Thursday, June 17, 2010

விஜயகாந்த்துக்கு அ.தி.மு.க. போட்ட நிபந்தனை!


shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... .... விழுப்புரம் பக்கத் திலே மலைக் கோட்டை எக்ஸ் பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பித்திருக்குது. தண்டவாளத்தை வெடி வைத்து தகர்த்தபோதும், முன்னே சென்ற ரயிலின் கார்டு, ஸ்டேஷன் மாஸ்டர், மலைக்கோட்டை எக்ஸ்பிரசின் டிரைவர் இந்த மூணு பேரின் விழிப்புணர்வும் சமயோசித முடிவும்தான் விபத்திலிருந்து பயணிகளைக் காப்பாற்றியிருக்குது.''

""விபத்து நடந்திருந்தா 2000 பேர் பலி யாகியிருப்பாங்கங்கிறதை நினைக்கும்போதே நெஞ்சு பதறுதுப்பா. இந்தக் கொடூரத்தை செஞ்சவங்க யாரா இருந்தாலும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி தண்டிக்கணும்.''

""விபத்து தவிர்க்கப்பட்டபோதும், சட்டம்-ஒழுங்கு சரியில்லைன்னு சொல்லி, தி.மு.க ஆட்சியைக் கலைக்கணும்னு ஜெ அறிக்கை விட்டிருந்தார். இப்ப கொடநாட்டில் இருக்கும் ஜெ, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட் டைத் தொடங்கி வச்சிட்டு ஊட்டியில் ஓய்வெடுக்கப்போவதால் அவரை சந்தித்து, தி.மு.க ஆட்சிக்கெதிரா மனு கொடுப்ப தற்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கிறார். ஒரு எதிர்க் கட்சித் தலைவர் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கும் நிலையில், அதற்கான நடைமுறைகள் பற்றி ஜனாதிபதி மாளிகையில் ஆலோசனை நடந்துக்கிட்டிருக்குது.''

""அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தைகளில் சமீப நாட்களா ஏதாவது முன்னேற்றம் உண்டா?''

""அ.தி.மு.க சைடிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டாக்டர் வெங்கடேஷ் மூணு பேரும்தான் தே.மு.தி.க தரப்போடு பேசிக்கிட்டி ருக்காங்க. இவங்களை கோ-ஆர்டினேட் பண்ணிக் கிட்டிருப்பவர் சசிகலா. அதேபோல, தே.மு.தி.க சைடில் சுதீஷ், ராமச்சந்திரன், மாஃபா பாண்டிய ராஜன் மூணு பேரும் அ.தி.மு.க தரப்போடு பேசிக்கிட்டிருக்காங்க. இவங்களை கோ-ஆர்டி னேட் செய்பவர் பிரேமலதா. அ.தி.மு.க சார்பில் பேசுறவங்க.. உங்களுக்கு 35 சீட் தரலாம். அதையும் அம்மாகிட்டே கேட்டுத்தான் உறுதியா சொல்லு வோம்ங்கிறாங்களாம். அதோடு ஒரு கண்டிஷனும் போடுறாங்களாம்.''

""என்ன கண்டிஷன்?''

""சீட்டு கணக்கு, கூட்டணிப் பேச்சு இதெல்லாம் சரியானபடி முடிஞ்சாலும் முடியாவிட் டாலும் மேடையிலே விஜயகாந்த் இது சம்பந்தமா எதுவும் பேசக்கூடாதுங்கிறதுதான் கண்டிஷன். ஏற்கனவே காங்கிரசோடு நடந்த பணம் தொடர் பான ரகசிய பேச்சுவார்த்தை பற்றி காஞ்சிபுரத்தில் விஜயகாந்த் பேசியதால பரபரப்பானது. அ.தி.மு.க விஷயத்தில் அப்படி நடந்துடகூடாதுங்கிறதுக் காகத்தான் முன்கூட்டியே கண்டிஷனாம்.

""தே.மு.தி.க தரப்பில் ஒத்துக்கிட்டாங்களா?

""கூட்டணிக் குழுவில் உள்ளவங்க என்னதான் பேசினாலும், ஜெ. முடிவுதான் இறுதியானதுங்கிறதால, எதுவா இருந்தாலும் மேலிடத்தில் பேசிட்டு முடிவைச் சொல்லுங்கன்னு சொல்லியிருக் காங்க. 60 சீட் தந்தால்தான் சரிப்படும்ங்கிறதையும் அ.தி.மு.க.விடம் தே.மு.தி.க. தரப்புசொல்லியிருக்குது. கூட்டணிப் பேச்சுகளின் நிலவரத்தைத் தினமும் தெரிந்துகொள்ளும் விஜயகாந்த், கூட்டணி பற்றி பா.ம.க முதலில் முடி வெடுக்கட்டும். அப்புறம் நாம எடுப்போம்ங்கிற நிலைப்பாட்டில் இருக்காராம்.''

