Thursday, August 19, 2010

இரண்டாவது ரவுண்ட்! வெல்லப் போவது யார்?



தகிக்க ஆரம்பித்திருக்கும் அரசியல் களத்தில்... ’யாருக்கு அதிகக் கூட்டம் கூடுகிறது’ என்ற கோதாவில் குதித்து... ஆளுங்கட்சியான தி.மு.க.வும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் பரபரப்பூட்டி வருகின்றன. கோவையில் நடந்த இந்த முதல் ரவுண்ட் யுத்தத்தில் ஜெ’ கூட்டத் துக்குப் போட்டியாக... கலைஞர் தலைமையில் உ.பி.க்களும் ஒரு மெஹா கூட்டத்தைக் கூட்டி கோவையைக் குலுங்கவைத்தனர். இது குறித்து "கலைஞரா? ஜெயலலிதாவா? முதல் ரவுண்டில் ஜெயித்தது யார்?'’ என்ற தலைப்பில் அட்டைப் படக் கட்டுரையை நக்கீரன் தந்திருந்தது.

தற்போது இரண்டாவது ரவுண்ட் யுத்தத் துக்கான களமாகியிருக்கிறது மலைக்கோட்டை நகரான திருச்சி.

செப்டம்பர் 8-ல் கலைஞரை அழைத்து கவுண்ட்டர் கொடுக்க சூரியத்தரப்பு காத்திருக்க... விலைவாசி எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரில் கடந்த 14-ந் தேதி.. இலைத் தரப்பு ஜெ.’ தலைமையில் ஒரு பிரமாண்ட கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தில் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமில்லை.

பரபர உழைப்பு : திருச்சியில் சொல்லிக் கொள்ளும்படி கூட்டத்தைத் திரட்டக்கூடிய பெரும்புள்ளிகள் இல்லாததால்... கூட்டத் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே... மாஜிக் களான ஓ.பி.யும், செங்கோட்டையனும் திருச்சியிலேயே ஹால்ட் அடித்து... பர பரப்பாக களமிறங்கினர். பல மாவட்டங் களிலும் ஊழியர் கூட்டத்தைக் கூட்டி... கண்டிப்பாக மாவட்டத்துக்கு 100 வண்டி கள் வரவேண்டும் என்றபடி.. அதற்கான பாசனத்தையும் நடத்தினர். இதைத் தொடர்ந்து... 14-ந் தேதி காலையில் இருந்தே திருச்சி நோக்கி ர.ர.க்கள் படையெடுக்கத் தொடங்கினர்.





தடுப்புகளை உடைத்தெறிந்த ர.ர.க்கள்: திருச்சி பைபாஸ் பகுதியில் வாகனங்களை நிறுத்த 10-க்கும் மேற்பட்ட இடங்களை போலீஸார் ஒதுக்கிகொடுத்தும்... அவற்றைக் கண்டுகொள்ளாத ர.ர.க்கள்... போலீஸ் வைத்த தடுப்புகளையெல்லாம் உடைத்துக்கொண்டு நகருக்குள் புக... டிராஃபிக் ஜாமில் மூச்சுத் திணறியது திருச்சி. ர.ர.க்களை கண்ட்ரோல் பண்ண முடியாத போலீஸாரோ... இதற்கு மேல் என்ன செய்வது என்று நடப்பதை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

ஸ்ரீரங்க கலாட்டா : இதற்கிடையே சேலம் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன்... தான் திரட்டி வந்த ர.ர.க் களில் 100 பேருக்கு ’இவ்வளவு தூரம் வந்துட்டு ஸ்ரீரங் கம் போகாமல் இருக்கலாமா? அடுத்து நம்ம ஆட்சி வரணும்னு வேண்டிக்கிட்டு நல்லபடியா சாமி தரிசனம் பண்ணிட்டு வாங்க’ என்றபடி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சிபாரிசு கடிதம் எழுதிக்கொடுத்து அனுப்பினார். காலை நேரத்திலேயே உற்சாகமிகுதியில் இருந்த அந்த ர.ர.க்கள்....’"அடுத்து எங்க ஆட்சிதான் மறந்துடாதீங்க.. எங்களை மூலஸ்தானத்தில் உட்காரவையுங்கள். சிறப்பு பூஜைகள் செய்யுங்கள்' என்று தகராறு செய்ய.. அவர் களை கோயில் ஊழியர்கள் சமாதானப்படுத்த முயல... ர.ர.க்களோ கோயில் ஊழியர்களை அடித்தனர். சமா ளிக்க முடியாத குருக்கள்கள் போலீஸுக்குத் தகவல் சொல்ல... டி.ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுவே நேரில்போய்... தகராறு செய்தவர்களை விரட்டினார்.

