Monday, June 14, 2010

விஜயகாந்த் உள்ளே! வைகோ வெளியே!


shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... .... செம்மொழி மாநாட்டுக்கான உச்சகட்ட வேலைகள் படுவேகமா நடந்துக் கிட்டிருக்குது.''

""ஆமாப்பா... அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணி சோனியாவில் தொடங்கி தமிழ்நாட்டு பிரபலங்கள்வரை தொடர்ந்துக்கிட்டு இருக்குதே?''

""தலைவரே.. இதுவரைக்கும் எந்த அரசாங்கமும் செய்யாத அளவுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் கலைஞர் ரொம்ப கவனம் செலுத்துறார். இப்ப பிரபலமா இருக்கிறவங்களை மட்டுமில்லாம, பழைய அரசியல்வாதிகள், அரசியலிலிருந்து ஒதுங்கிப் போனவங்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், கல்வியாளர்கள், பழைய நடிகர்- நடிகைகள்னு சமுதாயத்தில் அந்தஸ்து உள்ள எல்லோருக்கும் அரசாங்கத்தின் சார்பில் நேரடியா அழைப்பிதழ் கொடுக்கப்படுது.''

""ரிடையர்டாகிவிட்டால் குடும்பத்தினரே மதிக்க மாட்டாங்கங்கிறதுதான் பல வீடுகளில் உள்ள நிலை மை. அப்படிப்பட்ட நேரத்தில், அரசாங்கம் நேரடியா அழைப்பிதழ் கொடுத்தால் அது பெரிய மரியாதையா இருக்குமே!''

""ஆமாங்க தலைவரே... பழைய வி.வி.ஐ.பி.க்கள் வீடுகளுக்கு போலீஸ் வாகனத்தில் போகும் அரசாங்க அதிகாரிகள், ரொம்ப மரியாதையோடு அழைப்பிதழைக் கொடுத்து, மாநாட்டுக்கு வரவேற்குறாங்க. முதல் வரிடமிருந்து வந்த அழைப்பிதழ்ங்கிறதால குடும்பத்தினர் ரொம்ப சந்தோஷப்படுறாங்க. மாநாட்டில் கலந்துக்க ணும்ங்கிற எண்ணம் குடும்பத்தில் உள்ள எல் லோருக்கும் ஏற்படுதாம். இதுபோக, கலைஞர் தன் கையில் ஒரு லிஸ்ட் வச்சுக்கிட்டு, அதில் உள்ளவங்களுக் கெல்லாம் போன் செய்து மாநாட்டு அழைப்பிதழ் வந்திடிச்சானு கேட்டு, மாநாட்டுக்கு அழைக்கிறார். அவரோட செயலாளர்கள் சண்முக நாதனும் ராஜமாணிக்கமும் ஆளுக்கொரு லிஸ்ட்டை வச்சிக் கிட்டு போனில் பேசிக்கிட்டிருக் காங்க.''

""குடும்பத்திலே நடக்கிற விசேஷத்துக்குக் கூப்பிடற மாதிரி செம்மொழி மாநாட்டுக்கு அழைக் கிறாங்கன்னு சொல்லு.''

""தே.மு.தி.க.வுக்கு அ.தி.மு.க. தரப்பிலிருந்து அழைப்புகள் தொடருதாமே... லேட்டஸ்ட் நிலவரம் என்னவாம்?''

""2006 சட்டமன்றத் தேர்தல் சமயத்திலேயே விஜயகாந்த்துக்கு அ.தி.மு.க. கூட்டணி அழைப்பு விட்டது. அப்ப பேசியவர், போலீஸ் அதிகாரி சிவனாண்டி. அவருக்கப் புறம் பேசியவர் டைரக்டர் பாரதிராஜா. 54 தொகுதிகளைக் குறிப்பிட்டு இதில் 40 சீட்டாவது தந்தாதான் கூட்டணின்னு விஜயகாந்த் தரப்பு சொல்லி அனுப்பியது. அதற்கப்புறம் நடராஜன் மூலமா திருச்சி வேலுச்சாமி, நாமக்கல்லில் விஜயகாந்த்தை சந்தித்து, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது சம்பந்தமா பேசினாரு. இந்த சமயத்தில்தான் அ.தி.மு.க. கூட்டணிக்கு வைகோ வந்தாரு. ம.தி.மு.க.வுக்கு 35 சீட் கொடுக்கப்பட்டது. விஜயகாந்த்துக்கு 20-லிருந்து 25 சீட் தரலாம்னு சசிகலா சொல்ல, விஜயகாந்த் முடியாதுன்னு சொல்லிட்டாரு. அதற்கப்புறம் உள்ளாட்சித் தேர்தல், எம்.பி. தேர்தல்னு கூட்டணி முயற்சிகள் அப்பப்ப நடந்தது. அப்புறம் இப்ப ரொம்ப சீரியஸா டிஸ்கஸ் நடக்குது.''