""கூட்டணியில் தே.மு.தி.க.வைக் கொண்டு வருவது பற்றி ஆரம்பத்திலிருந்தே ஸ்டெப் எடுப்பது சி.பி.எம்தான். அவங்க மூவ் என்ன?''

""ஜூலை 6, 7, 8 தேதிகளில் சி.பி.எம் மாநிலக்குழு கூட்டம் நடக்குது. அதில், அ.தி.மு.க அணிக்கு தே.மு.தி.க வரணும்னு வெளிப்படை யாகவே தீர்மானம் போடப் போறாங்களாம். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கும் அதே கோவையில் செப்டம்பர் 16, 17, 18 இந்த 3 தேதிகளில் ஒருநாளில் கூட்டணிக் கட்சித் தலைவர்களையெல்லாம் ஒரே மேடையில் ஏற்றும் வகையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்துவது சம்பந்தமா அ.தி.மு.க.வில் ஆலோசனை நடந்துக்கிட்டிருக்குது. விலைவாசி உயர்வுக்கு எதிராக நடந்த பாரத் பந்த்தில் கலந்துக்கிட்ட கட்சிகளின் தலைவர்களையெல்லாம் அழைப்பது பற்றியும் பேசிக்கிட்டிருக்காங்களாம். இந்தியத் தலைவர்கள் தமிழ்நாட்டில் ஒரே மேடையில் தோன்றினால் அது தேசிய அளவில் முக்கியத் துவம் உள்ளதா மாறும். மாநாடு நடத்து வதுன்னு அ.தி.மு.க உறுதியா முடிவெடுத்தால், அந்த மேடையில் தே.மு.தி.க.வையும் ஏற்றிடணும்ங்கிற முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்குது.''

""தி.மு.க. ஏரியா எப்படி இருக்குது?''

""ஒரு புகைச்சல்... தி.மு.க. மகளிரணி பிரச்சாரக்குழுச் செயலாளரா இருக்கிறார் கயல்விழி அழகிரி. மகளிரணி சார்பில் நடந்த கலைஞர் பிறந்தநாள் விழாவில் குஷ்பு கலந்துக்கிட்டுப் பேசினார். அதற்கப்புறம் கயல்விழி பேசிக்கிட்டிருந்தப்ப, மகளிரணி சீனியரான காஞ்சனா கமலநாதனும், மகளிரணி பேச்சாளரான நளினி சாரங்கனும் கமெண்ட் அடிச்சதாக கயல்விழியோட கணவர் வெங்கடேசன் கயல்விழிகிட்டே சொல்லிட்டாரு.''

""நம்ம நக்கீரனில்தான் இந்த விஷயத்தை சூசகமா சொல்லியிருந்தாங்களே!''

""இந்த சம்பவத்தை பேராசிரியர்கிட்டே முறையிட்டிருக்கிறார் கயல்விழி. இந்த நிலை மையில், திங்கட்கிழமையன்னைக்கு செம்மொழி மாநாடு தொடர்பா மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் கூடியது. ஆனா, இதில் கயல்விழி பிரச்சினைதான் முக்கியமா இருந்தது. மகளிரணித் தலைவி நூர்ஜகான் பேகம் எடுத்த எடுப்பிலேயே, சின்னச்சின்ன பிரச்சினைகள் நிறைய இருந்தாலும் ஒரு பிரச்சினை பற்றித்தான் இன்னைக்குப் பேசப்போறோம்னு சொல்ல, அப்ப நளினி சாரங்கன் கயல்விழிகிட்டே போய்... நாங்க தப்பா எதுவும் பேசலை. சாதாரணமா பேசிக்கிட்டிருந்தோம். எங்கப் பேச்சு தப்பா தெரிஞ்சிருந்தா வருத்தம் தெரிவிச்சிக்கிறேன்னு சொல்லியிருக்கிறார். அதனால பெரியளவில் இது சம்பந்தமா விவாதம் நடக்கலை. ஆனா, மகளிரணி வட்டாரத் துக்குள்ளே என்ன பேசுறாங்கன்னா, இங்கே ஒண்ணும் அங்கே ஒண்ணுமா மகளிரணிக்குள் போட்டுக் கொடுத்துக்கிட்டிருப்பவர் புலவர் இந்திரகுமாரிதான்னும் புலவர் வந்தாலே பொல்லாப்பும் வந்திடுதுன்னும் சொல்றாங்க.''

