Sunday, June 20, 2010

ஆபாச சி.டி.யில் சிக்கியது எப்படி? இளம்பெண்ணின்...shockan.blogspot.com

"கல்லூரி மாணவிகளின் ஆபாச சி.டி.! சிக்கிய கும்பலை பணத்துக்காகத் தப்பவிடும் போலீஸ்' என்ற தலைப்பில் கடந்த ஜூன் 12 தேதியிட்ட நக்கீரனில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதில் காதல் வலைவீசி கல்லூரி மாணவி பூமிகா உள்ளிட்ட சில மாணவிகளை ஆபாசப் படம் எடுத்து அவர்களின் கற்பை சூறையாடிய கார்த்திக், பப்லு, மணிகண்டன், ஜெகதீசன் ஆகிய மன்மத வில்லன்கள் குறித்தும் அவர்களைத் தப்பவைக்கப் படாதபாடுபடும் மதுரை ஜெய்ஹிந்த்புரம் காக்கிகள் குறித்தும் விரிவாக எழுதியிருந்தோம்.

""இன்னும் பல விவகாரங்களை காவல்துறை மறைக்கிறது. இந்த மன்மத வில்லன்கள் ஏகப்பட்ட பெண்களை கெடுத்து ஆபாசப்படம் எடுத்திருக் கிறார்கள்.

அவர்கள் வசம் இருக்கும் ஆபாசப் படங்களை மீட்பதோடு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி 17-ந் தேதி மதுரை கட்டபொம்மன் சிலை முன்பு எங்கள் சி.பி.எம். கட்சியினரும், ஜனநாயக மாதர் சங்கத்தினரும், டைபி தோழர்களும் மிகப்பெரிய கண்டனக் கூட்டத்தை நடத்தி யிருக்கிறோம்'' என்கிறார் சி.பி.எம்., மா.செ.வான அண்ணாதுரை.

போலீஸ் அப்படி என்ன மாதிரியான விவகாரங்களை மறைக்கிறது?’’ என நாம் விசாரித்த போது தலை கிறுகிறுக்கும் அள விற்கு திகீர் பகீர் தகவல்கள் கிடைத்தன.

""பப்லுவின் செல்போனை ஆராய்ந்தபோது... அதில் பூமிகா உள்ளிட்ட 11 பெண்களின் ஆபாசப் படங்கள் இருப்பதை நாங்கள் பார்த்து அதிர்ந்து போனோம். அதில் இருந்த பெண்களில் ஒருவர்... இந்தப் பகுதி யில் செல்வாக்காக இருக்கும் ஒரு அரசியல்கட்சிப் பிரமுகரின் மனைவி. இதன்பிறகு அந்த செல்போனை இன்ஸ்பெக்டர் ஜெயமுரளியிடம் ஒப்படைத்து... பப்லு டீம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால் போலீஸோ... அந்த செல்போனில் இருந்த மெமரி கார்டை அப்படியே மாற்றிவிட்டு... வெறுமையான ஒரு மெமெரி கார்டைப் போட்டு... பப்லு டீம் ஈவ்டீஸிங் மட்டும் செய்ததுபோல் ஒரு செட்டப்பை செய்துவிட்டது. நக்கீரனில் செய்தி வந்த பிறகே பெண் கொடுமை வழக்கை இவர்கள் மீது போட்டிருக்கிறார்கள்''’என்றார் ஒரு டைபி தோழர்.
இந்த நீலப்படக் கும்பலிடம் சிக்கிய அரசியல் புள்ளியின் மனைவி யார்? அவர் எப்படி சிக்கினார்? என விசாரித்தபோது...

“அந்த அரசியல் புள்ளியின் பெயரோ கட்சியோ வேண்டாம். இந்த வில்லன்கள் டீம் முதலில் அந்த அரசியல் புள்ளியின் கல்லூரி போகும் மகளைத்தான் காதல் வலையில் வீழ்த்தியது. பின்னர் போதை மாத்திரை யைக் கொடுத்து அவளை ஆபாசப்படம் எடுத்தது. பிறகு அந்த மாணவியின் வீட்டுக்கு... கேபிள் டி.வி. ஆட்கள் போல அடிக்கடி போய்... அந்த மாணவியின் அம்மாவிடம் நல்ல பரிச்சயத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். புதுப்படங்களின் சி.டி.க்களைக் கொடுப்பதன் மூலம்... அந்த ஆண்ட்டியை வளைத்தவர்கள்... அவருக்கும் போதை மாத்திரைகளைக் கொடுத்து... ஆபாசப் படம் எடுக்க முயற்சி பண்ணியிருக்கிறார்கள். ஆனால் அந்த ஆண்ட்டி.. முழுசா போஸ் தரமாட்டேன்னு பிடிவாதமா இருந்ததால்... கிளுகிளுப்பா படம் எடுத்திருக்கானுங்க. இப்படி படம் எடுத்த கில்லாடிப் பயல்கள்... அம்மாவின் கிளுகிளு படங்களையும் அவங்க மகளின் அப்பட்டமான படங்களையும் தன் நண்பர்கள்ட்டயும் கல்லூரி மாணவர்கள்ட்டயும் 500 ரூபா வீதம் சி.டி.போட்டு வித்திருக்கானுங்க. இந்த விசயம் அந்த அரசியல் புள்ளியின் காதுக்குப் போக... அதிர்ந்துபோன அவர்... தன் ஆளுங்களை சப்-ஜெயிலுக்கு அனுப்பி... பப்லு டீம்கிட்ட பேச வச்சி... அந்தப் படங்கள் யார் யார்ட்ட இருக்குன்னு சொல்லுங்க. உங்களை விட்றச் சொல்றோம்னு கூலாப்பேசி... தகவல் கறந்து... சிலர்ட்ட இருந்த படங்களை கைப்பற்றி யிருக்காங்க’’ -இதை நம் காதில் கிசுகிசுத்தவர் ஒரு காக்கிதான்.

