Monday, June 14, 2010

தி.மு.க. எம்.பி.களிடம் ராஜபக்சே எகத்தாளம்!



shockan.blogspot.com

டெல்லி வந்த ராஜபக்சேவை சந்தித்து ஈழத்தமிழர்களின் மீள்குடியேற்றம் பற்றியும் அரசியல் தீர்வை முன்னெடுக்கும் படியும் வலியுறுத்தினர் தி.மு.க.வின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு. இந்த சந்திப்பின்போது ராஜபக்சேவுடன் இருந்த டக்ளஸ் தேவானந்தா, ""நானும் போராளியாக இருந்தவன்தான். நிலைமைகள் எனக்கு நல்லா தெரியும். இப்போ காலங்கள் மாறிவிட்டது. மகிந்த ராஜபக்சே மீது எங்கட மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு. 20 வருடங்கள் போராடினோம். எல்லாம் வேஸ்ட். இன்னும் 2 ஆண்டுகளில் எங்கட மக்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுப்பார் மகிந்த ராஜபக்சே'' என்று ஒரு மிடுக்காக பேசியவர், ""அங்குள்ள பிரச்சினைகள் உங்களுக்குத் தெரியமாட்டேங்குது. உங்க ஊரிலும் தேர்தல் நடக்கிறது. ஓட்டுகள் வாங்கணும். உங்க பிரச்சினை எனக்கு புரியுது. அதுக்காக கடுமையாக பேசி எங்களுக்கு கிடைக்கறதை கெடுத்திடாதீங்க''’’என்று குழைந்தும் நெளிந்தும் நைச்சியமாக சொல்லி விட்டு, தான் எழுதிய புத்தகம் ஒன்றை எல்லோருக்கும் தந்துள்ளார்.

இதனை அடுத்து ராஜபக்சேவிடம் பேசிய டி.ஆர்.பாலு,’""போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாங்கள் பார்க்க இலங்கைக்கு வந்தபோது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை விரைந்து செய்யும்படியும் முகாம்களில் உள்ள மக்களை முழுமையாக அவரவர்களின் வீடுகளில் குடியேற்றவும் வலியுறுத்தினோம். இதனை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றுகிறேன்னு உறுதி கொடுத்தீர்கள். அந்த உறுதியை நீங்கள் நிறைவேற்றவில்லை. இன்னமும் 80 ஆயிரம் மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல அரசியல் தீர்விற்கான எந்த முயற்சியும் நீங்கள் எடுக்கவில்லை. இதனை எங்கள் தலைவர் கடுமையாகவே உங்களிடம் வலியுறுத்தச் சொன்னார்''’என்றார் கோபமாகவே.

அதற்கு பதில் சொன்ன ராஜ்பக்சே,’""80 ஆயிரம் பேர்ங்கிறது தப்பு. இப்போ 54 ஆயிரம் பேர்தான் முகாம்களில் இருக்காங்க. (இண்டியன் - ஃபாரின் அபேயர்ஸ் கமிட்டி சொன்னதையே சொன்னார்) அதிபர் பதவிக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் வந்ததால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்த முடியலை. வரும் டிசம்பருக்குள் நிறைவேத்து வேன்''’’என்றார்.

இதில் சமாதானமாகாத டி.ஆர். பாலு,’’""மழைக்காலம் தொடங்கிடுச்சி. டிசம்பர் வரை தள்ளிப்போடக்கூடாது. இன்னும் ஓரிரு மாதத்திற்குள் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுங்கள். மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தரவேண்டும் என்று நாங்கள் கேட்டதற்கு கட்டித்தரப்படும் என்று சொன்ன நீங்கள் அதையும் செய்யவில்லை. இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி கொடுத்திருக்கிறது. தமிழக அரசு சார்பாக 40 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை அனுப்பி வைத்தோம். இது எதுவும் முழுமையாக தமிழர்களுக்கு போய்ச் சேரவில்லை''’’என்று கடுமையாக பேச, அப்போது ராஜபக்சே,’’""நாங்களே வீடு கட்டிக்கறம். நீங்க கட்டித்தரத் தேவையில்லைன்னு மக்கள் சொல்லிட்டாங்க. அதனால 8 மூட்டை சிமெண்டும் பணமும் தந்திருக்கோம். அவங்க சந்தோஷமாக இருக்காங்க. எம் மக்களுக்கு என்ன செய்யணும்ங்கிறது எனக்கு தெரியும். அதை செய்துகிட்டு இருக்கேன். என்னைப்போல உலகத்துல யாருமே நல்ல காரியங்களை செய்யறதில்லே. நல்லதை மட்டுமே நான் செய்துக்கிட்டு இருக்கேன்''’என்றார் மிக எகத்தாளமாக.

