Sunday, August 29, 2010

திரைக்கூத்து!


விசுவாசம்!டைரக்டர் மு.களஞ்சியம்தான் 'அங்காடித் தெரு' அஞ்சலியை கோலிவுட்டுக்கு கொண்டுவந்தவர். ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்ட நிலையிலும் இப்போது பெரிய நடிகை யாகிவிட்டாலும் கூட களஞ்சியம் இப்போது இயக்கி வரும் "கருங்காலி' படத்தில் நடித்து வருகிறார். அதனால் ரெண்டு பேருக்கும் இடையே அது இருப்பது உண்மைதான் என கோலிவுட்டில் ஒரு பேச்சு.


ஆனால் அஞ்சலியோ, ‘"என்னை அறிமுகப்படுத்த முயற்சி எடுத்தவர் அவர் தானே. அந்த விசுவாசத் தை தப்பா பேசாதீங்க' என்கிறார்.


மீண்டும் கூட்டணி!


அஜீத்தோடு ஆரம்பத்திலேயே மோதல் ஏற் பட்டதால் விலகிக்கொண்ட டைரக்டர் கவுதம் மேனன்... இப்போது கமலுடன் மீண்டும் கூட்டணி போடப்போகி றாராம்.


அப்ரோச்!லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த படம் கைவிடப் பட்ட நிலையில் விஜய்யை வைத்து பண்ணுவதற்கு ஏற் பாடுகள் நடந்தது. இப் போது விஜய்யும் "நோ' சொல்லிவிட்டாராம்.
ஆனால் ‘"பையா' போல திரும்ப நாம சேர்ந்து ஒரு படம் தரலாமே... என லிங்குவை அப்ரோச் செய்கிறாராம் கார்த்தி.


ஹிட் பிரதர்ஸ்!


"பருத்தி வீரன்', "ஆயிரத்தில் ஒருவன்', "பையா', "நான் மகான் அல்ல' என தொடர்ந்து ஹிட் கொடுத்து ராசியான ஹீரோவாக வலம் வருகிறார் கார்த்தி. சூர்யாவும் ஹிட் கொடுத்து வருகிறார். இப்போது ஆந்திரா மார்க்கெட்டையும் ஒரு கை பார்த்துவிட அண்ணனும், தம்பியும் சேர்ந்து ஹைதராபாத்தில் ஆபீஸ் போட்டி ருக்காங்க.


பஞ்சமுகி!மந்திரதந்திர படங்களில் நடித்து போரடிக்குது... என அனுஷ்கா அலுத் தக் கொண்டாலும் அவர் நடிக்கும் அந்த மாதிரி படங்கள் செம ஹிட் டாகுது. தெலுங்கின் பிரபல ஹீரோ நாகர்ஜுனா தயாரிப்பில் அனுஷ்கா நடித்த "‘பஞ்சமுகி' படம் சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப்போடு போடு கிறது. தமிழிலும் இந் தப்படம் வெளியாக விருக்கிறது. தியேட்டர் காரர்கள் "பஞ்சமுகி'யை வெளியிட ஆவலா இருக்காங்களாம்.


குமுறல்!


ரம்யா கிருஷ்ண னின் ஹைதராபாத் வீட்டில் அடிக்கடி பார்ட்டி நடக்கும். தெலுங்கின் பிரபலங்கள் கலந்து கொள்ளும் அந்த பார்ட்டியில் த்ரிஷா உட்பட சில தமிழ் நடிகைகளும் கலந்து கொள்ளுவது வழக் கம். அது வழக்கமான காக்டெயில் பார்ட்டி தான்.

ஆனால் அந்த லிங்கைத்தான் போதைக் கும்பலோடு த்ரிஷா உள்ளிட்டோருக்கு தொடர்பு என ஆந்திர மீடியாக்கள் மிகைப் படுத்திவிட்டதாம். ஒரு நடிகையின் செல் நம்பர் யாருக்கும் ஈஸியா கிடைச்சிடும். அதை வச்சுக்கிட்டு கதை கட்டலாமா?' என்பது த்ரிஷா தரப்பின் குமுறல்.


மனசு!
"சிக்கு புக்கு'படத்தில் ஸ்ரேயா நாயகி. இன்னொரு நாயகியாக பாலிவுட் அம்ரிதாவோட தங்கச்சி ப்ரீத்திகா. ரசிகர்கள் மனசுல யாரு இடம் பிடிக் கிறதுங்கிற மோட் டிவ்ல ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு கவர்ச்சி காட்டியிருக்காங் களாம்.

அப்படியா!அந்த பெயிண்ட்டிங்கான நடிகை தன்னை அறிமுகம் செய்து திருப்பு முனை தந்த தயாரிப்பாளருக்கு நன்றிக்கடன் செய்ய விருந்து தந்தார். எழுச்சி மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு வந்தார் தயாரிப்பாளரும். ஆனால் ஏதோ பதட்டத்தில் சம்பவம் சரிவர நிகழாமல் பாதியிலேயே முடிந்ததாம்.

No comments:

Post a Comment