டைபி தோழர் களில் சிலர் பாதிக் கப்பட்ட பெண்களை சந்தித்து... அவர்களின் பாதிப்பு கள் குறித்து தகவல் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சந்தித்த இளம் பெண்களில் ஒருவர்... ரைஸ் மில்லில் வேலைபார்த்து வருகிறார். அவர் தன் பாதிப்பைச் சொல்லும் போது.... ’""பப்லு அடிக்கடி டூவீலர்ல வந்து சைட்டடிப்பான். என்னை உண்மையாக காதலிப்பதா டயலாக் அடிச்சான். அதை நம்பி அவனோடு சுத்தினேன். அப்புறம் ஒருநாள் என்னை ஒரு வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப்போய்... அவனது ஆசைக்கு பயன்படுத்திக்கிட்டான். பிறகு அவனோட நண்பர்களுக்கும் நான் வேணும்னு கேட்டான். நான் கோபப் பட்டபோது... என் ஆபாசப் படத்தை செல்போன்ல காட்டி... "இந்தப் படம் என் பிரண்டுங்கக்கிட்ட எல்லாம் இருக்கு'ன்னு சொல்லி... அவங்கக்கிட்டயும் கூட்டிட்டுப் போனான். அப்பதான் அவன் என்னை அப்படி படம் எடுத்ததே தெரியும். இது தப்பில்லையான்னு நான் கேட்டப்ப... உன்னை மட்டுமா இப்படி எடுத்திருக் கேன்னு.. மேலும் சிலரோட அந்த மாதிரியான படத்தைக் காட்டினான்.

அதில் 2 முஸ்லிம் பொண்ணுக படங்களும் இருந்தது. இவங்களை எப்ப டிடா எடுத்தேன்னு கேட்டேன். அதுக்கு... அவன்... "எங்க அப்பா முஸ்லிம். அம்மா தேவர். அப்பாவின் சொந்தக்காரங்க மூலம்... இந்தப் பிள்ளைகளை காதல்ல விழவச்சி விதவிதமா படம் எடுத்தேன். இவங்க படத்துக்குதான் ஏரியாவில் ஏக கிராக்கி. நிறையபேர்ட்ட வித்திருக்கேன்'னு சொன்னான். அதேபோல அந்தப் பள்ளி மாணவிகளையும் அவன் வளைச்சிருக்கான். (பள்ளி பெயர் மறைக்கப்பட்டுள்ளது) இந்த டீமிடம் ஒரு மாலைப் பத்திரிகை நிருபரின் சொந்தக்காரப் பொண்ணும் மாட்டியிருக்கு. இந்தக் கும்பல் கிட்ட சிக்கி சின்னாபின்னப்பட்டுக்கிட்டு இருந் தேன். அவனுங்களை சும்மா விடக்கூடாது'' என்று விரிவாகச் சொல்லி அழுதிருக்கிறார்.

“""நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியுது. ஆனா எங்கள்லயே சிலர் சரியா இல்லையே.. எங்க ஸ்டேஷனுக்கு திங்கட் கிழமை அதிரடியாக வந்த டி.சி. தேன் மொழியம்மா... இன்ஸ்பெக்டர் ஜெயமுரளியை கூப்பிட்டு... "அக்யூஸ்ட்டுகளுக்கு சப்போர்ட்டா பண்றீங்க? நக்கீ ரன்ல பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தைப் போடறாங்க. ஆனா நீங்க எவிடன்ஸே இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்கன்'னு டோஸ் விட்டாங்க. இன்ஸ் பெக்டரோ அவங்க மாடலிங் படத்தைப் போட்டிருக்காங் கன்னு சமாளிக்க.... டி.சி.யோ அது ஒரிஜினல் படம்ன்னு எனக்குத் தெரியும். ஜாக்கிரதைன்னு எச்சரித்துவிட்டுக் கிளம்பினார். அதேபோல் பாதிக்கப்பட்ட பூமிகா வீட்டுக்குப்போய் ஜெய்ஹிந்த்புரம் எஸ்.ஐ.அரிமுத்து மிரட்ட... அந்தப் பெண் ஏ.சி.யைத் தொடர்புகொண்டு முறையிட்டார். இதைத்தொடர்ந்து ஏ.சி. அந்த எஸ்.ஐ.யை காய்ச்சி எடுத்துவிட்டார்'' என்கிறார் ஜெய்ஹிந்த்புரம் காக்கி ஒருவரே.

இந்த நிலையில்... மதுரை ஏ.சி. வெள்ளதுரை அனுப்பிய போலீஸ் டீம் சென்னை நந்தனத்தில் இருந்த நீலப்பட கும்பல் தலைவனான கார்த்திக்கை வளைத்திருக்கிறது. அவன் வாய் திறந்தால்.. இன்னும் பல பகீர் பூதங்கள் கிளம்பலாம் என்ற எதிர்பார்ப்பு மதுரைவாசிகள் மத்தியில் இருக்கிறது. தானாக போஸ் கொடுத்த பெண்ணைத்தான் படம் எடுத்தேன் என முழுதாக வாய் திறக்க மறுத்தான் கார்த்திக். அவனை போலீஸ் ஊமையாக்குமா? பேச வைக்குமா? பொறுத் திருந்து பார்ப்போம்

No comments:

Post a Comment