Thursday, August 19, 2010

திரைக்கூத்து!


அம்புட்டு ஆசை!


ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களும், தியேட்டர்களும் இணைந்த மால்கள் சென்னையில் பெருகி வருகிறது. அப்படி ஒரு மால் கட்டவேண்டும் என அஜீத்துக்கு ஆசையாம். புறநகர் பகுதியில் பழைய தியேட்டரை விலைக்கு வாங்கி மால் கட்ட நினைக்கும் தல தரப்பு இதற்காக சில தியேட்டர்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம்.


சமரசமா போயிடுவோம்!


"சிக்குபுக்கு' படத்தின் நிறு வனத்திற்கும், அந்த படத்தின் ஹீரோ ஆர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை விலாவாரியாக கூவியிருந்தேன். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தையில் "எந்த விதண்டவாதமும் பண்ணாமல் ‘தயாரிப்பாளருக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் தருகிறேன்' என ஆர்யா சொன்னதையடுத்து பிரச்சனை சுமுகமாக முடிந்தது.


மனசு வைங்க மணி சார்!


மணிரத்தினத்தின் ‘"குரு' படப்பிடிப்பின் போது உடல்நலம் பாதிக்கப்பட்ட லைட்மேன் மணிமாறன் கைகால்கள் செயலிழந்து முடங்கிக்கிடப்பதையும், அவரின் குடும்பம் வறுமையில் தவிப்பதையும் ஏற்கனவே எழுதியிருந்தோம்.

இந்நிலையில் தனது நிலை குறித்து பலதடவை மணிரத்னத்திற்கு கடிதம் எழுதிய மணிமாறன் கடந்த வாரம் மணிரத்னத்தை நேரில் சந்திப்பதற்காக அலுவலகத்திற்கு போனார். ஆனால்... "அவரை சந்திக்க முடியாது. நீ கோர்ட்டுக்கு கூட போய்க்கோ' என மேனேஜர் ஸ்ரீதர் சொல்லீட்டாரு. "இது என்னோட வாழ்வாதார பிரச்சினை. அதனால் மணிரத்னம் சார் மனசு வச்சு என்னோட கஷ்டத்துக்கு உதவணும்' என கண்ணீரோடு சொல்கிறார் மணிமாறன்.


அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டாங்களா?
கோலிவுட்டின் லேட்டஸ்ட் வசீகரி சமந்தா. இவர் அறிமுகமான "மாஸ்கோவின் காவிரி' இனிமேதான் ரிலீஸாகப் போகுது. ஆனால் ‘"விண்ணைத்தாண்டி வருவாயா', ‘"பாணா காத்தாடி' படங்கள் வெளியாகி விட்டதால் சமந்தாவுக்கு செம மவுசு. கேமராமேன் ரவிவர்மன் இயக்கத்தில் ‘"மாஸ்கோவின் காவிரி' சூப்பரா வந்திருக்கு' என குஷி மூடில் இருக்கும் சமந்தாவின் மார்க்கெட் வளர்ச்சிக்கேற்ப கிசுகிசுவும் வளருது. ‘டைரக்டர் கவுதம்மேனன் பிடியில் சமந்தா இருப்பதாக தீயா நியூஸ் கௌம்ப... ‘"அய்யோடா அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டாங்களா வேலய' என அழகா சிரித்து மறுக்கிறார் சமந்தா.


குத்தாட்டமும் போடுவம்ல!
"யோகி படத்தில் அமீரின் அப்பாவாக நடித்து அசத்தியவர் பிரபல பத்திரிகையின் சினிமா நிருபர் தேவராஜ். அதில் சிறப்பாக நடித்ததால் கைவசம் ஏகப்பட்ட படங்கள். அதில் "மறு படியும் ஒரு காதல்', "நந்தி' படங்களில் குத்தாட் டமும் போட்டிருக்கிறார். "நந்தி' படத் தில் மலேசிய அழகி தனுஷியாவுடன் தேவராஜ் போட் டிருக்கும் குத்தாட்டத்தை படம் பிடித்த போது டைரக்டர் தமிழ் வாணன் உட்பட யூனிட்டே அசந்து போச்சாம்.


பொம்பளைகளுக்கு அடிதடி புடிக்காதா?


பொதுவா பொம்பளைங்களுக்கு அடிதடி புடிக்காதும்பாக. ஆனா மணிரத்னத்திடம் பணிபுரிந்த சுதா.கே.பிரசாத் "துரோகி' படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீகாந்த், விஷ்ணு என இரண்டு ஹீரோவை வைத்து சுதா பயங்கரமான ஆக்ஷன் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். ஒவ் வொரு ஆக்ஷன் காட்சிகளும் பொறி பறக்கிற மாதிரி எடுத் திருக்காராம் இந்த அம்மணி.


அப்புடியா!ஒசரம் அதிகம் என்பதால் வேட்டக்காரியோடு ஜோடி போட ஹீரோக்கள் தயங்கினாலும் ... அம்மணியின் வெண்ணெய் தேக அழகை தரிசிக்கும் ஆசை குறையாம அலையிறாங்களாம். லேட்டஸ்ட்டாக வம்பு நடிகர் அடிக்கடி போனப் போட்டு அம்மணியிடம் வழியிறாராம்.

No comments:

Post a Comment