எண்: 044-28521300, 28520416) ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறைவாக உள்ளது. மேலும்... தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வெப்ஸைட் முகவரியான tneb.net.org, www.tneb.in மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் www.tnerc.gov.in வெப்ஸைட்டிலும் முழு விபரங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கு. ஆனா, தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு தமி ழில் விபரங்களை கொண்டுவர கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படல. இதனாலதான் ஹவுஸ் ஓனர்களும், மண்டப உரிமையாளர்களும் கரண்ட் பில்லில் கொள் ளையடிக்கிறாங்க'' என்கிறார் தெளிவாக. சரி... அரசு நிர்ணயித்த மின்கட்டணத்தை விட அளவுக்கதிகமா வசூல் செய்யும் திருமண மண்டப உரிமையாளர்கள் மீது புகார் கொடுத்தால் என்ன நடவடிக்கை எடுப்பீங்க? தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை சூப்பிரண் டெண்ட்டை தொடர்புகொண்டு பேசினோம்.

""இதுவரை அப்படிப்பட்ட புகார் எதுவும் வரவில்லை. அப்படி வந்தால் அந்த புகாரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்புவோம். அவர்கள்தான் முடிவு செய்வார்கள்'' என்றார். தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கபிலன் ஐ.ஏ.எஸ்.-ஐ தொடர்பு கொண்டோம். ""அவர் ஜட்ஜ் மாதிரி... இதுக்குப் பதில் சொல்லமாட்டார். வேணும்னா டைரக்டர் ஆஃப் டேரிஃப் பாலுகிட்ட பேசுங்க'' என்று அங்குள்ள பர்ஸனல் உதவியாளர் சொல்ல... பேசினோம்.
""மண்டப உரிமையாளர் அதிகமா கட்டணம் வசூலிச்சா... புகார் கொடுக்க வேண்டிய இடம் மின்சார வாரியம்தான். என்ன நடவடிக்கைன்னு எங்க ஆணை யத்தால் இன்னும் தீர்மானிக்கப்படலை'' என்கிறார் குழப்பத்துடன்.

""என்ன நடவடிக்கை என்று உத்தரவு போட் டாலே முறைகேடுகளை முழுமையாக தடுக்க முடியாது. அப்படியிருக்க, விரைவில் தீர்மானித்தால் மட்டுமே திருமண மண்டபங்களில் நடக்கும் சீட்டிங்குகளை கட்டுப்படுத்த முடியும்'' என்பது பாதிக்கப்பட்ட வர்களின் குமுறல்.

No comments:

Post a Comment