""இரண்டு தரப்பிலும் என்ன சொல்றாங்க?''

""தே.மு.தி.க. சொன்ன பழைய கணக்கைக் காட்டி, அதில் பாதிக்கும் அதிகமான சீட்டுகளைத் தருவதா அ.தி.மு.க. தரப்பு சொல்லியிருக்குது. தே.மு.தி.க. தரப்பிலிருந்து பேசும் மூன்று பேர் குழுவோ, இந்த நாலு வருசத்தில் நாங்க நிறைய வளர்ந்திருக்கோம். தொடர் தோல்வி ஏற்பட் டாலும் வாக்கு வங்கி ஸ்ட்ராங்கா இருக்குது. இப்ப இருக்கிற நிலவரப்படி நாங்க 80 தொகுதிகளில் ஸ்ட்ராங்கா இருக்கோம்னு ஒரு லிஸ்ட்டைக் கொடுத்திருக்காங்க. அ.தி.மு.க. தரப்பில் பேசிய ஓ.பி.எஸ்.ஸும், செங்கோட்டையனும் 40 சீட் வரைக்கும் எங்க தலைமை கிட்டே கேட்டுப் பார்க்கலாம்னு சொல்லியிருக் காங்க. ''

""தி.மு.க.விடம் பா.ம.க.வும் இப்படித்தான் 80 தொகுதிகளில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதா சொல்லியிருக்குது.''

""விஜயகாந்த்தைப் பொறுத்தவரை தன் கட்சியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கூட் டணி குழுவினரே இதையெல்லாம் பேசட்டும் என்றும் தன் தரப்பிலிருந்து எந்த உத்தரவாத மும் தராமல் எலெக்ஷன் நெருங்கும்வரை பார்த்துக்குவோம்னும் நினைக்கிறாராம். தே.மு.தி.க தரப்பின் 80 சீட் லிஸ்ட் பற்றி ஜெ.விடம் அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்ல, "கூட்டணி பற்றி அப்புறம் முடிவு செய்யலாம். கட்சிக்காரர்கள் தி.மு.க பக்கம் போகாமல் காப்பாத்துற வேலையில் கவனம் செலுத்து வோம்'னு சொல்லியிருக்கிறார்.''

""ஒருபக்கம் கூட்டணி முயற்சிகள் தொடர்ந்துகிட்டுத்தானே இருக்கு?''

""தலைவரே... அ.தி.மு.க. கூட்டணிக்குள் தே.மு.தி.க. வருவதை ரசிக்காத வைகோ, அப்படியே தே.மு.தி.க. வந்தாலும் ம.தி.மு.க.தான் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கணும்னும் தே.மு.தி.க.வைவிட தங்கள் கட்சிக்குத்தான் அதிக சீட் வேண்டும்ங்கிற மனநிலையிலும் இருக்காராம். இல்லைன்னா அ.தி.மு.க.வுடனான கூட்டணி பற்றி மறுபரிசீலனை செய்வதுங்கிற ஐடியாவை தனக்கு நெருக்கமானவங்ககிட்டே சொன்ன வைகோ, இது சம்பந்தமா ஜெ.கிட்டே பேசுற திட்டத்திலும் இருக்காராம்.''

""விஜயகாந்த் உள்ளே வந்தால், வைகோ வெளியே... இதுதான் ஜெ கூட்டணியின் நிலைமையா? தி.மு.க-பா.ம.க கூட்டணி முயற்சிகள் எந்த நிலைமையில் இருக்குது?''

