Tuesday, June 15, 2010

மண்வாசனைப் படமெடுத்து வெற்றி...


shockan.blogspot.com

பாரதிராஜா போட்ட "மண்வாசனை' வழித்தடத்தில் வந்திருக் கும் இன்னொரு இயக்கு நர் ஓ. ஆசைத்தம்பி. இவர் ஆவி, பேய், பிசாசு பின்னணியில் படம் இயக் கும் "யார்' கண்ணனிடம் இயக்கம் பயின்றவர். ஆனால் யதார்த்தப் படக் காதலர். யதார்த்தம்தான் என்றைக்கும் ஜெயிக்கும் என்ற அசையாத நம்பிக்கை கொண்டவர். அதனால் மதுரை மாவட்டத்தின் உக்கிர பூமியாகக் கருதப்படுகிற உசிலம்பட்டி பக்கத்தில் நடந்த ஒரு உண்மைக் கதையை "ஒச்சாயி' என்ற பெயரில் படமாக்கி இருக்கிறார். உசிலம்பட்டியில் பிறந்த கருத்தபாண்டி மதுரையில் வந்து ரியல் எஸ்டேட் பிஸினஸ் மூலம் திரவியபாண்டியாக மாறி, "ஆச்சி கிழவி திரைக்கூடம்' படநிறுவனத்தின் சார்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

"பெற்றோர்கள் செய்யும் தவறால் பிள்ளைகள் எப்படிக் கெட்டுப் போகிறார்கள்' என்று சொல்ல வருகிறதாம் "ஒச்சாயி' படம்!

கிராமத்து வாலிப நாயகனாக நடிக்கிறார் தயா என்ற புதுமுகம்! ஆனால் இவர் எம்.பி.ஏ., எம்.பி.எல்., எல்.எல்.பி., படித்தவர்! அவருக்கு ஜோடியாக உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தாமரை என்ற பெண் நடிக்கிறார். கொஞ்சம் சினிமா வாசமும் வேண்டுமே என்ற வகையில் ராஜேஷ், சந்தானபாரதி, கஞ்சா கருப்பு, ஷகிலாவும் நடிக்க வைக்கப்பட்டிருக்கி றார்கள். கூடவே நிர்வாகத் தயாரிப்பாளர் ஒமரு, தயாரிப்பாளர் திரவியபாண்டியனும் "ஒச்சாயி' படத்தில் ஒப்பனை இல்லாமல் நடித்திருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரி மாணவர் பிரேம்சங்கர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவராஜா இசையமைத்திருக்கிறார்.

படக் கம்பெனியோட பேர், படத்தோட பேர் எல்லாம் புதுசா இருக்கே?

""ஆச்சி கிழவிங்கறது எங்க குலதெய்வத் தோட பேர். உசிலம்பட்டிக்குப் பக்கத்துல உள்ள கருமாத்தூர்ங்கற ஊர்ல பிறந்த இந்த அம்மா பேர் ஒச்சாண்டம்மா. கல்யாணம் பாப்பாபட்டி ஊர்ல. பத்து புள்ள பெத்ததால ஆசையா அவங்களை ஆச்சி கிழவின்னு ஊர் மக்கள் கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. பின்னால கிராம தெய்வமா கொண்டாடப் பட்டுட்டாங்க. அதனாலதான் ஆச்சி கிழவி திரைக்கூடம்னு கம்பெனிக்குப் பேர் வெச்சோம்!'' என்கிறார் தயாரிப்பாளர் திரவியபாண்டியன்!

""எங்க ஊர்கள்ல ஆம்பளைப் புள்ள பொறந்தா ஒச்சு, ஒச்சப்பன், ஒச்சாண் டான்னும்; பொண்ணு பொறந்தா ஒச்சாயி, ஒச்சம்மான்னும் பேர் வைப்பாங்க. அந்த மண்ணில் நடந்த கதைங்கறதால "ஒச் சாயி'ன்னு டைட்டில் வெச்சேன்'' என்கிறார் இயக்குநர் ஆசைத்தம்பி! இவர் பழம்பெரும் நடிகர் ஓ.ஏ.கே. தேவரின் உறவுக்காரர்.

உங்களோட இன்ஸ்பிரேஷன் யார்?

""வெற்றியடைஞ்ச எல்லாருக்கும் ஒரு முன்னோடி இருப்பாங்க. அவங்கள மாதிரி பெரியா ஆளா வரணும்னு இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு உழைச்சு முன்னுக்கு வருவாங்க. ஆனா நான் நேர்மாறானவன். யாரையெல்லாம் பின்பற்றி படத்துறைக்கு வந்தேனோ அவங்களெல்லாம் நேடிவிடி படம் எடுத்து ஜெயிச்சவங்கதான்! ஆனா ஜெயிச்ச பின்னாடி கமர்ஷியல் படமெடுக் கப் போயிட்டாங்க. அவங்கமேல வந்த கோபத்துலதான் நான் "ஒச்சாயி'ங்கிற மண்வாசனைப் படத்தை எடுத்துருக்கேன்'' என்று கண் சிவக்க மதுரைக்கார கோபத்தோடு சொல்கிறார் ஆசைத்தம்பி!

இன்னொரு பாரதிராஜாவாய் விஸ்வ ரூபம் எடுப்பாரோ தம்பி?

No comments:

Post a Comment