அப்போது இதை ஆமோதிக்கிற மாதிரி,’’""கொழும்புவில் நாங்க உங்கள சந்திச்சப்போ விரைவில் 1 லட்சம் தமிழர்கள் அவரவரின் சொந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்னு சொன்னீங்க. அதே மாதிரி செய்திருக்கிறீங்க. அது ரொம்ப சந்தோஷம் எங்களுக்கு''’என்று ராஜபக்சேவுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒத்து ஊதினர். இந்த இடத்தில் எல்லோருக்கும் கூல்டிரிங்ஸும் ஸ்னாக்சும் வந்தது. இதனை பெரும்பாலான தி.மு.க. எம்.பி.க்கள் தவிர்த்துவிட்டனர். ராஜபக்சேவிடம் பேசிய கனிமொழி,’’""உங்க ராணுவத்தினர் தமிழக மீனவர்களை சுட்டுகொல்றதை நிறுத்தவே மாட்டேங்கிறார்களே?''’’என்றபோது,’’""எங்க கடல் எல்லைக்கு வரும் தமிழக மீனவர்களை நாங்க சுடுறதே இல்லை. வழி தவறி வருகிற தமிழக மீனவர்களை கைது செய்து எங்க மாஜிஸ்திரேட்டிடம் கொண்டுபோய் ஜெயிலிலும் போடறதில்லே. அவங்களை பிடிச்சி உங்க இந்திய அதிகாரிங்ககிட்டே ஒப்படைச்சிடுறோம். நாங்க சுடுறதெல்லாம் கிடையாது. ஆனா எங்க மீனவர்களைத்தான் நீங்க ஜெயில்லே வைச்சிருக்கீங்க''’’என்று குற்றம்சாட்ட,’’""எங்கே தமிழக ஜெயில்லேயா?'' என்று கனிமொழி கோபமாக கேட்க,’’ ""இல்லே நான் பொதுவா சொன்னேன்''’’ என்றிருக்கிறார் ராஜபக்சே.

அப்போது குறுக்கிட்டு பேசிய தி.மு.க. எம்.பி. ஜின்னா, ""முகாமில் மருத்துவ வசதியே இல்லை. டாக்டர் களும் இல்லை. நாங்க வேணா தமிழகத்திலிருந்து டாக்டர்களை அனுப்பி வைக் கட்டுமா?''’’என்று சொன்ன போது,’’""முகாமில் எல்லா வசதிகளும் செய்து தரப் பட்டுள்ளது. டாக்டர்கள் போதுமான அளவுக்கு இருக்காங்க. உங்களுக்குவேணா சொல்லுங்க நான் டாக்டரை அனுப்பி வைக்கிறேன்'' என்றார் திமிராக.

தி.மு.க. எம்.பி.க்களிடம் இப்படி பிடிகொடுக்காமல் ராஜபக்சே பேசியதைத் தான் திருப்தியில்லை என்கிற தொனியில் சொல்லியிருக்கிறார் டி.ஆர்.பாலு.







ராஜபக்சேவின் இந்திய வருகையை எதிர்த்தும் அவருக்கு இந்திய அரசு கொடுத்த வரவேற்பைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின தமிழர் அமைப்புகள். இந்நிலையில் இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறார் ராஜபக்சே. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தானவை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவரும் ஈழஆதரவாளருமான தோழர் தியாகு, ""பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு ஒத்துழைப்பு, தண்டனை பெற்ற கைதிகளை இரண்டு நாடுகளும் பரஸ்பரம் மாற்றிக் கொள்ளுதல், குற்றவியல் நேர்வுகளில் ஒருவருக்கு ஒருவர் சட்ட உதவிகளை செய்துகொள்வது, இரு நாடுகளுக்கிடையே உயர்மட்ட அளவில் ராணுவ ரீதியிலான பரிமாற்றங்கள், இலங்கை ராணுவத்தினருக்குப் பயிற்சிகள் வழங்குதல், இலங்கையில் புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறையினருக்கு இந்தியாவில் பயிற்சி, இந்திய எரிசக்தித் துறையின் ஒத்துழைப்பு, இலங்கை துறைமுகங்களையும் விமானத் தளங் களையும் சீரமைத்துத் தருதல், பண்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பு, இலங்கையில் சிறு தொழில் வளர்ச்சிக்கு இந்தியாவின் உதவி உள்ளிட்ட ஒப்பந்தங்கள் முக்கியமானவை. இந்த ஒப்பந்தங்களை உற்றுப் பார்த்தால் அதில் மறைந்துள்ள ஆபத்துகள் புரியும்.