""போன திங்கட்கிழமையன்னைக்கு கோபாலபுரத்தில் கலைஞரை சந்தித்த பா.ம.க.வின் ஐவர் குழு ரொம்பவே புலம்பியதாம். அய்யா.. நீங்க நிச்சயம் ராஜ்யசபா சீட் தருவீங்கன்னு எதிர்பார்த்தோம். ஏமாந்துட்டோம்னு ஜி.கே.மணி சொல்லியிருக்காரு. உடனே கலைஞர், அப்படின்னா நான் துரோகம் பண்ணிட்டேங்கிறீங்களான்னு கேட்க, அப்படி இல்லீங்கய்யான்னு சொன்ன மணி, மேலவை தீர்மானத்தை மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியோடு நிறைவேற்ற நாங்க ஆதரவளிச்சோம்னு சொல்லியிருக்கிறார்.''

""மேலவைன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுப்பா. அதற்கான தீர்மானத்தை ஆதரிக்கிறது பற்றி பா.ம.க. வட்டாரத்தில் பேசுனப்பவே, ராஜ்யசபா சீட்டுக்கு உத்தரவாதம் வாங்கிட்டு மேலவை தீர்மானத்தை ஆதரிக்கலாம்னு ராமதாஸ் சொல்லியிருக்காரு. மணியும் வேல்முருகனும்தான், கலைஞர் நிச்சயமா சீட் கொடுப்பார்னு சொல்லி, உத்தரவாதம் வாங்கலை யாம். இப்ப இரண்டு பேருக்கும் ராமதாஸ் செம டோஸ் விட்டதா தைலாபுரம் வட்டாரத் திலிருந்து சொன் னாங்க.''

""நானும் அதே வட் டாரத்து தகவல்களைத் தான் சொல்றேங்க தலைவரே... கலைஞர்- பா.ம.க. ஐவர் குழு சந்திப்பின்போது, குரு பற்றி கடுமையான கோபத்தை வெளிப் படுத்தியிருக்காரு கலைஞர். குரு பேசியதற்கு சி.டி. ஆதாரம் இருக் குன்னும் சொன்ன வர், அதை டாக்டர் கிட்டே போட்டுக் காட்டுங்க. குருங்கிற தனிநபருக்காக கட்சி நடத்துறீங்களான்னு கேட்டிருக்கிறார். பத்திரி கையாளர் சந்திப்பிலும் குரு என்றால் நல்லதைக் கெடுப்பவர்னு கலைஞர் சொன்னார். ஆனாலும், மறுநாள் பா.ம.க நிர்வாகி கள் குழு கூட்டத்திற்குப் பிறகு பிரஸ் மீட் கொடுத்த ராமதாஸ், குரு ரொம்ப நல்லவர்-வெளிப்படையா பேசுறவர்னு சர்டிபிகேட் கொடுக்க, தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உறுதியாகுமாங்கிற பேச்சு மறுபடியும் அரசியல் வட்டாரத்தில் கிளம்பிடிச்சி.''

""ஓ...''

""பா.ம.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் என்ன பேசி னாங்களாம்?''

""கலைஞருக்கு எழுதிய 3 லெட்டர்களையும் ஜி.கே. மணியை விட்டுப் படிக்கச் சொல்லியிருக்கிறார் ராம தாஸ். ஆரம்பத்திலிருந்து நடந்த சந்திப்புகள் பற்றி மணியும் விளக்கமா பேசி யிருக்காரு. ராஜ்யசபா சீட் இல்லைன்னு ஒரு முறைகூட கலைஞர் எங்ககிட்டே சொல்ல லைன்னு மணி சொல்ல, உண்டுன்னும் கலைஞர் சொல்லலையே, அப்புறம் எப்படி நம்புனீங்கன்னு பா.ம.க. நிர்வாகிகள் மத்தி யில் பேச்சு கிளம்பியது. இந் தக் கூட்டத்தில் அன்புமணி, ராஜ்யசபா சீட் பற்றி தி.மு.க. கிட்டே பேசியது பெரிய கதைன்னும் அதை இப்ப பேசவிரும்பலைன்னும் சொல் லிட்டு, வழக்கம்போல கட்சி வளர்ச்சி பற்றித்தான் பேசி யிருக்கிறார். கட்சியோட நிர்வாகக் குழு கூட்டம் நடந்த மறுநாள் பா.ம.க இளைஞரணி நிர்வாகக் குழு கூட்டத்தை தன் வீட்டிலேயே நடத்திய அன்புமணி, இளைஞரணியில் மாவட்ட, ஒன்றியவாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அதை பலப்படுத்தி, தேர்தலுக்கு முன்னாடி அதிரடியான சில காரியங்களை செய்வதுன்னு ஆலோசித்திருக்கிறார்.''