""நீதிமன்றங்களில் தமிழே வழக்கு மொழியாக இருக்கணும்னு மதுரையில் வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக்கிட்டிருக் காங்களே...!''

""நீதிமன்றங்களில் தமிழே வழக்கு மொழியாகவேண்டும்னு தமிழ்நாடு சட்டமன்றத்தில் 6.12.2006ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆனா, இன்னும் ஒப்புதல் கிடைக்கலை. சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரணும்ங்கிற தீர்மானம் 2009 ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டு, உடனடியா ஜனாதிபதி யின் ஒப்புதலையும் வாங்கி, மேலவைத் தேர்தலுக்கான வேலைகள் வேகவேகமா நடந்துக்கிட்டிருக்குது. ஆனா, நீதிமன்றத் தில் தமிழை வழக்குமொழியாக்கும் தீர்மானம் 4 வருடமாகியும் நிறைவேற்றப் படாததைக் கண்டித்தும், உடனே வழக்கு மொழியாக்கணும்ங்கிறதை வலியுறுத்தியும் தான் மதுரையில் வழக்கறிஞர் பகத்சிங் தலைமையில் ஒருவார காலமா வழக்கறி ஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்காங்க.''

""நியாயமான போராட்டம்ப்பா... வடமாநிலங்களில் உள்ள கோர்ட்டு களில் தீர்ப்பு ஆங்கி லத்தில் இருந்தா லும், வாதாடுவதற்கு இந்தி மொழி அனுமதிக்கப்படுது. ஆனா, தமிழ்நாட்டில் தமிழில் வாதாட அனுமதிப்ப தில்லை. இந்த பாரபட்ச நிலைமை கண்டிப்பா மாற ணும். தாய்மொழியில் வழக்கு நடந்தா தான், புகார் தந்தவ ருக்கும் குற்றம்சாட் டப் பட்டவருக்கும் கோர்ட்டில் என்ன நடக்குதுங்கிறது தெரியும்.''

""செம்மொழி மாநாட்டை தொடங்கி வைக்க ஜனாதிபதி பிரதிபாபாட்டீல் வர்றார். அவர் வருவதற்கு முன்னாடியே, நீதிமன்றத்தில் தமிழ் வழக்குமொழிங்கிற தீர்மானத்துக்கு ஒப்புதல் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்தால், செம்மொழி மாநாட்டிற்கு கிடைத்த முதல் வெற்றி யாக, மாநாட்டு மேடையிலேயே அதை அறிவிக்க முடியும். அதற்கான நட வடிக்கைகயை எடுக்கணும். இது தமிழகத்தின் எதிர்பார்ப்பு.''

மிஸ்டுகால்!

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 37.7% பங்குகளை வாங்கியிருக்கிறார் சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறன். பாரமவுண்ட் விமான நிறுவனத்தின் உரிமையாளரான கருமுத்துகண்ணனைத் தொடர்ந்து விமான நிறுவனத்தில் கால் பதித்திருக்கும் இன்னொரு தமிழராக ஆகியிருக்கும் கலாநிதி மாறன், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை தனது நிறுவன மான ஃஆக ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஸ்பைஸ்ஜெட்டை மாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.



மூத்த பெரியாரிஸ்ட்டான திருவாரூர் தங்கராசு வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது கார் நொறுக்கப்பட்டது. பெரியார் தி.க நடத்திய குடிஅரசு இதழ்த் தொகுப்புவெளியீட்டு விழாவில், திராவிடர் கழகத் தலைமை மீது ரொம்பவும் காட்டமாக அவர் பேசியதால் அந்தத் தரப்பில் யாராவது உணர்ச்சிவசப்பட்டு தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கிறது. பதிலுக்கு பெ.தி.க.வினர் உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது என தவிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.



குன்றக்குடி மகளிர் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கையில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய தமிழர்கள், சமீபகாலமாக எவ்வளவு இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு இலங்கை அரசு உரிமைகளை மறுத்ததால், கோபம் கொண்ட தமிழர்கள் போராளிகளாக மாறினர். அவர்கள் போராளிகளாக மாறியதற்கு காரணம், இலங்கை அரசு நிகழ்த்தியக் கொடுமைகள்தான் என்றார். ப.சியின் இந்தப் பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அரசியல் களத்தின் அதிரடிப்பேச்சாளரான தீப்பொறி ஆறுமுகம், அ.தி.மு.க.விலிருந்து மீண்டும் தி.மு.க.வுக்கு வந்துள்ளார். மு.க.அழகிரி முன்னிலையில் கட்சியில் சேர்ந்த தீப்பொறி ஆறுமுகம் 9 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் தி.மு.க மேடைகளில் ஏறப்போகிறார். பழையபடி பொறி பறக்குமா என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

No comments:

Post a Comment