கிரேன் ஏற்பாடு : டாப் ஆங்கிளில் படம் பிடித்தால்.... கூட்டம் அதிக மாகத் தெரியும் என்பதால்... பத்திரிகையாளர்களுக்கு கிரேன் ஒன்றை ஏற்பாடு செய்ய முடி வெடுத்த ர.ர.க்கள்.... 80 ஆயிரம் ரூபாய்க்கு நாள் வாடகைக்கு விடப்படும் கிரேன் ஒன்றை ’பெல்’ நிறுவன அதிகாரிகளிடம் பேசி 20 ஆயிரத்துக்கு வாட கைக்கு எடுத்தனர். இதன்மீது பத்திரிகையாளர்கள் ஏற்றப்பட.. ர.ர.க்கள் கூட்டம் ஆரவாரித்து கையசைத்து போஸ்கொடுத்தது.

விரக்தியடைந்த முத்த ரையர்கள் டீம் : தங்கள் முத்தரையர் சமூக பலத்தை நிரூபித்து ஜெ’விடம் முக்கியத்துவத் தைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில்... அதிகமாய் ஆட்களைத் திரட்டிவந்த மாஜி கு.ப.கி, மாஜி எம்.எல்.ஏ. கே.கே.பி. போன்றோர்.. மேடையில் ஏற்றப்படாத விரக்தியில் முத்தரை யர் கூட்டம் சலசலத்தது.

மயக்கம் : வெய்யிலில் நீண்டநேரம் நின்ற பெண்களில் பலர் பொத்பொத் என மயங்கி விழ... அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்குக் கூட யாரும் ஏற்பாடு செய்யவில்லை. ர.ர.க்களே அவர்களை நிழல் இருக்கும் இடங்களுக்குத் தூக்கிப்போய் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். கூட்டத்தினரின் தாகத்தைக் கண்ட எம்.ஜி.ஆர். காலத்து சீனியர் ர.ர. பொன்மலை டேனியல்... 50 தண்ணீர் கேன்களை ஏற்பாடு செய்தார். அது யானைப் பசிக்கு சோளப்பொறிபோல ஆக.. அடுத்து வாட்டர் பாக்கெட் மூட்டைகளை ரெடி பண்ணினார். அவரது நண்பர்களோ... பாக்கெட் விநியோகம் வேண்டவே வேண்டாம். உற்சாக மிகுதியில் கூட்டத்தை நோக்கி வீச ஆரம்பித்துவிடுவார்கள். சச்சரவாகிவிடும் என அதைத் தடுத்துவிட்டனர்.

உற்சாகம் :
திருச்சி ஏர்போர்ட்டில் மாலை 4.20-க்கு சசிகலா சகிதம் வந்து இறங்கிய ஜெ’ அங்கிருந்து கார்மூலம் கூட்ட மேடை நோக்கிவந்தார். வழிநெடுக திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து உற்சாகமானவர்... கைகூப்பியும் கையசைத்தும் ர.ர.க்களை குஷிப்படுத் தினார். 5.50-க்கு மேடையேறிய ஜெ.’மேடையைச் சுற்றி வந்து கையசைப்பார் என கூட்டம் காத்திருக்க... ஜெ. வோ... நேராக நாற்காலியில் போய் உட்கார்ந்துவிட்டார். சசியோ காரிலேயே காத்திருந்தார்.