அதாவது.... ஈழப் போராட்டம் இன்னும் முற்று பெறவில்லை. புதிய புதிய வழிகளில் இந்த போராட்டங்கள் சர்வதேச அளவில் வலுப் பெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த போராட்டங் களை ஒடுக்கவும் போராடுபவர்களை அழிக்கவும் இலங்கைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டு மென்பதுதான் முதல் ஒப்பந்தத்தின் பொருள். அதற்கு இந்தியா இசைவு தெரிவித்து கையெழுத் துப் போட்டுள்ளது.

அடுத்து தண்டனை கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தம். தமிழகத்திலுள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் புலிகளின் ஆதர வாளர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்கவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது ரொம்பவும் ஆபத்தானது. இலங்கையிடம் கைதிகள் ஒப்ப டைக்கப்படுகிற நிலையில் அவர் களை ஈவு இரக்கமின்றி கொன் றழித்துவிடுவார் ராஜபக்சே.

தவிர புலிகளின் ஆதர வாளர்களாக இருக்கும் பலரும்... துரோக குழுக்களால் அடையாளம் காணப்பட்டு கைதிகள் போர்வையில் அவர்களும் ராஜ பக்சேவிடம் ஒப்படைக்கப்படுகிற மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. மூன்றாவதாக... குற்றவியல் நேர்வுகளில் ஒருவருக்கு ஒருவர் சட்ட உதவி செய்து கொள்கிற ஒப்பந்தம். இது எதற்காக போடப்பட்டுள்ளதென்றால்... ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்டவர்களை போர்குற்றவாளிகளாக பல்வேறு நாடுகள் அறிவிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில் இருந்து தப்பிக்கவும் இதற்காக சர்வதேச அளவில் இலங்கைக்கு, இந்தியா சட்ட உதவி செய்ய வேண்டுமென்பதற்காகவும் போடப்பட்டிருக்கிறது.

பண்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பு என்பது.. தற்போது ஐஃபா திரைப்பட விருதுகள் விழாவிற்கு எதிராக கிளர்ச்சிகள் நடத் தப்பட்டது போல, எதிர்காலத்தில் நடக்கும் விழாக் களின் போது இலங்கைக்கு எதிராக கிளர்ச்சிகள் நடந்தால் அதனை இந்திய அரசே தலையிட்டு ஒடுக்கவேண்டும் என்பதற்காக போடப்பட்டிருக் கிறது. அடுத்து இலங்கையில் தமிழர் பகுதிகளில் தமிழர்களின் அடையாளங்களும் தமிழர்களின் தொழில்களும் முற்றிலும் அழிக்கப்பட வேண்டு மென்பதற்காகவே சிறுதொழில் வளர்ச்சிக்கு இந்தியா உதவ வேண்டுமென்று ஒரு ஒப்பந்தத்தை போட்டிருக்கிறார் ராஜபக்சே. ஆக எந்த கோணத் தில் பார்த்தாலும் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிரானவை, ஆபத் தானவை'' என்கிறார்.

பெரியார் தி.க.வின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், ‘""இனப் படுகொலை நாடாக இலங்கையை உலக நாடுகள் பலதும் அறிவிக்கிற சூழல் இருக்கும் நிலையில், ராஜபக்சேவுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டுக்கொண்டிருப்பது ராஜபக்சேவின் போர்க்குற்றங்களை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. 1986-ல் சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்கிற தலித் இளைஞனை சுட்டுக்கொன்ற வழக்கும், பணக்கார வீட்டு 10 வயது சிறுவனான மதிவாணனை கடத்திய வழக்கும் ராஜபக்சேவுடன் டெல்லிக்கு வந்த டக்ளஸ் தேவானந்தா மீது இன்னும் நிலுவையில் இருக்கிறது. தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார் டக்ளஸ். ராஜபக்சேவுடன் வந்த இவர், இந்திய பிரதமரையும் சந்திக்கிறார். இரு நாடுகளும் கைதிகளை பரிமாறிக் கொள்வதுங்கிற ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதால்... இந்த ஒப்பந்தத்தின்படி டக்ளஸை தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கச்சொல்லி ராஜ்பக்சேவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். இந்தியாவை வலியுறுத்த சென்னை காவல்துறை முயற்சிக்கவேண்டும். 11 ஒப் பந்தங்கள் போட்டிருக்கிறார்கள். அதில் ஒன்றுகூட ஈழத்தமிழர் நலன்களுக்காக போடப்படவில்லை. தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் தமிழர்களுக்கு எதிரான துரோகங்களை இந்தியா தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது'' என்கிறார்.

No comments:

Post a Comment