Tuesday, June 15, 2010

தனுஷ் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ரஜினி ஃபார்முலா!


"புதுப்பேட்டை'யில் கவிழ்ந்த தனுஷின் மார்க்கெட் படகை மெல்ல மெல்ல நிமிர்த்திய படங்களில் "யாரடி நீ மோகினி', "குட்டி' படங்கள் முக்கியமானவை. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் மித்ரன்

ஆர். ஜவஹர்! அவர் மூன்றாவதாக தனுஷுக் காக இயக்கும் படம் "உத்தமபுத்திரன்'.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான "ரெடி' படத்தின் ரீ-மேக்தான் "உ...பு...' (கன்னடம், இந்தியிலும் "ரெடி' ரீ-மேக் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.)

"உத்தமபுத்திரனி'ல் தனுஷுக்கு ஜோடி போடுபவர் "ரெடி' நாயகி ஜெனிலியாவேதான்! பாக்யராஜ் தனுஷின் பெரியப்பாவாக நடிக்கிறார். விவேக், கருணாஸ், ஆர். சுந்தர் ராஜன், மயில்சாமியுடன் இன்னும் பல துக்கடாக்கள் காமெடி பண்ணுகிறார்கள். விஜய்பாபு- உமா பத்மநாபன் தனுஷின் அப்பா- அம்மா. ஆசிஷ் வித்யார்த்தி வில்லன்.

"தூறல் போடும் மேகம்; மேகம் தேடும் வானம்' என்ற பாடலும், "உத்தமலாக்கி' என்ற பாடலும், ஒரு மாண்டேஜ் சாங்கும் சுவிஸ் பனி மலைப் பின்னணியில் படமாக்கப்பட்டிருக் கிறது.

தமிழ்ப்பட வெற்றி ஃபார்முலாப்படி கொஞ்சம் காமெடி, கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் ஃபேமிலி சென்டிமெண்ட் கலந்ததால்தான் "யாரடி நீ மோகினி', "குட்டி' படங் கள் தனுஷைத் தோல்வியிலிருந்து மீட்டு வந்தது. அதே ஃபார்முலாப் படி "உத்தமபுத்திரன்' படத்தைத் தயாரிக்கிறார்கள் - பாலாஜி ஸ்டுடி யோஸ் மோகன் அப்பாராவ், ரமேஷ் தாண்ட்ரா இருவரும்.

ஹாட்ரிக் வாய்ப்பாக மூன்றாவ தாகவும் தனுஷை இயக்கும் வாய்ப் பைப் பெற்ற மித்ரன் ஆர். ஜவஹர் ரொம்ப கவனமாக "உத்தமபுத்திரனை' உருவாக்கி வருகிறார்.

மாமனார் ரஜினி ஃபார்முலாவை மருமகன் தனுஷ் தழுவித் தப்புகிறாரோ?

No comments:

Post a Comment