ரசித்து சிரித்த ஜெ. : மாஜிக்களான ஜெயக்குமார், வைத்தியலிங்கம், மாநகர் மா.செ. மனோகரன் ஆகி யோருக்கு மட்டுமே பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. மா.செ. மனோகரனோ "திருச்சியில் மலைக்கோட்டை போன்ற கோயில்கள் இருக்கிறது. தொழிற்சாலைகள் இருக்கிறது. கடல்தான் இல்லாமல் இருந்தது. அந்தக் குறை இன்று திரண்ட மக்கள் கடலால் போய்விட்டது'’ என்று பெருமிதப்பட்டார்.. மைக் முன் வந்த மாஜி வைத்தியலிங்கமோ கொஞ்சம் டாப்கீருக்குப் போய்... "இங்க உயர்கல்வி அமைச்சரா இருக்காரே அவர் உங்களுக்கு வேண்டுமானால் பொன்முடி. எங்களைப் பொறுத்தவரை அவர் உதிர்ந்த முடி. மத்தியில் இருக்கும் அமைச்சரின் பெயர் ராஜா. எங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு கூஜா'’ என டயலாக் அடிக்க... அதைக்கேட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தார் ஜெ.

முகம் சுளிக்கவைத்த பேச்சு : தனது ஆட்சியை விட 4 மடங்கு விலைவாசி உயர்ந்து விட்டதாகவும்... காவிரிப் பிரச்சினைக்கு தி.மு.க. எதையுமே செய்யவில்லை என்றும் தன் பேச்சில் விமர்சித்த ஜெ., கலைஞர் குடும்பம் பற்றியும் அமைச்சர்கள் குறித்தும் மிகத்தரம் தாழ்ந்து... தான் ஒரு பெண் என்பதைக்கூட மறந்து.. நிதானம் இழந்து போய்ப் பேச... கேட்ட நடுநிலையாளர்கள் முகம் சுளித்தனர்.

ஸ்ரீரங்கத்தை புறக்கணித்த ஜெ : சனிக்கிழமை ஸ்ரீரங் கம் கோயிலுக்குப் போக முடிவெடுத்த ஜெ. அங்கிருக்கும் சுந்தர்பட்டர் என்பவரை நேரடியாகத் தொடர்புகொண்டு ‘மதியம் வர்றேன் தீர்த்த பூஜை பண்ணனும்’ என்று சொல்ல... பட்டரோ ‘"தீர்த்த பூஜையை காலை நேரத்தில்தான் பண்ணுவா. மத்த நேரத்தில் பண்ணப்படாது'’என்றார். இதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சசிகலா “"என் நாத்தியார் ராஜலட்சுமி அம்மாள் தஞ்சாவூர்ல இறந்து ஒருவாரம்தான் ஆகுது. 30 நாள்வரை நான் கோயிலுக்குப் போகக்கூடாதாம்'’ என்று சொல்ல... ஸ்ரீரங்கம் புரோக்கிராமை கேன்சல் செய்துவிட்டார் ஜெ.! 18 அல்லது 19-ந் தேதி ஸ்ரீரங்கத்துக்கு ஜெ. வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏமாற்றிய மகளிரணி அம்மணி : கூட்ட மேடையில் இரண்டு பேர் ஜெ.’ கையில் வெள்ளி வீரவாள் வழங்க அனுமதி பெற்றிருந்தனர். அதன்படி... ஜெ.’பேரவை செயலாளர் சீனிவாசன் 770 கிராமால் ஆன வெள்ளிவாளை ஜெ.விடம் வழங்கினார். அடுத்து 1,100 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட வாள் என்று மகளிரணித்தலைவி தமிழரசி என்பவர் ஜெ.விடம் ஒரு வாளைக் கொடுத்தார். அதை வாங்கி ஜெவின் காரில் ஏற்றும்போதுதான் தமிழரசி கொடுத்த வாள் எவர்சில்வர் வாள் என்பது தெரிந்தது. இதைக்கண்டு அப்செட் ஆன செங்கோட்டையனும் கோகுல இந்திராவும்.. அந்தத் தமிழரசியை அழைத்து... ‘"இப்படி ஏமாத்தினா என்ன அர்த்தம். நாங்க வழியில் ஒரிஜினலை எடுத்துக்கிட்டு டூப்ளிக்கேட் வாளை வச்சிட்டோம்னு அம்மா நினைச்சா என்ன பண்றது?' என அவரை வறுத்து எடுத்துவிட்டனர்.