""ம்...''

""வரும் 30-ந் தேதி பா.ம.க பொதுக்குழு கூடுது. அதில் மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுறாங்க. ஜி.கே.மணிதான் மீண்டும் தலைவர். கட்சித்தலைவர் பதவிக்கு 2 லட்சம், துணைச்செயலாளர் பதவிக்கு 50 ஆயிரம், மா.செ. பதவிகளுக்கு 25 ஆயிரம்னு வேட்புமனுக் கட்டணம் நிர்ணயித்திருக்கிறார் ராமதாஸ்.''

""கூட்டணி தொடர்பா கடைசியா என்ன கணக்கு போட்டிருக்கிறார்?''

""அ.தி.மு.க. அணியில் பா.ம.க. வேணாம்னு ஜெ. சொல்லிட்டாராம். அந்தப் பக்கமே திரும்பவேண்டாம்னு கட்சி நிர்வாகிகள்கிட்டே சொல்லி யிருக்கிறார். அதனால, பா.ம.க. நம்ம கூட்டணிக்குத்தான் வந்தாகணும்னு தி.மு.க. நம்புது. அ.தி.மு.க. பக்கம் தே.மு.தி.க. போனா, நம்மை தி.மு.க. கூட்டணியில் சேர்த்துதானே ஆகணும்னு பா.ம.க. நினைக்குது. தி.மு.க. நிர்வாகிகளோ, கூட்டணிக்கு அவங்களா வந்தாலும், நாமளா சேர்த்தாலும் கடைசி நேரத்தில் நடக்கட்டும். இப்பவே வந்து, துண்டுசீட்டுகளைக் கொடுத்து அந்தப் பதவி, இந்த சிபாரிசுன்னு நம்ம பொழைப்பை கெடுக்காம இருந்தா சரின்னு நினைக்கிறாங்க.''



மிஸ்டுகால்!



குடியரசு பத்திரிகையில் பெரியார் எழுதியதைப் புத்தகமாக வெளியிடுவது தொடர்பாக கி.வீரமணிக்கும் பெரியார் தி.க.வுக்கும் நடந்த வழக்கில், பெரியார் எழுத்துகளை வெளியிடுவதற்கு பெரியார் தி.க.வுக்குத் தடையில்லை எனத் தீர்ப்பளித்துள்ளது ஹைகோர்ட். இதை பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் பெரியார் தி.க.வினர் கொண்டாடினார்கள். விரைவில் புத்தகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் செல்வது பற்றி ஆலோசித்து வருகிறார் கி.வீரமணி. அதற்கு முன்பாக, வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தது பெரியார் தி.க.



செம்மொழி மாநாட்டின் இறுதிக்கட்டப் பணிகள் பற்றி ஆலோசிப்பதற்காக கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார் என்றதும் கமிஷனர் சைலேந்திரபாபு, ஐ.ஜி. சிவனாண்டி ஆகியோர் வரவேற்பளிக்க காத்திருந்தனர். கோவையில் எந்த சாலையும் சரியாக அமைக்கப்படாததை வாகனத்தில் வந்தபோதே கவனித்துவிட்ட ஸ்டாலின், ஆய்வுக்கூட்டத்தை ரத்து செய்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பிவிட்டார். அங்கே சென்ற லோக்கல் அமைச்சர் உள்பட கட்சி வி.ஐ.பி.க்களிடம் மாநாட்டுப் பணிகள் தொய்வாக நடப்பதை சுட்டிக்காட்டி காய்ச்சி எடுத்திருக்கிறார்.



தமிழகத்தில் கொலை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப் பட்ட குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியா வந்தார். இவரை கைது செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. டக்ளஸ் பற்றிய எல்லா விபரங்களையும் மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டோம் என்கிறார் சிட்டி போலீஸ் கமிஷனர். இந்த வழக்கில் அதிரடித் தீர்ப்பு எதுவும் வழங்கப் படுமோ என உன்னிப்பாக கவனித்தது மத்திய உளவுத்துறை

No comments:

Post a Comment