Sunday, June 20, 2010

திரைக்கூத்து!

அசின்-சூர்யாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!


"இலங்கைப் படவிழாவுக்கு போனவங்க நடிச்ச படங்களை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்'னு திரையுலகம் கூடி முடிவெடுத்துச்சு. அந்த விழாவில் கலந்து கொண்ட விவேக் ஓபராயும், சூர்யாவும் சேர்ந்து நடிச்ச "ரத்த சரித்திரம்' படத்தை சூர்யாவுக்காக வெளியிட அனுமதிப்போம்'னு சீமான் சொல்றார். இது என்ன கொள்கையோ தெரியல. சீமான்தான் ஒட்டு மொத்த இண்டஸ்ட்ரியா? இப்போ தமிழில் தனுஷும், ஜெனிலியாவும் நடிச்சிட்டு வர்ற ‘"உத்தமபுத்திரன்' படத்தை ஹிந்தியில் எடுக்கப் போறாங்க. அதில் சல்மான்கான் ஜோடியா அசின் நடிக்கப் போறார். இந்தப் படத்தோட படப்பிடிப்பு இலங்கையில் நடக்கப் போகுது. இந்தப் படத்துல இருந்து அசின் விலகிக்கணும். இல்ல... தமிழ்ப்படங்களில் அசின் நடிக்கக் கூடாது. ‘"ரத்த சரித்திரம்' படத்திற்கு எதிராவும், அசினுக்கு எதிராவும் நாங்க கோயம்புத்தூர்ல போராட்டம் நடத்துறோம்' என வம்புச் செய்தியை என் காதில் போட்டார் இந்து மக்கள் கட்சி கண்ணன்.


மோதல் திவ்யா!


சில தினங்களுக்கு முன் ஜீவா, "குத்து' ரம்யா என்கிற திவ்யா பந்தனாஸ் நடிக்கும் ‘"சிங்கம்புலி' படத்தோட ஷூட்டிங் வடபழநி பகுதியில் நடந்தது. அம்மணியை பேட்டி எடுத்துவிட முக்கிய சேனல் ஆட்கள் மைக்கோடு போய் மொய்க்க... கர்நாடக மீடியாக்களிடம் அடிக்கடி மோதும் திவ்யா அதே போல் இங்கும் சேனல் ஆட்களோடு மோதியவர்... ‘"நான் தமிழ்ச் சேனலுக்கெல்லாம் பேட்டி தர்றதில்லை' எனச் சொல்லிவிட்டு கேரவனுக்குள் புகுந்து கொண் டாராம். அம்மணியின் மேனேஜர் தங்கதுரையை சேனல் ஆட்கள் தொடர்பு கொள்ள... ‘"அவங்க சுதந்திரத்தில் நான் தலையிட முடியாது' எனச் சொல்லி விட்டாராம். ஏமாந்து போய் திரும்பினார்கள் சேனல் ஆட்கள்.


ஆளுக்கொரு படம்!


மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக ‘"துப்பறியும் ஆனந்த்' படம் எடுக்க பேசப்பட்டிருந்தது. கௌதம்மிடம் அஜீத் கதை கேட்டபோது கதையைச் சொல்லாமல் இருந்தாராம். இப்போது முழுக்கதையையும் தயார் செய்துவிட்டு ‘"நான் ரெடி' என கௌதம் சொல்ல... அஜீத்தோ கதையை கேட்க தயாரில்லையாம். இதனால் மனக்கசப்பு உருவாகி யிருக்கிறதாம். இருவருக்குமே அட்வான்ஸ் கொடுத்திருப்பதால் கௌதம் இயக்கத்தில் ஒரு படத்தையும், அஜீத் நடிப்பில் ஒரு படத்தையும் தயாரிக்க துரை ஆலோசிக்கிறாராம். அஜீத் பட வாய்ப்பை பெற்றுவிட அஜீத்தோடு டச்சில் இருக்கிறாராம் வெங்கட்பிரபு.


சர்ட்டிபிகேட்!


உறவுப் பிசகல்களால் ஏற்படும் விளைவுகள் ரொம்ப வலி மிகுந்தது என்பதுதான் ‘"ஒச்சாயி' படத்தின் கதையாம். உசிலம்பட்டி ஏரியா கதை என்பதால் அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களையே கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர் ஆசைத்தம்பி. பஞ்சாயத்து தேர்தலே நடத்த முடியாமல் பரபரப்பை உண்டாக்கிய பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் ‘"ஒச்சாயி' படப்பிடிப்பை நடத்திவிட்டு வந்திருக்கும் ஆசைத்தம்பி ‘"வெளி உலகம் நினைக்கிற மாதிரி அங்கே ஜாதி வெறியில்லை. நாங்க படப்பிடிப்பு நடத்தின போது அந்த ஊர் மக்கள் ரொம்ப உதவிகரமா இருந்தாங்க' என சர்டிபிகேட் தருகிறார்.


ஸ்விம்சூட் அலப்பரை!சிம்புவால் ‘"ஒனக்கு நடிப்பே வரலை' என திட்டியனுப்பப்பட்ட லேகா வாஷிங்டன் இப்போ பாலிவுட்டில் படு கலக்கு கலக்குகிறார். லேகா நடித்த முதல் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. ஆனால் அந்தப் படத்தில் ஸ்விம்சூட்டில் அம்புட்டு கவர்ச்சி அலப்பரை பண்ணுவதால் பார்ட்டிகளுக்கும், விழாக்களுக்கும் தப்பாமல் தள்ளிக் கொண்டு வந்து விடுகிறார்கள் லேகாவை.

அப்படியா?


அந்த கடைவீதிப் படம் சில பர பரப்பான வணிக நிறுவனங்களின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டதாக நிறுவனங்களின் தரப்பில் நினைக்கிறார்கள். இமேஜை தூக்கி நிறுத்த பெரிய ஸ்டார்களின் உதவியை நாடு கிறார்கள். அதன் அடிப்படையில் "சூ' நடிகர் ஒரு வணிக நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக ஒரு பெருந்தொகைக்கு ஒப்பந்தமாகியிருக் கிறார். முதலில் நடிகர் யோசித்தாலும் வீடு கட்டிவரும் பணத் தேவைக்காக ஓகே சொல்லிவிட்டாராம்.

No comments:

Post a Comment