ர.ர.க்களின் வாய்ஸ் : இந்தக் கூட்டம் குறித்து ர.ர.க்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிலரிடம் பேசிப் பார்த்தோம். அப்போது... கிருஷ்ணகிரியில் இருந்து வந்திருந்த பாண்டியம்மாள் ‘""அம்மாவைப் பார்க்க எங்க செலவில் அழைச்சிக்கிட்டுப் போறோம்னு கட்சிக்காரங்க கூப்பிட்டாங்க. சரின்னு கிளம்பிட்டேன். அவங்களை எட்டி இருந்துதான் பார்க்க முடிஞ்சிது. அதுவே போதும். என்னாமா வெள்ளை வெளேர்னு இருக் காங்க''’என்றார் வெள்ளந்தியாக. ‘""நல்லா விளம்பரம் பண்ணி.. திட்டம்போட்டு எங்க ஆளுங்க கூட்டத்தைத் திரட்டியிருக் காங்க. ரொம்ப எழுச்சியா இருக்கு'' -என பரவசமாய்ச் சொன்னார் திருச்சிக்கார ராமசாமி. காட்டு மன்னார்குடி பெருமாளோ, ""இந்தக் கூட்டத்துக்கு வந்தே ஆகணும். இது மானப் பிரச்சினைன்னு கிளைச் செயலாளர் கூப்பிட்டார். செலவெல்லாம் அவங்களே பார்த்துக்கிட்டாங்க'' என்றார் தன் கருத்தாய். ""எங்க ஊர்ல இருந்து 20 பஸ்ல எங்களை அழைச்சிக்கிட்டு வந்துருக்காங்க. அப்படியே ஊரைச் சுத்திப் பார்த்துட்டுப் போகலாம்னு இருக்கோம்''’ -இது மேட்டுப்பாளையம் ஜெயசீலி. பலருக்கு எதற்காக இந்தக் கூட்டம் என்பது கூடத் தெரியாதது ஆச்சரியம்.

நேருவுக்கு சவால் : ""ஏறத்தாழ 6 லட்சம்பேரைத் திரட்டிவிட்டோம். இது மிகப்பெரிய சாதனை'' என அ.தி.மு.க. முன் னணித் தலைவர்கள் பெருமிதக் கணக்கு சொல்ல.. .தி.மு.க. தரப்போ... கூடிய கூட் டம் ஒன்றரை லட்சம்தான் இருக்கும் என் கிறது. எதிர்வரும் செப்டம்பர் 8-ந் தேதி அன்பிலார் சிலையைத் திறந்து வைத்து... அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்காக திருச்சி வர இருக்கிறார் கலைஞர். அப்போது இந்த இலைத் தரப்பிற்கு கூடிய கூட்டத்தை.... முறியடிக்க வேண்டிய சவாலை..... எதிர்கொள்ள வேண்டியவராக இருக்கிறார் அமைச்சர் நேரு. அவரது வியூகம் என்ன? ’"தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களில் இருந்தும் இந்தக் கூட்டத்தை திரட்டி வந்திருக்கிறது அ.தி.மு.க. நாங்கள் இந்த திருச்சி மாவட்டத்தில் இருந்தே... இதைவிட அதிகக் கூட்டத்தை திரட்டிக் காட்ட முடியும். பொறுத்திருந்து பாருங்கள்'’என்கிறது தன்னம்பிக்கையோடு. கோவையைப் போலவே . திருச்சியில் நடக்கும் இரண்டாவது ரவுண்ட் யுத்தத்திலும் தி.மு.க. ஜெயிக்குமா?

இந்த கேள்விக்கான பதிலை தன் செயலால் செப்டம்பர் 8-ந் தேதி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடக்கும் கலைஞர் கூட்டத்தில்.. நிரூபிக்க வேண்டிய வராக இருக்கிறார் நேரு. இந்த சவாலில் நேரு எப்படி ஜெயிக்கப்போகிறார்? என அனைத்து கட்சித் தரப்பும் இப்போது திருச்சிப் பக்கமே தனது பார்வையை திருப்பியிருக்கிறது

No comments:

Post a Comment